Yarl Forum
ஒரு போயா தினத்து மரணம் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஒரு போயா தினத்து மரணம் ! (/showthread.php?tid=3358)

Pages: 1 2


ஒரு போயா தினத்து மரணம் ! - விது - 09-11-2005

[img<img src='http://img152.imageshack.us/img152/1769/p7ih.jpg' border='0' alt='user posted image'>]

சிறீலங்கா அரசால் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டாலும்இ சிறீலங்காவிற்கு வெளியால் பல விருதுகளை வெற்றி பெற்றுள்ளது ஒரு போயா தினத்து மரணம் என்ற சிங்களப்படம். போர் எப்படி சிங்கள மக்களின் வாழ்வை மாற்றியுள்ளது. போரினால் சிங்கள மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் சிங்கள அரசியல் நெருக்கடிகளுக்குள் துணிந்து பேசியுள்ளது. அதற்காக மேற்கண்ட பரிசுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது. மொத்தம் 75 நிமிடங்கள் கொண்ட இக்கலைப்படம் போரின் மறுபக்கத்தை வெளிக் கொண்டுவருவதில் கணிசமான பணியை ஆற்றியுள்ளதாகப் பேசப்படுகிறது. அரச ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களை சிங்கள மக்கள் நிராகரிப்பதற்குரிய எதிர்வினையாகவும் இது செயற்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



பிரசன்னா விதானகேயினால் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் இருந்து சிங்களப் படங்களில் நடித்துவரும் யோ.அபேவிக்கிரம முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய சிறந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.



படத்தின் கதைச்சுருக்கம்.



வன்னிகாமி என்ற முதியவர் கண் தெரியாத குருடர். இவருக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பெண் திருமணம் செய்துவிட்டார்இ இன்னொரு பெண் திருமணத்திற்காகக் காத்திருக்கிறாள். ஒரு மகன் சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றுகிறான். பரம ஏழைகளான இவர்களுக்கு உலகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும்இ குறையில் கிடக்கும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும். திருமணமான சகோதரியின் கணவனின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதற்கெல்லாம் ஒரேயொரு ஆதராமாக இருப்பது வடக்கே இராணுவத்தில் உள்ள அவர்களுடைய மகனின் வருமானம்தான்.



இந்த நிலையில் ஒருநாள் மகனின் சவம் வாகனத்தில் வீடு வருகிறது. போரில் அவன் இறந்துவிட்டான்இ பிரேதம் சிறீலங்கா தேசியக் கொடியைப் போர்த்தியபடி வருகிறது. அந்தக்கிராமமே திரண்டுவிடுகிறது. ஆனால் அரச அதிகாரிகள் சவப் பெட்டியைத் திறக்கவோ மகனின் முகத்தைக் காணவோ அனுமதிக்கவில்லை. சவம் சிதைந்திருக்கலாம் என்பதால் திறக்க அனுமதிக்கப்படவில்லைஇ அடக்கம் செய்யப்படுகிறது.



இறந்துபோன இராணுவ மகன் அனுப்பிய கடிதமொன்று மறு நாள் வருகிறது. அதில் தான் விரைவில் வருவதாகவும்இ குறையில் உள்ள வீட்டைக்கட்டி தங்கையின் திருமணத்தை முடிப்பதாகவும் குருடனான தந்தைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறான்.



மரணம் முடிந்த காரணத்தால் அப்பகுதி கிராமசேவகர் இறந்து போன இராணுவத்தினர்க்குக் கொடுக்கப்படும் ஒரு இலட்சம் ரூபா சன்மானத்திற்கான படிவத்தை நிரப்பித்தரும்படி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் தனது மகன் உயிரோடு இருப்பதாக தான் நம்புவதாகவும்இ அப்படிவத்தில் கையொப்பமிட முடியாது என்றும் தகப்பன் கூறுகிறார். அதிலிருந்து பிரச்சனைகள் வெடிக்க ஆரம்பிக்கின்றன. பிள்ளைகள் அந்தப் படிவத்தை நிரப்பி பணத்தைப் பெற்றால்தான் தாங்கள் சந்தோசமாக வாழ முடியும் என்று போராடுகிறார்கள். கிராமவேசகரும் அதிலிருந்து தனக்கு வரக்கூடிய வருமதிக்காக தொடர்ந்து வந்து நெருக்கடி கொடுக்கிறார். ஆனால் தகப்பன் கடைசிவரை கைநாட்டு இடுவதற்கு மறுக்கிறார். தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இருப்பதாக அவர் கூறுகிறார். மகன் அனுப்பிய கடிதம் அவர் இறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டது என்பதையும் அவர் ஏற்கவில்லை.



இதற்கிடையில் இராணுவத்தினர் தமக்குள் பணத்தை சேகரித்துவந்து வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் கொடுக்கிறது. அதை அவர்கள் தகப்பனுக்கு தெரியாமலே வாங்குகிறார்கள். எங்களுக்கு இருக்கும் பணக்கஸ்டம் இந்தக்கிழவனுக்கு எங்கே தெரியப்போகிறதுஇ எங்களுக்கு இதைவிட்டால் வருமானம்வர வேறு வழியில்லையே என்றும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். இராணுவத்தில் சேருவதைவிட நாங்கள் பிழைப்பதற்கு இங்கு வேறு என்ன வழியிருக்கிறது என்று மூத்த மகளின் கணவன் கூறுகிறான்.



இதையெல்லாம் கேள்விப்பட்ட கிழவன் கவலைப்படுகிறான். இளைய பிள்ளைகளான உங்களால் வேறு எதைச் சிந்திக்க முடியும் ? இறந்தவனின் முகத்தைக்கூடப் பார்க்காமல் பணத்திற்கு போராடுகிறீர்களே ? உங்கள் மீதும்இ உங்களது அறியாமை மீதும் எனக்கு வருத்தப்பட எதுவுமில்லை என்று தனக்குள் பேசிக்கொள்கிறான். மறுநாள் அதிகாலையே மண் வெட்டியுடன் தனது மகன் புதைக்கப்பட்ட இடத்திற்குப் போய் புதை குழியைத் தோண்ட ஆரம்பிக்கிறான். ஊர் திரண்டு வருகிறதுஇ கிழவனின் ஆவலைப் பூர்த்திசெய்ய எண்ணிய மற்றவர்களும் இணைந்து புதை குழியைத் தோண்டி சவப்பெட்டியை எடுக்கிறார்கள்.



இதுதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி. அந்தச் சவப்பெட்டியைத் திறந்தபோது அதற்க்குள் ஒரு வாழைக்குத்தியும்இ ஒரு கருங்கல்லுமே வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால் இறந்தவன் எங்கே ? ஏன் இப்படி ஏமாற்றுகிறார்கள் ? எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி. அதற்குப் பின்னர் யாருமே எதுவும் பேசவில்லை. கிழவன் அமைதியாகச் சென்று ஆற்றில் தண்ணீர் அள்ளுகிறான். மழை வந்து அவனை நீராட்டுகிறது. இந்த அளுக்கான எண்ணங்களை எல்லாம் அது கழுவிச் செல்கிறது. சிறுவர்கள் நதியில் குளிக்கிறார்கள் காலநதியே அவர்களையும் கழுவிச் செல்ல வேண்டும் என்ற குறியீட்டுடன் படம் முடிவடைகிறது.



படத்தில் வரும் முக்கிய குறியீடுகள்.



அந்தக் கிராமத்தில் இராணுவம் துப்பாக்கியுடன் மிதிவண்டியில் போகிறது. அதே மிதி வண்டியின் முன்புறத்தில் புத்தபிக்கு ஒருவர் அமர்ந்திருக்கிறார். ஆகவே இராணுவத்திற்கும் புத்தபிக்குவிற்கும் பேதம் எதுவும் இல்லை. இருவரும் ஒன்றே என்ற உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.



இறந்தவருக்கு நிதி கிடைக்கிறது என்பதை அறிந்ததும்இ புத்தபிக்குவின் தலைமையில் மற்றயவர்களும் சேர்ந்து இறந்தவனின் பெயரில் ஒரு பஸ்தரிப்பிடம் கட்டவிரும்புவதாக வருகிறார்கள். இறந்தவனின் பணத்தை குடும்பம் மட்டுமல்ல சமுதாயஇ மதஇ அரச தாபனங்கள் முதல் பேயோட்டும் மந்திரவாதிகள்வரை பயன்படுத்தத் துடிதுடிக்கிறார்கள்.



வெறும் சேற்று நீரையே வடிகட்டி குடித்து வரும் அக்கிராமத்தில் போர்பற்றி எதுவும் புரியப்பட்டதாக இல்லை. வறுமையே இராணுவத்திற்குள் இளைஞர்களைத் தள்ளுகிறது. உழைத்துஇ கொள்ளையடித்து ஏதோ ஒரு வகையில் வாழ வேண்டுமெனவே அவர்கள் இராணுவத்திற்கு வருவதாக கதை சுட்டிக்காட்டுகிறது.


இதில் மிக முக்கியமான குறியீடு சவப்பெட்டிக்குள் கிடப்பது வாழைக்குற்றி என்று தெரிந்த பின்னர் முழுச்சமுதாயமுமே கோபத்தில் எதையாவது பேசுவதுதான் திரைப்பட மரபு. ஆனால் யாருமே வாயினால் ஒரு வார்த்தைகூட அதைப்பற்றி விமர்சிக்கவில்லை. உறைந்த மௌனத்துடன் வாய் பேசாமல் மறுபடியும் சவப்பெட்டியைப் புதைக்கிறார்கள். ஒரு சமுதாயமே உண்மையை புதை குழிக்குள் போட்டு மூடிவிட்டு எதுவுமே பேசாமல் வாழ்ந்துவருவதை சொல்லப்படாத காட்சிகளாக விளக்குகிறது.



படப்பிடிப்பு



மிகச் சாதாரணமான படப்பிடிப்பும்இ குறைவான தொழில் நுட்பமுமே கையாளப்பட்டிருக்கிறது. கமேரா மிகவும் மெதுவாகவே படத்தை நகர்த்துகிறது. வர்த்தகத்திற்கு பயன்படாத பரிசுகளுக்கு உரிய கலைப்படம் என்னும் ரகத்திற்குட்பட்ட திரைப்படமாகவே அது உருவாக்கப்பட்டிருக்கிறது.



உரையாடல்



மிகவும் சுருக்கமான இரண்டொரு வசனங்களே பேசப்படுகின்றன. படத்தின் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்றய மொழி பேசுவோரும் அதை விளங்க முடிகிறது.



தொகுப்பு.



இதுபோல மகனைக் காணாது தேடும் ஒரு தந்தையின் கதையை விளக்கும் மலையாளப்படமொன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்து பல பரிசில்களைப் பெற்றிருக்கிறது. அதேபோல இந்தப்படத்தின் கதை நகர்வும் இருக்கிறது. எடிட்டிங் இந்தியாவில் இருந்து ஒருவரால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிறீலங்கா பாராளுமன்றத்தில் கேட்கும் போர்ச் சன்னதமும்இ ஊர்வலங்களும் ஏழைச் சிங்கள மக்களின் உண்மையான குரல்அல்ல அவர்களும் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே நிதர்சனம் என்பதை திரைப்படம் தெளிவாக விளக்குகிறது. பார்க்க வேண்டிய படம்.

கி.செ.துரை அலைகள் திரை விமர்சனக் குழு. 24.07.05
நனறி
http://www.alaikal.com/net/index.php?optio...id=23&Itemid=41


- narathar - 09-11-2005

இந்தப் படம் இங்கே எங்கே கிடைக்கும் பார்க்க,யாருக்காவது தெரியுமா,VCD இல் கிடைக்கும் போல் உள்ளது?


- அகிலன் - 09-11-2005

இந்தப்படம் என்ன சிங்களவரின் சுய விமர்சனமா?. அல்லது தங்களை நியாய வாதிகளாயும்
காட்டிக் கொள்கிறார்களா?


- narathar - 09-11-2005

இல்லை சிங்களவருள்ளும் நியாயவாதிகள் உண்டு,அவர்கள் குரல்கள் பேரின வாதத்திற்குள் அமிழ்ந்து விடுகின்றன.


- ¦ÀâÂôÒ - 09-11-2005

narathar Wrote:இல்லை சிங்களவருள்ளும் நியாயவாதிகள் உண்டு,அவர்கள் குரல்கள் பேரின வாதத்திற்குள் அமிழ்ந்து விடுகின்றன.
<span style='font-size:25pt;line-height:100%'>¯ñ¨Á ¿¡Ã¾÷.
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/03/vasudeva_nanayakkara_03_28541_100.jpg' border='0' alt='user posted image'>
<b>šͧ¾Å ¿¡½Â측Ã</b>
´Õ ¿øÄ ¯¾¡Ã½õ.
«ÐºÃ¢, ¯ó¾ôÀ¼õ Åó¾Ð 1997, 98 ¸¡Äò¾¢ÄÂø§Ä?</span>


- MUGATHTHAR - 09-12-2005

இந்த படம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது படம் வெளிவந்து 5 .6 வருடமிருக்கும் படத்தில் தமிழர்களை தாக்கும் தன்மை எதுவும் சித்திரிக்கப்படவில்லை சாதாரணமாக சிங்கள டெலிராமாக்களே இயற்கையான தன்மையை காட்டுவதாக எடுப்பார்கள் அந்த வகையில் இந்தப்படமும் அப்பிடிதான் எடுக்கப்பட்டிருக்கிறது வயதான தந்தையாக வரும் யோ அபேவிக்கிரம நல்லஒரு நடிகன்...........


- vasanthan - 09-12-2005

நானும் பார்த்திருக்கிறேன் மிகவும் உயிரோட்டமாகவிருந்ததது.


- Thala - 09-12-2005

narathar Wrote:இல்லை சிங்களவருள்ளும் நியாயவாதிகள் உண்டு,அவர்கள் குரல்கள் பேரின வாதத்திற்குள் அமிழ்ந்து விடுகின்றன.

அப்ப இந்தப் படம் எடுத்தவை சிங்களவனுக்கான மாற்றுக் கருத்தாளர் ஆக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 09-12-2005

இப்படி நடக்கிறது தானே? இப்படியானபடங்கள் வரணும் வரணும். நன்றி விது. எங்காவது சுடலாமா? தெரிந்தவர்கள் முடிந்தால் இணைப்புத்தாங்களேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 09-12-2005

Thala Wrote:அப்ப இந்தப் படம் எடுத்தவை சிங்களவனுக்கான மாற்றுக் கருத்தாளர் ஆக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தம்பி இதை மாற்றுக்கருத்துக்காரர் எண்டு சொல்ல ஏலாது எமது போராட்டம் அடக்குமுறைகளை நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கலாம் எல்லா சினாவும் எமக்கு எதிரானவர்கள் இல்லை

http://www.yarl.com/forum/viewtopic.php?t=5714


- Mathan - 09-12-2005

படம் வந்து பல வருமாகிவிட்டது ... ஆனால் இதுவரை பார்க்க கிடைக்கவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Thala - 09-12-2005

MUGATHTHAR Wrote:
Thala Wrote:அப்ப இந்தப் படம் எடுத்தவை சிங்களவனுக்கான மாற்றுக் கருத்தாளர் ஆக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
தம்பி இதை மாற்றுக்கருத்துக்காரர் எண்டு சொல்ல ஏலாது எமது போராட்டம் அடக்குமுறைகளை நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கலாம் எல்லா சினாவும் எமக்கு எதிரானவர்கள் இல்லை
http://www.yarl.com/forum/viewtopic.php?t=5714


விளங்குது அண்ணா!... எதோ ஒரு சாரார் படத்தயாரிப்பாளரை அப்படித்தான் சொல்லப்போகிறார்கள்.. என்பத்தற்காகத்தான் சொன்னனான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- AJeevan - 09-12-2005

விதுவின் தகவலுக்கு நன்றிகள்................

மேலதிக தகவல்கள்:-

http://www.wsws.org/articles/2000/feb2000/.../pras-f29.shtml

http://www.vithanage.com/


நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு! - விது - 09-12-2005

[img<img src='http://img358.imageshack.us/img358/7294/s37ah.jpg' border='0' alt='user posted image'>]



<span style='font-size:25pt;line-height:100%'>நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!</span>
சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நான்கு சர்வதேச விருதுகள் பெற்ற சிங்களத் திரைப்படம் நட்ட ஈடு!

திரைப்படம் பற்றிய விபரம்.

நட்ட ஈடு - சிங்களத் திரைப்படம்.
திரையில் ஓடும் நேரம் 112 நிமிடங்கள்.
தயாரிப்பு . சமன்மாலி கேவமான
இயக்கம் - பெனற் ரத்நாயக்கா
நடிகர்கள் - ஜோ அபேவிக்கிரம - சங்கீதா வீரரத்ன - ஜாக்சன் அன்ரனி - ரவீந்திரா ரந்தெனிய - மகேந்திரா பெரோ.
நான்கு சர்வதேச விருதுகள் - சரசவிய திரைப்பட விருது 2002 ல் சிறந்த இயக்கம், சிறந்த நடிகர், சிறந்த படப்பிடிப்பு, ஒப்பனை உள்ளிட்ட ஆறு விருதுகள் பெற்றது.


முகவுரை


சிங்களத் திரைப்படக் கலைஞர்களிடையே திரைமொழி எவ்வாறு தரிசனமாகியுள்ளது என்பதை அறிய முயலும் வழியில் இம்முறை பிராயச்சித்தம் என்ற சிங்களத் திரைப்படம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. புலம் பெயர் நாடுகளில் திரைப்பட முயற்சிகள் சிறப்பாக வளரும் இச்சூழலில் இத்தகைய திரைப்படங்களையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.


முன்னோட்டம்






இதை ஒரு முழுமையான திரைப்படம் என்று கூற முடியாது. சர்வதேச திரைப்பட விழாக்களில் எவ்வாறான திரைப்படங்களுக்கு பரிசு வழங்குவார்கள் என்பது குறித்து நன்கு அவதானிக்கப்பட்டு, அதற்கமைவாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதை ஆரம்பத்திலேயே நத்தை போல நகரும் கதை விளக்கிவிடுகிறது. ஆனாலும் அமைதியாகவும் ஆழமாகவும் எதையோ சொல்ல வருகிறார்கள் என்பதை படம் புரிய வைக்கிறது.


மூலக்கதை


எண்பது வயதான ஜோ அபேவிக்கிரமவின் மனைவி இறந்துவிடுகிறாள். அவளுடைய சடலத்தை அடக்கம் செய்த பின்பு இருவரும் யாருக்குமே சொல்லாமல் 50 வருடங்களாக மறைத்து வைத்த இரகசியத்தை போலீசாரிடம் சொல்லி தண்டனை கேட்கிறார் அந்த வயோதிபர்.

1948 இலங்கை சுதந்திரமடைந்த தினத்தன்று ஏழைச் சிங்களவனான தனது வாழ்வின் சுதந்திரம் எப்படி பறிக்கப்பட்டது என்பதை அவன் விளக்குகிறான். சுதந்திரம் கிடைத்த இரவில் அவனுடைய பிள்ளைக்கு கடும் சுகயீனம் ஏற்படுகிறது. ஆனால் சுதந்திர தின போதையில் மகிழ்ந்து வெள்ளைக்காரியோடு கட்டிலில் புரளும் சிறீங்கா வைத்தியன் குழந்தையைப் பார்க்க தனக்கு நேரமில்லை என்று மறுத்துவிடுகிறான். குழந்தை இறந்து போய்விடுகிறது.





யாருமே இல்லாத ஏழையான அவன் தன் மனைவியோடு சேர்ந்து கொட்டும் மழையில் குழந்தையின் சடத்தை அடக்கம் செய்கிறான். அப்போது அவனுக்கு விலை மதிக்க முடியாத வைரக்கல் ஒன்று நிலத்தில் இருந்து கிடைக்கிறது. அந்த வைரக்கல் அவனுடைய வாழ்வில் பல ஆபத்துக்களை உருவாக்குகிறது.

பண முதலைகளும், அதிகார வர்க்கமும் அவனிடமிருந்து அதை அடிமாட்டு விலைக்கு வாங்கிவிட முயல்கின்றன. முடியாத பட்சத்தில் அவனைக் கொன்றாவது அதைப் பறிக்க முயற்சி எடுக்கின்றன. இந்த நிலையில் அவன் மனைவியோடும் வைரக்கல்லோடும் உரைவிட்டே தப்பிச் செல்கிறான். கூலிக் கொலைஞர்கள் அவர்களை விரட்டுகிறார்கள்.

நதிகளில், மலைச்சாரல்களில் எல்லாம் அவர்கள் தப்பி ஓடுகிறார்கள். கடைசியில் அவர்களை பிடித்து சித்திரவதை செய்கிறார்கள். அவனை தலை கீழாகக் கட்டித் தொங்க விட்டுவிட்டு, மனைவியை மூவரும் மாறி மாறிக் கற்பழித்துவிட்டு ஆற்றில் குதித்து நீராடுகிறார்கள். அந்த நேரம் தப்பித்த குடியானவன் அந்த மூவரையும் கொன்று புதைக்கிறான். வைரக்கல்லை ஆற்றில் து}க்கி வீசுகிறான். கொலை கற்பழிப்பு ஆகிய இரு விடயங்களையும் யாருக்கும் சொல்வதில்லை என்ற சத்தியம் செய்து இருவரும் கிடைத்த வாழ்வை தொடர்கின்றனர். பின் மனைவி இறந்த பின்னர் அவன் உண்மையை போலீசில் கூறுகிறான். இதுதான் மூலக்கதை.

கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.

01. குழந்தையை இழந்ததற்கு கிடைத்த நட்டஈடு அவர்களுடைய மிகுதி வாழ்வு என்பது நேரடியான தகவல்.

கதை சொல்லவரும் நேரடிச் செய்தி.

01. இலங்கையில் பெறப்பட்ட சுதந்திரம் ஏழை மக்களை சென்றடையவில்லை. அது வெள்ளைக்காரரோடு படுத்தெழும்பிய ஒரு கூட்டத்தின் கைகளுக்கு போயுள்ளது.

02. சிங்களவராக இருந்தாலும் ஏழைகளுக்கும், உண்மை மிக்கவர்களுக்கும் அந்த நாட்டின் சட்ட, சமுதாய வாழ்வில் இடமில்லை. உண்மையாக உழைத்து சிறந்த வாழ்வு வாழமுடியாத அந்த நாட்டில் தப்பித்தவறி அதிர்ஸ்டம் கிடைத்தால் அதிகாரம் அந்த உடமைகளையும் காவு கொண்டுவிடும்.

இதர விடயங்கள்.

நடிப்பு - கதாநாயகி சங்கீதா வீரரத்ன, ஜோ அபேவிக்கிரம, ஜாக்சன் அன்ரனி ஆகியோர் கொடுத்த பாத்திரங்களை செம்மையாக செய்துள்ளனர். திரைப்படத்தில் வரும் எந்தவொரு பாத்திரமும் நடிப்பதற்குக் கடினமானதல்ல.


படப்பிடிப்பு - சாதாரண தொழில் நுட்பங்களுடன் நடிப்பையும், இயற்கைக் காட்சிகளையும் முன்னிலைப்படுத்தி எடுக்ககப்பட்டுள்ளது. கதைக்கு ஏற்ப தொழில் நுட்பமும் தரம் குன்றி இருக்க வேண்டும் என்பதற்கு அமைவாகவே தொழில் நுட்பம் உள்ளது. மேலும் பல வருட வளர்ச்சி பின்தங்கிய நிலையே காணப்படுகிறது.


படத்தின் செலவு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. வர்ண ஒழுங்கு, கதையை சுவைபடக் கூறும் நறுக்குமுறை இவைகளில் பல பின்னடைவுகள் தெரிகின்றன. சில வேளைகளில் தணிக்கை இருந்திருக்க இடமுண்டு.


சிங்கள வர்த்தக சினிமா ஏன் வளர்ச்சியடைய முடியாமல் போனது என்பதற்கும் இப்படத்தில் பதில் இருக்கிறது. சில குறைபாடுகள் இருந்தாலும் படம் தொடர்ந்து பார்க்கத் து}ண்டுகிறது.


ஒரு நாட்டை 50 வருடங்களாகக் கையில் வைத்திருக்கும் இனம் திரைத்துறையில் மேலும் எவ்வளவோ வளர்ச்சியடைந்திருக்க முடியும். ஏனோ அதை அங்குள்ளவர்களால் செய்ய முடியாமல் போயிருக்கிறது. இப்படியெல்லாம் பல கேள்விகளையும் இப்படம் எழுப்புகிறது.
அடுத்து சிங்கள வர்த்தக சினிமாக்களின் தரத்தையும் போக்கையும் அடையாளம் காண வண்சொட் திரைப்படம் பற்றிய பார்வை. இதுபோல பல மொழிகளில் பரிசுபெற்ற திரைப்படங்களின் பார்வைகள் தொடர்ந்து வரும்.


அலைகள் பல மொழி திரைப்படங்களின் பார்வைப்பிரிவு. 16.08.05
http://www.alaikal.com/net/index.php?optio...id=22&Itemid=41
[/img]


- AJeevan - 09-12-2005

<img src='http://www.wsws.org/articles/2000/feb2000/vann-f29.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'><b>புற ஹந்த களுவற (பௌர்ணமி இரவு)
Death on a Full Moon Day
</b>
இத் திரைப்படத்தின் ஆங்கிலத் தலைப்பை விட
சிங்களத் தலைப்பே இத் திரைப்படத்தின்
தன்மையை வெளிப்படுத்துகிறது.

பௌர்ணமி தினம் என்பது இரவை பகலாக்கும் ஒரு புனித நாளாகவே பௌத்தர்கள் கருதுகிறார்கள்.

இந்த ஒளிக்குள் புலப்படாத இருளையும்
புனிதம் (<i>புனிதப் போர்</i>) என்ற பேரால் நடை பெறும்
அநியாயத்தையும் (<i>அநீதி போர்</i>) பாமர மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது இத் திரைப்படம்.

இத் திரைப்படத்தின் சாயலை சிங்கள மொழி மூலமாக நுகர்வு செய்ய முடிந்தால்
ஆங்கிலத் தலைப்பை விட வெகுவாக உட் புகுந்து
அதன் தாக்கத்தை நுகரலாம்.

கண் தெரியாத வன்னிகாமி என்ற முதியவரது
வேலையற்ற மகன் , கிராமத்தில் விவசாயம் செய்வதற்கு கூட முடியாத வறுமை காரணமாக
ஒரு தொழிலாக இராணுவத்துக்கு செல்கிறான்.

அவனது குறிக்கோள்
ஒரு சிறு வீட்டைக் கட்டி
கண் தெரியாத தன் தந்தையை பராமரிக்க வேண்டும்.
தனது சகோதரிகளை கரை சேர்க்க வேண்டுமென்ற அவாவே தவிர
யுத்த களத்தில் அப்பாவிகளைக் கொல்வதல்ல.


ஆனால் அவன் யுத்த களத்துக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான்.
இவை தணிக்கைக்குள் அகப்பட்டு விட்டது..................

இருப்பினும் இடையிடையே மெதுவாக அதை சில வார்த்தைகளாலும் காட்சிகளாலும் இயக்குனர் பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.

இந்த யுத்தம் அநியாயமானது..................
மகன் கூட விரைவில் வந்து விடப் போவதாக வரும் மடல் கூட
யுத்தத்தை விட்டு வரப் போவதாகவே சொல்ல வருகிறது.
அதுவே தந்தையின் பழைய நினைவாக வருகிறது.

எனவேதான் தந்தையான வன்னிகாமி மகன் இறக்கவில்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்.
மகன் இறந்ததற்காக அரசினால் வழங்கப்படும் பணத்தை வாங்குவதற்கு மறுக்கும் ; அதை எதிர்க்கும் காட்சி கிராமத்து மனிதனின் உண்மையான உள்ளத்தையும். பாவப்பட்ட பணத்தை தொட நான் விரும்பவில்லை எனக் கொடுக்கும் சாட்டை அடிகளும் ஒவ்வொரு மனிதனையும் சிந்திக்க வைக்கிறது.

கொட்டும் மழையில் நனையும் வீட்டில் படும் அவஸ்தை.........
மகள்களின் எதிர்காலம்.................
கடன் தொல்லை...................
இடை நடுவே அரை குறையாக கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வீடு.............
அத்தனைக்கும் நடுவே பொய்யுரைத்து கொடுப்பனவு பணத்தை வாங்குமாறு வரும் நிர்ப்பந்தங்கள்..........................
இத்தனையும் வன்னிகாமி போன்ற அப்பாவிகளுக்கு தேவையில்லை....................

அன்பு-உண்மை-அகிம்சை-அமைதி இவைதான் தேவை.
இதைச் சொல்கிறது வன்னிகாமியின் பாத்திரம்.

தனது மகன் இறந்திருப்பான் என்பதை நம்ப முடியாத அப்புகாமி
அந்த தள்ளாடும் வயதில் போய் புதைகுழியைத் தோண்டும் போது
கூடும் மக்கள் இவருக்கு என்ன பைத்தியமா என வார்த்தைகளைக் கொட்டி அவமதிக்கும் போதும் ,
கிராம சேவகராகக் காட்டப்பட்டிருக்கும் (<i>அரசாக கருத்தில் கொள்ளவும்</i>) ஒருவர் அதைத் தடை செய்ய முயலும் போதும்
வன்னிகாமியின் பைத்தியகாரத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிலர் முனைகிறார்கள்.

ஆனால் புதைக்கப்பட்ட சவப் பெட்டிக்குள்
இருப்பது தனது மகனின் உடலல்ல...............
அது வாழை மரக் குத்தியும் கரும், கல்லொன்றும்தான்..................

இப்படித்தான் இந்த அரசு அனைவரையும் ஏய்க்கிறது.
நாம் அப்பாவிகள்.........................
இவர்கள் பொய் பேசுகிறார்கள்....................
இவர்களை நம்பாதீர்கள்...................
இவை அனைத்தும் பொய்..................
நாம் (நான்) குருடராய் இருக்கிறோம்............
கண் திறவுங்கள் என்று கூறிவிட்டு
ஆற்றங் கரைக்கு செல்லும் வன்னிகாமி
தண்ணீரை குடத்துள் நிரப்புகிறார்.

தூரத்தே தெரிந்தவர்கள் உதவட்டுமா என்று கேட்கிறார்கள்.
வேண்டாம் எனது கண்தான் குருடே தவிர
உடல் இன்னும் ஈடு கொடுக்கிறது எனப் பதில் கூறி விட்டு,
வானத்தை அன்னார்ந்து பார்க்கிறார்.
மழை வரப் போகிறது என்கிறார்.

நிற்பவர்கள் அப்படி ஒன்றும் மழை வராது என்கின்றனர்.
வன்னிகாமி மெதுவாக சிரிக்கிறார்.............
மழை வரும்..................(அமைதி ஒன்று ஒருநாள் வரும்)
மழை தூறலாக விழத் தொடங்குகிறது......................
அவர் நனைந்து கொண்டே வானத்தை அன்னாந்து பார்க்கிறார்.

குருடனாய் இருப்பவனுக்கு புரிவது கூட
விழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரியவில்லையே
என்ற கேள்வியை முன் வைத்து பௌர்ணமி இரவு சிந்தனைத் துளிகளைத் தூவுகிறது....................</span>
- AJeevan

<img src='http://img300.imageshack.us/img300/3448/ajeevanpurahandakaluwara5yq.jpg' border='0' alt='user posted image'>


- Mathan - 09-12-2005

தகவலுக்கு நன்றி விது மற்றும் அஜீவன் அண்ணா.

இவற்றை பார்க்க முயற்சிக்கின்றேன்.


- கீதா - 09-12-2005

மிக்கநன்றியுங்கோ விது மற்றும் அஐPவன் அண்ணாக்கும்


- vasisutha - 09-13-2005

எங்கடா இன்னும் ஜோ நன்றி சொல்லவில்லையே
என்று பார்த்தேன்.. வந்திட்டீங்க..:wink:
ஜோ வெறும் நன்றி மட்டும் சொல்லாமல் உங்கள்
கருத்தையும் வைக்கலாமே..


- MUGATHTHAR - 09-13-2005

vasisutha Wrote:எங்கடா இன்னும் ஜோ நன்றி சொல்லவில்லையே
என்று பார்த்தேன்.. வந்திட்டீங்க..:wink:
ஜோ வெறும் நன்றி மட்டும் சொல்லாமல் உங்கள்
கருத்தையும் வைக்கலாமே..
தம்பி ஜோ........நன்றி சொல்லியே 1000 கருத்தை தாண்டப்போறா ... பாராட்டாமல் என்ன இது...


- Rasikai - 09-13-2005

MUGATHTHAR Wrote:
vasisutha Wrote:எங்கடா இன்னும் ஜோ நன்றி சொல்லவில்லையே
என்று பார்த்தேன்.. வந்திட்டீங்க..:wink:
ஜோ வெறும் நன்றி மட்டும் சொல்லாமல் உங்கள்
கருத்தையும் வைக்கலாமே..
தம்பி ஜோ........நன்றி சொல்லியே 1000 கருத்தை தாண்டப்போறா ... பாராட்டாமல் என்ன இது...
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->