Yarl Forum
இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி (/showthread.php?tid=3374)



இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி - narathar - 09-10-2005

சிறுமி தற்கொலை முயற்சி யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது செய்தி - இந்திய உளவுப்பிரிவு றோ இன் சதி

Friday, 09 September 2005
--------------------------------------------------------------------------------
சிறுமி தற்கொலை முயற்சி பல்கலைக்கழக விரிவுரையாளர் கைது என்று எமது செய்தித் தளத்தில் வெளியான செய்தி தொடர்பாக மனம் வருந்துகின்றோம். சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகிய செய்தி முற்று முழுதிலும் தவறான செய்தி . இந்தச் சம்பவத்தில் மிகப்பெரும் சதி அரங்கேற்ற்றப்பட்டுள்ளது . திட்டமிட்ட முறையில் முதல் தடவையாக யாழ் மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் வெளிநாட்டு உளவுச் சக்திகளினால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பாகப் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ள போதும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் சில நகர்வுகள் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக அவதானிப்போரின் நலன்கருதியும் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும் ஒரு சில விடயங்கள் ஊடாக ஏனையவர்களுக்கும் ஒரு அவசர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்பகின்றோம்.

நீண்டகாலமாக இந்தியத் தூதுவரலாயத்தினால் இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்து அண்மையில் இந்தப் பாலியல் சதி அரங்கேறுவதற்கு முதல் இந்தியாவில் பி.ஏச்.டி விரிவுரை ஒன்றுக்குச் செல்ல முற்பட்ட வேளை இந்தியத் தூதுவராலயத்தினால் இவருடைய வீசா விண்ணப்பப் படிவம் முகத்திற்கு முன்னால் தூக்கி வீசப்பட்டது.

அண்மைக் காலமாக சேது சமுத்திரத் திட்டத்தினைத் தீவிரமாக எதிர்த்து வந்த இந்த விரிவுரையாளர் நீண்ட நெடும்காலமாக ஈ.பி.டி.பி தேசவிரோத சக்தியாலும் அவர்களின் துணையுடன் யாழ் குடாநாட்டில் இயங்கும் இந்திய உளவுப்பிரிவின் எடுபிடிகளாலும் இவருக்கு எதிரான திட்டமிட்ட முறையில் சதி அரங்கேற்றப்பட்டது.

நீண்டகாலகமாக உயிர் அச்சறுத்தலின் மத்தியில் ஊடகத்துறையினருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பல இக்கட்டான காலகட்டத்திலும் குரல் கொடுத்த இந்த விரிவுரையாளரின் செயற்பாடுகளை முடக்குவதற்குப் பலவகைகளில் பலரும் முயன்றும் பயனற்ற சந்தர்ப்பத்தில் சிறுமியொருவரை இவரின் குடும்பத்துடன் நயவஞ்கத்திற்காக நட்பாகப் பழகியவர் ஊடாக ஈ.பி.டி.பி.பி யினர் இவருடைய வீட்டிற்கு வேலையாளியாக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனை மிகவும் திட்டமிட்ட முறையில் அரங்கேற்றிய தேசவிரோத சக்திகள் தற்போது தமது கபடத்தனத்தில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளதுடன் தமது துரும்பாகவும் பயன்படுத்திய சிறுமியை எவரும் சந்திக்காதவாறும் எவரும் விசாரணை செய்யாதவாறும் இரகசியமாகத் தடுத்த வைத்துள்ளனர்.

பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியலில் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்ப கட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஆசரியர்கள் மற்றும் அனைத்து யாழ் மாவட்ட கல்விமான்களும் விழிப்பாக இருக்கமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்தச் சதியில் தொடர்புபட்ட ஒரு பாடசாலை ஆசியர் கொழும்புக்குத் தப்பியோடியுள்ளார்

அருள்
http://sooriyan.com/index.php?option=conte...id=2255&Itemid=


- Mathan - 09-10-2005

எதை நம்புவது என்றே தெரியவில்லை Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இது சதியாகவும் இருக்கலாம் அல்லது இது போன்ற ஒரு குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க அவர் சதி என்று சொல்லலாம். எது உண்மை என்று அந்த விரிவுரையாளருக்கும் பெண்ணுக்கும் மட்டுமே தெரியம்.


- cannon - 09-10-2005

இந்தச் சதிவலையில் சிக்கியுள்ள மூத்த விரிவுரையாளர் பருத்தித்துறையைச் சேர்ந்தவரென நினைக்கின்றேன்? படிப்பு, அனுபவமும், பண்பு நிறைந்த மனிதர்!

கேவலம் விபச்சாரிகளையும், கேடிகளையும், புறம்போக்குகளையும், சினிமாக் கூத்தாடிகளையும் அரசியல்வாதிகளாக கொண்டிருக்கும், இன்றும் "மகாத்மாவின் பெயரில்" நாட்டையே விற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு எங்கு பண்பு, நாகரீகம், ஒழுக்கம் என்ற சொற்கள் விளங்கப் போகிறது!!!


- Vasampu - 09-10-2005

செய்தி:
பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி ஏற்கனவே 3 ஆண்களுடன் நீண்டகால பாலியலில் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்று ஆரம்ப கட்ட மருத்துவரின் தகவல்கள் தெரிவிக்கின்றது.


ஆகா மருத்துவம்தான் எவ்வளவு முன்னேறிவிட்டது. ஒரு மருத்துவர் ஒரு பெண் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை கண்டு பிடிக்கலாம். எத்தனை ஆண்களுடன் எவ்வளவு காலமாகத் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளார் என்றால் சம்பந்தப்பட்ட வைத்தியரின் பெயரை நோபல் பரிசிற்கு பரிந்துரை செய்யலாம்.

:roll: :roll: :roll: :roll:


- narathar - 09-10-2005

ம்.. எனக்கும் இப்படித் தான் தோன்றியது,எது உண்மை எது பொய்,குழப்பமாகத் தான் இருக்குது,மெல்ல மெல்ல உண்மை வெழிக் கிளம்பும் என்று நினைய்க்கிறன்.....


- kurukaalapoovan - 09-10-2005

இப்படி நகைப்புக்குரிய வகையில் மருத்துவ-விஞ்ஞான ஆதாரங்கள் கூறி தம்மை தாமே முட்டாள்களாக்கும் செய்திகளை தமிழ் ஊடகங்கள் தாங்கிவருவது கவலைக்குரியது.

இவர்களுக்கும் lankatruth இக்கும் நம்பகத்தன்மையில் அதிக வித்தியாசம் இருக்காது.


- MUGATHTHAR - 09-10-2005

இந்தியாவின் புத்தகங்களில்தான் இப்படியான ஆசிரியர்கள் வக்கிரப்புத்தியுடன் இருக்கிறார்கள் எனப் படித்திருக்கிறேன் எமது இடத்தில் இப்பிடியாக இருக்கமாட்டார்கள் ஏனெண்டால் ஆனைக்கோட்டையில் ஒரு சிறுமியுடன் தகாதமுறையில் ஈடுபட்ட 55வயதுடையவருக்கு தந்திகம்பத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதை யாழ் மக்கள் ஞாபத்தில் வைத்திருப்பார்கள் ஆனபடியால் அப்பிடியான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் இது ஒரு கட்டுக்கதையாக இருக்கலாம்


- kurukaalapoovan - 09-10-2005

சமுதாயத்தில் நமபிக்கைக்குரிய நிலையில் இருப்பவர்களை வஞ்சகர்கள் விலைகொடுத்து வாங்க முடியாத நிலையில் இப்படியான சதிகளின் மூலம் நற்பெயரை கெடுத்து பொதுவாழ்விலிருந்து விலகவைப்பைது ஒன்றும் புதிதல்ல.

அந்த சதிகளை மக்களுக்கு தகுந்த ஆதாரங்களோடு பக்குவமாக நம்பிக்கையுhட்டும் வகையில் வெளிக்கெண்டுவருவதன் மூலம் கொஞ்சமாவது முறையடிக்கலாம். அரை வேக்காட்டு செய்திகளை முட்டாள்தனமான கற்பனைகளோடு வெளியிட்டு என்ன பயன்? இதை பொறுப்போடு ஊடகங்கள் செய்ய வேண்டும்.


- Vasampu - 09-11-2005

சில விடயங்கள் நெருப்பில்லாமல் புகையாது. ஊடகங்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற எழுதுவதுபோல் நாம் எழுதக் கூடாது. எந்த விடயத்தையும் ஆதாரமில்லாமல் நாம் மனம் போனபடி எழுதிவிட்டு தவறுக்கு மனம் வருந்துவதால் பாதpக்கப்பட்டவருக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் தான் கவனமாகக் கையாள வேண்டும். உண்மைகளோ பொய்யோ நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. பேராசிரியருக்காக வக்காலத்து வாங்கினால் சிறுமியை விபச்சாரியாக்குவதாகின்றது. இதனால் யாழில் விபச்சாரம் நடக்கின்றது என்று நாமே ஒத்துக் கொள்கின்றோம். சிறுமிக்க்காக வக்காலத்து வாங்கினால் பெரியமனிசன் என்ற போர்வையில் தப்புக்கள் நடப்பதாக நாமே ஏற்றுக் கொள்கின்றோம். யாழில் என்ன எய்ட்ஸ் நோயில்லையா. நாமே நம்மைப்பற்றி பீற்றிக் கொள்வதில் பலனில்லை. சமுதாயச் சீர்கேடுகளையும் நாம் ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும் அநியாயமாக ஓரு பேராசிரியரின் பெயர் கெடுவதற்கோ அல்லது ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதற்கோ நாம் ஏன் காரணமாயிருக்க வேண்டும். உண்மைகள் ஆதாரத்துடன் வெளி வரும்வரை பொறுத்திருப்போம்.

:!: :?: Idea Arrow


- nallavan - 09-11-2005

நி**** வந்தஅளவில் நான் நம்பப்போவதில்லை.

எவ்வளவு அயோக்கியத்தனமான, வாசகர்களை அடிமுட்டாளாக்குகிற வாதத்தை வைக்கிறார்கள். அச்சிறுமி ஏற்கெனவே 3 ஆண்களுடன் நீண்டகாலமாக பாலியல் தொடர்பு கொண்டிருந்தது மருத்துவத்துறையால் வெளிப்படுத்தப்பட்டிருக்காம். சிலவேள யாழ்ப்பாண வைத்தியத்துறை ஏதாவது புது யுக்தியக் கண்டுபிடிச்சிருக்கோ தெரியேல.
நீண்டகாலம் எண்டு இவை எவ்வளவு காலத்தைச் சொல்லுகினம்? இப்ப அச்சிறுமிக்கு வெறும் 14 வயசுதான் ஆகுது. அந்த நீண்டகாலம் எண்டது விசமத்தனமான பிச்சாரம். அதவிட அந்தப்பிள்ளை முல்லைத்தீவிலயிருந்து யாழ்ப்பாணம் போயே கனகாலமாகேல.
முல்லைத்தீவில இருந்த பிள்ளைய றோ வளைச்சுப்பிடிச்சு மாத்தி தனக்காக வேல செய்ய அனுப்பிச் சாதிச்சதெண்டது காதில புூ சுத்திற வேல.
வேணுமெண்டா அங்கபோன பிறகு ஏதாவது இந்தியச் சக்திகளின்ர அணுகுதல் நடந்திருக்கலாம்.

நி**** இந்த அயோக்கியத்தனம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.

**** தளத்தின் யெயர் நீக்கப்பட்டுள்ளது


- Mathan - 09-11-2005

Vasampu Wrote:சில விடயங்கள் நெருப்பில்லாமல் புகையாது. ஊடகங்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ற எழுதுவதுபோல் நாம் எழுதக் கூடாது. எந்த விடயத்தையும் ஆதாரமில்லாமல் நாம் மனம் போனபடி எழுதிவிட்டு தவறுக்கு மனம் வருந்துவதால் பாதpக்கப்பட்டவருக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் தான் கவனமாகக் கையாள வேண்டும். உண்மைகளோ பொய்யோ நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. பேராசிரியருக்காக வக்காலத்து வாங்கினால் சிறுமியை விபச்சாரியாக்குவதாகின்றது. இதனால் யாழில் விபச்சாரம் நடக்கின்றது என்று நாமே ஒத்துக் கொள்கின்றோம். சிறுமிக்க்காக வக்காலத்து வாங்கினால் பெரியமனிசன் என்ற போர்வையில் தப்புக்கள் நடப்பதாக நாமே ஏற்றுக் கொள்கின்றோம். யாழில் என்ன எய்ட்ஸ் நோயில்லையா. நாமே நம்மைப்பற்றி பீற்றிக் கொள்வதில் பலனில்லை. சமுதாயச் சீர்கேடுகளையும் நாம் ஒத்துக்கொள்ளும் பக்குவம் வேண்டும் அநியாயமாக ஓரு பேராசிரியரின் பெயர் கெடுவதற்கோ அல்லது ஒரு அப்பாவிச் சிறுமியின் எதிர்காலம் பாழடிக்கப்படுவதற்கோ நாம் ஏன் காரணமாயிருக்க வேண்டும். உண்மைகள் ஆதாரத்துடன் வெளி வரும்வரை பொறுத்திருப்போம்.

:!: :?: Idea Arrow

வசம்புவின் இந்த கருத்துதான் என்னுடைய கருத்தும்,


- Anandasangaree - 09-11-2005

அந்த சிறுமிக்கு தற்போது 19 வயது முல்லைதீவில் இருந்து யாழ் வந்து 6 வருடங்கள்.


- Anandasangaree - 09-11-2005

தமிழ் ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் அனைத்தும் பொய். சிறுமியின் சுந்த இடம் பரந்தன். உறவினர் பலர் மாற்று இயக்க உறுப்பினர்.

இந்த தகவல் முதல் கசிந்தது ஈ.பி.டி.பி ஊடாக. பொலிசாருக்கு முறைப்பாடு செய்தவர்கள் ஈ.பி.டி.பி.


- Anandasangaree - 09-11-2005

அந்த சிறுமிக்கு 13 அல்லது 14 வயது சிறுமி என்றால் அந்த தகவலை வெளியிட சடத்தில் இடம் இல்லை.

சிறுவர் தொடர்பான குற்றவியல் சட்டத்தில் இந்த பிசகு மறைக்கப்பட்டு இரகசியமாக மேற்கொள்ளபடவேன்டியது.

இது புலிகள்மீது குற்றம் சுமத்த போடப்பட்ட மிகப்பெரும் நாடகம். எனது நன்பன் டக்ளஸ் செய்த சாதனை.


- Anandasangaree - 09-11-2005

14 வயது சிறுமியை ஏன் ஈ.பி.டி.பி தடுத்து வைத்திரக்க வேனம்.?
14 வயது சிறுமிக்கு எங்கை போய் எப்படி முறைப்பாடு செய்யவேன்டும் என்று யார் ஆலோசனை கொடுத்து?
ஏன் சிறுமியின் உறவினர் அமைதியாக இருக்கினம்.?
சிறுமி தன்னை விடுதலை செய்யுமாறு கொரியும் ஏன் சிறுமியை மிரட்டி வைச்சிருக்கினம்.?

பேராசிரியரை சிறைக்கை தள்ள வேன்டும் என்று ஏன் ஈ.பி.டி.பி ஒரு காலில் நிக்குது?


- Anandasangaree - 09-11-2005

மதன் நல்லவன் உட்பட பலரின் கருத்து பொறுப்பற்றது.