| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 354 online users. » 0 Member(s) | 352 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,655
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,190
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தமிழீழத்தில் தமிழில் வழிபாடு வேண்டும்.. |
|
Posted by: preethi - 09-16-2005, 11:02 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (7)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'><b>செந்தமிழர் தெய்வமறை நாவா செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழக வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர்
விரும்பு வீழி நகரே. (மூன்றாம் திருமுறை</b>)
<b>திருவீழிமிழலை பாடல்பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் திருக்கோயிலில் 'செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்\" எனப் பாடல் அருளியிருக்கிறார். செந்தமிழர் ஒரு போதும் வடமொழியில் அர்ச்சனை செய்திருக்க முடியாது. செந்தமிழர் செந்தமிழில்தான் அர்ச்சனை செய்திருப்பார்கள்.</b>
<img src='http://www.templenet.com/Tamilnadu/images/nalvar.jpg' border='0' alt='user posted image'>
இந்த அபிசேகத்தை மூவரும் மிகவும் வியந்து பாடியிருக்கிறார்கள். யார், யார் அபிசேகம் செய்தார்கள், யார் யார் போற்றி செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது கோவிலுக்குப் போனால் அர்ச்சனைத் தட்டைக் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே அடியார்கள் நிற்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் காலத்தில் செந்தமிழர் உள்ளே போய் பைந்தமிழில் அர்ச்சனை செய்தார்கள் என அவரே சொல்கிறார்.
நாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சியில் இன்புற்று மகிழ்ச்சி பெருகி நிற்கையில், அக்காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியை, சிவமும் சத்தியுமாகிய திருக்கோலத்தைப் பிறைக் கண்ணியானும் மலைமகளும் எனக் காண்கின்றார். காணுமிடத்து, அடியார் பலர், பூவும் நீரும் கொண்டு இருவரையும் போற்றிச் செல்வதும், அவர் பின்னே செல்கின்ற தமக்குக் கயிலைமலைச் சாரலில் பெண் யானைகளோடு ஆண் யானைகள உலா வருவது தெரிகிறது.
<b>'மாதர்ப் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும்
களிறு வருவன கண்டேன்\"</b>
அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள். அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளை எல்லாம் பார்த்தேன்.\"
<b>மாதர் - அழகு
கண்ணி - தலைமாலை
போது - மலர்
சுவடு - கால்
காதல் - அன்பு
மடப்பிடி - பெண்யானை</b>.
திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம்.
நாவுக்கரசர் தானும் அடியார்களும் புூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்\" எனப் பாடுகிறார். மேலும்,
<b>இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயிர்ப்பொன் நின்றினின் திருவடி யதனை அர்ச்சித் தார்</b>
அடியார்கள் மட்டுமல்ல வானவர், இயக்கர், கின்னரர், புலி, சிங்கம், நாகம் எல்லாம் இறைவனின் திருவடிகளை நேரடியாக அர்ச்சித்தனர் என்கிறார் சுந்தரர்.
பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே.
<b>சங்க காலத்தில் பார்ப்பனர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள். பல்லவர் சோழர் காலத்தில் ஆற்றங்கரை நிலங்கள் சூழ்ந்த குளிர்ந்த தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர். இந்த ஊர்கள் அகரம், அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம் பிரமதேயம் என அழைக்கப்பட்டன</b>.
ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
போகங்கள் எங்கே உணர்வெங்கே?
என்று வினவுகிறது திருக்களிற்றுப்படியார் (செய்யுள் -5)
ஆகமம் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்தச் சமயமும் தத்துவங்களை நேரடியாக எளிய முறையில் சொல்வதில்லை. சொல்வதும் எளிதன்று. எல்லாவற்றையும் மறைபொருளாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதாகவும் சொல்லுகின்றன.
ஆகமம் என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து 'வந்தது\" என்று பொருள். அதாவது 'சிவபெருமானிடமிருந்து வந்தன\" என்பதைக் குறிக்கின்றன. 'ஆகமம்\" இறைவனிடம் இருந்து வந்தது என்பதைக் குறிக்கும் 'ஆ\" என்பது அளவு, அறிவு, மரபு என்பதாகும். 'கம\" வருதல், போதல், இறைவனை உணர்தல் என்பதைக் குறிக்கும். அதாவது இறைவனிடம் இருந்து வந்த இது இறைவனை உணர்வதற்கு வழிகாட்டும்.
'ஆகமம்\" வெளியில் இருந்து, அதாவது வேறோர் இனத்தாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதையும் குறிக்கிறது. அந்த இனம் தமிழினமாகவும் இருக்கலாம். அல்லது ஆகமங்கள் முதலி;ல் தமிழில் எழுதப்பட்டு, பிறகு வடமொழியில் பெயர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் பொருள்படும்.
இன்னொரு விளக்கம். 'ஆ\" என்பது பாசம், 'க\" என்பது பசு, 'ம\" என்பது பதி. ஆகவே ஆகமம் என்பது பதி, பசு, பாசம் மூன்றையும் பற்றிக் கூறுவது. பிறிதொரு விளக்கம் 'ஆ\" என்பது சிவஞானம், 'க\" என்பது மோட்சம், 'ம\" என்பது மலத்தை ஒழித்தல்.
புலமை வாயந்த தமிழறிஞர்களான பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) மறைமலை அடிகள், கா.சு பிள்ளை ஆகியோர் ஆகமங்கள் தமிழிலேயே ஆதியில் இருந்தன என எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
திருமூலர் தாம் எழுதிய திருமந்திரத்தில் சிவபெருமான் 28 ஆகமங்களை வழங்கியதாகக் கூறுகிறார். அதில் ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் தமது நு}லை அமைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.
வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டன என்பதையும் அவற்றின் தனித்தன்மைகளையும் தமிழில் முதன்முதலில் எடுத்துக் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!
வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நு}ல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன. வேதத்தின் பிற பகுதிகளை மற்ற நு}ல்கள் எடுத்துக் கூறுகின்றன.
வேதங்களையும் ஆகமங்களையும் சிவபெருமான் அருளினார் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். ஆனால் வேதத்தை சிவபெருமான் அருளியிருக்க முடியாது. ஏனென்றால் சிவன் வேதகாலத்தில் கடவுளாக இருந்ததில்லை! அதாவது வேதத்தில் சிவனுக்கு இடம் இருக்கவில்லை. (மந்திரங்கள் என்றால் என்ன? பக்கம் 19)
வேதங்களையும் ஆகமங்களையும் இறைவன் அருளினான் என்று சொல்லப்படுவதற்கு காரணம் யாதெனில் இவை ஒருவரால் எழுதப்பெறாது பலரால் பல ஆண்டுகாலமாக எழுதாக் கிளவியாக ஓதப்பட்டு பின்னர் ஏட்டில் எழுதப்பட்டதேயாம்.
முன்னர் ஆகம விதிகள் காலத்துக்காலம் மாறிக் கொண்டு வந்ததை நீதிபதி மகராசன் குழுவினரது அறிக்கை வாயிலாக எடுத்துச் சொன்னோம்.
எனவே தமிழில் போற்றி (அர்ச்சனை) செய்வதற்கு ஆகமத்தில் விதியில்லை என்ற வாதம் எடுபடாது. அப்படித்தான் இருந்தாலும் ஆகமத்துக்கும் பன்னிரு திருமுறைக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டால் ஆகமத்தை விட்டு விட்டு பன்னிரு திருமுறையையே பிரமாணமாகக் கொள்ள வேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்லியிருக்கிறார்.
நாயன்மார்களில் ஞானசம்பந்தர் தீவிர தமிழ்ப் பற்றாளர் என்பதை முன்னர் கூறினோம். ஞானசம்பந்தர் மொத்தம் 4196 பாடல்களை (283 பதிகங்கள்) பாடியிருக்கிறார். அதில் 147 இடத்திலே தன்னை 'தமிழ்ஞானசம்பந்தன்\" 'முத்தமிழ் விரதன்\" என்று சொல்லிக்கொள்ளுகிறார்! இஃது அவர் தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
பக்தி இயக்க காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு நில்லாமல் அடிப்படை வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன.
'வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய, வைதீக மதத்தில் கோயில்களோ உருவ வழிபாடோ (விக்ரக ஆராதனையோ) இருக்கவில்லை\" என வடமொழி படித்து, ஜெர்மானிய மொழியிலே வேதங்களை மொழி பெயர்த்த மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் சொல்கிறார். உருவ வழிபாடு வணக்கம் வந்த பிற்பாடுதான் அவற்றுக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டன.
வேதப் பிராமணர்கள் யாகம் முதலியவை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும் சிலைகளையும் நிறுவ வேண்டிய அவசிய ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்னி வளர்க்கலாம் என்ற நியதி இருந்தது. அப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் தீக்கடவுள் ஒன்றுதான் தெய்வம். அதற்கு மேலே இந்திரன், வருணன் போன்ற தெய்வங்கள் எதுவாக இருந்தாலும் 'ஸ்வாஹா\" என்று சொல்லி அக்னியிலே போடுவதுதான் மரபாக இருந்தது.
இப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் அக்னி ஹோத்திரி தாதாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார்கள். அக்னி ஹோத்திரிகள் என்றால் அக்னி வளர்க்க உரிமை பெற்றவர்கள் என்று பொருள்.
மற்ற வருணத்தார் உயர்ந்த பொழுது அவர்களுக்கு வேறு வழிபடு தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணர்களின் ஆதிக்கம் குறையவும் அக்னி வணக்கம் தனது செல்வாக்கை இழந்தது. அதிலிருந்து உருவ வழிபாடு ஆரம்பமாயிற்று. உருவங்களுக்கு அபிசேகம் செய்தவர்கள்.
உருவ வழிபாட்டை வேதம் ஒத்துக் கொள்ளாததால் விக்கிரகம் வைப்பதும் அபிசேகம் செய்வதும் 'கல்லைக் கழுவுகிறவன் தொழில்\" என அக்னி ஹோத்திரிகளால் பழிக்கப்பட்டனர். </span>
<b>நன்றி: தமிழ்நாதம்- கனடா</b>
|
|
|
| அவளின் சோகங்கள் |
|
Posted by: கீதா - 09-16-2005, 08:05 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (46)
|
 |
அவளின் சோகங்கள்
-------------------------------------
அன்பானவனே உனக்கென்னாச்சு
காதலித்த மாதிரி நடித்தாயே
உன் மனதில் இடம் பிடித்த
என்னை ஒரு நிமிடத்தில்
தூக்கி எறிந்தாயே
உன் நினைவில் வாடும்
என்னை பலபெயர்கள்
மத்தியில் அவமானப்
பட விட்டாயே ----------
சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே------------
அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------
நீ என்னை வேண்டாம்
என்றாலும் எனக்குஉன்
நினைவுகள் போதும்
என்னவனே---------
:oops: :oops: :oops: :oops: :oops: :oops:
|
|
|
| மீண்டும் மிடுக்குடன் தடுக்கிடா நிலவன்! |
|
Posted by: Nilavan. - 09-16-2005, 05:08 PM - Forum: அறிமுகம்
- Replies (36)
|
 |
வணக்கம்!
உங்களோடு மீண்டும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
மீண்டும் மிடுக்குடன்
தடுக்கிடா நிலவன்
தொலையேன சொல்லியே
எறிந்தனர் சேற்றினை..
தொடரும் பயணத்தில்
சின்ன இடைவெளி-ஆனால்
சளைத்திட மாட்டன் இவன்
கருத்தை கருத்தால் வெல்ல
கங்கணம் கட்டினேன்...
மீண்டும் உங்களோடு நிலவன்
நிலவன்
|
|
|
| கதிர்காமரின் கொலை, சந்திரிகாவின் நிலை - பகுதி 9 |
|
Posted by: malaravan - 09-16-2005, 03:47 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கதிர்காமரின் கொலையைத்தொடர்ந்து இலங்கை அரசியலில் பெரும் மாற்றம் வருமென்று அனைவரும் எண்ணத் தலைப்பட்டுள்ள இவ்வேளையில் அவ்வாறான மாற்றங்கள் இலங்கையில் ஏற்படுமா? அவ்வாறு எண்ணம் எமக்கு ஏற்படுமிடத்து அது எவ்வாறான தாக்கத்தை இலங்கை அரசியலில் உருவாக்கும்?. இலங்கை அரசியலில் கதிர்காமர் பெயர் சொல்லும் அளவிற்கு மிளிர்ந்ததன் பிற்பாடு அதாவது பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கட்டிலில் ஏறியபின் 1994ம் ஆண்டு தேர்தலில் நின்று வெற்றி பெறாமலேயே தேசியப்பட்டியல் மூலம் தெரிவாகி அவரை வெளியுறவு மந்திரியாக்கியதன் மர்மம் என்ன? அவ்வாறான நிலையில் இக்கொலை யாரால், என்ன நோக்கத்திற்காக, எவ்வாறு உண்டானது என்பனவற்றை அலசும் நோக்கில் இக்கட்டுரை தொடரப்படுகின்றது.
சென்ற முறை கதிர்காமரை அனுரத்த ரத்வத்தையும், அவர்களின் விசுவாசிகளும் ஏன் கொலைசெய்திருக்கக்கூடாதெனப் பார்த்தோம். இப்போ ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷா ஏன் கதிர்காமரை கொன்றிருக்கூடாதென நோக்குவோம். பொதுஜன ஐக்கிய முன்னணிக் கட்சிக்குள் ஆழமாக துவேசங்களும், அதிகாரப்போட்டிகளும் அன்று தொடக்கம் இன்றுவரை மேலோங்கியிருப்பதை வாசகர்கள் சாதாரணமாகவே பார்க்கின்றீர்கள். அதன் உச்சக்கட்டமே கதிர்காமர் என்னும் சிங்கள விசுவாசியின் கொலை. மகிந்த ராஜபக்ஷா இப்போ பொதுஜன ஐக்கிய முன்னணித்தலைவராக வந்து ஜனாதிபதி வேட்பாளராகவும் பதவி வகிக்கின்றார். அவரின் பதவி இவ்வளவு காலமும் பிந்திப்போனதற்கு கதிர்காமரும் ஒருவிதத்தில் காரணமாகின்றார். ஏனெனில் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினராகவிருந்து சந்திரிகாவிற்கு விசுவாசமாகவிருந்து இந்த இடத்தைப்பிடித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷா கதிர்காமர் இல்லாதிருந்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்னரே சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் இருந்திருப்பார். அத்துடன் அவர் ஓர் சிங்கள வெறியர் எனக்கூடச் சொல்லலாம். ஜே.வி.பியினரை நம்பிக்கெட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு இப்போ மீண்டும் அவர்களின் காலடியில் போய் விழுந்ததன் காரணமும் மகிந்த ஓர் சிங்கள வெறியர் என்பதைக்கட்டியம் கூறுகின்றதல்லவா? பதவிவெறிபிடித்து தான் எப்படியும் ஆட்சியைப்பிடித்தே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயத்தின் பேரில் யாருடன் கூட்டுச்சேர்வது என்பது தெரியாது, ஜே.வி.பியினருக்கு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக எண்ணி அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். ஆனால் ஜே.வி.பியினர் பொதுஜன ஐக்கியமுன்னணியினரின் தாய் அமைப்பான சுதந்திரக்கட்சி ஆட்சியில் தமது கட்சியின் பல உறுப்பினர்களை பலிகொடுத்ததையும் மறந்திருக்கமாட்டார்கள். இருப்பினும் தமக்கும் ஏதாவதோர்வகையில் அரசில், அரசியலில் இடம் பிடிப்பதற்காக இவர்களுடன் சேர்ந்திருக்கின்றார்கள். கூடவே பன்னிரெண்டு கோரிக்கைகளை வைத்து அவையாவையும் மகிந்த ஏற்றுக்கொண்டு அவர்களுடன் சேர்ந்திருக்கின்றார். கொசுறுத்தகவலாக இவர்களின் கூட்டை சந்திரிகாவே ஏற்காமல் மகிந்தாவை சாறுசாறென சாறியிருப்பதாகவும், அவரின் வேட்பாளர் பதவியை பறிப்பதாகவும், கட்சித்தலைமையில் இருந்து விலத்தப்போவதாகவும் பயமுறுத்துகின்றாராம். அவை உண்மையாகவிருப்பின் இனிவரும் காலங்களில் பண்டாரநாயக்காவின் குடும்ப அரசியல் கேள்விக்குறியாகும் என்பது நு}று வீதம் உண்மையாகிவிடும். பதவிமோகம் கொண்டு அலையும் சந்திரிகா அப்படிச்செய்ய வாய்ப்பில்லை. அதற்கான காரணம் பற்றி பின்னர் விபரிக்கின்றேன். அதற்கு முன்னர் மகிந்தாவின் பேரில் உள்ள சந்தேகத்தை பார்ப்போம். மகிந்த ராஜபக்ஷா பிரதமமந்திரியாவதற்கு முன்னர் கதிர்காமரின் பெயர் அப்பதவிக்கு முன்மொழியப்பட்டு தமிழர் என்னும் ஒரேயொரு காரணத்திற்காக அப்பதவி மகிந்தாவிற்கு போய்ச்சேர்ந்தது. நீண்டகால கட்சியுறுப்பினராகவிருந்தும் தனக்கு அப்பதவி கிடைக்காது கதிர்காமருக்கு அப்பதவி போகவிருந்ததை எண்ணியும், அத்துடன் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையில் கதிர்காமரின் பெயர் கட்சிக்குள் உயர்ந்ததையும் ஜீரணிக்கமுடியவில்லை மகிந்தாவால். கூடவே சந்திரிகா எண்ணாதவகையில் புலிகளுக்கு எதிராக செயற்படுவதாக எண்ணி, தமிழருக்கு எதிராக திறம்பட உழைத்தமையால் சிங்களவரும் கட்சிக்குள் கதிரை உயர்த்தியதன் வெளிப்பாடாக சந்திரிக்காவிற்கு அடுத்த நிலை கதிருக்கு போய்விடும் என்கின்ற நிலையில் அக்கொலையை மகிந்த செய்யவாய்பிருக்கின்றது. ஜே.வி.பியினர் அமைச்சரவையில் இருந்து விலகியவுடன் ஆட்டம் காணத்;தொடங்கிய அவர்கள் ஆட்சியை கதிர்காமரின் இராஜதந்திர நகர்வுகளால் சற்றேனும் நின்று நிலைக்கக்கூடியவகையில் நிறுத்தியமையாலும், இதன் காரணமாக கதிர் கட்சிக்குள் உயர்ததன் வெளிப்பாட்டாலும் மகிந்தவினால் அக்கொலை நடக்க வாய்பாகின்றது. கதிர் இன்னும் உயிருடன் இருந்தால் தனது பிரதம மந்திரிபதவி தன்வசம் நின்று நிலைக்காது என்னும் வகையில் கதிரைக்கொல்லவேண்டிய தேவை மகிந்த ராஜபக்ஷாவிற்கு ஏற்பட்டிருக்கும். தான் பிரதமராகவிருக்கையில் ஜே.வி.பியினர் பொதுக்கட்டமைப்பிற்கு முட்டுக்கட்டையாகவும், முரண்பாடாகவும் செயற்படுவதாக குற்றம்சுமத்தி சந்திரிகாவிற்கு ஜால்ரா அடித்து, சந்திரிகாவின் நன்மதிப்பைப்பெற்ற மகிந்த ராஜபக்ஷாவால் எப்படி இப்போ அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கக் கூடியதாகவிருக்கின்றது. அதாவது சந்திரிகாவிற்கு ஜால்ரா போட்டபடி தனது பதவிக்காக இவ்வளவு காலமும் ஓடுமீன் ஓட உறுமீன் வருமட்டும் காத்திருந்திருக்கின்றார் பார்த்தீர்களா? வாசகர்களே! ஜே.வி.பியினரையும், சிங்கள கெல உறுமயாவையும் பொதுக்கட்டமைப்பிற்கு எதிரானவர்கள் என குற்றம்சாட்டிய மகிந்த இன்று அவர்களின் பன்னிரென்டு கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அதை நிறைவேற்றப்போகின்றார் எனில் அவர் எப்படிப்பட்ட இனத்துவேசமானவர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இனத்துவேசமானவராகிய மகிந்தா, ஓர் தமிழன் வெளிநாட்டமைச்சராகவும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் சந்திரிகாவிற்கு அடுத்த நிலையிலும் போற்றப்படும் இடத்தில் இருக்கின்றார் எனில் ஏன் அவரை மகிந்த கொன்றிருக்கக்கூடாது எனப்புரிகின்றதல்லவா? இவர்கள் மூலம் தமிழருக்கான நிரந்தரத்தீர்வை தரமுடியுமா? என்கின்ற கேள்விக்கான விடையை வாசகர்கள் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.
அடுத்து நாம் பார்க்கப்போவது இக்கொலையால் இலங்கை அரசியலில் மாற்றம் வருமா? என்பதே. அவ்வாறு மாற்றம் வருவதற்கான எதுவிதமான சந்தர்ப்பமும் கிடையாது. அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசா ஜே.வி.பியினரால் கொல்லப்படுகையில் பழியை புலிகள் மேல் போட்டு அதன் உண்மையான குற்றவாளிகளை தப்பவைத்தவர்கள், அதேபோன்று காமினியையும், லலித் அத்துலத் முதலியையும் கொன்று உண்மையைப்புதைத்தார்கள். பின் லலித்தை கொன்றவர் ஒரு தமிழர் எனச்சொல்லியும், அவர் கிருலப்பனையில் கடையொன்றின் முன் தற்கொலை செய்து கிடந்தார் என்றும் கதைகட்டியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஜனாதிபதி சந்திரிகாவின் காய்நகர்த்தலானது நல்லபிள்ளையாய் நடித்த மகிந்த ராஜபக்ஷாவை ஜனாதிபதியாக்கி அவர் ஆட்சிக்காலத்தில் ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கி மீண்டும் தானே பிரதமமந்திரியாகலாம் என்கின்ற நினைவை இப்போ மகிந்த இல்லாது செய்ய எத்தனித்திருப்பதானது அவர்கள் இருவரினதும் அதிகார வெறியையே காட்டிநிற்கின்றது. ஆட்சியில் நானா? அன்றி அவரா? என்கின்ற இழுபறி நிலையை இப்போ இலங்கையில் ஏற்படுத்தியிருக்கின்றது. வரும் மாதத்தில் சிலவேளைகளில் மகிந்தாவின் ஆசையில் மண்போடப்படலாம். அத்துடன் அரசியல் கோமாளி அனுராவிற்கு யோகமாகவும் அமையலாம். அதன் மூலம் சந்திரிகா மீண்டும் தன்னை இலங்கை அரசியலில் நிலைநிறுத்த முற்படலாம். அவருக்கு யார் போனால் என்ன? கிடைப்பது இலாபமாக இருக்கும் பட்சத்தில் இலாபமே என்னும் கருத்திலேயே அவர் இருப்பார். இவரை நம்பி அரசியல் நடத்தும் தமிழின துரோகிகளுக்கு கதிர்காமரின் நிலை ஒரு படிப்பினையாகும். ஆனால் எங்கே புரியும் அவர்களுக்கு?. கெடுகுடி சொல்கேளாது என்பது போன்று இப்போ யார் என்ன நன்மை சொன்னாலும் அவர்களுக்கு அது புரியாது? நு}று பேர்கள் ஆயுதத்துடன் காவலிருக்கும் போதே கதிர்காமரை சுட்டவர்கள் சில பத்துப்பேர்களுடன் இருக்கும் கூலிக்குழுக்களை ஏன் சுடமுடியாது. எப்போ அவர்களில் ஒருவர் மண்டையைப்போடுகின்றார்களோ? அப்போ புரிந்து கொள்வார்கள் சிங்களத்தை. கதிர்காமரின் கொலையைவைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைத்தவர்கள் இப்போ ஓர் நல்ல இராஜதந்திரியை இழந்து (தமிழர்கள் இல்லை. சிங்களம் மட்டுமே) நிற்கின்றார்கள். தமிழருக்கு எதிராக கதிர்காமரை செயற்பட்ட வைத்து பஞ்சதந்திரக்கதையில் வரும் கதைபோன்று சிங்கமும் எருதும் சண்டைசெய்ய இரத்தம் குடிக்க காத்திருந்து உயிர்விட்ட கதையாகிவிட்டிருக்கின்றது சிங்களத்தின் கதை. கதிர்காமரின் கொலையால் சந்திரிகாவின் நிலை! திரிசங்கு நிலையிலேயே உள்ளது.!
முற்றும்
நன்றி
மலரினி மலரவன்
www.tamilkural.com
|
|
|
| தமிழில் திருமணம்? |
|
Posted by: RaMa - 09-16-2005, 02:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (55)
|
 |
அண்மையில் ஒரு திருமண வீடு;. மிகவும் பிரமண்டமான மண்டபம் அது. நல்ல காசு செலவழித்திருப்பினம் என்று அதன் அலங்காரத்திலே தெரிந்தது. உள்ளே சென்றவுடன் அங்கு இருப்பவர்களுக்குள் ஒரு சலசலப்பு. என்னவென்று பார்த்தால் மணமகன் மணவறையில் இருக்கின்றார் ஆனால் ஐயாரை காணவில்லை. பின்னார் சற்று நேரத்தில் பெண்ணெருவர் பிரமாணரை வைத்து நடத்தும் திருமணம் தமிழ் திருமணமா என்று கேள்வி ஒன்றை முன் வைத்து அதற்கு பல விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருந்தார். அதில் வள்ளுவர் கூறிய கருத்துக்களை முன் வைத்து அவருடைய பேச்சுக்கள் தொடர்ந்தன. அதாவது ஐயார்கள் மந்திரம் சொல்வது விளங்கமால் மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பார்களாம் என்றும் ஐயார் கூறும் மந்திரங்களுக்கு விளக்கங்களும் அளித்தார். இடையில் ஒரு அறிவித்தல் அதாவது மணமகள் மேடையை நோக்கி வருவதாக. அப்போது "மரகதவல்லிக்கு மணக்கோலம் என் மங்களச் செல்வி மணக்கோலம்" என்னும் பாடல் இசைக்க மணமகள் மேடையை நோக்கி வந்தார்.
பின்னார் ஒரு பெரியாவர் தாலியை எடுத்துக் கொடுக்க மணமகன் மணமகள் கழுத்தில் அணிவித்தார். அதற்கு அடுத்து எல்லாமே தமிழ் முறைப்படி நடந்தன. ஐயார் இல்லமால் முதல் கலியாணத்தை நடத்தி இருவரும் ஒரு வரலாற்றை புரிந்து விட்டதாக எல்லோரும் கதைத்தார்கள்.
இனி அங்கு நடந்த விசயங்களை சற்று உற்று நோக்குவோம்..
1) ஐயார் இல்லமால் தமிழ் முறையில் திருமணம் நடத்தப்பட்டிருந்தது வரவேற்கத் தக்கது. இடை இடையில் சினிமாப் பாடலையும் தாயகப் பாடலையும் குழப்பி ஒலிக்கச் செய்தது மிகவும் மனதுக்கு கஷ்டமாய் இருந்தது.
2) தமிழ் முறையில் நடந்த திருமணத்திற்கு வாழ்த்துக் கூறிய பல தமிழ் மாணவ மாணவிகள் ஆங்கிலத்திலே வாழ்த்துக் கூறினார்கள்
3) தமிழ் முறைப்படி நடந்த கலியாணம் என்றால் மஞ்சள் கயிறு எங்கே?
4) கலியாணம் முடிந்தவுடன் நடந்த கேக் வெட்டும் வைபவம் எந்த தமிழ் மரபில் உண்டு
நாம் புதுமை என்றா பெயரில் எமது பழமையான காலச்சாரத்தை நாறடிக்கின்றோமா? இது போன்ற சம்பவங்கள் எமது இளைய தலைமுறையினாரை தடுமாறக் கூடிய சந்தர்ப்பங்களை அளிக்கும் அல்லவா? அதாவது தமிழ் முறைக் கலியாணம் என்பது என்ன என்பதை அவர்கள் அறியமால் போகப் போகின்றார்கள் என்ற ஆதங்கம் சபையில் இருந்த பலரை சிந்திக்க வைத்தது
|
|
|
| நம்பர் ஒன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் |
|
Posted by: AJeevan - 09-16-2005, 01:13 AM - Forum: குறும்படங்கள்
- Replies (1)
|
 |
<span style='font-size:21pt;line-height:100%'> <b>நம்பர் ஒன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்</b>
இரவு உறங்கச் செல்லும் முன் உங்கள் குழந்தைக்குக் கதைகள் சொல்வதுண்டா? ஆம் என்றால் வாழ்த்துக்கள்! உங்கள் மகனோ, மகளோ அடுத்த ஸ்பீல்பெர்க் ஆகக்கூடும்!
உலக சினிமா சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p57.jpg' border='0' alt='user posted image'>
பொதுஜன ரசனையையும் கலை அழகையும் ஒரே புள்ளியில் இணைக்கிற சூட்சுமம் தெரிந்தவர். அதனால்தான் அவருடைய பங்களிப்புடன் வெளிவருகிற படம் எதுவானாலும் அது தரமானதாக இருக்கும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ரசிகர்கள் விமர்சகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்.
ஸ்பீல்பெர்க் தன் முதல் படத்தை எடுத்து முடித்தபோது அவருக்கு வயது பன்னிரண்டோ பதின் மூன்றோதான். அந்தக் குறும்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் ஒலிப்பதிவு எடிட்டிங் இயக்கம் தயாரிப்பு டிக்கெட் கிழிப்பது பாப்கார்ன் விற்பது என எல்லாமே அவர்தான்.
சின்னப் பையன்தானே ஏதாவது கார்ட்டூன் படம் எடுத்திருப்பான் என்று நினைத்தவர்கள் படம் பார்த்ததும் அதிர்ந்தார்கள். அவர் எடுத்தது உலக யுத்தப் பின்னணியிலான சண்டைப் படம். ஓடாமல் விழுந்து கிடந்த ஒரு பழைய விமானத்தையும் இரண்டாவது உலகப் போரைப் பற்றிய சில படத் துணுக்குகளையும் வைத்து ஜிக்ஜாக் கிம்மிக்ஸ் பண்ணி நிஜப் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட உணர்வைத் தரும்படி உருவாக்கி இருந்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.
அவருடைய அப்பா அர்னால்ட் ஸ்பீல்பெர்க் இரண்டாவது உலகப் போரில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர். சின்ன வயசில் மகன் ஸ்டீவனைத் தூங்கவைப்பதற்காக அவர் சொன்னதெல்லாம் யுத்தக் கதைகள். ஸ்டீவனுக்கு ஏதோ தானே அந்தப் போர்க் களத்துக்குப் போய் சண்டையிடுவதுபோல் தோணும். அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் அவர் மனசுக்குள் சினிமாவாக ஓடும். தனது முதல் குறும்படம் தந்த குஷி ஸ்டீவனுக்கு அந்த ருசி ரொம்பப் பிடித்துவிட்டது. ஆகவேஇ அடுத்தடுத்து பலப் பல குறும்படங்களை எடுத்துத் தள்ளினார் அவற்றில் பெரும்பாலானவை யுத்தப் பின்னணியில் அமைந்த ஆக்ஷன் படங்கள்!
பள்ளிக்குப் போகவேண்டிய வயதில் ஸ்பீல்பெர்க் இப்படிப் படமெடுத்துக்கொண்டு இருந்ததால் பாடங்கள் எவையும் அவருக்குப் பிடிபடவில்லை. ஜஸ்ட் பாஸ் கேஸ்! அவருடைய ஆசையெல்லாம் திரைப்படக் கல்லூரி ஒன்றில் சேர வேண்டும் என்பதே! ஆனால் பள்ளிப் படிப்பை முடித்தபோது அவர் எடுத்திருந்த மதிப்பெண்களுக்கு எந்த நல்ல கல்லூரியிலும் இடம் கிடைக்க வில்லை. ஆகவேஇ அரைமனதாக ஏதோ ஒரு கல்லூரியில் சேர்ந்து ஆங்கில இலக்கியம் படித்தார். அங்கேயும் வழக்கம்போல பாடங்களை ஒதுக்கி வைத்துவிட்டு புதுசுபுதுசான உத்திகளில் படமெடுத்துப் பழகிக்கொண்டு இருந்தார் ஸ்பீல்பெர்க். இந்தப் பயிற்சி அவருக்குள் நம்பிக்கையைக் கூட்டியது. ஒரு வாய்ப்பு... ஒரே ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டால் போதும். ஆனால் அந்த வாய்ப்பு தன்னைத் தேடி வரப்போவதில்லை என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் பல சினிமா ஸ்டூடியோக்களுக்குச் சென்று பிரபல இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் தனது படங்களைத் திரையிட்டுக் காண்பித்துக்கொண்டு இருந்தார் ஸ்பீல்பெர்க்.
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p56a.jpg' border='0' alt='user posted image'>
1969ல் ஸ்பீல்பெர்க் எடுத்த Amblin என்ற குறும்படத்தை யுனிவர்ஸல் நிறுவனத்தின் தொலைக்காட்சிப் பிரிவைச் சேர்ந்த ஒரு பெரும்புள்ளி பார்த்தார். அவருக்குப் படம் ரொம்பப் பிடித்திருந்தது.
இதையடுத்து யுனிவர்ஸல் நிறுவனத்துக்காகத் தொலைக்காட்சிப் படங்கள் நிகழ்ச்சிகளை இயக்குவதற்கான ஏழு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ஏழு வருடங்கள்! அதுவும் தொலைக்காட்சியில்! நம் ஊராக இருந்தால் மெகா தொடர்களின் அழுகையிலேயே கரைந்துபோயிருப்பார் ஸ்பீல்பெர்க். நல்லவேளையாக யுனிவர்ஸல் நிறுவனத்தில் அவருக்கு முழுச் சுதந்திரம் தரப்பட்டிருந்தது. அவர் விரும்பியது போன்ற தரமான தொடர்கள்இ நிகழ்ச்சிகளை உருவாக்க முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் இயக்கிய Duel என்ற தொலைக்காட்சிப் படம் இன்றுவரை அமெரிக்கத் தொலைக்காட்சிப் படங்களிலேயே மிகச் சிறந்தது என்று பாராட்டப்படுகிறது.
1974ல் The Sugarland Express என்ற திரைப்படத்தின் மூலம்இ பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார் ஸ்பீல்பெர்க். முதல் படம் சுமாரான வரவேற்பைத் தான் பெற்றது. அதையடுத்து வெளிவந்த Jaws தான் ஹாலிவுட்டில் ஸ்பீல்பெர்க்குக்கு ஒரு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p58a.jpg' border='0' alt='user posted image'>
Jaws படமெடுக்கும் கால கட்டத்தில்தான் ஏராளமான பிரச்னைகள். பெரிய பட்ஜெட் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கேற்ற வேகத்தில் படம் உருவாகாமல் பல நாட்கள் தாமதமாகிவிட்டது. ரிலீஸ் தேதிக்கு முந்தின நாள் சாயங்காலம்வரை வேலைகள் முடியவில்லை என்பதால் படம் வருமா வராதா என்றே சந்தேகங்கள் எழத் தொடங்கி விட்டன. படம் ரிலீஸானதும் ஸ்பீல்பெர்க் அமெரிக்காவின் மதிப்புக்குரிய பிரபலங்களில் ஒருவரானார். ஒரு ராட்சஸ சுறா மீனைப்பற்றிய அந்தப் படத்துக்காக பிரமாண்டமான ஒரு சுறா பொம்மை செய்து அதை நிஜ சுறாவைப் போல சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தார் ஸ்பீல்பெர்க். படம் மிரட்டலாக வந்திருந்தது. திரையில் ஸ்பீல்பெர்க் உருவாக்கியிருந்த Ôமெகா சுறாவைப் பார்த்து நடுங்கிப்போன குழந்தைகள்இ அதன்பிறகு வீட்டுக்குள் இருக்கிற தண்ணீர்த் தொட்டியில் நீந்துவதற்குக்கூட ரொம்ப காலம் பயந்தார்கள்.
1982ல் வெளியான E.T ஒரு சின்னப் பையனுக்கும் ஒரு வெளிக்கிரகவாசிக்கும் இடையிலான நட்பைச் சொல்லும் இந்தப் படம் கிட்டத்தட்ட ஸ்பீல்பெர்க்கின் சொந்தக் கதை. அவருடைய பெற்றோர் இருவரும் விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தபோது அவர்களுடைய அன்புக்காக ஏங்கிய தனது அனுபவத்தை தான் இந்தத் திரைப்படத்தில் மென்மையான உணர்வுகளாகப் பதிவு செய்திருந்தார் ஸ்பீல்பெர்க். E.T திரைப்படம் 400 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது. அதன் இயக்குநர் ஸ்பீல்பெர்க் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப் பட்டார். ஆனால் இந்த முறையும் அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
இந்த முறையும் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. ஸ்பீல்பெர்க்கின் படங்கள் தொடர்ந்து வணிகரீதியில் பெருவெற்றி அடையும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு யாருக்காவது விருது போய்விடும். ஸ்பீல் பெர்க்குக்கு ஏமாற்றம்தான் மிச்சம். தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஸ்பீல்பெர்க்கின் சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. தனது இடத்தை மீண்டும் பிடிக்கிற ஆவேசத் துடன் அவர் உருவாக்கிய படம்தான் ஜுராஸிக் பார்க். இந்தப் படம் ஹாலிவுட் சரித்திரத்திலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. நிஜமாகவே டைனோஸர்கள் மீண்டும் உயிரோடு வந்துவிட்டன என்று நம்பும்விதமாக நவீன சிறப்பு உத்திகளைப் பயன்படுத்திஇ இந்தப் பிரமாண்டமான படத்தை உருவாக்கி இருந்தார் ஸ்பீல்பெர்க்.
அடுத்தடுத்து அதே போல் வேறு அறிவியல் புனைகதைகளை எடுத்துத் தள்ளாமல் திடீரென முற்றிலும் மாறுபட்ட ஒரு படத்தை உருவாக்கினார். அந்தப் படம் Schindler's List.
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p59.jpg' border='0' alt='user posted image'>
Schindler's List படத்தில்...
இரண்டாவது உலக யுத்தப் பின்னணியில் அமைந்த உருக்கமான இந்த உண்மைக் கதையை ஸ்பீல்பெர்க் அபாரமாகப் படமாக்கியிருந்தார். இந்தப் படத்தை எடுத்து முடித்தபின் அதற்காகச் சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூட மறுத்துவிட்டார் அவர். ஒரே நேரத்தில் ரசிகர்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிக்கொண்ட இந்தப் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து கண்ணீர் விடாதவர்கள் அபூர்வம். ஹாலிவுட் சரித்திரத்திலேயே மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக மதிக்கப்படும் இந்தப் படம் ஸ்பீல்பெர்க் நெடுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்தது. 1998ல் Saving Private Ryan திரைப்படத்துக்காக மீண்டும் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் ஸ்பீல்பெர்க்.
தற்சமயம் Munich என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஸ்பீல்பெர்க். 1972ல் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த சிலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நிகழ்ச்சியைப் பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகிவருவதாக சொல்லப்படுகிறது. அடுத்து ஆபிரஹாம் லிங்கனைப் பற்றிய ஒரு திரைப்படம் இயக்கவும் திட்டமிட்டிருக்கிறார் ஸ்பீல்பெர்க்.
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p60.jpg' border='0' alt='user posted image'>
ஸ்பீல் பெர்க்... சிலத கவல்கள்!
-முழுப் பெயர் ஸ்டீவன் ஆலன் ஸ்பீல்பெர்க். அறுபதைத் தொடும் வயது. மனைவி கேட் காப்ஷா. ஆறு குழந்தைகள்.
ஸ்பீல்பெர்க்கின் சொந்தத் திரைப்பட நிறுவனத்தின் பெயர் Dream Works.
1967ரூல் கல்லூரியில் சேர்ந்த ஸ்பீல்பெர்க் 1968ரூல் அங்கிருந்து விலகி விட்டார். அதன்பின் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2002ரூல்தான் பட்டம் பெற்றார்.
1997ரூல்இ அமெரிக்கத் திரைப்படப் பயிலகம் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே மிகச் சிறந்த நூறு திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டது. அதில் ஐந்து படங்கள் ஸ்பீல்பெர்க் இயக்கியவை.
Schindler's List திரைப்படத்தில் ஜெர்மனியின் சரித்திரத்தைச் சிறப்பாகப் படமாக்கியதற்காக ஜெர்மனி அரசின் மிக உயரிய விருதான Bundesverdienstkreuz mit Stern விருது ஸ்பீல்பெர்க்குக்கு வழங்கப்பட்டது.
Thanks : Vikadan (என். சொக்கன்) </span>
|
|
|
| ஒரு கல்லூரியின் கதை |
|
Posted by: AJeevan - 09-16-2005, 12:34 AM - Forum: சினிமா
- Replies (5)
|
 |
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p157.jpg' border='0' alt='user posted image'>
<b> ஒரு கல்லூரியின் கதை</b>
கல்லூரிப் படிப்பு முடிந்து பிரிகிற நண்பர்கள், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். ஜாலியும் கேலியுமாகக் கொண்டாட்டம். திடீரென ஆர்யாவை மன நோயாளியாக கொண்டுவந்து அங்கே நிறுத்துகிறார்கள். மற்றவர்களுக்கு அதிர்ச்சி. ஆர்யா மனதளவில் இன்னமும் கல்லூரியைவிட்டே வெளியே போகவில்லை எனத் தெரியவருகிறது. காரணம்... காதல்!
தனது ஜூனியரான சோனியா அகர்வாலை, அவருக்குத் தெரியாமலே உருகி உருகிக் காதலிக்கிற ஆர்யா, அதை 'பேர்வெல் டே' தினத்தில் வெளிப்படுத்தக் காத்திருக்கிறார். ஆனால்... அது முடியாமல் போகிறது. அதுவே ஆர்யாவின் ஆறாத நோயாகிறது.
இவரை குணமாக்க, ஐந்து ஆண்டு களுக்கு முன்பிருந்த அதே சூழலுடன் கல்லூரியை உருவாக்கச் சொல்கிறார் டாக்டர் சாருஹாசன். ஒரே ஒரு மாதத்துக்கு அந்தச் சூழலில் ஆர்யா உலவி, நடிக்கப்படும் 'பேர்வெல்' தினத்தில் தன் காதலைச் சொல்லிவிட்டால், குணமாக வாய்ப்பு உண்டு என்கிறார்.
நண்பனுக்காக பழைய மாணவர்கள் அப்படியரு கல்லூரிச் சூழலை மறுபடி ஆக்ஷன் ரீப்ளே செய் கிறார்கள். அப்புறம் என்னாச்சு என்பது மீதி!
கலகலவெனத் துவங்கும் 'கெட்டு& கெதர்'... சட்டென ஆர்யா வருகையின் சோகம்... ஃப்ளாஷ்பேக்கில் ஜிலீர் ஹைக்கூவாக ரயிலில் சோனியா அகர்வா லுடன் சந்திப்பு..! ஆஹா என இன்னும் ஆர்வமானால், அத்துவானக் காட்டில் பஞ்சராகி நின்று போன பைக் மாதிரி திக்கத் துவங்கிவிடுகிறது படம்.
பழைய கல்லூரியை உருவாக்குவது என்ற கற்பனை எத்தனை அலாதி! படுசுவாரஸ்யமாகக் காட்சிகளைக் கோத்திருக்க வேண்டாமோ... ம்ஹ¨ம்! எங்கெங்கோ பிரிந்துபோன நண்பர்கள் பொது நோக்கத்துக்காக சந்திக்கிறபோது ஏற்படுகிற நினைவலைகளை ஈரத்தோடு, கலீர் காமெடியும் சேர்த்துக் கட்டிப் போட வேண்டாமோ? அதற்கும் ஒரு ம்ஹ¨ம்!
ஆர்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை டாக்டர் இழுத்து இழுத்து சொல்லும் காட்சியே நிறைய ஃபிலிம் தின்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் சபதமெடுக்கிற காட்சி யிலும் மனதைத் தொடாத 'டிராமா'த்தன உணர்ச்சிக் கொந்தளிப்பு.
பிரிந்து போன மாணவர்கள் சிலரின் அறிமுகக் காட்சிகள் பேஷ் ரகம். ஒருவர் சாலையோர கிளி ஜோசியக்காரனாக இருப்பது, இன்னொருத்தர் "நடிக்கிறேன். மாசம் எவ்ளோ தருவே?" என்று சம்பளம் கேட்பது, கைக்குழந்தையுடன் இளம் அம்மா கல்லூரிக்கு வருவது, கடந்த வருடங்களில் பீர் உபயத்தில் வழிந்து கிடக்கும் தொப்பையை நசுக்க, ரிவர்ஸி லேயே ஜாகிங் ஓடி காலத்தைக் கடக்கிற அபத்த ஐடியாக் காரர் என்று சில பளிச் மின்னல்கள்.
அதேமாதிரி, முன்பு கல்லூரியில் படித்தபோது காதலித்துக் கசந்து பிரிந்தவர்கள், இப்போது மறுபடியும் சந்திக்கும்போது மாறுபட்ட மனநிலையோடு காதலின் தவிப்பைக் காட்டுவது நல்ல கவிதை!
இப்படி ஆங்கங்கே அழகு செய்த இயக்குநர் நந்தா பெரியசாமி, கதையின் அடிப்படை அம்சமான காலமாற்றத்தை கண்முன் நிறுத்து வதற்கு மெனக்கெடவில்லை. டீக்கடை, கேண்டீன், மரத்தடி, ஹாஸ்டல் போன்ற கலகலப்பு ஊற்றுகளை பெரிசாகப் பயன்படுத்தாமல், எப்போதும் மைதானத்துப் பக்கமாகவே மாணவர்களை அலையவிட்டிருக்கிறார்.
சோனியா அகர்வாலை கூப்பிடப் போகிறபோது அவருக்கு நிச்சயதார்த்தம்! அங்கே போடுகிற முடிச்சை வைத்து, கிளைமாக்ஸில் கொஞ்சம் பரபரப்பு பண்ணி இருக்க முடியும். ஆனால், போட்ட முடிச்சை சுவாரஸ்யப்படுத்தாமலே படத்தை முடித்திருக்கிறார்கள்.
கல்லூரிக் களத்துக்குள் மறுபடி நடமாட ஆரம்பித்தும், ஆர்யாவின் நினைவுகள் உசுப்பப்பட்டு படிப்படியாக உற்சாகம் திரும்புவதுதானே அழகு? கடைசி வரை அரை மயக்கப் பார்வையோடே நோயாளி போலத் திரிகிறார் மனிதர்.
காட்சிக்குக் காட்சி ஜிலீரெனப் பாய்கிற மதியின் கேமராவுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. இசை & யுவன்ஷங்கராமே..!
'தேங்க்ஸ்' என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஜில்லென்று சில காட்சிகள்! அதை வைத்தே சுபம் போடுகிற இடத்தில் நிற்கிறார் டைரக்டர்!
-விகடன் விமர்சனக் குழு
|
|
|
| புதிதான கைமருந்து |
|
Posted by: கீதா - 09-15-2005, 08:10 PM - Forum: மருத்துவம்
- Replies (16)
|
 |
புதிதான கைமருந்து
உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும்
|
|
|
| தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...! |
|
Posted by: இளைஞன் - 09-15-2005, 07:34 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (1)
|
 |
<b><span style='font-size:25pt;line-height:100%'>தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...!</b></span>
<b>செப்டம்பர் 14 - அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை தினம்</b>
-------------------------------------------------------------------------------
<b>தெ.மதுசூதனன்</b>
எங்கும் பரவலாக எவராலும் பயன்படுத்தும் தொடர்களில் 'தமிழ்ப் பண்பாடு' என்பதும் ஒன்று. இத் தொடர் ஜனரஞ்சகத் தொடராகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இத் தொடரில் வரும் பண்பாடு என்னும் சொல் ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாத்திரமே வழக்கிலுள்ளது என்பர்.
1926-31 இல் சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்த லெக்சிகன் அகராதியில் பண்பாடு எனும் சொல் இல்லை. ஆங்கிலத்தில் 'culture' எனக் குறிப்பிடப்பெறும் சொல்லை 'கலாசாரம்' என்று கூறும் மரபுதான் வழக்கில் இருந்தது. culture எனும் ஆங்கிலச் சொல்லுக்கு டி.கே.சிதம்பரநாத முதலியார்தான் 'பண்பாடு' என்னும் பதமே பொருத்தமானதென மொழிபெயர்த்தார். அது நிச்சயிப்புச் சொல்தான் என பேரா. வையாபுரிப் பிள்ளை கூறுவார்.
இருப்பினும் 'பண்பாடு' எனும் சொல்லுக்கு நியமமான தமிழ்ச் சொல்லாகத் திருக்குறளில் வரும் 'சால்பு' எனும் சொல்லே ஓரளவு இக் கருத்தைத் தரக்கூடியது. இந்தப் பொருள் தரக்கூடியதற்கான சான்றாகவே பேரா. சு. வித்தியானந்தன் தனது நூலொன்றுக்கான தலைப்பாகத் 'தமிழர் சால்பு' எனப் பெயர் குறிப்பிட்டிருந்தார்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மானுடவியல் சமூகவியல் ஆகிய புலமைத்துறைகளின் வளர்ச்சியின் பின்னரே அவற்றின் வழியே சமூக அசைவியக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் கண்ணோட்டம் வளர்ந்தது.
culture எனும் சொல் 'பண்பாடு' , 'கலாசாரம்' என்னும் இரு சொற்களின் வழியே ஒரே பொருள் தரும் வகையில் தமிழில் வேர் விட்டுள்ளது. இவற்றின் வெளிப்படுத்துகை 'கோட்பாடு' வகையிலான புரிதல் அறிதல் தெளிதல் எனும் நிலையில் வளர்ச்சியுற்றுள்ளது.
பண்பாடு என்றால் என்ன? என்பது பற்றி பல வல்லுநர்கள் பலவாறு விளக்கியுள்ளனர். வரையறை செய்துள்ளனர். ஆனாலும், எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை என எதையும் கூற முடியாது. ஒவ்வொருவரின் வரையறைகளும் வேறுபட்டுள்ளன. மானுடவியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைசார் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சிக்கேற்ப 'பண்பாடு' என்னும் கருத்தாக்கம் புத்தாக்கம் பெற்றே வருகிறது.
இந்நிலையில் பண்பாடு பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை எற்றுக் கொள்ளல் அவசியமாகின்றது. பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கள்கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினூடாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதிகப் பொருள்கள், ஆத்மார்த்தமான கருத்துகள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும். பண்பாடு என்பது ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி நிலை உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.
பண்பாடு என்னும் கருத்தாக்கம் மனிதர்களுடன் மட்டுமே தொடர்புடையது. பண்பாடு என்பது தலைமுறை தலைமுறையாக அறிவுசார்ந்த நிலையில் கற்றுணர்ந்த நடத்தை முறைகளைக் குறிக்கிறது. மனிதர்களின் பிறப்புநாள் முதற்கொண்டு இறக்கும்நாள் வரை அவர்களது பண்பாட்டைச் சமுதாய வயமாக்கம் (socialization), பண்பாட்டு வயமாக்கம் (enculturation) மூலம் கற்கின்றனர். கற்பிக்கும் நிறுவனம் பெற்றோர்களாகவோ குடும்பமாகவோ பள்ளிக்கூடமாகவோ பல்வேறு நிறுவனங்களாகவோ -ருக்கின்றன.
ஆகவே, பண்பாடு என்பதை ஒரு குறிப்பிட்ட மக்களோடு அல்லது குழுவோடு தொடர்புடையதாகவே புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு குழுக்கள் ஒரே பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளன என்று சொல்வது அல்லது கருதுவது பண்பாட்டை ஒரே மாதிரியானதாகப் பார்ப்பதாகும்.
ஒரு சமுதாயத்தில் பல்வேறு குழுக்கள் இருக்கலாம். இதனால் நாம் குழு என்பதை ஏதேனும் ஒரு பண்பாட்டு மரபைப் பொதுவாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம் என்றே வரையறுக்கலாம். அது மதம் - சாதி - தொழில் - மொழி - இனம் போன்றவையாக இருக்கலாம். இந்தக் குழுக்கள் குறிப்பிட்ட நிலவியல் எல்லைகளுக்குள் அமைந்து கிடக்கும்.
−ங்கே நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு நிலைக்களன்களும் ஒன்று அல்ல. இருப்பினும் பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழுவின் பரவிக்கிடக்கும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும்.
ஆனால், நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இத்தகைய நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறுக்க −யலாது. ஏனெனில் குழுக்களின் பரவல் அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்கு உள்பட்டது. ஆயினும், ஒரு சமுதாயத்தில் காணப்படும் பண்பாட்டு எல்லைகளை அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது பொருத்தமற்றதாகவே அமையும்.
ஆகவே மொழி, பண்பாடு, இலக்கிய மரபு என்பனவெல்லாம் அவை தோன்றிய சமூகத்தின் இயற்கை வெளிப்பாடுகளல்ல. அவை கற்பிதம் செய்யப்பட்டவை. கட்டமைக்கப்பட்டவை. அச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குழுவின் நலன் நோக்கியவை.
இதனால் இக்குழு மொழியையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் செவ்வியல் நெறிப்படுத்தும் பணியைத் தனதாக்கிக் கொள்கிறது. இத்தகைய செம்மைப்படுத்தும் நெறிமுறைகளின் பின்னாலுள்ள வன்முறையையும் அரசியலையும் நடைமுறை அனுபவங்களின் அடிப்படையில் நாம் இனங்காணலாம்.
- நெறிப்படுத்தப்படும் எல்லைக்குள்பட்ட பல்வேறு மக்கள் குழுக்களின் மொழிகளும் பண்பாடுகளும் ஓரங்கட்டப்பட்டு −ழிந்தொதுக்கப்பட்டு −றுதியில் மொழி - பண்பாடு ஆகியவற்றின் பன்முகத் தன்மைகள் அழித்தொழிக்கப்படும்.
- ஆதிக்கம் செலுத்தும் குழு தனது அடையாளத்தை எல்லோருக்குமான அடையாளமாக நெறிப்படுத்தப்பட்ட செவ்வியல் கூறுகளாகத் திணிக்கும். −துவே −யற்கை எனவும் பிற அனைத்தும் விலகல்கள் எனவும், பிறழ்வுகள் எனவும் செவ்வியல் அளவுகோல்களுக்கு உட்படாதவை எனவும் வரையறுக்கும். −தன் மூலம் சமூகத்தின் சகல தளங்களிலும் தனது மேலாட்சியை நிரந்தரமாகக் கட்டமைத்துக் கொள்ளும்.
எந்தவொரு குழுவினரின் அல்லது பல்வேறு குழுக்களின் பண்பாடு என்பது ஆதிக்கக் குழுவின் சார்நிலை நின்ற மேலாட்சி செலுத்தும் பண்பாடாகவே −ருக்கிறது. மற்றவை யாவும் ஓரங்கட்டப்பட்டு விலக்கி வைக்கப்படுகின்றன. 'தேசியப் பண்பாடு' என்ற கற்பிதம் ஒன்றைக் குழுக்களின் பண்பாடாகக் கட்டமைக்கின்றன. பண்பாட்டின் பன்மைத்துவம் மறுக்கப்படுகின்றன.
தேசிய மயமாக்கல் தேசியத் தனித்துவப் பண்பினைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஆனால் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இரு சக்திகள். இந்த இரு சக்திகளின் சங்கமத்தில் நின்று கொண்டுதான் 'பண்பாடு' பற்றிப் பேசுகின்றோம். எவ்வாறாயினும் உலகளாவிய நாடுகள், தேசிய, உள்ளூர் நிலைகளிடையே அடிப்படையான இயல்பான இன்றியமையாத நெருக்கடிகள் ஏற்படாமல் இனியும் பண்பாடு வளர முடியாது என்ற குரல்களும் சில முனைகளில் இருந்து கேட்கிறது. இதற்கான சாத்தியங்களும் உருவாகி வருகிறது.
இன்றைய உலகமயமாக்குதல், தனியார் மயமாக்குதல் ஆகியவற்றின் வல்லமைக்கு முன்னால் தேசியத் தனித்துவப் பண்பிலிருந்து பண்பாடு தன்னைத் தனிமைப்படுத்தி அடிபணிந்து நிற்கும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான பண்பட்ட பண்பாடுகள் யாவும் காட்டுமிராண்டித்தனத்துக்கு முன் அடிபணிந்து விட்டதைக் கண்டோம். ஆக, பண்பாட்டுத் தனித்துவப் பண்பு முழுமையான ஒன்று எனக் கருதப்படும் இடங்களில் இனவெறி செழித்தோங்குகிறது. நீண்டகாலம் நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்ட பண்பாடுகள், எல்லாப் பண்பாடுகளும் கூட தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். எனவேதான், உலகமயமாக்கலின் தொடக்கத்திலிருந்து நாமறிந்துள்ள பண்பாட்டுத் தன்னிலைக் கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாகிவிட்டது.
தேசிய தனித்துவப் பண்புகளுக்குப் பிந்தியதாக உருவாகி வரும் தனித்துவங்கள் ஏற்றத்தாழ்வு அநீதி, தனிமையாக்கம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டிருந்தும் அதனை −ன்னும் மெய்ப்பிக்கவில்லை. மேலும் பங்குச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளையும் தேவை - வழக்கீட்டு உறுதியின்மையினையும், அவசரகதியிலான செயல்முறைகளையும் உருவாக்குகின்றன.
ஆதிக்கக் கோட்பாடுகளின் புதியவகையிலான வகைப்பாடுகளின் அணுகுமுறைகளின் முன்னால் பண்பாட்டினைப் பணியுமாறு செய்வது சமூக அசைவியக்கத் தொழிற்பாட்டினை நிறுத்துவதாகவே அமையும். படைப்பாற்றல் உந்துதலுக்குப் பதிலாகச் சந்தைச் சமூகத்தின் மன இறுக்கத்தைப் புகுத்துவதாகவே இருக்கும்.
ஆகவே, நாம் இன்று இரு பெரும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
- பண்பாட்டை அவசியமற்ற ஆடம்பரப் பொருளாக உருவகித்துக் காட்டும் போக்கு. இதனால் கைத்தொழில் சமுதாயங்களுக்கு 'அறிவியல் தகவல்' போன்று தகவல் சமுதாயங்களுக்குப் 'பண்பாட்டுக் கண்ணோட்டம்' தேவை என வலியுறுத்துவது. இதனால் சமூகப் பிரிவினைகளைக் களைவதற்கு ஒரு பண்பாட்டு விலை கொடுக்க வேண்டும் என்னும் நிலை வந்துவிடுகிறது. பெரும்பாலும் இந் நிலைமையைத்தான் நாம் மறந்து விடுகிறோம்.
- அடுத்து மின்னணுவியல் அடிப்படைவாதம் எனும் போக்கு. இதனால் தொழில்நுட்பம் சார்ந்து மனிதத்தன்மையற்ற ஒரு பண்பாட்டினை உருவாக்கும் போக்கு பரவலாகிறது. இதனைப் பண்பாட்டு ஆய்வு மையங்களும் பல்தேசியக் நிறுவனங்களும் சந்தைப் பொருளாதாரத்தைப் பரப்பி வருகின்றன.
இன்று பண்பாடு தொழில்நுட்பமயமாகி வருகிறது. இதனால் பண்பாடு தனது பொருளையே இழந்து வருகிறது. படியாக்கப் பண்பாடு என்பது கருவிலேயே சிதைந்து போன ஒரு பண்பாடுதான். ஏனென்றால் ஒரு பண்பாடு சுதந்திரத்தை இழக்கும் போது, அது ஒரு பண்பாடாக −ருப்பதே அற்றுப் போகும்.
ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்து வினைபுரிவதுதான் பண்பாட்டின் உயிர்நாடி. இந்த எதிரெதிர் வினை கலப்பினத்திற்குத்தான் வழிவகுக்கும். படியாக்கத்திற்கு அன்று. படியாக்கத்தின் ஒன்று மற்றொன்றின் உள்ளபடியான படியாக்கமாகும். கலப்பினத்தில் ஒன்றும் மற்றொன்றும் புதிய உரு மாதிரியை உருவாக்குகிறது. இந்த உரு மாதிரி வேறுபட்டதாக இருந்தாலும் தனது மூலத் தனித்துவப் பண்பினை இயற்கையாக நிலைநிறுத்திக் கொள்கிறது.
பண்பாட்டுக் கலப்பு எங்கு நிகழ்ந்திருந்தாலும் அது தன் ஆணிவேர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. புதிய ஒருங்கிணைப்புகளை உருவாக்கியுள்ளது. இதுவே தனிமைப்படுத்துவதற்கான எதிரான மருந்தாகவும் அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்கா சார்ந்த மேற்குப் பண்பாட்டின் ஆக்கிரமிப்பு மூன்றாம் உலக நாடுகளின் பண்பாடுகளின் மீதான மிக மோசமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. காலனித்துவ ஆதிக்கப் பண்பாட்டுக்கு உள்ளான நாடுகள் தமது இயல்பான பண்பாட்டு உருவாக்கங்களின் தொடர்ச்சியை −ழந்து, மேற்குமயமான பண்பாடுகளின் உட்கிடக்கையை உள்வாங்கிச் சென்றுள்ள பண்பாடாகவும் உள்ளது. நவீன ஆதிக்கப் பண்பாடு மறு உருவாக்கல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது. தொடர்பு ஊடக வலைப்பின்னல் மேற்கு மயமாகி வரும் பண்பாட்டின் கருத்தியல் வன்முறையை எங்கும் நிகழ்த்தி வருகிறது.
ஆகவே, இன்றைய பண்பாட்டுத்தளம் அரசியல் கருத்தியல் ஆதிக்கப் போக்குகளுக்கு எதிரான தளமாகவும் உள்ளது. இந்தப் பின்புலத்திலேதான் பண்பாடுகளின் பன்மைத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
<i>நன்றி: ஆறாம்திணை</i>
|
|
|
|