![]() |
|
பாரதிதாசன் கவிதைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பாரதிதாசன் கவிதைகள் (/showthread.php?tid=3379) |
பாரதிதாசன் கவிதைகள் - RaMa - 09-09-2005 ;[size=18] கள உறுப்பினார்களே! இந்தப் பகுதியினுடாக பாரதிதாசனின் கவிதைகளை உங்கள் முன் சமர்பிக்கப் போகின்றேன். கவிதைகளுக்கு முன் அவரைப் பற்றி சிறு அறிமுகம். (அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டும்) புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பிறந்தார். புதுச்சேரியில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார் இவரின் தந்தையாவார். தாய் இலக்குமி அம்மாள். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். மனைவியாரின் பெயர் பழநி அம்மையார். 1920ல் அவரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். முத்தமிழ் மன்னராக விளங்குவதற்குரிய அறிகுறிகள் இளமையிலேயே அவரிடம் காணப்பட்டன. இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார். நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் நம் கவிஞர் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. "சுப்புரத்தினம் ஒரு கவி-அதற்குரிய தன்மை அவரிடம் உண்டு என்ற எண்ணம் பாரதியாருக்கு அவரைக் கண்டபொழுதே தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு "சுதேச மித்திரன்" இதழுக்கு அனுப்பப்பட்டது. புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன் கிண்டல்காரன் பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். இந்தியாவில் முதன் முதலில் குடும்ப கட்டுப்பாடு பற்றி பாடல் எழுதிய கவிஞர் நம்ம கவிஞரே... அடிநாள் முதலே சாதி பேதத்தையும் சமயபேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும் விரிந்த அறிவும் கொள்கைக்குப் போரடும் குணமும் கொண்டவர். 1946ம் ஆண்டு ஐhலை மாதம் 29ம் திகதி அறிஞர் அண்ணா அவர்களால் நிதி தரட்டப்பட்டு கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார் என்ற நாடக நூலுக்கு 1970ல் சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது. "புதுச்சேரியில் கவிஞரின் வீடு எங்கே என்று கேட்டால் பெருமாள் கோயில் தெரு 95ம் இலக்கமுள்ள வீட்டைக் காட்டுவர்கள். வீட்டின் முகப்பில் பாரதிதாசன் என்னும் பெயர் காணப்படும். வீட்டின் உள்ளே சென்றால் தாழ்வாரத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் படுத்திருக்கும் மனிதர் உங்களை வரவேற்பார். "முறுக்கான மீசை கம்பிராமான தோற்றம் ஆணித்தரமான பேச்சு தலைக்கேறிய தமிழ் மயக்கம் இத்தனைச் சிறப்புக்களுடன் கொண்ட இவர் தாம் பாரதிதாசன்.... கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். அவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990ல் பொது உடமையாக்கப்பட்டது - RaMa - 09-09-2005 காலை ------- ஒளியைக் கண்டேன் கடல்மேல்- நல் உணர்வைக் கண்டேன் நெஞ்சில்! நெளியக் கண்டேன் பொன்னின்- கதிர் நிறையக் கண்டேன் உவகை! துளியைக் கண்டேன் முத்தாய்க்- களி துள்ளக் கண்டேன் விழியில்! தெளியக் கண்டேன் வையம் - என் செயலிற் கண்டேன் அறமே - Mathan - 09-10-2005 தகவலுக்கு நன்றிகள். தொடர்ந்து பாரதிதாசன் கவிதை குறித்து அறிய தாருங்கள். - ப்ரியசகி - 09-10-2005 நன்றி மதனா.... கவிதைகளை வாசித்தால் தான் கவிதை எழுத வருமாம்....அதுவும் இப்படி பெரியவங்களோட கவிதைகள் என்றால்....ரொம்ப நல்லா இருக்கும்... - Thala - 09-10-2005 மதனா பணி தொடரட்டும்... எனக்கும் பிடிததாய் முடிந்தால் நானும் இணக்கிறன்.. - அனிதா - 09-10-2005 நன்றி மதனா தொடர்ந்து பாரதிதாசனின் கவிதைகளை தாருங்கள் - RaMa - 09-10-2005 நன்றி அனைவருக்கும் ! நாளையிலிருந்து பாரதிதாசனின் அடுத்த கவிதை தொகுப்பை இனைக்கின்றேன். எதாவது பிழைகள் இருந்தால் தயவு செய்து அறியத் தெரிக்கவும். - RaMa - 09-12-2005 மயில் அழகிய மயிலே! அழகிய மயிலே! அஞ்சுகம் கொஞ்ச அமுத கீதம் கருங்கயி லிருந்து விருந்து செய்யக் கடிமலர் வண்டுகள் நெடிது பாடத் தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில் அடியெடுத்தூன்றி அங்கம் புளகித் தாடுகின்றாய் அழகிய மயிலே! உனதுதோ கைபுனையாச் சித்திரம் ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்! உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ! ஆடுகின்றாய் அலகில் நுனியில் வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்! சாயல் உன் தனிச் சொத்து! ஸபாஷ்! கரகோஷம்! ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆன உன் மெல்லுடல் ஆடல் உள்உயிர் இவைகள் என்னை எடுத்துப் போயின! இப்போது என்நினைவு என்னும் உலகில் மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன் நீயும் பெண்களும் நிகர் என்கின்றார்! நிசம் அது ! நிசம்! நிசம்! நிசமே யாயினும் பிறர்பழி தூற்றும் பெண்கள் இப் பெண்கள்! அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்! அயலான் வீட்டில் அறையில நடப்பதை எட்டிப் பார்கா திருப்பதற்கே இயற்கை அன்னை இப்பெண்களுக்கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள். உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்! இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன் மனதிற் போட்டு வை மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதந்காக! புவிக்கொன் றுரைப்பேன் புருஷர் கூட்டம் பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி திருந்தா வகையிற் செலுத்தலால் அவர்கள் சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே! - RaMa - 09-12-2005 2) சிரித்த முல்லை மாலைப் போதில் சோலையின் பக்கம் சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது. வந்த தென்றலில் வாசம் கமிழ்ந்தது வாசம் வந்த வசத்தில் திரும்பினேன். சோலை நடுவில் சொக்குப் பச்சைப் பட்டுடை புண்டு படர்ந்து கிடந்து குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க் கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே! - Rasikai - 09-12-2005 மதனா நன்றிகள். எனக்கு இவரது கவிதைகள் ரொம்ப பிடிக்கும். - RaMa - 09-13-2005 உதய சூரியன் ----------------------- உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்த்திசையின் மீதில் உதித்துவிட்டான் செங்கதிரோன்; தக்கத்தகாய் பார்! விலகிற்றுக் காரிருள்தான் பறந்தது பார் அயர்வு விண்ணிலெல்லாம் பொன்னொளியை ஏற்றுகின்றான் அடட மிலையும் எழிற் பெருங்கடலில் அமுதப்ர வாகம் மேலேல்லாம் விழி அள்ளும் ஒளியின் ப்ரவாகம்! நலம் செய்தான் ஒளி முகத்தைக் காட்டிவிட்டான் காட்டி நடத்துகின்றாhன் துக்கமதில் ஆழ்ந்திருந்த உலகை! ஒளிசெய்தான் கதிர்க்கோமான் வானகத்தில் மண்ணில! உயர்மலைகள் சோலை நதி இயற்கை எழில்கள் பார்! களி செய்தான் பெருமக்கள் உள்ளத்தில்! அதனால் கவிதைகள் கைத்தொழில்கள் என்னென்ன ஆக்கம்! தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள ஒளியுலகின் ஆதிக்கம் காட்சின்றாhன் வானில் உயர்கின்றான் உதயசூரி யன்வாழ்க நன்றே - ப்ரியசகி - 09-13-2005 வாவ் சூப்பர் கவிதைகள..நன்றி மதனா... - RaMa - 09-14-2005 4) காடு (காவடிச் சிந்து மெட்டு) முட்புதர்கள் மொய்த்ததரை எங்கும்! - எதிர் முட்டுகருங் கற்களும் நெருங்கும் - மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்களில்தடுங்கும் - உள் நடுங்கும். கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன் கீழிருந்து பாம்புவிரைந்தோடும் - மர மட்டையசை வால்புலியைத் தேடும் - பின் வாடும். நீள்கிளைகள் ஆல்விழுதி னோடு - கொடி நெய்துவைத்த நற்சிலந்திக் கூடு - கூர் வாளெயிற்று வேங்கையெல்லாம் வால்சுழற்றிப் பாயவருங் காடு - பள்ளம்! மேடு! கேளோடும் கிளம்பிவரும் பன்றி - நிலம் கீண்டுகிழங் கேஎடுத்த தன்றி - மிகு தூளி படத் தாவுகையில் ஊளையிடும் குள்ள நரி குன்றில் - புகும் ஒன்றி. வானிடை ஒர் வானடர்ந்த வாறு - பெரு வண்கிளை மரங்கள் என்ன வீறு! நல்ல தேனடை சொரிந்ததுவும் தென்னைமரம் ஊற்றியதும் ஆறு - இன்பச் சாறு! கானிடைப் பெரும்பறவை நோக்கும் - அது காலிடையே காலிகளைத் தூக்கும் - மற்றும் ஆனினம் சுமந்தமடி ஆறெனவே பால்சுந்து தீர்க்கும் - அடை ஆக்கும் - RaMa - 09-14-2005 5) காணல் வானும் கனல்சொரியும்! - தரை மண்ணும் கனல் எழுப்பும்! கானலில் நான் நடந்தேன் - நிழல் காணும் விருப்பத்தினால்! ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல் உயிருக்கில்லை அங்கே! ஆன திசைமுழுவதும் - தணல் அள்ளும் பெரு வெளியாம்! ஒட்டும் பொடிதாங்கா - தெடுத் தூன்றும் அடியும்சுடும் விட்டுப் புறங்குதித்தால் - அங்கும் வேகும் ! உளம் துடிக்கும் சொட்டுப் புணல் அறியேன்! - ஒன்று சொல்லவும் யாருமில்லை! கட்டுடல் செந்தணலில் கட்டிக் கந்தக மாய் எரியும்! முளைத்த கள்ளியினைக் - கணல் மொய்த்துக் கரியாக்கி விளைத்த சாம்பலைப்போய் - இனி மேலும் உருக்கிடவே கொளுத்தி டும்காணல்! - உயிர் கொன்று தின்னும் காணல்! களைத்த மேனிகண்டும் - புறங் கழுத்த றுக்கும்வெளி! திடுக்கென விழித்தேன் - நல்ல சீதாளப் புஞ்சோலை! நெடும் பகற்கனவில் - கண்ட நெஞ்சுநுத் தும்கானல் தொடர்ந்த தென் நினைவில்! - குளிர் சோலையும் ஒடையுமே சுடவ ரும்கனலோ - என்று தோன்றிய துண்மையிலே. - வெண்ணிலா - 09-14-2005 நல்ல பணி. தொடருங்கள். நன்றி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ரமா? ராமா? எது சரி :?:
- RaMa - 09-14-2005 ரமா சரி விண்ணிலா - வெண்ணிலா - 09-14-2005 RaMa Wrote:ரமா சரி விண்ணிலா சரி ரமா. ஆனால் விண்ணிலா பிழை வெண்ணிலா சரி :roll: - RaMa - 09-14-2005 மன்னிக்கவேண்டும் வெண்ணிலா - வெண்ணிலா - 09-14-2005 RaMa Wrote:மன்னிக்கவேண்டும் வெண்ணிலா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-14-2005 அதுசரி மதனா = ரமா...இது சரியா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |