Yarl Forum
தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல் (/showthread.php?tid=3364)



தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல் - MUGATHTHAR - 09-11-2005

<b>தென்பகுதித் தமிழரை அதிர வைக்கும் மர்மக் கடத்தல்களும் படுகொலைகளும்</b>

அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் நாட்டில் வடக்குஇ கிழக்கு பிரதேசங்கள் அல்லாத பகுதிகளில் மர்மக் கொலைச் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. அடையாளம் காணப்படாதவர்களினால் கடத்திச் செல்லப்பட்ட நிலையிலேயே பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

யார் யாரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற கேள்வி ஒரு புறமிருக்க எதற்காக இவ்வாறாக படுபாதக செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதே முக்கியமாக நோக்க வேண்டியதாக இருக்கிறது.

கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள அனைவரும் தமிழ் இளைஞர்களாவர். இவர்களை மிகவும் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து கைஇ கால்கள்இ கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சடலங்களும் சன நடமாட்டங்கள் இல்லாத பகுதிகளில் வீசி எறியப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்கள் கடந்த நிலையில்இ அதாவது கடந்த மாதம் 17 ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதிப் பகுதியில் வைத்து தியாகராஜா சதீஸ்குமார் வயது 22 என்ற இளைஞர் கடத்திச் செல்லப்பட்டு கஹதுடுவ தியாகம என்ற இடத்திலுள்ள கூட்டுத்தாபனமொன்றுக்கு சொந்தமான பற்றைகள் நிறைந்த காணியொன்றுக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்து போடப்பட்டிருந்த நிலைமையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வானொன்றில் இவரை கடத்திச் சென்றவர்கள் பல்வேறு துன்புறுத்தல்களை செய்து கைகளை பின்புறமாக வைத்து கட்டி சுட்டுக் கொலை செய்திருந்தனர். இவர் பல
காலமாக கொழும்பிலுள்ள கட்டிடப் பொருள் விற்பனை செய்யும் கடையொன்றில் வேலை செய்து வந்த யாழ். இளைஞராவார்.

இரண்டாவது சம்பவம் அதே மாதம் 26 ஆம் திகதி இடம் பெற்றிருந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணியொருவரை கூட்டி வர சென்றிருந்த போது வான் ஒன்றில் வந்த கும்பல் ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு சந்திவேலியைச் சேர்ந்த கந்தையா சசிகுமார் வயது 20இ நாகமுத்து நல்லதம்பி வயது 25 ஆகிய இருவருமே கடத்திச் செல்லப்பட்டு இரும்பு சங்கிலிகளினால் கால்கள் கட்டப்பட்டு கைகள் பின்புறமாக வைத்து கட்டி கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் களுத்துறை தெபுவன கல்கடுவ என்று இடத்திலுள்ள இறப்பர் தோட்டமொன்றுக்குள் சடலமாக போடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் மீட்டனர்.

மேற்படி இரண்டு சம்பவங்களும் ஒரே குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக புலனாகியுள்ளதென பொலிஸார் கூறினர்.

மூன்றாவது சம்பவம் இரண்டாவது சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்களின் பின்னர் இடம்பெற்றது. கடந்த மாதம் 28 ஆம் திகதி இரவு 9 மணியளவில் கொஹுவலை
பர்னாண்டோ மாவத்தையில் வைத்து துப்பாக்கிதாரியொருவரினால் துரத்திச் செல்லப்பட்டு சிவரத்னம் சிவகிருபைராஜா என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த இந்த இளைஞர் நீண்ட நாட்கள் கொழும்பில் வாழ்ந்து வந்தவர் என்றும் தொழில் செய்து வந்தவர் என்றும் இறுதி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நான்காவது சம்பவம் இம்மாதம் 2 ஆம் திகதி காலை 8 மணியளவில் வென்னப்புவவில் இடம்பெற்றது. ஓட்டுத் தொழிற்சாலையொன்றின் உரிமையாளரும் மட்டக்களப்பு கல்லாறுப் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவருமான நாகேஸ்வரன் (வயது 35) என்பவர் இனம் தெரியாத துப்பாக்கி நபரொருவரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

ஐந்தாவது சம்பவம் ராகமையில் இம்மாதம் 5 ஆம் திகதி இடம்பெற்றது. ராகமை என்டேரமுல்லை என்ற இடத்திலிருக்கும் பிளாஸ்ரிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த திருகோணமலை கிண்ணியா மற்றும் ஆலங்கேணி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வான் ஒன்றில் வந்துள்ள ஆயுத பாணிகளினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர் ராகமை ஹீன்கெந்த என்ற பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வயல் வெளியொன்றில் சடலமாக மீட்கப்பட்டனர். கிருபைராஜா ரூபன்ராஜ் (வயது 23)இ முத்துவேல் ஜெகதீபன் (வயது 19) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டிருந்தனர்.

கடத்தல்காரர்கள் இவர்களை அடித்துக் கத்தியால் வெட்டி கண்கள்இ கைகள் ஆகியவற்றைக் கட்டி சுட்டுக்கொலை செய்திருந்ததாக ராகமை பொலிஸார் கூறினர்.

இப்போதைய சூழ்நிலையில் கொலையாளிகள் யாரும் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவில்லை. இதனால் இவ்வாறான மர்மக் கொலைச் சம்பவங்கள் மேலும் தொடரக் கூடிய வாய்ப்புள்ளது.

வடக்குஇ கிழக்குப் பகுதிகளில் தற்போது நிலவிவரும் கொந்தளிப்பு நிலைமைகளுக்கு மத்தியிலேயே அப்பகுதி இளைஞர்கள் பிற இடங்களில் வைத்து இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நன்றி தினகுரல்


- RaMa - 09-12-2005

ஐய்யோ கடவுளே?????


- அகிலன் - 09-12-2005

கடைசி மட்டும் யார் செய்கிறார்கள் எண்டு சொல்லவே இல்லையே. :?: . உசாரா இருக்கலாம் எண்டு பாத்தா.. :!: :!: ஒண்டுமா விளங்கேல.. :roll: :roll: