![]() |
|
ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... (/showthread.php?tid=3277) |
ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... - விது - 09-17-2005 ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... சமாதானத்துக்கான நடவடிக்கைகளை ஒருபுறமும், ஆயுதக் குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மறுபுறமும் செயல்பட்டால்தான் சமாதானப் பேச்சுக்கள் எளிதில் நடைபெறும் என்று சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சந்திரிகா குமாரங்க ஆற்றிய உரை: சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்களையும் நடைமுறைகளையும் மதிக்கும் நாடுகளுக்கு எதிராக செயற்படும் குழுக்கள் மீது தடையுத்தரவு பிறப்பிக்க உலக நாடுகள் முன்வர வேண்டும். பயங்கரவாத சவால்களுக்கு முகம் கொடுக்கும் நாடுகளை வளப்படுத்துவதற்கும் அவற்றிற்கு ஆதரவு நல்குவதற்கும் ஐ.நா. வழியில் நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். இது ஐ.நா. வின் நோக்கில் அடுத்த 10 வருடங்களுக்கான ஓர் அத்தியாவசிய அம்சமாகவும் விளங்கும். ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட எம் நாட்டில் மீள்கட்டமைப்பு பணிகளையும், மீள்குடியேற்றத்துக்கான பணிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இப்போது இயற்கையின் பாதிப்பிற்குள்ளான அமெரிக்க மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் நான் எங்களது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி ஆழிப்பேரலைகளால் தாக்கப்பட்ட இலங்கைக்கு உதவிய மக்களின், இதர நாடுகளின் அரசாங்கங்களின் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தினதும் ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களினதும் உதவிகளை நினைவுகூருகிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். 1995 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசுத் தலைவர் என்ற அடிப்படையில் நான் பங்கேற்று இங்கே எனது முதல் உரையை நிகழ்த்தியுள்ளேன். அது ஐ.நா.வின் 50 ஆவது ஆண்டு விழாவாக இருந்தது. தற்போது இலங்கை ஐ.நா. வில் அங்கத்துவம் பெற்ற 50 ஆவது ஆண்டு விழாவையும், ஐ.நா. வின் 60 ஆவது வருடாந்த விழாவையும் ஒருங்கே கொண்டாடுகின்றோம். நாங்கள் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். உலகை பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு ஐ.நா. அதனால் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இயலும். ஐ.நா. தமது 60 வருடகால வரலாற்றில் மாற்றங்களுக்கேற்ப தம் செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ளது. ஐ.நா. வின் மறுசீரமைப்பு அனைத்துத் தரப்பினது நலனுக்குரியதாக அமைய வேண்டும். மறுசீரமைப்பால் அனைத்து நாடுகளும் சமத்துவமான நன்மைகளை பெறக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த மறுசீரமைப்பில் பாதுகாப்பு, அபிவிருத்தி மனித உரிமைகள் ஆகியவை ஒரு முக்கிய அம்சமாகும். உலகப் பயங்கரவாம் தொடர்பாக சிறிலங்காவைப் பொறுத்தவரையில் நாம் இப்பிரச்சினைத் தீர்வுக்காக நடவடிக்கைகளை பெரும் சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருகிறோம். யுத்தத்துக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வு, தனிநாட்டுக் கோரிக்கைக்குப் பதிலாக கூட்டாட்சி மூலமான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றுக்காக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எனது அரசாங்கம் துணிச்சலான ஒரு நிலைப்பாட்டை மேற்கொண்டு வந்துள்ளது. பல இன மக்களின் கூட்டுக் கட்சிகளின் ஆதரவுடன் ஆயுதக்குழுவான புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றுள்ளேன். யுத்தத்துக்கு முடிவு கட்டுவதற்காகவும் அனைத்து சமூகங்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு வழிவகுக்கும் மேலும் புதிய விதிகளை அரசியல் யாப்பில் இணைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளுடன் விவாதிக்கவும் நான் முயன்றேன். சிறிலங்காவின் பாதுகாப்பு, அபிவிருத்தி, மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு சமாதான முன்னெடுப்புக்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலமாக உயிர்களைக் காப்பாற்றலாம். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுதந்திரமாகவும், இணைந்து வாழவும், தொழில் புரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இதனால், சமாதானத்துக்கான சாதகமான ஒரு நிலை உருவாகியுள்ளது என கருதுகிறோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைகளை நாம் அதிகரித்துள்ளோம். எமது மக்கள் எங்கும் வாழலாம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். யாரோ ஒருவரின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். எனினும், அனைத்துப் மக்களுக்கும் சுகாதார, கல்வி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். இந்த நிலைப்பாடு ஆயுதக் குழுவினரான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயனுள்ள கட்டமைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஒரு வாய்ப்பளிக்கும் என நாம் நம்புகின்றோம். அதனால், மக்களுக்கு நேரடியாகவே நற்பலன்கள் கிட்டும். யுத்த தயாரிப்புக்களைக் கைவிட்டு விடுதலைப் புலிகள் இதில் ஈடுபடுவார்கள் என்று நம்புகின்றோம். கடந்த காலங்களில் முழுமையாக ஒதுக்கப்பட்டிருந்த இன ரீதியிலான சமூகங்களின் மனித உரிமைகள் விடயத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். சமாதான முன்னெடுப்புக்களின் ஓர் அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்துச் சலுகைகளும் அளித்து வந்துள்ளன. குறிப்பாக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவும் அந்நிய நாடுகளினதும் அரசாங்கங்களினதும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. கடினமான சூழலில் அனுசரணையாளர்கள் என்ற அடிப்படையில் நோர்வே அரசாங்கத்தினர் சமாதான முன்னெடுப்புகளில் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்த முன்னெடுப்புக்களும் இந்த வாய்ப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை திசை திருப்புவதாக தெரியவில்லை. இதற்கு எனது வெளிவிவகார அமைச்சர் கொலை செய்யப்பட்டமை ஒரு உதாரணமாகும். சிறுவர்களை படைக்குத் திரட்டும் நடவடிக்கை நீடிக்கின்றது. அரசியல் எதிரிகளை கொலை புரிவதும் தொடர்கிறது. பெருமளவான மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் சமாதானத் தீர்வையே வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் இது விடயத்தில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார்கள். சமாதான முன்னெடுப்புக்களில் ஆயுதக் குழுக்கள் ஈடுபட்டிருந்தாலும் கூட உண்மையான சமாதானத்துக்கான நடவடிக்கைகளை நாம் ஒருபுறம் மேற்கொள்ள வேண்டும். மறுபுறம் பயங்கரவாத நடவடிக்கைகள் மீது தடை விதிக்கப்பட வேண்டும். இதை விடுத்து ஆயுதக் குழுக்களோடு சனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகள் எளிதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது. நாங்கள் உலகளாவிய ரீதியில் பயங்கரவாதம், வறுமை, பிணி ஆகியவற்றுக்கெதிராக போராட வேண்டுமானால் பாதுகாப்பு மனித உரிமைகள் அபிவிருத்தி ஆகிய துறைகளில் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முழுமையானதும், கூர்மையானதுமான ஓர் அணுகுமுறையை கைக்கொள்ள வேண்டும். puthinam.com - RaMa - 09-17-2005 நன்றி தகவலுக்கு விது Re: ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... - Senthamarai - 09-17-2005 [quote="vithu"]ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலமாக உயிர்களைக் காப்பாற்றலாம். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுதந்திரமாகவும், இணைந்து வாழவும், தொழில் புரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். hock: இதனால், சமாதானத்துக்கான சாதகமான ஒரு நிலை உருவாகியுள்ளது என கருதுகிறோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைகளை நாம் அதிகரித்துள்ளோம். :roll: எமது மக்கள் எங்கும் வாழலாம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். யாரோ ஒருவரின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். எனினும், அனைத்துப் மக்களுக்கும் சுகாதார, கல்வி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். :evil: :twisted: - kurukaalapoovan - 09-17-2005 ஆ புல்லரிக்குதப்பா புல்லரிக்குது. - vasisutha - 09-18-2005 ஆடு மேயப்போகுது கவனம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- matharasi - 09-18-2005 vasisutha Wrote:ஆடு மேயப்போகுது கவனம்.. <!--emo&<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Birundan - 09-20-2005 kurukaalapoovan Wrote:ஆ புல்லரிக்குதப்பா புல்லரிக்குது. மனிதர்க்கு புல்லரிக்கும் புல்லுக்கு என்ன அரிக்கும்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-20-2005 உந்தக் குறுக்கால போன கோள்விக்கு நானே அம்பிட்டனான்? - Nilavan. - 09-21-2005 குறுக்கால போனதுகளுpட்டதானே குறுக்கால போன கேள்வி கேட்க முடியும் ஆ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|