![]() |
|
உயிருக்கு உலைவைக்கும் வீட்டுச் `சரக்கு' - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உயிருக்கு உலைவைக்கும் வீட்டுச் `சரக்கு' (/showthread.php?tid=3346) |
உயிருக்கு உலைவைக்கும் வீட்டுச் `சரக்கு' - SUNDHAL - 09-12-2005 ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் கிராம பகுதி மக்களிடையே குடிப் பழக்கம் சர்வ சாதாரண விஷயம். குறிப்பாக திருமணம், இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகளின் போது ஆண், பெண் அத்தனை பேருமே தவறாமல் மது அருந்துவார்கள். இவர்கள் குடிப்பதற்காக மதுபான கடைகளுக்கெல்லாம் போவதில்லை. தங்களது வீடு களிலேயே மதுபானத்தைத் தயாரித்து விடுகிறார்கள். இப்படி இவர்கள் தயாரிக்கும் சரக்குகளில் புகழ்பெற்ற சில மதுபானங்கள்: ஓகோகோரோ (நைஜீரியா), உம்கோம்போதி (தென் ஆப்பிரிக்கா), நசபூபூ (கானா), சாங்கா(கென்யா) ஆகிய மதுபானங்கள் பிரபலமா னவை. இவற்றை யெல்லாம் தங்களது வீடுகளிலேயே ஆப்பிரிக்கவாசிகள் தயாரித்துக் கொள் கிறார்கள். ஆனால் `வீட்டில் மதுபானம் தயாரித்து அருந்துவது நல்லதல்ல, அது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தானது' என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது. இதையும் மீறி வீட்டுச் சரக்கை குடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவர்கள் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் பலியாகி வருகிறார்கள். பாவம்! - sankeeth - 09-12-2005 தகவலுக்கு நன்றி. - Birundan - 09-12-2005 செய் முறையையும் சொன்னால் எங்கட சின்னப்புக்கு வசதியாஇருக்கும், - விது - 09-13-2005 இதென்ன பெரியவிசயம் நம்ம நாட்டுச்சரக்க மறந்திட்டீங்களே அதுதாங்கோ கசிப்பு (கிபீர்). - RaMa - 09-13-2005 என்ன சுண்டல் எங்கள் நாட்டில் செய்யதையா அங்கு செய்கின்றார்கள்..... எங்களுடைய தலைவர் இல்லையென்றால் விது சொன்னதைவிட கனக்க கண்டு பிடித்திருப்பினம். - sankeeth - 09-13-2005 அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி கொடுத்துத்தானே செய்றாங்க உங்களூக்கு ஏன் கவலை? - SUNDHAL - 09-13-2005 என்னங்க பேசுறீங்க? குடித்து விட்டு 100 கனக்கானவர்கள் சாகும் போது எப்பிடிங்க பீல் பன்னாம இருக்க முடியும்?..
|