![]() |
|
தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...! (/showthread.php?tid=3289) |
தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...! - இளைஞன் - 09-15-2005 <b><span style='font-size:25pt;line-height:100%'>தொழில்நுட்பமயமாகி வரும் பண்பாடு...!</b></span> <b>செப்டம்பர் 14 - அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை தினம்</b> ------------------------------------------------------------------------------- <b>தெ.மதுசூதனன்</b> எங்கும் பரவலாக எவராலும் பயன்படுத்தும் தொடர்களில் 'தமிழ்ப் பண்பாடு' என்பதும் ஒன்று. இத் தொடர் ஜனரஞ்சகத் தொடராகவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. இத் தொடரில் வரும் பண்பாடு என்னும் சொல் ஏறத்தாழ கடந்த ஐம்பது ஆண்டுகளாக மாத்திரமே வழக்கிலுள்ளது என்பர். 1926-31 இல் சென்னைப் பல்கலைக்கழகம் தயாரித்த லெக்சிகன் அகராதியில் பண்பாடு எனும் சொல் இல்லை. ஆங்கிலத்தில் 'culture' எனக் குறிப்பிடப்பெறும் சொல்லை 'கலாசாரம்' என்று கூறும் மரபுதான் வழக்கில் இருந்தது. culture எனும் ஆங்கிலச் சொல்லுக்கு டி.கே.சிதம்பரநாத முதலியார்தான் 'பண்பாடு' என்னும் பதமே பொருத்தமானதென மொழிபெயர்த்தார். அது நிச்சயிப்புச் சொல்தான் என பேரா. வையாபுரிப் பிள்ளை கூறுவார். இருப்பினும் 'பண்பாடு' எனும் சொல்லுக்கு நியமமான தமிழ்ச் சொல்லாகத் திருக்குறளில் வரும் 'சால்பு' எனும் சொல்லே ஓரளவு இக் கருத்தைத் தரக்கூடியது. இந்தப் பொருள் தரக்கூடியதற்கான சான்றாகவே பேரா. சு. வித்தியானந்தன் தனது நூலொன்றுக்கான தலைப்பாகத் 'தமிழர் சால்பு' எனப் பெயர் குறிப்பிட்டிருந்தார். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய மானுடவியல் சமூகவியல் ஆகிய புலமைத்துறைகளின் வளர்ச்சியின் பின்னரே அவற்றின் வழியே சமூக அசைவியக்கத்தை ஆராய்ந்து பார்க்கும் கண்ணோட்டம் வளர்ந்தது. culture எனும் சொல் 'பண்பாடு' , 'கலாசாரம்' என்னும் இரு சொற்களின் வழியே ஒரே பொருள் தரும் வகையில் தமிழில் வேர் விட்டுள்ளது. இவற்றின் வெளிப்படுத்துகை 'கோட்பாடு' வகையிலான புரிதல் அறிதல் தெளிதல் எனும் நிலையில் வளர்ச்சியுற்றுள்ளது. பண்பாடு என்றால் என்ன? என்பது பற்றி பல வல்லுநர்கள் பலவாறு விளக்கியுள்ளனர். வரையறை செய்துள்ளனர். ஆனாலும், எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை என எதையும் கூற முடியாது. ஒவ்வொருவரின் வரையறைகளும் வேறுபட்டுள்ளன. மானுடவியல், சமூகவியல் போன்ற பல்வேறு துறைசார் ஆய்வுப் பரப்புகளின் வளர்ச்சிக்கேற்ப 'பண்பாடு' என்னும் கருத்தாக்கம் புத்தாக்கம் பெற்றே வருகிறது. இந்நிலையில் பண்பாடு பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை எற்றுக் கொள்ளல் அவசியமாகின்றது. பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கள்கூட்டம் தனது சமூக, வரலாற்று வளர்ச்சியினூடாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதிகப் பொருள்கள், ஆத்மார்த்தமான கருத்துகள், மத நடைமுறைகள், சமூகப் பெறுமானங்கள் ஆகியவற்றின் தொகுதியாகும். பண்பாடு என்பது ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி நிலை உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும். பண்பாடு என்னும் கருத்தாக்கம் மனிதர்களுடன் மட்டுமே தொடர்புடையது. பண்பாடு என்பது தலைமுறை தலைமுறையாக அறிவுசார்ந்த நிலையில் கற்றுணர்ந்த நடத்தை முறைகளைக் குறிக்கிறது. மனிதர்களின் பிறப்புநாள் முதற்கொண்டு இறக்கும்நாள் வரை அவர்களது பண்பாட்டைச் சமுதாய வயமாக்கம் (socialization), பண்பாட்டு வயமாக்கம் (enculturation) மூலம் கற்கின்றனர். கற்பிக்கும் நிறுவனம் பெற்றோர்களாகவோ குடும்பமாகவோ பள்ளிக்கூடமாகவோ பல்வேறு நிறுவனங்களாகவோ -ருக்கின்றன. ஆகவே, பண்பாடு என்பதை ஒரு குறிப்பிட்ட மக்களோடு அல்லது குழுவோடு தொடர்புடையதாகவே புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு குழுக்கள் ஒரே பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளன என்று சொல்வது அல்லது கருதுவது பண்பாட்டை ஒரே மாதிரியானதாகப் பார்ப்பதாகும். ஒரு சமுதாயத்தில் பல்வேறு குழுக்கள் இருக்கலாம். இதனால் நாம் குழு என்பதை ஏதேனும் ஒரு பண்பாட்டு மரபைப் பொதுவாகக் கொண்டுள்ள மக்கள் கூட்டம் என்றே வரையறுக்கலாம். அது மதம் - சாதி - தொழில் - மொழி - இனம் போன்றவையாக இருக்கலாம். இந்தக் குழுக்கள் குறிப்பிட்ட நிலவியல் எல்லைகளுக்குள் அமைந்து கிடக்கும். −ங்கே நிலவியல் எல்லை என்பது அதிகாரம் சார்ந்த ஒன்று. நிலவியல் எல்லையும் பண்பாட்டு நிலைக்களன்களும் ஒன்று அல்ல. இருப்பினும் பண்பாட்டு எல்லை என்பது குறிப்பிட்ட பண்பாட்டு மரபுகளைப் பின்பற்றும் குழுவின் பரவிக்கிடக்கும் நிலவியல் பகுதியைக் குறிப்பதாகும். ஆனால், நிலவியல் எல்லை என்பது இயற்கை எல்லைகளால் அல்லது அரசியல் அதிகார வரம்புகளால் தீர்மானிக்கப்படுவதாகும். இத்தகைய நிலவியல் எல்லைகளைக் கொண்டு குழுக்களை வரையறுக்க −யலாது. ஏனெனில் குழுக்களின் பரவல் அரசியல் அதிகார நிலவியல் எல்லைகளுக்கு உள்பட்டது. ஆயினும், ஒரு சமுதாயத்தில் காணப்படும் பண்பாட்டு எல்லைகளை அரசியல் சார்ந்த நிலவியல் எல்லைகளின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது பொருத்தமற்றதாகவே அமையும். ஆகவே மொழி, பண்பாடு, இலக்கிய மரபு என்பனவெல்லாம் அவை தோன்றிய சமூகத்தின் இயற்கை வெளிப்பாடுகளல்ல. அவை கற்பிதம் செய்யப்பட்டவை. கட்டமைக்கப்பட்டவை. அச் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் குழுவின் நலன் நோக்கியவை. இதனால் இக்குழு மொழியையும் பண்பாட்டையும் இலக்கியத்தையும் செவ்வியல் நெறிப்படுத்தும் பணியைத் தனதாக்கிக் கொள்கிறது. இத்தகைய செம்மைப்படுத்தும் நெறிமுறைகளின் பின்னாலுள்ள வன்முறையையும் அரசியலையும் நடைமுறை அனுபவங்களின் அடிப்படையில் நாம் இனங்காணலாம். - நெறிப்படுத்தப்படும் எல்லைக்குள்பட்ட பல்வேறு மக்கள் குழுக்களின் மொழிகளும் பண்பாடுகளும் ஓரங்கட்டப்பட்டு −ழிந்தொதுக்கப்பட்டு −றுதியில் மொழி - பண்பாடு ஆகியவற்றின் பன்முகத் தன்மைகள் அழித்தொழிக்கப்படும். - ஆதிக்கம் செலுத்தும் குழு தனது அடையாளத்தை எல்லோருக்குமான அடையாளமாக நெறிப்படுத்தப்பட்ட செவ்வியல் கூறுகளாகத் திணிக்கும். −துவே −யற்கை எனவும் பிற அனைத்தும் விலகல்கள் எனவும், பிறழ்வுகள் எனவும் செவ்வியல் அளவுகோல்களுக்கு உட்படாதவை எனவும் வரையறுக்கும். −தன் மூலம் சமூகத்தின் சகல தளங்களிலும் தனது மேலாட்சியை நிரந்தரமாகக் கட்டமைத்துக் கொள்ளும். எந்தவொரு குழுவினரின் அல்லது பல்வேறு குழுக்களின் பண்பாடு என்பது ஆதிக்கக் குழுவின் சார்நிலை நின்ற மேலாட்சி செலுத்தும் பண்பாடாகவே −ருக்கிறது. மற்றவை யாவும் ஓரங்கட்டப்பட்டு விலக்கி வைக்கப்படுகின்றன. 'தேசியப் பண்பாடு' என்ற கற்பிதம் ஒன்றைக் குழுக்களின் பண்பாடாகக் கட்டமைக்கின்றன. பண்பாட்டின் பன்மைத்துவம் மறுக்கப்படுகின்றன. தேசிய மயமாக்கல் தேசியத் தனித்துவப் பண்பினைப் பாதுகாத்தல் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, ஆனால் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த இரு சக்திகள். இந்த இரு சக்திகளின் சங்கமத்தில் நின்று கொண்டுதான் 'பண்பாடு' பற்றிப் பேசுகின்றோம். எவ்வாறாயினும் உலகளாவிய நாடுகள், தேசிய, உள்ளூர் நிலைகளிடையே அடிப்படையான இயல்பான இன்றியமையாத நெருக்கடிகள் ஏற்படாமல் இனியும் பண்பாடு வளர முடியாது என்ற குரல்களும் சில முனைகளில் இருந்து கேட்கிறது. இதற்கான சாத்தியங்களும் உருவாகி வருகிறது. இன்றைய உலகமயமாக்குதல், தனியார் மயமாக்குதல் ஆகியவற்றின் வல்லமைக்கு முன்னால் தேசியத் தனித்துவப் பண்பிலிருந்து பண்பாடு தன்னைத் தனிமைப்படுத்தி அடிபணிந்து நிற்கும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான பண்பட்ட பண்பாடுகள் யாவும் காட்டுமிராண்டித்தனத்துக்கு முன் அடிபணிந்து விட்டதைக் கண்டோம். ஆக, பண்பாட்டுத் தனித்துவப் பண்பு முழுமையான ஒன்று எனக் கருதப்படும் இடங்களில் இனவெறி செழித்தோங்குகிறது. நீண்டகாலம் நடந்து வருகிறது. தனிமைப்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்ட பண்பாடுகள், எல்லாப் பண்பாடுகளும் கூட தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும். எனவேதான், உலகமயமாக்கலின் தொடக்கத்திலிருந்து நாமறிந்துள்ள பண்பாட்டுத் தன்னிலைக் கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாகிவிட்டது. தேசிய தனித்துவப் பண்புகளுக்குப் பிந்தியதாக உருவாகி வரும் தனித்துவங்கள் ஏற்றத்தாழ்வு அநீதி, தனிமையாக்கம், வன்முறை ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப் பிடிக்கும் திறன் கொண்டிருந்தும் அதனை −ன்னும் மெய்ப்பிக்கவில்லை. மேலும் பங்குச் சந்தையின் ஏற்றத் தாழ்வுகளையும் தேவை - வழக்கீட்டு உறுதியின்மையினையும், அவசரகதியிலான செயல்முறைகளையும் உருவாக்குகின்றன. ஆதிக்கக் கோட்பாடுகளின் புதியவகையிலான வகைப்பாடுகளின் அணுகுமுறைகளின் முன்னால் பண்பாட்டினைப் பணியுமாறு செய்வது சமூக அசைவியக்கத் தொழிற்பாட்டினை நிறுத்துவதாகவே அமையும். படைப்பாற்றல் உந்துதலுக்குப் பதிலாகச் சந்தைச் சமூகத்தின் மன இறுக்கத்தைப் புகுத்துவதாகவே இருக்கும். ஆகவே, நாம் இன்று இரு பெரும் அபாயங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. - பண்பாட்டை அவசியமற்ற ஆடம்பரப் பொருளாக உருவகித்துக் காட்டும் போக்கு. இதனால் கைத்தொழில் சமுதாயங்களுக்கு 'அறிவியல் தகவல்' போன்று தகவல் சமுதாயங்களுக்குப் 'பண்பாட்டுக் கண்ணோட்டம்' தேவை என வலியுறுத்துவது. இதனால் சமூகப் பிரிவினைகளைக் களைவதற்கு ஒரு பண்பாட்டு விலை கொடுக்க வேண்டும் என்னும் நிலை வந்துவிடுகிறது. பெரும்பாலும் இந் நிலைமையைத்தான் நாம் மறந்து விடுகிறோம். - அடுத்து மின்னணுவியல் அடிப்படைவாதம் எனும் போக்கு. இதனால் தொழில்நுட்பம் சார்ந்து மனிதத்தன்மையற்ற ஒரு பண்பாட்டினை உருவாக்கும் போக்கு பரவலாகிறது. இதனைப் பண்பாட்டு ஆய்வு மையங்களும் பல்தேசியக் நிறுவனங்களும் சந்தைப் பொருளாதாரத்தைப் பரப்பி வருகின்றன. இன்று பண்பாடு தொழில்நுட்பமயமாகி வருகிறது. இதனால் பண்பாடு தனது பொருளையே இழந்து வருகிறது. படியாக்கப் பண்பாடு என்பது கருவிலேயே சிதைந்து போன ஒரு பண்பாடுதான். ஏனென்றால் ஒரு பண்பாடு சுதந்திரத்தை இழக்கும் போது, அது ஒரு பண்பாடாக −ருப்பதே அற்றுப் போகும். ஒன்றுக்கொன்று கொண்டு கொடுத்து வினைபுரிவதுதான் பண்பாட்டின் உயிர்நாடி. இந்த எதிரெதிர் வினை கலப்பினத்திற்குத்தான் வழிவகுக்கும். படியாக்கத்திற்கு அன்று. படியாக்கத்தின் ஒன்று மற்றொன்றின் உள்ளபடியான படியாக்கமாகும். கலப்பினத்தில் ஒன்றும் மற்றொன்றும் புதிய உரு மாதிரியை உருவாக்குகிறது. இந்த உரு மாதிரி வேறுபட்டதாக இருந்தாலும் தனது மூலத் தனித்துவப் பண்பினை இயற்கையாக நிலைநிறுத்திக் கொள்கிறது. பண்பாட்டுக் கலப்பு எங்கு நிகழ்ந்திருந்தாலும் அது தன் ஆணிவேர்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. புதிய ஒருங்கிணைப்புகளை உருவாக்கியுள்ளது. இதுவே தனிமைப்படுத்துவதற்கான எதிரான மருந்தாகவும் அமைந்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்கா சார்ந்த மேற்குப் பண்பாட்டின் ஆக்கிரமிப்பு மூன்றாம் உலக நாடுகளின் பண்பாடுகளின் மீதான மிக மோசமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. காலனித்துவ ஆதிக்கப் பண்பாட்டுக்கு உள்ளான நாடுகள் தமது இயல்பான பண்பாட்டு உருவாக்கங்களின் தொடர்ச்சியை −ழந்து, மேற்குமயமான பண்பாடுகளின் உட்கிடக்கையை உள்வாங்கிச் சென்றுள்ள பண்பாடாகவும் உள்ளது. நவீன ஆதிக்கப் பண்பாடு மறு உருவாக்கல் தொடர்ந்து நிலைபெற்று வருகிறது. தொடர்பு ஊடக வலைப்பின்னல் மேற்கு மயமாகி வரும் பண்பாட்டின் கருத்தியல் வன்முறையை எங்கும் நிகழ்த்தி வருகிறது. ஆகவே, இன்றைய பண்பாட்டுத்தளம் அரசியல் கருத்தியல் ஆதிக்கப் போக்குகளுக்கு எதிரான தளமாகவும் உள்ளது. இந்தப் பின்புலத்திலேதான் பண்பாடுகளின் பன்மைத்துவம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். <i>நன்றி: ஆறாம்திணை</i> - stalin - 09-16-2005 :!: |