Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழத்தில் தமிழில் வழிபாடு வேண்டும்..
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>செந்தமிழர் தெய்வமறை நாவா செழு
நற்கலை தெரிந்த அவரோடு
அந்தமில்கு ணத்தவர்கள் அர்ச்சனைகள்
செய்ய அமர்கின்ற அரனூர்
கொந்தலர் பொழிற்பழக வேலிகுளிர்
தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல் விளங்கிவளர் வேதியர்
விரும்பு வீழி நகரே. (மூன்றாம் திருமுறை</b>)


<b>திருவீழிமிழலை பாடல்பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் திருவீழிமிழலைத் திருக்கோயிலில் 'செந்தமிழர்கள் மறை நாவலர்கள், கலைநலம் தெரிந்தவர்கள், குணத்திற் சிறந்த ஞானிகள் ஆகியோர் ஒருங்குகூடி அர்ச்சனைகள் செய்தனர்\" எனப் பாடல் அருளியிருக்கிறார். செந்தமிழர் ஒரு போதும் வடமொழியில் அர்ச்சனை செய்திருக்க முடியாது. செந்தமிழர் செந்தமிழில்தான் அர்ச்சனை செய்திருப்பார்கள்.</b>

<img src='http://www.templenet.com/Tamilnadu/images/nalvar.jpg' border='0' alt='user posted image'>

இந்த அபிசேகத்தை மூவரும் மிகவும் வியந்து பாடியிருக்கிறார்கள். யார், யார் அபிசேகம் செய்தார்கள், யார் யார் போற்றி செய்தார்கள் என்பதை வரிசைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.


இப்போது கோவிலுக்குப் போனால் அர்ச்சனைத் தட்டைக் குருக்கள்கிட்டே கொடுத்துவிட்டு வெளியே அடியார்கள் நிற்கிறார்கள். ஆனால் ஞானசம்பந்தர் காலத்தில் செந்தமிழர் உள்ளே போய் பைந்தமிழில் அர்ச்சனை செய்தார்கள் என அவரே சொல்கிறார்.


நாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சியில் இன்புற்று மகிழ்ச்சி பெருகி நிற்கையில், அக்காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியை, சிவமும் சத்தியுமாகிய திருக்கோலத்தைப் பிறைக் கண்ணியானும் மலைமகளும் எனக் காண்கின்றார். காணுமிடத்து, அடியார் பலர், பூவும் நீரும் கொண்டு இருவரையும் போற்றிச் செல்வதும், அவர் பின்னே செல்கின்ற தமக்குக் கயிலைமலைச் சாரலில் பெண் யானைகளோடு ஆண் யானைகள உலா வருவது தெரிகிறது.


<b>'மாதர்ப் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப்
புகுவார் அவர் பின்புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடும்
களிறு வருவன கண்டேன்\"</b>


அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள். அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளை எல்லாம் பார்த்தேன்.\"

<b>மாதர் - அழகு
கண்ணி - தலைமாலை
போது - மலர்
சுவடு - கால்
காதல் - அன்பு
மடப்பிடி - பெண்யானை</b>.


திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம்.


நாவுக்கரசர் தானும் அடியார்களும் புூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்\" எனப் பாடுகிறார். மேலும்,

<b>இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயிர்ப்பொன் நின்றினின் திருவடி யதனை அர்ச்சித் தார்</b>


அடியார்கள் மட்டுமல்ல வானவர், இயக்கர், கின்னரர், புலி, சிங்கம், நாகம் எல்லாம் இறைவனின் திருவடிகளை நேரடியாக அர்ச்சித்தனர் என்கிறார் சுந்தரர்.


பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே.


<b>சங்க காலத்தில் பார்ப்பனர்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள். பல்லவர் சோழர் காலத்தில் ஆற்றங்கரை நிலங்கள் சூழ்ந்த குளிர்ந்த தனி ஊர்களைப் பெற்று வாழ்ந்தனர். இந்த ஊர்கள் அகரம், அக்கிரகாரம், சதுர்வேதி மங்கலம் பிரமதேயம் என அழைக்கப்பட்டன</b>.


ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
போகங்கள் எங்கே உணர்வெங்கே?

என்று வினவுகிறது திருக்களிற்றுப்படியார் (செய்யுள் -5)


ஆகமம் என்ற சொல்லின் பொருள் என்ன? எந்தச் சமயமும் தத்துவங்களை நேரடியாக எளிய முறையில் சொல்வதில்லை. சொல்வதும் எளிதன்று. எல்லாவற்றையும் மறைபொருளாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் தருவதாகவும் சொல்லுகின்றன.


ஆகமம் என்ற சொல்லுக்கு ஒன்றிலிருந்து 'வந்தது\" என்று பொருள். அதாவது 'சிவபெருமானிடமிருந்து வந்தன\" என்பதைக் குறிக்கின்றன. 'ஆகமம்\" இறைவனிடம் இருந்து வந்தது என்பதைக் குறிக்கும் 'ஆ\" என்பது அளவு, அறிவு, மரபு என்பதாகும். 'கம\" வருதல், போதல், இறைவனை உணர்தல் என்பதைக் குறிக்கும். அதாவது இறைவனிடம் இருந்து வந்த இது இறைவனை உணர்வதற்கு வழிகாட்டும்.


'ஆகமம்\" வெளியில் இருந்து, அதாவது வேறோர் இனத்தாரிடம் இருந்து பெறப்பட்டது என்பதையும் குறிக்கிறது. அந்த இனம் தமிழினமாகவும் இருக்கலாம். அல்லது ஆகமங்கள் முதலி;ல் தமிழில் எழுதப்பட்டு, பிறகு வடமொழியில் பெயர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் பொருள்படும்.


இன்னொரு விளக்கம். 'ஆ\" என்பது பாசம், 'க\" என்பது பசு, 'ம\" என்பது பதி. ஆகவே ஆகமம் என்பது பதி, பசு, பாசம் மூன்றையும் பற்றிக் கூறுவது. பிறிதொரு விளக்கம் 'ஆ\" என்பது சிவஞானம், 'க\" என்பது மோட்சம், 'ம\" என்பது மலத்தை ஒழித்தல்.



புலமை வாயந்த தமிழறிஞர்களான பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) மறைமலை அடிகள், கா.சு பிள்ளை ஆகியோர் ஆகமங்கள் தமிழிலேயே ஆதியில் இருந்தன என எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

திருமூலர் தாம் எழுதிய திருமந்திரத்தில் சிவபெருமான் 28 ஆகமங்களை வழங்கியதாகக் கூறுகிறார். அதில் ஒன்பது ஆகமங்களின் அடிப்படையில் தமது நு}லை அமைத்துள்ளதாக அவர் கூறுகிறார்.


வேதம் ஆகமம் இரண்டுமே இறைவன் அருளால் வெளிப்பட்டன என்பதையும் அவற்றின் தனித்தன்மைகளையும் தமிழில் முதன்முதலில் எடுத்துக் கூறியவர் திருமூலரே. சித்தாந்தம் என்ற சொல்லை முதன்முதலில் கையாண்டவரும் திருமூலரே!


வேதம் பொதுவானது ஆகமம் சிறப்பானது. வேதம் ஆகமம் என்று இரண்டே நு}ல்கள்தான் உண்டு. பிற நூல்கள் இவற்றின் அடிப்படையில் எழுந்தவை. சிவாகமங்கள் வேதத்தின் உட்கருத்தை அதாவது சைவ சித்தாந்தத்தை எடுத்துரைக்கின்றன. வேதத்தின் பிற பகுதிகளை மற்ற நு}ல்கள் எடுத்துக் கூறுகின்றன.


வேதங்களையும் ஆகமங்களையும் சிவபெருமான் அருளினார் என்பது சைவ சித்தாந்தத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்றாகும். ஆனால் வேதத்தை சிவபெருமான் அருளியிருக்க முடியாது. ஏனென்றால் சிவன் வேதகாலத்தில் கடவுளாக இருந்ததில்லை! அதாவது வேதத்தில் சிவனுக்கு இடம் இருக்கவில்லை. (மந்திரங்கள் என்றால் என்ன? பக்கம் 19)

வேதங்களையும் ஆகமங்களையும் இறைவன் அருளினான் என்று சொல்லப்படுவதற்கு காரணம் யாதெனில் இவை ஒருவரால் எழுதப்பெறாது பலரால் பல ஆண்டுகாலமாக எழுதாக் கிளவியாக ஓதப்பட்டு பின்னர் ஏட்டில் எழுதப்பட்டதேயாம்.

முன்னர் ஆகம விதிகள் காலத்துக்காலம் மாறிக் கொண்டு வந்ததை நீதிபதி மகராசன் குழுவினரது அறிக்கை வாயிலாக எடுத்துச் சொன்னோம்.


எனவே தமிழில் போற்றி (அர்ச்சனை) செய்வதற்கு ஆகமத்தில் விதியில்லை என்ற வாதம் எடுபடாது. அப்படித்தான் இருந்தாலும் ஆகமத்துக்கும் பன்னிரு திருமுறைக்கும் இடையில் முரண்பாடு காணப்பட்டால் ஆகமத்தை விட்டு விட்டு பன்னிரு திருமுறையையே பிரமாணமாகக் கொள்ள வேண்டும் என்று குன்றக்குடி அடிகளார் சொல்லியிருக்கிறார்.


நாயன்மார்களில் ஞானசம்பந்தர் தீவிர தமிழ்ப் பற்றாளர் என்பதை முன்னர் கூறினோம். ஞானசம்பந்தர் மொத்தம் 4196 பாடல்களை (283 பதிகங்கள்) பாடியிருக்கிறார். அதில் 147 இடத்திலே தன்னை 'தமிழ்ஞானசம்பந்தன்\" 'முத்தமிழ் விரதன்\" என்று சொல்லிக்கொள்ளுகிறார்! இஃது அவர் தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.


பக்தி இயக்க காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு நில்லாமல் அடிப்படை வழிபாட்டில் பல மாறுதல்கள் புகுத்தப்பட்டன.


'வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய, வைதீக மதத்தில் கோயில்களோ உருவ வழிபாடோ (விக்ரக ஆராதனையோ) இருக்கவில்லை\" என வடமொழி படித்து, ஜெர்மானிய மொழியிலே வேதங்களை மொழி பெயர்த்த மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் சொல்கிறார். உருவ வழிபாடு வணக்கம் வந்த பிற்பாடுதான் அவற்றுக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டன.


வேதப் பிராமணர்கள் யாகம் முதலியவை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும் சிலைகளையும் நிறுவ வேண்டிய அவசிய ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்னி வளர்க்கலாம் என்ற நியதி இருந்தது. அப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் தீக்கடவுள் ஒன்றுதான் தெய்வம். அதற்கு மேலே இந்திரன், வருணன் போன்ற தெய்வங்கள் எதுவாக இருந்தாலும் 'ஸ்வாஹா\" என்று சொல்லி அக்னியிலே போடுவதுதான் மரபாக இருந்தது.


இப்படி அக்னி வளர்த்த பிராமணர்கள் அக்னி ஹோத்திரி தாதாச்சாரியார் என்று அழைக்கப்பட்டார்கள். அக்னி ஹோத்திரிகள் என்றால் அக்னி வளர்க்க உரிமை பெற்றவர்கள் என்று பொருள்.


மற்ற வருணத்தார் உயர்ந்த பொழுது அவர்களுக்கு வேறு வழிபடு தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணர்களின் ஆதிக்கம் குறையவும் அக்னி வணக்கம் தனது செல்வாக்கை இழந்தது. அதிலிருந்து உருவ வழிபாடு ஆரம்பமாயிற்று. உருவங்களுக்கு அபிசேகம் செய்தவர்கள்.


உருவ வழிபாட்டை வேதம் ஒத்துக் கொள்ளாததால் விக்கிரகம் வைப்பதும் அபிசேகம் செய்வதும் 'கல்லைக் கழுவுகிறவன் தொழில்\" என அக்னி ஹோத்திரிகளால் பழிக்கப்பட்டனர். </span>

<b>நன்றி: தமிழ்நாதம்- கனடா</b>
Reply
#2
நீங்கள் சொல்வது சரி ப்ரிதி. ஆனால் தேவராமும் எமக்கு விளங்காதபடியால் தானே அதற்கு கீழே தேவராம் பொருள் போட்டு பாடிக்கின்றோம். அப்போ தேவராம் எந்த மொழியில் இருக்கின்றது. சில தேவராங்களில் என்ன சொல்கிறார்கள் என்றே தெரியாது. அதை எப்படி கூறுவீர்கள்

Reply
#3
<span style='font-size:25pt;line-height:100%'>நாலாயிர திவ்ய பிரபந்தம். இந்த சொற்களிலிருந்தே தமிழை அந்த காலத்தில் சமஸ்கிருதம் எப்படி கட்டிப் போட்டிருந்தது என்பதை அறியலாம்?

ஆன்ற தமிழ் மறை, ஐந்தாவது வேதம், திராவிட வேதம் என்றெல்லாம் போற்றிப் புகழப்படும் தமிழ் ஆழ்வார்களின் அருளிச் செயலான நாலாயிரம் இறைப் பாட்டுகளை திவ்யம் - (தூய்மை) ப்ரபந்தம் - (திரட்டு) என்ற இரு சமஸ்கிருத சொற்களால்தான் நாம் இன்றளவும் அழைத்து வருகிறோம்.

இனிமேலாவது... \"ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்' என இந்த புனித நூலுக்கு தமிழ் தலைப்பு கொடுக்கலாம். சரி... சமஸ்கிருதம் எப்படி தமிழை கட்டிப் போட்டது?...அந்த காலத்தில்... வேதம் தமிழ் தேசத்தையே ஆக்கிரமித்தது... எங்கும் வேதம்... எதிலும் வேதம் அதாவது இங்கே உள்ள சிலைகள், நுட்பமான சிற்பங்களை பார்த்த பிராமணர்கள்...\"இந்த சிலைக்கு ஏன் வெறும் பூ போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?... இந்த சிலையில் வேதம் சொன்ன தேவதைகளை நாங்கள் வர வைத்து காட்டுகிறோம்.அவர்கள் கண்ணுக்கு தெரியாத தேவதைகள். அஸரீரிகளாக இருப்பார்கள். அவர்களின் காதில் விழுமாறு வேத மந்த்ரங்களை நாம் உரத்து உச்சரித்தால் இந்த சிலைக்குள் எங்கள் வேதத்தின் தேவதை வரும்...'' என்றார்கள்.

தமிழன் முதலில் சிலைக்கு பூ தான் போட்டுக் கொண்டிருந்தான். அதுதான் நமது வழிபாடு என்று முன்பே நான் சொல்லியிருந்தேன்.நம்மாழ்வாரின் திருவாய்மொழி (2940) தமிழ்ச் செய்யுளைப் பாருங்கள்.

\"<b>நாடாத மலர் நாடிநாள்தோறும் நாராயணன் - தன்வாடாத மலர் - அடிக்கீழ்வைக்கவே வகுக்கின்று...வீடாடி வீற்றிருத்தல்வினை அற்றது என் செய்வதோ?...ஊடாது பனி வாடாய்...!உரைத்து ஈராய் எனது உடலே...''</b>

அதாவது... இறைவனிடம் தனது எண்ணத்தை தெரிவிக்கும்படி... நாரைகள், அன்னங்கள், குயில்கள், மகன்றில்கள் (மரங்கொத்தி இனத்தைச் சேர்ந்த வளைந்த மூக்குடைய கடற்கரை பறவை), சிறிய குருகுகள் (கொக்குகள்), வரி வண்டுகள், இளங்கிளிகள், நாகணவாய் பறவைகள் ஆகியவற்றிடம் தூது செல்ல கேட்டுக் கொண்டே வரும் ஆழ்வார்...அடுத்து தூதாய் அனுப்ப பனிக்காற்றை தேர்ந்தெடுக்கிறார். வாடைக்காற்று வீசும் வேளையில்... அவ்வாடையிடம் வேண்டுகோள் வைக்கிறார். அதாவது பாட்டு தான் ஆழ்வாருடையது.பறவைகளையும், வண்டுகளையும், பனிக்காற்றையும் இங்கு தூதாக அனுப்புவது தலைமகள்.

அதாவது இறைவனைப் பிரிந்த தலைமகள்.\"வாடைக்காற்றே... வாடைக் காற்றே... இங்கே வா. என் பெருமானிடம் எனக்காக நீ போய் அவனிடம் ஒன்று சொல்வாயாக. இப்படி என்னைப் பிரிந்து அவனும், அவனைப் பிரிந்து நானும் இருப்பது நல்வினையாகாது என்று சொல்லு...உலகில் இத்தனை உயிர்களை, ஜீவன்களை, மனிதர்களை அவன்தான் படைத்தான். உலகில் உள்ள பல்வேறு வகை பூக்களை பறித்து நாள்தோறும் நாராயணனின் வாடாத பூமலர் திருவடிகளில் மெல்ல மெல்ல இட்டு வழிபடுவதற்காகவே அத்தனை பேரையும் படைத்தான்.நான் மட்டும் அப்படி செய்யமுடியாத வகையில் பிரிவது என்ன நியாயம்?... அவனிடம் போய் நீ சொல்லு.

<b>என்னை ஏற்கவில்லையாயின்... நீ மறுபடி வந்து என் சதைகளை பிய்த்தெறி எலும்புகளை உடை... என் உடலை அறுத்தெறிந்துவிடு பனிக்காற்றே'' </b>

எவ்வளவு அழகான இலக்கியம் பாருங்கள். தலைமகள் பனிக்காற்றிடம் சொல்வதாக ஆழ்வார் அருளுகிறார்.அந்த பனிக்காற்று இன்றும் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த பாடல் மூலம் நமக்கு அந்த காற்று என்ன சொல்கிறது?...\"<b>பூக்களை பறித்து தினமும் பூ+செய் பூசை செய்வது தான் தமிழர் பண்பாடு'' என்று.இந்தப்பண்பாட்டில்தான் குறுக்கே வந்தார்கள் பிராமணர்கள்.\"முதலில் நீ பூ போட்டுக் கொண்டே இரு... நான் வேதம் சொல்கிறேன்....' என்று வெளியே நின்றார்கள்.</b>

காரணம்... நீ பகவான் பக்கத்தில் நின்று எதாவது சொன்னால் அவன் மேல் எச்சில் தெறிக்கும். அதனால் நீ பூ போட்டபடியே இரு. நான் சத்தம் போட்டபடியே இருக்கிறேன்''இதற்கு பெயர் அத்யயன பட்டர்.கொஞ்சநாள் அனது. அத்யயன பட்டரே உள்ளே வந்து விட்டார். உள்ளே என்றால்?... <b>கர்ப்ப கிரகத்துக்குள்.இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீ வெளி வேலைகளைப் பார்.அடுத்து... ஆகமக்காரர்களின் ஆதிக்கம். அவர்கள் முழுமுதல் சமஸ்கிருதக்காரர்கள் ஆனதால்.தமிழன் வெளியே நிறுத்தப்பட்டான். சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள். தமிழ் பூக்களை தூவி சமஸ்கிருத அர்ச்சனை நடத்தினார்கள்.இப்படி \"சமஸ்கிருத ஆட்சி' நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் தான்... நமது தமிழ் பக்தி இலக்கியத்தை முன்னிறுத்துவதற்காக... ஆங்காங்கே ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினார்கள். </b>

5-ம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலங்களில்...இவர்கள் தங்களது மிகச்சிறந்த பக்தி மற்றும் தமிழ்ப்பாசம், தமிழறிவு காரணமாக நாராயணனை போற்றி அதேசமயம் வேதக் கருத்துக்களையும், வடமொழி கதைகளையும் உள் வாங்கி தமிழிலேயே பாடல்களை இயற்ற ஆரம்பித்தனர்.இந்த 12 அழ்வார்கள் தங்களது பாடல்களை குறிப்பிட்ட கோயில்களில் குடி கொண்டுள்ள பெருமாள் மீது சாற்றிப் பாட... அந்த திருத்தலங்கள் தமிழ் பாடப் பெற்றதால் புனிதமாயின.அதாவது திவ்ய தேசமாயின. அப்படியிருந்தும்( தொடரும் ) </span>
Reply
#4
ஆழ்வார்கள் தமிழில் பாடியதால் கோயில்கள் புனிதமாகின என்று பார்த்தோம்.ஆனால்... அதே அழ்வார்கள் பாடிய அதே கோயில்களில் கூட... காலை வேளைகளில் ஒலிக்கிறதே வடமொழி சுப்ரபாதம்!சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்.அதாவது "Good Morning to God and wake up him"..இன்று பற்பல கோயில்களிலும்... காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்... ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?... என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே... அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

<b>தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம்.எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்..."கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது...''என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.இது யார் எழுதியது?... இதன் அர்த்தம் என்ன?... தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே... இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...திருப்பதி வெங்கடேசனை எழுப்பும் இந்த சுப்ரபாதம் ஏன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ஒலிக்கிறது?...என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழ வேண்டும்... அதற்கு பதில் உங்களில் பலருக்கு தெரியாது. இது சத்தியம்</b>.

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத "Good Morning''ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்... தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர்<b>."ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி' </b>என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

"கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது...'' என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது. அதாவது... விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். "கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...' என ராமனை எழுப்பி அழைக்கிறார் விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு... வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. இவர் இந்த சுப்ரபாதத்தை 14-ம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள்.


ஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே... அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.இனிய தமிழில் <b>"திருப்பள்ளியெழுச்சி' என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்த பாடல்களை இயற்றியிருக்கிறார்</b>.

<b>"கதிரவன் குணதிசைச் சிகரம்
வந்துஅணைந்தான்;
கனை இருள் அகன்றதுகாலை அம்
பொழுதாய்மது
விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து
வந்து ஈண்டிஎதிர்திசை நிறைந்தனர்.
இவரொடும் புகுந்த இருங் களிற்று
ஈட்டமும் பிடியொரு முரசும்அதிர்தலில்
அலை-கடல் போன்றுவிது
எங்கும்அரங்கத்தம்மா.
பள்ளி எழுந்தருளாயே</b>...-

இதுதான் தமிழ் திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடல்.கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது... காலைப்பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும்இ பூமியின் மன்னர்களும்இ பக்தகோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள்.அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஒசையும்... யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுகஇ அவர்களுக்கு காட்சி தருக...-<b>என திருவரங்கத்து பெருமானை தமிழால் தட்டி எழுப்புகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.இங்கே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே... -என தன் இறைவனை அம்மாவென அழைக்கிறார் ஆழ்வார். இந்தப் பாடலில் பக்தி இல்லையா?... சுவை இல்லையா?... இலக்கியம் இல்லையா?.</b>.. அல்லது உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?..

.இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.

<b>கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன
இலையோகதிரவன் கனை கடல்முளைத்தனன்
இவனோதுடியிடையார் சுரி குழல் பிழிந்து
உதறிதுகில் எடுத்து ஏறினர்.
சூழ்புனல் அரங்காதொடை ஒத்த
துளவமும் கூடையும் பொழிந்துதோன்றிய
தோள் தொண்டரடிப்பொடி என்னும்அடியனை அளியன்
என்று அருளி உன்அடியார்க்கு ஆட்படுத்தாய்!
பள்ளி எழுந்தருளாயே!-</b>

சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா. கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.சின்னச் சின்ன இடுப்புகளை பெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் அடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும்இ பூக்குடலையும் தாங்கி காத்திருக்கிறேன். இந்த அன்பனை ஏற்று அருளி ஆளாக்க வேண்டும்.<b>இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்?(</b>தொடரும்)
Reply
#5
பிரீதி மற்றும் ரமா
தமிழ்வாசகமான திருவாசகத்தை பண்ணோடு பாடினால் உருகாத மனமும் உண்டோ?
Plan Your Work. Work Your Plan
Reply
#6
தொண்டரடிப் பொடியாழ்வாரின் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பத்தில்... முதல் மற்றும் கடைசி பாடல்களை எடுத்துக் காட்டினேன்.என்ன வர்ணனைகள்?... என்ன எதுகை மோனைகள்?... எவ்வளவு இனிமை வழிகிறது!"<b>கொழுங்கொடி முல்லையின் கொழுமலர்' </b>என்ற இரண்டாவது பாடல், <b>"சுடர் ஒளி பறந்தன சூழ்திசை எல்லாம்' </b>என்ற மூன்றாவது பாடல், <b>"மேட்டு இள மேதிகள்' </b>என்ற 4-ஆம் பாடல், <b>"புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்'</b> என்ற ஐந்தாம் அருளிச் செயல் <b>"இரவியர் மணி நெடுந் தேரோடும்' </b>என்ற ஆறாவது பாசுரம்."<b>அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்' </b>என ஆரம்பிக்கும் ஏழாவது பாட்டு, <b>வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க... </b>-என்ற எட்டாவது பாட்டு... <b>ஏதம் இல் தண்ணுமை எக்கும் மத்தளி... - </b>என்று ஒன்பதாவது பாசுரம்...தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்த பத்து பாடல்களும்...

<b>இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.சுப்ரபாதத்தில் இன்னொரு "லாஜிக்'கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?... இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.ஆனால்... நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம்.</b>

<b>ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே. இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.</b>

அவர் திருப்பாணாழ்வார்... சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் "பாண்' என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.ஆனால்... நமது பாணரோ... திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் "டிங்கு டிங்கு டிங் டிங்...' என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.

<b>ஆனால்... இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ..."நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்... போடா' என துரத்தியடித்தார்கள்.பாணரோ... நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார்</b>.

இவரது தமிழிசையை... ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க... காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு... ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார்.எங்களை மன்னிப்பீர் பாணரே...

<b>உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்... அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம். ஆனால்... பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்</b>.

உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, "நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா... அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்' என கேட்டுக் கொண்டார்.வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்'' என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர்.

<b>பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி... திருவரங்கத்தை அடைய...அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்... அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே...'' என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார்.</b>..<span style='font-size:25pt;line-height:100%'><b>இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...(</b></span>தொடரும்)
Reply
#7
<b>ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களே சிந்தியுங்கள். தமிழ்நாட்டின் ஆலயங்கள் எல்லாம் வெறும் சமய வழிபாட்டுத் தலங்களல்ல, பண்டைத் தமிழரின் கலை, கட்டிட, விஞ்ஞான், தொழில்நுட்பத் திறன்களை உலகுக்கு எடுத்துக் காட்டும் உலகத் தமிழரின் சொத்துக்கள். </b>

அவையெல்லாம் தமிழை எதிர்க்கும் பிராமணரின் கைகளில் இன்று. அவர்கள் தமிழைக் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது விட்டாலும் கூட, இதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு சில இந்தியத் தமிழ்ச் சகோதரர்களுக்கு எம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். ஈழத்தில் அவர்களுக்கு முன்னோட்டியாக தமிழுக்கு ஆலயங்களில் முதலிடம் கொடுக்க வேண்டும், உண்மையாக, ஏன் தமிழைப் பாவிக்கக் கூடாது, இன்னும் பிராமணர்களால், சமஸ்கிருதத்தில் தான் பூசை பண்ண வேண்டுமென்பதற்கு சைவ சித்தாந்தத்தில் ஒரு காரணமுமில்லை. சமஸ்கிருதத்தை மட்டும் பாவிக்க வேண்டுமென்பது பிராமணர்களின் சதி. இதன்மூலம் இந்தத் தொழிலில் தங்களுடைய monopolyயை வைத்திருப்பதற்காக.

<b>நானும் உங்களைப் போல் பிராமணரின் தமிழ் எதிர்ப்பை அறியாமல் தானிருந்தேன்.திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஓரு தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழ்த் தேவாரத்தைக் கோயிலுக்குள் பாட பிராமணர்கள் எதிர்த்ததை நேரில் பார்த்த அன்று தான் பிராமணர்களை அவதானிக்கத் தொடங்கினேன். நான் ஒரு சைவப்பழமல்ல. இன்னும் முப்பது வயதைத் தாண்டவில்லை. </b>

என்னுடைய அனுபவத்தில் ஈழத்துப் பிராமணரும் தமிழை எதிர்ப்பதில் சளைத்தவர்களல்ல ஆனால் அதை வெளிக் காட்டுவதில்லை. நீங்கள் நான் சொல்வதை நம்பாது விட்டால், நீங்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள கோயில்களில் போய்த் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள். அவர்கள் முகம் சுழிப்பதைப் பார்க்கலாம்.

<b>எங்கள் தமிழ் முன்னோர்கள் எங்களுக்காக விட்டுச் சென்ற தமிழ்நாட்டுக் கோயில்களை ANTI TAMIL பார்ப்பான்களின் பிடியிலிருந்து விடுவிக்க முயற்சிக்கும் இந்தியத் தமிழ்ச்சகோதரர்களுக்கு நாம் எமது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும், குறைந்தது இணையத்தளங்களிலாவது உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். தமிழ் மன்னர்களால், தமிழர்களால் இரத்தமும், வியர்வையும் சிந்தப்பட்டுக் கட்டப்பட்ட தமிழரின் ஆலயங்களில் தமிழுக்கு உரிய இடமளிக்கப் பட்டு தமிழ் மீண்டும் கோலோச்ச வேண்டும்</b>.
Reply
#8
<b>பிராமணரின் தமிழ் வெறுப்புக்கு எடுத்துக்காட்டை வாசித்துப் பாருங்கள். தங்கத் தமிழும் தமிழீழ மண்ணும் எங்கள் இரு விழிகள் என்று புலம்பும் ஈழத்தமிழர்களே, பிராமணிகள் தமிழுக்குச் செய்வதைப் பாருங்கள். இதை நான் எழுதவில்லை, இவர்களீண் தமிழ் வெறுப்பைப் பார்த்துப் பொறுக்க முடியாத, பாரதியார் போன்ற தாத்தாச்சாரியார் என்ற பிராமணார் தான் இதை எழுதுகிறார்.ஈழத்தமிழர்களே சிந்தியுங்கள்!!!</b>



தமிழ் இறைவனின் நேச பாஷையா அல்லது நீசபாஷையா என்பதை திருப்பாணாழ்வாரின்
வாழ்வியல் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம்.
திருப்பாணாழ்வாரின் தமிழை கேட்பதற்காக ஆளனுப்பி அவரை மரியாதையோடு தூக்கிவரச்
சொன்னார் அரங்கத்துக்கு பெருமாள். ஆனால்... அப்பேற்பட்ட ஸ்ரீரங்கத்திலே
படுத்துக்கிடக்கும் ரங்கநாதனுக்கு எதிரே நாலாயிரம் அருளிச் செயலை பாடுகிறார்களா?
ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்துநாள் பின் பத்துநாள் ஆக
இருபது நாள்கள் நாலாயிரம் ஆழ்வார்கள் அருளிச் செயலை பாடி ஒரு தமிழ்விழா
நடத்துவார்கள். இது வருடா வருடம் நடக்கும்.
ஸ்ரீரங்கத்தில் எப்படி நடக்கும் என்றால்... மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழ் கேட்க
காத்திருக்க... உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்துக்கு தூக்கி
வருவார்கள்.
அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு... பாடி முடிப்பார்கள். இதற்கு
அரயர் சேவை என்று பெயர். இது முடிந்த பிறகு... அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்தபிறகு
உற்சவரை மறுபடியும் தூக்கி உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

<b>ஆக... தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கி
வருகிறார்கள். அதுவும்... தமிழுக்காக ஆழ்வாரை தூக்கிவரச் சொல்லி தமிழ்கேட்ட
ரங்கநாதனுக்கு... நமது பூஜை புனஸ்காரங்கள்படி தமிழ் கேட்க வாய்ப்பில்லை. இதை நான்
முன்பே பலதடவை வலியுறுத்தியபோதும்... வைணவ சமயவாதிகள் சிலர் எதிர்த்தனர்.</b>ஆனால் என் நிலையிலும், தமிழின் நிலையிலும் மாற்றமே இல்லையே?

<b>சரி வைணவத்தில் தமிழ் பார்த்தாயிற்று சைவத்தில்?...
“தென்னாடுடைய சிவனே போற்றி...
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...”
என்ற தமிழ்க் கவிதையே சிவன் தென்னாட்டவன் அதாவது தமிழ்க் கடவுள்... ஆனாலும்
எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என தமிழ்நாட்டுக்காரனாக
தத்துவப்படுத்தியிருக்கிறது.
திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் அளவுக்கு சிவனுக்கும்
தமிழுக்கும் Tight Relationship கொடுத்துள்ளார்கள். சிவனடியார்களும் நாயன்மார்களும்</b>உதாரணத்துக்கு...

இன்றைய வேதாரணியம்... அன்றைய திருமறைக்காடு... அங்குள்ள சிவன் கோயில்
மணிவாசல் கதவு வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டது.
என்னென்னமோ பண்ணி பார்த்து விட்டோம். திறக்கவே முடியவில்லை என சிவனடியார்கள்
துன்புற்ற வேளை... திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மணிக்கதவை திறக்கவேண்டும்
என முடிவு செய்தனர்.
திருநாவுக்கரசர் கோயில் வாசலிலேயே நின்று...

<b>``பண்ணினர் மொழியோள் உமைபங்கரோ
மண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினை
திண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...”
என தமிழ்ப்பாடினார். தாமதமானது, மீண்டும்
``அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்
இரக்க மொன்றிலீர் எம்பெருமானரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரே
சரக்க இக்கதவம் திறம்பிம்பினோ</b>...”


இந்த இரண்டாவது தமிழ்ப் பாட்டு கேட்டதும் வேதங்களால் வெகுகாலம் மூடிக்கிடந்த சிவன்
கதவு மணிக்கதவு மெல்லத் திறந்தது. இறைவனுக்கு தமிழ்ப் பாமாலைகள் சாத்தி
வழிபட்டனர். மகிழ்ச்சி பொங்கியது. சரி, இரவாகிவிட்டது’ கதவை அடைத்துவிட்டு நாளை
திறக்கவேண்டும்.
மறுபடியும் திருஞான சம்பந்தர் ‘சதுரமறைதான்...’ என பதிகம் பாட கதவு மூடிக் கொண்டது.
அன்றிலிருந்து தான் கதவு திறந்து சாத்தும் வகையில் மாறியது என்கிறார்கள்.
இந்தக் கதையை நாம் நம்பவேண்டாம் என்றாலும்கூட <b>பல்லாண்டு காலம் வேதக்காரர்களால்
பூட்டப்பட்ட கதவை தமிழ்பாடி திறக்கவேண்டும்’ என்ற கருத்துருவே நமக்கு போதுமே.
வேதம் அடைத்ததை தமிழ் திறக்கும் என்ற கருத்தை நிலை நிறுத்தவே இந்த கதையில் கதவு
கொண்டு வரப்பட்டது.
இப்படியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிய...பலதரப்பினரும் புரிந்து
கொள்ளத்தக்க தமிழ்ப் பாக்களை வளர்த்தது சைவம்.</b>
<b>
?</b>
--
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)