![]() |
|
புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! (/showthread.php?tid=3573) |
புலத்தில் தமிழர் கூத்துக்கள்..! - kuruvikal - 08-23-2005 <img src='http://sooriyan.com/images/stories/jokes01/beauty1.jpg' border='0' alt='user posted image'> ரொறன்ரோ நகரில் இம்மாதம் [b]ஒரு தமிழ் அழகுராணிப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான விளம்பரமொன்றினை தமிழ் தொலைக்காட்சியில் பார்த்தபோது இக்கட்டுரை எழுதவேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இந்த அழகு ராணிப்போட்டியினை ரொறன்ரோவை அண்டிய மார்க்கம் நகரில் இயங்குகின்ற ஒரு தமிழ் அழகுபடுத்தும் நிலையம் ஒழுங்கு செய்கின்றது. இவ்வியாபாரா நிலையத்தைப் பொறுத்த வரையில் இந்நிகழ்வு மிகவும் சக்தி வாய்ந்த விளம்பரமாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனினும் கலாச்சார கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது இந்நிகழ்வானது ஒரு ஆழ்ந்த தாக்கத்தினை புலம் பெயர் தமிழ் சமூகத்தின் இளைய சந்தியினரில் ஏற்படுத்தப் போகின்றது என்பது புலனாகும். அழகு ராணிப் போட்டி பற்றிய விமர்சனத்தை சில பெண்கள் ஆண் ஆதிக்கத்தின் வெளிப்பாடு என தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். வேறு சிலர் பழமைவாதம் என ஒதுக்கி விடுகின்றார்கள். எனினும் உண்மை என்னவெனில் அழகு ராணிப்போட்டிகள் இன்னமும் நடைபெறுவது தான் உண்மையில் ஆண் ஆதிக்கத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு ஆகும். அழகு ராணிப்போட்டியில் பங்கு கொள்ளும் எந்தப் பெண்ணினதும் அடிப்படை எண்ணம் எதிர்ப்பாலாரின் அங்கீகரிப்பினை பெறுவதை நோக்கியே அமைந்திருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இன்னமும் சொல்வதானால் இவ்வகையான போட்டிகள் இளம் பெண்களது சிந்தனையை ஆண் அங்கீகரிப்பு நோக்கி வழர்க்கின்றன என்று கூறலாம். ஏனினும் இவ்வாறான போட்டிகள் அழகை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை என்ற வாதமும் இருக்கத் தான் செய்கிறது. நவீன அழகு ராணிப் போட்டிகளில் அழகை மட்டும் மதிப்பிடுவதற்கு மாறாக பல சிக்கலான சமுதாயக் கண்ணோட்டத்தோடு கூடிய கேள்விகளிற்கு போட்டியாளர்கள் எவ்வாறு பதிலளிக்கின்றார்கள் என்பதைக் கொண்டே வெற்றி நிட்சயிக்கப்படுகின்றது என்ற வாதம் இப்போட்டியினை ஆதரிப்போரால் எழுப்பப்பட்டுக் கொண்டுஇருக்கின்றது. எனினும் இவ்வாதம் எடுத்த எடுப்பிலேயே தோல்வி காண்கின்றது. எவ்வாறெனின், இச்சிக்கலான கேள்விகளிற்கான பதில்களாக போட்டியாளர்களிடம் வியத்தகு பதில் இருக்குமாயின் அப்பதில்களை அவர்கள் வெளியிடுவதற்கு வேறு ஊடகங்கள் இல்லையா இவ்வுலகில? இப்போட்டிதாரர்களின் பதில் எவையேனும் இத்தனை ஆண்டு காலத்தில் வியத்தகு பதிலாகக் கருதப்பட்டு போட்டிகள் முடிந்த பின்னர் ஊடகத்துறையினராலோ அல்லது வேறு யாராலேனோ பேசப்பட்டுள்ளனவா? இவர்களின் பதில்கள் சமுதாய பிரச்சினைகள் எதற்கேனும் விமோசனம் கொடுத்துள்ளனவா? அதற்கும் மேலாக, அழகு ராணிப் போட்டியினைப் பார்வையிடும் தொகையினரில் எத்தனை நபர்கள் இவ் அழகிகள் கூறும் பதிலைக் கருத்திற் கொள்கிறார்கள? ஆதாரப்படுத்துவதற்கான விடயங்கள் ஏதமில்லாது உப்புச் சப்பில்லாமல் இவர்கள் கூறும் பதிலினை ஒரு சமூகவியல் மாணவி பரீட்சையில் பதிலாக எழுதின் பிழைபோடும் அல்லது அரை மதிப்பெண் கொடுக்கும் உலகம் அழகுராணிப் போட்டியில் மட்டும் இவ்விடைகளைப் பாராட்டுகின்றது என்றால், இவ்வழகிகளை இயல்பிலேயே அறிவாற்றல் குறைந்த மனிதர்களாக இப்போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் கருதுகின்றார்கள் என்றும் கொள்ளலாம் அல்லவா?. மேலும் இத்தகைய பதில்களிற்கும் நீச்சல் உடைக்குமான தொடர்பு என்ன? எனவே இப்போட்டிகள் அறிவுசார்ந்தவை என்ற வாதத்தினை முதலில் ஓரங்கட்டுவோம். அழகு என்பது தோலோடு நின்று விடும் ஒன்று என்ற மாயையினை இத்தகைய போட்டிகள் பல இளம் யுவதிகளின் மனங்களில் விதைக்கின்றன. அத்தோடு மட்டுமல்லாது ஒரு பெண் அழகுடையவளா இல்லையா என்பதனை ஆணின் இரசனை தான் முடிவு செய்கின்றது என்ற ஆணாதிக்க சிந்தையும் இளம் பெண்களின் மனதில் விதைக்கப்படுகின்றது. இவ்விதைப்பின் விளைவே பல இளம் பெண்கள் ஆண்களின் அங்கீகாரம் வேண்டி, தமக்கு உடன்பாடு அற்ற பல விடயங்களை இப்புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்வதற்குக் காரணமாக அமைகின்றது. எத்தனையோ திறமை மிக்க பல இளம் யுவதிகள், குறிப்பாக நம்மவர்கள், இளவயதில் தவறான மேற்படி நம்பிக்கைகளை மனதிற் பதித்து இந்நம்பிக்கைகளின் வாயிலாக தமது எதிர்காலத்தை வீணடித்து பின் அதே ஆண்களால் பட்டங்கள் கொடுக்கப்பட்டு விரக்தியின் விளிம்பில் நிற்பதும் தற்கொலை செய்வது நடந்த வண்ணம் தான் உள்ளது. இவர்களின் நிலையால் இவர்களது பெற்றோர்கள் உற்றார்கள் அடையும் நிலை அது வேறு. இளையோரை மட்டுமா பாதிக்கின்றன இத்தகு அழகு சார் சிந்தனைகள்? திருமணமான தம்பதிகளைக் கூட இத்தவறான அழகு சார் சிந்தனைகள் எங்கெங்கோ இட்டுச் செல்கின்றன. உதாரணமாக, தனது கணவனை விட தான் அதிகம் அழகு என்ற சிந்தனை மனைவியிடமோ அல்லது தனது அழகிற்குத் தன் மனைவி மிகச் சுமார் என்ற எண்ணம் கணவனிடமோ ஏற்படும் போது தகாத தொடர்புகள் தேடி வருகின்றன. இத்தகைய விபரீதமான அழகு சார் சிந்தனைகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகளும் அவற்றின் போது எழுகின்ற விசில் சத்தமும் ஊக்குவிக்கின்றன. தவறான சிந்தனையால் குடும்பம் சிதைகின்றது குழந்தைகளின் எதிர்காலம் கேழ்விக் குறியாகின்றது. புலம் பெயர் நாடுகளில் நம்மவர் மத்தியிலும் கவலைக்கிடமான வகையில் காணப்படும் திருமணத்தின் பின்னான இதர தொடர்புகள், இத்தொடர்புகளால் பிறக்கின்ற காகத்தின் கூட்டுக் குயில்கள், விவாகரத்துக்கள், சிறிய பிரச்சினைகளையும் தீர்க முயலாது இலகுவில் விவாகரத்துப் போன்ற் பாரிய முடிவுகளை எடுக்கும் தன்மை, வருமானத்திற்கு மேலான அழகியற் செலவுகள், இதனால் ஏற்படும் மீழமுடியாத கடன் தொல்லைகள், இப்பாரிய கடன் தொல்லையில் இருந்து மீழ்வதற்கான பணம் சேர்ப்பதற்கான குற்றங்கள் முதலிய பல பிரச்சினைகளிற்கு அழகு ராணிப்போட்டி போன்ற மட்டமான நிகழ்வுகள் காரணமாக அமைகின்றன. அழகு சார் சிந்தனை தூண்டப்பட்டு ஆனால் சமுதாய பயத்தினால் தாம் அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடத் தயங்கும் சில தாய்மார்கள் தமது பிள்ளைகளை இத்தகு செயல்களில் ஊக்குவிக்கும் கொடுமையும் நம் கண்முன்னால் நிகழ்ந்த வண்ணம் தானுள்ளது. மேற்படி உடனடிச் சமுதாயப் பிரச்சினைகளிற்கும் மேலால் முழு தமிழ் இனததிற்கும் கூட இத்தகு செயல்கள் பாதகமாக அமைகின்றன. எவ்வாறு எனின், ஒரு மக்கள் கூட்டமானது ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கான தன்மைகளில் ஒன்றாக தனித்துவமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றுப் பின்னணி அமைகின்றது. எமது தனித்துவமான கலாச்சாரத்தை இழப்பதன் வாயிலாக புலம் பெயர் சமூகத்தில் பலர் தமிழ் தேசியத்தில் இருந்து விடுபடும் ஆபத்தினைச் சந்திக்கின்றார்கள். தற்போதைக்கு இது உடனடிப் பிரச்சினை போன்று வெளிப்படையாகத் தெரியாவிடினும் அடுத்தடுத்த சந்ததிகளில் நம்மவர் பலரும் தனித்துவ அடையாளம் அற்ற கரிபியன் தீவின் வம்சாவளி இந்தியர் போல் ஆகும் அபாயம் கண்கூடு. இவ்வாறான பல பாதகமான விளைவுகளை அழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் கொண்டுள்ள போதிலும் இந்நடைமுறையினை எமது சமூகத்தில் இருந்து முற்றாக அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். அழகான பெண்களின் கவர்ச்சி ஆண்களை ஈர்ப்பது இயல்பு. எனவே இத்தகு விழாக்களிற்கு அதிக பார்வையாளர்கள் வருவதும் இயல்பு. இவ்வகையில் இத்தகைய நிகழ்வுகளை வியாபார அமைப்புகள் பணம் சேர்க்கின்ற நோக்கில் ஒழுங்கு செய்வதும் இயல்பு. இவ்விடயத்தில் பாதிப்படைவன இளம் பெண்கள் மற்றும் எமது இனத்தின் இருப்பு ஆகிய இரண்டும் மட்டுமே. ஆழகு ராணிப் போட்டி போன்ற நிகழ்வுகள் அனைவரும் கூட்டாக முயன்றால் மட்டுமன்றி வேறெந்த விதத்திலும் அழிக்கப்படக் கூடியன அல்ல. இதன் முதற்கட்டமாக வியாபார நிறுவனங்கள் தாம் எச் சமூகத்திடம் இருந்து செல்வம் சேர்க்கின்றார்களோ அச்சமூகத்தின் மேல் சற்றேனும் அக்கறை கொண்டு இத்தகு பாதகமான நிகழ்வுகளை நடத்தாது இருக்க வேண்டியது அவசியமாகின்றது. மாறிச் செயற்படும் வியாபாரங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டியது அவசியமாகின்றது. அனைத்திற்கும் மேலால் பெற்றோர்கள் தமது குழந்தைகள் இவ்விதத்தில் உபயோகப்படுத்தப்படுவதை தடுப்பது அவசியமாகின்றது. இப்புலம் பெயர்ந்த சமூகத்தில் பெற்றோரால் தம்பிள்ளைகள் மீது போதியளவு கண்டிப்பை மேற்கொள்ள முடிவது இல்லை என்ற வாதமும் கேட்கத்தான் செய்கின்றது. ஆனால் இது சற்றும் ஏற்றுக் கொள்ளக் முடியாத வாதம். தெரியாவிடின் தெரிந்து கொள்ளுங்குள்! எவ்வாறு வீடு வாங்க ஈட்டுக்கடன் எடுப்பது? ஏந்தெந்த வழிகளில் வங்குறோத்து அடிப்பது? இந்நாட்டின் கோடைகாலாத்தில் கனிதரும் அப்பிள் மரத்தின் பூக்களைப் பூச்சி அரிக்காதிருக்க என்ன மருந்து அடிப்பது? அம்மருந்தை மலிவாக எக்கடையில் வாங்குவது? வீட்டிற்கு எந்தெந்த காலத்தில் என்னென்ன பராமரப்பு செய்வது? போன்ற புலம் பெயர் சமூகத்து பிரச்சினைகள் அனைத்திற்குமான பதில்களை மொழி மற்றும் பல தடைகளையும் தாண்டி நம்மவரால் புரிந்து கொள்ள முடியுமானால் குழந்தை வழர்ப்புப் பற்றி மட்டும் ஏன் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தேடும் நேரத்தைக் குறைத்தால் நேரம் தானாகக் கைக்கு வரும். ஏனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முதல் பங்கு பெற்றோரையே சாரும் என்பதில் வேறு கருத்திற்கு இடமேயில்லை. முடிவாக, ரொறன்ரோவில் இம்மாதக் கடைசியில் இடம்பெற இருக்கும் அழகு ராணிப்போட்டி எம்மக்களால் பூரண தோல்வியடையச் செய்யப்பட்டு எதிர்காலதில் இந்நிகழ்வுகளை ஓழுங்கு செய்யும் எண்ணம் எவரிற்கும் எழாத வகையில் நம்மக்கள் செய்ய வேண்டும் என்ற விண்ணப்பத்தோடு இக்கட்டுரையை முடிக்கின்றேன். நன்றி குமரன் - சூரியன்.கொம் - kuruvikal - 08-23-2005 இப்போட்டி மற்றும் புலத்தமிழர்களின் வாழ்வியல் மாற்றம் (குறிப்பாக இளைய சந்ததி) தொடர்பாக உங்கள் ( இளைஞர் யுவதிகள்) கருத்துக்களையும் இங்கு தாருங்களன்...! - Thala - 08-23-2005 நான் பார்த்த ஒரு சம்பவம்.. போன வெள்ளிக்கிழமை...லண்டன் ilford பகுதியில் எனது நண்பனின் மது பாணங்களும் விக்கும் ஒரு பலசரக்கு கடை. இரவு நான் எனது வேலை முடித்துவரும் வளியில் தான் அவனது கடையும். அருகில் தான் எனது வீடும். 11. மணிக்கு கடைபூட்டுவான். அப்போ வளமையாக அவனுடன் கதைத்த படி அவனுக்கு உதவி செய்வது வளமை. அன்றும் அப்படித்தான். 11 மணி கடை பூட்டுவதற்காக நங்கள் ஆயத்தம் செய்யும் போது 2 car களில் 3பெண்கள் 3 ஆணுமாக ஒரு கூட்டம். அதிலிருந்து 2 பெண்கள் இறங்கிவந்து மதுபாணம் தருமாறு நண்பனிடம் கேட்டார்கள். 11மணிதான் தனக்கு மதுபானம் விற்பதற்கு அனுமதி உண்டு என்று மறுத்து விட. பணம் அதிகமாய் தாறம் எண்டு சொல்லியும் அவன் மறுத்து விட. இப்போ அந்த பெண்கள் தமிழில அண்ணா நாங்கள் யாருக்கும் சொல்ல மாட்டம். எங்களுக்கு தாங்கோ எண்டு கேட்க, நண்பனேட சேத்து நானும் அதிர்ந்து போனன். அதுக்கு நண்பன் எங்கட வளமையான குசும்போட "அண்ணா எண்டுட்டீங்கள் தங்கச்சிமா குடிக்க விடக்கூடாதுதானே" என்றான். அவர்கள் திரும்பிபோய் நண்பர்களிடம் சொல்ல மூன்று ஆண்களும் இறங்கிவந்து ஏய்..Man எண்டு ஆரம்பித்து ஆங்கில கெட்டவார்த்தை அரைவாசிய கொட்டி மதுபானம் தாறியா இல்லை கடைச்சாமான உடைப்பம் (ஒரு தமிழ் பெடி 2 பாக்கி or வங்காளி) எண்டு சொல்ல. நிலமையின் விபரீதம் விளங்கி. பக்கத்துத் தெருவில் இருந்த எமது மற்ற நண்பருக்கும் phone பண்ணிவிட்டு. shutter இளுப்பதற்கு உதவும் கொட்டனை எடுத்துக் கொண்டு அவர்களுக்கு அருகிலே போய் ஏலுமெண்டா உடைபாப்பம் எண்டன்( என்ர கடை இல்லைத்தானே) அப்போது தான் அவர்கள் என்னைக் கண்டிருக்கவேணும். இலேசான அதிர்ச்சி அவர்களில் தெரிந்தது. உதப்பாத்தோ என்னவோ, நண்பனும் அதில் இருந்த தமிழ் பெடிக்கு மூஞ்சேல குத்திப்போட்டான். அப்போ அவர்களிடம் ஒரு பின்வாங்கல் ஏற்பட்டு கடை வாசலுக்குப்போய் நிண்டு கொண்டு பொறுங்கடா ஆக்களோடவாறம் எண்டு பாக்கி அறிக்கை (இலங்கை இராணுவத்தளபதி ரேஞ்சுக்கு) விடும்போது. பக்கத்து தெருவில இருந்த நண்பர்களும் வந்து சேர (4 பேர்) அவர்கள் car கார்களில் ஏறி கிளம்பிடார்கள்.. கோபம் தணியாத கடை உரிமையாள நண்பன், "பாரன் என்னட்டயே சேட்ட விடுறாங்கள்" எண்ட அதுக்கு நான் "நீ முந்திச்செய்ததை அவங்கள் இப்ப செய்யிறாங்கள்". இப்போ நண்பனின் முகத்தில் லேசான சிரிப்பு. எனது நண்பன் மாறிட்டான் இந்த இளைஞர்கள் மாறுவார்களா?... காலம் தான் பதில் சொல்லோணும்.. - kuruvikal - 08-23-2005 தல தப்பா நினைக்காதீர்கள்....இதையே லண்டனுக்கு வெளியில் வெள்ளைகள் எப்படிக் கையாண்டிருப்பார்கள் தெரியுமா.. வந்தவர்களுடன் உரையாடிக் கொண்டே...பொலிஸுக்குப் ரகசியமாகப் போன் பண்ணி இருப்பார்... பொலிஸ் வரவும் அவர்கள் கத்தவும் கணக்கா இருந்திருக்கும்... பெண் ஆண் என்று ஒருக்கா பொலீஸால் கொஞ்சம் விசாரிக்கப்பட்டால் எதுக்கும் நல்லம்...! அப்புறம் கடை உரிமையாளரோ இல்லையோ...கடைப் பாதுகாப்பு ஊழியருக்கே இப்படியானவர்களைத் தாக்கும் உரிமையில்லை...! பொலீஸிடம் கையளிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு...சிசிரிவி இருந்தால் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டாலும்...சிசிரிவி படங்களைக் கொண்டு பொலீஸ் அவர்களுக்கு எதிரான பொது எச்சரிக்கை விடும் நிலல தோன்றும்...! அதை விடுத்து... நீங்கள் இப்படி சட்டத்தைக் கையில் எடுத்து சண்டித்தனம் செய்வது ஆரோக்கியமானது இல்லை என்பது எங்க தாழ்மையான கருத்து...! - Thala - 08-23-2005 செய்தமே... ஒருத்தன் களவு எடுத்துக்கொண்டு ஓடீட்டான். ஓடும்போது அடுக்கி வச்சிருந்த போத்தல் கள் கொஞ்சத்தையும் தட்டி விளுத்தி உடச்சு. கிட்டத்தட்ட ஓரளவு நட்டம். போலீஸுக்கு phone பண்ணினால். அவர்கள் ஒண்டையும் தொடாதேங்கோ வாறம் எண்ட சரி கடையமூடி காத்திருக்கிறம் கிட்டத்தட்ட 7 மணினேரத்துகு பின் வந்து பார்த்தபின். தடயம் இல்லை எண்டு போய்ட்டினம். அண்டய வியாபாரம் சரி.... பிறகு இன்சூரன்ஸ்ககு phone பன்ணினா அவர்கள் நீண்ட இளுத்தடிப்புக்குப்பின். காசு தந்தார்கள். இப்ப வருடாந்த இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தியாச்சு. அதுதான் நாங்கள் கண்டபலன். நான் எமது செய்கை சரி யெண்டு நியாய படுத்தவில்லை. ஆனால் எங்களால் அந்த நேரம் தவிர்க்க முடியாததாக மாறி விட்டது - SUNDHAL - 08-23-2005 ஆஹா.... தமிழ்பொன்னுங்களும் குடிக்கிறாங்களா..? ம்ம்ம்ம்ம் உருப்பட்ட மாதிரி தான்... - Danklas - 08-23-2005 ஏன் சுண்டல் அவங்களுக்கு வாய் இல்லையொ.. இதில என்ன வேடிக்கை என்னவென்றால் இப்போது புலத்திலே நடக்கும் கலியாண வீடுகளில் பொதுவாக அந்த நாட்டுக்காரகளும் கலந்து கொள்ளுவார்கள்.. இது அவர்களுக்கு வாசியாகிபோடும்.. வேற யாருக்கு குடிக்கிற டமிழ் பெண்ணுகளுக்கு.. உடன அவர்களோட சேர்ந்து குடிப்பினம்... அதற்கு ஒரு விளக்கம் வேற சொல்லுவினம்.. வெள்ளைத்தோலுகள் எங்களை பார்த்தால் ஏதோ நாங்கள் காட்டில இருந்து வந்து இருக்கிறம் எண்டு நினனப்பார்களாம்.. அதுதான் அவர்களுக்கு கம்பனி கொடுக்கிறம் எண்டு அரிய விளக்கத்தை குடுப்பினம்.. ஆனாலும் புலத்தில வைனனத்தான் பொதுவாக குடிக்கிறார்கள்.. வரும் காலத்தில் என்னம் டெவலப் ஆகும்.. பொதுவாக லண்டன், ஜெர்மனி, சுவிஸ் நாடுகளீல் இது சாதாரணமான நிகழ்வு... :evil:
- Birundan - 08-23-2005 குடி குடியை கெடுக்கும் எண்று சொல்லுங்கோ ஒத்துக்கொள்ளுறம். உடல் நலத்துக்கு கேடு என்று சொல்லுங்கோ ஒத்துக்கொள்ளுறம். அது என்ன ஆண்குடிக்கலாம் பெண் குடிக்கக்கூடாது, ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கொரு நீதி, அவைக்கு விருப்பம் அவைகுடிக்கினம் விருப்பம் இல்லாதவை குடிக்காமல் இருக்கினம். ஏன் ஆண்களில் குடிக்காதவர்கள் இல்லையா? ஆணாதிக்கத்தை எதிர்ப்போம். ஆணுக்கு பெண் சரிநிகர் என்போம். அனத்தையும் இருவருக்கும் சமனாக வைப்போம். - kuruvikal - 08-23-2005 SUNDHAL Wrote:ஆஹா.... தமிழ் பொன்னுங்களும் குடிக்கிறாங்களா..? என்ன நக்கலா அடிக்கிறீர்கள்...அவுஸ்திரேலியாவில் இருக்கும் எங்கள் நண்பன் சொன்னானே தான் படிக்கும் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களோடு சேர்ந்து தமிழ் பெண்களே அதிகம் தண்ணி அடிக்கினமாம்...! நீங்க என்ன ஒரு கேள்வி கேட்டுப்புட்டீங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Danklas - 08-23-2005 பிருந்தன் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாது.. காரணம் ஆணின் உடலின் பலத்தோடு பெண்ணின் உடலின் பலத்தை எந்த விதத்திலும் ஒப்பிடமுடியாது.. ஆண்கள் செய்யும் கடினமான வேலைகளை பொதுவான எந்த பெண்களால் செய்யமுடியாது.. ஏன் பிரக்டிக்கலா திங்க் பண்ணுற ஜரோப்பிய இனத்து பெண்கள் கூட வைன், மிருதுவான குடிபான வகைகளைத்தான் குடிக்கிறார்கள்.. ஜேர்மனியில் இருக்கும் உங்களுக்கு சொல்லத்தேவையில் நேரடியாக கண்டு இருப்பீர்கள்.. எனது கூற்றுப்படி பெண்கள் மது பானத்தை குடித்தால் அவர்களின் உடம்புக்கு அது ஒத்துக்கொள்ள மட்டாது...
- SUNDHAL - 08-23-2005 அத இதுலையா வைக்கனும்? :roll: - SUNDHAL - 08-23-2005 ம்ம்ம் ஆமா குருவி நீங்க சொன்னது சரி தான் ம்ம்ம் அங்கையும் செய்றாங்கலானு கேட்டன்... ஆண் பெண்... சமன்பாடு குடிக்கிறதிலையா பாக்கனும் பிருந்தன்? - ஊமை - 08-23-2005 யோவ்... இங்க எல்லாம் இப்ப தமிழ் பெட்டையளே ராவா அடிகிறாளவை..... கட்டை வேறை அடிகிறாளவை...... என்ன உலகம் தெரியாம இருக்கிறியள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Birundan - 08-23-2005 குடி ஆண்களுக்கு மட்டும் ஒத்து கொள்ளுமா? குடி குடி எண்று திரிந்தவர்கள் எத்தனை பேர் வாழ்க்கையை தொலைத்து விட்டு திரிகிண்றார்கள், எத்தனைபேர் நோய்வாய்பட்டு இறந்திருக்கிறார்கள். குடித்துவிட்டு பானொப்பில்(புகையிரத நிலையத்தில்( எமது தமிழர்கள் படுத்திருப்பதை நான் பார்திருக்கிறேன். அப்போ குடி அவர்களுக்கு ஒத்துகொண்டிருக்கிறதா? ஆண் என்ன பெண் என்ன கெட்டது கெட்டதுதான், நல்லது நல்லதுதான் இதுவே என் கருத்து. - kuruvikal - 08-23-2005 சரி சண்ட வேண்டாம்... ஆணே பெண்ணோ...குடி மனிதனுக்குக் கேடு...அவ்வளவும் தான்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 08-23-2005 <!--QuoteBegin-ஊமை+-->QUOTE(ஊமை)<!--QuoteEBegin-->யோவ்... இங்க எல்லாம் இப்ப தமிழ் பெட்டையளே ராவா அடிகிறாளவை..... <b>கட்டை வேறை அடிகிறாளவை...... </b>என்ன உலகம் தெரியாம இருக்கிறியள் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->நீங்கள் சொல்லுற கட்ட கஞ்சா தானே?... - narathar - 08-23-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->செய்தமே... ஒருத்தன் களவு எடுத்துக்கொண்டு ஓடீட்டான். ஓடும்போது அடுக்கி வச்சிருந்த போத்தல் கள் கொஞ்சத்தையும் தட்டி விளுத்தி உடச்சு. கிட்டத்தட்ட ஓரளவு நட்டம். போலீஸுக்கு phone பண்ணினால். அவர்கள் ஒண்டையும் தொடாதேங்கோ வாறம் எண்ட சரி கடையமூடி காத்திருக்கிறம் கிட்டத்தட்ட 7 மணினேரத்துகு பின் வந்து பார்த்தபின். தடயம் இல்லை எண்டு போய்ட்டினம். அண்டய வியாபாரம் சரி.... பிறகு இன்சூரன்ஸ்ககு phone பன்ணினா அவர்கள் நீண்ட இளுத்தடிப்புக்குப்பின். காசு தந்தார்கள். இப்ப வருடாந்த இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தியாச்சு. அதுதான் நாங்கள் கண்டபலன். நான் எமது செய்கை சரி யெண்டு நியாய படுத்தவில்லை. ஆனால் எங்களால் அந்த நேரம் தவிர்க்க முடியாததாக மாறி விட்டது<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தல நீங்கள் சொன்னது தான் கடை வைத்திருக்கும் எனது நண்பர் ஒருவரின் அனுபவமும். - Thala - 08-23-2005 நாரதா கனடாவில் நடக்கப்போகும். அழகுராணிப்போட்டி தெவையானதா? (ஜோள்ளுவிட வசதியாய்) இல்லை தேவை இல்லையா?... பலர் முன்னிலையில் தங்கள் உடல் அழகைக்காட்டித்தான் பெண்கள் அழகி எண்டு பேர் எடுக்க வேணுமா?.. உடல் அழகுமட்டும்தான் பெண்களின் அழகா?.. எனக்கு ஒண்டுமா விளங்கவில்லை. நீங்களே சொல்லுங்கோவன்... இது ஆண்களைக் கவருவதற்காகத் தானே அழகியாய் தெரிவு செய்யப்பட ஆசைப்படுவது?.. அது பொண்கள் தங்களைத்தாங்களே தாள்த்திக்கொள்வதாய் அமையாதா?.. அழகுராணிப்போட்டிகள்.. பெண்களின் சமவுரிமைக் கோரிக்கையை எப்படிப்பூர்த்தி செய்யும்?.. யாராவது எனக்கு தெளிவு படுத்துங்களேன்... - MUGATHTHAR - 08-23-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஆஹா.... தமிழ்பொன்னுங்களும் குடிக்கிறாங்களா..? ம்ம்ம்ம்ம் உருப்பட்ட மாதிரி தான்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> . நீங்க புலத்தைப் பற்றிக் கதைக்கிறீயள் வெளிநாடு போறதெண்டு முடிவானவுடனேயே கொழும்பிலை அடிக்கத் தொடங்கியிடுகினம் இது நான் நேரை கண்டது........... விடுமுறைக்கு போண சமயம் எனது பழைய சினேகிதங்களைச் சந்தித்தேன் இனி சும்மா இருப்பமா தண்ணியடிக்க பிளான் பண்ணி தெகிவளை கழுபோவலைக்குள் இருக்கிற ஒரு ரெஸ்ட் ருறண்ட்க்குப் போனம் இந்த இடத்துக்கு தமிழ்ஆட்கள் வரமாட்டினம் கொஞ்சம் உள்ளுக்கு இரவு 11மணியிருக்கும் பழைய கதையெல்லாம் பேசிக் கொண்டிருந்தம் அப்ப ஒரு ஆட்டோவில் 2சோடி வந்து இறங்கினார்கள் எமக்கு அருகிலிருக்கிற மேசையில் வந்து இருந்தார்கள் டீம் லைட் போட்டிருந்ததால் முகங்கள் வடிவாகத் தெரியவில்லை கதையை வைத்து ஆட்கள் தமிழ் என தெரிந்தது நாங்கள் தமிழில் பேசாமல் சிங்களத்திலே கதைச்சுக் கொண்டிருந்தோம் 3 பியரும் 1சோடாவும் ஓடர் செய்தார்கள் ஆனால் அவர்கள் சோடாவைக் குடிக்கவில்லை பியரைத்தான் 4 கிளாஸ்களில் ஊத்தி அடித்தார்கள் அவர்களின் பேச்சுகளில் லோஜ் . ரிக்கட் . பிளைட் என்ற பேச்சுக்களை வைத்து அவர்கள் வெளிநாடு போவதற்குத்தான் வந்து கொழும்பில் நிக்கிறார்கள் என அறிய முடிந்தது இதைப் பாத்த எங்களுக்கு அடிச்சதெல்லாம் இறங்கியிட்டுது பிறகும் ஓடரைக் குடுத்தம் அது வேறை கதை. . . . . அப்ப பாருங்கோ கொழும்பிலை எவ்வளவு பொலிஸ் பிரச்சனைகள் தெரிஞ்ச ஆட்கள் கண்டால் என்னவாகும் இதைப்பற்றி எந்தவித கவலையோ பயமோ இல்லாமல் துணிந்த இப்பிடியான பெண்கள் வெளிநாடு எண்டு வந்துவிட்டால் எதுக்குத்தான் பயப்பட போகிறார்கள். தயவுசெய்து யாரும் பியரடிப்பதால் என்னவந்து விட்டது எண்டு கேக்காதைங்கோ இப்பிடி பப்பிளிக்கான பொது இடத்துக்கு வருவது தான் ????? ஏனெண்டால் எங்களுடன் தண்ணியடிச்ச 2சிங்களப்பெடியள் ஒரு நக்கல் பார்வை எங்களைப் பாத்தான்கள். . . - narathar - 08-23-2005 உந்த அழகு இராணிப் போட்டிகள் கனகாலமா தமிழ் நாட்டில நடக்குது,இது ஒரு வகை வியாபாரம்.உத நடத்துறது பெண்களை போகப் பொருட்களாக்கி அதனூடாக தங்களின் பொருட்களை சந்தைப் படுத்தும் வியாபாரிகள் .முற்று முழுதான முதாலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில இது எல்லாம் சகஜம்.இதில பங்கு பற்றிறவைக்கு தங்களின்ட்ட உடல் அழகைக் காட்டுறதுக்கு பரிசு,பேர் எல்லாம் உண்டு.காசெண்டால் பிணமும் வாயத்திறக்கிற இடத்தில ,கலாச்சாரமும் கத்தரிக்காயும். எங்கட கலை,கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது எண்டா எங்களுக்கு எண்டு ஒரு நாடு வேணும்,எங்களுக்கு எண்டு ஒரு அரசு வேணும்.தேசியப் பொருளாதாரத்தையும்,தேசிய கலை,கலாச்சாரத்தையும் முதன்மைப் படுத்திற இடத்தில தான் எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கலாம். இங்க என்ன எல்லாமே குளறுபடி ,இதில காசு பண்ணுறவ உழைப்பைப் பாப்பினம்,பங்குபற்றுறவ தங்களை ஐஸ்வர்யா ராய் எண்டு நினைப்பினம், லொள்ளு விடுறவை வாயப் பிளந்து பாப்பினம்.சில அம்மா,அப்பா மார் தங்கட பிள்ளை சினேகாவோ,ஜோதிகாவோ எண்டு மார் தட்டுவினம். நடக்கிற சீரழிவோட இதுவும் சேரும்,தட்டிக் கேக்க யாரு இருக்கினம். |