![]() |
|
சொல்ல வந்தேன்........... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: சொல்ல வந்தேன்........... (/showthread.php?tid=3596) |
சொல்ல வந்தேன்........... - ப்ரியசகி - 08-21-2005 <img src='http://img399.imageshack.us/img399/7544/sonia0qv.jpg' border='0' alt='user posted image'> சொல்வாயா சொல்வாயா என ஏங்கினேன் சொல்லவா சொல்லவா எனவும் ஏங்கினேன் சொல்லச்சொல்லி சொல்லும் மனம்... சொல்லாதே என தடுக்கும் மறு கணம்... சொல்ல வந்த சொற்கள் எல்லாம்.. சொல்லாமலே ஓடி விட்டன சொல்ல வந்த கணங்கள் எல்லாம்.. சொல்லி விட்டு போய் விட்டன சொல்லி விட்டேன் நூறு முறை கண்ணாடி முன் சொல்ல முடியவில்லை ஒரு முறை உன் முன்னாடி... சொற்கள் தேடி..சொற்தொடர்கள் ஆக்கி சொல்லும் கணம் தேடி..சொல்ல வெண்டியவரைத்தேடி சொல்வதற்காய் ஓடி வந்தேன்........... சொல்லத்தொடங்க சொன்னாய் நீ...... சொல்ல வேண்டியதை எல்லாம்...நான்.. சொல்ல முடியாத நிலை... சொந்தம் என்று நாம் ஆக சொர்க்கம் சென்று நாம் வாழ சொந்தங்கள் ஏற்காத நிலைமை சொர்க்கமும் நம்மை அழைக்காத நிலை சொன்னாய் ஒரு முறை ஜாடையாய் சொல்ல நான் துடித்தது போல் நீயும் துடித்ததாய்........... சொல்லி விட்டார்கள் மனது நோகும் படி சொல்லித்தான் இனி என்ன..... சொல்லாமல் விட்டுத்தான் என்ன.... சொல்லி விட்டாய் நீ.... சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று சோர்ந்து விட்டேன் நான் சோராதே என்றாய்..... சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை சோகமும் வேண்டாம் என்றாய்..... சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி... சோடியாய் வந்தாய் உன் நண்பருடன் சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன் சோர்வதாய் நான் நடிக்கவில்லை சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த சொந்தம்.................அது இவள் வாழ்வில் சொல்லில் அடங்காத இன்பம்... சொல்லி முடியாத பந்தம்.......................... - SUNDHAL - 08-21-2005 சொல்லி முடியாத பந்தம் அதனை கவி வடிவில் சொல்லிய சகிக்க எனது வாழத்துக்கள் அருமையான வரிகள் ப்ரி.... - வெண்ணிலா - 08-21-2005 சொல்ல வந்ததை சொல்லீட்டீங்களே சொந்தக் கவிதையில் சோகமின்றி சோர்வின்றி சொர்க்கம் சென்று வாழ சொல்லுகிறேன் வாழ்த்து பல <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சூப்பர் கவிதை பிரியசகி. என் மனதையும் தொட்டு சென்றது தங்கள் கவி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 08-21-2005 சொல்லுச் சொல்லி சொல்லச் செல்ல சொல்லாமல் சொல்ல சொன்ன சொல் சோகமாய் சொன்னதைச் சொல்லும் சொந்தக் கவி நன்று...! - Birundan - 08-21-2005 அருமையான கவிதை அழகாக இருக்கின்றது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 08-21-2005 [quote]<b>சொல்லி விட்டாய் நீ.... சொர்க்கம் காணும் நினைப்பு வேண்டாம் என்று சோர்ந்து விட்டேன் நான் சோராதே என்றாய்..... சோகம் என் நெஞ்சில் குடியே கொண்டு விட்ட நிலை சோகமும் வேண்டாம் என்றாய்..... சோகம் கொள்ளாமல் நீ மட்டும்...எப்படி... சோடியாய் வந்தாய் உன் நண்பருடன் சோகமாய் பார்த்தாய் ஒரு புன்னகையுடன் சோர்வதாய் நான் நடிக்கவில்லை சொந்த நிலையும் நீ அறியாமல் இல்லை சொர்க்கம் என் கண் முன்னாடியும் இல்லை சொல்லி அழைக்கும் தூரத்திலும் இல்லை சொல்லாமல் நான் அழைக்கப்போவதும் இல்லை சொல்லி அதுவாய் எனை சேரப்போவதும் இல்லை</b> கவிதை சூப்பர் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 08-21-2005 பிரிய சகி நல்லயிருக்கு தொடருங்க....... - Vishnu - 08-21-2005 போட்டுத்தாக்கிறிங்க ப்ரியசகி.... உங்கள் கவி வாழ வாழ்த்துக்கள். - tamilini - 08-21-2005 என்ன தான் நடந்தது ப்ரியசகி. கவிதையில சோகம் தெரியிறமாதிரி இருக்கே. கவிதை. கவிதை வரிகள் அழகாய் உள்ளது. Quote:சொன்னாலும் சொல்லாவிட்டிலும்...நீ தந்த - Rasikai - 08-21-2005 கவி வரிகள் அருமை தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள் - Nitharsan - 08-21-2005 வாழ்த்துக்கள் கவிதை நன்று... - ப்ரியசகி - 08-21-2005 எல்லோருக்கும் ரொம்ப நன்றி. பதில் கவிதைகளும் நல்லா இருக்கு.. tamilini Wrote:என்ன தான் நடந்தது ப்ரியசகி. கவிதையில சோகம் தெரியிறமாதிரி இருக்கே. கவிதை. கவிதை வரிகள் அழகாய் உள்ளது. நன்றி அக்கா...ம்ம்..கவிதைல தான் அக்கா சோகம்..ப்ரியசகில இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (பாசமா கேட்க ஒரு அக்கா கிடைச்ச சந்தோசத்தில நான் இருக்கேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) - Jenany - 08-22-2005 ப்ரியசகி...கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்...... - கீதா - 08-25-2005 நன்றாக இருக்கு கவிதை அக்கா வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> .jothika ----------------------------- பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியல - Mathan - 08-26-2005 கவிதை நன்றாக இருக்குறது. தொடர்ந்து எழுதுங்கள். சொல்லாமல் தவித்து துன்பத்தை அனுபவிப்பதை விட சொல்லிவிடுவதே மேல். நேரடியாக சொல்ல முடியாத போது ஜாடையாய் சொல்லலாம். - ப்ரியசகி - 08-26-2005 Mathan Wrote:கவிதை நன்றாக இருக்குறது. தொடர்ந்து எழுதுங்கள். அப்பிடீங்கிறீங்க....... - Mathan - 08-27-2005 ம் நிச்சயமா. |