Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 354 online users.
» 0 Member(s) | 352 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,280
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,655
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,190
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  எரிபொருளில் இயங்கும் mp3 player
Posted by: Thiyaham - 09-17-2005, 02:50 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (6)

மெதனோலில் (அல்க்ககோல் இனத்தை சேர்ந்தது) இயங்கும் mp3 playerஐ Toshiba நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 60 மணித்தியாலங்கள் வரை இயங்க கூடியது. 2007இல் சந்தைக்கு வருகிறது.

<img src='http://news.com.com/i/ne/p/2005/0916toshibacell_500x351.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://i.i.com.com/cnwk.1d/i/ne/p/2005/0916fuelcell_200x186.jpg' border='0' alt='user posted image'>


www.news.com

Print this item

  மோகன்லாலின் மொழி வெறி
Posted by: வினித் - 09-17-2005, 02:46 PM - Forum: சினிமா - Replies (24)

மோகன்லாலின் மொழி வெறி!

மலையாள திரையுலகினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வான எண்ணம் உண்டு. அதாவது, இந்தியத் திரையுலகிலேயே தாங்கள்தான் அதி மேதாவிகள் என்ற நினைப்புதான் அது. தங்களால்தான் இந்தியத் திரையுலகுக்கு நல்ல பெயர் உள்ளதாக அவர்கள் அடிக்கடி சிலாகித்துக் கொள்வார்கள்.

வேறு மொழிப் படங்களில் நடிக்க அங்குள்ள நடிகர்கள் ரொம்பவே பிகு செய்வார்கள் ( மலையாளத்தில் நடிப்பதைப் போல நடித்தால் எடுபடாதே என்ற பயம்தான் காரணம்!) ஆனால் நடிகைகள் மட்டும் மலையாளத்தை விட வேறு மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் நடிக்க பறந்தோடி வருவார்கள், டப்பு ஜாஸ்தியாக கிடைக்குமே!

அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே தமிழ் மீது ரொம்பவே 'பற்று' வைத்துள்ளவர்கள். இவர்களில் மம்முட்டி பரவாயில்லை,ரொம்ப சேட்டைத்தனம் இல்லாதவர். அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்து வரவேற்றுள்ளனர். ஆனால் மோகன்லாலை ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் பேசும் கொச்சைத் தமிழை, தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் அவரை நிராகரித்து விட்டார்கள். இதனால் தமிழ், தமிழ் சினிமா, ரசிகர்கள் என்றாலே மோகன்லாலுக்கு ரொம்பவே கடுப்பு. இனிமேல் நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று படு ஓப்பனாக அறிவித்தவர் அவர்.

இப்போது தமிழ் மீதான வெறுப்பை தனது படங்கள் மூலம் காட்டத் தொடங்கியுள்ளார் மோகன்லால். சமீபத்தில் உதயோன் என்ற படத்தில் அவர் தமிழகத்தையும், தமிழர்களையும் ரொம்பவே நக்கலடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர். அவரும், ஹீரோ மோகன்லாலும் பேசிக் கொள்வது போன்ற வசனம், தமிழர்களை ரொம்பவே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழகத்திற்கு மோகன்லால் வருவது போல ஒரு காட்சி. அப்போது அங்குள்ள கரும்பை சுவைத்துப் பார்க்க விரும்புவார். அதற்கு வில்லன் கூறுவார், தமிழக கரும்பு எப்போதுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார். அதற்கு மோகன்லால், ஆனால் கேரளாவிலிருந்து வரும் தண்ணீரால்தான் இந்த சுவை கிடைக்கிறது என்று நக்கலாக பதில் கூறுவார்.



தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தையும் கிண்டலடித்தும், கேரளாவில் நிறைய தண்ணீர் இருப்பதை பீற்றிக் கொள்ளும் விதமாகவும் இவ்வாறு வசனம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள மோகன்லாலின் நரன் படத்தி

ல் ஒரு காட்சி வருகிறது. இது முற்றிலும் அவரது மலையாள இன வெறியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. காட்சிப்படி, ஒரு கடைக்காரர் (தமிழர்) தனது கடையின் பெயர்ப் பலகையை தமிழில் எழுதி வைத்திருப்பார். அப்போது அங்கு வரும் மோகன்லால் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதே என்று கண்டிப்புடன் கூறிச் செல்வார்.

ஆனால் கடைக்காரர் தொடர்ந்து தனது கடையின் பலகையை தமிழிலலேயே வைத்திருப்பார். இதனால் கோபம் கொள்ளும் மோகன்லால் ஊர்க்கார்களைத் தூண்டி அந்தக் கடையை அடித்து நொறுக்குவார்.

மோகன்லாலின் இந்த மொழி வெறி இன்று நேற்று தோன்றியதில்லை. ஆரம்ப காலம் முதலே அவர் தமிழர்களுக்கு விரோதமான வசனங்களையும், காட்சிகளையும் தனது படத்தில் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் மாடரேட் எண்ணம் கொண்ட மம்முட்டியை அதிகம் ஆதரிக்கிறார்கள்.

மோகன்லால் மட்டுமல்ல, பல மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தமிழ் மீது கசப்பான எண்ணம் கொண்டவர்கள். இத்தனைக்கும் ஒரு மலையாளப் படத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றால் அவர்கள் சென்னைக்கு வராமல் அதை செய்ய முடியாது. படத்தை முடித்து அதை கழுவ வேண்டும் என்றால் இங்குள்ள லேபுகளுக்குத்தான் வர வேண்டம். அங்கு நல்ல எடிட்டிங் ஸ்டுடியோ கிடையாது. நல்ல கேமராமேன் கிடையாது, நல்ல இசை வேண்டுமானால் நம்ம ஊரு இளையராஜாதான் அவர்களுக்கு சரிப்படும்.

இப்படி அங்கே ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக் கொண்டு தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தி அதில் அற்ப சுகம் காண்கிறார்கள் மலையாள திரையுலகினர்.

<span style='font-size:30pt;line-height:100%'>என்ன செய்வது தமிழனுக்குத்தான் விழிப்புணர்வு வரவே மாட்டேன் என்கிறதே!</span>

தலைப்பை மாற்றியுளேன். தயவு செய்து தரக்குறைவான வார்த்தை பிரயோக்கங்களை தவிருங்கள் - மதன்

Print this item

  வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதம்.
Posted by: வினித் - 09-17-2005, 11:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<b>ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள்:</b> <i>'ராஜீவ் வழக்கு' கார்த்திகேயன் </i>

இலங்கையில் தமிழர்கள் வாழ்வுரிமையைக் காக்கவே ஆயுதங்களைக் கையில் எடுத்தார்கள் என்று ராஜீவ் கொலை வழக்கை விசாரணை நடத்திய இந்தியப் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.


ராஜீவ் வழக்கு விசாரணை தொடர்பாக ஆங்கிலத்தில் கார்த்திகேயன் புத்தகம் எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் தமிழில் "வாய்மையின் வெற்றி" என்று வெளியாக உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "ஜூனியர் விகடன்" இதழுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

இலங்கையிலும் இந்தியாவிலும் பலிகள் பல நடந்தும் இன்னும் இலங்கையில் அமைதி நிலவவில்லையே...?

இதற்குப் பதிலாக அண்மையில் நான் நோர்வே நாட்டில் சர்வதேச தீவிரவாதம் பற்றி ஆற்றிய உரையைக் குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் அங்கு நிகழ்த்திய உரையின் தலைப்பு "ஏன் தீவிரவாதம்?" என்பதுதான்.

தீவிரவாதத்தில் இரண்டு வகை உள்ளது. ஒன்று மக்கள் தீவிரவாதம். இரண்டாவது ஜனநாயக தீவிரவாதம்.

மக்கள் தீவிரவாதம் என்பது மத அடிப்படையில் பொதுமக்களுக்குள் மூட்டி விடப்படுகிற தீ.

ஜனாநாயக தீவிரவாதம் என்பது, சிறுபான்மையினரை மதிக்காமல், அவர்களின் சம்மதம் பெறாமல் பெரும்பான்மையினர் எடுக்கும் சில முடிவுகளினால் விளைகிற தீவிரவாதம். இதுதான் இலங்கையில் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற உயிர்பலிகளுக்குக் காரணம்.

முதலில் தமிழர்கள் ஜனநாயக முறையில் கொடுத்தார்கள். ஆட்சியாளர்களின் காதுகளில் இந்தக் குரல்கள் விழவில்லை. ஆகவே அடுத்த தலைமுறையினர் ஆயுதங்களைக் கையில் எடுத்து, தங்கள் வாழ்வுரிமையைக் காத்துக்கொள்ள போராடுகிறார்கள். அதற்கு தீர்வு கண்டால்தான் அங்கே அமைதி திரும்பும்.

ராஜீவ் விசாரணையைப் பற்றி வெளியிட்டுள்ள புத்தகத்துக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து கடும் கண்டனம் வந்ததாமே?

அதை கண்டனம் என்று சொல்ல முடியாது. என் புத்தகத்தின் மீதான அவர்களின் உணர்வைப் பதிவு செய்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

புலிகளின் இணையதளத்தில் என் புத்தகம் பற்றி அவர்கள் தரப்பு கருத்துகளை வெளியிட்டனர்.

அதில், "ராஜீவ் கொலையைப் பற்றியும், அதன் விசாரணையைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ள தாங்கள், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தைப் பற்றியும், இலங்கையில் அமைதிப்படை செய்த அட்டகாசங்களைப் பற்றியும் ஏன் எழுத மறந்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது என்றார் கார்த்திகேயன்.
www.puthinam.com

Print this item

  யாழ்
Posted by: Anandasangaree - 09-17-2005, 09:14 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (19)

யாழ் எங்கு போகிறது.???? நான் முன்பு செய்ததை இப்ப பலர் செய்யினம்போல கிடக்கு.

Print this item

  கொக்குவிலில் விபச்சாரவிடுதி தீக்கிரை
Posted by: விது - 09-17-2005, 05:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ் கொக்குவில் கிழக்கு உடயார் வீதியில் உள்ள மலையாள மந்திரவாதி ஒருவரின் வதிவிடம் பொதுமக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 35 அகவை மதிக்கத்தக்க கே.எஸ். குமாரசாமி எனப்படும் மந்திரவாதி பொதுமக்களிடம் இருந்து பெருமளவு பணத்தினை அறவிட்டு அவர்களை ஏமாற்றி வந்ததோடு பாலியல் (விபச்சாரத்தொழில்) முறைகேட்டிலும் ஈடுபட்டு வந்தார். வீட்டை விட்டு வெளியேறும்படி கடந்த சில தினங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தபோதும் இதற்கு மறுப்புத் தெரிவித்த இவர் காடையர்கள் சிலரை பணிக்கு அமர்த்தி அப்பகுதியில் தங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்த மக்கள் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இவரது வீட்டுக்குள் உட்புகுந்து இவரையும் காடையர்களையும் தாக்கியதோடு வீட்டில் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், உந்துறுளிகள், உட்பட பெறுமதி வாய்ந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை தீக்கிரையாக்கியுள்ளனர். இத்தாக்குதலை 60க் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து நடாத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மந்திரவாதி காடையர்களுடன் தலைமறைவாகியுள்ளார். இவரது வீட்டிலிருந்து மதுபானங்கள் பெண்களின் உடைகள் ஆண் உறைகள் என பல முறைகேடான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


http://www.nitharsanam.com/?art=11736

Print this item

  பாலியல் உறவுக்கான வயதெல்லை
Posted by: விது - 09-17-2005, 05:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (42)

இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபுூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்மூண்று வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார்.

http://www.nitharsanam.com/?art=11739

Print this item

  அரசியல் பொறிக்குள் அகப்பட்டார் முரளி
Posted by: விது - 09-17-2005, 04:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

கிரிக்கெட் சுூதாட்ட விவகாரம் மீண்டும் சுூடுபிடித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சிக்கும் வாய்ப்புகளுள்ளதாக இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. மும்பை நடன அழகி (பொறி) ஒருவருடனான முரளியின் தொடர்பையடுத்தே சுூதாட்ட விவகாரத்தில் முரளிதரனின் பெயரும் பலமாக அடிபடுகிறது. இதேநேரம், மும்பை நடன அழகி (பொறி) தாருன்னுகானுடன் தொடர்பு இருப்பதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 மாதங்களுக்கு முன் முரளிதரன் தனிப்பட்ட பயணமாக மும்பை சென்றுள்ளார். அப்போது அவருக்கு நடன அழகியை நடிகர் ஆதித்ய பஞ்சோலி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மதுபான சாலையில் நடந்த இந்தச் சந்திப்பின் போது முரளிதரன் நடன அழகியின் அழகில் மயங்கியுள்ளார். பின்னர் அவருக்காக இலட்சக்கணக்கில் பணத்தை தண்ணியாக செலவிட்டுள்ளார் என்ற தகவலும் பொலிஸாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் முரளிதரன் சுூதாட்ட பிரச்சினையில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணைகள் நடைபெறுகின்றன. கிரிக்கெட் சுூதாட்டத்தில் இந்திய வீரர்கள் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஐ.சி.சி. அவர்களை கண்காணித்து வருகிறது. கோடியில் புரளும் கிரிக்கெட்டில் அவ்வப்போது சுூதாட்டம் தலை து}க்குவது உண்டு. 2000 - 2001 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது அந்த அணி வீரர்கள் சுூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினைக்கு பிறகு சுூதாட்ட புகார் தலை து}க்காமல் இருந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் சுூதாட்ட புகார் மீண்டும் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது.

மும்பை நடன அழகி (புலனாய்வுப்பொறி) தாருன்னு கான் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய விசாரணையில் கிணறு தோண்ட புூதம் கிளம்பிய கதையாக கிரிக்கெட் சுூதாட்ட விவகாரம் வெளிப்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பை பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் சமீபத்தில் இலங்கை மற்றும் சிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் போட்டியில் சுூதாட்டம் நடந்ததாக தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது. நடன அழகி தாருன்னு கான் சுூதாட்ட கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததுடன், கிரிக்கெட் வீரர்கள் சிலருடனும் இந்தி நடிகர்களுடனும் நெருங்கிய தொடர்புடையவர் என்று தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஐ.சி.சி. ஊழல் தடுப்பு அதிகாரிகள் மார்ட்டின் ஹாகின்ஸ், அலன் பீக்காக் ஆகியோர் மும்பை வந்தனர். அவர்கள் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கும் சென்றுள்ளனர்.

இதனால் சுூதாட்ட புகார் மேலும் சுூடு பிடித்துள்ளது. அவர்களிடம் கேட்டதற்கு விபரங்கள் எதனையும் வெளியிட மறுத்து விட்டனர். இந்தியாவில் விசாரணை நடக்கிறது என்று மட்டும் பதிலளித்தனர்.

இதற்கிடையில் இந்த சுூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷேவாக், சாகீர்கான், அகர்கார் மற்றும் இந்தி சினிமா நட்சத்திரங்கள், சுூதாட்ட தரகர்கள் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் இந்தி நடிகர் ஆதித்ய பஞ்சோலி கிரிக்கெட் சுூதாட்டத்தில் தொடர்புடைய நடன அழகி தாருன்னு கானுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். நான் தாருன்னு கானை சந்தித்தது கிடையாது. அவருக்கு இலங்கை வீரரை அறிமுப்படுத்தவும் இல்லை. தாருன்னு கானுடன் தொடர்பு இருப்பதாக நிரூபித்தால் தண்டனையை ஏற்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி.நிதர்சனம்.கொம்

http://www.nitharsanam.com/?art=11731

Print this item

  ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி.....
Posted by: விது - 09-17-2005, 04:12 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (8)

ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி.....

சமாதானத்துக்கான நடவடிக்கைகளை ஒருபுறமும், ஆயுதக் குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மறுபுறமும் செயல்பட்டால்தான் சமாதானப் பேச்சுக்கள் எளிதில் நடைபெறும் என்று சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சந்திரிகா குமாரங்க ஆற்றிய உரை:

சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் மதிக்கும் நாடுகளுக்கு எதிராக செயற்படும் குழுக்கள் மீது தடையுத்தரவு பிறப்பிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்.

பயங்கரவாத சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளை வளப்படுத்துவதற்கும் அவற்றிற்கு ஆதரவு நல்குவதற்கும் ஐ.நா. வழியில் நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். இது ஐ.நா. வின் நோக்கில் அடுத்த 10 வருடங்களுக்கான ஓர் அத்தியாவசிய அம்சமாகவும் விளங்கும்.

ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட எம் நாட்டில் மீள்கட்டமைப்பு பணிகளையும், மீள்குடியேற்றத்துக்கான பணிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இப்போது இயற்கையின் பாதிப்பிற்குள்ளான அமெரிக்க மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் எங்களது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி ஆழிப்பேரலைகளால் தாக்கப்பட்ட இலங்கைக்கு உதவிய மக்களின், இதர நாடுகளின் அரசாங்கங்களின் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தினதும் ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களினதும் உதவிகளை நினைவுகூருகிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

1995 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுத் தலைவர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்று இங்கே எனது முதல் உரையை நிகழ்த்தியுள்ளேன். அது ஐ.நா.வின் 50 ஆவது ஆண்டு விழாவாக இருந்தது. தற்போது இலங்கை ஐ.நா. வில் அங்கத்துவம் பெற்ற 50 ஆவது ஆண்டு விழாவையும், ஐ.நா. வின் 60 ஆவது வருடாந்த விழாவையும் ஒருங்கே கொண்டாடுகின்றோம்.

நாங்கள் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். உலகை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு ஐ.நா.

அதனால் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இயலும். ஐ.நா. தமது 60 வருடகால வரலாற்றில் மாற்றங்களுக்கேற்ப தம் செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ளது.

ஐ.நா. வின் மறுசீரமைப்பு அனைத்துத் தரப்பினது நலனுக்குரியதாக அமைய வேண்டும்.

மறுசீரமைப்பால் அனைத்து நாடுகளும் சமத்துவமான நன்மைகளை பெறக் கூடியதாக இருக்க வேண்டும்.

இந்த மறுசீரமைப்பில் பாதுகாப்பு, அபிவிருத்தி மனித உரிமைகள் ஆகியவை ஒரு முக்கிய அம்சமாகும்.

உலகப் பயங்கரவாம் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுத்தவரையில் நாம் இப்பிரச்சினைத் தீர்வுக்காக நடவடிக்கைகளை பெரும் சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகிறோம்.

யுத்தத்துக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வு, தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக கூட்டாட்சி மூலமான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எனது அரசாங்கம் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளது.

பல இன மக்களின் கூட்டுக் கட்சிகளின் ஆதரவுடன் ஆயுதக்குழுவான புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றுள்ளேன். யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்காகவும் அனைத்து சமூகங்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் மேலும் புதிய விதிகளை அரசியல் யாப்பில் இணைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடன் விவாதிக்கவும் நான் முயன்றேன்.

சிறிலங்காவின் பாதுகாப்பு, அபிவிருத்தி, மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு சமாதான முன்னெடுப்புக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலமாக உயிர்களைக் காப்பாற்றலாம். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுதந்திரமாகவும், இணைந்து வாழவும், தொழில் புரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

இதனால், சமாதானத்துக்கான சாதகமான ஒரு நிலை உருவாகியுள்ளது என கருதுகிறோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைகளை நாம் அதிகரித்துள்ளோம்.

எமது மக்கள் எங்கும் வாழலாம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். யாரோ ஒருவரின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். எனினும், அனைத்துப் மக்களுக்கும் சுகாதார, கல்வி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும்.

இந்த நிலைப்பாடு ஆயுதக் குழுவினரான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயனுள்ள கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கும் என நாம் நம்புகின்றோம்.

அதனால், மக்களுக்கு நேரடியாகவே நற்பலன்கள் கிட்டும். யுத்த தயாரிப்புக்களைக் கைவிட்டு விடுதலைப் புலிகள் இதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகின்றோம்.

கடந்த காலங்களில் முழுமையாக ஒதுக்கப்பட்டிருந்த இன ரீதியிலான சமூகங்களின் மனித உரிமைகள் விடயத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்.

சமாதான முன்னெடுப்புக்களின் ஓர் அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்துச் சலுகைகளும் அளித்து வந்துள்ளன. குறிப்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவும் அந்நிய நாடுகளினதும் அரசாங்கங்களினதும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

கடினமான சூழலில் அனுசரணையாளர்கள் என்ற அடிப்படையில் நோர்வே அரசாங்கத்தினர் சமாதான முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருகின்றனர்.

இந்த முன்னெடுப்புக்களும் இந்த வாய்ப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை திசை திருப்புவதாக தெரியவில்லை. இதற்கு எனது வெளிவிவகார அமைச்சர் கொலை செய்யப்பட்டமை ஒரு உதாரணமாகும்.

சிறுவர்களை படைக்குத் திரட்டும் நடவடிக்கை நீடிக்கின்றது. அரசியல் எதிரிகளை கொலை புரிவதும் தொடர்கிறது. பெருமளவான மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர்

இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் சமாதானத் தீர்வையே வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் இது விடயத்தில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார்கள்.

சமாதான முன்னெடுப்புக்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டிருந்தாலும் கூட உண்மையான சமாதானத்துக்கான நடவடிக்கைகளை நாம் ஒருபுறம் மேற்கொள்ள வேண்டும். மறுபுறம் பயங்கரவாத நடவடிக்கைகள் மீது தடை விதிக்கப்பட வேண்டும். இதை விடுத்து ஆயுதக் குழுக்களோடு சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் எளிதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது.

நாங்கள் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம், வறுமை, பிணி ஆகியவற்றுக்கெதிராக போராட வேண்டுமானால் பாதுகாப்பு மனித உரிமைகள் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முழுமையானதும், கூர்மையானதுமான ஓர் அணுகுமுறையை கைக்கொள்ள வேண்டும்.

puthinam.com

Print this item

  சனிக்கு ஒரு விரதம்
Posted by: RaMa - 09-17-2005, 03:56 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (42)

வணக்கம் எல்லோருக்கும்
நாளைய சனி எல்லாச் சனி நாட்களிலும் விசேடமானது. அதாவது சனியனுக்காக விரதம் பிடிக்கும் நாள். யாருக்காவது சனியன் பிடித்திருந்தால் அல்லது பிடிக்கப்போவதாய் இருந்தால் அதற்காக விரதம் பிடித்து மன்றாடி அவரை எங்களை விட்டு போகச் சொல்லியோ அல்லது தயவு செய்து எங்களிடம் வரவேண்டாம் என்று சொல்லி எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கும் நாள். இதனை தொடர்ந்து நான்கு சனி கிழமைகளில் அனுஷ்டிப்பார்கள். இந்த எள்ளு எண்ணை எரிப்பதை நீங்கள் நவராத்திரி புiஐ தொடங்கும் முன் எரிக்கவேண்டும். நவராத்திரி புiஐ தொடங்கினால் எள்ளு எண்ணை எரிப்பது நன்றன்று.

அது சரி சனி பெருமானுக்கு ஏன் எள்ளு எண்ணையில் விளக்கு எரிக்கவேண்டும்? உங்களில் யாருக்கவாது விபரம் தெரியுமா?

Print this item

  திருத்தமுடியா!
Posted by: RaMa - 09-17-2005, 03:32 AM - Forum: சினிமா - Replies (2)

கலைவாணரின் மினியேச்சர் தாடியில்லா பெரியார் என்றெல்லாம் முலாம் புசப்பட்ட நடிகர் விவேக் சமீபத்தில் கோவை போய் ஐhதி சம்பந்தப்பட்ட கூட்டங்களில் கலந்து தமிழ் நாட்டில்
மூன்றரை கோடி நமது தேவர் இனம். நாம் நினைத்தால் அரசியலில் எதையும் செய்ய முடியும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். சினிமாவில் மற்ற சாதியை சேர்ந்தவர்களும் இருப்பதால் வேறு சாதியை சேர்ந்தவனாகவும் நடிக்க வேண்டியிருக்கறது என்று விளக்கமும் கொடுத்தார் விவேக். 100 பெரியாh வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா.... என்று திருநெல்வேலி படத்தில் விவேக் பேசிய வசனம் தான் இப்போது நினைவுக்கு வருகின்றது

நன்றி: துளசி

Print this item