![]() |
|
ஒருவர் நாட்குறிப்பில் கிறுக்கியது... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஒருவர் நாட்குறிப்பில் கிறுக்கியது... (/showthread.php?tid=3598) |
ஒருவர் நாட்குறிப்பில் கிறுக்கியது... - Thala - 08-21-2005 <b><span style='font-size:25pt;line-height:100%'>என் நாட்குறிப்பில்கிறுக்கியது </span> <img src='http://www.indomania.net/Gallery/Collection/Kajol/lightson_kajol1.jpg' border='0' alt='user posted image'> ஒருவாறு என்வாழ்வில் வெள்ளிவந்தது... என்னைப்பார்ததுதான் உன்விழியில் என்ன ஒளி குழந்தைபோல் ஓடிவந்தாய் என்னருகில்... உன்கையை இறுகப்பிடித்துக்கொண்டேன் விட்டுவிட்டால் என்னுயிர் போய்விடலாம் கைகளுக்கூடே மின்சாரம் இதயம் மீண்டும் இயங்கத்தொடங்கியது "........ உன்னைப்பார்க்காமல் ஒரு நொடி கூட என்னால்இருக்கமுடியவில்லை... உன்னோடுதான் என்வாழ்வு அமையவேண்டும்..." "ஏற்றுக்கொள்வாயா?" நீ என் கைகளை இறுகபிடித்துக்கொண்டாய்.. உன் கண்களில் இரண்டுதுளி கண்ணீர் ஏதோ சொல்லவந்தாய் வார்த்தைகள் வெளியேவரவில்லை கனிவாகப்பார்த்தாய் பின் என் கைகளை எடுத்து யாரும் பார்க்காதபோது முத்தமிட்டாய்.. உன் மனதில் மகிழ்ச்சி வெட்க்கம் ஒராயிரம் உணர்ச்சிகள் ஒன்றாய்... அன்று முடிவுசெய்தோம் வாரத்தில் நான்கு தடவை பார்ப்பது என்று அந்த நான்குநாட்கள் மட்டும்சுவாசிக்கும் ஒரு புது ஜீவராசியாய் நான் வலம் வந்தேன் நூலகம் கோவில் இந்த இரண்டிலும் தான் எமது சந்திப்புத்தொடாந்தது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணர்ச்சி அன்று மீண்டும் நாட்டில் வன்முறை வெடித்தது இந்திய இராணுவம் ஏற்படுத்திச்சென்ற கறைகள் ஆறும் முன்பே மீண்டும் ஒரு போர் இலங்கை இராணுவத்தின் அராஜகம் ஆரம்பித்துவிட்டிருந்தது... உன்னைப்பார்ப்பது தடைப்பட்டுப்போனது முதலுதவிப்படையினருடன் நானும் இணைந்து காயம்பட்ட சகோதரர்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்... ஒருநாள் இரவு கொஞ்சம் நேரம்கிடைத்தது ஓடி வந்தேன் எப்படியும் பார்த்துவிடுவது என்று உன் வீடு புூட்டிக்கிடந்தது.... நீஙகள் இடம்பெயர்ந்துவிட்டதாக சொன்னார்கள் எங்கு சென்றாய் என்று தெரியவில்லை... மனம் நொடிந்து பொனது... எதுவும் செய்யப்பிடிக்கவில்லை வீட்டிலே முடங்கிக்கிடந்தேன்... நாட்கள் செல்லச்செல்ல போர் வலுப்பெற்றது... நாங்களும் இடம்பெயர்ந்தோம் ஒருநாள் அப்பா என்னையும் என் தம்பியையும் இந்தியாவிற்க்கு போக ஏற்பாடுசெய்துவிட்டுவந்திருந்தார் அம்மா போய்விடும்படி கெஞ்சினாள்.... இந்தியா வந்து என் படிப்பைத்தொடர்ந்தேன் இலங்கையில் இருந்த இரண்டொரு நன்பர்களுக்கும் உன்விபரம் தெரியவில்லை... உன் முகவரிக்கு நான் போட்ட கடிதங்கள் எதுவும் பதில்கொண்டுவரவில்லை... இன்று நீ எங்கே இருக்கின்றாயென்று எனக்குத்தெரியாது... பதின்மூன்றுவருடங்கள் பறந்தோடிவிட்டன.. மனதில் உன்முகம் கொஞ்சம் மங்கலாகிப்போய்விட்டதுண்மை... எப்போதாவது தனிமையில் உன்னைநினைப்பேன்.. அப்போது மட்டும் இதயம் கனத்துப்போய்விடும்... அப்போழுதுதெல்லாம் ஆண்டவனைவேண்டிக்கொள்வேன் நீ மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்னை மறந்துவிட்டிருக்கவேண்டும் [b]முற்றும்</b> <b>ஆதிபன் சிவா க்கு </b> நண்றிகள். http://aathipansiva.blogspot.com/2004/10/b...9409401367.html - Birundan - 08-21-2005 அருமையான கவிதை வாழ்த்துக்கள். - KULAKADDAN - 08-21-2005 பிரிவின் கனம்இ அது தரும் நினைவுகள் மறக்க முடியாதவை.......... நல்லயிருக்கு - வெண்ணிலா - 08-21-2005 Quote:மனதில் நன்றி தல. அருமையாக இருக்கிறது. நினைவுகள் என்றும் பசுமையானவை. மறக்க நினைத்தாலும் மறக்க முடியாதவை.
- Rasikai - 08-21-2005 கவிதை வரிகள் அருமை. - அனிதா - 08-21-2005 கவி வரிகள் நல்லாயிருக்கு .. நன்றி சகோதரம்.. - tamilini - 08-21-2005 அதிபன்அண்ணாவின் கவிதை முந்தி வாசித்த நினைவு. நன்றி தல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Jenany - 08-22-2005 அருமையான கவிதை....... - ப்ரியசகி - 08-23-2005 நல்ல கவிதை அண்ணா... சில நினைவுகள் எவ்ளொ காலம் சென்றாலும் மனசில இருக்கும்....நினைக்கும்போதேல்லாம் ஆசையாகவும் இருக்கும்....சில கணங்களில்..வலியும் கொடுக்கும்.. - கீதா - 09-10-2005 நல்ல கவிதை அண்ணா நன்றி தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் - AJeevan - 09-10-2005 அருமை..........................நன்றி. - shobana - 09-10-2005 அனுபவித்து எழுதப்பட்ட உண்மை என்பதால் அருமை ஆதி அண்ணா Re: ஒருவர் நாட்குறிப்பில் கிறுக்கியது... - vikadakavi - 09-11-2005 மிகவும் அருமை ஆக்கியவருக்கு; என் வாழ்ததுகள் - sakthy - 09-11-2005 வாவ் அருமை நண்பா ஆனாலும் எனக்கும் வலிக்கிறதே படிக்கும்போது......... பிரிவின் துயர் கொடுமைதான் அனுபவிக்கும் போது |