Yarl Forum
மோகன்லாலின் மொழி வெறி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: மோகன்லாலின் மொழி வெறி (/showthread.php?tid=3271)

Pages: 1 2


மோகன்லாலின் மொழி வெறி - வினித் - 09-17-2005

மோகன்லாலின் மொழி வெறி!

மலையாள திரையுலகினருக்கு எப்போதுமே ஒரு தாழ்வான எண்ணம் உண்டு. அதாவது, இந்தியத் திரையுலகிலேயே தாங்கள்தான் அதி மேதாவிகள் என்ற நினைப்புதான் அது. தங்களால்தான் இந்தியத் திரையுலகுக்கு நல்ல பெயர் உள்ளதாக அவர்கள் அடிக்கடி சிலாகித்துக் கொள்வார்கள்.

வேறு மொழிப் படங்களில் நடிக்க அங்குள்ள நடிகர்கள் ரொம்பவே பிகு செய்வார்கள் ( மலையாளத்தில் நடிப்பதைப் போல நடித்தால் எடுபடாதே என்ற பயம்தான் காரணம்!) ஆனால் நடிகைகள் மட்டும் மலையாளத்தை விட வேறு மொழிப் படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கில் நடிக்க பறந்தோடி வருவார்கள், டப்பு ஜாஸ்தியாக கிடைக்குமே!

அங்குள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவருமே தமிழ் மீது ரொம்பவே 'பற்று' வைத்துள்ளவர்கள். இவர்களில் மம்முட்டி பரவாயில்லை,ரொம்ப சேட்டைத்தனம் இல்லாதவர். அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்களை தமிழ் ரசிகர்கள் பார்த்து வரவேற்றுள்ளனர். ஆனால் மோகன்லாலை ஏனோ தமிழ் ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவர் பேசும் கொச்சைத் தமிழை, தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் அவரை நிராகரித்து விட்டார்கள். இதனால் தமிழ், தமிழ் சினிமா, ரசிகர்கள் என்றாலே மோகன்லாலுக்கு ரொம்பவே கடுப்பு. இனிமேல் நான் தமிழ்ப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று படு ஓப்பனாக அறிவித்தவர் அவர்.

இப்போது தமிழ் மீதான வெறுப்பை தனது படங்கள் மூலம் காட்டத் தொடங்கியுள்ளார் மோகன்லால். சமீபத்தில் உதயோன் என்ற படத்தில் அவர் தமிழகத்தையும், தமிழர்களையும் ரொம்பவே நக்கலடித்துள்ளார். இதில் வில்லனாக நடித்துள்ளவர் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நடிகர். அவரும், ஹீரோ மோகன்லாலும் பேசிக் கொள்வது போன்ற வசனம், தமிழர்களை ரொம்பவே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தமிழகத்திற்கு மோகன்லால் வருவது போல ஒரு காட்சி. அப்போது அங்குள்ள கரும்பை சுவைத்துப் பார்க்க விரும்புவார். அதற்கு வில்லன் கூறுவார், தமிழக கரும்பு எப்போதுமே சுவையாகத்தான் இருக்கும் என்பார். அதற்கு மோகன்லால், ஆனால் கேரளாவிலிருந்து வரும் தண்ணீரால்தான் இந்த சுவை கிடைக்கிறது என்று நக்கலாக பதில் கூறுவார்.



தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தையும் கிண்டலடித்தும், கேரளாவில் நிறைய தண்ணீர் இருப்பதை பீற்றிக் கொள்ளும் விதமாகவும் இவ்வாறு வசனம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ள மோகன்லாலின் நரன் படத்தி

ல் ஒரு காட்சி வருகிறது. இது முற்றிலும் அவரது மலையாள இன வெறியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. காட்சிப்படி, ஒரு கடைக்காரர் (தமிழர்) தனது கடையின் பெயர்ப் பலகையை தமிழில் எழுதி வைத்திருப்பார். அப்போது அங்கு வரும் மோகன்லால் தமிழில் பெயர்ப் பலகை வைக்காதே என்று கண்டிப்புடன் கூறிச் செல்வார்.

ஆனால் கடைக்காரர் தொடர்ந்து தனது கடையின் பலகையை தமிழிலலேயே வைத்திருப்பார். இதனால் கோபம் கொள்ளும் மோகன்லால் ஊர்க்கார்களைத் தூண்டி அந்தக் கடையை அடித்து நொறுக்குவார்.

மோகன்லாலின் இந்த மொழி வெறி இன்று நேற்று தோன்றியதில்லை. ஆரம்ப காலம் முதலே அவர் தமிழர்களுக்கு விரோதமான வசனங்களையும், காட்சிகளையும் தனது படத்தில் வைப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அவர்கள் மாடரேட் எண்ணம் கொண்ட மம்முட்டியை அதிகம் ஆதரிக்கிறார்கள்.

மோகன்லால் மட்டுமல்ல, பல மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தமிழ் மீது கசப்பான எண்ணம் கொண்டவர்கள். இத்தனைக்கும் ஒரு மலையாளப் படத்தை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றால் அவர்கள் சென்னைக்கு வராமல் அதை செய்ய முடியாது. படத்தை முடித்து அதை கழுவ வேண்டும் என்றால் இங்குள்ள லேபுகளுக்குத்தான் வர வேண்டம். அங்கு நல்ல எடிட்டிங் ஸ்டுடியோ கிடையாது. நல்ல கேமராமேன் கிடையாது, நல்ல இசை வேண்டுமானால் நம்ம ஊரு இளையராஜாதான் அவர்களுக்கு சரிப்படும்.

இப்படி அங்கே ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக் கொண்டு தமிழர்களையும், தமிழகத்தையும் கொச்சைப்படுத்தி அதில் அற்ப சுகம் காண்கிறார்கள் மலையாள திரையுலகினர்.

<span style='font-size:30pt;line-height:100%'>என்ன செய்வது தமிழனுக்குத்தான் விழிப்புணர்வு வரவே மாட்டேன் என்கிறதே!</span>

தலைப்பை மாற்றியுளேன். தயவு செய்து தரக்குறைவான வார்த்தை பிரயோக்கங்களை தவிருங்கள் - மதன்


- Thiyaham - 09-17-2005

தமிழில் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி என்றால் வெறுக்கதானே செய்யும். ஹீரோவுக்குரிய முகமா அந்தாளிடம் உள்ளது...??? கும்மபலில் ஒருவராக நிற்கும் தகுது கூட அந்த முகத்திடம் இல்லையே....


- Netfriend - 09-17-2005

:roll: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :!: :roll:


- Mathan - 09-17-2005

Thiyaham Wrote:தமிழில் நடித்த படங்கள் எல்லாம் தோல்வி என்றால் வெறுக்கதானே செய்யும். ஹீரோவுக்குரிய முகமா அந்தாளிடம் உள்ளது...??? கும்மபலில் ஒருவராக நிற்கும் தகுது கூட அந்த முகத்திடம் இல்லையே....

உண்மையில் நடிப்பதற்கு முகத்தை விட நடிப்பு திறமைதான் முக்கியம். ஆனால் அதற்காக நான் நடிப்பதை தான் பார்க்கிறேன் முகத்தை பார்க்கவில்லை என்று புலுடா விடவில்லை. மோகன்லால் நடித்த தமிழ் படங்கள் பார்த்தேன் ,,,, அதில் அவர் முகத்திலோ குரலிலோ உணர்ச்சியை என்னால் காண முடியவில்லை,


- sakthy - 09-17-2005

மன்னிக்கவும் தியாகம் உங்கள் கருத்து தவறாகும்.உங்கள் சொல் படியே பார்த்தலும் தனது திறமையினால் கெரள மக்களின் சுப்பர்star என்னும் உச்சத்தை அடைந்த ஒரு மனிதர் உருவத்தை வர்ணிப்பது தவறு.இப்படி பார்தால் தமிழ் நடிகர்கள் எத்தனையோ பேர் உள்ளனரே..........
ஒவ்வொருவருக்கும் தம் மொழி வெறி கண்டிப்பாக இருக்க வேண்டும்.அது மற்றவர்களை காயப்படுத்தாமல்


- Netfriend - 09-17-2005

sakthy Wrote:...... கெரள மக்களின் சுப்பர்star என்னும் உச்சத்தை அடைந்த ஒரு மனிதர்..........

சுப்பர் ஸ்ரார், சுப்பர் அக்ரர், மக்கள் திலகம் , புரட்சித் திலகம், இளையதிலகம், இமயம்,.....மண்ணாங்கட்டி...etc இப்படி பட்டங்கள் மக்களாகொடுத்தார்கள்... சினிமா உலகமும் அவைசார்ந்தவர்களும்தான்... யாதார்த்த உலகம் அல்ல...


- Mathan - 09-17-2005

சக்தி. நீங்கள் சொன்னதை நானும் ஏற்று கொள்கின்றேன், நிச்சயம் நம் மொழி மீதான பற்று (அது வெறியாக இருக்க கூடாது) மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். தியாகம் சொன்னபோல கூறாவிட்டாலும், அவர் நடித்த தமிழ்படங்களில் எந்தவித உணர்சியையும் வெளிகாட்டவில்லை என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை,


- sakthy - 09-17-2005

ஏன் மதன் அண்ணா நீங்கள் அவரின் மலையாள படங்கள் எதுவும் பார்த்ததில்லையா? தமிழ் படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவரின் நடிப்பை விமர்சிப்பது உங்களுக்கே நல்லாய் இருக்கா ? நான் வக்காலத்து வாங்குவதாய் நினைக்க வேண்டாம்,ஒரு நல்ல கலைஜனை புண் படுத்த வேண்டாமே.....


- Mathan - 09-17-2005

நான் அவரை புண்படுத்தும் விதமாய் ஏதும் சொல்லலை சக்தி, அவருடைய மலையாள படங்கள் ஏதும் பார்த்ததில்லை, அதனால் தமிழ் படங்களில் அவருடைய நடிப்பு குறித்த விமர்சனத்தை மட்டுமே சொன்னேன்.


- sakthy - 09-17-2005

நன்றி அண்ணா ,நண்பர் ஒருவரின்(தியாகம்) கருத்துக்கு எனது விமர்சனம் இது.நமது நடிகர் கமலைப் போலவே பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.என்ன தான் நடிகராக இருந்தாலும் பிற மொழி படங்களில் நடிக்கும் போது அந்த மொழிக்கு உரிய முக பாவனையை எதிர்பார்க்க முடியாது அல்லவா


- ப்ரியசகி - 09-17-2005

sakthy Wrote:நன்றி அண்ணா ,நண்பர் ஒருவரின்(தியாகம்) கருத்துக்கு எனது விமர்சனம் இது.நமது நடிகர் கமலைப் போலவே பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.என்ன தான் நடிகராக இருந்தாலும் பிற மொழி படங்களில் நடிக்கும் போது அந்த மொழிக்கு உரிய முக பாவனையை எதிர்பார்க்க முடியாது அல்லவா

ம்ம்ம்..அது சரி சக்தி..ஆனால் அவர்களுக்கு கூட காதல் சீன்கள் வருவதில்லை..சண்டை..அப்படியானதுகள் வெளிப்படுத்துவார்கள்..நடிகர் மம்முட்டியும் தமிழில் நடிக்கையில்..அப்படியான காதல் முகபாவங்கள் செய்ய ரொம்பக்கஷ்டப்படுவார்..பார்க்கப்பாவமாக இருக்கும்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Birundan - 09-18-2005

நான் நிறைய மலையாளப்படம் பார்த்திருக்கிறேன், அருமையான படங்கள் நடித்திருக்கிறார். இவரும் ரஜனிபோல் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனவர், ஆனால் சுப்பர்ஸ்டார் மம்முட்டிதான். அவரது நிறைய படங்கள் அவார்ட் படங்கள், இருவருக்கும்தான் மலையாள திரையுலகில் போட்டி. கலைஞனாக நல்லஒருகலைஞன் மோகன்லால். மொழிவெறியைப்பற்றி தெரியாது.


- matharasi - 09-18-2005

Birundan Wrote:நான் நிறைய மலையாளப்படம் பார்த்திருக்கிறேன், அருமையான படங்கள் நடித்திருக்கிறார். இவரும் ரஜனிபோல் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனவர், ஆனால் சுப்பர்ஸ்டார் மம்முட்டிதான். அவரது நிறைய படங்கள் அவார்ட் படங்கள், இருவருக்கும்தான் மலையாள திரையுலகில் போட்டி. கலைஞனாக நல்லஒருகலைஞன் மோகன்லால். மொழிவெறியைப்பற்றி தெரியாது.
இந்தியாவிலே இயல்பாய் யதார்த்தமாக நடிக்க கூடியவரிலை ஒருவராக மோகன்லாலை கூறுவாங்க .ஏங்க இப்படி நடந்துகிறாரென்று தெரியலை....இப்படித்தான் ரமேஸ் அரவிந்த் என்ற நடிகரும் தமிழ்நாட்டில் நண்பனாக காட்டிக்கொண்டு கன்னடத்தில் போய் ..மொழி வெறியைக்கக்கிறாரு...வந்தாரை வாழ்வழிக்கும் தமிழகத்திற்கு முதுகிலை குததிறது சகஜமாக நடக்கிதுங்க


- vasisutha - 09-18-2005

சேரனின் ஆட்டோகிராஃப் படத்தில் கூட இதைப்பற்றி
லேசாக கூறியிருந்தார். தமிழருக்கு அங்கு மதிப்பு இல்லை
என்று.


- Thala - 09-18-2005

vasisutha Wrote:சேரனின் ஆட்டோகிராஃப் படத்தில் கூட இதைப்பற்றி
லேசாக கூறியிருந்தார். தமிழருக்கு அங்கு மதிப்பு இல்லை
என்று.

ம்ம்.. இங்கு என்னுடன் வேலை செய்யும் மலயாளிகள் கூட இந்திய தமிழரைப் பாண்டி எண்டுதான் சொல்லுறவை... காரணம் கேட்டாச் சொல்லமாட்டாங்கள்...


- sakthy - 09-20-2005

பாண்டி என்றால் மலயாளத்தில் நாய் என்று அர்த்தம்


- Birundan - 09-20-2005

பட்டி என்றாத்தானே நாய் என்று அர்த்தம்


- Nanban - 10-14-2005

மோஹன்லால் ஒரு அருமையான கலைஞர். அவரின் முகபாவங்களும் யதார்த்தமான நடிப்பும் இந்தியா முழுமையும் எடுத்துக் கொண்டால் கூட ஒரு சிலருக்கு மட்டுமே வரும்.

கேரள திரையுலகம் - தமிழ் திரையுலகைப் போல் அல்லாது யதார்த்தமான கதையமைப்பு, காட்சி அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மிகைப்படுத்தப்பட்ட நடிப்பினாலும் யாதார்த்தமற்ற கதைகளாலும் புனையப்பட்ட திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து மூளை சலவை செய்யப்பட்ட நம்மால் நுணுக்கமான புலனுணர்வுகளைச் சித்தரிக்கும் மோஹன்லால், மம்முட்டி, நஸிருத்தீன் ஷா, ஷப்னா ஆஸ்மி, நந்திதா தாஸ் போன்ற கலைஞர்களின் நடிப்புணர்வை ரசிப்பது சற்று சிரமமாகத் தானிருக்கும்.

காட்டுக் கூச்சல் போடுவதும், டூயட் என்ற பெயரில் பெண்மையை சிறுமைப்படுத்தும் காட்சிகளும், ஒற்றைவிரல் உயர்த்தி சவால் விடும் நாயகன் என்றெல்லாம் தரம் தாழ்ந்து போய் கிடக்கும் தமிழ்ப்படங்களைக் கொண்டு மிகச் சிறந்த சீரிய கலைஞர்களை எடை போடுவது தவறாகும்.

மொழிவெறி - நிறைய மலையாளப்படங்களை பார்த்திருக்கிறேன். வெறியை வெளிப்படுத்தும் விதமாக எதுவுமில்லை. ஆனால் பிறமொழிகளைக் கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகள் செய்வது அனைத்து மொழிகளிலும் உண்டு தானே!!!


- nallavan - 10-16-2005

சூப்பர் ஸ்டார் உட்பட பட்டங்கள் மக்கள் கொடுக்கவில்லையாம். என்ன முட்டாள்த்தனமான கதையிது. பின்ன ஆர் குடுத்ததாம். வெறும் பத்திரிகைகள் தான் அந்தப் பட்டத்தைக் கொடுத்ததா? சரி. அந்தப்பட்டங்களை மக்கள் மனதார ஏற்றுக் கொள்ளவில்லையா?
நடிகர்களுக்கு மக்களிடத்தில் இருக்கும் செல்வாக்கைத் தெரிந்து கொண்டுமா இப்படி ஒரு கருத்தைச் சொல்கிறீர்கள்?

மோகன்லாலின் நடிப்புக்கும் முகபாவத்துக்கும் என்ன குறை?
இருவர் படத்தில் அந்த பாத்திரத்தை வேறு யார் செய்திருக்க முடியும்? நல்லாயிருக்கே நடிப்புப் பற்றிய மதனின் கணிப்பு. சும்மா வாய்சவடால் விடுறதும் சிகரெட் பிடிக்கிறதும் தான் நடிப்பும் முகபாவமும் எண்டா நீங்கள் சொல்லுறது சரிதான்.

மேலும் மூலக்கட்டுரையிலுள்ள துவேசக் கருத்துக்கள் கவனிக்கப்பட வேணும். ஏதோ தமிழ்ப்படங்கள் சுத்தமானவை எண்ட மாதிரிக் கதைவிடுகினம். மலையாளப் பெண்களைப் பற்றியும் அவர்களின் மார்பகங்களைப் பற்றியும் கொச்சையாக நக்கலடிக்கும் படங்கள் தமிழில் ஏராளமுண்டு. பத்தாததுக்கு யாழ்ப்பாணப் பெண்களும்.

இதைவிட ஏராளமான நனைச்சுவைக் காட்சிகளில் மற்ற மாநிலக் காரரை துவட்டி எடுத்தாயிற்று. ஏன் தமிழகத்தையோ சென்னையைப் பற்றியோ தமிழ்ப்படங்களைவிட வேறுயார் தரக்குறைவாகச் சொல்லிவிட முடியும்? இன்னொரு மாநிலக்காரன் தானா அதைவிட தரக்குறைவாகச் சொல்ல முடியும்?

எவ்வளவு தூரம் கேவலமாகச் சித்தரிக்க முடியுமா அவ்வளவுக்கு தமிழ்நாட்டை, அரசை, மக்களை, மொழியை எமது தமிழ்ப்படங்களிலேயே கேவலப்படுத்தியாயிற்று. மற்ற மாநிலக்காரரையும் நக்கலடித்துப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன

சினிமாப் படம் முடிக்க தமிழ்நாட்டுக்குத்தான் வரவேண்டியிருக்காம். என்ன வடிகட்டின முட்டாள்தனமான கருத்து?
எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள். இன்னொருவரை நம்பித்தானே எல்லாம். ஏன் தமிழ்ப்படங்கள் கேரளாவில் போய் எடுப்பதில்லையா. நல்ல காட்சிகளும் செழுமையான காட்சிகளும் தேவையென்றால் கேரளாவோ பிற மாநிலமோ தேவை. ஏன் நடிகைகள் தேவையென்றவுடன் நீங்கள் எங்கே போகிறீர்கள்? யார் தமிழ்நடிகை? கேரளாவிலிருந்துதானே அதிகம் நடிகைகளை இற்குமதி செய்கிறீர்கள்? உங்களை எவ்வளவு கீழ்த்தரமாக மற்றவர்கள் சொல்லக்கூடும். காட்சிகளுக்கும் நடனங்களுக்கும் உலகம் முழுக் கமராவைத் தூக்கிக் கொண்டு அலையும் தமிழ்ச்சினிமா, நடிகை, நடிகர்களுக்கும் மற்ற மாநிலத்தையும் மொழியையும் நம்பியிருக்கும் தமிழ்ச்சினிமா, பண முதலீட்டுக்கும் மற்ற மாநிலக்காரரை நம்பியிருக்கும் தமிழச்சினிமா, இப்படி இன்னும் நிறைய விசயங்களுக்கு மற்றவர்களில் தங்கியிருக்கும் தமிழ்ச்சினிமா ஏதோ தன்னிறைவானது என்று புளுகிக்கொண்டு மற்றவர்கள் எங்களிடம்தான் வரவேண்டும் என்று ஆணவத்தோடு பேசுவது எவ்வாறு.

எல்லாரும் எல்லாரிலும்தான் தங்கியுள்ளோம். இதற்குள் நீ பெரிது நான் பெரிது என்று சண்டை எதற்கு? மோகன்லாலின் பேச்சை மறுப்பதற்குக் கட்டுரையில் கூறப்பட்ட எந்த வாதமுமே உப்புச் சப்பில்லாதது. மோகன்லாலின் கூற்றைவிட வெறி பிடித்தது மட்டுமல்ல விசர் பிடித்தவரின் கூற்றும் கூட. பைத்தியக்காரத்தனமான உளறல்.


- தூயவன் - 10-16-2005

தமிழன் எப்போது படத்துறையிலும், அரசியலிலும் பெரும் பங்கை வகிக்கின்றானோ, அன்றுதான் தமிழ்நாடு உருப்படும்.