Yarl Forum
கொக்குவிலில் விபச்சாரவிடுதி தீக்கிரை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கொக்குவிலில் விபச்சாரவிடுதி தீக்கிரை (/showthread.php?tid=3274)



கொக்குவிலில் விபச்சாரவிடுதி தீக்கிரை - விது - 09-17-2005

யாழ் கொக்குவில் கிழக்கு உடயார் வீதியில் உள்ள மலையாள மந்திரவாதி ஒருவரின் வதிவிடம் பொதுமக்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. 35 அகவை மதிக்கத்தக்க கே.எஸ். குமாரசாமி எனப்படும் மந்திரவாதி பொதுமக்களிடம் இருந்து பெருமளவு பணத்தினை அறவிட்டு அவர்களை ஏமாற்றி வந்ததோடு பாலியல் (விபச்சாரத்தொழில்) முறைகேட்டிலும் ஈடுபட்டு வந்தார். வீட்டை விட்டு வெளியேறும்படி கடந்த சில தினங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தபோதும் இதற்கு மறுப்புத் தெரிவித்த இவர் காடையர்கள் சிலரை பணிக்கு அமர்த்தி அப்பகுதியில் தங்கியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இந்த மக்கள் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் இவரது வீட்டுக்குள் உட்புகுந்து இவரையும் காடையர்களையும் தாக்கியதோடு வீட்டில் இருந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், உந்துறுளிகள், உட்பட பெறுமதி வாய்ந்த பெறுமதி வாய்ந்த பொருட்களை தீக்கிரையாக்கியுள்ளனர். இத்தாக்குதலை 60க் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து நடாத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மந்திரவாதி காடையர்களுடன் தலைமறைவாகியுள்ளார். இவரது வீட்டிலிருந்து மதுபானங்கள் பெண்களின் உடைகள் ஆண் உறைகள் என பல முறைகேடான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


http://www.nitharsanam.com/?art=11736