![]() |
|
இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு (/showthread.php?tid=3360) |
இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு - வினித் - 09-11-2005 இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2005, 16:04 ஈழம்] [ம.சேரமான்] இலங்கையர்களின் தற்கொலை முயற்சி அதிகரித்து வருவதாக சுமித்ரேயோ அமைப்பின் தலைவர் நளினி எல்லாவெல தெரிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்கான தற்கொலை முயற்சிகளாகவே இவை இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் தற்கொலை முயற்சிகளினால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் நளினி எல்லாவெல சுட்டிக்காட்டினார். சிறிலங்கா காவல்துறை புள்ளிவிவரங்களின் படி 1995 ஆம் ஆண்டு 8,519 இலங்கையர்கள் தற்கொலையால் இறந்துள்ளனர்; 2001 ஆம் ஆண்டு புள்ளிவிவரப் படி 4,9995 தான். 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் மிதமான விசத்தையே தற்கொலைக்கு பயன்படுத்துகின்றனர். தற்கொலை முயற்சில் ஈடுபடுவோரில் 40 விழுக்காட்டினர் மது பாவனையாளர்கள். 40 விழுக்காட்டினர் மனநிலை பாதிக்கபப்ட்டவர்கள். 20 விழுக்காட்டினர் வறுமை நிலையில் உள்ளவர்கள் என்றும் நளினி எல்லாவெல தெரிவித்தார். - RaMa - 09-12-2005 சுனாமியின் தாக்கம் தான் இப்போது தற்கொலைக்கான முக்கிய காரணம் - tamilini - 09-12-2005 தற்கொலை செய்யிறவங்க கோழைகள் என்றார்களோ இது உண்மை?? அவைக்கு தானே வீரம் இருக்கணும். |