Yarl Forum
பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு அவசியமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு அவசியமா? (/showthread.php?tid=3375)



பெண்களுக்கு ஆடைகட்டுப்பாடு அவசியமா? - Mathan - 09-10-2005

உடைக்கட்டுப்பாட்டை எதிர்த்து கையெழுத்து வேட்டை

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050901161658students203.jpg' border='0' alt='user posted image'>
<b>சென்னை மாணவிகள்</b>

அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கான உடைக்கட்டுப்பாட்டுக்கு எதிராக இடதுசாரி பார்வையுள்ள இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளிடன் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறார்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உடைக்கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல என்றும், பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது ஒரு ஆணாதிக்கச் சிந்தனை என்று அந்த மாணவர் சங்கத்தினர் கூறுகிறார்கள்.

அடிப்படையிலான கல்விப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புவதற்காகவே துணை வேந்தர் இந்த புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் கையெழுத்து வேட்டைக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளதகாவும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதேவேளை பொறியியற்கல்வி நிர்வாகங்களின் மத்தியில் இந்த உடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவு பெருகிவருவதையும் காணக்கூடியதாக இருப்பதாகக் கூறுகிறார் எமது சென்னைச் செய்தியாளர்.

இளம்பிபராயத்தில் ஆண் மாணவர்களுடன் படிக்கும் போது இப்படியான உடைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறுவோரும் உண்டு.

BBC tamil


- MUGATHTHAR - 09-10-2005

Quote:பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள்
உண்மைதான் இதனால்தானே வாகனவிபத்துக்கள் கூடிக்கொண்டு போகுது இது சனத்துக்கு விளங்கேலை


- narathar - 09-10-2005

MUGATHTHAR Wrote:
Quote:பெண் இறுக்கமான உடை அணிந்து வருவதால் எதிரில் இருக்கக் கூடியவர்கள் பாதிக்கப்படுவார்கள்
உண்மைதான் இதனால்தானே வாகனவிபத்துக்கள் கூடிக்கொண்டு போகுது இது சனத்துக்கு விளங்கேலை


முகத்தார் அப்ப இடை தெரிய சேலை கட்டிக் கொண்டு வந்தா விபத்துக்கள் குறையுமோ?


- MUGATHTHAR - 09-10-2005

Quote:முகத்தார் அப்ப இடை தெரிய சேலை கட்டிக் கொண்டு வந்தா விபத்துக்கள் குறையுமோ
நாரதருக்கு விசயம்விளங்கேலை சீலையை உடுத்தா காத்தடிக்கேக்கை மட்டும்தான் ................. தெரியும் சிலபேர் அதையும் கவர்பண்ணிகொண்டு வருவினம் (பொண்ணம்மாக்கா சீலை உடுத்தா பரலுக்கு துண்டு சுத்தின மாதிரி அதை விடுங்கோ) இப்ப இந்த இறுக்கமான உடுப்புப் போட்டால் சும்மா வளைவு நெளிவெல்லாம் தெரியுமெல்லோ அதுக்கை மழை வேறை அடிக்க வேணும் சொல்லி வேலையில்லை இதைபாத்துக் கொண்டு மோட்டசைக்கில் ஓடி எத்தினை கால் முறிஞ்சு கிடக்குத் தெரியுமே.........அதைத்ததான் சொல்ல வந்தன்


- Mathan - 09-10-2005

கண்ணை அலைய விட்டுட்டு ஏன் அவர்களை குற்றம் சொல்றீங்க? ஆக அக்கரை பெண்கள் மேல் இல்லை .... மனசு அலைபாயுறதாலை தான் கட்டுப்பாடு தேவை எண்டுறீங்க? அதை அவர்களுக்கு போடாமல் மனசுக்கு போடலாமே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-10-2005

Mathan Wrote:கண்ணை அலைய விட்டுட்டு ஏன் அவர்களை குற்றம் சொல்றீங்க? ஆக அக்கரை பெண்கள் மேல் இல்லை .... மனசு அலைபாயுறதாலை தான் கட்டுப்பாடு தேவை எண்டுறீங்க? அதை அவர்களுக்கு போடாமல் மனசுக்கு போடலாமே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

அப்பிடி இருக்க முடியாத படியாத்ததானே சொல்லுறமப்பு


- ANUMANTHAN - 09-11-2005

கண் அலையுறதும், மனசு அலைபாயுறதும் எதிரே உள்ளவரைப்பொறுத்துத்தான் அது ஆணாவும் இருக்கலாம் பெண்ணாவும் இருக்கலாம், மனிதர்கள் எல்லோருக்குமே உணர்ச்சிகள் தூண்டப்படுவதற்கு காரணம் எதிர்ப்பாலார்தான்.
பெண்களுக்கு மட்டுமே வயதுக்கேற்ப உடற்பாகங்கள் வித்தியாசமாக தெரியும் அதற்கேற்ப அவர்கள் தங்கள் உடையையும் மாற்றிக்கொள்ளவேண்டியேற்படுகிறது!
;இதற்கு ஆண்களா பொறுப்பு? இல்லையே! ஒவ்வொருவரும்(ஆண்,பெண்) எதிர்ப்பாலார் தங்களைப்பார்கவேண்மெனநினைப்பதும் சகஜமே!
இதில் சிலர் கூடுதலாக தமத அங்கங்கள் தெரிய உடைகளை அணிவதால் எதிர்ப்பாலார் சிலர் உணர்ச்சிவசப்படுவதால் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. இதைப் பாடசாலைகளில் தடுப்பதற்காக உடைக்கட்டுப்பாடு(பாடசாலைகளில்)கொண்டுவருவதுநல்லதே!


- விது - 09-11-2005

எங்கோ படித்தஞாபகம் மிகவும் கவர்சியான ஆடை சேலைதானாம்.


- RaMa - 09-12-2005

முக்கியமான போரட்டம் தான்??????????
ஆதரவு கொடுக்கப் போக எங்கை எங்களுடைய சகோதரிகளைக் காணோம்


- vasanthan - 09-12-2005

எங்கோ படித்தஞாபகம் மிகவும் கவர்சியான ஆடை சேலைதானாம்.
_________________
அர்சுணண் கண்ணுக்கு தெரிந்தது குருவிமட்டும்தான்.....



நானும் கேள்விப்பட்டிருக்கிறன் விது


- tamilini - 09-12-2005

அவை அவைக்கு பிடிச்சமான உடையை அவையவை அணியட்டுமேன். ஆமா இங்கின ஒரு வெள்ளைக்கார பெண்மணிகள் எப்படி எப்படி எல்லாம் உடுக்கிறார்கள். அவர்களை யாரும் திரும்பிப்பாக்கிறதாய் காணலை. எங்கட ஆண்கள் வர்க்கமும் இதை எல்லாம் சாதாரன விடயமாய் எடுத்தா எவ்வளவு நல்லாய் இருக்கும். இவைக்கு வேலையே இது தானாக்கும். அங்கையும் தான் இங்கையும் தான் விடினமா சும்மா. பார்வைகள் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.


- MUGATHTHAR - 09-12-2005

tamilini Wrote:அவை அவைக்கு பிடிச்சமான உடையை அவையவை அணியட்டுமேன். ஆமா இங்கின ஒரு வெள்ளைக்கார பெண்மணிகள் எப்படி எப்படி எல்லாம் உடுக்கிறார்கள். அவர்களை யாரும் திரும்பிப்பாக்கிறதாய் காணலை. எங்கட ஆண்கள் வர்க்கமும் இதை எல்லாம் சாதாரன விடயமாய் எடுத்தா எவ்வளவு நல்லாய் இருக்கும். இவைக்கு வேலையே இது தானாக்கும். அங்கையும் தான் இங்கையும் தான் விடினமா சும்மா. பார்வைகள் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.



இதோடா பொமிசன் குடுத்திட்டா எங்கடை டமிழ்...பிள்ளை நாங்கள் பாக்காம போனா நீங்கள் இப்பிடி விலைகூடின விதவிதமான உடுப்புகளைப் போட்டு என்ன பிரயோசனம் 3பெண்கள் கோயிலை தங்களை பாக்காம போன பெடியளைப் பாத்து கதைச்சினமாம் இதுகளுக்கு ஓமோன் வேலை செய்யுதில்லைப் போல எண்டு பிள்ளை பெண்களை விருப்பமானதைப் போடச் சொல்லி அக்சிடண்ட் வாட்டை நிறைச்சுப் போடாதையம்மா.........


- Thala - 09-12-2005

MUGATHTHAR Wrote:இதோடா பொமிசன் குடுத்திட்டா எங்கடை டமிழ்...பிள்ளை நாங்கள் பாக்காம போனா நீங்கள் இப்பிடி விலைகூடின விதவிதமான உடுப்புகளைப் போட்டு என்ன பிரயோசனம் 3பெண்கள் கோயிலை தங்களை பாக்காம போன பெடியளைப் பாத்து கதைச்சினமாம் இதுகளுக்கு ஓமோன் வேலை செய்யுதில்லைப் போல எண்டு பிள்ளை பெண்களை விருப்பமானதைப் போடச் சொல்லி அக்சிடண்ட் வாட்டை நிறைச்சுப் போடாதையம்மா.........

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 09-12-2005

முகத்தார் பெமிசன் கொடுக்கல. நீங்களே பாருங்க சேலையைக்கூட கவர்ச்சி என்றிட்டாங்க பிறகு இதற்கு என்னத்தைச்சொல்ல. விரும்பி உடையை அணியலாம் என்றா சேலையும் தான்.
உங்கட அக்சிடண்ட் கதையை அங்கால விடுஞ்கோ. நீங்கள் வாகனத்தில் போனால் மட்டுமோ அக்சிடன்ட் நடக்குது. அதுக்கு பொன்னம்மாக்கா பொறுப்பு. இப்படியே சொல்லுங்கோ பெண்கள் ஓமோன் வேலை செய்யேல்லை என்று சொன்னதாய். இது சிலருக்கு வேலை போல. எங்கட ஆண்களின்ர பார்வைக்க கோளாறாக்கும் அதைச்சரிசெய்தா எல்லாம் சரி. உடல் என்றது சதைமூடியஎலும்புக்கூட அவ்வளவும் தான். அதை புரிஞ்சிக்கிட்டா கவர்ச்சியும் இல்லை ஒன்றும் இல்லை. (யாரும் திட்டாதீங்க எங்கோ வாசிச்சன் ஒப்பிக்கிறன்)


- MUGATHTHAR - 09-12-2005

Quote:எல்லாம் சரி. உடல் என்றது சதைமூடியஎலும்புக்கூட அவ்வளவும் தான். அதை புரிஞ்சிக்கிட்டா கவர்ச்சியும் இல்லை ஒன்றும் இல்லை.
பிள்ளை இவ்வளவு நாளும் எங்கை எதாவது சைவப்பிரசங்கங்கள் கேட்டு கோயிலுக்கு போன மாதிரி கிடக்குது என்ரை வயசிலை கதைக்கவேண்டிதெல்லாம் இப்பவே கதைக்கிறாய் அம்மா நான்தான் கொஞ்சம் தடுமாறிட்டன்.............வெரி சாறி


- Thala - 09-12-2005

MUGATHTHAR Wrote:
Quote:எல்லாம் சரி. உடல் என்றது சதைமூடியஎலும்புக்கூட அவ்வளவும் தான். அதை புரிஞ்சிக்கிட்டா கவர்ச்சியும் இல்லை ஒன்றும் இல்லை.
பிள்ளை இவ்வளவு நாளும் எங்கை எதாவது சைவப்பிரசங்கங்கள் கேட்டு கோயிலுக்கு போன மாதிரி கிடக்குது என்ரை வயசிலை கதைக்கவேண்டிதெல்லாம் இப்பவே கதைக்கிறாய் அம்மா நான்தான் கொஞ்சம் தடுமாறிட்டன்.............வெரி சாறி

சா... சண்டை பாக்கலாம் எண்டு காத்துக் கொண்டிருந்தா எல்லாம் சப்பெண்டு போச்சு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(எண்டாலும் முகத்தார் நீங்கள்.. சரணடைஞ்சிருக்கக் கூடாது....) :wink:


- MUGATHTHAR - 09-12-2005

Thala Wrote:சா... சண்டை பாக்கலாம் எண்டு காத்துக் கொண்டிருந்தா எல்லாம் சப்பெண்டு போச்சு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(எண்டாலும் முகத்தார் நீங்கள்.. சரணடைஞ்சிருக்கக் கூடாது....) :wink:
ஆகா......... முகத்தான் வாங்கிக் கட்டுறதைப் பாக்க ஒரு கூட்டமே காத்திருக்குப் போல கிடக்கு...சரி என்னப்பு செய்யிறது டமிழ் தங்கம்மா அப்பாக்குட்டி மாதிரிக் கதைக்கேக்கை எப்பிடி சண்டைக்கு கூப்பிடுறது அதிலை இண்டைக்குத்தான் கனகாலத்துக்குப் பிறகு களத்திலை காணுறன் சரி வேறை இடத்திலை தொடங்குவம் என்ன.................