Yarl Forum
கருணா குழு பற்றிய உண்மை----கண்காணிப்புக் குழு! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கருணா குழு பற்றிய உண்மை----கண்காணிப்புக் குழு! (/showthread.php?tid=3363)



கருணா குழு பற்றிய உண்மை----கண்காணிப்புக் குழு! - MUGATHTHAR - 09-11-2005

<span style='font-size:25pt;line-height:100%'><b>கருணா குழு பற்றிய உண்மைகளை அம்பலமாக்கிய கண்காணிப்புக் குழு!</b></span>

இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் நோர்வே அனுசரணையாளர்களின் முயற்சி தோல்வியடைந்து விட்டது. போர் நிறுத்த உடன்பாட்டின் அமுலாக்கல் தொடர்பாக இவ்விருதரப்பையும் சந்திக்க வைப்பதற்கு நோர்வே பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. இந்தச் சந்திப்புக்கு இரு தரப்பும் இணங்கிய போதிலும் சந்திப்பு நடைபெறும் இடம் குறித்து இரு தரப்புக்குமிடையே இணக்கமொன்று ஏற்படாததால் இரு தரப்பையும் நேரில் சந்திக்க வைக்கும் நோர்வேயின் முயற்சி தோல்வியடைந்தது.

ஆனாலும் தற்போதைய நிலையில் போர் நிறுத்த உடன்பாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இரு தரப்பையும் இது தொடர்பாகச் சந்தித்துப் பேசுவதற்கு நோர்வே அரசு விஷேட தூதுவரொருவரை இலங்கைக்கு அனுப்புகிறது. வழமையாக இந்த விஷேட தூதுவராக எரிக் சொல்ஹெய்மே வருகின்ற போதும் இம்முறைஇ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் ரொண்ட் பியூறுஹொவ்டே இலங்கை வரவுள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகள் பெரும் மோதலாக மாறிவிடலாமென்ற அச்சம் எழுந்த நிலையிலேயே நிலைமையின் இறுக்கத்தை தணிப்பதற்கு நோர்வே இந்த விஷேட தூதுவரை அடுத்த மாதம் இங்கு அனுப்பும் அதேநேரம் போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் வலுவூட்டும் வகையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி நோர்வே அனுசரணையாளர்கள் நியூயோர்க்கிலும் சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் வடஇகிழக்கில் தற்போது எழுந்துள்ள நிலைமைகள் குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் நோர்வே அனுசரணையாளர்கள் விளக்கமளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வடக்கு - கிழக்கில் பெரும் மோதலொன்று உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருவோரை இந்தச் சந்தர்ப்பத்தில் சர்வதேசத்துக்கு அம்பலப்படுத்த நோர்வே முயலக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அரசியல் பணிகளில் ஈடுபட வந்த விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படவே தங்கள் அரசியல் பணிகளைக் கைவிட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறியுள்ளனர். தங்கள் மீதான தாக்குதலைக் குறைக்கவும் தங்கள் பாதுகாப்புக்காகவுமே புலிகளின் வெளியேற்றம் அமைந்துள்ளது
கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு கருணா குழுவே காரணமென அரசும் படைத்தரப்பும் கூறினாலும் இராணுவமே தமிழ் குழுக்களின் உதவியுடன் தங்கள் மீதான தாக்குதலை நடத்தி வருவதாக புலிகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றனர். இவற்றுக்கான ஆதாரங்களையும் அவர்கள் கண்காணிப்புக் குழுவிற்கு தெரிவித்துமுள்ளனர். ஆனாலும் கண்காணிப்புக் குழு இதுவரை வெளிப்படையாக படையினர் மீது எதுவித குற்றஞ்சாட்டுகளையும் சுமத்தவில்லை.

எனினும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படைமுகாம்களுக்கு அருகில் இருந்தவாறே படையினரின் உதவியுடன் தமிழ் குழுக்கள் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதையும் இதன் மூலம் புலிகளுக்கெதிராக படைத் தரப்பு நிழல் யுத்தமொன்றைத் தொடுத்து வருவதையும் கண்காணிப்புக் குழு அறிந்திருந்தது.

வெலிக்கந்தை தீவுச்சேனைப் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவின் முகாமிருப்பதையும் இந்த முகாமைச் சுற்றி இராணுவ முகாம்களிருப்பதையும் ஆங்கில வார இதழொன்று அம்பலப்படுத்திய போது படைத்தரப்பு இதனை முற்றாக மறுத்தது. ஆனாலும்இ கண்காணிப்புக் குழு இதனை அறிந்திருந்தது. எனினும் அவ்விடத்திற்கு அவர்கள் சென்றபோது அங்கு முகாம்கள் எதுவும் இருக்கவில்லை.

இந்த நிலையில் அண்மைக் காலங்களில் புலிகள் மீதான தாக்குதல்கள் கிழக்கில் அதிகரித்த அதேநேரம் வடக்கில் வவுனியா மன்னார் பகுதிகளிலும் நடைபெற்றன. கிழக்கில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கு கருணா குழுவே காரணமெனக் கூறிய படைத்தரப்பு வடபகுதி தாக்குதல் குறித்து மௌனம் சாதித்தது. எனினும் சிலவேளைகளில் அதனையும் கருணா குழுவே செய்ததாகக் கூறவும் முற்பட்டது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகளின் அரசியல் பணிகளை முடக்குவதே இந்தத் தாக்குதல்களின் நோக்கமாயிருந்ததுடன் கிழக்கில் புலிகள் மீது எல்லா வகையான தாக்குதல்களையும் நடத்தக் கூடிய ஆற்றலுடன் கருணா குழு இருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துவதும் இவர்களது நோக்கமாகும்.

கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே புலிகள் மீது தாக்குதலைத் தொடுப்பதால் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்தே செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படவே படைமுகாம்களை அண்டியிருக்கும் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி இடைக்கிடை தாக்குதல் நடத்தப்பட்டது.

புலிகள் கூறுவது போல் கருணா குழு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இல்லை புலிகளின் பகுதிக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் காட்டும் நோக்கிலேயே புலிகளின் பகுதிக்குள்ளும் சில தாக்குதல்கள் நடைபெற்றன. எனினும் அவ்வாறான தாக்குதல்களை நடத்தியோர் எந்தப் படைமுகாமிலிருந்து வந்தனரென்று புலிகள் ஆதாரங்களுடன் கூறினர்.

இராணுவ முகாம்களுக்கு அருகிலிருந்து பலத்த பாதுகாப்புடன் செயற்பட்ட கருணா குழுவினரையே மிகச் சுலபமாக இலக்கு வைத்த புலிகளுக்கு தங்கள் பகுதிக்குள் கருணா குழு இருந்தால் விட்டுவைத்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

வடக்குஇ கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியென இரு பகுதிகளிருப்பதைப் போர் நிறுத்த உடன்பாடு உறுதிப்படுத்துகின்றது. ஆனால் கருணா குழுவுக்கென்று ஒரு பகுதியில்லை. எனினும்இ கண்காணிப்புக் குழுவினரைச் சந்திப்பதன் மூலம் போர் நிறுத்த உடன்பாட்டில் கருணா குழுவையும் பங்காளிகளாக்கும் முயற்சி நடைபெற்றது.

கடந்த வாரம் மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தைக்குச் சமீபமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் கருணா குழுவை கண்காணிப்புக் குழு சந்தித்தது.

அப்பகுதியில் கருணா குழுவின் நடமாட்டமிருப்பதை அறிந்து அங்கு சென்ற போதே தங்களை கருணா குழுவினர் என அடையாளம் காட்டிய சிலர் கண்காணிப்புக் குழுவினருடன் சந்திப்பொன்றை நடத்தியதாகவும் இந்தச் சந்திப்பு மட்டக்களப்பு - பொலநறுவை வீதிக்கு (ஏ11) அருகில் நடைபெற்றதாகவும் கண்காணிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுவொரு தற்செயலான சந்திப்பென கண்காணிப்புக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இது முன்னேற்பாட்டுடன் நடைபெற்ற சந்திப்பாகவே கருதப்படுகிறது. படைத் தரப்புக்கும் இந்தச் சந்திப்புக்கான ஏற்பாட்டுக்கும் மறைமுகத் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் மூலம் இராணுவம் புலிகள் என்பதைவிட கிழக்கில் மூன்றாந்தரப்பொன்றும் இருப்பதை அங்கீகரிக்க முடியுமென கருணா குழு கருதிய போதிலும் இந்தச் சந்திப்பின் மூலம் கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகிலிருந்து கருணா குழு இயங்குவது அம்பலத்திற்கு வந்துள்ளதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ரப் ஹொக்லண்ட் இதனைத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிழக்கில் நடைபெறும் நிழல் யுத்தத்தில் படையினரின் நேரடிப் பங்களிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கிலும் புலிகள் மீதான தாக்குதல் தொடர்கையில் தென்பகுதியில் குறிப்பாக கொழும்பிலும்இ அதன் சுற்றுப் புறங்களிலும் தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் இவர்களுக்கும் தொடர்பிருப்பதும் தெரிய வந்துள்ளது.

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்களை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்கா நோக்கி வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த மட்டக்களப்பு இளைஞர்கள் இடைநடுவில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சித்திரவதைகள் செய்யப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டு சடலங்கள் களுத்துறை நாகொடை பகுதியில் போடப்பட்டுக் கிடந்தன. கடத்தப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன் இவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதேபோன்றே றாகமையில் பிளாஸ்ரிக் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்த திருகோணமலை இளைஞர்கள் இருவர் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். இறந்தவர்கள் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரென்றும் கருணா குழுவே இவர்களைக் கொன்றதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கிழக்கிலும் தெற்கிலும் கருணா குழுவினர் சுதந்திரமாகச் செயற்படுமளவிற்கு படைத்தரப்பு அவர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான கொலைகளையடுத்தே வடக்கு - கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து புலிகள் வெளியேறியுள்ளனர்.

ஒருபுறம் கருணா குழுவென்ற பெயரில் புலிகள் இலக்கு வைக்கப்பட்ட மறுபுறம் படையினர் மீதான தாக்குதல் நடைபெறுகின்றன. தினமும் பல தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தங்கள் மீதான தாக்குதல்களைப் புலிகளே நடத்துவதாக படைத்தரப்பு குற்றஞ்சாட்டுகிறது. அதேநேரம் தங்கள் மீதான தாக்குதல்களைப் படைத்தரப்பே நடத்துவதாக புலிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் முழு அளவில் யுத்தமாக மாறிவிடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது. ஒருபுறம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டுமென ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தி வந்தாலும் மறுபுறம் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தை ஊக்குவித்து இன்று மோதல்கள் உருவாகுமளவிற்கு நிலைமையை சீரழித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

தங்கள் அரசியல் பணிகளை இடைநிறுத்தி புலிகள் தங்கள் பகுதிக்குள் சென்றமையானது நிலைமை மோசமடைந்து வருவதையே காண்பிக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவி அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலானதுஇ பாரிய பதில் தாக்குதலுக்கு வழிவகுத்துவிடும். இதுபெரும் மோதலாக உருவெடுக்கும் வாய்ப்புகளுமுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கையில் நாட்டில் யுத்த சூழ்நிலையொன்று தோன்றியுள்ளது. சமாதானப் பேச்சுகளுக்காக போர் நிறுத்தம் செய்யப்பட்ட போதும் இந்தப் போர் நிறுத்தத்தையும் கருணா குழுவையும் வாய்ப்பாகப் பயன்படுத்தி புலிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த நிழல் யுத்தமானது இன்று நிஜப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

படையினர் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடும் பதிலடி கொடுக்குமாறு அவர்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் புலிகள் மீதான தாக்குதல்களுக்கும் அவர்களும் கடும் பதிலடி கொடுப்பார்களென்பதில் ஐயமில்லையென்பதால் முழு அளவில் யுத்தம் வெடித்துவிடலாமென்ற அச்சம் வடக்கு - கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

நோர்வேயின் தற்போதைய முயற்சிகள் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வருமா அல்லது நிலைமை கட்டுப்பாட்டையும் மீறிவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி : தினக்குரல்


- Anandasangaree - 09-11-2005

கட்டுரையின் ஒரு பகுதி மாயம்?


- MUGATHTHAR - 09-11-2005

கொஞ்சம் பிந்த முன்னம் சங்கரியார் உசாராயிட்டார்.......இதோ மீதி

<b>பலியான புலிகள்</b>

போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் இதுவரைஇ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது தீவிர ஆதரவாளர்களென 253 பேர் கொல்லப்பட்டும் 389 பேர் காயமடைந்துள்ளதாக நிதர்சனம் இணையத்தள புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இதைவிட 96 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் அரசியல் துறை அலுவலகங்கள் மீது 30 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 862 கொலை முயற்சிகளும் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இக் காலப்பகுதியில் புலிகள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 73 தாக்குதல்களிலேயே 253 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடற்பரப்பில் புலிகளின் இரு சரக்குக் கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

56 இடங்களில் புலிகளின் நிலைகள் மீதும் தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களின் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 59 போராளிகளும் 389 பொது மக்களும் காயமடைந்துள்ளனர்.

29 சம்பவங்களில் 96 போராளிகள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்இ பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள்இ வாகனங்கள்இ காரியாலயங்கள் சேதமாக்கப்பட்டதுடன் பணமாக 2 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்புஇ அம்பாறைஇ திருகோணமலைஇ வவுனியா மற்றும் மன்னாரில் புலிகளின் காரியாலயங்கள் 29 முறை தாக்குதல்களுக்கிலக்காகியுள்ளன.


- Anandasangaree - 09-11-2005

நான் முந்திரயம் விதை என்டு தெரியும்தானே தவறாஜா சொன்னது டக்ளவு மறந்து போச்சு