Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகப்பையில் அவள் அசிங்கமாமோ..??!
#1
<img src='http://img370.imageshack.us/img370/3597/handart103on.jpg' border='0' alt='user posted image'>

<b>அன்னையின்றி
அகிலத்தில்
அணுவும் இல்லை
அன்பும் இல்லை
அப்படி இருக்க....
அன்னைக்கு நிகர்த்தவளை
அன்புக்கு உரியவளை
அகப்பையில் தாங்குவது
அருவருப்பாம்
அகிலத்தில் அவள் பிறப்பு
அசிங்கமாம்
அகமிழந்து அறிவிழந்து
ஆணும் பெண்ணும்
அருமை மனிதம் இழந்து
அவதியுறுகிறார்....!
அடங்கா வேட்கைகள்
அர்த்தமற்ற வேதங்கள்
அவர்தம் அகமாள
அலையும் விலங்கினும் கேடாய்
அருமைப் பண்பிழந்து
அருவருக்கும் மனித வீணர்களாய்
அழிவுக்கு வழி தேடுறார்...!

அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!

ஆண்டாண்டு காலம்
அசிங்கமாம் சமூகச் சாக்கடைக்குள்
அர்த்தமின்றி நீச்சலடிக்கும்
அறிவிலிகளே....
அடைத்த செவி திறந்து
அகல விழி திறந்து
அறியும் ஒரு சேதி...
அருவருக்க என்னடா இருக்கு
அன்னைக்குள்
அவள் தந்த உன் ஜீவனுக்குள்...??!
அதிகமேன்...
அருகிருத்தி அணைக்கும்
அன்புத் துணைக்குள்
அருவருப்பா உனக்கு...?!
அடேய்....
அர்த்தமில்லா
அண்டப்புளுகுகள் எதுக்கடா..??!
ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:அன்புக்குரியவளை
ஆழக் குழியில் புதைத்திட்டு
அகம் மகிழ விளைகிறார்
அடுத்த சந்ததிக்கு
ஆண் மகவு தேடும்
அடி முட்டாள்களே - நாளை
அவனுக்கோர் துணை தேடி
அடுத்தவன் வீட்டில்
அடியளப்பீரே பெண் கேட்டு
அப்போ.... தோண்டிய குழி திறந்து
அடியும் கொட்டு மேளம்
ஆடும் எலும்புக்கு கட்டி வையும்
அன்புச் செல்வனை...!


அழகாக சொல்லி இருக்கிறீங்கள் குருவியண்ணா. வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#3
கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்.
ஏன் இந்த கடுங்கோபம் :wink:
.

.
Reply
#4
Birundan Wrote:கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள்.
ஏன் இந்த கடுங்கோபம் :wink:

கடுங்கோபம் வராதா என்ன? பிறந்த பெண் குழந்தைகளை தாய் ஆற்று மணனில் புதைத்தால் இப்படி இன்னும் பல தொடர்ந்து நடக்கின்றன நாளையும் நடக்கலாம் அதுதான் குருவியண்ணாவுக்கு இவ்வளவு கோபம். :evil:

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...6fa07623#111750
----------
Reply
#5
ரொம்ப அழகான கவிதை.. வாழ்த்துக்கள்...
Reply
#6
கவிதை மிகவும் யதார்த்தமான கருத்தைக் கொண்டதாக மிக மிக அழகான கவிதை. வாழ்த்துக்கள்: குருவிகள்.
<b> .. .. !!</b>
Reply
#7
அருமையான கவிதை குருவி அண்ணா
..
....
..!
Reply
#8
நல்ல கவிதை குருவிகளெ, வாழ்த்துக்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
கவிவரிகள் நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்..
Reply
#10
வாழ்த்துக்கள் குருவி அண்ணா
Reply
#11
நல்ல கவிதை நன்றி அண்ணா

........jothika
----------------------------------------
பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல
Reply
#12
வாழ்த்துக்கள் குருவி அண்ணா... உங்கள் கவி அருமை
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
அருமையான கவிதை குருவீஸ். நண்றி..
::
Reply
#14
குருவி இந்த கவிதையை எழுத தூண்டிய செய்தியையும் இணையுங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
Mathan Wrote:குருவி இந்த கவிதையை எழுத தூண்டிய செய்தியையும் இணையுங்களேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...6fa07623#111750

செய்தி இணைக்கப்பட்டுத்தானே இருக்கு அண்ணா
----------
Reply
#16
ஓ கவனிக்கலை நன்றி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#17
கவிதை நன்றாக இருக்கின்றது வாழ்த்துக்கள் குருவி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#18
Quote:ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!
_________________
அர்த்தான கவிதை. இப்படி உருப்படியான பல கவிதைகள் வரட்டும் எதிர்பார்க்கிறோம். ம் ஆணும் பெண்ணும் சமன் என்று குருவியின் வாயால வருது. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
tamilini Wrote:
Quote:ஆணும் பெண்ணும்
அகிலத்தில் சமன்
அதுவே உண்மை...!
அறிந்து கொள் - இல்லை
அகலத் திறந்திருக்கு புதைகுழி
அதற்குள் அடங்கிக் கொள்
அகிலத்தில்
அர்த்தமுள்ள
ஆண் பெண் சமத்துவமாய் வாழட்டும்..!
_________________
அர்த்தான கவிதை. இப்படி உருப்படியான பல கவிதைகள் வரட்டும் எதிர்பார்க்கிறோம். ம் ஆணும் பெண்ணும் சமன் என்று குருவியின் வாயால வருது. :wink:

ஏன் அக்கா ஆணும் பெண்ணும் சமம் இல்லையென குருவியண்ணா சொன்னவாரா முந்தி எங்காவது :roll:
----------
Reply
#20
ஆஆ எப்பவும் பொண்ணுங்களை திட்டிகிட்டே இருக்கும் நம்மட குருவியா இந்த கவிதை எழுதியது? Confusedhock:
என்னால் நம்பவே முடியவில்லை..
Confusedhock:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)