![]() |
|
பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர் (/showthread.php?tid=3342) |
பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர் - வினித் - 09-12-2005 பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையக மாணவர் தொகை தருவதாக இல்லை இந்தியத் தூதுÅ¡ ¿¡ö கவலை (நமது நிருபர்) மலையக இந்திய வம்சாவளி மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மலையக மாணவர் தொகை திருப்தியளிப்பதாக இல்லை. இந்த வகையில் இம் மக்களின் கல்வி வீழ்ச்சியடைந்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கவலை தெரிவித்தார். அவுஸ்திரேலியா வாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அஸ்பியோ அமைப்பினால் மலையக பட்டதாரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் கடந்த வெள்ளியன்று கொழும்பு கிராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்: மலையக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு எமது நாடு சகல விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது. விசேடமாக மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் மூலம் வழங்கும் புலமை பரிசில் தொகையை அதிகரித்தல், ஆங்கில கல்வியை ஊக்குவித்தல், ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல் போன்ற விடயங்கள் முக்கியமானவையாகும். அதேபோல் அவுஸ்திரேலியா வாழ் இந்திய வம்சாவளியினர் தங்கள் ஊதியத்திலிருந்து இவ்வாறான புலமைப்பரிசிலை வழங்குவதை எமது சமூகத்தினர் முன்னுதாரணமாக கொள்ளலாம். இன்று பாரதத்திலிருந்து இங்கு தொழிலுக்காக வந்தவர்கள் இந் நாட்டின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி இந் நாட்டின் பிரஜைகளாக இருக்கின்றார்கள். ஆகவே கல்வியில் உயர்ச்சி அடைவதன் மூலமே சமூகத்தில் அந்தஸ்துள்ள பிரஜைகளாக உருவாக முடியும். இந் நல்நோக்கத்திற்காக கலாநிதி பிரதாப் இராமனுஜமும் அவருடன் இணைந்து செயல்படும் கல்விமான்கள், புத்திஜீவிகளும் மலையக மாணவர்களை உயர்கல்வியில் ஆர்வம் உள்ளவர்களாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை பாராட்டுகிறேன். இதற்காக இந்தியாவும், இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகிய நானும் எம்மால் இயன்ற உதவியை வழங்குவோம் என உறுதியளிக்கின்றேன் என்றார். இவ் வைபவத்தில் இராமகிருஷ்ண மிசன் சுவாமி ஆத்மகனானந்தஜீ, அஸ்பியோ அமைப்பின் இலங்கை பிரதிநிதி, சுற்றுலாத் துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரதாப் இராமõனுஜம் ஆகியோரும் சிறப்புரை ஆற்றினர். - kurukaalapoovan - 09-12-2005 மலையகத்தில RAW ஆள்சேர்ப்பு முயற்சிகள் பகிரங்கமாக ஆரம்பமாகி விட்டுது என்றீங்கள். - வினித் - 09-12-2005 kurukaalapoovan Wrote:மலையகத்தில RAW ஆள்சேர்ப்பு முயற்சிகள் பகிரங்கமாக ஆரம்பமாகி விட்டுது என்றீங்கள். ¿¡ý ¿¡ö ±ñÎ ¦º¡øÖÈý ¿£í¸û RAW ±ñÎ ¦º¡øÖÈ£í¸ø ¿¡ý ±ýÉò¨¾ ¦º¡øÄ
|