Yarl Forum
கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??! (/showthread.php?tid=3584)



கருவூலம் கவனிப்பாரற்றுப் போகலாமா..??! - kuruvikal - 08-22-2005

ஒருவருடைய வாழ்க்கையில் கருவறை தொடக்கம் கல்லறை வரை என்றும் நினைவு கூரப் படவேண்டியவர்கள் பெற்றோர்கள். தன் உயிரிலும் மேலாக இன்னொரு உயிரை மதித்து, பாலூட்டிச் சீராட்டி வளர்த்தவள் எம் அன்னை. எமது வளர்ச்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் எம் தந்தை. இதனால் தான் ஒளவையாரும் மஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள் என்று பாடினார். எனவே அன்னையும், பிதாவும் தெய்வத்துக்குச் சமமாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

ஆனால் இன்றைய சமூகத்தில் பெற்றோருக்குக் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் எந்தளவு என்று பார்ப்போ மேயானால், அது இல்லையயன்று தான் சொல்ல வேண்டும். ஒரு பிள்ளையைப் பெற்று வளர்ப்பதில் அளவற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களான வுடன் என்ன செய்கிறார்கள்? ஒரு சிலரைத் தவிர, ஏனையோர்கள் பெற்றோரைத் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை.

ஆண்களாயினும் சரி, பெண் களாயினும் சரி வாலிப வயதை அடைந்தவுடன் இனி எங்களுக்கு பெற்றோரது அன்பு, ஆதரவு, உதவிகள் எல்லாம் தேவையில்லை எனத் தப்பாக நினைத்துக் கொள்கிறார்கள். அதிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து திருமணம் என்ற பந்தத்துள் நுழைந்துவிட்டவுடன், பெண்கள் தமது கண வன்மாரின் சொல்லைத் தாரக மந்திரமாக எடுத்துக் கொள்வதும், மாறாகக் கணவன் - மனைவியின் பேச்சைத் தட்ட முடியாதவனாகி செயற்படுவதனாலும், பெற்றோர்களை இவர்கள் அடியோடு மறந்து விடுகிறார்கள். தாங்கள் இருவருமே இந்தச் சமூ கத்தின் ஜாம்பவான்கள் என தப்புக்கணக்குப் போட்டுக் கொள்கிறார்கள். இருந்தும் தம் பெற்றோரை இரு கண்களாக மதிக்கும் பிள்ளை களும் எங்கள் சமூகத்தில் இல்லாமல் இல்லை.

அன்பையும், பாசத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த் தவர்கள் இன்று அநாதர வானநிலையிலே காலத்தைப் போக்கும் நிலை எமது சமூகத்திலே காணப்படுகிறது. மமுதுமைடு என்பதை இன்றைய இளைஞர்கள் வேண்டாப் பொருளாகவே பார்க்கிறார்கள். மகிழடுடு என்று அநாகரிக வார்த்தையால் நச்சரித்து வருகின்றனர். இந்த நிலை இன்றைய சமூகத்தில் ஆண்பிள்ளைகளிடம் மட்டு மல்ல, பெண்பிள்ளைகளிடமும் காணப்படுகிறது. முதுமையின் தார்ப்பரியங்களை அறியாத இவர்கள் - தங்கள் பெற்றோர்களை மூலையில் கிடக்கவும் வைக்கிறார்கள்.

இத்தகைய காரணங்களால் தானோ, என்னவோ நாட்டில் வயோதிபர் இல்லங்களும் அதிகரித்துவிட்டன. அங்கு வாழும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

அண்மையில் கைதடிப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்கு விசேட செயற்திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காகச் செல்லும் வாய்ப்புக்கிட்டி யது எனக்கு. அதில் நான் பார்த்து அனுபவித்த சில சம்பவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.

இன்றைய உலகம் பல துறைகளில் வளர்ந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. இதனை நாம் கண்களூடாகப் பார்த்தும், அனுபவித்தும் வருகிறோம். ஆனால் மனிதர்களது மனங்களும் ஏன் இப்படி மாறி விட வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது. பத்துமாதம் கருவறையில் சுமந்து பாலூட்டிச் சீராட்டி எம்மை வளர்த்து எடுத்த தாயையும் தந்தையையும், மறந்து விட்டார்களே இந் தக்கல் நெஞ்சம் படைத்தவர்கள். இதனை நினைத்தால் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி இருக்கிறது. ஏன் அன்பு பாசம், கருணை, இரக்கம் எல்லாம் இவர்களது பிள்ளைகளுக்கு இல்லையா?

இந்த முதியோர் இல்லத்தில் எண்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் காணப்படுகிறார்கள். ஆண், பெண் என இருபாலாரும் இதனுள் அடங்குகின்றனர். சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். இவர்களில் பெரும் பாலானோர் தங்கள் பிள்ளை களாலேயே கொண்டு வந்து சேர்க்கப்பட்டவர்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், சமூகத் தவர்களால் கொண்டுவந்து சேர்க் கப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான சகல வசதி வாய்ப்புகளும் இங்கு வழங்கப்படுகிறது. நேரத்துக்குச் சாப்பாடு, அன்பான பராமரிப்பு, அவரவர் மத வழிபாட்டுக்கென ஒதுக்கப்பட்ட இடங்கள், பொழுது போக்குக்கு மரச் சோலைகள், பூஞ்சோலைகள் நிறைந்த இடங் கள் என்பன காணப்படுகின்றன. இவை என்னதான் இருந்தும் இவர்களது முகத்தில் ஒரு வித ஏக்க உணர்வு எந்தநேரமும் தென் படுவதை என்னால் உணர முடிந்தது. ஏதோ ஒன்றை நினைத்து ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். தம் பிள்ளைகளுடன் கூடியிருந்து வாழ்வை அனுபவிப்பதில் கிடைப்பது போன்ற உளரீதியான திருப்தி இவர்களுக்குக் கிடைக்குமா? நிச்சயமாக இல்லை.

தம் உயிரிலும் மேலான இனிய உறவுகளை எண்ணி, வழி மேல் விழி வைத்து நுழைவாயிலைப் பார்த்தபடி இருக்கிறார்கள். யார் தான் இவர்களுக்கு ஆறுதல் கூறுவது. ஒரு மூதாட்டி யினது உளரீதியான ஏக்கம்! எனக்கு இரண்டு மகன்மார். மூத்தவர் கனடாவில் இருக்கிறார். இரண்டாவது மகன் யாழ்ப்பாணத்தில் தான். கல்யாணம் செய்து கொடுத்த கையோட என்னைக் கொண்டு வந்து இங்க விட்டிட்டார். இங்க வாறதும் இல்லை. பார்க்கிறதும் இல்லை. அவர் வந்து இண்டைக்கு ஒன்றரை வருசமாச்சுது. பணம் இருந்தும் என்ன தம்பி! என பெருமூச்சு விட்டு அழுகிறார். பாருங்கள் இந்தப் பெற்றோரது பிள்ளைகளை. யார் இவர்களிடம் போய் நியாயம் கற்பிப்பது.

இதே போல இன்னொரு வயோதிபர் இப்படிக் கூறுகிறார் - எனக்கு ஒரேயயாரு மகன். அவன் விரும்பி மருமகள் ஒன்றைக் கூட்டிக்கொண்டு வந்தான். நானும் வெளிக்கிட்டு இஞ்சை வந்திட்டன் என நகைச்சுவையாக தனது கதையைக் கூறி முடித்தார். இப்படி அங்கு வாழும் முதியவர்கள் ஒவ்வொருவரதும் வாழ்க்கையின் துயரச்சம்பவங்கள் ஏராளம் எராளம்.

இங்கு வசிக்கும் முதியவர் களைப் பிள்ளைகள் சுமைகளாக நினைத்துவிட்டார்கள் போலத் தெரிகிறது. இப்படியாகப் பிள்ளைகளால் வெறுத்தொதுக்கப்பட்ட நிலையில்க் கூட பிள்ளைகளின் அன்பு, பாசத்துக்காக ஏங்குபவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். உணவருந்தும் வேளையிலும், பொழுதைக் கழிக்கும் நேரங்களிலும் சில பெற்றோர்கள் பிள்ளைகளை நினைத்து அழுகிறார்கள். சிலர் தனியாக இருந்து சிரிக்கிறார் கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை. மாறாக பிள்ளைகளை ஏன் திட்டித்தீர்க்கவில்லை. அன்பு, பாசம் என்பது பெற்றோருக்கு மட்டும் தானா? பிள்ளைகளிடம் இல்லையா? என எண்ணத் தோன்றுகிறதல்லவா.

இங்கு வாழும் முதியவர்களது பிள்ளைகள் எல்லோரும் உயர் தொழில் பார்ப்பவர்களும், உயர்ந்த வருமானம் உடையவர் களுமே. ஏன் இவர்கள் தங்கள் பெற்றோர்களைக் கவனிக்க வில்லை. தன்னிடம் உள்ள பணம் முழுவதையும் பிள்ளைகளின் வளர்ச்சிக்காக செலவளித்த இவர்களுக்கு - விமோசனம் என்பது முதியோர் இல்லமா? இவர்களது தேவைகள் எல்லாம் இங்கு நிறை வேற்றப்பட்டாலும் அன்பு, பாசம் போன்ற உளத் தேவை களை வேறு யாராலும் வழங்க முடியுமா?

தன்னிடம் உள்ள உதிரத்தையே பாலாகச் சொரிந்த அன்னைக்கு நாம் உதவாக்கரைகளாகச் செயற்படுவது எந்த வகையில் நியாயம். தன் பிள்ளைகளை சமூகத்தின் நற்பிரஜைகளாக வளர்த்த அன் னைக்கும், தந்தைக்கும் கிடைத்தது வெறும் கானல் நீர் போன்ற வாழ்க்கையே. இதனை இன்றைய இளையவர்களே உங்கள் சிந்தையில் எடுத்துச் சிந்தித்துப்பாருங்கள்.

இவைகள் அனைத்தும் இன்றைய பெற்றோர்களுக்கும் நற் பாடமாக அமைந்து கொள்ளட்டும். நிகழ்காலப் பெற்றோரே உங்கள் எதிர்கால வாழ்க்கையின் நலனைக் கருத்திற் கொண்டு, உங்கள் பிள்ளைகளின் ஆடம்பரமான வாழ்க்கைக்காகச் செலவழிப்பதை விடுத்து, உங்களதும், உங்கள் பிள்ளைகளதும் எதிர்காலம் நோக்கிச் சிந்தித்துப் பாருங்கள். அது மட்டுமன்றி உங்கள் பிள்ளைகளோடு நீங்களும் ஒரு தடவை முதியோர் இல்லம் சென்று வாருங்கள். ஏனெனில் இனியும் எமது சமூகத்தில் முதியோர் இல்லங்கள் பல தோன்றாமல் இருக்க வேண்டும்.

ஈழநாடு - சூரியன்.கொம்


- MUGATHTHAR - 08-22-2005

இதை விட பிள்ளைகள் பெற்றோரை தங்களுடன் வைத்திருப்பதிலும் பெரிய சுயநலம்தான் இருக்கிறது அம்மாவை வீட்டில் வைத்திருந்தால் வீட்டுச் சமையல் முதல் குழந்தையின் சகல அலுவலையும் பார்க்க ஏலுமே இதுகளுக்கு எண்டு ஒரு கூலியாளை அமர்த்துவது எவ்வளவு கஸ்டம் இதேபோல அப்பாவையும் வெளிவேலை செய்ய வைக்கிறார்கள் இது கன இடங்களில் நடக்கிறது பெத்தபிள்ளைகள் தானே எண்டு பெற்றோர்களும் முகம் சுழிக்காமல் செய்கிறார்கள் சில நாகரிகம் தலைக்கு மிஞ்சிய வீடுகளில் அவர்களின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் தாய் தந்தையை முன்னுக்கு வந்திடாதைங்கோ எண்டு ஓடர் போடுகிறார்கள் இப்படி ஒரு சம்பளமில்லாத வேலையாளாகவும் அடிமைகள் போலவும் பெற்றோர் பிள்ளைகளின் வீட்டில் இருப்பதைவிட முதியோர் இல்லங்களில் சந்தோஷமாக இருக்கிறார்கள் அவர்களை நிம்மதியாகத்தன்னும் இருக்கவிடுங்களேன்..........


- adsharan - 08-23-2005

இன்று பிறப்பு விகிதம் குறைந்தும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் வருகின்றது. முதியோர் எனப்படுவோர் 60 வயதுக்குக் கூடியவர்களையே குறிக்கும் ஒரு பதமாகும். மேலும், அரச, தனியார் நிறுவனங்களும் 60 வயதை இளைப்பாறும் வயதாகக் கொண்டிருப்பதும் முதியோர் வயதை 60 க்குக் கூடியது எனக் கொள்ளக் காரணமாகும்.

இன்று உலகிலே 650 கோடி சனத்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் 65 கோடியாக அல்லது 10 சதவீதமாக உள்ளனர். 1950 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 20 கோடி 40 இலட்சமாக இருந்தது. 2050 ஆம் ஆண்டில் இந்த தொகை 200 கோடியாக அல்லது உலக மொத்த சனத்தொகையில் 22 சதவீதமாக அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சனத்தொகைப்பிரிவு தெரிவிக்கின்றது. ஒவ்வொரு மாதமும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் தொகை 12 இலட்சத்தால் அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பில் 75 சதவீதம் அதிகரிப்பு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காணப்படுகிறது.

1991 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் 65 வயதிற்கு மேற்பட்டோர் 11.2 சதவீதத்தினராக இருந்தனர். இத்தொகை 2030 ஆம் ஆண்டில் 19 சதவீதமாக அதிகரித்து விடுமென ஆசிய பிராந்தியத்தில் 15 நாடுகளை மதிப்பீடு செய்த போது அறிய முடிந்தது. 120 கோடி மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 130 மில்லியன் பேராக இருக்கின்றார்கள். அது சீனா நாட்டின் சனத்தொகையிலேயே 10 சதவீதமாகும். உலகிலே முதியோர் தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடுகளில் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் ஒன்றாகும். 1997 இல் 7 சதவீதமான சிங்கப்பூர் மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தார்கள். 2030 இல் இது 19 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவிலும் முதியோர் தொகை 1997 இல் 7 சதவீதத்திலிருந்து 2020 இல் 13 சதவீதத்திற்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதுமை நிலை ஏற்படும் போது உடல், மன, சமூக ரீதியான மாற்றங்களும் ஏற்படுவது வழமை, உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் தளர்ச்சியடைகின்றன. வேலைகளைச் செய்யும் போது பழைய நினைவுகளை அசைபோட்டுப் பார்க்கும் போது, உடல் மாற்றங்கள் அவர்களுக்கு அலுப்பைத் தருகின்றன. இரசாயனங்களும் உடலில் குறைவாகவே சுரக்கின்றன. மூளையிலும் இரசாயனம் குறைவாக சுரப்பதாலும், நரம்புகள் சுருங்க ஆரம்பிப்பதாலும், இரத்தோட்டமும் குறைகிறது. இதனால் மூளையின் செயற்பாடுகளான புத்திசாலித்தனம், ஞாபகம், முடிவு எடுக்கும் ஆற்றல் போன்றவற்றில் குறைகள் ஏற்பட இடமுண்டு. இவர்களிடம் குறை காணும் அதிகாரிகள் இவர்களது எரிச்சலுக்கும், கோபத்திற்கும் ஆளாக இடமுண்டு.

மேலும், மன ரீதியாக பலர் பாதிப்புக்குள்ளாகின்றனர். குடும்பத்தில் இருந்த தலைமைப் பாத்திரம் குறைவதால் மனச்சோர்வடைகின்றனர். மேலும் உடல் உபாதைகள் சஞ்சலங்கள் மனநோய்கள் இவர்களைப் பாதிக்கின்றன. தனித்து ஒதுங்கி வாழும் முதியவர்கள் பதற்றத்துக்கும், பயத்திற்கும் ஆளாகின்றனர். தனிமை விரும்பிகளாக இருக்கும் இவர்கள் சோர்வாகவும், கோபமாகவும், சோகமாகவும், தன்னம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுவர். மனப்பதற்றம் என்பது இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். ஏனையோரைச் சார்ந்து வாழ்வதாலும் தன்னம்பிக்கையற்று வாழ்வதாலும் நெஞ்சு படபடப்பு, தூக்கமின்மை, எரிச்சல் என்பன அதிகமிருப்பவர்களாக காணப்படுவர்.

இந்த மனத்தளர்ச்சியுடையவர்கள் உடல் தளர்வு பயிற்சி பெற வேண்டும். மன நல ஆலோசனைகளும் இவர்களுக்கு மிக அவசியமாகும். எனவே, முதியவர்கள் மாற்றத்திற்கேற்ப தமது அன்றாட நடைமுறைகளையும் பழக்கங்களையும் ஏற்க வேண்டும். இதற்காக உளவியலாளர்கள் அவர்களுக்கு போதிய பயிற்சியளிக்க முன் வரவேண்டும்.

மேலும், முதியவர்களுக்கும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்னும் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. எனினும் உடல் தளர்வு, மனச்சோர்வு என்பவற்றை இதனால் கட்டுப்படுத்த முடியாது. அவை வயது ஏற ஏற இயல்பாக ஏற்படுவதொன்று. இன்று உலகில் மனிதனின் ஆயுட்காலம் அதிகரித்திருப்பது எமது நாகரிகத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். எனினும், இன்று பல முதியவர்கள் பல பிரச்சினைகளுக்குட்பட்டுக் காணப்படுகின்றனர்.

முதலாவது நிதிப்பிரச்சினை, தமது வாழ்க்கையை கொண்டு செல்ல நிதியின்றி அவதியுறுகின்றனர். ஏனையோரை, பிள்ளைகளை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பராமரிப்போர் இவர்களது மனதில் இறுதி நேரத்தில் சஞ்சலம் ஏற்படாது தகுந்த உபசாரங்களைச் செய்ய வேண்டும். இத்தாலியில் 1995 ஆம் ஆண்டில் வேலை பார்ப்போர் வயது 15 க்கும் 64 க்கும் இடைப்பட்டதாக இருந்தது. மேலும், சமூகப்பாதுகாப்பும் இவர்களுக்கு முக்கிய பிரச்சினையாகும். இவர்களை உடல், உள பாதிப்புகளிலிருந்தும் சமூகத்திலிருந்து ஒதுக்கி விடாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காக பல சமூக நலன் திட்டங்களைச் செயல்படுத்தப்பட முற்பட வேண்டும். ஓய்வுநேரத்தை பொழுதுபோக்கு ஏற்ற நித்திரை என்பன சரிவர இருக்க வேண்டும்.

இலங்கையில் 2000 ஆம் ஆண்டில் முதியோர் தொகை சனத்தொகையில் 10 சதவீதமாக இருந்தது. இலங்கையில் மொத்தம் 160 முதியோர் பராமரிப்பு நிலையங்கள் காணப்படுகின்றன. அதில் 3 நிலையங்கள் மாத்திரம் அரசாங்கத்தால் பராமரிக்கப்படுகின்றன. ஏனைய மதஸ்தாபனங்கள், தனிநபர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களால் பராமரிக்கப்படுகின்றன. எமது சட்டத்திலே சில மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம். வயோதிப காலத்தில் பிள்ளைகள் பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்பதை விதியாக்க வேண்டும். மேலும், முதியவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களை ஏற்படுத்தி அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இவர்களுக்கு உழைக்கும் போதே சேமிக்கும் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். சமூக பாதுகாப்பு நலன்புரி 1987 ஆம் ஆண்டு 12 இலக்கத்தின்படி விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் இன்று சமூக பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏனையோரும் ஏற்ற பலாபலன்களையடைய வழிவகுக்க வேண்டும். முதியோருக்கு அவர்களது தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் பாதிக்க இடமளிக்கக் கூடாது. இவர்களை தனிமைப்படுத்தும் போது வெறுமையடைகிறார்கள். கூட்டுகுடும்பங்களில் இது உணரப்படவில்லை. வீட்டில் சகல விடயங்களிலும் இறுதித் தீர்மானம் கூட்டுக்குடும்பத்தில் முதியவர்களால் எடுக்கப்பட்டது. இன்றும் இதை ஏற்படுத்த முற்பட வேண்டும். அவர்களது நீண்டகால அனுபவம், முடிவெடுத்தலில் பிரதான பங்களிக்க வேண்டும். சிலர் ஓய்வு பெற்ற பின்பும் வருமானத்திற்காகத் தொழிலுக்குச் செல்கின்றனர். இதனால், தன்னம்பிக்கை, தன்மானம் என்பன வளர வழிவகுக்கிறது.

1996 ஆம் ஆண்டில் இலங்கையில் சனத்தொகையில் 9 சதவீத பெண்களும் 9.1 சதவீத ஆண்களும் 60 வயதுக்குக் கூடியவர்களாக இருந்தனர். 1946 இல் 60 வயதுக்கு கூடியோர் 5.4 சதவீதமாக இருந்தது. 1991 இல் 8.1 சதவீதமாக உயர்ந்தது. 1998 ஆம் ஆண்டில் 9.5 சதவீதமாக மேலும் உயர்ந்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டில் 20 சதவீதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியாக உயர்வடைந்து செல்லும் முதியோர் தொகை 2031 இல் 22.4 சதவீதம் முதியவர்களாக மாற வழிவகுக்கிறது. இலங்கையில் வாழ்க்கை நீடிப்பு 42 ஆக 1946 இல் இருந்தது. 1991 இல் இது 72 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஆண்கள் 70 வயது வரையும், பெண்கள் 74 வயது வரையும் வாழ்வு நீடிப்பு உள்ளது.

மேலும், கணவர் 73.5 வருடங்களும், பெண்கள் 78.5 வருடங்களும் வாழ்வதற்குரிய காலமாக 2025 கணக்கிடப்படுகிறது. இன்று 60-70 வயது வரை சுகமாக, பௌதீக ரீதியாக உளரீதியாக பொருளாதாரத்திற்கு பங்காற்றக்கூடிய நிலைமை முதியவர்களுக்கு உண்டு. இதனால் சுகாதார, சமூகச்சேவைகள் 70 வயதுக்குக் கூடியவர்களுக்கு மாத்திரம் இன்று இலங்கையில் தேவைப்படுகிறது. மேலும் முதியோரில் பிறர் ஆதரவில் தங்கியிருக்கும் விகிதாசாரம் 1963 இல் 11 சதவீதமாக இருந்தது 1991 இல் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2031 இல் 100 வேலை செய்யும் பிரிவினர் 36 முதியோரைப் பராமரிக்கும் நிலைமை ஏற்படும். 1963 இல் 100 பிள்ளைகளுக்கு 14 முதியவர்கள் இருந்தனர். 1991 இல் 100 பிள்ளைகளுக்கு 26 முதியோர் இருந்தனர். இளம் முதுமை வயதானது 60-74 வரையாகும். முதுமையிலும் முதுமையின் வயதானது 75 க்கு கூடுதலாகும். முதுமையிலும் முதுமையான 75 வயதுக்கு கூடியவர்கள் 1971 இல் 19 சதவீதமாக இருந்தனர். 2031 இல் 30 சதவீதமாக மாறக்கூடும். ஓய்வு பெற்றவர்கள் ஓய்வுதியத்தின் காரணமாக தன்மானத்துடன் வாழ்கின்றனர்.

இலங்கையின் நியமப்படி பிள்ளைகள் தான் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். முதியோர்களின் தேவைகளாக சுகாதாரக் கவனம், உறைவிடம், நாளாந்த வேலைகள் என்பன இருக்கின்றன. முதியவர்களில் குறிப்பிட்டோர் தான் ஓய்வூதியும் பெறுகின்றனர். முதியவர்களில் தாய்லாந்தில் 5 சதவீதமும் மலேசியாவில் 6 சதவீதமும் மாத்திரம் ஓய்வூதியம் பெறுகின்றனர்.

இலங்கையில் தொழில் புரியும் முதியவர்களாகக் கணக்கிடின் 1992 இல் 47.4 சதவீத ஆண்களும் 8.7 சதவீத பெண்களும் தொழில் புரிந்தனர். 1998 இல் 42.4 சதவீத ஆண்களும் 8.8 சதவீத பெண்களும் மாத்திரமே தொழில் புரிகின்றனர். தொழில் புரிபவர்களில் ஆண்களே இலங்கையில் அதிகமாக காணப்படுகின்றனர். அதுவும் விவசாய தொழில் புரிபவர்கள் தொகைதான் அதிகம். ஜப்பானில் 33 சதவீத முதியவர்கள் 1982 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டனர். சீனாவில் 80 சதவீத முதியவர்கள் 1990 ஆம் ஆண்டு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் என குடிசனமதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது 46/91 தீர்மானமாக "வயது கூடியவர்களுக்கு வாழ்வளிப்போம்" என்ற கருதுகோளை முன் வைத்தது. இதன்மூலம் முதியவர்களது முக்கியத்தை அது உணர்த்தியது. இலங்கையில் 1991 ஆம் ஆண்டு முதியோருக்கு ஒரு தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டது. அதன் மூலம் முதியோருக்கு முக்கியமளிக்கப்பட்டது.

மேலும், இளைஞர்களும், ஏனையோரும் முதியவர்களைப் பற்றிச் சிந்தித்து அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சமூக ரீதியாக அவர்கள் வேலை இழந்திருப்பவர். வாழ்க்கை நிலை மாற்றத்திற்குள்ளாயிருப்பர், நிதியின்றி அவதியுறுவர், பிறருக்கு சுமையாக இருப்பர், தனிமையை நாடுவர், உதவி பாதுகாப்பின்றி அவுதியுறுவர். இவற்றை நாம் நிவர்த்தி செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரது கடமையாகும். சுகாதார ரீதியாக நோய் வாய்ப்படுவர். போஷாக்கின்மையால் பாதிக்கப்படுவர், வைத்தியசாலையை நாடுவர், வலது குறைந்து போயிருப்பர், நடமாட அவதியுறுவர். இவர்களுக்கும் நாம் மனதார உதவி செய்ய வேண்டும். உளரீதியாக மாறுபாடான தன்மை, தனிமை தன்மதிப்பு இழப்பு என்பனவற்றால் அவதியுறுவர். இவற்றையும் நீக்க முயல வேண்டும். இதற்கு அவர்களை நாம் பின்வருமாறு உதவுவதால் வழிசெய்யலாம். உரிய நித்திரை கொள்ள அனுமதித்தல், நல்ல தரமான வயதுக்கேற்ற உணவு அளித்தல், சுகத்தை பாதுகாத்தல், மருத்துவ பரிசோதனை, மன உறுதியை ஏற்படுத்தல் என்பனவற்றிற்கும் நாம் வழிவகுக்க வேண்டும்.

இப்படியாக நாம் பல்வேறு விதத்தில் உதவி செய்து முதியவர்களாகிய எமது பெற்றோரை பேணிப்பாதுகாக்க வேண்டும். இது எமது வாழ்நாள் கடமை. நாமும் முதியவராவது திண்ணம். எனவே எம்மையும் எம்மில் வயது குறைந்தோர் பிற்காலத்தில் எம்மை கவனிக்க வழிவகுக்க வேண்டும். காவோலை வில குருத்தோலை சிரிக்கக் கூடாது. குருத்துதோலை காவோலையாக மாறும் நிலை திண்ணம். முதியவர் வளத்துடன் வாழ வழிவகுப்போமாக! இது எமது தலையாய கடமையும் கூட, இளம் சமுதாயமே முதியோரைப் பேண திடசங்கல்பம் பூணுவோமாக!
thinakural


- tamilini - 08-23-2005

வீட்டில இருந்து சிறுப்பினைப்படுறதை விட இது மேல் தானே. ஆனா பெற்ற மனம் பாவம் எண்ணித்தவிக்கத்தானே செய்யும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- vasisutha - 09-04-2005

MUGATHTHAR Wrote:சில நாகரிகம் தலைக்கு மிஞ்சிய வீடுகளில் அவர்களின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் தாய் தந்தையை முன்னுக்கு வந்திடாதைங்கோ எண்டு ஓடர் போடுகிறார்கள்

இப்படியும் யாராவது செய்வார்களா? Confusedhock: :roll:


- MUGATHTHAR - 09-04-2005

Quote:இப்படியும் யாராவது செய்வார்களா?


ஏனப்பு இப்பிடி எங்கையன் காணேலையா? ஊருக்கு வந்தா சில வயசான சனத்திட்டை கூட்டிப் போறன் நீர் நேரடியாகவே கேட்டுப்பாரும் இது எதோ நகைச்சுவைக்காக எழுதவில்லை ஒரு வயதானவர் என்னிடம் கூறியதைத்தான் இங்கு குறிப்பிட்டன்........


- Mathan - 09-05-2005

MUGATHTHAR Wrote:சில நாகரிகம் தலைக்கு மிஞ்சிய வீடுகளில் அவர்களின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் தாய் தந்தையை முன்னுக்கு வந்திடாதைங்கோ எண்டு ஓடர் போடுகிறார்கள்

சில இடங்களில் இப்படி நடக்கின்றது. பெற்றோரை மற்றவர்கள் பார்த்தால் தமக்கு கெளரவ குறைவு என்று நினைக்கிறார்கள். இவர்கள் கட்டி வைத்திருக்கும் நவநாகரீக மேட்டு குடியினர் போன்ற விம்பம் அவர்களின் பெற்றோர்களை பார்த்தவுடன் உடைந்து விடுமல்லவா :twisted:


புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் - inthirajith - 09-14-2005

புலம் பெயர்ந்தவர்களின் .. மனங்களில் இருக்கும் மிகப்பெரிய கேள்வி வயதானகாலத்தில் அவர்கள் பிள்ளைகள் தங்களை பராமரிப்பார்களா? என்பது என்னோட கருத்து இல்லை என்பது சொந்தமாக புலத்தில் வீடு வாங்கினாலும் வயோதிபர்மடங்கள் தான் தஞ்சம் சூப் பாண் தான் கிடைக்கும் அங்கே அன்பு காட்டயாரும் இருக்கமாட்டார்கள் அங்கேயும் அவர்கள் வெளிநாட்டவர்கள்தானே எப்படிதான்புலத்தில் அந்தநாட்டு வதிவிட அனுமதி இருந்தாலும் அவர்கள் அன்னியர் தான் இல்லையா?பிள்ளைகளூம் இயந்திரவாழ்க்கையில் அடிப்பட்டு சுயநலமாக சிந்திப்பரார்கள் அது அவர்கள் தப்பு இல்லை சுற்றம் சொந்தங்களுடன் வாழாதவர்கள் அவர்கள் அப்படி தான் சிந்திப்பார்கள்

இந்த தலைமுறையுடன் தாயகத்தில் இருக்கும் உறவுகளை பணம் அனுப்பி உதவி செய்வதும் இல்லாது போய்விடும் புலத்தில் இருக்கும் பிள்ளைகள் கேட்கும் கேள்விகள் ஏன்பணம் அனுப்பவேண்டும் என்று ?அவர்களுக்கு புலத்தில் இருப்பவர்களிடம் பணம்பிடுங்குவது தான் தெரியும் பாசம் காட்டுவது குறைவு தானே
இந்தகருத்து நிறைய குடும்பங்களில் எதிர்காலத்தில் முகத்தில் அறையபோகும் நிஜம் உங்கள் கருத்துகள் சொல்லுங்கள்