![]() |
|
புதிர்ப்பக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: புதிர்ப்பக்கம் (/showthread.php?tid=3590) |
புதிர்ப்பக்கம் - vasisutha - 08-22-2005 பூக்கள் விற்கும் கடையில் இரண்டு பெண்கள் நுழைந்தார்கள். முதலில் நுழைந்த பெண் கடைக்காரரிடம் பத்து ரூபாய் கொடுத்து, ஒரு பூ வேண்டுமென்று கேட்டாள். அங்கிருந்த கடைக்காரன், <span style='color:darkviolet'>''மஞ்சள் ரோஜாவின் விலை ஏழு ரூபாய். சிவப்பு ரோஜாவின் விலை எட்டு ரூபாய். வெள்ளை ரோஜாவின் விலை பத்து ரூபாய். மூன்றில் எது வேண்டும்?'' என்று கேட்டான். அவள் தனக்கு சிவப்பு ரோஜா வேண்டும் என்று கேட்டு வாங்கிப் போனாள். இரண்டாமவளும் பத்து ரூபாய் கொடுத்தாள். ஆனால், அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்தான். அவளும் அதை எடுத்துச் சென்றாள். அவனுக்கு எப்படித் தெரியும், அவளுக்கு அதுதான் தேவையென்று?</span> :?: :?: - Vasampu - 08-22-2005 உங்கள் முதல் புதிருக்கு விடை நான் சொல்கின்றேன். இரண:டாவதாக வந்த பெண் 5ரூபா இரண்டு 2ரூபா 1ரூபா நாணயங்களாக 10ரூபா கொடுத்திருப்பா. கடைக்காரனும் நம்மைப் போல் புத்திசாலியாக இருந்திருப்பான். உடன் புரிந்து கொண்டு வெள்ளை ரோஜாவை எடுத்துக் கொடுத்திருப்பான். விடை சரியா வசிக்கண்ணா?? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 08-22-2005 சரியாத்தான் இருக்கும் வசி அடுத்த புதிர போடுங்க - vasisutha - 08-22-2005 சரியான விடை வசம்பு அண்ணா.. - vasisutha - 08-22-2005 ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன? :?: :?: - வழுதி - 08-22-2005 "நான் இல்லாத கழிவகம் வாடகைக்குண்டு." இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா? (உதவி சொல்லை ஆங்கில மயப்படுத்திப் பாருங்கள். புரியும்) -வழுதி - vasisutha - 08-22-2005 உங்கள் பதில் புரியவில்லை வழுதி.. - Vishnu - 08-22-2005 vasisutha Wrote:ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். <b>வசி எப்பவுமே இப்படித்தான்</b> என்று சொல்லியிருப்பானோ?? - vasisutha - 08-22-2005 ஆஆ விஸ்ணு லொள்ளா? :evil: :evil: சரி ஒரு துப்பு தாறன்.. 8) இந்தக் கேள்விக்குள்ளேயே பதிலும் இருக்கு.. :wink: - வெண்ணிலா - 08-22-2005 அந்த சிங்கம் உயிருடன் இல்லை என்று சொல்லி இருப்பான் :roll: :roll: :?: - vasisutha - 08-22-2005 இல்லை வெண்ணிலா.. தவறான பதில்.. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். - அனிதா - 08-22-2005 அவன் ..தான் புத்திசாலி என்று சொல்லியிருப்பானோ.. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-22-2005 அந்த விஷயம் <b>உண்மையாக இருந்தால்</b>, அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் <b>பொய்யாக இருந்தால்</b>, அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். மீண்டும் முயற்சி செய்யுங்கள் அனிதா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-22-2005 அவன் மெளனமாய் இருந்தான். :wink: :roll: - vasisutha - 08-22-2005 இல்லை தமிழ்.. பிழையான விடை.. என்ன வேற ஒருத்தரும் இந்தப் பக்கம் வரவில்லை? என்ன ஆச்சு? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 08-22-2005 விடை தெரியலை அது தான் முழிச்சுகொண்டு வரலை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Vishnu - 08-22-2005 எதாவது ஒன்றை சொல்லி... அந்த உண்மை பொய்யாக இருக்கும் என்று சொல்லி இருப்பான் - Jenany - 08-22-2005 [quote="vasisutha"]இல்லை தமிழ்.. பிழையான விடை.. என்ன வேற ஒருத்தரும் இந்தப் பக்கம் வரவில்லை? அட நானும் யோசிக்கிறன்..வசி இன்னும் ஒரு துப்பு தாங்கோவன்... - வெண்ணிலா - 08-22-2005 vasisutha Wrote:அந்த விஷயம் <b>உண்மையாக இருந்தால்</b>, அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். ஒரு புத்திசாலியும் இங்கே இல்லை போல. புத்திசாலி சொன்னதை யாருமே சொல்ல முடியல்லையே
- vasisutha - 08-22-2005 <i>சரி விடையை சொல்லிவிடுகிறேன்..</i> Quote:ஒரு மனிதனுக்கு மரண தண்டனை விதித்தார் ஒரு அரசர். அவன் புத்திசாலி என்பதால், உயிர் பிழைக்க ஒரு வாய்ப்பளித்தார் அரசர். அந்த மனிதன் ஏதாவதொரு விஷயம் சொல்ல வேண்டும். அந்த விஷயம் உண்மையாக இருந்தால், அவன் மலையிலிருந்து தள்ளிக் கொல்லப்படுவான். அந்த விஷயம் பொய்யாக இருந்தால், அவன் சிங்கத்துக்கு உணவாக்கப் படுவான். ஆனால் ஒரு விஷயத்தைச் சொல்லி, உயிரைக் காப்பாற்றிக் கொண்டான் அவன். அந்த விஷயம்தான் என்ன? <b>விடை:</b> [size=13]அவன் சொன்ன விஷயம்.. 'நான் சிங்கத்தினால் சாப்பிடப்படப்போகிறேன்'. அவன் சொல்வது உண்மையானால், அவன் மலையில் இருந்து தள்ளி விடப்பட்டுக் கொல்லப்படுவான். அது நடந்தால், அவன் சொன்ன விஷயம் பொய்யாகிவிடும். அதனால் அரசருக்கு அவனை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை! அடுத்த புதிர் சிறிது நேரத்தில்... நீங்களும் புதிர்கள் போடலாமே? |