Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 233 online users.
» 0 Member(s) | 231 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,405
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,284
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,206
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  கிளப்புறாங்கோ!
Posted by: SUNDHAL - 09-12-2005, 12:35 PM - Forum: நகைச்சுவை - Replies (14)

கோடம்பாக்கமும் குத்துப்பாட்டும் இப்போதைய ட்ரெண்டுக்கு தங்கர்பச்சானும், திரைத் தகராறும் போல் இரண்டறக் கலந்துவிட்டன. "சரிகமபதநிச' சங்கீதம் தத்தளிக்கும் ஸ்டுடியோக்களில், சைதாப்பேட்டை "புனித' பாடல்கள் செம குத்தாக எப்படி உருவாகின்றன என்கிற தெய்வீகக் காட்சியை இப்போது உங்கள் கண்முன்னே நிகழ்த்திக் காட்டுகிறார்கள் இசையமைப்பாளர் "இசை இம்சை' ரா.ரா.ராக்கப்ஸ், பாடலாசிரியர் "கவிக் குத்து' பேட்டைப்ரியன், "இயக்குநர் நரகம்' ஸீன் சிங்காரம், பாடகர் பாவ்பாவ்ஜி கபூர்.

தமிழ் இன்பம் பருக வா மாமூ!

டைரக்டர்: பாடகரு வந்துட்டாரு, மியூசிக் டைரக்டர் வந்துட்டாரு, எல்லாம் ரெடியா இருக்கு. கவிஞரே கலீஜா "கப்' "கப்' புன்னு நாலு வரியை எடுத்து விடுங்க. இன்னிக்கு இந்த சாங்கை தீர்த்துக் கட்டிடணும்.

கவி: அவ்ளோதானே...? அசத்திப்புடலாம். சிச்சுவேஷனைச் சொல்லுங்க...

டைரக்டர்: என்ன இப்படி "டப்'ன்னு கேட்டுப்புட்டீங்க..இன்னும் கதையையே யோசிக்கல; அதுக்குள்ள சிச்சுவேஷனுக்கு நான் எங்க போறது. எதையாவது எழுதுங்க. அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

இசை: சிச்சுவேஷன் தான, நான் சொல்லுறேன். ஹீரோ ரோட்டுல மிட்நைட்டுல போறான். அப்ப கீழக்கெடக்குற ஒரு காலி டின்னை உதைக்கிறான். அது பறந்து நிலாவைப் போயி தொட்டுட்டு கீழ ஒரு பொண்ணு உருவத்துல வந்து விழுது. அப்புறம் குரூப்பா ஒரு பஸ்ல இருந்து இளசுங்க கூட்டம் ஒண்ணு எறங்குது. எல்லாரும் சேர்ந்து குத்தாட்டம் போடுறாங்க...எப்படி!

பாடகர்: வாரே வாவ்! அச்சா சிச்சுவேஷன். நீங்க நல்லா எழுதுது! நான் பக்காவாப் பாடுது!

டைரக்டர்: கலக்கிப்புட்டீங்க! இதுல இருந்தே கதைய ஃபுல்லா டெவலப் பண்ணிருவேன். ம், வார்த்தைகளை மானாவாரியாப் போட்டுத் தாக்குங்க!

இசை: ஆமாமா, ஆரம்பிக்குற பல்லவியே பல்வலி ரேஞ்சுல தாக்கணும். பட்டையக் கௌப்புங்க!

கவி: (தன் மோவாயில் மொத்த விரல்களையும் வைத்துச் சிந்திக்கத் தொடங்குகிறார்.) ஆங்...வந்துடுச்சி...வந்துடுச்சி...(பாத்ரூமுக்குள் போய் விட்டு 10 நிமிடம் கழித்துத் திரும்ப வருகிறார்.)

டைரக்டர்: ஏதாவது வந்துச்சா?

கவி: அய்யோ...அய்யோ...என்னமா வந்திருக்கு தெரியுமா! நான் வார்த்தைகளைத்தான் சொல்லுறேன். எனக்கு புல்லரிச்சுக்கிட்டே இருக்கு. இந்தப் பாட்டுத்தான் இன்னும் ஆறேழு மாசத்துக்கு தமிழ்நாட்டோட தேசிய கீதமா தெருத்தெருவா அலறப் போகுது!

பாடகர்: அச்சா! சொல்லுங்கோ, என் காது அரிக்குது!

கவி: "வா வா வா பால்கோவா!

தா தா தா வாங்கித் தா!

டைரக்டர்: வாரே வா!

கவி: "மா மா மா உப்புமா!

தா தா தா கிண்டித் தா!

இசை: ஏவ்!

கவி: உன் வாய் கால்வாய்!

என் வாய் செவ்வாய்!

செவ்வாயில் கால்வாயை வெட்டப் போறேன்!

உன் கை உடுக்கை!

என் கை உலக்கை!

உலக்கையால் உடுக்கையத் தட்டப்போறேன்!'

டைரக்டர்: மேல போ வாத்யாரே!

கவி: ஆப்பம் தோசை அப்பள வடை!

கிடைக்குமிடம் ஆயாக் கடை!

இசை: சூப்பரு..இந்தப் பல்லவி முடியுற இடத்துல வாய்க்குள்ள நுழையாத வார்த்தை ரெண்டைப் போட்டா சாங் பத்திக்கும்.

கவி: அவ்ளோதான. இந்தா வெச்சிக்கோங்க!

"ஆப்பம் தோசை அப்பள வடை!

கிடைக்குமிடம் ஆயாக் கடை!

ப்புர்றாங்கோ...ப்புர்றாங்கோ!

கர்ச்சீப்பு த்தர்றாங்கோ!

டைரக்டர்: ஆஹா...கவித! கவித! அப்படியே அதே ஸ்பீடுல சரணத்தையும் சாகடிங்க!

பாடகர்: ஆமா...சென்டமில் வேர்ட்ஸ் நீங்க சர்னத்துல எழுதுது. நான் நல்லாப் பாடுது!

இசை: ஆமா, இந்தச் சரணத்துல ஆழமா ஒரு மெúஸஜ் வைக்கணும்.

கவி: அம்புட்டுத்தானே...பின்னிப் பெடலெடுத்துடுறேன்!

"விரலு அனுப்பும் எஸ்.எம்.எஸ்!

குரலு வந்தா வி.எம்.எஸ்!

நான் பாட்டுப் பாடுற டி.எம்.எஸ்!

நீ ரோட்டுல போற பிரேக் டவுன் பஸ்!

இசை: அப்படித்தான்..அப்படித்தான்..அப்படியே டாப் கியர்ல போட்டுத் தூக்குங்க!

கவி: "செந்தமிழு தேன் மொழி!

கண்ணம்மா பேட்டைக்கு இதுதான் வழி!

அப்பால வா!

ஆட்டம் க்ளோஸ்ன்னா

ஆட்டத்தோட வா!

டிஷ்யூம் குத்துச் சத்தம்!

வேர்க்கடலைத் தின்னாப் பித்தம்!

டைரக்டர்: காதெல்லாம் கதறுது! பேச முடியாம உதடெல்லாம் உதறுது! ஐயா...இதே வேகத்துல ரெண்டாவது சரணத்தையும் எடுத்து வுடுங்க! இதுல லவ் ஃபீலிங் கொஞ்சம் தூக்கலா இருக்கணும்!

கவி: லவ்வுதான, இந்தா ஜிவ்வுன்னு கேளுங்க!

மூக்கடைச்சா போடு விக்ஸ்!

பந்து கிடைச்சா அடி சிக்ஸ்!

ஃபிகரு போனா வுடு லுக்ஸ்!

நீயும் நானும் இன்ஸ்டண்ட் மிக்ஸ்!

பாடகர்: எனக்கு கண்ணுல தண்ணி வர்து! மேல சொல்லுங்கோ ஜி!

கவி: "உன் முழி திருட்டு முழி!

சென்ட்ரல்ல கிடைக்கும் கேப்பைக் களி!

தப்பாம வா!

தப்புப் பண்ணிட்டு வா!

தப்புத் தப்பாத்தான்

கம்பி எண்ண வா!

லப்பு டப்பு ஹார்ட்டு சத்தம்!

லிப்பும் லிப்பும் சேர்ந்தா முத்தம்!

இசை: சூப்பரு...எனக்கு அப்படியே செவத்துல முட்டி முட்டி சந்தோஷமா சிரிக்கணும் போல இருக்கு! என் நரம்புகுள்ள அப்படியே மெட்டு தாண்டவமாடுது.

டைரக்டர்: வுடாதீங்க! பிடிச்சு இழுங்க! நீங்க தட்டுற மெட்டுல அவனவன் காது பஞ்சராகி அலையணும்! ஆரம்பிங்க!

(அங்கே ஓர் இசைக் கூவம் ஓடத் தொடங்குகிறது!)
ThanksBig Grininamani

Print this item

  தொட்டி ஜெயா
Posted by: SUNDHAL - 09-12-2005, 12:31 PM - Forum: சினிமா - Replies (10)

Ôரொம்ப பேசுறாரு சிம்புÕ என்று சொன்னாலும் சொன்னார்கள். நறுக்கு தெரித்தாற் போல் நாலே வரிகள்! சிம்புவின் டயலாக் பேப்பரில் நாலணா கடலையை மடித்து விடலாம்!

ஆனால், வாய் பேச்சை விட புஜம் பேசுகிறது ஒவ்வொரு காட்சியிலும்! அடிதடி...வெட்டு...குத்து...அம்மாடியோவ்..! இயக்குனர் துரையை ஓரங்கட்டிவிட்டு இரண்டாம் பாதியை ஆக்ரமித்துக் கொள்கிறார் சண்டை இயக்குனர் சிவா!

தொட்டி ஜெயாவாக சிம்பு. அவரின் சின்ன வயசு ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் ஓவர் என்றாலும் அசத்தல்! சரி... கதைக்கு வருவோம்.

சென்னையிலேயே பெரிய ரவுடியான சீனா தானாவிடம் எடுபிடியாக இருக்கிறார் சிம்பு. அவர் சொன்னார் என்பதற்காக ஒருவனை போட்டு தள்ளிவிட்டு கொல்கத்தாவில் தலைமறைவாகிறார். அங்கே... ரயிலை தவறவிட்ட மாணவி கோபிகாவை விபச்சார சந்தையில் தள்ள முயற்சிக்கிறது ஒரு கோஷ்டி. தன் புஜ பலத்தால் அவர்களை நையப்புடைக்கிற சிம்பு, கோபிகாவை அவரின் சொந்த ஊரான கன்னியாக்குமரிக்கு கொண்டு வந்து விடுகிறார். சிம்புவின் வீரமும், கண்ணியமும் கோபிகாவுக்கு பிடித்துப் போய்விட, காதல்! ஆனால், சிம்பு அந்த காதலை ஏற்றுக் கொள்ளாமல் பஸ் ஏறுகிறார். அவரை படியேற விடாமல் கன்னியாக்குமரிக்கே இழுக்கிறது காதல்! நடப்பது நடக்கட்டும் என்று கோபிகாவுடன் அவர் டூயட் பாட தயாராகிற நேரத்தில் வில்லனாய் நுழைகிறார் கோபிகாவின் அப்பா. அவர் யார்? சின்ன அதிர்ச்சி... அவர்தான் சீனா தானா!

அதன்பின் அரிவாள், கத்தி, துப்பாக்கி, ஹேய்ய்ய்ய்... என்ற கூச்சல்கள். புற்றீசல் போல் வருகிற அத்தனை ஸ்டண்ட் பார்ட்டிகளும் சிகப்பு ரத்தம் வழிய செத்து போகிறார்கள். காது ஜவ்வு கிழிகிறது.

பயம், காதல், அதிர்ச்சி, வெட்கம், இப்படி எல்லா உணர்ச்சிகளையும் கலவையாக்கி கொடுத்திருக்கிறார் கோபிகா. பாவம்... கால் விரல் தேய்கிற அளவுக்கு அவரை ஓட விட்டிருக்கிறார்கள் படம் முழுக்க.

படத்தில் மருந்துக்கு கூட காமெடி இல்லை என்ற குறையை போக்கியிருக்கிறார் அந்த சீனா தானா. என்னதான் வில்லன் என்றாலும் அப்படியா கத்தி தீர்க்க வேண்டும்?

மொத்த படமும் இரவிலேயே நடப்பதால், ராஜசேகரின் கேமிராவிலும், லைட்டிங்கிலும் ஏதோ வித்தியாசம்! ஆனால், நகரம் தாண்டிய கிராமத்து தியேட்டர்களில் என்ன ரிசல்ட் வருமோ?

இசை-ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களும், பின்னணி இசையும் பலே.

தொட்டி ஜெயா- பட்டிதொட்டிகளை பரவசப்படுத்தும்!

Thanks:Tamilcinema.com

Print this item

  நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை
Posted by: SUNDHAL - 09-12-2005, 12:18 PM - Forum: சினிமா - Replies (8)

நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினார் விஜய்

Print this item

  தொலைக்காட்சியில் காமசூத்திரா
Posted by: sinnakuddy - 09-12-2005, 09:13 AM - Forum: சினிமா - Replies (18)

தொலைக்காட்சியில் காமசூத்திரா

சர்ச்சைக்குரிய டைரக்டர் மீரா நாயரின் காம சூத்திரா என்ற திரைப்படம் வாற புதன் பிற்பகல் 11.05 க்கு 14.9.05 பிரித்தானியவிலுள்ளவர்கள் Tv யிலை channel 4 இல் பார்க்க விரும்பினால் பார்க்கலாம்...இந்த மீரா நாயர் தான் வாட்டர், பயர் படங்களை எடுத்தவர்... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  திருகோணமலையில் நேற்று கைக்குண்டுத் தாக்குதல்
Posted by: mayooran - 09-12-2005, 04:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

திருகோணமலையில் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை 9.10 மணியளவில் கைகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திரு;கோணமலை கண்டி வீதியில் அபயபுரம் சுற்று வளைவில் காவல் கடமையில் இருந்த பொலிசார்மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.இதில் குணரெத்தின என்ற பொலிஸ் கான்டபிளும்ää அச்சமயம் அதன் வழியாக சென்ற ஏ.கே.உபாலி என்ற சிஙகளவரும் காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். திருக்கோணமலையில் சட்டவிரோத புத்தர் சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து குவிக்கப்பட்டுள்ள பொலிசார் மீதும் இராணுவத்தினர் மீதும் அண்மைக்காலமாக பல்வேறு கைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இவற்றினை நடத்துபவர்கள் யார் என்று இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் இளைஞர்கள சந்தேநத்தின் பேரில் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையும் இவ்விடத்திற்கு அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதனைத் தொடந்து இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் நகர மத்தியில் பிரதான வீதியில் அமைந்துள்ள சமாதி பிள்ளையார் ஆலயத்தின் பூசகரும் அவரது உதவியாளரும் காயங்களுக:கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிற்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் ஆரம்பத்தில் தெரிவித்தனர்.
<span style='font-size:14pt;line-height:100%'>Tamiloosai</span>

Print this item

  &quot;விடுதலைப்புலிகள்&quot; ஏட்டின் இணையத்தளம்
Posted by: Aalavanthan - 09-11-2005, 09:19 PM - Forum: இணையம் - Replies (5)

"விடுதலைப்புலிகள்" ஏட்டின் இணையத்தளம்

http://www.viduthalaipulikal.com

Print this item

  ஒரு போயா தினத்து மரணம் !
Posted by: விது - 09-11-2005, 07:43 PM - Forum: சினிமா - Replies (23)

[img<img src='http://img152.imageshack.us/img152/1769/p7ih.jpg' border='0' alt='user posted image'>]

சிறீலங்கா அரசால் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டாலும்இ சிறீலங்காவிற்கு வெளியால் பல விருதுகளை வெற்றி பெற்றுள்ளது ஒரு போயா தினத்து மரணம் என்ற சிங்களப்படம். போர் எப்படி சிங்கள மக்களின் வாழ்வை மாற்றியுள்ளது. போரினால் சிங்கள மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் சிங்கள அரசியல் நெருக்கடிகளுக்குள் துணிந்து பேசியுள்ளது. அதற்காக மேற்கண்ட பரிசுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது. மொத்தம் 75 நிமிடங்கள் கொண்ட இக்கலைப்படம் போரின் மறுபக்கத்தை வெளிக் கொண்டுவருவதில் கணிசமான பணியை ஆற்றியுள்ளதாகப் பேசப்படுகிறது. அரச ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை சிங்கள மக்கள் நிராகரிப்பதற்குரிய எதிர்வினையாகவும் இது செயற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



பிரசன்னா விதானகேயினால் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்து சிங்களப் படங்களில் நடித்துவரும் யோ.அபேவிக்கிரம முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய சிறந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.



படத்தின் கதைச்சுருக்கம்.



வன்னிகாமி என்ற முதியவர் கண் தெரியாத குருடர். இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பெண் திருமணம் செய்துவிட்டார்இ இன்னொரு பெண் திருமணத்திற்காகக் காத்திருக்கிறாள். ஒரு மகன் சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றுகிறான். பரம ஏழைகளான இவர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும்இ குறையில் கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும். திருமணமான சகோதரியின் கணவனின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரேயொரு ஆதராமாக இருப்பது வடக்கே இராணுவத்தில் உள்ள அவர்களுடைய மகனின் வருமானம்தான்.



இந்த நிலையில் ஒருநாள் மகனின் சவம் வாகனத்தில் வீடு வருகிறது. போரில் அவன் இறந்துவிட்டான்இ பிரேதம் சிறீலங்கா தேசியக் கொடியைப் போர்த்தியபடி வருகிறது. அந்தக்கிராமமே திரண்டுவிடுகிறது. ஆனால் அரச அதிகாரிகள் சவப் பெட்டியைத் திறக்கவோ மகனின் முகத்தைக் காணவோ அனுமதிக்கவில்லை. சவம் சிதைந்திருக்கலாம் என்பதால் திறக்க அனுமதிக்கப்படவில்லைஇ அடக்கம் செய்யப்படுகிறது.



இறந்துபோன இராணுவ மகன் அனுப்பிய கடிதமொன்று மறு நாள் வருகிறது. அதில் தான் விரைவில் வருவதாகவும்இ குறையில் உள்ள வீட்டைக்கட்டி தங்கையின் திருமணத்தை முடிப்பதாகவும் குருடனான தந்தைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறான்.



மரணம் முடிந்த காரணத்தால் அப்பகுதி கிராமசேவகர் இறந்து போன இராணுவத்தினர்க்குக் கொடுக்கப்படும் ஒரு இலட்சம் ரூபா சன்மானத்திற்கான படிவத்தை நிரப்பித்தரும்படி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் தனது மகன் உயிரோடு இருப்பதாக தான் நம்புவதாகவும்இ அப்படிவத்தில் கையொப்பமிட முடியாது என்றும் தகப்பன் கூறுகிறார். அதிலிருந்து பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன. பிள்ளைகள் அந்தப் படிவத்தை நிரப்பி பணத்தைப் பெற்றால்தான் தாங்கள் சந்தோசமாக வாழ முடியும் என்று போராடுகிறார்கள். கிராமவேசகரும் அதிலிருந்து தனக்கு வரக்கூடிய வருமதிக்காக தொடர்ந்து வந்து நெருக்கடி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் கடைசிவரை கைநாட்டு இடுவதற்கு மறுக்கிறார். தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறுகிறார். மகன் அனுப்பிய கடிதம் அவர் இறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டது என்பதையும் அவர் ஏற்கவில்லை.



இதற்கிடையில் இராணுவத்தினர் தமக்குள் பணத்தை சேகரித்துவந்து வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொடுக்கிறது. அதை அவர்கள் தகப்பனுக்கு தெரியாமலே வாங்குகிறார்கள். எங்களுக்கு இருக்கும் பணக்கஸ்டம் இந்தக்கிழவனுக்கு எங்கே தெரியப்போகிறதுஇ எங்களுக்கு இதைவிட்டால் வருமானம்வர வேறு வழியில்லையே என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இராணுவத்தில் சேருவதைவிட நாங்கள் பிழைப்பதற்கு இங்கு வேறு என்ன வழியிருக்கிறது என்று மூத்த மகளின் கணவன் கூறுகிறான்.



இதையெல்லாம் கேள்விப்பட்ட கிழவன் கவலைப்படுகிறான். இளைய பிள்ளைகளான உங்களால் வேறு எதைச் சிந்திக்க முடியும் ? இறந்தவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் பணத்திற்கு போராடுகிறீர்களே ? உங்கள் மீதும்இ உங்களது அறியாமை மீதும் எனக்கு வருத்தப்பட எதுவுமில்லை என்று தனக்குள் பேசிக்கொள்கிறான். மறுநாள் அதிகாலையே மண் வெட்டியுடன் தனது மகன் புதைக்கப்பட்ட இடத்திற்குப் போய் புதை குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறான். ஊர் திரண்டு வருகிறதுஇ கிழவனின் ஆவலைப் பூர்த்திசெய்ய எண்ணிய மற்றவர்களும் இணைந்து புதை குழியைத் தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார்கள்.



இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அந்தச் சவப்பெட்டியைத் திறந்தபோது அதற்க்குள் ஒரு வாழைக்குத்தியும்இ ஒரு கருங்கல்லுமே வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இறந்தவன் எங்கே ? ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள் ? எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி. அதற்குப் பின்னர் யாருமே எதுவும் பேசவில்லை. கிழவன் அமைதியாகச் சென்று ஆற்றில் தண்ணீர் அள்ளுகிறான். மழை வந்து அவனை நீராட்டுகிறது. இந்த அளுக்கான எண்ணங்களை எல்லாம் அது கழுவிச் செல்கிறது. சிறுவர்கள் நதியில் குளிக்கிறார்கள் காலநதியே அவர்களையும் கழுவிச் செல்ல வேண்டும் என்ற குறியீட்டுடன் படம் முடிவடைகிறது.



படத்தில் வரும் முக்கிய குறியீடுகள்.



அந்தக் கிராமத்தில் இராணுவம் துப்பாக்கியுடன் மிதிவண்டியில் போகிறது. அதே மிதி வண்டியின் முன்புறத்தில் புத்தபிக்கு ஒருவர் அமர்ந்திருக்கிறார். ஆகவே இராணுவத்திற்கும் புத்தபிக்குவிற்கும் பேதம் எதுவும் இல்லை. இருவரும் ஒன்றே என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.



இறந்தவருக்கு நிதி கிடைக்கிறது என்பதை அறிந்ததும்இ புத்தபிக்குவின் தலைமையில் மற்றயவர்களும் சேர்ந்து இறந்தவனின் பெயரில் ஒரு பஸ்தரிப்பிடம் கட்டவிரும்புவதாக வருகிறார்கள். இறந்தவனின் பணத்தை குடும்பம் மட்டுமல்ல சமுதாயஇ மதஇ அரச தாபனங்கள் முதல் பேயோட்டும் மந்திரவாதிகள்வரை பயன்படுத்தத் துடிதுடிக்கிறார்கள்.



வெறும் சேற்று நீரையே வடிகட்டி குடித்து வரும் அக்கிராமத்தில் போர்பற்றி எதுவும் புரியப்பட்டதாக இல்லை. வறுமையே இராணுவத்திற்குள் இளைஞர்களைத் தள்ளுகிறது. உழைத்துஇ கொள்ளையடித்து ஏதோ ஒரு வகையில் வாழ வேண்டுமெனவே அவர்கள் இராணுவத்திற்கு வருவதாக கதை சுட்டிக்காட்டுகிறது.


இதில் மிக முக்கியமான குறியீடு சவப்பெட்டிக்குள் கிடப்பது வாழைக்குற்றி என்று தெரிந்த பின்னர் முழுச்சமுதாயமுமே கோபத்தில் எதையாவது பேசுவதுதான் திரைப்பட மரபு. ஆனால் யாருமே வாயினால் ஒரு வார்த்தைகூட அதைப்பற்றி விமர்சிக்கவில்லை. உறைந்த மௌனத்துடன் வாய் பேசாமல் மறுபடியும் சவப்பெட்டியைப் புதைக்கிறார்கள். ஒரு சமுதாயமே உண்மையை புதை குழிக்குள் போட்டு மூடிவிட்டு எதுவுமே பேசாமல் வாழ்ந்துவருவதை சொல்லப்படாத காட்சிகளாக விளக்குகிறது.



படப்பிடிப்பு



மிகச் சாதாரணமான படப்பிடிப்பும்இ குறைவான தொழில் நுட்பமுமே கையாளப்பட்டிருக்கிறது. கமேரா மிகவும் மெதுவாகவே படத்தை நகர்த்துகிறது. வர்த்தகத்திற்கு பயன்படாத பரிசுகளுக்கு உரிய கலைப்படம் என்னும் ரகத்திற்குட்பட்ட திரைப்படமாகவே அது உருவாக்கப்பட்டிருக்கிறது.



உரையாடல்



மிகவும் சுருக்கமான இரண்டொரு வசனங்களே பேசப்படுகின்றன. படத்தின் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்றய மொழி பேசுவோரும் அதை விளங்க முடிகிறது.



தொகுப்பு.



இதுபோல மகனைக் காணாது தேடும் ஒரு தந்தையின் கதையை விளக்கும் மலையாளப்படமொன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்து பல பரிசில்களைப் பெற்றிருக்கிறது. அதேபோல இந்தப்படத்தின் கதை நகர்வும் இருக்கிறது. எடிட்டிங் இந்தியாவில் இருந்து ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறீலங்கா பாராளுமன்றத்தில் கேட்கும் போர்ச் சன்னதமும்இ ஊர்வலங்களும் ஏழைச் சிங்கள மக்களின் உண்மையான குரல்அல்ல அவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம் என்பதை திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. பார்க்க வேண்டிய படம்.

கி.செ.துரை அலைகள் திரை விமர்சனக் குழு. 24.07.05
நனறி
http://www.alaikal.com/net/index.php?optio...id=23&Itemid=41

Print this item

  புதிதாய் ஒரு வானம்பாடி..........
Posted by: sakthy - 09-11-2005, 07:20 PM - Forum: கவிதை/பாடல் - Replies (54)

பூக்கள்
கீழே விழுந்தாலும்
சிரிப்பதை நிறுத்தவில்லையே
மணமும் மறவில்லையே
மாறாக - நாம்
மட்டும் ஏன் இப்படி ?
மாற்றிக் கொள்ள
முயலுவோம்.
முயன்று
வெற்றி கொள்வோம்
பூக்களைப் போல்................

Print this item

  இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு
Posted by: வினித் - 09-11-2005, 06:23 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (2)

இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2005, 16:04 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருவதாக சுமித்ரேயோ அமைப்பின் தலைவர் நளினி எல்லாவெல தெரிவித்துள்ளார்.


சொந்தக் காரணங்களுக்கான தற்கொலை முயற்சிகளாகவே இவை இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் தற்கொலை முயற்சிகளினால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் நளினி எல்லாவெல சுட்டிக்காட்டினார்.

சிறிலங்கா காவல்துறை புள்ளிவிவரங்களின் படி 1995 ஆம் ஆண்டு 8,519 இலங்கையர்கள் தற்கொலையால் இறந்துள்ளனர்; 2001 ஆம் ஆண்டு புள்ளிவிவரப் படி 4,9995 தான்.

20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் மிதமான விசத்தையே தற்கொலைக்கு பயன்படுத்துகின்றனர்.

தற்கொலை முயற்சில் ஈடுபடுவோரில் 40 விழுக்காட்டினர் மது பாவனையாளர்கள். 40 விழுக்காட்டினர் மனநிலை பாதிக்கபப்ட்டவர்கள். 20 விழுக்காட்டினர் வறுமை நிலையில் உள்ளவர்கள் என்றும் நளினி எல்லாவெல தெரிவித்தார்.

Print this item

  வணக்கமுங்கோ
Posted by: lollu Thamilichee - 09-11-2005, 03:35 PM - Forum: அறிமுகம் - Replies (57)

எப்படி இருக்குறீங்கோ??
நான் இங்கு புதுசு
என் தமிழ் கொஞ்சம் துாக்கிவாரி போடும்
விழுந்திடாதீங்கோ..
இங்கயாவது நான் தமிழ் எழுத படிக்கிறேன்..!

நன்றாக தமிழ் கதைப்பேன் :-)
எழுதமட்டும் வரது.. :-(

Print this item