![]() |
|
பாலியல் உறவுக்கான வயதெல்லை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: பாலியல் உறவுக்கான வயதெல்லை (/showthread.php?tid=3275) |
பாலியல் உறவுக்கான வயதெல்லை - விது - 09-17-2005 இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான வயதெல்லையைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது இலங்கையில் பெண்களின் பாலியல் உறவுக்கான சட்டபுூர்வ வயதை 16 வயதில் இருந்து 13 வயதாகக் குறைப்பது என்று இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாலியல் உறவு குறித்து இலங்கையின் இளைய சமுதாயம் மிகவும் விழிப்புணர்வு பெற்றுவருவதாக இலங்கையின் நீதி அமைச்சர் ஜோண் செனிவிரட்ண தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி 21 வயதுக்கு உட்பட்ட ஒரு இளைஞன் உண்மையில் ஒரு பதின்மூண்று வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினாரா அல்லது அந்த சிறுமியின் விருப்பத்துடன் அவளுடன் உறவு கொண்டாரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். தமது காதலிகளுடன் பாலியல் உறவு கொண்டதற்காக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரித்து வருவது குறித்தும் இலங்கை அரசு கவலை கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். அந்தப் பாலியல் உறவு தமது விருப்புடனேயே நடந்ததாகக் கூறி அவர்களை அவர்களது காதலிகள் விடுவிக்குமாறு கோரும் பல சம்பவங்களும் காணப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் அமைச்சரவையின் இந்த முடிவு குறித்து பெண் உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியும் வெளிப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என்று பெண் உரிமைச் செயற்பாட்டாளரான திருமதி தயாபரன் தெரிவித்தார். உல்லாசப் பயணிகள் வரும் பட்சத்தில் இந்த சட்டத்திருத்தம் மேலும் நிலைமைகள் சீர்கெட வழி செய்யும் என்றும் அவர் கூறினார். http://www.nitharsanam.com/?art=11739 - inthirajith - 09-17-2005 அடப்பாவிகளா மனிதர்களா நீங்கள் எல்லாம் யாரையோ காப்பாத்துவதற்காக மனிதத்தையே அடமானம் வைக்கிறீர்களே - Mathan - 09-17-2005 என்ன 13 வயதா hock: hock: hock:
- வெண்ணிலா - 09-17-2005 :evil: :evil: :evil: - narathar - 09-17-2005 vennila Wrote::evil: :evil: :evil: அப்ப 13 வயசிலேயே காதலிக்கலாம் அல்லோ ..அதுக்கு ஏன் இப்படிக் கோவிக்கிறீங்க வெண்ணிலா இது நல்ல விசயம் அல்லோ....இனி வாக்குரிமை அழிக்கிற வயசையும் குறைப்பினம், நீங்க சோக்காப் போய் மை தடவலாம்.... வயசுக்கும் .... அறிவு முதிர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்..... நடக்க முதலே பறக்க விரும்பிறனீங்கள் இப்ப மட்டும் என்ன கவலை..... :?:
- Thala - 09-17-2005 ஆகா இது வேறயா??? ம்ம்..ம் நான் <b>தமிழீழத்தவன் </b>எனக்கு என்ர சமூகத்தைப் பற்றிக் கவலைப் பட அவசியம் இல்லையப்பா...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம நாடு நல்லாருந்தாப் போதும்...... - வெண்ணிலா - 09-17-2005 narathar Wrote:vennila Wrote::evil: :evil: :evil: :roll: :roll: :roll: :roll: - narathar - 09-17-2005 vennila Wrote:narathar Wrote:vennila Wrote::evil: :evil: :evil: Thala எழுதியது: ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்... காதலிப்பதற்கும் வயதுக்கும் என்னபா தொடர்பு? ஏன் 15 16 17 18 வயதில் காதலித்தால் காதல் வராதோ? http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=105 - வெண்ணிலா - 09-17-2005 narathar Wrote:vennila Wrote:narathar Wrote:vennila Wrote::evil: :evil: :evil: அது காதல் வயது இது பாலியல் வயது என்ன நாரதா தற்போதும் களத்தில் நடமாடுகிறீரா? சரி அப்போ நான் சென்று வருகிறேன். எஸ்கேப். :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 09-17-2005 எல்லாத்துக்கும் ஏன் ஒரு வயசு வரம்பு வச்சிருக்கினம்,சின்ன வயசில பிழை விடேலும் என்ற படியத்தானே,பிறகு அனுபவிக்கப் போறது யாரு நானா நீங்களா,மற்றவை மாதிரி சும்மா நமக்கேன் எண்டு இருக்கேலாம இருக்கு,அது தான் கேட்டன்,எடுக்கிறதும் விடுறதும் உங்களைப் பொறுத்தது.உங்கள் வாழ்வும் வளமும் உங்கள் கையில்... - Mathan - 09-17-2005 13 வயதில் பெண்கள்(Woman) என்று சொல்வதை விட பெண் குழந்தைகள்(Girl) என்று தான் சொல்ல வேண்டும். அந்த வயதில் பாலியல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் எது பாலியல் துஷ்பிரயோகம் என்று தெரியாமல் இருக்கும் போது அதனை சட்டரீதியாக அனுமதித்தல் துஷ்பிரயோகங்களுக்கே வழிவகுக்கும். இலங்கை ஏற்கனவே சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு குறைவில்லாத நாடு, அந்த துஷ்பிரயோகங்களை தடுக்காமல் சட்டரீதியான வயதை குறைப்பது திருடனுக்கு லைசென்ஸ் கொடுத்து களவெடுக்க சொல்வது போல் தான் :twisted: - Jude - 09-17-2005 கனடாவில் 1890 வரை பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1890ல் அது 14 ஆக உயர்த்தப்பட்டு இன்றும் அமுல் படுத்தப்படுகின்றது. இதற்கும் விதிவிலக்கு உண்டு. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் அவரிலும் பார்க்க 2 வயது வித்தியாசமுள்ள ஒருவர் சாதாரண பாலியல் உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. 14 வயது முதல் 18 வயது வரையிலான பெண்களுடன் அவர்களை அதிகாரம் செலுத்தும் தகைமையிலுள்ள ஒருவர் பாலியல் உறவு வைத்தால் அது குற்றமாகும். - kurukaalapoovan - 09-17-2005 இன்றும் எமது சமுதாயம் பாலியல் விடயங்களை ஒரு தீண்டத்தகாத விடயமாகத்தான் காட்டி வெளியில் நடித்துக் கொண்டிருக்கிறது. இன்நிலையில் 18 வயதிலும் கூட ஒருவருக்கு பொறுப்பான முறையில் பாலியல் சம்பந்தப்பட்ட அடிப்படை விடயங்கள் கற்பிக்கப்படுவதில்லை. அதை பக்குவமான முறையில் கதைக்கவே கலந்துரையாடவே பெற்றோர் முதல் பாடசாலை ஆசிரியர் வரை தயாரக இருபதாக தெரியவில்லை. சிறையில் வாடும் இளைங்கர்களின் காதலிகளின் வேண்டுகோளுக்கிணங்க பாலியல் உறவு கொள்ள வயதெல்லையை குறைக்க முதல் பாடசாலையிலாவது 13 வயதில் விபரமாக கற்பித்து விழிப்புணர்வை கொண்டுவருவேண்டும். சிறுமிகள் 13 வயதிலேயே விருப்பத்தோடு தான் உடல் உறவு கொண்டோம் தமது காதலர்களுடன் என்றால் அதன் அர்த்தம் அவர்களிற்கு பாலியல் விடயங்களில் விழிப்புணர் வந்ததென கொள்ளலாமா? hock: :roll:
- cannon - 09-17-2005 13 வயது எல்லை......... இந்த சட்டத்தை சந்திரிக்கா கொண்டுவருவதில் ஆச்சரியப் படுவதற்கு ஏதுமில்லை!! ********* *********************************************** ******கருத்து நீக்கப்பட்டுள்ளது -இராவணன் - nallavan - 09-17-2005 கனொனின் கருத்துக் கண்டிக்கப்பட வேண்டியது. இப்படி தனிமனித பாலியற்றூற்றல்களைத் தவிர்த்தல் நன்று. இது ஆரோக்கியமான விவாதத்துக்கு இடையுூறாக இருக்கும். - Vasampu - 09-18-2005 என்ன நல்லவன் இப்படிச் சொல்லிட்டிங்க. அவனவனுக்கு சட்டியிலுள்ளது தானே அகப்பையில் வரும் .இப்படியான விடயங்கள்தான் அவரின் சமுதாயச் சிந்தனைகள் இவர் போன்றோருக்கு இங்கு வக்காலத்து வாங்கவும் சிலர்.
- Eelathirumagan - 09-18-2005 வயதெல்லை 13 ஆக குறைப்பு என்பது மானுடத்தை இழிவுபடுத்தும் செயல். தமிழீழ தேசத்தவரான நாம் இதனைப்பற்றி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. எமது அயல் நாட்டின் நிலை..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- iruvizhi - 09-18-2005 Eelathirumagan Wrote:வயதெல்லை 13 ஆக குறைப்பு என்பது மானுடத்தை இழிவுபடுத்தும் செயல். தமிழீழ தேசத்தவரான நாம் இதனைப்பற்றி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. எமது அயல் நாட்டின் நிலை..... <!--emo& நீங்கள் குறிப்பிடுவதனைப் போன்று இது தமிழீழத்தின் பிரச்சினை இல்லை என்று சொல்லிவிட்டு நாம் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. இது உலகச் சிறுவர்களின் பிரச்சினை. ஆகையால் இதுபற்றிய கண்டிப்பான வாதங்களை நாம் இங்கு முன்வைப்பது அவசியம். - Mathan - 09-18-2005 Jude Wrote:கனடாவில் 1890 வரை பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1890ல் அது 14 ஆக உயர்த்தப்பட்டு இன்றும் அமுல் படுத்தப்படுகின்றது. இதற்கும் விதிவிலக்கு உண்டு. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் அவரிலும் பார்க்க 2 வயது வித்தியாசமுள்ள ஒருவர் சாதாரண பாலியல் உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. 14 வயது முதல் 18 வயது வரையிலான பெண்களுடன் அவர்களை அதிகாரம் செலுத்தும் தகைமையிலுள்ள ஒருவர் பாலியல் உறவு வைத்தால் அது குற்றமாகும். கனடாவில் வயது எல்லை 14 ஆக இருந்தபோதும் அதனை 16 ஆக உயர்த்த வேண்டும் என்று பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. பாலியல் குறித்து அறிவூட்டப்பட்ட தேசத்திலேயே இப்படி இருக்கும் போது இலங்கையில் 13 வயதுக்கு என்ன அவசியம்? - Birundan - 09-18-2005 அன்னியசெலவானியின் வரத்து போரினால் குறைந்திருக்கும், அதை பெருக்குவதற்காக சட்டத்துக்குட்பட்டு சிறுவரை வைத்து வியாபாரம் செய்யலாம் என்று சிங்களம் சிந்தித்து இருக்கும், இவர்களூக்கு இப்படியான சிந்தனைதானே வரும். |