![]() |
|
வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=3382) |
வவுனியாவில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை - mayooran - 09-09-2005 வவுனியாவில் இனந்தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்த மொகமட் ராஃபீக் (வயது 41) என்பவர் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வவுனியாவின் 2 ஆம் குறுக்குத் தெருவில் இன்று முற்பகல் 11.10 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. 9 குண்டுகள் பாய்ந்த நிலையில் வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் ராஃபீக்கின் உடலைக் கைப்பற்றினார்கள். வவுனியா நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சம்பவ இடத்தைப் பார்வையிட்டர். வவுனியா சிறிலங்கா காவல்துறை பொறுப்பதிகாரி ஏ.எம்.சி. அபயசிங்க பண்டார மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தையடுத்து கூடுதலாக சிறிலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். [[size=7]color=red]puthinam[/color] - sri - 09-09-2005 வவுனியாவில் புளொட் உறுப்பினர் சுட்டுக் கொலை வவுனியா திருநாவற்குளத்தில் முன்னாள் புளொட் இயக்க உறுப்பினர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். திருநாவற்குளம் பகுதியில் கொல்லப்பட்ட நபரும் மற்றொருவரும் வீதியில் நடந்து வந்துகொண்டிருந்த போது சனக் கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட ஒருவர் இவ்விருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் துப்பாக்கி சூடுபட்ட முன்னாள் புளொட் உறுப்பினரான கேதீஸ் எனப்படும் வில்வராசா கோபால் (வயது 47) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய நபரான தனியார் கல்வி நிறுவனமொன்றில் பயிற்றுவிக்கும் செல்வராசா பார்த்தீபன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். தற்போது அப்பிரதேசத்தில் சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுட்டது புதினம் - வியாசன் - 09-09-2005 இனந்தெரியாதவர்களுக்கு ( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) நன்றிகள் |