Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனோரமா இயர்புக் 2005 தவறுகள்?
#1
<img src='http://img224.imageshack.us/img224/6870/manorama2img8an.jpg' border='0' alt='user posted image'>
<b>மனோரமா இயர்புக்</b> இந்தியாவில் இருந்து 15 ஆண்டுகளாக வெளி வருகிறது.

இதில் உள்ள விடயங்கள் அனைத்தும் சரியானதென்ற கருத்து அனைத்து மக்களிடம் இருந்து வருகிறது.

இருப்பினும் இதில் உள்ள அனைத்து தகவல்களும் சரியானதாக இல்லாததை இதை வாசிக்கக் கிடைத்த போது தெரிந்தது.


மனோரமா இயர்புக் 2005, பக்கம் 75 ல் <b>
இலங்கை</b> பற்றி எழுதப்பட்டிருக்கிறது.


இதில்
<b><span style='color:red'>ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) மகிந்த ராசபக்ச பிரதமாராக இருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது.
</span></b>

[size=15]இவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

<img src='http://img224.imageshack.us/img224/9189/manorama1img2dh.jpg' border='0' alt='user posted image'>

இது போலவே இன்னும் பல தவறுகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

எனவே இதை ஒரு பொக்கிசமாக கருதுவது ஒரு கேள்விக்குறியே!

<b>உங்கள் கருத்துகளை முன் வையுங்கள்?????</b>
Reply
#2
தமிழை முன்பக்கத்திலேயே கொலை செய்பவர்கள் எப்படி விடயங்களைச் சரி பார்த்து எழுதுவார்கள்?
<b> . .</b>
Reply
#3
இயர்புக் எண்டா என்ன
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#4
sathiri Wrote:இயர்புக் எண்டா என்ன
தமிழில் இப்படித்தான் எழுதுவார்கள்.

[size=18]இயர்புக்
இது இவர்களது தமில்............
Reply
#5
Year book 2005 ஐ தான் அப்படி எழுதியிருக்கிறார்களோ?? :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
இயர் புக் என்றால் நான் நினைக்கிறேன் ஆண்டுச்சஞ்சீகை என. :roll:
<b> .. .. !!</b>
Reply
#7
தகவலுக்கு நன்றி அஜிவன். இவ்விடயத்தை புத்தகம் வெளியிடுவோருக்கு தெரியப் படுததினால் எதிர் காலத்தில் தவறுகள் ஏற்படாதிருக்கலாம்.

இதே போல்த்தான் மணிமேகலைப் பிரசுரத்தினர் வெளியிட்டிருந்த பொது அறிவுப் புத்தகத்தில் சில தகவல்கள் பிழையாக போட்டிருந்தனர். நான் அவற்றைச் சுட்டிக் காட்டி கடிதம் எழுதியிருந்தேன். அவர்கள் எனக்கு நன்றி கூறிப் பதில் அனுப்பி தமது அடுத்த பதிப்பில் பிழைகளைத் திருத்தி விடுவதாகவும் எழுதியிருந்தனர்.
Reply
#8
வசம்பு
யுகோசுலாவியா பற்றிய தகவலிலும் சுவிசைப் பற்றிய தகவலிலும் தவறான கருத்துகளை காண முடிந்தது.

இதில் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும்,
இப் புத்தகத்திலிருந்து தரவுகளை எடுத்து,
புலம் பெயர் வானோலிகளில் பொது அறிவுப் போட்டிகளில் சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தெரியாத கேள்விகளையும் - விடைகளையும் தவறாக இருந்தாலும் பலர் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

இங்கே சரியான தகவல்கள் இல்லை என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் இந்தியாவுக்கு அருகேயுள்ள இலங்கையின் தகவல்களையே சரியாக எழுத முடியாத போது அடுத்த தரவுகள் எவ்வளவு தூரம் நம்பகமாக இருக்கும் என்ற கேள்வி யாருக்கும் எழவே செய்யும்?

எனவே புலம் பெயர் வானோலிகளும் இது பற்றி விழிப்போடு இருப்பது நல்லது என நினைக்கிறேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)