![]() |
|
சீனாவில் இன்று!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சீனாவில் இன்று!!! (/showthread.php?tid=3343) |
சீனாவில் இன்று!!! - Rasikai - 09-12-2005 <b>மகாத்மா காந்தியின் சிலை</b> மகாத்மா காந்தியின் சிலை இன்று சீனத் தலைநகர் பெய்சிங் நகரில் திறந்து வைக்கப்பட்டது. சீனப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் இன்று காலை சாவ்யாங் பூங்காவில் காந்தி சிலையைத் திறந்துவைத்து உரையாற்றினார். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்கில் இனவேற்றுமைக்கு எதிராக, சம உரிமை கோரி அறப்போராட்டம் நடத்தியபோது, அங்கு வசித்த சீனர் சமூகம் ஒத்துழைத்ததை அவர் நினைவு கூர்ந்தார். இருபெரும் நாடுகளான இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட்டால், மனிதகுலத்திற்கு பொது நன்மை கிடைக்கும் என்றும் அவர் சொன்னார். சாவ்யாங் பூங்காவில் உள்ள ஜின்தாய் அருங்காட்சியகத்தில் காந்தியடிகள் நிழற்படக் காட்சியையும் சிவராஜ் பாட்டில் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் பெய்ஜிங் நகரில் உள்ள இந்திய சமூகத்தினர் திரளாகக் கலந்து கொண்டனர். <b>ஹாங்காங் டிஸ்னிலேண்ட் துவங்கியது</b> ஹாங்காங் டிஸ்னிலேண்ட் இன்று துவங்கியது. சீன துணை அரசு தலைவர் ஸென் சிங்ஹோங், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் அதிகாரி டொனால்ட் சென் மற்றும் பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.துவக்க விழாவில் பேசிய ஸென் சிங்ஹோங், ஹாங்காங்கில் டிஸ்னிலேண்ட் திறக்கப்படுவது, ஹாங்காங்கின் மீது அன்னியச் செலாவணிக்கு உள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகின்றது. இது ஹாங்காங் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார். ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்து அரசும் அமெரிக்காவின் Walt Disney நிறுவனமும் சேர்ந்து ஹாங்காங் டிஸ்னிலேண்டை உருவாக்கியுள்ளன. இது உலகில் 5வது டிஸ்னிலேண்டாகும். எதிர்வரும் ஓராண்டில் இது 56 இலட்சம் பார்வையாளற்களை ஈர்க்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. நன்றி : CRI வானொலி - வினித் - 09-12-2005 ம்ம் ரெம்பா முக்கிÂõ ![]() http://www.yarl.com/forum/viewtopic.php?t=6316 - RaMa - 09-13-2005 தகவலுக்கு நன்றி ரசிகை - Thala - 09-13-2005 மாகாத்மா காந்தியா?? யாருங்கோ அவரு.??. அன்னை பூபதி. திலீபன் அண்ணாவின் உண்ணாவிரத்தை உதாசீனம் செய்து சாக விட்டுச்சினமே அவையளின் முன்னாள் தலைவர் தானே.. அவரா இவர்..???? - RaMa - 09-14-2005 தலா இவர்கள் செய்த பிழைக்கு ஏன் இறந்த ஒரு மாமனிதரை குற்றம் சாட்டுகிறீர்கள்? - kurukaalapoovan - 09-14-2005 நேருவும் காந்தியும் உறவினர்களா? இந்திராவின் தந்தையார் நேரு. அப்படியிருந்தும் ஏன் காந்தி குடும்பப் பெயராக இருக்கிறது? இந்திராவின் கணவர் கந்தி பரம்பரையா? தெரிஞ்சாக்கள் விளக்கமாய் எழுதுங்கோ. |