Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 257 online users.
» 0 Member(s) | 255 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,283
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஜோதிகாவை பார்த்து நடுங்கிய தாயார்
Posted by: SUNDHAL - 09-13-2005, 02:20 PM - Forum: சினிமா - Replies (17)

சந்திரமுகி படத்தை பார்த்தபிறகு சந்திரமுகிபோல் நடை உடை பாவனை செய்யத் தொடங்கிய அமெரிக்க பெண்ணுக்கு நடிகை nஜhதிகாவுடன் கவுன்சிலிங் நடந்தது. சந்திரமுகி படத்தை பார்த்துவிட்டு nஜhதிகா அருகில் படுக்க அவரது தாயார் 2 வாரம் பயந்து நடுங்கினார்.

ரஜpனிகாந்த் நடித்த …சந்திரமுகி† படம் வNலில் புதிய சாதனையை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு சினிமா படத்துக்கு இவ்வளவு வNல் (சுமார் 90 கோடி ரூபாய்) கிடைக்கும் என்பதை இந்த படத்திற்கு பிறகுதான் திரையுலகினரே அறிந்து ஆச்சர்யப்பட்டு நிற்கின்றனர். பெரிய நடிகர், நடிகைகளை வைத்து நல்ல கதையுடன் படத்தை தந்தால் அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு நிச்சயம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த தமிழ் பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர் சில நாட்களுக்கு முன்பு …சந்திரமுகி† படத்தை பார்த்தார். ஒரு முறை அல்ல,

இருமுறை அல்ல திரும்ப திரும்ப பலமுறை அப்படத்தை பார்த்தார். திடீரென்று அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. படத்தில் nஜhதிகா சந்திரமுகியாக மாறிய பிறகு கண்களை அகல விரித்து பார்ப்பது, சந்திரமுகிபோல் நடன அபிநயம் பிடிப்பதுபோல் பிரியாவும் பாவனைகள் செய்யத் தொடங்கினார். வீட்டில் உள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவரை பலவாறு குடும்பத்தினர் சகஜநிலைக்கு கொண்டு வர முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதுபற்றி டைரக்டர் பி.வாசுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் நேரடியாக நடிகை nஜhதிகாவுடன் அப்பெண்ணை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி பிரியாவும் நேரடியாக nஜhதிகாவை சந்தித்தார். அப்போது அவரை வரவேற்று உபசரித்த nஜhதிகா …படத்தில் நீங்கள் பார்த்தது நிஜம் இல்லை. அதெல்லாம் நடிப்புதான்† என்று விளக்கினார்.

அவரது நீண்ட விளக்கத்துக்கு பிறகு பிரியா சகஜ நிலைக்கு திரும்பினார். பிறகு அனைவரிடமும் விடைபெற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றhர். இந்த தகவல் உண்மையா என்று அறிய டைரக்டர் பி.வாசுவை தொடர்பு கொண்டபோது, …அத்தனையும் நு}ற்றுக்கு நு}று உண்மை. சந்திரமுகி படத்தை பார்த்த அமெரிக்க பெண் சந்திரமுகி போல் பாவனைகள் செய்யத் தொடங்கி விட்டார். பிறகுதான் nஜhதிகாவுடன் அவருக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்தோம். அதன் பிறகே அந்த பெண் பழைய நிலைக்கு வந்தார்† என்று பதில் அளித்த அவர் மேலும் தொடர்ந்தார்....

…இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ சமீபத்தில் nஜhதிகாவின் தாயாரை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கூறியதை கேட்டு சத்தம்போட்டு சிரித்து விட்டேன்† என்றhர். …அப்படியென்ன அவர் கூறினார்† என்றபோது பி.வாசு பேச்சை தொடர்ந்தார் …சந்திரமுகி படத்தில் nஜhதிகாவை சந்திரமுகி கோலத்தில் பார்த்த பிறகு nஜhதிகாவின் அருகில் படுக்கவே எனக்கு (nஜhதிகாவின் தாயார்) பயமாக இருந்தது. சுமார் 2 வாரம் நானே பயந்து பயந்துதான் அவர் அருகில் படுத்திருந்தேன். பிறகுதான் எனக்கு பயம் தௌpந்தது எனக் கூறினார் என்று பி.வாசு சொன்னபோது அதை கேட்டுக்கொண்டிருந்த நமக்கும் குபீர் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

Print this item

  மாணவன் மயூரனை சிறப்பித்தனர் புலிகள்
Posted by: வினித் - 09-13-2005, 12:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

மாணவன் மயூரனை சிறப்பித்தனர் விடுதலைப் புலிகள்!
[செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2005, 17:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்கா கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கை அளவில் சிறப்பிடம் பெற்ற யாழ். இந்துக் கல்லுரி மாணவன் மயூரனுக்கு விடுதலைப் புலிகள் பரிசில்கள் வழங்கிச் சிறப்பித்தனர்.


கிளிநொச்சியில் உள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்ற நிகழ்வில் மாணவன் மயூரனுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன், தமிழீழ அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன், தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் பாப்பா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

1986 ஆம் ஆண்டு தென்மராட்சியில் பிறந்த மயூரன் 1997 ஆம் ஆண்டு யாழ். இந்துக் கல்லுரியில் சேர்ந்தார்.




5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் 154 புள்ளிகளுடன் தேர்வடைந்த மயூரன் இந்துக் கல்லுரியில் சேர்ந்தார்.

அதன் பின்னர் வகுப்பில் ஒவ்வொரு முறையும் அவர் முதல் மாணவனாக சிறப்பிடம் பெற்றார்.

சர்வதேச கணிதப்போட்டிக்காக அவர் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

மயூரனின் தந்தை வீரகத்தி சிவப்பிரகாசம், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பட வரைஞராக பணிபுரிகிறார்.




வடக்கில் யுத்தம் நிகழ்ந்த காலத்தில் தங்களுக்கு மின்சார வசதி இருக்கவில்லை என்றும் தனது மகன் பெருமளவு நாட்கள் மண்ணெண்ணெய் விளக்கின் உதவியுடனேயே கல்வி கற்றதாகவும் மயூரனின் தந்தை சிவபிரகாசம் தெரிவித்தார்.

யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பின்னரே தங்களுக்கு மின்சார வசதி கிடைத்ததாக தெரிவித்துள்ள சிவப்பிரகாசம் தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் வசதி படைத்தவர்கள் அல்ல என்றும் கூறினார்.

மயூரனின் சகோதரர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் மூன்றாம் ஆண்டு படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

மயூரனை மேற்படிப்பிற்கென வெளிநாடு அனுப்பவுள்ளதாகவும் அவர் அங்கு கல்விகற்று நாடு திரும்பி தாய்நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்று விரும்புவதாகவும் சிவப்பிரகாசம் கூறினார்.

Print this item

  ¿ÄÁ¡ (nalama?)
Posted by: romio - 09-13-2005, 12:11 PM - Forum: நகைச்சுவை - Replies (14)

´ÕÅ÷} «ñ½ý, °Ã¢Ä ±øÄ¡Õõ ¿ÄÁ¡?.

Áü¦ÈÅ÷} ¾õÀ¢ Å¢¨ÆÂ¡ÎÈ£í¸Ç¡, ¿õÁ °Ã¢Ä ¦Á¡ò¾õ 15,654 §À÷, ±øÄ¡Õõ ±ôÀ¢Ê þÕì¸¡í¸ ±ñÎ ±ÉìÌ ±ôÀ¢Ê ¦¾Ã¢Ôõ

Print this item

  விசேட அதிரடிப்படை எச்சரிக்கை!
Posted by: வினித் - 09-13-2005, 12:04 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

விடுதலைப் புலிகளுக்கு விசேட அதிரடிப்படை எச்சரிக்கை!
[செவ்வாய்க்கிழமை, 13 செப்ரெம்பர் 2005, 16:56 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தொடர்ந்தால் எதிர்த்தாக்குதலில் ஈடுபட நேரிடும் என்றும் சிறிலங்கா விசேட அதிரடிப்படை எச்சரித்துள்ளது.


தாழங்குடாவில் கடந்த 8 ஆம் திகதி இனந்தெரியாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் குறிப்பிட்டிருக்கும் விசேட அதிரடிப்படையினர் அத்தாக்குதலில் 10 பேர் பலியானதாக கூறியுள்ளது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் வெளியிட்ட அறிக்கை:

அரசுக்கும் காவல்துறைக்கும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் உதவுகிற வகையிலான பணிகளையே விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகிறோம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசேட அதிரடிப்படை செயற்பட்டதில்லை. பக்கச்சார்புடன் அதிரடிப்படை இயங்கியதில்லை. யுத்த நிறுத்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு அதற்கமைய அதிரடிப்படை இயங்கி வருகிறது.

எங்களின் பொறுமையை எவரும் சோதிக்க நினைக்க வேண்டாம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Print this item

  உயிரின் விலை இங்கே ஊசலாடுகின்றது
Posted by: Paranee - 09-13-2005, 11:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (14)

நெல்லியடி சாமியன் அரசடியில் அமைந்துள்ள ஒர்; கராஜ்ஜில் இன்று அதிகாலை அங்கு பணிபுரியும் இளைஞன் இனந்தெரியாதோர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டு பின்பு து}க்கிலிடப்பட்டுள்ளார்.

இரு தினங்களிற்கு முன்தான் இங்கு ஒரு பாரிய கோஸ்டி மோதல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Print this item

  தீராத் தேடலில் தீயினில் பிறப்பதுவோ விடுதலை...??!
Posted by: kuruvikal - 09-13-2005, 09:58 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<img src='http://img357.imageshack.us/img357/1862/deltaswiftboeing3ns.jpg' border='0' alt='user posted image'>

<b>தீராத் தேடலில்
தீயில் பிறப்பதுவோ
விடுதலை...??!

தீண்டாக் கனிமமாய்
திட்டுக்களில் கிடந்த போதும்...
தீண்டித் தீட்டி
திடமாய் இலக்கு வைத்த போதும்...
தீயில் தவிழ்ந்து
உருப்பெற்ற போதும்..
தீராத வேட்கை
விடுதலைத் தாகம் எனக்குள்...
தீர்வுகள் தேடும்
அக்னிக் குஞ்சாய்
வானில் பறக்கிறேன்
அண்டம் திறந்து
தேடித் தருவேன்
இருளுக்குள் என்ன...??!
விடுதலை..!

மின்மினிக்குள்
மிணுங்குவதென்ன வைரமா..??!
வட்ட நிலவுக்குள்
வாழ்வதென்ன வாளைக் குமரியா..??!
செக்கச் சிவந்த செவ்வாய்க்குள்
சிவப்பு என்ன தோஷமா..??!
வளையங்கள் தாங்கும் சனிக்குள்
சூத்திரம் என்ன சாத்திரமா..??!
அருந்ததிக்குள்
வாழ்வதென்ன ஆகாய நங்கையா...??!
தேடப் போகிறேன்
எட்டாத் தீர்வுகள்..!

வானில் எப்படி சூரிய "தேவன்"
கையிலையின் வாசலில்
தட்டிக் கேட்கிறேன்...
குறை பிறை சூடிய மசூதிகள்
விட்ட குறை என்ன
இருளுக்குள் வாழும் அல்லாவிடம்
மண்டியிடாமல் கேட்கிறேன்...
தேவன் மகன் - மீண்டும்
இன்னும் வரவில்லை
சிலுவைக்குள் சிக்கியவன்
வானில் எங்கே
தேடிச் சொல்கிறேன்....

சீக்கிரமாய் சிந்தைகள்
விடுதலை வேண்டிட
தீர்வுகள் சுவைத்திட
சீறிப் பாய்கிறேன்
விஞ்ஞானப் பறவையின்
அக்னிக் குஞ்சாய்....

தீராத் தேடலில்
தீயில் பிறப்பதுவோ
விடுதலை...!</b>

<span style='font-size:17pt;line-height:100%'>விஞ்ஞானத்துறையில் (கணிதம் மற்றும் உயிரியல்) சாதனை படைத்திட்ட யாழ் இந்து உயர்தர மாணவர்களின் சாதனைக்கு.. எம் இனிய பரிசாக...</span>

Print this item

  ஜே.வி.பி.க்கு எதிராக புதிய அணி
Posted by: mayooran - 09-13-2005, 06:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வன்முறைகள் அற்ற விடுதலைப் பாதையில் ஜே.வி.பி. என்ற புதிய அமைப்பொன்று உருவாகியுள்ளது. ஜே.வி.பி. திசைமாறி, இனவாதம், மதவாதம் பேசி, தனது அடிப்படையான கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும். ஜே.வி.பி.யின் நிறுவுனர் றோகண விஜயவீரவின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுதலான பாதையில் செல்லும் இன்றைய போலி ஜே.வி.பி. அமைப்பினை இந்த புதிய அமைப்பு கண்டித்துள்ளது.
ஜே.வி.பியின் இப்போதைய கடும் போக்குகளையும் சூழ்ச்சிகளையும் நாட்ட மக்களுக்கு அம்பலப்படுத்துவதுடன். இந்த நாட்ட மக்களை வன்முறைகள் அற்ற முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கொள்கைகள் மற்றும் தற்போது ஜே.வி.பி. என்று கூறிக்கொண்டு பேரினவாதக் கடும் போக்குடன் செயற்படுவோர் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்தவுள்ளதாகவும் இந்த அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் பேராசிரியர் சுபா சந்திரா தெரிவித்துள்ளார்

Print this item

  சைவசமயத்தை மேன்மையுறச் செய்த ஆறுமுகநாவலர்
Posted by: preethi - 09-13-2005, 01:16 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (49)

<b>''வேத நான்கிலும் மெய்ப் பொருள் ஆவது நாதன் நமச்சிவாயவே"</b>

சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை. தமிழ் மொழியையும் சைவசமயத்தையும் அவற்றுக்கேயுரித்தான கலாசார பண்பாட்டு இயல்புகள் குன்றாத வகையில் வளர்த்த பெருமைக்குரிய மண் தமிழீழ மண் ஆகும்.

அந்நியராட்சிக்காலத்தில் சைவாலயங்கள் இடிக்கப்பட்டு சைவாலயம் அடிமைத்தளையினுள் சிக்கிக் கொண்டிருந்த காலத்தில், நல்லை நகர் ஆறுமுகநாவலர் அவர்கள் சைவசமயத்தையும் தமிழ் மொழியையும் வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றி மீண்டும் மேன்மையுறச் செய்தார்.அத்துடன், கடந்த கால யுத்த அனர்த்தங்களின்போது யாழ். குடாநாட்டுக்கிராமங்களில் வாழும் ஏழை மக்களின் வறுமை நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி அரைக்கிலோ அரிசிக்கும் கால்கிலோ பருப்புக்கும் எமது சைவசமயம்பேரம் பேசப்பட்ட நிலையும் யாழ் மண்ணில் நடைபெற்றிருக்கின்றது

"பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் இறக்கும்போது சைவசமயத்தவர்களாகவே இறப்போம் என்ற உறுதியுடன் செயற்பட்ட குடாநாட்டுக் கிராமங்களில் வாழும் ஏழைச் சைவமக்களை தமிழீழ மண்ணில் சைவசமய வரலாறு என்றும் மறந்துவிட முடியாது.ஆகவே, ஈழ மண்ணுடன் இரண்டறக்கலந்துவிட்ட சைவசமயத்தை ஒருபோதும் பிரிக்கமுடியாது என்பதை வரலாறு நன்கு உணர்த்தியுள்ளது. ஆனால், இவ்வாறு பல முனைப் போராட்டங்களின் உடாக எழுச்சியுற்ற சைவசமயத்தின்மேன்மையானது தற்காலத்தில் கனடாவில் பேணிக்காக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குரிய விடயமே என்பதை நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


ஈழ்த்தில் ஆறுமுகநாவலர் சைவ ஆகமங்கள் ஒப்பாத வழிபாட்டு முறைகளைக் கண்டித்தார். சிவனே முழுமுதற் கடவுள் என்றும் பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது என்பதும் அவரது வாதமாகும்.

கோயில்கள் ஆகம முறைப்படி அமைய வேண்டுமென்றும் அங்கு வேத பாராணமும் தேவார திருவாசகங்களும் படிக்கப்பட வேண்டும் என்றும் நாவலர் வற்புறுத்தினார்.சைவ சமயத்தில் நிலவிய சிறு தெய்வ வழிபாடு, வாண வேடிக்கை, பிறர் கவனத்தைக் கவர நகையலங்காரம், வர்ணப்பட்டாடை உடுத்தல், மாமிச போசனம், கள் குடித்தல் போன்ற ஆசாரக் குறைவுகளை ஆறுமுகநாவலர் கடுமையாகக் கண்டித்தார்.

<b>கடவுள் பெயரில் சேர்க்கப்பட்ட பணம் தனிப்பட்டவர்களால் கையாடப் படுவதை, பணம் பிடுங்கும் மோசடிகளை நாவலர் அம்பலப்படுத்தினார். கோயில் ஊழல்களை நாவலர் அம்பலப்படுத்திய விதம் 'கோயில் பூசாரியைத் தாக்கினேன் கோயில் கூடாது என்பதற்காகவல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாகவிடக் கூடாது என்பதற்காவே" என்ற கலைஞர் கருணாநிதியின் பராசக்தி வசனத்தை நினைவு படுத்துவதாக இருந்தது என ஒரு கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.</b>

<b>தூய சைவ சமயத்தை உயிரைப் பணயம் வைத்துக் காத்த எங்கள் முன்னோர்கள் கனடாவில் இன்றிருந்தால் ஆகமவிதிகளை முற்றாகப் புறந்தள்ளி, மூர்த்தி, தலம் தீர்த்தத்தைக் குழிதோண்டிப் புதைத்து சாராயக் குதங்கள், கிட்டங்கிகள், அங்காடிகள் வணிக நோக்கோடு, சீனர்களின் சமையலறை, பழைய மலகூடம் தனியார் கோயிலாக உருமாறி பணம் பறிப்பதைப் பார்த்து எந்தச் சுவரில் போய் முட்டுவது என்பது தெரியாமல் திண்டாடி இருப்பார்கள்!</b>

<b>யார் ஆறுமுக நாவலரைத் தூற்றினாலும், அவர் சைவத்துக்கும் தமிழுக்கும் செய்த தொண்டு அளப்பரியது, ஆறுமுகநாவலரின் கோபம் முதலில் சைவக் கோயில்களில் ஆகமவிதிப்படி பூசை செய்யத் தெரியாத பிராமணர்கள் மீது திரும்பியது. சைவசமயக் குருமாரிடம் சைவாகம அறிவும், நல்லொழுக்கமும், சிவதீட்சையும், சிவபக்தியும் அருகிக் காணப்பட்டமை சைவத்தின் அலங்கோலத்திற்கும் சீரழிவுக்கும் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.</b>


சைவக் குருமார் போலல்லாது கிறித்த மதத்தைப் பரப்ப வந்த பாதிரிமார்கள் வேதத்தை நன்கு கற்றவர்களாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும், தொண்டுள்ளம் படைத்தவர்களாகவும் இருப்பதை நாவலர் சுட்டிக் காட்டத் தவறவில்லை.
<b>நாவலர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்</b>

"சைவசமயிகளே! கிறித்து சமய குருமாராகிய பாதிரிமார்கள் தங்கள் பாஷைகளையும் அதற்கு மூல பாஷைகளையும் இலக்கண இலக்கிய கணித தருக்க பூகோள காகோளாதிகளையும் தங்கள் சமய நு}ல்களையும் படித்துத் தெர்ந்து பரீட்சையிற் சித்திபெற்ற நெடுந்து}ரத்தினின்றும் இங்குவந்து, நம்முடைய தேச பாஷைகளையும் நீதி நு}ல்களையும் சிறிதாயினும் கற்றுப் பிரசங்கிக்கிறார்களே!
<b>உங்கள் சமய குருமாருள்ளே சிலரொழிய, மற்றவர்கள் அந்தியேட்டிப் பட்டோலைதானும், இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டியென்னும் பெயர்தானும் பிழையற எழுத அறியார்களே! கெட்டி! கெட்டி!! </b>

சிவாகமத்தில் ஒரு சுலோகமாயினுந் தேவார திருவாசகங்களில் ஒரு பாட்டாயினுந் திருவள்ளுவரில் ஒரு குறளாயினும் அறியாத<b> மனிதப் பதர்களுஞ் சைவசமய குருமாராம்! </b>

கண்ட இடங்களிலும் காசுக்காக விநாயகக் கடவுள் விக்கிரமமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரமுஞ் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவ முதலியன செய்கின்ற அதிபாதகர்களுஞ் குருமாராம்! (இன்று கனடாவில் நடப்பதை ஆறுமுகநாவலர் காண நேர்ந்தால் தலையில் அடி அடி என்று அடித்துக் கொள்வார் என நிச்சயம் நம்பலாம்!)

சமண சமயக் கடவுளாகிய அருகன் மேலே பாடப்பட்ட திருநு}றென்பதற்கும் நிருநீறென்பதற்கும் பேதம் தெரியாமலும் திருநு}ற்றந்தாதியிலே விபூதியின் மகிமை சொல்லப்பட்டிருக்கிறது, அதில் ஒரு புத்தகம் வாங்கித் தரமாட்டீரா என்கின்ற <b>அசேதனதிலகர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>

'மாணிக்கவாசகர் பாடின திருவாசம் ஒன்று வாங்கினேன், அவர் பாடிய தேவாரம் ஒன்று வாங்கித் தரமாட்டீரா" என்கின்ற <b>மூடசனேந்திரர்களுஞ் சைவசமய குருமாராம்!</b>

'பரமசிவனுடைய ஐந்து முகங்களுள்ளே ஈசான முகம் ஊர்த்துவ முகமென்று சொல்லியிருக்கின்றதே! ஊர்த்துவ முகமாவது அண்ணாந்து கிடக்கின்ற முகமாமே! அப்படியானால் அபிசேகம் பண்ணும் பொழுது தீர்த்தம் மூக்கினுள்ளே போமே! போனால் சுவாமிக்குச் சலதோஷம் கொள்ளுமே! யாது பண்ணலாம்" என்கின்ற <b>அஞ்ஞான சிரோண்மணிகளுஞ் சைவமய குருமாராம்!"</b>

<b>நீங்கள் வருத்திச் சம்பாதித்துக் கொடுக்க அவர்கள் எளிதில் வாங்கி உண்டுடுத்துக்கொண்டு வெட்கம் சிறிதுமில்லாமல் மாப்பிள்ளை மாடுகள் போலத் திரிகின்றார்களே" (ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு - யாழ்ப்பாணச் சமயநிலை) </b>

கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு இதனை வேறு யாரோ படிக்கக் கேட்டால் ஈ.வே.ரா. பெரியார்தான் இப்படி இந்து குருமார்களைத் திட்டுகிறாரோ என்ற ஐயம் மனதில் எழும்!

இது சைவத்தையும், தமிழையும் ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து வளர்த்த ஆறுமுக நாவலர் கூறியது.<b> புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் இப்படியான ஆகமவிதிக்கு அமையாத இடங்களைக் கோயிலென்று போய், சைவாகமங்களை மதிக்காத போலிக்குருமாரை ஆதரித்துப் பாவத்தைத் தேடி சிவநிந்தனை செய்கின்றோம் சிந்தியுங்கள்.........</b>

நன்றி: தமிழ்நாதம்- கனடா

Print this item

  உயர்தரப் பரீட்சையில் மோசடிகள் இல்லை
Posted by: வினித் - 09-12-2005, 10:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வித மோசடிகளும் இல்லை பரீட்சை ஆணையாளர் அனுர எதிரிசிங்க
ஏப்ரல் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் எவ்வித மோசடிகளும் இடம் பெறாத நிலையில், அமைதியாக நடைபெற்றது என பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்தார். பரீட்சை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக திணைக்கள அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் விஜயம் செய்த போது புலிகள் இயக்கத்தினர் அதிகாரிகளை மரியாதையுடன் வரவேற்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான முழு ஒத்துழைப்பை வழங்கினர். இப்பகுதியில் ஒவ்வொரு பரீட்சை நிலையத்திலும் புலிகள் இயக்க உறுப்பினர் பொறுப்பாக இருந்ததோடு மோசடி நடவடிக்கை மற்றும் இடையூறு விளைவிக்க முயன்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் பரீட்சைகளை அமைதியாகவும் முறையாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய புலிகள் இயக்கத்தினருக்கு தான் இத்தருணத்தில் நன்றியையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Print this item

  புதிதாய் ஒரு முயற்சி செய்வோமா ?
Posted by: sakthy - 09-12-2005, 09:01 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (213)

இனிய உறவுகளுக்கு.........
இங்கு உள்ளவர்களுக்கு எத்தனை பேருக்கு மற்றவர்களின் பிறந்த நாள் எப்போது என்று தெரியுமா ? இங்கு ஒரு தனிப்பகுதி அமைத்து நாம் வாழ்த்து சொல்வோமா ஒவ்வொருவருக்கும்...........

Print this item