Yarl Forum
ஜே.வி.பி.க்கு எதிராக புதிய அணி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜே.வி.பி.க்கு எதிராக புதிய அணி (/showthread.php?tid=3338)



ஜே.வி.பி.க்கு எதிராக புதிய அணி - mayooran - 09-13-2005

வன்முறைகள் அற்ற விடுதலைப் பாதையில் ஜே.வி.பி. என்ற புதிய அமைப்பொன்று உருவாகியுள்ளது. ஜே.வி.பி. திசைமாறி, இனவாதம், மதவாதம் பேசி, தனது அடிப்படையான கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும். ஜே.வி.பி.யின் நிறுவுனர் றோகண விஜயவீரவின் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுதலான பாதையில் செல்லும் இன்றைய போலி ஜே.வி.பி. அமைப்பினை இந்த புதிய அமைப்பு கண்டித்துள்ளது.
ஜே.வி.பியின் இப்போதைய கடும் போக்குகளையும் சூழ்ச்சிகளையும் நாட்ட மக்களுக்கு அம்பலப்படுத்துவதுடன். இந்த நாட்ட மக்களை வன்முறைகள் அற்ற முன்னேற்ற பாதையில் இட்டுச்செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கொள்கைகள் மற்றும் தற்போது ஜே.வி.பி. என்று கூறிக்கொண்டு பேரினவாதக் கடும் போக்குடன் செயற்படுவோர் பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுறுத்தவுள்ளதாகவும் இந்த அமைப்பின் சர்வதேச அமைப்பாளர் பேராசிரியர் சுபா சந்திரா தெரிவித்துள்ளார்


- RaMa - 09-13-2005

ஆகா ஆகா......