![]() |
|
பெண் என்று பிறந்து விட்டால்...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: பெண் என்று பிறந்து விட்டால்...... (/showthread.php?tid=3549) |
பெண் என்று பிறந்து விட்டால்...... - kuruvikal - 08-25-2005 <b>பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய், பாட்டி</b> பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது. ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார். அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர். குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள் கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர். ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர். ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின் தொடரவில்லை. இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது. இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டு குழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது. உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர். குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. தனக்கு பையன் தான் வேண்டும் என அவரது கணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது. இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார் என்றனர். குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது. அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தை பிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது? thatstamil.com - வெண்ணிலா - 08-25-2005 இப்படியும் ஒரு தாயா? :evil: ஏன் இப்படியான சம்பவங்கள் கூடுதலாக இந்தியாவில் நிகழ்கிறது? காரணம் என்ன ? :?: :?: - Danklas - 08-25-2005 vennila Wrote:இப்படியும் ஒரு தாயா? :evil: 105கோடி மக்கள்.. உதவாத அரசியல் வாதிகள்.. காசுகளை குவித்து பங்களா, அது இதெண்டு குறிவைத்து ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள்,, ஒரு குறிக்கோளுடன் இல்லாத வாழ்க்கை,, சினிமாவை நம்பி வாழும் மக்கள்,, மூட நம்பிக்கையில் மூழ்கி வெளியே வரமுடியாதமக்கள், இதைவிட என்ன வேண்டும்??? :? - அனிதா - 08-25-2005 அடக் கடவுளே...பெற்ற பிள்ளையை அதுவும் 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயற்சி செய்திருக்குறாவே இப்படியும் ஒரு தாயா.... :evil: குழந்தையை வளர்க்க முடியாட்டி (தொட்டில் குழந்தைத் திட்டம் ) இங்கையாவது கொண்டே விட்டுருக்கலாம்... - Thala - 08-25-2005 ஏனாம் தாட்டவை?... :evil: கள்ளிப்பால் கிடைக்கேல்ல ஆக்கும். - Niththila - 08-25-2005 பாவம் அந்த பிள்ளை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்படியுமா ஒரு அம்மா இருப்பா hock: hock:
- MUGATHTHAR - 08-25-2005 Quote:ஏன் இப்படியான சம்பவங்கள் கூடுதலாக இந்தியாவில் நிகழ்கிறது?வெறும் படிப்பறிவில்லை எண்டுமட்டும் காரணம் கூற முடியாது சில மூட நம்பிக்கைகள் கூட அவர்களை இந்த வழிக்கு கொண்டு செல்கிறது இப்பிடியான மூடநம்பிக்கைகளை இவர்களிடத்தில் திணிப்பவர்கள்தான் உண்மையான குற்றவாளிகள் இதில் சில மதங்களும் சம்மந்தப் படுகிறதை மறுக்கமுடியாது....... - Rasikai - 08-25-2005 இந்த பிரச்சினைக்கு காரணமே அந்த கணவன் தான். அவரை தான் ஜெயில் இல் போட வேண்டும் - ப்ரியசகி - 08-25-2005 ம்ம்..இவங்க எல்லாம்.. :evil: :evil: :evil: :evil: :evil: முதல்ல.....இவங்களை தூக்கிப்போட்டு புதைக்கணும். பிள்ளை வேணாம்னா பெறக்கூடாது...பெத்த வளக்கணும். பெண் பிள்ளை எண்டா என்ன? அவவும் மனிச ப்பிறவி தானே.... சாரி..நான் தப்பா சொன்னா..இப்படியான விசயங்கள் கேட்டா..எனக்கு கவலையாக இருக்கும்.
- Danklas - 08-25-2005 இந்த செய்தியைபற்றி யாரவது அறிந்தீர்களா?? ஜேர்மனியில் ஒரு லூசு செய்தவேலை (ஜேர்மனிய லூசு) தான் பெற்ற 9குழந்தைகளை கொலை செய்ததை?? எப்படி செய்தது எண்டால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுது பிறந்த சில நாட்களிலோ அல்லது மாதங்களில் அதை உயிரோடு தன் வீட்டில் புதைத்து கொலை செய்தது.. ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்கும் பொழுது அப்படி செய்து செய்து தனது வீட்டுத்தோட்டம், பூச்சாடிக்குள், என்று பல இடங்களில் எலும்பு எச்சங்களை அந்த வீட்டிற்க்குள் வேலை செய்ய சென்ற (கிளினிங்க்வேலை) தொழிலாளி ஒருத்தரால் அந்த எச்சங்கள் காணப்பட்டதையடுத்து அவர் உடனடியாக பொலிசுக்கு தகவல் குடுத்தார்.. பொலிசார் உடனடியாக விசாரனனயில் இறங்கினர்.. இந்த கொலைகளை கிட்டத்தட்ட 9,10 வருடங்களுக்கு முன்னர் செயதாக பொலிச்சார் கருதுகிறார்.. இவ் விடயம் அண்மையில் தான் வெளிவந்துள்ளது... :? :roll: - ப்ரியசகி - 08-25-2005 Danklas Wrote:இந்த செய்தியைபற்றி யாரவது அறிந்தீர்களா?? ஜேர்மனியில் ஒரு லூசு செய்தவேலை (ஜேர்மனிய லூசு) தான் பெற்ற 9குழந்தைகளை கொலை செய்ததை?? ஓம் டன் அண்ணா..நான் இது கேள்விப்பட்டு இருக்கேன்..ரொம்பக்கொடுமை. :evil: :evil: :evil: - shobana - 08-25-2005 நல்ல உலகமடா சாமி - கீதா - 08-25-2005 பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்லுவினம் ஆனால் இப்பத்த நிலமையில் பெற்றவலுக்குத்தான் கல்லுப் போல ?சில பெண்களுக்கு பிள்ளையை வாங்கேக்கில இனிக்கும் பிள்ளையை கொள்ளேக்கில உறைக்கும் இவளை காவோலை கட்டி எரிக்கோனும் :twisted: ...........jothika ------------------------------- பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல - கீதா - 08-25-2005 quote="Rasikai"]இந்த பிரச்சினைக்கு காரணமே அந்த கணவன் தான். அவரை தான் ஜெயில் இல் போட வேண்டும்[/quote] கணவர் சும்மா கவலையில் சொல்லி இருப்பார் அதுக்காக இப்படியா பிள்ளைக்கு தண்டனை ? பெற்றவலுக்கு அறிவே இல்லையா இவள் மனிசப்பிறவி தானே ? மிருகப்பிறவி Üடிஇப்படி செய்யாது .....jothika ------------------------------- பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல - sinnappu - 08-26-2005 Danklas Wrote:இந்த செய்தியைபற்றி யாரவது அறிந்தீர்களா?? ஜேர்மனியில் ஒரு லூசு செய்தவேலை (ஜேர்மனிய லூசு) தான் பெற்ற 9குழந்தைகளை கொலை செய்ததை?? வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இப்படியான மிருகங்கள் இருக்கிறார்கள் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - Rasikai - 08-26-2005 jothika Wrote:கணவர் சும்மா கவலையில் சொல்லி இருப்பார் அதுக்காக இப்படியா பிள்ளைக்கு தண்டனை ? பெற்றவலுக்கு அறிவே இல்லையா இவள் மனிசப்பிறவி தானே ? மிருகப்பிறவி Üடிஇப்படி செய்யாது என்ன சொல்லுறீங்கள் ஜோ அவ்ருக்கு என்ன கவலை. அவர் அப்படி சொல்லாவிட்டால் அந்த பெண் ஏன் அப்படி செய்கிறாள். வட் நான்ஸன் இஸ் திஸ் ? :evil: :x - ப்ரியசகி - 08-26-2005 Rasikai Wrote:jothika Wrote:கணவர் சும்மா கவலையில் சொல்லி இருப்பார் அதுக்காக இப்படியா பிள்ளைக்கு தண்டனை ? பெற்றவலுக்கு அறிவே இல்லையா இவள் மனிசப்பிறவி தானே ? மிருகப்பிறவி Üடிஇப்படி செய்யாது அதுதானே அவருக்கு என்ன கவலை வேண்டி இருக்கு? பொண்ணு பிறந்தா என்ன அவரோட குடியா முழுகி விடும்? அவர் என்ன வென்றாலும் சொல்வார் கேட்டுக்கொண்டு இருக்கிறதா? எண்டாலும் அவரை ரண்டு தட்டணும்..அப்பத்தான் அப்படி நினைக்கீறவங்க இனி கனவிலையும் நினைக்க மாட்டாங்க.. :evil: :evil: :evil: :evil: - Jenany - 08-26-2005 இப்படியும் ஒரு தாயா?? அவர்களே ஒரு பெண் என்பதை மறந்திட்டாங்க போல.. - RaMa - 08-27-2005 காலம் இது கலியுக காலம். இனியும் என்ன என்ன காதால் கேட்கப்போகின்றோமோ |