Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 502 online users.
» 0 Member(s) | 500 Guest(s)
Applebot, Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,412
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,207
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  புலிகளை இராணுவ ரீதியாக ஒடுக்கமுடியாது
Posted by: sri - 09-10-2005, 08:41 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (5)

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்திவிடலாம் என்பது நிகழுமென நம்பமுடியாதது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் வாசிங்டனில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஸ்காஃபெர் அம்மையார் பேசியதாவது:

இலங்கை அமைதிப் பேச்சுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளே தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றனர். விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நேரடிப் பேச்சுக்களை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்தலாம் என்பது நிகழுமென நம்ப முடியாதது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அனுசரணைப் பணியிலிருந்து நோர்வேயை மாற்றிவிடுவதால் இனப்பிரச்சனையின் தன்மை மாறிவிடப் போவதில்லை. இலங்கை பிரச்சனைக்குத் தீர்வுகாண பாரிய அரசியல் மாற்றங்கள் உருவாக வேண்டும். தற்போதைய அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைகள் மூலம் அமைதி முயற்சிக்கான வாய்ப்புகளை தூர எறிந்துவிடக் கூடாது என்றார் ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு சிறிலங்கா அரசுதான் பொறுப்பேற்று தீர்வுகாண வேண்டும் என்று கூறிய அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜோன் ரிச்சர்ட்சன், ரெரசிட்டா ஸ்காஃபர் அம்மையார் கூறிய கருத்துகளையே வழிமொழிந்து பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய சிறிலங்காவின் சமாதான செயலக பணிப்பாளர் ஜயந்த தனபால, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போதைய அமைதி பேச்சு முறையை முற்றிலும் புதியதாக மாறியமைக்க வேண்டியது அவசியமாகிறது என்றார்.

அமெரிக்க காங்கிரசார் ஜெர்ரி வெல்லெர், டெனி டெவிஸ் மற்றும் அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பேர்னாட் குணதிலக்க ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

puthinam

Print this item

  இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி
Posted by: narathar - 09-10-2005, 08:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (15)

சிறுமி தற்கொலை முயற்சி யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது செய்தி - இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி

Friday, 09 September 2005
--------------------------------------------------------------------------------
சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகிய செய்தி முற்று முழுதிலும் தவறான செய்தி . இந்தச் சம்பவத்தில் மிகப்பெரும் சதி அரங்கேற்ற்றப்பட்டுள்ளது . திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும் ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்பகின்றோம்.

நீண்டகாலமாக இந்தியத் தூதுவரலாயத்தினால் இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்து அண்மையில் இந்தப் பாலியல் சதி அரங்கேறுவதற்கு முதல் இந்தியாவில் பி.ஏச்.டி விரிவுரை ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட வேளை இந்தியத் தூதுவராலயத்தினால் இவருடைய வீசா விண்ணப்பப் படிவம் முகத்திற்கு முன்னால் தூக்கி வீசப்பட்டது.

அண்மைக் காலமாக சேது சமுத்திரத் திட்டத்தினைத் தீவிரமாக எதிர்த்து வந்த இந்த விரிவுரையாளர் நீண்ட நெடும்காலமாக ஈ.பி.டி.பி தேசவிரோத சக்தியாலும் அவர்களின் துணையுடன் யாழ் குடாநாட்டில் இயங்கும் இந்திய உளவுப்பிரிவின் எடுபிடிகளாலும் இவருக்கு எதிரான திட்டமிட்ட முறையில் சதி அரங்கேற்றப்பட்டது.

நீண்டகாலகமாக உயிர் அச்சறுத்தலின் மத்தியில் ஊடகத்துறையினருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பல இக்கட்டான காலகட்டத்திலும் குரல் கொடுத்த இந்த விரிவுரையாளரின் செயற்பாடுகளை முடக்குவதற்குப் பலவகைகளில் பலரும் முயன்றும் பயனற்ற சந்தர்ப்பத்தில் சிறுமியொருவரை இவரின் குடும்பத்துடன் நயவஞ்கத்திற்காக நட்பாகப் பழகியவர் ஊடாக ஈ.பி.டி.பி.பி யினர் இவருடைய வீட்டிற்கு வேலையாளியாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றிய தேசவிரோத சக்திகள் தற்போது தமது கபடத்தனத்தில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளதுடன் தமது துரும்பாகவும் பயன்படுத்திய சிறுமியை எவரும் சந்திக்காதவாறும் எவரும் விசாரணை செய்யாதவாறும் இரகசியமாகத் தடுத்த வைத்துள்ளனர்.

பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியலில் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்ப கட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆசரியர்கள் மற்றும் அனைத்து யாழ் மாவட்ட கல்விமான்களும் விழிப்பாக இருக்கமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்தச் சதியில் தொடர்புபட்ட ஒரு பாடசாலை ஆசியர் கொழும்புக்குத் தப்பியோடியுள்ளார்

அருள்
http://sooriyan.com/index.php?option=conte...id=2255&Itemid=

Print this item

  பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு அவசியமா?
Posted by: Mathan - 09-10-2005, 07:26 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

உடைக்கட்டுப்பாட்டை எதிர்த்து கையெழுத்து வேட்டை

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050901161658students203.jpg' border='0' alt='user posted image'>
<b>சென்னை மாணவிகள்</b>

அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான உடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக இடதுசாரி பார்வையுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளிடன் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உடைக்கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல என்றும், பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது ஒரு ஆணாதிக்கச் சிந்தனை என்று அந்த மாணவர் சங்கத்தினர் கூறுகிறார்கள்.

அடிப்படையிலான கல்விப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காகவே துணை வேந்தர் இந்த புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் கையெழுத்து வேட்டைக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளதகாவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை பொறியியற்கல்வி நிர்வாகங்களின் மத்தியில் இந்த உடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவு பெருகிவருவதையும் காணக்கூடியதாக இருப்பதாகக் கூறுகிறார் எமது சென்னைச் செய்தியாளர்.

இளம்பிபராயத்தில் ஆண் மாணவர்களுடன் படிக்கும் போது இப்படியான உடைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

BBC tamil

Print this item

  password databaseஐ உருவாக்குவது எப்படி?
Posted by: தூயவன் - 09-10-2005, 04:26 AM - Forum: இணையம் - Replies (8)

எவருக்காவது passwordக்கான databaseஎழுதத்தெரியுமாயின் வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்கின்றேன். தமிழ்வாணன்,கவிதனை எதிர்பார்க்கின்றேன்.

Print this item

  பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை
Posted by: mayooran - 09-10-2005, 04:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

[img]http://www.newstamilnet.com/news/data/upimages/makintha-santhirikka.gif[img]

சுதந்திரக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை கட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க அனுப்பியுள்ளார்.
அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிங்களப் பேரினவாத ஜே.வி.பியுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தம் நேற்று வியாழக்னிழமை கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில மணிநேரங்களிலேயே சந்திரிகா குமாரதுங்க தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதத்தை நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் அதிகாரப் பகிர்வைக் கைவிடுதல் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட ஜே.வி.பியின் நிபந்தனைகளை மகிந்த ராஜபக்ச ஏற்றுள்ளது குறித்து சந்திரிகா அதிருப்தி தெரிவித்துள்ளார்


<span style='font-size:14pt;line-height:100%'>Goodsrilanka</span>

Print this item

  அரசியல்துறை போராளிகளை அழைத்துவரக் கோரிமக்கள் முறைப்பாடு
Posted by: mayooran - 09-10-2005, 04:20 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகளை மீள அழைத்துவரக் கோரி போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் மன்னார் மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


மன்னார், பேசாலை மீனவர் அமைப்புகளின் 12 பேர் கொண்ட பிரதிநிதிகள், வர்த்தகர்கள், விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று வெள்ளிக்கிழமை மன்னாரில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவைச் சந்தித்தது.

இச்சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளிகள் வெளியேறியதால் தாங்கள் அச்சத்துடன் வாழ்வதாகவும், நிராயுதபாணிகளாக அரசியல் பணி மேற்கொள்ளும் விடுதலைப் புலிகளுக்கு உரிய பாதுகாப்பு அளித்து மீள அழைத்துவருமாறும் இச்சந்திப்பின் போது கோரிக்கை மனு கையளிக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கை குறித்து கண்காணிப்புக் குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதாக கண்காணிப்புக் குழு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
<span style='font-size:14pt;line-height:100%'>PUTHINAM</span>

Print this item

  பாரதிதாசன் கவிதைகள்
Posted by: RaMa - 09-09-2005, 10:29 PM - Forum: கவிதை/பாடல் - Replies (74)

;[size=18] கள உறுப்பினார்களே! இந்தப் பகுதியினுடாக பாரதிதாசனின் கவிதைகளை உங்கள் முன் சமர்பிக்கப் போகின்றேன்.
கவிதைகளுக்கு முன் அவரைப் பற்றி சிறு அறிமுகம். (அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டும்)

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். புதுச்சேரியில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இவரின் தந்தையாவார். தாய் இலக்குமி அம்மாள். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். மனைவியாரின் பெயர் பழநி அம்மையார். 1920ல் அவரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

முத்தமிழ் மன்னராக விளங்குவதற்குரிய அறிகுறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன. இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் நம் கவிஞர் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது.
"சுப்புரத்தினம் ஒரு கவி-அதற்குரிய தன்மை அவரிடம் உண்டு என்ற எண்ணம் பாரதியாருக்கு அவரைக் கண்டபொழுதே தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார்.
இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு "சுதேச மித்திரன்" இதழுக்கு அனுப்பப்பட்டது.

புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன் கிண்டல்காரன் பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார்.
இந்தியாவில் முதன் முதலில் குடும்ப கட்டுப்பாடு பற்றி பாடல் எழுதிய கவிஞர் நம்ம கவிஞரே...
அடிநாள் முதலே சாதி பேதத்தையும் சமயபேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும் விரிந்த அறிவும் கொள்கைக்குப் போரடும் குணமும் கொண்டவர்.
1946ம் ஆண்டு ஐhலை மாதம் 29ம் திகதி அறிஞர் அண்ணா அவர்களால் நிதி தரட்டப்பட்டு கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970ல் சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது.
"புதுச்சேரியில் கவிஞரின் வீடு எங்கே என்று கேட்டால் பெருமாள் கோயில் தெரு 95ம் இலக்கமுள்ள வீட்டைக் காட்டுவர்கள். வீட்டின் முகப்பில் பாரதிதாசன் என்னும் பெயர் காணப்படும்.
வீட்டின் உள்ளே சென்றால் தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் மனிதர் உங்களை வரவேற்பார்.
"முறுக்கான மீசை கம்பிராமான தோற்றம் ஆணித்தரமான பேச்சு தலைக்கேறிய தமிழ் மயக்கம் இத்தனைச் சிறப்புக்களுடன் கொண்ட இவர் தாம் பாரதிதாசன்....
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். அவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடமையாக்கப்பட்டது

Print this item

  சிங்கள அமைப்பின் விருந்தினராக ஆனந்தசங்கரி!
Posted by: வினித் - 09-09-2005, 04:12 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

[வெள்ளிக்கிழமை, 9 செப்ரெம்பர் 2005, 19:52 ஈழம்] [எ.அபூர்வா]
சிங்கள அமைப்பு ஒன்று நடாத்தும் கதிர்காமரின் இரங்கல் கூட்டத்திற்கான பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி கலந்து கொள்கிறார்.


கதிர்காமரின் கொலையை யார் செய்தார்கள் என்பது தொடர்பாக பலத்த சந்தேகங்கள் நிலவி வரும் இவ்வேளையில், இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டி மேற்படி அமைப்பு கனடாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலேயே ஆனந்தசங்கரி பிரதம விருந்தினராக கலந்து கொள்கிறார்.

கொழும்பு சிங்களப் பத்திரிகைகளும், ஆங்கிலப் பத்திரிகைகளும் கதிர்காமரின் கொலை இடம்பெற்ற விதம், அதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் அச்சமயத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு என்பன பற்றிய சந்தேகங்களை வெளியிட்டு கதிர்காமரின் கொலை தொடர்பாக நியாயமான சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.

குறிப்பாக கதிர்காமரை சுட்ட துப்பாக்கியானது அரச படைகளும், கொழும்புப பாதாள உலகக் குழுக்களும் பாவனையில் வைத்துள்ள ஒருவகைத் துப்பாக்கியே என்ற என்ற உண்மை இரசாயனப் பகுப்பாய்வு முடிவுகளின் போது வெளியானதும்,

சம்பவம் நடந்த சமயம் ஐந்து பாதுகாவலர்களே அவ்விடத்தில் இருந்ததும், கதிர்காமர் சுடப்பட்ட பின்னரான சுமார் மூன்று மணித்தியாலங்களாக வீதித்தடைகளோ அல்லது தேடுதல்களோ மேற்கொள்ளப்படவில்லையென்பதும் உள்ளிட,

பல புதிய தகவல்களை வெளியிட்டு வரும் கொழும்புப் பத்திரிகைகள் கதிர்காமரின் கொலை தொடர்பான சந்தேகங்களை இப்போதும் முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்தார்கள் என்ற வகையில் மேற்படி சிங்கள அமைப்பு தான் வைக்கும் அஞ்சலிக்கூட்டத்திற்கு ஆனந்தசங்கரியை பிரதம விருந்தினராக அழைத்துள்ளது.

Print this item

  இனவாத விசமப்பிரச்சாரி கைது.
Posted by: kurukaalapoovan - 09-09-2005, 04:09 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

உலகலாவியரீதியல் பல நன்கு திட்டமிட்ட விசமப்பிரச்சாரங்களை ஆய்வுகள் புத்தகங்கள் என்ற போர்வையில் நடத்திய இனவாதி கைது. இவருடைய பொய்ப்பரப்புரைகளை ஆரம்பத்தில் நம்பிய மேற்குலகம் பின்னர் உண்மை நிலையை உணர்ந்து கொண்ட பின்னர் ஓரங்கட்டப்பட்டார்.

http://www.thejakartapost.com/detailheadli...0909.A06&irec=5

Print this item

  வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை
Posted by: mayooran - 09-09-2005, 09:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

வவுனியாவில் இனந்தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மொகமட் ராஃபீக் (வயது 41) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.


வவுனியாவின் 2 ஆம் குறுக்குத் தெருவில் இன்று முற்பகல் 11.10 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

9 குண்டுகள் பாய்ந்த நிலையில் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் ராஃபீக்கின் உடலைக் கைப்பற்றினார்கள். வவுனியா நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டர்.

வவுனியா சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ஏ.எம்.சி. அபயசிங்க பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து கூடுதலாக சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
[[size=7]color=red]puthinam[/color]

Print this item