Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 257 online users.
» 0 Member(s) | 255 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,283
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்
Posted by: வினித் - 09-12-2005, 08:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையக மாணவர் தொகை தருவதாக இல்லை இந்தியத் தூதுÅ¡ ¿¡ö கவலை

(நமது நிருபர்)

மலையக இந்திய வம்சாவளி மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மலையக மாணவர் தொகை திருப்தியளிப்பதாக இல்லை. இந்த வகையில் இம் மக்களின் கல்வி வீழ்ச்சியடைந்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கவலை தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அஸ்பியோ அமைப்பினால் மலையக பட்டதாரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் கடந்த வெள்ளியன்று கொழும்பு கிராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில்:

மலையக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு எமது நாடு சகல விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது. விசேடமாக மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலம் வழங்கும் புலமை பரிசில் தொகையை அதிகரித்தல், ஆங்கில கல்வியை ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும்.

அதேபோல் அவுஸ்திரேலியா வாழ் இந்திய வம்சாவளியினர் தங்கள் ஊதியத்திலிருந்து இவ்வாறான புலமைப்பரிசிலை வழங்குவதை எமது சமூகத்தினர் முன்னுதாரணமாக கொள்ளலாம்.

இன்று பாரதத்திலிருந்து இங்கு தொழிலுக்காக வந்தவர்கள் இந் நாட்டின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி இந் நாட்டின் பிரஜைகளாக இருக்கின்றார்கள். ஆகவே கல்வியில் உயர்ச்சி அடைவதன் மூலமே சமூகத்தில் அந்தஸ்துள்ள பிரஜைகளாக உருவாக முடியும். இந் நல்நோக்கத்திற்காக கலாநிதி பிரதாப் இராமனுஜமும் அவருடன் இணைந்து செயல்படும் கல்விமான்கள், புத்திஜீவிகளும் மலையக மாணவர்களை உயர்கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை பாராட்டுகிறேன்.

இதற்காக இந்தியாவும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகிய நானும் எம்மால் இயன்ற உதவியை வழங்குவோம் என உறுதியளிக்கின்றேன் என்றார்.

இவ் வைபவத்தில் இராமகிருஷ்ண மிசன் சுவாமி ஆத்மகனானந்தஜீ, அஸ்பியோ அமைப்பின் இலங்கை பிரதிநிதி, சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரதாப் இராமõனுஜம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர்.

Print this item

  சீனாவில் இன்று!!!
Posted by: Rasikai - 09-12-2005, 07:53 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)

<b>மகாத்மா காந்தியின் சிலை</b>

மகாத்மா காந்தியின் சிலை இன்று சீனத் தலைநகர் பெய்சிங் நகரில் திறந்து வைக்கப்பட்டது. சீனப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் இன்று காலை சாவ்யாங் பூங்காவில் காந்தி சிலையைத் திறந்துவைத்து உரையாற்றினார். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் இனவேற்றுமைக்கு எதிராக, சம உரிமை கோரி அறப்போராட்டம் நடத்தியபோது, அங்கு வசித்த சீனர் சமூகம் ஒத்துழைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். இருபெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால், மனிதகுலத்திற்கு பொது நன்மை கிடைக்கும் என்றும் அவர் சொன்னார். சாவ்யாங் பூங்காவில் உள்ள ஜின்தாய் அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் நிழற்படக் காட்சியையும் சிவராஜ் பாட்டில் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பெய்ஜிங் நகரில் உள்ள இந்திய சமூகத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

<b>ஹாங்காங் டிஸ்னிலேண்ட் துவங்கியது</b>

ஹாங்காங் டிஸ்னிலேண்ட் இன்று துவங்கியது. சீன துணை அரசு தலைவர் ஸென் சிங்ஹோங், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அதிகாரி டொனால்ட் சென் மற்றும் பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.துவக்க விழாவில் பேசிய ஸென் சிங்ஹோங், ஹாங்காங்கில் டிஸ்னிலேண்ட் திறக்கப்படுவது, ஹாங்காங்கின் மீது அன்னியச் செலாவணிக்கு உள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது. இது ஹாங்காங் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார். ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்து அரசும் அமெரிக்காவின் Walt Disney நிறுவனமும் சேர்ந்து ஹாங்காங் டிஸ்னிலேண்டை உருவாக்கியுள்ளன. இது உலகில் 5வது டிஸ்னிலேண்டாகும். எதிர்வரும் ஓராண்டில் இது 56 இலட்சம் பார்வையாளற்களை ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.



நன்றி : CRI வானொலி

Print this item

  வவுனியாவில் சண்தொலைக் காட்சி நோக்கி வீசப்பட்ட கைக் குண்டுகள்
Posted by: AJeevan - 09-12-2005, 06:19 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சில மணி நேரங்களுக்கு முன் வவுனியாவில் டெலோ இயக்கத்தினரது ஆதரவில்
ஒளிபரப்பப்படும் சண்தொலைக் காட்சி மறு ஒளிபரப்பு நிலையத்தை நோக்கி வீசப்பட்ட
கைக் குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டினால்
குருமங்காடு பகுதியில் டெலோ இயக்கத்தினரால் நடத்தப்பட்ட
ஒளிபரப்புகள் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிகிறது.

Print this item

  இரண்டாம் உலகப்போர்
Posted by: SUNDHAL - 09-12-2005, 06:18 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

1. ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் எப்போது பதவியேற்றார்? - 1933-ம் ஆண்டு, ஜனவரி 30-ந்தேதி

2. அமெரிக்காவின் எந்தத் துறைமுகத்தை ஜப்பானிய படைகள் தாக்கின? - பியர்ல் துறைமுகம்

3. ஜெர்மனிக்கு எதிராக கூட்டணி அமைத்த நேச நாடுகள் ? - அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா.

4. அச்சு நாடுகள் என்று அழைக்கப்பட்டவை எவை? - ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்.

5. நடுநிலை போக்கை கடைப் பிடித்த ஜரோப்பிய நாடுகள்? - அயர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து

6. எந்த நாட்டுக்கு அதிக மான உயிர்சேதம் ஏற்பட்டது? - ரஷியா (2 கோடியே 90 லட்சம் பேர் பலி)

7. பொது மக்கள் எத்தனை சதவீதம் பேர் உயிரிழந்தார் கள் தெரியுமா? - 67 சதவீதம்

8. இரண்டாவதாக உயி ரிழப்பை அதிகம் சந்தித்த நாடு? - போலந்து

9. நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர்? - பேட்மேன்

10. இரண்டாம் உலகப் போர் எப்போது முடிவடைந்தது? - 1945-ம் ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி.

Print this item

  உயிருக்கு உலைவைக்கும் வீட்டுச் `சரக்கு'
Posted by: SUNDHAL - 09-12-2005, 06:16 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் கிராம பகுதி மக்களிடையே குடிப் பழக்கம் சர்வ சாதாரண விஷயம். குறிப்பாக திருமணம், இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளின் போது ஆண், பெண் அத்தனை பேருமே தவறாமல் மது அருந்துவார்கள்.

இவர்கள் குடிப்பதற்காக மதுபான கடைகளுக்கெல்லாம் போவதில்லை. தங்களது வீடு களிலேயே மதுபானத்தைத் தயாரித்து விடுகிறார்கள். இப்படி இவர்கள் தயாரிக்கும் சரக்குகளில் புகழ்பெற்ற சில மதுபானங்கள்: ஓகோகோரோ (நைஜீரியா), உம்கோம்போதி (தென் ஆப்பிரிக்கா), நசபூபூ (கானா), சாங்கா(கென்யா) ஆகிய மதுபானங்கள் பிரபலமா னவை. இவற்றை யெல்லாம் தங்களது வீடுகளிலேயே ஆப்பிரிக்கவாசிகள் தயாரித்துக் கொள் கிறார்கள். ஆனால் `வீட்டில் மதுபானம் தயாரித்து அருந்துவது நல்லதல்ல, அது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது' என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.

இதையும் மீறி வீட்டுச் சரக்கை குடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பலியாகி வருகிறார்கள். பாவம்!

Print this item

  கிராமிய பாடல்கள்
Posted by: lollu Thamilichee - 09-12-2005, 06:15 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (15)

கும்பிடுறிறேனுங்கோ..

உங்கள் யாரிடமாவது.. கிராமிய பாடல்கள் இருக்கோ??
கொஞ்சம் அவசரம் தேவை please...!!!

Print this item

  மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
Posted by: SUNDHAL - 09-12-2005, 06:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

மசாஜ் செய்வதினால் பல நன்மைகள் உண்டு. குறிப்பாக நரம்பு தொடர்பு உடைய வியாதிகள் வயிற்று வலி, தலை வலி,முதுகுவலி போன்றவை குணம் அடையும்.

மசாஜ் செய்வதற்கு நல்ல அனுபவம் தேவை. எந்தப் பகுதியில் எந்த மாதிரி மசாஜ் தேவையோ, அந்தந்த தசை அமைப்பிற்கு ஏற்ப நாம் தசை களைப் பிடித்து விட வேண்டும். அப்பொழுதுதான் உடலில் சதைப்பிடிப்பு நீங்குவது டன் ரத்த ஓட்டம் சரியாக இருக் கும்.

மசாஜ் செய்து கொள்ப வர்களுக்கு பெரும்பாலும் ரத்த அழுத்த நோய், இதய நோய், நரம்புத் தளர்ச்சி நோய்கள் வருவ தில்லை. தசைப் பிடிப்புகள், நரம்பு வலியும் இருக்காது.

இது தவிர இன் னும் பல நன்மை கள் மசாஜ்ஜினால் உண்டு. இடுப்பு வலி, சதை ஒதுங்குதல், மூட்டு வலி, தோள் பட்டை வலி, ஆகிய வற்றிற்கும் மசாஜ் நல்லது.

இரவில் நிம்மதி யான தூக்கம் வரும்.

விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு மசாஜ் செய்து கொண்டால் கூடுதல் விளை யாட்டுத் திறன் பெறுகிறார்கள்.

Print this item

  புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பொலீஸார்........
Posted by: AJeevan - 09-12-2005, 04:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

<b>சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்த அனுமதியின்றி புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்ற பொலீஸார் புலிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.</b>

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான விசாரணைக்காக மன்னார் சிலாவத்துறை பகுதிக்குச் சென்றபோது விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பொலிசாரும் விடுதலைப் புலிகளின் காவல்துறையின் பொறுப்பில் இருப்பதாக விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் தெரிவிதுள்ளன.

கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளதாக விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

மன்னார் சிலாவத்துறை பகுதியில் உள்ள அரிப்பு என்ற பிரதேசத்தில் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகச் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றையடுத்து, விசாரணைக்காகச் சென்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த சிவில் அதிகாரி ஒருவரும், அவருடன் சென்ற 5 பொலிசார், இது தொடர்பில் உதவிக்காகச் சென்ற இரண்டு கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் இவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய 9 பேரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் அரிப்பு பகுதியில் வைத்து விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரிப்பு பகுதிக்குச் செல்வதற்கு விடுதலைப் புலிகளின் அனுமதியைப் பெறுவத்றகாக மன்னார் ஆயர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அனுமதி கிடைப்பதற்கு முன்னர் அங்கு சென்றபோதே இவர்கள் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டு சிலாவத்துறையில் உள்ள புலிகளின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை விசாரணை செய்த புலிகளின் காவல்துறையினர் ஆண்களான மூன்று பொலிசாரை மாத்திரம் தடுத்து வைத்துக்கொண்டு ஏனைய ஆறு பேரையும் வாகனத்தையும் விடுதலை செய்ததாகவும், தடுத்து வைக்கப்பட்ட மூன்று பொலிசாரும் கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் மன்னார் ஆயர் இல்ல வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காக போர்நிறுத்த சர்வதேச கண்காணிப்பு குழுவினர் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அது முழுமையாக சாத்தியமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


-BBC tamil

Print this item

  ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு
Posted by: வினித் - 09-12-2005, 03:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்பதை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும்: தமிழ்க் கார்டியன்
[திங்கட்கிழமை, 12 செப்ரெம்பர் 2005, 19:00 ஈழம்] [கொழும்பிலிருந்து சி.செந்தூரன்]
இலங்கை இனப்பிரச்சனைக்கு ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்பிலே தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்துவை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்று லண்டலிருந்து வெளியாகும் தமிழ்க் கார்டியன் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்க் கார்டியன் ஆசிரியத் தலையங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

நோர்வே அடித்தளத்தில் உருவாக்க அமைதி முயற்சியை ஒட்டுமொத்தமாக சீர்குலைப்பதுதான் ஜே.வி.பி-மகிந்த ராஜபக்ச ஒப்பந்தம் என்றும் அத்தலையங்கம் சாடியுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்ச, ஜே.வி.பியுடன் இணைந்து சிங்களப் பேரினவாதத்தை உயர்த்தி பிடிக்கிறார். அதைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் தேசியக் கோட்பாடு குறித்து அதிகம் பேசத் தொடங்கியுள்ளார் என்றும் கார்டியன் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைத் தீவில் இரத்தத் தெறிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதிப் பேச்சுகளை நடாத்துவதில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகிற நோர்வே அனுசரணையாளர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் விமர்சனங்களை பதிவு செய்திருக்கும் கார்டியன், சிங்களவர்கள் தேச இறையாண்மை என்கிற பெயரில் அம்மக்களை தவறாக வழிநடாத்துவதாகவும் கூறியுள்ளது.

அதிகாரத்தை பற்றிக்கொண்டு எந்தவித சமரசமான போக்குக்கும் இணங்கிவராமல் இருப்பதில் இலங்கையின் பெரும்பான்மை சமூகம் தீவிரம் காட்டி வரும் நிலையில் சர்வதேச சமூகம் இதை அவதானிக்க வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணுங்கள் என்ற சர்வதேச சமூகத்தின் பார்வையில் மாற்றம் அவசியம் தேவை என்றும் கார்டியன் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print this item

  கேரள சாம்பார்
Posted by: SUNDHAL - 09-12-2005, 01:00 PM - Forum: சமையல் - Replies (9)

தேவைப்படும் பொருட்கள்
* சிறிய வெங்காயம் - 250 கிராம்

* துவரைப்பருப்பு - 100 கிராம்

* வெள்ளரிக்காய் - 250 கிராம்

* புடலைங்காய் - 250 கிராம்

* சேனைக்கிழங்கு - 150 கிராம்

* உருளைக்கிழங்கு - 2

* வெண்டைக்காய் - 250 கிராம்

* முருங்கைக்காய் - 2

* கத்தரிக்காய் - 150 கிராம்

* பெரிய வெங்காயம் - 1

* மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

* மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி

* மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி

* பெருங்காயத்துÖள் - 1 தேக்கரண்டி

* வெந்தயப்பொடி - 1 தேக்கரண்டி

* உப்பு - தேவைக்கு

* தக்காளி - 3

* நீளமிளகாய் வற்றல் - 5 கிராம்

* மல்லி இலை - 50 கிராம்

* தேங்காய் எண்ணை - ஒரு மேஜைக்கரண்டி

* கடுகு - அரைத்தேக்கரண்டி

* கறிவேப்பிலை - தேவைக்கு

செய்முறை

சிறிய வெங்காயத்தை சுத்தப்படுத்தி ,துவரைப்பருப் புடன் சேர்த்து ஒரு கப் தண் ணீரில் வேக வையுங்கள்.

காய்கறிகள் அனைத்தை யும் சிறிதாக நறுக்குங்கள். மஞ்சள்பொடியை அதில் கலந்து ,வேகவையுங் கள்.நாலைந்து நீள பச்சை மிளகாய்களை அதில் நீள வாக்கில் கீறிப்போடுங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக் குங்கள்.தக்காளியை நறுக்கி , மல்லி இலையுடன் சேர்த்து எண் ணையில் தாளித்து சாம்பாரில் சேருங்கள். மிளகாய்பொடி ,மல்லிப்பொடி, காயப்பொடி,வெந்தயப்பொடி ஆகியவைகளை சிறிது சிறிதாக சாம்பாரில் கலந்து கொண்டிருக்க வேண்டும். உப்பும் கலந்து விடுங்கள்.கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போன்றவைகளை எண்ணையில் தாளித்து சாம்பாரில் சேருங்கள்.

Print this item