| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 233 online users. » 0 Member(s) | 231 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,405
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,284
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,206
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| என் நேசம் எப்போதும் உன்னுடன் |
|
Posted by: inthirajith - 09-11-2005, 03:06 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
பிரியமானவளே யார் செய்யும் அநீதி
நம்மை புரியாத விதியா என்றோ
ஒருநாள் நம்மை புரியும் காலம் வரும்
அதுவரை உன்னை நான் நேசிப்பது
பாறைக்குள் நீராக யாருக்கும் புலப்படாமல்
உன்மீது என் அன்பு உன்னை சூழ
உன்னிடம் இருக்கும் புரிந்தால் அது தான்
எம் அன்பு உன்வார்த்தை சத்தியம்
நான் காத்து இருப்பேன் நீ வரும்வரை
|
|
|
| கருணா குழு பற்றிய உண்மை----கண்காணிப்புக் குழு! |
|
Posted by: MUGATHTHAR - 09-11-2005, 01:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>கருணா குழு பற்றிய உண்மைகளை அம்பலமாக்கிய கண்காணிப்புக் குழு!</b></span>
இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் நோர்வே அனுசரணையாளர்களின் முயற்சி தோல்வியடைந்து விட்டது. போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் தொடர்பாக இவ்விருதரப்பையும் சந்திக்க வைப்பதற்கு நோர்வே பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்தச் சந்திப்புக்கு இரு தரப்பும் இணங்கிய போதிலும் சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து இரு தரப்புக்குமிடையே இணக்கமொன்று ஏற்படாததால் இரு தரப்பையும் நேரில் சந்திக்க வைக்கும் நோர்வேயின் முயற்சி தோல்வியடைந்தது.
ஆனாலும் தற்போதைய நிலையில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இரு தரப்பையும் இது தொடர்பாகச் சந்தித்துப் பேசுவதற்கு நோர்வே அரசு விஷேட தூதுவரொருவரை இலங்கைக்கு அனுப்புகிறது. வழமையாக இந்த விஷேட தூதுவராக எரிக் சொல்ஹெய்மே வருகின்ற போதும் இம்முறைஇ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் ரொண்ட் பியூறுஹொவ்டே இலங்கை வரவுள்ளார்.
வடக்கு கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகள் பெரும் மோதலாக மாறிவிடலாமென்ற அச்சம் எழுந்த நிலையிலேயே நிலைமையின் இறுக்கத்தை தணிப்பதற்கு நோர்வே இந்த விஷேட தூதுவரை அடுத்த மாதம் இங்கு அனுப்பும் அதேநேரம் போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நோர்வே அனுசரணையாளர்கள் நியூயோர்க்கிலும் சந்திக்கவுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் வடஇகிழக்கில் தற்போது எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் நோர்வே அனுசரணையாளர்கள் விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வடக்கு - கிழக்கில் பெரும் மோதலொன்று உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருவோரை இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்த நோர்வே முயலக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசியல் பணிகளில் ஈடுபட வந்த விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படவே தங்கள் அரசியல் பணிகளைக் கைவிட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறியுள்ளனர். தங்கள் மீதான தாக்குதலைக் குறைக்கவும் தங்கள் பாதுகாப்புக்காகவுமே புலிகளின் வெளியேற்றம் அமைந்துள்ளது
கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு கருணா குழுவே காரணமென அரசும் படைத்தரப்பும் கூறினாலும் இராணுவமே தமிழ் குழுக்களின் உதவியுடன் தங்கள் மீதான தாக்குதலை நடத்தி வருவதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவற்றுக்கான ஆதாரங்களையும் அவர்கள் கண்காணிப்புக் குழுவிற்கு தெரிவித்துமுள்ளனர். ஆனாலும் கண்காணிப்புக் குழு இதுவரை வெளிப்படையாக படையினர் மீது எதுவித குற்றஞ்சாட்டுகளையும் சுமத்தவில்லை.
எனினும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படைமுகாம்களுக்கு அருகில் இருந்தவாறே படையினரின் உதவியுடன் தமிழ் குழுக்கள் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் இதன் மூலம் புலிகளுக்கெதிராக படைத் தரப்பு நிழல் யுத்தமொன்றைத் தொடுத்து வருவதையும் கண்காணிப்புக் குழு அறிந்திருந்தது.
வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவின் முகாமிருப்பதையும் இந்த முகாமைச் சுற்றி இராணுவ முகாம்களிருப்பதையும் ஆங்கில வார இதழொன்று அம்பலப்படுத்திய போது படைத்தரப்பு இதனை முற்றாக மறுத்தது. ஆனாலும்இ கண்காணிப்புக் குழு இதனை அறிந்திருந்தது. எனினும் அவ்விடத்திற்கு அவர்கள் சென்றபோது அங்கு முகாம்கள் எதுவும் இருக்கவில்லை.
இந்த நிலையில் அண்மைக் காலங்களில் புலிகள் மீதான தாக்குதல்கள் கிழக்கில் அதிகரித்த அதேநேரம் வடக்கில் வவுனியா மன்னார் பகுதிகளிலும் நடைபெற்றன. கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு கருணா குழுவே காரணமெனக் கூறிய படைத்தரப்பு வடபகுதி தாக்குதல் குறித்து மௌனம் சாதித்தது. எனினும் சிலவேளைகளில் அதனையும் கருணா குழுவே செய்ததாகக் கூறவும் முற்பட்டது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் அரசியல் பணிகளை முடக்குவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கமாயிருந்ததுடன் கிழக்கில் புலிகள் மீது எல்லா வகையான தாக்குதல்களையும் நடத்தக் கூடிய ஆற்றலுடன் கருணா குழு இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.
கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதால் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்தே செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படவே படைமுகாம்களை அண்டியிருக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி இடைக்கிடை தாக்குதல் நடத்தப்பட்டது.
புலிகள் கூறுவது போல் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லை புலிகளின் பகுதிக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் நோக்கிலேயே புலிகளின் பகுதிக்குள்ளும் சில தாக்குதல்கள் நடைபெற்றன. எனினும் அவ்வாறான தாக்குதல்களை நடத்தியோர் எந்தப் படைமுகாமிலிருந்து வந்தனரென்று புலிகள் ஆதாரங்களுடன் கூறினர்.
இராணுவ முகாம்களுக்கு அருகிலிருந்து பலத்த பாதுகாப்புடன் செயற்பட்ட கருணா குழுவினரையே மிகச் சுலபமாக இலக்கு வைத்த புலிகளுக்கு தங்கள் பகுதிக்குள் கருணா குழு இருந்தால் விட்டுவைத்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
வடக்குஇ கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியென இரு பகுதிகளிருப்பதைப் போர் நிறுத்த உடன்பாடு உறுதிப்படுத்துகின்றது. ஆனால் கருணா குழுவுக்கென்று ஒரு பகுதியில்லை. எனினும்இ கண்காணிப்புக் குழுவினரைச் சந்திப்பதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டில் கருணா குழுவையும் பங்காளிகளாக்கும் முயற்சி நடைபெற்றது.
கடந்த வாரம் மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தைக்குச் சமீபமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவை கண்காணிப்புக் குழு சந்தித்தது.
அப்பகுதியில் கருணா குழுவின் நடமாட்டமிருப்பதை அறிந்து அங்கு சென்ற போதே தங்களை கருணா குழுவினர் என அடையாளம் காட்டிய சிலர் கண்காணிப்புக் குழுவினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் இந்தச் சந்திப்பு மட்டக்களப்பு - பொலநறுவை வீதிக்கு (ஏ11) அருகில் நடைபெற்றதாகவும் கண்காணிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுவொரு தற்செயலான சந்திப்பென கண்காணிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இது முன்னேற்பாட்டுடன் நடைபெற்ற சந்திப்பாகவே கருதப்படுகிறது. படைத் தரப்புக்கும் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டுக்கும் மறைமுகத் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின் மூலம் இராணுவம் புலிகள் என்பதைவிட கிழக்கில் மூன்றாந்தரப்பொன்றும் இருப்பதை அங்கீகரிக்க முடியுமென கருணா குழு கருதிய போதிலும் இந்தச் சந்திப்பின் மூலம் கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகிலிருந்து கருணா குழு இயங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிழக்கில் நடைபெறும் நிழல் யுத்தத்தில் படையினரின் நேரடிப் பங்களிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் வடக்கிலும் புலிகள் மீதான தாக்குதல் தொடர்கையில் தென்பகுதியில் குறிப்பாக கொழும்பிலும்இ அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் இவர்களுக்கும் தொடர்பிருப்பதும் தெரிய வந்துள்ளது.
கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்கா நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த மட்டக்களப்பு இளைஞர்கள் இடைநடுவில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகள் செய்யப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்கள் களுத்துறை நாகொடை பகுதியில் போடப்பட்டுக் கிடந்தன. கடத்தப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் இவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதேபோன்றே றாகமையில் பிளாஸ்ரிக் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்த திருகோணமலை இளைஞர்கள் இருவர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இறந்தவர்கள் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரென்றும் கருணா குழுவே இவர்களைக் கொன்றதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு கிழக்கிலும் தெற்கிலும் கருணா குழுவினர் சுதந்திரமாகச் செயற்படுமளவிற்கு படைத்தரப்பு அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கொலைகளையடுத்தே வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறியுள்ளனர்.
ஒருபுறம் கருணா குழுவென்ற பெயரில் புலிகள் இலக்கு வைக்கப்பட்ட மறுபுறம் படையினர் மீதான தாக்குதல் நடைபெறுகின்றன. தினமும் பல தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தங்கள் மீதான தாக்குதல்களைப் புலிகளே நடத்துவதாக படைத்தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. அதேநேரம் தங்கள் மீதான தாக்குதல்களைப் படைத்தரப்பே நடத்துவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் முழு அளவில் யுத்தமாக மாறிவிடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. ஒருபுறம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டுமென ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தி வந்தாலும் மறுபுறம் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை ஊக்குவித்து இன்று மோதல்கள் உருவாகுமளவிற்கு நிலைமையை சீரழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தங்கள் அரசியல் பணிகளை இடைநிறுத்தி புலிகள் தங்கள் பகுதிக்குள் சென்றமையானது நிலைமை மோசமடைந்து வருவதையே காண்பிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலானதுஇ பாரிய பதில் தாக்குதலுக்கு வழிவகுத்துவிடும். இதுபெரும் மோதலாக உருவெடுக்கும் வாய்ப்புகளுமுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கையில் நாட்டில் யுத்த சூழ்நிலையொன்று தோன்றியுள்ளது. சமாதானப் பேச்சுகளுக்காக போர் நிறுத்தம் செய்யப்பட்ட போதும் இந்தப் போர் நிறுத்தத்தையும் கருணா குழுவையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி புலிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த நிழல் யுத்தமானது இன்று நிஜப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
படையினர் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் பதிலடி கொடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கும் அவர்களும் கடும் பதிலடி கொடுப்பார்களென்பதில் ஐயமில்லையென்பதால் முழு அளவில் யுத்தம் வெடித்துவிடலாமென்ற அச்சம் வடக்கு - கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.
நோர்வேயின் தற்போதைய முயற்சிகள் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருமா அல்லது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறிவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நன்றி : தினக்குரல்
|
|
|
| தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல் |
|
Posted by: MUGATHTHAR - 09-11-2005, 01:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<b>தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல்களும் படுகொலைகளும்</b>
அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் வடக்குஇ கிழக்கு பிரதேசங்கள் அல்லாத பகுதிகளில் மர்மக் கொலைச் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அடையாளம் காணப்படாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
யார் யாரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற கேள்வி ஒரு புறமிருக்க எதற்காக இவ்வாறாக படுபாதக செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே முக்கியமாக நோக்க வேண்டியதாக இருக்கிறது.
கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள அனைவரும் தமிழ் இளைஞர்களாவர். இவர்களை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைஇ கால்கள்இ கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சடலங்களும் சன நடமாட்டங்கள் இல்லாத பகுதிகளில் வீசி எறியப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்த நிலையில்இ அதாவது கடந்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் வைத்து தியாகராஜா சதீஸ்குமார் வயது 22 என்ற இளைஞர் கடத்திச் செல்லப்பட்டு கஹதுடுவ தியாகம என்ற இடத்திலுள்ள கூட்டுத்தாபனமொன்றுக்கு சொந்தமான பற்றைகள் நிறைந்த காணியொன்றுக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்து போடப்பட்டிருந்த நிலைமையில் சடலமாக மீட்கப்பட்டார்.
வானொன்றில் இவரை கடத்திச் சென்றவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை செய்து கைகளை பின்புறமாக வைத்து கட்டி சுட்டுக் கொலை செய்திருந்தனர். இவர் பல
காலமாக கொழும்பிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனை செய்யும் கடையொன்றில் வேலை செய்து வந்த யாழ். இளைஞராவார்.
இரண்டாவது சம்பவம் அதே மாதம் 26 ஆம் திகதி இடம் பெற்றிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணியொருவரை கூட்டி வர சென்றிருந்த போது வான் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சந்திவேலியைச் சேர்ந்த கந்தையா சசிகுமார் வயது 20இ நாகமுத்து நல்லதம்பி வயது 25 ஆகிய இருவருமே கடத்திச் செல்லப்பட்டு இரும்பு சங்கிலிகளினால் கால்கள் கட்டப்பட்டு கைகள் பின்புறமாக வைத்து கட்டி கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் களுத்துறை தெபுவன கல்கடுவ என்று இடத்திலுள்ள இறப்பர் தோட்டமொன்றுக்குள் சடலமாக போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.
மேற்படி இரண்டு சம்பவங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக புலனாகியுள்ளதென பொலிஸார் கூறினர்.
மூன்றாவது சம்பவம் இரண்டாவது சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்களின் பின்னர் இடம்பெற்றது. கடந்த மாதம் 28 ஆம் திகதி இரவு 9 மணியளவில் கொஹுவலை
பர்னாண்டோ மாவத்தையில் வைத்து துப்பாக்கிதாரியொருவரினால் துரத்திச் செல்லப்பட்டு சிவரத்னம் சிவகிருபைராஜா என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இந்த இளைஞர் நீண்ட நாட்கள் கொழும்பில் வாழ்ந்து வந்தவர் என்றும் தொழில் செய்து வந்தவர் என்றும் இறுதி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நான்காவது சம்பவம் இம்மாதம் 2 ஆம் திகதி காலை 8 மணியளவில் வென்னப்புவவில் இடம்பெற்றது. ஓட்டுத் தொழிற்சாலையொன்றின் உரிமையாளரும் மட்டக்களப்பு கல்லாறுப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நாகேஸ்வரன் (வயது 35) என்பவர் இனம் தெரியாத துப்பாக்கி நபரொருவரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஐந்தாவது சம்பவம் ராகமையில் இம்மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்றது. ராகமை என்டேரமுல்லை என்ற இடத்திலிருக்கும் பிளாஸ்ரிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த திருகோணமலை கிண்ணியா மற்றும் ஆலங்கேணி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வான் ஒன்றில் வந்துள்ள ஆயுத பாணிகளினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர் ராகமை ஹீன்கெந்த என்ற பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வயல் வெளியொன்றில் சடலமாக மீட்கப்பட்டனர். கிருபைராஜா ரூபன்ராஜ் (வயது 23)இ முத்துவேல் ஜெகதீபன் (வயது 19) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கடத்தல்காரர்கள் இவர்களை அடித்துக் கத்தியால் வெட்டி கண்கள்இ கைகள் ஆகியவற்றைக் கட்டி சுட்டுக்கொலை செய்திருந்ததாக ராகமை பொலிஸார் கூறினர்.
இப்போதைய சூழ்நிலையில் கொலையாளிகள் யாரும் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை. இதனால் இவ்வாறான மர்மக் கொலைச் சம்பவங்கள் மேலும் தொடரக் கூடிய வாய்ப்புள்ளது.
வடக்குஇ கிழக்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் கொந்தளிப்பு நிலைமைகளுக்கு மத்தியிலேயே அப்பகுதி இளைஞர்கள் பிற இடங்களில் வைத்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நன்றி தினகுரல்
|
|
|
| கெரில்லாத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம் |
|
Posted by: வினித் - 09-11-2005, 07:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கெரில்லாத் தாக்குதல் மீண்டும் ஆரம்பம்: இராணுவ அதிகாரி தெரிவிப்பு
[ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2005, 05:25 ஈழம்] [கொழும்பிலிருந்து தி.இராஜேஸ்வரி]
யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறி விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளை கிழக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என கிழக்கு மாகாண சிரேஸ்ட இராணுவ அதிகாரியொவர் கொழும்பு ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிராளி மீது வெற்றிகரமாகத் தாக்குல் நடத்தும் முக்கிய யுத்த நடவடிக்கையான இதனை செயற்படுத்துவதானது மிக மோசமான யுத்த நிறுத்த மீறலாகும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பில் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இவ்வாறானதே. பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளுக்காக நடந்து சென்று கொண்டிருந்த அவர்கள் திடீரென வாகனத்தில் செல்ல தீர்மானித்ததாகவும், அதனால் ஏற்பட்ட சேதம் குறைவாக இருந்ததாகவும் அவர்கள் நடந்து சென்றிருந்தால் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கிழக்கில் பாதுகாப்புப் படையினர் மீது முன்னர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் தற்போது அவர்கள் மறைந்திருந்து தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இந்த நடவடிக்கைகளை எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதென்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
|
|
|
| அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்? |
|
Posted by: cannon - 09-11-2005, 07:10 AM - Forum: புலம்
- Replies (16)
|
 |
இலங்கை அரச புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் லண்டனில் தமிழ் மக்கள் அதிகமாக நடமாடும் பிரதேசங்களில் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியள்ளது. கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக உளவு வேலைகளில் ஈடுபட்டு சிறுகாலம் தென் இலங்கையில் கடமையாற்றிய புலனாய்வு உறுப்பினர் இருவருமே தற்போது லண்டனுக்கு வருகை தந்துள்ளனர். புளொட் மோகனுடன் இணைந்து செயற்பட்டு வந்த ஏறாவுரைச் சேர்ந்த அரபாத் என்ற புலனாய்வு பிரிவு உறுப்பினரே லண்டனில் குறைடன,; ரூட்டிங், ஈஸ்ட்காம், கரோ பகுதிகளில் தமிழ் இளைஞர்களுடன் நடமாடி வருகிறார். ஏறாவூர் படுகொலையுடன் தொடர்புடைய இவர் சதாமுசைன் கிராமத்தை தனது பூர்விகமாக கொண்டவர். ஏறாவுக்ர் படுகொலையின் போது பாஸ்கரன் என்ற பொறியலாளரை தனது சொந்த கையால் கொலை செய்து இலங்கை அரச புலனாய்வுப்பிரிவில் பதவி உயர்வு பெற்றவர். ஜேர்மனி நாட்டில் சிறுகாலம் தமிழ் மக்களை கண்காணித்து வந்த இவர் ஜேர்மனி நாட்டில் இருந்து தற்போது லண்டனுக்கு வருகைதந்துள்ளதாக இவர் தொடர்பாக தமிழ் இளைஞர்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டிகின்றனர்.
.........நிதர்சனத்திலிருந்து..........
|
|
|
| பாரதியாரின் நினைவு தினம் - புரட்டாதி 11 |
|
Posted by: preethi - 09-10-2005, 09:56 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (9)
|
 |
<img src='http://www.tamilnation.org/images/literature/bharathiportarit.jpg' border='0' alt='user posted image'>
<b>பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே
வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
பிச்சை ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே
நம்மை ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே </b>
[size=18]செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான தமிழ்க் கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி!
<img src='http://www.tamilnation.org/images/literature/barathiyar.jpg' border='0' alt='user posted image'>
<b>Bharathy and his wife Sellamaal</b>
<b>பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.
'தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. [b]தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.</b>
ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!
"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.
இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்.
'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்"
என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணங்கச் செய்தல் வேண்டும்.
அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.
'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"
தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.
ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! பிராமணியத்தி கொடுமை கொடி கட்டிப் பறந்த KஆஆளாMத்Hஊ. சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி!
அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர்.
பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை."
'காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க நீ எம்மான்! இவ் வையத்தில் தமிழைப் போன்று;
|
|
|
| இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில்... |
|
Posted by: Danklas - 09-10-2005, 04:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
தமிழீழத்தின் வடகிழக்கிலுள்ள இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த த.வி.புலிகள் எதைச்சாதித்தார்கள் என்பதை என்னைப்போல படிப்பறிவு இல்லாத ஜென்மங்களுக்கு புரியவில்லை... யாழ்களத்தில் இருக்கின்ற பல தோழர்கள் இலங்கை, தமிழீழம், பகுதிகளில் இருப்பதனாலும், புலத்திலுள்ள தமிழர்கள் தமீழீழத்திற்கு சென்று வந்துள்ளமையாலும் அங்கே நடப்பவற்றை அறிந்து இருப்பீர்கள், தெரிந்து இருப்பீர்கள்.. எங்க எங்களுக்கு (அதாவது 7 அறிவுள்ள மிருகராசிகளுக்கு) ஒருக்கா விளங்கப்படுத்துங்கப்பா... :? :?: :?:
|
|
|
| சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு |
|
Posted by: narathar - 09-10-2005, 03:59 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (10)
|
 |
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு
சிலம்பு நா. செல்வராசு
கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் போருக்குத் தலைவனைச் செலவுவிடுத்த தலைவியின் தோழியர் தலைவன் வெற்றியுடன் மீள வேண்டும் என்று வெற்றித் தெய்வத்தை வணங்கியுள்ளனர் எனவும் வணக்கத்தைப் பெறும் அவ்வெற்றித் தெய்வம் கொற்றவை எனவும் நச்சினார்க்கினியர் உரை விளக்கம் செய்துள்ளார். ஆயின் நெடுவல்வாடை மூலத்தில் (168) கொற்றவை என்ற பெயர் இடம் பெறவில்லை. அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலை/காடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை.
ஆயின், தொல்காப்பியம் ''கொற்றவை நிலை'' என்று புறத்திணைத் துறை ஒன்றைச் (தொல். பொருள். 62) சுட்டியுள்ளது. ''மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே'' என்பது அந்நூற்பா. வெட்சித் திணைக்கு இலக்கணம் கூறி அவற்றின் துறைகளை விரித்தோதிய தொல்காப்பியர் அத்துறைகளோடு கொற்றவை நிலையையும் ஒன்றாகத் தனியே கூறியுள்ளார்.
கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலை கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர் வணங்கும் கடவுளாக அவள் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். ஆறலை கள்வராகிய எயினர் பாலை நிலத்தில் வாழ்வோராகவும் வழிபறி செய்வோராகவும் கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்களில் பதிவுகள் உண்டு. எயினரும் வேட்டுவரும் ஒருவராக, ஓரினத்தவராகப் பாடற்பதிவுகள் புனைந்துள்ளன. எயினர் மறக்குணம் வாய்த்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையமாகும்.
''தமிழிலக்கியத்தில் கொற்றவை என்பதற்கு ''ஆறலை கள்வர்களுக்குக் கொற்றம் தருபவள், வெற்றி தருபவள் என்ற பொருள் இருப்பதைக் காணலாம். பழங்கால வேட்டைத் தெய்வமே பின்னர் இப்படி மாறி இருக்கிறது. உரோமானியரின் கன்னித் தேவதையான டயானாவும் வேட்டைத் தெய்வமே. இவளே ஆற்றுத் துறைகளில் காவல் செய்பவள், காட்டு விலங்குகளையும், வேட்டுவர்களையும் காப்பவளாகக் கருதப்பட்டாள். வில்லும் அம்பும் கையில் வைத்திருப்பாள். தலையில் பிறைநிலா அணிந்திருப்பாள். தமிழிலக்கியத்தில் வரும் கொற்றவையும் டயானாவும் சிலவற்றில் ஒற்றுமையுடன் திகழ்வதை உணரமுடியும்... இனக்குழு மக்களின் வேட்டைக்குக் கொற்றம் தருபவளான கொற்றவையே பின்னர் வேந்தர்க்கும் வீரர்க்கும் கொற்றம் தருபவளாகக் கொண்டாடப்பட்டாள்'' (பி.எல்.சாமி 1980:64)
கொற்றவை வழிபாடு ஒருவிதச் செவ்வியல் பண்போடு வேட்டுவ வரி எனும் பெயரில் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றதற்கு வலுவான சமூகவியல் காரணங்கள் உண்டு (சிலம்பு நா. செல்வராசு. 2004). கொற்றவை வைதீகமதக் கடவுளாக மேனிலையாக்கம் பெற்றதற்கும் அதற்கும் முன்பு உள்ள சங்க இலக்கியங்கள் அவ்வழிபாடு பற்றி மௌனம் காத்ததற்கும் தொடர்பு உண்டு. வேட்டுவவரி விவரிக்கும் கொற்றவை வழிபாடு திடீரெனத் தோன்றியது அன்று. புராதன வேட்டைச் சமூகத்துத் தாய்வழித் தலைமையில் நிகழ்த்தப்பட்டதாக அவ்வழிபாட்டை உணர்ந்திடச் சான்றுகள் உண்டு. இது பற்றிச் சிறிது விரிவாக ஆராய்ந்திடலாம்.
தொல்காப்பியர் நிலத்தெய்வங்களாகச் சோயோன், மாயோன், வேந்தன், வருணன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்கள் திணைக் கோட்பாட்டில் எந்த அளவிற்குப் பங்களிப்பைச் செய்துள்ளன என்பதை அறிய முடியவில்லை. சேயோன் எனப்படும் முருகன் ''வெறியாடல்'' வழி நேரடியாக அகப்பொருளோடு தொடர்புபடுத்தப் பெறுகிறான். இதுபோல் ஏனைய தெய்வங்கள் அகப்பொருளோடு கொண்ட நேரடித் தொடர்பு அறியுமாறில்லை. தாய்வழித் தலைமைச் சமூகம் நிலவிய காலக்கட்டங்களில் இந்த நிலத் தெய்வங்கள் எவையாக இருந்தன என்பதையும் அறியுமாறில்லை. ஆனால் தொல்காப்பியர் ''வெட்சி தானே குறிஞ்சியது புறனே'' (தொல். பொருள். 59) என்ற நூற்பாவழி மலை சார்ந்த நிலப்பகுதியின் அகம், குறிஞ்சியாகவும் புறம் வெட்சியாகவும் இருந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். வெட்சியின் கடவுள் ''கொற்றவை'' என்பது முன்னர்க் கூறப்பட்டது. இதற்கு உரையெழுதும் இளம்பூரணர் கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்'' என்று விவரிப்பர். நச்சினார்க்கினியர் ஒருபடி மேலே சென்று ''வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின்'' என்று விளக்கம் கூறுவர்.
ஆகத் தொல்காப்பியத்தின்படியும் அதன் உரைகள் அடிப்படையிலும் கொற்றவை குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக விளங்கியமையை அறிய முடிகிறது. ஆனால் பின்னாளைய இலக்கண நூல்களும், இலக்கியங்களும் குறிப்பாகப் பரணி போலும் சிற்றிலக்கியங்களும் கொற்றவை, பாலை நிலக் கடவுளாகவே விவரித்துள்ளமையை அறிய முடிகிறது. பாலை நிலம், குறிஞ்சியும் முல்லையும் திரிந்து தோன்றும் நிலப்பகுதி என்ற நில அடிப்படையில் இம்மாற்றம் ஏற்கத் தக்கதே. மலையும் காடும் வறட்சியால் திரிந்து பாலையாக மாறும்போது அந்நிலத்து விளங்கும் தெய்வமும் பாலைத் தெய்வமாகலாம் என்றாலும் அடிப்படையில் இங்கு ஓர் ஐயம் தோன்றுகின்றது. கோடைக்காலத்துப் பாலைச் சூழலில் கள்வர்களாக, வழிபறி செய்வோராக இருப்போர் அக்காலம் மாறிய பின்னர் அறவோராக மாறுவது ஏற்புடையதா? ஆண்டில் ஆறுதிங்கள் கொடியோராகவும், ஆறுதிங்கள் அறவோராகவும் விளங்கும் பண்பு புராணத் தன்மை வாய்ந்ததே தவிர உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
தொல்காப்பியர், ''கொற்றவை நிலையைக்'' குறிப்பிட்டுப் பின்னர் அடுத்துக்கூறும் நூற்பா ஒன்றும் அதன் உரையும் மிகக் கவனத்துள் கொள்ளத்தக்கவை.
வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட் டயர்ந்த காந்தளும்
எனத் தொடங்குவது அந்நூற்பா (தொல். பொருள். 63). இதற்கு விளக்கம் கூறும் இளம்பூரணர் ''இதனாலே காமவேட்கையின் ஆற்றலாகிய பெண்பாற் பக்கமாகிய வெறியும், அந்நிலத்துள்ளார் வென்றி வேண்டி ஆடும் வெறியும் கொள்ளப்படும்'' என விவரித்தனர். இவ்விளக்கவுரையைச் சோம சுந்தர பாரதியார், ''தலைவியின் மெலிவுகண்ட தாயார் உண்மை உணர வேண்டி நிகழ்த்தப் பெறும் வேலனது வெறியாட்டு அகத்தைச் சேர்ந்தது; அதனின் வேறாய வெட்சியில் வரும் வெறியாட்டு, வேலன் சூடும் பூவின் பெயரால் காந்தள் எனப்பட்டது. வெட்சித்துறை வெறியாட்டில் வேலன் காந்தள் சூடி ஆடுவேன், குறிஞ்சித் துறையில் வெறியாடும் வேலன் குறிஞ்சிப் பூச் சூடுதல் மரபு'' என மேலும் விவரித்துரைப்பார்.
வெறியாடும் வேலன் அழைக்கும் தெய்வம் முருகன் என்பதே சங்க மரபு. அவ்வாறு இருக்க வெற்றி வேண்டி வெறியாடும் வேலன் முருகனை அழைத்தே வெறியாடி இருக்க வேண்டும். அங்ஙனமாயின் வெற்றிவேண்டி நிகழ்த்தப்பட்ட கொற்றவை வழிபாடு என்னாயிற்று? வெறியாட்டில் கடவுள் மாற்றம் நிகழ்ந்ததா? அல்லது வெற்றி வேண்டியே முருகனும், கொற்றவையும் வழிபடப் பெற்றனரா? அல்லது சமூக மாற்றத்தால் கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றானா? எனும் வினாக்கள் விரிவான ஆய்விற்குரியவை.
சங்க இலக்கியங்களில் தாய்த் தெய்வத்திற்கு வெறியாடல் நிகழ்ந்தமைக்கான குறிப்புகள் உண்டு. அகநானூற்றுப் பாடல் (270) ஒன்று ''கடல் கெழு செல்வி'' எனும் தாய்த் தெய்வத்திற்கு ஆடுமகள் ஒருத்தி வெறியாட்டு நிகழ்த்தியமையை விவரிக்கிறது. இது போன்றதோர் வெறியாடலே கொற்றவைக்கும் நிகழ்ந்திருக்க வேண்டும். இதன் வளர் நிலையாகச் சாலினி நிகழ்த்திய வெறியாடலைச் சிலப்பதிகார வேட்டுவ வரியுள் காணமுடிகிறது. இக்கட்டுரையின் நிறைவாக எழும் வினாக்கள் இரண்டு,
1. கொற்றவை வெறியாடலைச் சங்க இலக்கியங்கள் ஏன் பதிவு செய்யவில்லை.
2. கொற்றவை இடத்தில் முருகன் இடம் பெற்றது எவ்வாறு?
இவ்வினாக்களுக்கான விடையைச் சங்க காலத்திற்கும் முந்தைய சமூக அமைப்பில்தான் தேடவேண்டி உள்ளது. தென்னிந்தியப் பகுதிகளில் நிகழ்ந்த தொல்லியல் ஆய்வுகள் முதலியன சங்க காலத்திற்கும் முந்திய ஓராயிரம் ஆண்டுகால நிலையைப் ''பெருங்கற்படைக் காலம்'' எனச் சுட்டியுள்ளன (கா. ராஜன். 2004). சங்க கால மக்களின் வாழ்க்கையை உயர்நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் பெருங்கற்படைக் காலத்தைச் சேர்ந்த மக்களே ஆவார். திராவிடப் பண்பாட்டின் முதன்மைக் கூறாகிய ''இறந்தவர்களைப் புதைத்து வழிபடுகின்ற வழக்கம்'' பின்னாளில் பெருங்கற்படைச் சின்னங்களாக மாறியுள்ளன. இப்பண்பாட்டைத் தோற்றுவித்த மக்களே பெருங்கற்படைக் கால மக்கள் ஆவர். நீத்தோர் நினைவாகப் பெரும் கற்களைக் கொண்டு உருவாக்கப்பெற்ற இச்சின்னங்களையே தொல்காப்பியர் ''நடுகல்'' என இலக்கண வரையறைபடுத்தியுள்ளார். இத்தகு சின்னங்கள் விந்திய மலைக்குத் தெற்கே இந்தியத் தீபகற்பப் பகுதியில் நிறைந்து காணப்படுவதாகக் கூறும் ராஜன் (2004) தமிழகத்தில் பல்வேறு பரல் உயர் பதுக்கைகளைக் கண்டறிந்துள்ளார்.
சுமார் பத்து முதல் பதினைந்து ''டன்'' எடை கொண்ட கற்களைக் கொண்டு இச்சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை அறியும்போது இவற்றை உருவாக்க ஒரு சமூகமே பின்னணியில் இயங்கி உள்ளதையும் அறிய முடிகின்றது. இத்தகு நினைவுச் சின்னங்களின் வளர்நிலையை நான்கு கட்டமாக ராஜன் (2004) விளக்குவர். முதலாவது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. நிலத்திற்கு அடியில் கற்களைக் கொண்டு இப்பதுக்கைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகின்றது. இரண்டாவது வளர் நிலையாகக் கற்பதுக்கைகளுடன் நெடுங்கற்கள் நடப்பட்ட நிலையை அறிய முடிகின்றது. மூன்றாவதாகக் கற்பதுக்கைகளைத் தவிர்த்து நெடுங்கற்கள் நடப்பட்டுள்ளன. நான்காம் நிலையாக நெடுங்கற்கள் அளவில் சிறுத்து நடுகற்களாக நடப்பட்டுள்ளன.
இவ்வாறான பதுக்கைகளையும் நெடுங்கற்களையும் ஆராய்ந்த ராஜன் (2004) இந்நினைவுச் சின்னங்களின் பெரும்பகுதி வெட்சிப் போரில் ஆநிரை கவர்ந்து / மீட்டு (தொறுமீட்டு) மாண்ட மறவர்க்கு நடப்பட்ட நிலையைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழியே விரிவாக ஆராய்ந்துள்ளார். இதன்வழிச் சங்ககாலத்திற்கும் முன்பு சுமார் ஆயிரம் ஆண்டுகள் காலப் பரப்பில் வாழ்ந்த பெருங்கற்படைப்பண்பாட்டு மக்களின் வாழ்வியலின் ஒரு பகுதி வெட்சித் திணையாக உருவெடுத்துள்ள நிலையை உணர முடிகின்றது. இப்பண்பாட்டுக் காலத்தில் கொற்றவை வழிபாடு வெகு சிறப்புடன் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை எளிதாக உய்த்துணர முடியும். இப்பண்பாட்டிற்குரியோராக எயினர், வேட்டுவர் முதலான இனமக்களைச் சுட்ட முடியும்.
தொல் தமிழகத்தில ஆநிரைச் சமூகம் வேளாண் சமூகத்தைத் தோற்றுவித்த நிலையில் வளமார்ந்த நெல் சமூகம் அமைக்கப்பெற்றது. ''மருதநில பொருளாதார அரசியல்'', எயினரையும் வேட்டுவரையும் ''விளிம்பு நிலை மக்களாக'' ஆக்கிவிட்டமையைச் சஙக இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் விவரிக்கின்றன. விளிம்பு நிலை மக்களாக மாறிய இவ்வினமக்கள் அரசு உருவாக்கத்தில் நாட்டின் மையத்திலிருந்து விடுபட்டு வழிபறி கொள்ளையர்களாக மாறியுள்ளனர். மாறவே இவ்வின மக்களின் பண்பாடு முதலியன விளிம்பு நிலைக்குத் தள்ளப் பெற்றிருக்க வேண்டும். எனவே தான் சங்க இலக்கியங்களில் ''கொற்றவை வழிபாடு'' பற்றிய செய்திகள் இடம் பெறாமல் போயின. பின்னாளில் ''ஒரே பேரரசு உருவாக்கம்'', ''ஒற்றைச் சமய உருவாக்கம்'' (சிலம்பு நா. செல்வராசு.2004) ஆகியவற்றிற்கான அரசியல் தொழிற்பட்டபோது எயினர், வேட்டுவர் இன மக்களைப் பேரரசு எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்தம் வாழ்நிலை, சமயம் சார்ந்த பண்பாட்டு நிலைகள் மேனிலையாக்கம் பெறத் தொடங்கின. எனவேதான் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியைச் செவ்வியலாகப் புனைய வேண்டியதாயிற்று.
நன்றி: ஆய்வுக் கோவை
_________________
அன்புடன் பரஞ்சோதி
http://www.muthamilmantram.com/index.php?n...iewtopic&t=1916
|
|
|
| புதியவன் வணக்கம் |
|
Posted by: vikadakavi - 09-10-2005, 02:41 PM - Forum: அறிமுகம்
- Replies (33)
|
 |
Ennaththilodum vannaththamilai..appaidje poriththu..
alakalakai anuppikondirukkum
en thesaththu.. uravukalai..
adada perumayaka..viyappaka..ananthamaka irukkirathu...
nanum thamilil eluththukalai pakirnthukolla asaipadukiren..nesakkaram tharunkal .. nanri
puthiyavanana..
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன். - மதன்
|
|
|
|