Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 487 online users.
» 0 Member(s) | 484 Guest(s)
Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,433
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,676
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,237
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  கதிர்காமரின் கொலையும், சந்திரிகாவின் நிலையும். பகுதி 3
Posted by: malaravan - 08-16-2005, 07:53 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சென்ற கட்டுரையில் தெரிவித்து இருந்தோம் இக்கொலையை சந்திரிகா ஏன் செய்திருக்கக்கூடாதென்று. அதற்கான காரணங்கள் சென்ற கட்டுரையில் தெளிவு படுத்தப்படாமல் இக்கட்டுரையில் தெளிவு படுத்துகின்றோம். ஆம். தனது பதவியை நிரந்தரமாக்குவதற்கும், தனது பொதுஜன ஐக்கிய முன் னணியை இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவகையில் நிலை நிறுத்து வதற்கும் தமது குடும்ப உறுப்பினர்களை அரசியலில் கொண்டுசெல்வதற்கும் சந்திரிகா எடுத்துக்கொண்ட வியுூகங்கள் தான் இவை. அவற்றிக்கு அவர் பலி கொடுத்துக்கொண்டது தன்னை தமிழன் என்று சொல்லாத ஓர் தமிழனை. இன்றைய அரசியல் சுூழலில் கதிர்காமரை போட்டுத்தள்ளும் பக்குவம் சந்திரிகா அரசுக்கு கனகச்சிதமாக, கைவந்த கலையாக இருந்திருக்கின்றது. உதாரணமாக சிவராம் படுகொலை, கௌசிகன் படுகொலைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் சிவராம் படுகொலையை சனநடமாட்டம் கூடிய இடத்திலிருந்து கடத்தி, அதிகூடிய பாதுகாப்பிற்குரிய இடத்தில் வைத்து கொலைசெய்து வீசும் அளவுக்கு அவர்களின் துணிவு இருந்திருக்கின்றது. காரணம் அரசு தமது கையில் என்கின்ற துணிவும், யாரும் தம்மை கைது செய்தால் உடனும் தாம் அரசாங்கத்தின் கையாள் என்று தெரியும் இடத்தில் உடனும் விடுதலையாகலாம் என்றும் தெரிந்ததன் நிமித்தம் அக்கொலை நடைபெற்றிருந்தது. இவையிருக்க கதிர்காமரை போடவேண்டிய தேவை என்ன?

சென்ற தேர்தலில் பிரதமமந்திரி பதவிக்காக கதிர்காமரின் பெயர் முன்மொழியப்பட்டது.

சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்குப்பெற்று வந்தமை

சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்காவின் செல்வாக்கு கட்சிக்குள் இல்லாது போனமையும், அரசியலில் அவரை கோமாளியாக சக உறுப்பினர்களே கிண்டல் செய்யும் அளவுக்கு மாறியமையும்

அமெரிக்காவை புறம்தள்ளி இந்தியாவுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கியமையும் சந்திரிகாவுக்கு எரிச்சலை உண்டுபண்ணியமை

பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் அமைச்சர் கதிர்காமருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள்

அவைகளை காரணமாக வைத்து கதிர்காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம்.

சென்ற தேர்தலில் அவரின் கட்சிக்குள் எவ்வளவோ சிங்கள உறுப்பினர்கள் இருக்கும் போது ஒரு தமிழனை பிரதம மந்திரியாக்கும் அளவுக்கு அவர் செல்வாக்கு பெற்றிருக்கின்றார் எனில் அவரை தமது கட்சிக்குள் மேலும் வளர விடுவதில் உள்ள ஆபத்துக்களை சந்திரிகா நன்கு உணர்ந்து கொண்டிருக்கலாம் ஆகவே அவரை போட்டுத்தள்ளும் நிலையை அவர் அடைந்திருப்பார்.

சிங்கள மக்கள் மத்தியில் கதிர்காமர் பெரும் செல்வாக்ககைப்பெற்றதும் மற்றைய காரணமாகின்றது. கதிர்காமருக்கு சிறு நீர்ப்பையில் கோளாறு காரணமாக அவரின் சிறுநீரகம் மாற்றப்பட்டது. அதற்கு தனது ஒரு சிறுநீரகத்தை கொடுத்து உதவியது பேரினவாதத்தை முழு மூச் சாகக்கொண்ட சிங்கள பௌத்த பிக்கு ஒருவர். அந்தளவுக்கு கதிர்காமரின் பெயர் பேரினவாதிகள் மத்தியில் ஆழஊடுருவி நின்றதன் காரணமாக கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம்.

தனது சகோதரன் அனுரா பண்டாரநாயக்காவின் மீதுள்ள கரிசனையால் எங்கே தான் கட்சியிலிருந்து போனாலும் அனுராவின் கட்சிப்பதவியும், அரசபதவியும் பறிபோய்விடாதவண்ணம் பாதுகாக்கும் பொருட்டும் போட்டுத்தள்ளியிருக்கலாம். கதிர்காமரை பிரதமராக அறிவிக் கலாம் என்று கட்சியில் கதை அடிபடத்தொடங்கியவுடனேயே அதற்கு பகிரங் கமாக எதிர்ப்பு தெரிவித்தவர் அனுரா. இதனடிப்படையில் கதிர்காமர் தொடர்ந் தும் உயிருடன் கட்சியில் இருந்தால் தனது சகோதரனின் வளர்ச்சி பாதிப்படைந்துவிடும் என்கின்ற நோக்கில் போட்டுத்தள்ளியிருக்கலாம்.

தற்சமயம் கதிர்காமரின் நடவடிக்கைகள் அமெரிக்காவை புறம்தள்ளிவிட்டு இந்தியாவை இலங்கைப்பிரச்சனையில் நேரடியாக தலையீடு செய்யவைப்பதற்காக மும்மரமான ஈடுபாட்டுடன் செயற்பட்டதானது சந்திரி காவை எரிச்சல்ப்படுத்தியிருக்கலாம். கதிர்காமர் இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை மேற்கொள்ளத்தொடங்கிய பிற்பாடுதான் அமெரிக்கா இலங்கை அரசுமீது கூடுதல் அழுத்தங்களை பிரயோகிக்கத்தொடங்கியது. அந்தவகை யில் எரிச்சல்ப்பட்ட சந்திரிகா கதிர்காமரை போட்டுத்தள்ளியருக்கலாம்.

தற்சமயம் பொதுக்கட்டமைப்பு சம்பந்தமாக சந்திரிகாவுக்கும் கதிர்காமருக்கும் எழுந்த கருத்துமுரண்பாடுகள் காரணமாவும் சந்திரிகா கதிர் காமரை போட்டுத்தள்ளியிருக்கலாம். நாம் இக்கருத்தை முன்வைக்க வேண்டியதன் கருத்து கதிர்காமர் படுகொலைக்கு முன் இருநாட்களுக்கு முன் இருதமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கதிர்காமரின் வாசல்த்தலத்தை கைத்தொலைபேசியில் உள்ள வீடியோவில் படம் எடுத் ததகாகக்கூறியே அக்கைது இடம் பெற்றுள்ளது. அவ்வாறான கூடுதல் பாது காப்பிற்கு உட்பட்டிருந்த பகுதியில் இரண்டு பேர்கள் குறிபார்த்துச்சுடக்கூடிய சினைப்பர் துப்பாக்கி இரண்டைத்து}க்கிக்கொண்டு எவ்வாறு அங்கு சென்றிருக் கலாம். அங்கு சினைப்பரைப்பொருத்தி ஏழு அடி மேடைபோட்டு ஒரு வாரங் களுக்கு மேலாக இருந்திருக்கின்றார்கள் என்று தகவலையும் சொல்லி, கதிர்காமருக்கு நு}றுக்கு மேற்பட்ட பாதுகாப்புக்கு பொலீசையும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் சொல்லும் அவர்கள், கொலையாளிகள் பயன்படுத்திய வீட்டின் கழிவறையில் சினைப்பர் பொருத்தக்கூடிய அளவிற்கான பகுதிக் கற்கள் சுவரில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டதாகவும் சொல்லிகின்றார்கள். அவ்வாறாயின் கல்லைப்பெயர்க்கும் போது சத்தம் எதுவும் கேட்கவில்லையா?. ஓரிரு காவலாளிகள் பாதுகாப்புக்;கடமையில் ஈடுபட்டிருந்தால் அது சாத்திய மாகியிருக்கலாம். ஆனால் நு}ற்றிக்கு மேற்பட்ட காவலாளிகள் காவற் கடமையில் உள்ள வேளையில் இது நடைபெற்றதால் எதுவிதமான சிறுசத் தமும் அவர்களுக்கு கேட்கவில்லையா? அப்படியாயின் காதுகேட்காத பாதுகா வலரா கடைமையில் ஈடுபட்டார்கள் என்கின்ற கேள்வி எழுகின்றதல்லவா?. அத்துடன் இப்போ நெருங்கிக்கொண்டிருக்கும தேர்தலில் தனது கட்சி வெற்றிபெறவேண்டும் என்கின்ற நோக்கிலும், தனது கட்சியும்,தானும் ஏதாவது ஒருவகையில் மீண்டும் ஆட்சியைப்பிடிக்கவேண்டும் என்கின்ற பதவி வெறியிலும், இக்கொலையை தன் செய்தாலும் அப்பழியை புலிகள் மேல் இலகுவாக போட்டு விடலாம் என்கின்ற விதத்திலும் கதிர்காமரை சந்திரிகா போட்டுத்தள்ளியிருக்கலாம் இல்லையா?. நு}ல் வெளியீட்டுக் போய்வந்தபின் கதிர்காமர் குளிப்பதற்காக தனது பிரத்தியேக வீட்டுக்கு நீச்சலுக்கு வரும் விடயம் விடுதலைப்புலிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அது சந்திரிகாவுக்கும் கதிர்காமரின் மனைவிற்குமே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கின்றது. தனது கணவரைக்கொல்லும் அளவுக்கு திருமதி கதிர்காமருக்கு எதுவித மான இலாபமும் இல்லை. அப்படியாயின் இக்கொலையை சந்திரிகா செய்ய ஏதுவாகின்றதல்லவா? இக்கொலையை இன்றைய சுூழலில் செய்வதால் சந்திரிக்காவிற்கு இரண்டு நன்மைகள்

1.தனது அரசியல் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

2.விடுதலைப்புலிகளை சர்வதேசமட்டத்தில் பயங்கரவாதிகளாக முத் திரை குத்தி உலக மட்டத்தில் அவர்களுக்கு தீராத பகையை ஏற்ப டுத்தி விடலாம் என்பதுடன் ஓர் தமிழனை கொன்றே தமிழர் பிரச் சனையை மீண்டும் அரசியல் வரலாற்றில் ஓடவிட்டுவிடலாம் என்ப துவும் அவரின் எண்ணவோட்டமாக இருந்திருக்கலாம் அல்லவா?

இதற்கு முதலில் பலியாகியது தன்னை தமிழனாக காட்டிக்கொள்ளாத கதிர்காமர். இதன்பின்னும் எத்தனை தமிழர்களின் தலை உருளப் போகின்றதோ? எது எப்படியாகினும் சந்திரிகாவுக்கும் கதிர்காமர் கொலைக்கும் ஏதாவது ஒருவகையில் தொடர்பிருப்பது உண்மையாகின்றதல்லவா?. அடுத்து நாம் பார்க்கப்போவது ஜேவிபியும் சிங்கள உறுமயாவையும் .அவர்கள் இக்கொலையை செய்திருக்க வாய்ப்புகள் எப்படி அமைந்திருக்கும் என்பதைப் பார்ப்போம்.

விபரம் தொடரும்....

மலரினி மலரவன்
www.tamilkural.com

Print this item

  என் பெயர் சித்ரா
Posted by: tamilini - 08-16-2005, 07:52 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (10)

<img src='http://photos23.flickr.com/33068560_79f51c1ebb.jpg' border='0' alt='user posted image'>
<b>ஆகஸ்ட் 13</b>
என் பெயர் சித்ரா. இன்று என் பன்னிரெண்டாவது பிறந்த நாள். அண்ணன் இந்த டைரியை வாங்கித் தந்தான். இந்த டைரியில் தினம் நான் என்னைப் பற்றி எழுதப் போகிறேன். அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் சென்னையில் டாக்ஸீ ஓட்டுகிறான். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்ப்பான். அவன் டாக்ஸீயில் தான் வருவான். எனக்கு அவன் டாக்ஸீ பிடிக்காது, கருப்பு நிறம்.

<b>ஆகஸ்ட் 14</b>அண்ணனுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். எனக்கு அவரைப் பிடிக்காது. குடித்துவிட்டு அம்மாவை அடிப்பார். இன்றும் அடித்தார். அண்ணன் தடுத்தும் கேட்கவில்லை.அம்மா அழுது கொண்டே இருந்தாள். அண்ணன் மிகவும் கோபமாக டாக்ஸீ எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான். அம்மா அவனுக்காக பாயாசம் செய்திருந்தாள். அவன் அதைக் குடிக்காமலே சென்றுவிட்டான். எனக்கு பாயாசம் பிடிக்காது. நான் கூழ் மட்டும் தான் குடிப்பேன்.

<b>ஆகஸ்ட் 15</b>
இன்றைக்கு பள்ளி விடுமுறை. காலையில் "குட்டி இராஜகுமாரி" படித்தேன்; அண்ணா வாங்கித் தந்தது. நான் அதை எட்டு முறை படித்து விட்டேன். அண்ணா தனியாக இருக்கும் போதெல்லாம் என்னை "குட்டி இராஜகுமாரி" என்று அழைப்பான். எனக்கு வெட்கமாக இருக்கும்.

அப்பா சாயங்காலம் சினிமா கொட்டகையில் "வெற்று பிம்பங்கள்" திரைப்படம் பார்ப்பதற்காக அம்மாவை கிளம்பச் சொன்னார். அம்மா, என்னையும் கூட்டிச் செல்லலாம் என்று கெஞ்சி சம்மதிக்க வைத்தாள். அப்பா வழக்கத்திற்கு மாறாக அவ்வளவாக கோபப் படவில்லை. கொட்டகைக்குள் அப்பா அம்மாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு கோபம் வரவில்லை, சிரித்துக்கொண்டே இருந்தாள். படம் நன்றாகவே இல்லை. படம் முழுக்க சண்டை;இரத்தம். ஏதோ குழந்தை பக்கத்தில் அசிங்கம் செய்துவிட்டது. நாற்றம் அடித்தது. நான் வீட்டுக்குப் போகலாம் என்று அழத் துவங்கி விட்டேன். அதிகமாகவே அழுதேன். மண்ணில் புரண்டு பாவாடை எல்லாம் ஒரே அழுக்கு. அம்மா என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வேகமாக கிளம்பினாள். அப்பா வரவில்லை. கிளம்பும் முன் "சனியனை கூட்டி வர வேண்டாம்னு இதுக்குத் தான் சொன்னேன்" என்று கத்தினார். அப்பா என்னை "சனியன்" என்று தான் அழைப்பார்.

<b>ஆகஸ்ட் 16</b>
இன்று பள்ளியில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அறிவித்தனர். சரித்திரம், கணிதம், அறிவியல் மூன்றிலும் நல்ல மதிப்பெண்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் குறைவு. அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். இரவில் அப்பாவிடம் சாப்பிடும் போது சொன்னாள். அப்பா அவசரமாக "உம்" கொட்டினார்.

<b>ஆகஸ்ட் 17</b>
இன்று காயத்ரியை அடித்து விட்டேன். அவள் என் தோளில் கைப் போட்டாள். எனக்கு அது பிடிக்காது. ஷாரதா டீச்சர், என்னை மிகவும் கோபமாகத் திட்டினார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டிற்கு வந்த போது அம்மா குளித்து பொட்டெல்லாம் வைத்து அழகாக இருந்தாள். என்னிடம் "உனக்குத் தம்பி பாப்பா வரப் போறான்" என்று சொல்லி புன்னகைத்தாள். நான் என் பையை தூக்கி எறிந்து கொல்லையில் போய் ஓரமாக உட்கார்ந்துக் கொண்டேன். அம்மாவும் இன்று கோபப் பட்டாள். எனக்கு அழுகை வந்தது. விரல் நகத்தையும் சுற்றி இருந்த சதையையும் கடித்தேன். கோபம் வந்தால் இப்படித் தான் செய்வேன். கை எல்லாம் ஒரே இரத்தம். எனக்கு வலிக்கவே இல்லை. அம்மாவிடம் ஓடினேன். அம்மா பயந்துவிட்டாள். பத்தெல்லாம் வைத்து கட்டு போட்டு விட்டாள். அவளும் அழுதாள்.

<b>ஆகஸ்ட் 18</b>
இன்று பள்ளிக்குப் போகவில்லை. பாலம் உடைந்து விட்டதாம். 2கிமீ. சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். எனக்கு அந்த பாதை பிடிக்காது.

இன்று நாள் பூராக படம் வரைந்தேன். அம்மாவின் படம் கூட வரைந்தேன். அம்மாவிடம் காட்டிய பொழுது என்னை அணைத்தாள். அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிக்கும். ஆனால் சில சமயங்களிம் எனக்குப் பிடிக்காது. அவள் என்னை அணைத்துக் கொள்வாள். எனக்கு கோபம் வந்து அவளைத் தள்ளி விடுவேன். இன்றும் அப்படித் தான் செய்தேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

<b>ஆகஸ்ட் 19</b>
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். அவருடன் வேறு யாரோ வந்திருந்தார். அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள். நான் அம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். "இந்த சனியன் நமக்கு வேண்டாமடீ" என்று என்னைப் பார்த்துக் கத்தினார். எனக்கு ஒன்றும் புரியவே இல்லை.

<b>ஆகஸ்ட் 20</b>
இன்றும் பள்ளிக்குப் போகவில்லை. பாலம் சரியாக இன்னும் 4 நாட்களாகும். நான் டைரியைப் படித்துக் கொண்டிருதேன். அம்மா என்னைப் பின்னால் இருந்து அணைத்தாள். எனக்குக் கோபம் வந்தது. ஆனால் அம்மா அழுது கொண்டிருந்தாள். எனக்கு பயமாக இருந்தது. "உனக்கு இனிமே இந்த டைரி, ஸ்கூலு எதுவும் கிடையாது சித்ரா. உங்கப்பன் உன் வாழ்க்கையே பாழாக்கப் போறான்.சண்டாளப் பாவி. அந்த பாவிமவன் உன்ன உங்க சித்தப்பன் கிட்ட அனுப்பப் போரானாம். 2000 ரூபாய்க்கு என் உசுரையே வித்துட்டான் . வேற எதாவது ஊருக்கு கூட்டிப் போய் உன்ன பிச்சை எடுக்க விட்டுடுவான்டீ அவன். உங்க அண்ணகிட்ட விட்டுடலாம்னாலும் கேட்க மாட்டேங்கிறான் இந்த மனுஷன். 2000 ரூபாய் அவனா தருவான் -ங்குறான் இந்த கிருக்கன்.உங்க அண்ணன் எங்குப் போய்த் தொலஞ்சானோ. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னா இந்த ஆள் கேட்க மாட்டேங்குறான். நீ வேற அப்பப்போ ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்டு வந்து நிக்கற. இங்கேந்து தப்பிச்சு போய்டு. எங்கேயாவது ஓடிப் போய்டுடீ." பிறகு ஏதொ கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி எங்கப்பாவையும் சித்தப்பாவையும் திட்டினார். நாளை என்னைக் கூட்டிச் சென்று விடுவார்களாம். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் கொல்லப் புறத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருந்தேன். அம்மா அழுது கொண்டே வெளியே எங்கோ சென்றாள். எனக்கு அண்ணா ஞாபகம் வந்தது. நாளை முதல் நான் பிச்சை எடுக்கப் போகிறேன், அண்ணா.

இந்த டைரியை நான் கொல்லைப் புறத்தில் புதைக்கப் போகிறேன். இதில் கடைசிப் பக்கத்தில் என் அண்ணாவின் விலாசம் இருக்கிறது. யாராவது இதைப் பார்த்தாள் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் "குட்டி இராஜகுமாரி" படித்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.

<b>ஆகஸ்ட் 21</b>
அம்மா விஷத்தைக் குடித்துவிட்டாள். ஒரே அழுகைச் சத்தம். நானும் அழுதேன். அப்பா - "ரெண்டு உசுருடீ, இப்படி பழி வாங்கிட்டியே!" என்று அழுது கொண்டே அம்மாவின் நெஞ்சில் உதைத்தார். அம்மாவுக்கு வலித்திருக்காது. அப்பா என் தலையை சுவற்றில் மோதினார். எனக்கும் வலிக்கவில்லை. சித்தப்பாவும் அங்கிருந்தார். நான் கொல்லையில ஒளிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் கழித்து கார் சத்தம் கேட்டது. பிறகு அங்கேயே தூங்கிவிட்டேன்.

சாயங்காலம் அண்ணன் தான் என்னைத் தட்டி எழுப்பினான். அண்ணன் கண்ணெல்லாம் சிவந்திருந்தது. நான் அவனைப் பார்த்தவுடன் அழத் துவங்கிவிட்டேன். அவன் என்னை அவனுடன் கூட்டிச் செல்வதாகச் சொன்னான். எனக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு டைரியைப் புதைத்த இடத்தை காண்பித்தேன். அவன் தோண்டி எடுத்தான்; டைரி முழுக்க மண். நான் எழுதியதை எல்லாம் அவனுக்குக் காட்டினேன். அவனுக்கு அப்பா மீது பயங்கரக் கோபம். அப்பாவை கண்ணத்தில் அறைந்தான். ரூபாய் நோட்டெல்லாம் அவர் முகத்தில் எரிந்தான். அப்பா அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா என்னை அவன் டாக்ஸீயில் சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டான். எனக்கு சோகமாக இருக்கிறது. அண்ணன் தங்கி இருக்கும் அறை எங்கள் வீட்டை விடச் சிறியது.

<b>ஆகஸ்ட் 22</b>
அண்ணா என்னை டாக்டரிடம் கூட்டிச் சென்றான். எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றேன். அவன் கேட்கவே இல்லை. எனக்கு கோபம் வந்தது, அம்மா ஞாபகம் வந்தது.
எனக்கு டாக்டரை மிகவும் பிடித்திருந்தது. என்னைப் படமெல்லாம் வரையச் சொன்னார். நான் அண்ணாவை மொட்டையுடன் வரைந்தேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். அப்பாவும் அண்ணனும் நேற்று மொட்டை அடித்திருந்தார்கள். திரும்பி போகும் வழியில் என்னை நாளை பள்ளியில் சேர்க்கப் போவதாகச் சொன்னான். நான் சந்தோஷத்தில் கத்தினேன். அண்ணன் சத்தமாக சிரித்தான்.

<b>ஆகஸ்ட் 25</b>
என் பள்ளியின் பெயர் "Leo Karner Institute for Children with Special Needs". இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் தான்- ஜோசஃபீன். ஜோசஃபீனுக்கு இறுக அணைத்தால் பிடிக்கும். சந்திரா டீச்சர் அவள் அழும் போதெல்லாம் இறுக அணைத்துக் கொள்வார். நான் ஜோசஃபீன் அழுவது போல் படம் வரைந்தேன். அவளுக்கு கோபம் வந்து விட்டது. இங்கு நான் நிறைய படங்கள் வரைகிறேன். நான் நன்றாக வரைவதாக சந்திரா டீச்சர் சொல்கிறார். அண்ணனும் நான் பெரிய ஓவியனாக வருவேன் என்று சொல்கிறான். நான் வரைந்த படத்தை வரவேற்பரையில் மாட்டி உள்ளனர் - என் அம்மா எனக்கு ஊட்டி விடும் படம். படத்தின் ஓரத்தில் என் கையெழுத்து கூட இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

-சஞ்சீத்

நன்றி தமிழ்மணம்
http://throughmylookingglasses.blogspot.co.../blog-post.html

Print this item

  உங்களுக்கு top 10 songs தெரிவுசெய்யத்தெரியுமா
Posted by: tamil03 - 08-16-2005, 09:43 AM - Forum: பொழுதுபோக்கு - No Replies

உங்களுக்கு top 10 songs தெரிவுசெய்யத்தெரியுமா ?

நான் தெரிவு செய்த top 10 songs

Arrow 10. சச்சின் - கண்மூடி
Arrow 09. ராம் - ஆராரி ராரோ
Arrow 08. சந்திரமுகி - கொஞ்ச நேரம்
Arrow 07. கிச்சா வயசு 16 - சில நேரம்
Arrow 06 கஜினி - ஒருமாலை
Arrow 05. அன்னியன் - கண்ணும்
Arrow 04 .தாஸ் - சாமிக்கிட்ட
Arrow 03. பெப்ரவரி 14 - லைலா மஜுனூ
Arrow 02. ஒரு நாள் ஒரு கனவு - கஜிரகோ
Arrow 01. பொன்னியின் செல்வன் - வெண்ணிலா

Print this item

  vanakkam
Posted by: sinnathambi - 08-16-2005, 09:36 AM - Forum: அறிமுகம் - Replies (27)

வணக்கம் நலம் நலமரிய ஆவல்.

Print this item

  ஜப்பானில் மாபெரும் பூகம்பம், சுனாமி அலைகள் தாக்கின
Posted by: Vaanampaadi - 08-16-2005, 09:03 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஜப்பானில் மாபெரும் பூகம்பம், சுனாமி அலைகள் தாக்கின

ஆகஸ்ட் 16, 2005

டோக்கியோ:

ஜப்பானில் கடலுக்கடியில் இன்று மிக பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தை தொடர்ந்து பசிபிக் கடலில் உருவான மிகச் சிறிய சுனாமி அலை ஜப்பான் கடலோரப் பகுதிகளைத் தாக்கியது.

வட கிழக்கு ஜப்பானிலுள்ள மியாகியிலிருந்து 80 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் இன்று காலை இந்திய நேரப்படி 8.26 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆகப் பதிவான இந்த பூகம்பத்தால் டோக்கியோ, இவாட்டா, கியோடோ, சென்டாய் உட்பட ஜப்பானின் பல்வேறு பகுதிகளும் குலுங்கின.

கடற்கரை நகரமான சென்டாயில் உள்ளரங்க நீச்சல் குளத்தின் கூரை இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பூகம்பம் ஏற்பட்டவுடனேயே அணு மின் நிலையங்களும் ஜப்பானின் பாதாள ரயில்களும் தாங்களாகவே செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன.

டோக்கியோவிலுள்ள ஹனேடா விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடல் பகுதியை சமீப காலத்தில் தாக்கிய மிகப் பெரிய பூகம்பம் இது என்பதால், பெரிய அளவில் சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்ரகப்பட்டது. ஆனால், பூகம்பம் ஏற்பட்ட 18வது நிமிடத்தில் ஆயுகவா பகுதியில் கடலோரத்தில் 10 செ.மீ. உயரமான சிறிய சுனாமி அலை தாக்கியது.

ஆனாலும் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

வடக்கு ஜப்பானிலுள்ள ஹொக்கெய்டோ தீவிலும் இன்று காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 4.9 ஆகப் பதிவானது. அடுத்தடுத்து ஜப்பானில் இன்று ஏற்பட்ட இந்த பூகம்பங்களால் அங்கு மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

சுனாமி அலைகளை சமாளிக்கும் விதத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் மிகப் பெரிய பூகம்பங்களில் 20 சதவீதம் ஜப்பானைத் தாக்கி வருகின்றன. ஆனாலும் அங்கு பூகம்பத்தைத் தாங்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்படுவதால் பெரும்பாலும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுவிடுகிறது.

Thatstamil

Print this item

  பேய் கதை சொல்லுங்கோ
Posted by: MUGATHTHAR - 08-16-2005, 08:44 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (175)

<b>பேய் கதை சொல்லுங்கோ. . . . .பிளீஸ் . . . </b>

<b>இந்த நூற்றாண்டில் பேய் இருக்கா இல்iலையா எண்டு வாதாட வரவில்லை வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு அதைப் பற்றிச் சிந்திப்பதற்கே நேரமிருக்காது எந்நேரமும் பகல்போல வெளிச்சம் இயந்திரம் போல வாழ்க்கை எங்கை இதுகளைப் பற்றி யோசிப்பது. . . . பேய்பற்றி நினைப்பு வருவதற்கு புறச்சூழல் முக்கியம் குமிருட்டு . காற்றுக்கு அசையும் மரங்களின் சத்தம் நாய்களின் ஊளை (சந்திரமுகி பாத்தீங்க தானே) இவைகளை கேட்கும் போது எங்களை அறியாமலே பாட்டி சொன்ன பழைய பேய்கதைகள் ஞாபகத்துக்கு வரும் இதுபோண்ற உணர்வு எமக்கு ஊரில்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது சின்ன வயசில் தாத்தா பாட்டியிடம் விரும்பிக் கேக்கும் கதையெண்டால் அது பேய்கதைதான் பகலில் ஆர்வமாகக் கேட்போம் 6மணியானால் வீட்டுப் படியை விட்டுக்கூட வெளியிலை இறங்க மாட்டோம் . . .
சரி அதுகளை விடுங்கோ. . .இங்கை இப்பிடியாக நீங்கள் அனுபவித்த அல்லது உங்கள் ஊரில் நடந்த பேய்கதைகள் இருந்தால் எமக்கும் சொல்லுங்கோவன் (கனநாள் பேய்க்கதைகளைக் கேட்டு பிறகு யாழ் களத்திலை பேய் கதையிருக்கு எண்டு யாராவது வராமல் விட்டால் அதுக்கு நான் பொறுப்பல்ல). . . . .</b>

ஒருமுறை நண்பர்களுடன் மானிப்பாய் வெஸ்லித் தியேட்டரில் இரவப் படம் பார்த்து விட்டு அவர்களுடன் இருந்து அரட்டையடித்து விட்டு 11.30மணியளவில் வீட்டுக்கு வந்தேன் வாறவழியில் சைக்கிள் காத்துப் போய் விட்டுது நண்பன் வீட்டில் சைக்கிலை வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன் மெயின் றோட்டிலிருந்து எங்கடை வீட்டுக்கு ஒழுங்கைப் பாதைதான் றோட்டில் ஒரு சனம்சாதியில்லை ஒழுங்கைக்குள் இறங்கிவிட்டேன் என்ரை கஷ்ட காலம் ஒழுங்கை லைட் ஒண்டும் எரியவில்லை குமிருட்டு அப்ப திடீரென ஒரு நினைப்பு நான் போற வழியில் 4நாளுக்கு முன்னம்தான் ஒரு செத்தவீடு நடந்தது ஏன்தான் இப்ப இந்த நினைப்பு வந்து தொலைச்சுதோ தெரியவில்லை ஒரு துணிவை வரவழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன் ஒரு வீட்டிலும் வெளிச்சம் இல்லை செத்த வீடு நடந்த வீட்டை நெருங்கி விட்டேன் அந்த வீட்டில் மாத்திரம் சிறு வெளிச்சம் தெரிந்தது அந்தப் பக்கம் பார்க்காமல் வேகமாக நடந்தேன் அப்போ தூரத்தில் ஒரு சிவப்பு ஓளி மெல்ல மெல்ல முன்னுக்கு வாற மாதிரி இருந்திச்சு யாரோ சுருட்டுப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள் போலிருந்தது பாதையில் எனக்கு நேரே வாற மாதிரி இருந்தபடியால் நான் மறுபக்கத்திற்குப் போனேன் அந்த உருவமும் மறுபக்கம் மாறி எனக்கு நேரே வந்தது கிட்ட நெருங்கி விட்டேன் யாராவது கள்வராக இருக்குமோ என நினைத்து அந்த உருவத்தை கையால் அடித்தேன் எதுவும் படவில்லை உருவத்தையும் காணவில்லை திரும்பிப் பார்த்தேன் அந்த உருவம் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தது இப்போ அந்த உருவத்தை ஓரளவு அடையாளம் காணமுடிந்தது கட்டையாள் . வழுக்கையா தலை . சேட் இல்லை சாறம் மாத்திரம் அங்கையிருந்து பிடிச்சன் ஓட்டம் (ஏனெண்டால் அந்த உருவஅமைப்புத்தான் 4நாளைக்கு முன்னம் செத்த மனுசன்) எப்பிடி வீட்டு மதிலை ஜம் பண்ணினோ தெரியாது அம்மாவை எழுப்பி விசயத்தை சொன்னன் அம்மா கை .கால் கழுவிட்டு வரச் சொன்னா திருநீறு புூசி விட்டா ஒருமாதிரி படுத்திட்டன் ஆனா 2நாட்கள் நல்ல காச்சல் அம்மா இந்தக் கதையை பக்கத்தி வீட்டுக்காரருடன் கதைத்த போது அவர்களிலும் ஓரிருவர் அந்த உருவத்தைப் பாத்திருக்கிறார்களாம் அவலச் சா செத்தவர்களின் ஆவி போக மனமில்லாமல் சுத்திக் கொண்டு திரியுமாம் இதை நம்புவதா இல்லையா என தெரியவில்லை ஆனாலும் எனக்கு இப்பவும் இரவுநேரத்தில் அந்த வீட்டடியால் போகும் போது இந்த பழைய ஞாபகம் வந்துதான் போகிறது. . . . . . . . . .எப்பிடி கதை . . . .
இது மாதிரி உங்கள் சொந்தங்கள் அனுபவித்த கதைகள் இருந்தால் எழுதுங்கோ [/b]

Print this item

  துரோகங்கள் தொடருமா?
Posted by: sathiri - 08-15-2005, 09:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (52)

எமது விடுதலை போராட்டத்தில் எப்படி எமக்காய் தமதுயிரை அர்ப்பணித்த எமது மாவீரரையும் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் எமது வரலாறு உள்ளவரை எப்படி எம்மால் மறக்க முடியாதோ அப்படியே எமது இனத்தையும் எமது போராட்டத்தையும் காட்டி கொடுத்தவர்களையும் அவர்களது துரோகங்களையும் மறக்க முடியாது

எமதுவிடுதலை போராட்ட வரலாறு ஆரம்பத்தில் அரசியல் மற்றும் அகிம்சை வடிவில் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே எமதினத்திற் கெதிராக எம்மினத்திலிருந்தே காட்டி கொடுப்புகளும் துரோகங்களும் தொடங்கி விட்டிருந்தன. அன்று அரசியல் மற்றும் அகிம்சை ரீதியாக போராடிய பலரும் பின்னர் காலப்போக்கில் தங்கள் கொள்கைகள் கோசங்களை கைவிட்டு எதிரிகளிடம் விலை போயும் எதிரிகளின் கை பொம்மைகளாகவும் மாறி போய்விட உண்மையாக போராடிய சிலர் பெரிதாக எதுவும் செய்யமுடியாத நிலையில் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கலந்து கரைந்து போனார்கள் என்பது வரலாறு.

எனவே எமது ஆயுத போராட்ட காலம் தொடங்கியதற்கு முன்னர் யார் எமதினத்தின் துரோகி என்று ஆராய்ந்தால் குளப்பமே அதிகம் மிஞ்சும் எனவே எமதினத்தின் ஆயுத போராட்டம் தொடங்கிய 1970 களில்இருந்து பார்ப்போம்.

<span style='font-size:25pt;line-height:100%'>அல்பிரட் துரையப்பா</span>ஆயுத போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே அன்றைய ஆயுதமேந்திய தமிழ் இளைஞர் களின் முதல் இலக்காக இருந்தவர் அல்பிரட் துரையப்பா. இவர் அன்றைய கால கட்டத்தில் யாழ் நகர( மேயராக) பிதாவாக இருந்தவர்.அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டார நாயக்காவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல அவரின் விசுவாசியும் கூடஅன்றைய இளைஞர்களின் ஆயுத போராட்டத்தை நசுக்குவதற்காக முன்னின்று உழைத்தவர்.இவரை தமிழீழத்தின் முதல் தற்கொடை போராளியான திரு பொன். சிவகுமாரன் மற்றும் மானிப்பாய் நவாலியை சேர்ந்த இன்னபம் ஆகியோரும் இவருக்கு குறி வைத்திருந்தனர்.ஆனால் 1975 ம் ஆண்டு ஆடி மதம் 27ம் திகதி பொன்னாலை வரதராச பெருமாள் கோவிலுக்கு வண்ங்க வந்தபோது ஒருஇளைஞன் அவரை அணுகி அய்யா நேரம் என்ன என கேட்கிறார்தனக்:கு சேரம் சரியில்லை என தெரியாத துரையப்பா நேரம் பாக்க தனது கைமணிக்கூட்டை பார்த்தபோது தமிழினத்தின் தன்மான குண்டுகள் அவரை வழியனுப்பி வைக்கிறது
<span style='font-size:30pt;line-height:100%'>தொடரும்</span>

Print this item

  கதிர்காமரின் கொலையும், சந்திரிகாவின் நிலையும் பகுதி - 2
Posted by: malaravan - 08-15-2005, 07:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்ணணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டா னது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.

அடுத்து நாம் விடுதலைப்புலிகளைப்பற்றி பார்ப்போம். விடுதலைப்புலிகளால் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுட்டுக்கொள்ளப்பட்டிருந்தால் அது எவ்வா றான தாக்கத்தை கொடுக்கும் என்பதை அவதானிப்போம். நேற்று இன்று அல்ல. புலிகளைப்பொறுத்த மட்டில் சந்திரிகா அரசியலில் ஜனாதிபதியாகியது தொடக்கம் கதிர்காமரின் வரலாறு தொடங்கப்பட்டுவிட்டது. அன்றிலிருந்தே புலிகளுக்கெதிரான பிரச்சார யுத்தத்தை உலகநாடுகளுக்கு பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டார் அமைச்சர் கதிர்காமர். எமது பார்வையில் குள்ளநரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பின்னர் இராஜதந்திர விடயத்தில் கதிர்காம ரையே எடுத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். காரணம் பாம்புக்கு தலையை யும், மீனுக்கு வாலையும் காட்டும் தந்திரம் அவரிடத்திலேயே குடிகொண்டிருந் தது. இவரின் இராஜதந்திர நகர்வுகள் அமெரிக்கைவையும், இந்தியாவையும் பகைக்காதவகையில் கொண்டுசெல்லப்பட்டது என்பது உண்மை. அமெரிக்காவு க்கு செல்லப்பிள்ளையாகவும், இந்தியாவுக்கு சொந்தப்பிள்ளையாகவும் செயற் பட்டுக்கொண்டிருந்தவர். இவர் புலிகள் பற்றிய கருத்துக்களை படுபயங்கரமாக சித்தரித்து அவர்களை பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்த உலகநாடுகளுக்கு அத்திவாரம் இட்டவர். இவரது இழப்பிற்காக சந்திரிகா அம்மையார் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப்புலிகள் எதற்கான அமைப்பு என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்திய தலைவர் என்கின்றார்.இதன் உட்கருத்து விடுதலைப்புலிகள் ஓர் பயங்கரவாதிகள் என்பதை தாமும், தமது அரசும் சொல்லச்சொல்ல உலக நாடுகள் இதைப்புரிந்து கொள்வதில்லை என்கின்ற கருத்தை பிரதிபலிப்பதாகின்றது. அத்துடன் செப்ரம்பர் 11இல் நட ந்த தாக்குதலுக்கு முன்னரே பயங்கரவாதத்திற்காக குரல்கொடுத்த பெரும்தலைவர் என புகழாரம் சுூட்டுகின்றார். இதன் முடிவு புலி களை இனிமேலும் நம்பாது பயங்கரவாதிகளாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதேயாகும். ஆனால் இக்கொலையை புலிகள் செய்திருக்க நியாயம் இல்லை என்பதை இனிப்பார்ப்போம். மேற்குறிப்பிட்டவை போன்ற காரணங்களால் கதிர்காமர் மேல் புலிகளுக்கு கோபம் இருந்தாலும் இன்றைய சுூழலில் இக்கொலையை புலிகள் செய்யக் கூடிய நிலையில் இல்லை. காரணம் கதிர்காமரால் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்திவைத்திருந்த நாடுகள் பல இன்று விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பயணங்களால், அவர்க ளின் நியாயபுூர்வமான கருத்துக்களால், ஏன், எதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடக்கினார்கள் என்கின்ற விளக்கங்களினால் ஓர் தெளிவுத் தன்மையை பெற்றிருக்கின்றார்கள். பல ஆண்டுகளாக லக்ஸ்மன் கதிர்காமரால் சொல்லப்பட்டு வந்த விடயங்களும், பிரச்சார யுக்திகளும் புலிகளில் ஓர்வருட பயணத்திலேயே பிசுபிசுத்துப்போய் கதிர்காமரின் கூற்று பொய்யாகிப் போய்விட்டது. அதன் வெளிப்பாடே பயங்கரவாதிகளாக புலிகளைப்பிரகடனப் படுத்திய நாடுகளே இன்று செங்கம்பள விரிப்பு விரித்து புலிகளை வரவேற்கின்றன. ஆகவே புலிகள் உலகநாடுகளுக்கு வேண்டியவராய் இருந்த ஒரு வரை கொன்று அதன் மூலம் மீண்டும் தமது பெயர்மீது களங்கத்தை ஏற்படுத்தமாட்டார்கள். அத்துடன் உலக நாடுகள் சிங்கள அரசு பொதுக் கட்டமைப்பில் கைச்சாத்திடாதிருந்த வேளையில் அழுத்தங்களை அரசுமீது போட்டு புலிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் வண்ணமும் கூறிவந்தன. இதன்காரணம் புலிகளால் எதுவிதமான யுத்தநிறுத்த மீறல்களும் இடம்பெறா மல் இருந்ததே. அவ்வாறு தமது நற்பெயரை கட்டிக்காத்த புலிகள் இவரைக் கொன்று தமது பெயரை களங்கப்படுத்துவார்களா? என்கின்ற கேள்வி எழுகின் றதல்லவா?. புலிகளைப்பொறுத்தமட்டில் மொக்குத்தனமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது உண்மை. ஆகவே அவர்கள் இவரை கொலை செய்ய வேண்டிய தேவையும் இருக்கவில்லை.

அப்படியாயின் இக்கொலையை யார் செய்திருப்பார்கள் என்கின்ற வினா எழுகின்றதல்லவா?. நிச்சயமாக இக்கொலையை செய்திருக்க வாய்பதிகம் யாருக்கிருக்கின்றதென்று பார்ப்போம்.

1.சந்திரிகா
2.பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள்
3.ஜேவிபியும் சிங்கள உறுமயா கட்சிகளின் கூட்டு.
4.இந்திய அரசின் றோ

முதலில் சந்திரிகாவில் இருந்து இக்கொலைக்கான ஆதாரங்களைத்தேடுவோம். ஓர் அமைச்சர் எந்தந்த வேளைகளில் வீடுகளில் இருப்பார், எந்தெந்த வேளை களில் வெளியில் இருப்பார் என்கின்ற விடயங்கள் அனைத்தும் தெரிந்து வைத்திருப்பார். இலங்கையின் ஜனாதிபதி என்கின்ற வகையில் இவரது அனைத்து நடவடிக்கைகளும் தெரிந்த ஒருவராக சந்திரிகா இருக்கின்றார். அத்துடன் அவரின் அரசியல் இலாபமும் இதன் உட்காரணமாகின்றது. பதவி ஆசையினால்; தொடர்ச்சியாக அவர் செயற்படுகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகளும் காட்டியவண்ணம் இருக்கின்றது. எப்போ சந்திரிகா ஆட்சி யைப்பிடித்தாரோ அப்போதே அவர் ஜனாதிபதி ஆட்சிமுறையை உடனும் மாற்றிவிடுவதாக சொன்னார். ஆனால் நடந்தது என்ன? அவரின் ஆட்சியில் இரண்டுமுறையும் ஜனாதிபதியாக இருந்து அதன் காலம் முடிவடையும் வேளையில் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார். அத்துடன் இந்த ஆண்டு ஜனாதிபதித்தேர்தலை நடாத்தாது வரும் ஆண்டு நவம்பரில் அதை நடாத்த முயற்சிக்கின்றார். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையகம் மறுப்புத் தெரிவித்திருக்கின்றது. உடனும் ராஜபக்சாவை கட்சித் தலைமையாக்கியதன் வெளிப்பாடானது மீண்டும் தானே பிரதம மந்திரியாக ஆட்சிசெய்வதற்கான அத்திவாரமாகும். அவ்வாறான பதவிப்பித்து பிடித்தவரால் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடாது. அப்படியாயின் எப்படி நடந்திருக்கும். யாரால் நடந்திருக்கும்.

விபரங்கள் தொடரும்....

மலரினி மலரவன்
www.tamilkural.com

Print this item

  மனோரமா இயர்புக் 2005 தவறுகள்?
Posted by: AJeevan - 08-15-2005, 06:58 PM - Forum: நூற்றோட்டம் - Replies (7)

<img src='http://img224.imageshack.us/img224/6870/manorama2img8an.jpg' border='0' alt='user posted image'>
<b>மனோரமா இயர்புக்</b> இந்தியாவில் இருந்து 15 ஆண்டுகளாக வெளி வருகிறது.

இதில் உள்ள விடயங்கள் அனைத்தும் சரியானதென்ற கருத்து அனைத்து மக்களிடம் இருந்து வருகிறது.

இருப்பினும் இதில் உள்ள அனைத்து தகவல்களும் சரியானதாக இல்லாததை இதை வாசிக்கக் கிடைத்த போது தெரிந்தது.


மனோரமா இயர்புக் 2005, பக்கம் 75 ல் <b>
இலங்கை</b> பற்றி எழுதப்பட்டிருக்கிறது.


இதில்
<b><span style='color:red'>ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகிந்த ராசபக்ச பிரதமாராக இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
</span></b>

[size=15]இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

<img src='http://img224.imageshack.us/img224/9189/manorama1img2dh.jpg' border='0' alt='user posted image'>

இது போலவே இன்னும் பல தவறுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

எனவே இதை ஒரு பொக்கிசமாக கருதுவது ஒரு கேள்விக்குறியே!

<b>உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்?????</b>

Print this item

  ஆனந்தசங்கரி வெளிநாட்டமைச்சர் ???
Posted by: Mathan - 08-15-2005, 05:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

<span style='font-size:25pt;line-height:100%'>ஆனந்தசங்கரி அடுத்த வெளிநாட்டமைச்சர் ???

ஆனந்தசங்கரி அடுத்த வெளிநாட்டமைச்சராக வரக்கூடும் என ஊகம் நிலவுவதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது. இதன் மூலம் கதிர்காமர் போல் ஆனந்தசங்கரியும் ஒரு தமிழ் வெளிநாட்டமைச்சராக அரசில் அங்கம் வகித்து தமிழர் அனைவரும் புலிகளை ஆதரிக்கவில்லை என்ற தோற்றப்பாட்டை உலகில் தக்க வைக்கமுடியும் என்று அரசு நம்புவதாக அந்த செய்தி மேலும் கூறுகின்றது.</span>

Anandasangaree next Foreign Minister?

<b>Charles Pathirana in Colombo, Monday Aug 15th 9.10 pm SLT.</b>

Speculation was rife at slain foreign minister Kadirgarmar's funeral and other locations that V. Anandasangaree will be brought into the ruling alliance and appointed foreign minister. The president has consulted various advisors regarding this appointment.

Commentators said that though Kadrigarmar will be a hard -- almost impossible act to follow, Anandasangaree, as a Tamil, would give out to the world the same message that had rankled the LTTE with Kadrigarmar which is that all Tamils are not fond of the Tamil Tigers.

Anandasagaree will effectively carry forward the Kadrigarmar message - - which is that Sri Ianka is a tolerant multi ethnic society here Tamils and Sinhalesse co-existing the same cabinet.

Besides, these commentators said, is the LTTE going to kill every foreign minister that comes around?

இது லங்கா அக்கடமிக் வெளியிட்ட செய்தி

Print this item