Yarl Forum
பேய் கதை சொல்லுங்கோ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: பேய் கதை சொல்லுங்கோ (/showthread.php?tid=3651)

Pages: 1 2 3 4 5 6 7 8 9


பேய் கதை சொல்லுங்கோ - MUGATHTHAR - 08-16-2005

<b>பேய் கதை சொல்லுங்கோ. . . . .பிளீஸ் . . . </b>

<b>இந்த நூற்றாண்டில் பேய் இருக்கா இல்iலையா எண்டு வாதாட வரவில்லை வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு அதைப் பற்றிச் சிந்திப்பதற்கே நேரமிருக்காது எந்நேரமும் பகல்போல வெளிச்சம் இயந்திரம் போல வாழ்க்கை எங்கை இதுகளைப் பற்றி யோசிப்பது. . . . பேய்பற்றி நினைப்பு வருவதற்கு புறச்சூழல் முக்கியம் குமிருட்டு . காற்றுக்கு அசையும் மரங்களின் சத்தம் நாய்களின் ஊளை (சந்திரமுகி பாத்தீங்க தானே) இவைகளை கேட்கும் போது எங்களை அறியாமலே பாட்டி சொன்ன பழைய பேய்கதைகள் ஞாபகத்துக்கு வரும் இதுபோண்ற உணர்வு எமக்கு ஊரில்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது சின்ன வயசில் தாத்தா பாட்டியிடம் விரும்பிக் கேக்கும் கதையெண்டால் அது பேய்கதைதான் பகலில் ஆர்வமாகக் கேட்போம் 6மணியானால் வீட்டுப் படியை விட்டுக்கூட வெளியிலை இறங்க மாட்டோம் . . .
சரி அதுகளை விடுங்கோ. . .இங்கை இப்பிடியாக நீங்கள் அனுபவித்த அல்லது உங்கள் ஊரில் நடந்த பேய்கதைகள் இருந்தால் எமக்கும் சொல்லுங்கோவன் (கனநாள் பேய்க்கதைகளைக் கேட்டு பிறகு யாழ் களத்திலை பேய் கதையிருக்கு எண்டு யாராவது வராமல் விட்டால் அதுக்கு நான் பொறுப்பல்ல). . . . .</b>

ஒருமுறை நண்பர்களுடன் மானிப்பாய் வெஸ்லித் தியேட்டரில் இரவப் படம் பார்த்து விட்டு அவர்களுடன் இருந்து அரட்டையடித்து விட்டு 11.30மணியளவில் வீட்டுக்கு வந்தேன் வாறவழியில் சைக்கிள் காத்துப் போய் விட்டுது நண்பன் வீட்டில் சைக்கிலை வைத்துவிட்டு நடக்கத் தொடங்கினேன் மெயின் றோட்டிலிருந்து எங்கடை வீட்டுக்கு ஒழுங்கைப் பாதைதான் றோட்டில் ஒரு சனம்சாதியில்லை ஒழுங்கைக்குள் இறங்கிவிட்டேன் என்ரை கஷ்ட காலம் ஒழுங்கை லைட் ஒண்டும் எரியவில்லை குமிருட்டு அப்ப திடீரென ஒரு நினைப்பு நான் போற வழியில் 4நாளுக்கு முன்னம்தான் ஒரு செத்தவீடு நடந்தது ஏன்தான் இப்ப இந்த நினைப்பு வந்து தொலைச்சுதோ தெரியவில்லை ஒரு துணிவை வரவழைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினேன் ஒரு வீட்டிலும் வெளிச்சம் இல்லை செத்த வீடு நடந்த வீட்டை நெருங்கி விட்டேன் அந்த வீட்டில் மாத்திரம் சிறு வெளிச்சம் தெரிந்தது அந்தப் பக்கம் பார்க்காமல் வேகமாக நடந்தேன் அப்போ தூரத்தில் ஒரு சிவப்பு ஓளி மெல்ல மெல்ல முன்னுக்கு வாற மாதிரி இருந்திச்சு யாரோ சுருட்டுப் பிடித்துக் கொண்டு வருகிறார்கள் போலிருந்தது பாதையில் எனக்கு நேரே வாற மாதிரி இருந்தபடியால் நான் மறுபக்கத்திற்குப் போனேன் அந்த உருவமும் மறுபக்கம் மாறி எனக்கு நேரே வந்தது கிட்ட நெருங்கி விட்டேன் யாராவது கள்வராக இருக்குமோ என நினைத்து அந்த உருவத்தை கையால் அடித்தேன் எதுவும் படவில்லை உருவத்தையும் காணவில்லை திரும்பிப் பார்த்தேன் அந்த உருவம் என்னைக் கடந்து போய்க் கொண்டிருந்தது இப்போ அந்த உருவத்தை ஓரளவு அடையாளம் காணமுடிந்தது கட்டையாள் . வழுக்கையா தலை . சேட் இல்லை சாறம் மாத்திரம் அங்கையிருந்து பிடிச்சன் ஓட்டம் (ஏனெண்டால் அந்த உருவஅமைப்புத்தான் 4நாளைக்கு முன்னம் செத்த மனுசன்) எப்பிடி வீட்டு மதிலை ஜம் பண்ணினோ தெரியாது அம்மாவை எழுப்பி விசயத்தை சொன்னன் அம்மா கை .கால் கழுவிட்டு வரச் சொன்னா திருநீறு புூசி விட்டா ஒருமாதிரி படுத்திட்டன் ஆனா 2நாட்கள் நல்ல காச்சல் அம்மா இந்தக் கதையை பக்கத்தி வீட்டுக்காரருடன் கதைத்த போது அவர்களிலும் ஓரிருவர் அந்த உருவத்தைப் பாத்திருக்கிறார்களாம் அவலச் சா செத்தவர்களின் ஆவி போக மனமில்லாமல் சுத்திக் கொண்டு திரியுமாம் இதை நம்புவதா இல்லையா என தெரியவில்லை ஆனாலும் எனக்கு இப்பவும் இரவுநேரத்தில் அந்த வீட்டடியால் போகும் போது இந்த பழைய ஞாபகம் வந்துதான் போகிறது. . . . . . . . . .எப்பிடி கதை . . . .
இது மாதிரி உங்கள் சொந்தங்கள் அனுபவித்த கதைகள் இருந்தால் எழுதுங்கோ [/b]


- Thala - 08-16-2005

ஐயோ!.... முகத்தார் குளிரில நடுங்கிறமோ இல்லையோ. பயத்தில நடுங்கவைக்கப் போறியளே..


- aathipan - 08-16-2005

முகத்தார் பேய்கதை என்று சொன்னதும் எனக்கு அம்மம்மா சொன்ன ஒரு பேய்கதை நினைவுக்கு வருகிறது.

அப்போழுது எல்லாம் யாழ்ப்பாணத்தில் கார் அதிகம் இல்லை. மாட்டு வண்டியில் போய்வந்த காலம்.

எமது குடும்பத்தினருக்கு மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோலுக்கு ஆடிமாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் பொங்கிப்படைக்கும் வழக்கம் இருந்தது. அதற்கு அவர்கள் இரவு மாட்டுவண்டியில் பயணம்செய்து காலையில் கோவிலுக்குப்போய்ச்சேருவார்களாம். அன்றும் பொங்குவதற்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டு வண்டியில் அம்மம்மா ஐயா பெரியம்மா மாமா அம்மா ஆகியோர் கிழம்பி இருக்கிறார்கள். மாட்டுவண்டி ஆடியாடி மெதுவாக போய்க்கொண்டிருந்ததாம். நல்லூர் கோவில் எல்லாம் தாண்டி அவர்கள் சென்;றுகொண்டிருக்கும் போது தூரத்தில் கல்யாண ஊர்வலம் செல்வதுபோல வெளிச்சமாக தென்பட்டதாம். மேளதாளங்ள் எல்லாம் கேட்டதாம். ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப்பின் மாடுகள் நடக்க மறுத்துவிட்டனவாம். வண்டிக்காரன் மாட்டை தட்டிப்பார்த்தும் மாடு அசையவில்லை. வாலைமுறுக்கிப்பார்த்தும் மாடு நகரவில்லை. வண்டிக்காரனுக்கு காரணம் விளங்கிவிட்டது. ஐயா அவனிடம் என்ன காரணம் எனக்கேட்டு இருக்கிறார். அவனும் ஐயாவிற்கு மட்டும் காரணத்தை சொல்லி இருக்கிறான். மற்றவர்கள் அந்த நேரம் வண்டியில் தூங்கிவிட்டார்களாம். உடனே ஐயா வண்டியில் இருந்து இறங்கி தேவாரம் இரண்டை உரக்கப்படித்து வேட்டியில் எப்போதும் வைத்திருக்கும் வீபுூதிப்பொட்டலத்தைப் பிரித்து மாடுகளின் நெற்றியில் அள்ளிப்புூசி இருக்கிறார். அதன்பின் சத்தங்கள் அடங்கிவிட்டனவாம். மாடுகள் மெதுவாக நடக்க ஆரம்பித்தனவாம்.

காலை கோவிலில் ஐயரிடம் நடந்ததை சொல்லும் போதுதான் அம்மம்மாவிற்கே விடயம் தெரிந்ததாம். உடனே ஐயர் மாடுகளுக்கு குங்குமம் இட்டு சிறு புூசைசெய்தாராம். இரவு வரை தங்காது நேரத்துடன் வீட்டுக்குப்போய்ச்சேருங்கள். எல்லாம் அந்த செம்மணிச்சுடலைப்பேய்களின் அட்டகாசம்தான் என்றாராம். வண்டிக்காரணுக்கும் ஐயாவிற்கும் அப்போதுதான் புரிந்ததாம் நல்லூர் தாண்டி சிறிதுதூரத்தில்தான் அந்த கல்யாண ஊர்வலம் வந்ததும் அந்த இடத்தில் உண்மையில் சுடலை இருப்பதும்.


- shobana - 08-16-2005

அச்சாக்கதை இன்னும் சொல்லுங்கோ....


- tamilini - 08-16-2005

Quote:அச்சாக்கதை இன்னும் சொல்லுங்கோ....

இந்த பபாவை என்ன செய்யிறது.

நமக்கு பேய்க்கதை சொன்னது குறைவு.
ஆனா இரவில பாம்பு என்று கதைக்க வேண்டாம் என்று எங்கட அம்மம்மா சொல்வா?? ஏன் என்று கேட்டா பாம்புக்கு காது நல்லாக்கேக்குமாம். இரவில கதைச்சா வந்திடுமாம் என்று இப்பவும் நினைச்சு சிரிக்கிறது. :wink:


- vasisutha - 08-16-2005

<span style='font-size:20pt;line-height:100%'>பேய்களை நம்பாதே பிஞ்சிலே வெம்பாதே நீ யோசி டோய்..
நாளொரு பொய்வாக்கு சொல்பவன் புண்ணாக்கு கால் தூசி ஹோய்
அச்சங்கள் எனும் பூதம் உனை அண்டாமல் அதை ஓட்டு..
பூச்சாண்டி தினம் காட்டும் அவர் பேச்செல்லாம் விளையாட்டு..
அதில் ஏமாந்தால் மனம் தினம் கெடும்..


எதை யார் சொன்ன போதும் எதிர்க்கேள்வி ஒன்று கேளு
பெரியோர்கள் சொன்ன பாடம் அறிவாலே எடை போடு..
ஓர் நாளும் உனக்கு கூடாது பயமே...
ஆராய்ந்து எதையும் நீ காணு நிஜமே..
மூட எண்ணத்தை தீவைத்து மூட்டு..
அச்சமில்லைன்னு நீ வாழ்ந்து காட்டு...


உழைக்காமல் வம்பு பேசி அலைவானே அவன் பேய்
பணம் சேர்க்க பாதை மாறி பறப்பானே அவன் பூதம்
வீராதி வீரன் நீ என்று உலவு..
ஓர் நாளும் திசையை மாற்றாது நிலவு..
நீ நேருக்கு நேர் நின்று பாரு..
எதையும் ஏனென்று ஏதென்று கேளு...</span>


- shobana - 08-16-2005

tamilini Wrote:
Quote:அச்சாக்கதை இன்னும் சொல்லுங்கோ....

இந்த பபாவை என்ன செய்யிறது.

:wink:
என்ன ஆஆஆஆ


- aathipan - 08-16-2005

நல்லபாட்டு வசிசுதா


- வெண்ணிலா - 08-16-2005

அட கடவுளே. பேய்க்கதை ஆரம்பிச்சிட்டீங்களா? ஐயோ எஸ்கேப். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 08-17-2005

Quote:அட கடவுளே. பேய்க்கதை ஆரம்பிச்சிட்டீங்களா? ஐயோ எஸ்கேப்

உப்பிடித்தான் பிள்ளை நானும் சின்னனிலை பேய்கதையெண்டால் பயந்தோடுவது ஆனா எப்ப கலியாணம் கட்டினனே அண்டேலையிருந்து பேய்ப்பயம் எண்ட கதையே இல்லையம்மா (இப்ப என்ன நான் சொல்ல வாறன் எண்ட விளங்கியிருக்குமே .........விளக்கமா சொல்லி வீட்டிலை அடிவாங்க என்னாலை ஏலாதம்மா......)


- kuruvikal - 08-17-2005

ஏன் முகத்தார் எப் எம் 99 ஓட கொழும்பில காலம் தள்ளுனியள் போல...இரவு பேய்க் கதை என்று சொல்லியே வந்தளைப் பக்கம்...போகாம பண்ணினவங்க...! நீங்க களப் பக்கம் வராம பண்ணப் போறியள் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- அனிதா - 08-17-2005

பேய் கதை நல்லாருக்கு ..வாசிக்கேக்க தான் கொஞ்சம் பயமாய் இருக்கு .. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- aathipan - 08-17-2005

என்னோட அம்மாவின் மாமாவி;டம் பெரிய தோட்டங்கள் வயல் ஆடுமாடுகள் இருந்ததாம். அவர் சில நேரங்களில் மாடு வாங்க வேறு ஊர்களுக்குச்செல்வது உண்டாம். பெரும்பாலும் வரும்போது கால்நடையாகத்தான் மாடுகளை அழைத்து வருவாராம்.

ஒரு தடவை அவர் சாவச்சேரியில் ஒருவரிடம்; நல்ல இன மாடுகளை வாங்கச் சென்றிருந்தாராம். எல்லாம் பேசி முடித்து இரவுச்சாப்பாட்டை முடித்துத்தான் வெளிக்கிட முடிந்ததாம். அன்று அமாவாசை நல்ல இருட்டு. வானத்தில் நட்சத்திரங்கள் மட்டும்தானாம். அந்தக்காலத்தில் மின்சாரத் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. அதற்குப்பதிலாக அரிக்கன் விளக்குகள் தான் ஒன்றிரண்டை சனநடமாட்டம் உள்ள இடங்களில் காணமுடியுமாம். நடக்க ஆரம்பித்தால் விடிவதற்குள் நல்லூரைத்தாண்டி விடலாம் என எண்ணி எதையும் பொருட்படுத்தாது நடக்க ஆரம்பித்தாராம்.

குடிமனைகளைத்தாண்டி அடர்ந்த பனைமரங்களுடாக நடந்துகொண்டிருந்தாராம். எங்கும் கும் இருட்டு ஆந்தகைள் அலறுவதும் காய்ந்த பனைமர ஓலைகளின் ஓசையும் அவ்வப்போது நரிகளின் ஊளையிடும் சத்தத்தைத்தவிர எந்த அரவமும் இல்லையாம். அச்சமாக இருந்தாலும் தேவாரத்தை உச்சரித்த படி நடந்தாராம்.

தூரத்தில் தெருவோரத்தில் யாரோ சுருட்டுப்பிடிப்பது தெரிந்ததாம். அப்படா ஒருவாறு அடுத்த கிராமத்துக்குள் வந்துவிட்டோம் இனி விரைவாக போய்விடலாம் என மனநிம்மதி அடைந்ததாம் அவருக்கு. சுருட்டுப்பிடிப்பவரைப்பார்த்தவுடன் தானும் ஒரு சுருட்டைப்பிடிக்கலாம் என எண்ணி இடுப்பி;ல் இருந்த ஒரு சுருட்டை எடுத்து தெருவோரத்தில் அமர்திருந்த பெரியவரிடம் சுருட்டை ஒருக்கா தா பத்தவைக்க எனக்கேட்டு இருக்கிறார். ஆனால் அந்த உருவம் எதும் பேச வில்லையாம். இரண்டுதடவை கேட்டும் எந்தப்பதிலும் இல்லையாம். அதுமட்டுமில்லாது அந்த உருவம் அசையவும் இல்லையாம். மாமா விற்கு அப்போதுதான் உறைத்ததாம் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என. அது குறையாக எரிந்த சடலம் நெஞ்சுக்கட்டை சரியாக வைக்காததால் அது ஏழுந்துவிட்டதாம். பாதி எரிந்த விறகோ அல்லது ஏதோ ஒன்றுதான் மாமாவை சுருட்டு என எண்ணவைத்ததாம். மாமா பயத்தை அடக்கி அருகில் இருந்த எரிமேடையில் பாதி எரிந்து அணைந்துபோன ஒரு விறகை எடுத்து சுருட்டுப்பற்ற வைத்துவிட்டு திரும்பிப்பாராது மாடுகளுடன் நடக்க ஆரம்பித்துவிட்டாராம். சிறிது நேரத்திற்குப்பின் தூரத்தில் மணிச்சத்தம் கேட்டதாம் அது நல்லுர்ர் கோவில் மணியோசை. ஐந்து மணி ஆகிவிட்டது கோவிலை நெருங்கிவிட்டோம் என மனநிம்மதி அடைந்ததாம். அதன் பின் நல்லூர் சென்று ஐயரிடம் நடந்ததை சொன்னாராம் மாமா. ஐயர் விபுூதி புூசக் கொடுத்து இனி இரவில் சுடுகாட்டுவளி செல்லவேண்டாம் என புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தாராம்.


- MUGATHTHAR - 08-17-2005

தம்பி அதிபன் நிறையச் சனம் பயத்திலைதான் இந்தப்பக்கம் வருகுதில்லைப் போல கிடக்கு உமது கதை சொல்லும் விதம் பயத்தை உண்டாக்கிற படியால் அவைக்குச் சொல்லுவம் இரவு நேரத்திலை இதை வாசிக்க வேண்டாம் எணடு சரியா?....


- Niththila - 08-17-2005

கடவுளே இரவுக்கு பேய் கனவிலை வரப்போகுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- aathipan - 08-17-2005

ஐயோ முகத்தார் நேற்று இந்தப்பேய்க்கதை எழுதும்போது 11 இருக்கும். பைப்பில தண்ணி வேற டொக்கு டொக்கு என்று விழுது. பிரிஜ் சனியன் திடீர் தீடீர் என்று நிக்குது. மணிக்கூடு டக் டக் என்று சத்தம். வீட்டுக்கு பின்பக்கம் வேற வெறும் காணி. பயந்து பயந்து எழுதிட்டு ஓட்டமா ஓடிப்போய் படுத்துட்டன். அறைக்குள்ள போனா பயமில்லை. ஒரு பேய் இருக்கும் இடத்தில் மற்றப்பேய்கள் வராதாமே?.


- vasisutha - 08-17-2005

<span style='font-size:20pt;line-height:100%'>வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுது என்று
விளையாடப் போகும் போது
சொல்லி வைப்பாங்க..
உன் வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க..

வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
நீ வீட்டுக்குள்ளே பயந்துகிடந்து
வெம்பிவிடாதே..</span>


இந்தப் பாட்டை சின்னப்பிள்ளை நானே
கேட்டிருக்கறன்..பெரியாக்கள் நீங்கள் ஒருநாளும்
கேட்கலயா?
:roll:


- tamilini - 08-17-2005

Quote:ஐயோ முகத்தார் நேற்று இந்தப்பேய்க்கதை எழுதும்போது 11 இருக்கும். பைப்பில தண்ணி வேற டொக்கு டொக்கு என்று விழுது. பிரிஜ் சனியன் திடீர் தீடீர் என்று நிக்குது. மணிக்கூடு டக் டக் என்று சத்தம். வீட்டுக்கு பின்பக்கம் வேற வெறும் காணி. பயந்து பயந்து எழுதிட்டு ஓட்டமா ஓடிப்போய் படுத்துட்டன். அறைக்குள்ள போனா பயமில்லை. ஒரு பேய் இருக்கும் இடத்தில் மற்றப்பேய்கள் வராதாமே
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> திருந்தவே மாட்டீங்களா??

அது சரி அந்த மற்றப்பேய் யார்?? அண்ணியா?? இதை வாசிக்கவேணும் அப்ப தெரியும். :wink:


- aathipan - 08-17-2005

அச்சச்சோ தப்புத்தப்பு அது என் பொண்டாட்டி


- tamilini - 08-17-2005

ஆமா அப்பவே நினைச்சன். தப்பித்தவறி அவங்க இதை பாக்கணும். அப்புறம் தெரியும். :wink: