Yarl Forum
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை (/showthread.php?tid=3377)



பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா குமாரதுங்க எச்சரிக்கை - mayooran - 09-10-2005

[img]http://www.newstamilnet.com/news/data/upimages/makintha-santhirikka.gif[img]

சுதந்திரக் கட்சியின் அரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எச்சரிக்கைக் கடிதம் ஒன்றை கட்சித் தலைவரும் அரசுத் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க அனுப்பியுள்ளார்.
அரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிங்களப் பேரினவாத ஜே.வி.பியுடனான மகிந்த ராஜபக்சவின் ஒப்பந்தம் நேற்று வியாழக்னிழமை கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில மணிநேரங்களிலேயே சந்திரிகா குமாரதுங்க தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தும் கடிதத்தை நேற்று மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் அதிகாரப் பகிர்வைக் கைவிடுதல் ஆழிப்பேரலை மீளமைப்புக்கான பொதுக்கட்டமைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட ஜே.வி.பியின் நிபந்தனைகளை மகிந்த ராஜபக்ச ஏற்றுள்ளது குறித்து சந்திரிகா அதிருப்தி தெரிவித்துள்ளார்


<span style='font-size:14pt;line-height:100%'>Goodsrilanka</span>