Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு கல்லூரியின் கதை
#1
<img src='http://www.vikatan.com/av/2005/sep/18092005/p157.jpg' border='0' alt='user posted image'>
<b> ஒரு கல்லூரியின் கதை</b>

கல்லூரிப் படிப்பு முடிந்து பிரிகிற நண்பர்கள், ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறார்கள். ஜாலியும் கேலியுமாகக் கொண்டாட்டம். திடீரென ஆர்யாவை மன நோயாளியாக கொண்டுவந்து அங்கே நிறுத்துகிறார்கள். மற்றவர்களுக்கு அதிர்ச்சி. ஆர்யா மனதளவில் இன்னமும் கல்லூரியைவிட்டே வெளியே போகவில்லை எனத் தெரியவருகிறது. காரணம்... காதல்!

தனது ஜூனியரான சோனியா அகர்வாலை, அவருக்குத் தெரியாமலே உருகி உருகிக் காதலிக்கிற ஆர்யா, அதை 'பேர்வெல் டே' தினத்தில் வெளிப்படுத்தக் காத்திருக்கிறார். ஆனால்... அது முடியாமல் போகிறது. அதுவே ஆர்யாவின் ஆறாத நோயாகிறது.



இவரை குணமாக்க, ஐந்து ஆண்டு களுக்கு முன்பிருந்த அதே சூழலுடன் கல்லூரியை உருவாக்கச் சொல்கிறார் டாக்டர் சாருஹாசன். ஒரே ஒரு மாதத்துக்கு அந்தச் சூழலில் ஆர்யா உலவி, நடிக்கப்படும் 'பேர்வெல்' தினத்தில் தன் காதலைச் சொல்லிவிட்டால், குணமாக வாய்ப்பு உண்டு என்கிறார்.

நண்பனுக்காக பழைய மாணவர்கள் அப்படியரு கல்லூரிச் சூழலை மறுபடி ஆக்ஷன் ரீப்ளே செய் கிறார்கள். அப்புறம் என்னாச்சு என்பது மீதி!

கலகலவெனத் துவங்கும் 'கெட்டு& கெதர்'... சட்டென ஆர்யா வருகையின் சோகம்... ஃப்ளாஷ்பேக்கில் ஜிலீர் ஹைக்கூவாக ரயிலில் சோனியா அகர்வா லுடன் சந்திப்பு..! ஆஹா என இன்னும் ஆர்வமானால், அத்துவானக் காட்டில் பஞ்சராகி நின்று போன பைக் மாதிரி திக்கத் துவங்கிவிடுகிறது படம்.

பழைய கல்லூரியை உருவாக்குவது என்ற கற்பனை எத்தனை அலாதி! படுசுவாரஸ்யமாகக் காட்சிகளைக் கோத்திருக்க வேண்டாமோ... ம்ஹ¨ம்! எங்கெங்கோ பிரிந்துபோன நண்பர்கள் பொது நோக்கத்துக்காக சந்திக்கிறபோது ஏற்படுகிற நினைவலைகளை ஈரத்தோடு, கலீர் காமெடியும் சேர்த்துக் கட்டிப் போட வேண்டாமோ? அதற்கும் ஒரு ம்ஹ¨ம்!

ஆர்யாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை டாக்டர் இழுத்து இழுத்து சொல்லும் காட்சியே நிறைய ஃபிலிம் தின்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் சபதமெடுக்கிற காட்சி யிலும் மனதைத் தொடாத 'டிராமா'த்தன உணர்ச்சிக் கொந்தளிப்பு.

பிரிந்து போன மாணவர்கள் சிலரின் அறிமுகக் காட்சிகள் பேஷ் ரகம். ஒருவர் சாலையோர கிளி ஜோசியக்காரனாக இருப்பது, இன்னொருத்தர் "நடிக்கிறேன். மாசம் எவ்ளோ தருவே?" என்று சம்பளம் கேட்பது, கைக்குழந்தையுடன் இளம் அம்மா கல்லூரிக்கு வருவது, கடந்த வருடங்களில் பீர் உபயத்தில் வழிந்து கிடக்கும் தொப்பையை நசுக்க, ரிவர்ஸி லேயே ஜாகிங் ஓடி காலத்தைக் கடக்கிற அபத்த ஐடியாக் காரர் என்று சில பளிச் மின்னல்கள்.

அதேமாதிரி, முன்பு கல்லூரியில் படித்தபோது காதலித்துக் கசந்து பிரிந்தவர்கள், இப்போது மறுபடியும் சந்திக்கும்போது மாறுபட்ட மனநிலையோடு காதலின் தவிப்பைக் காட்டுவது நல்ல கவிதை!

இப்படி ஆங்கங்கே அழகு செய்த இயக்குநர் நந்தா பெரியசாமி, கதையின் அடிப்படை அம்சமான காலமாற்றத்தை கண்முன் நிறுத்து வதற்கு மெனக்கெடவில்லை. டீக்கடை, கேண்டீன், மரத்தடி, ஹாஸ்டல் போன்ற கலகலப்பு ஊற்றுகளை பெரிசாகப் பயன்படுத்தாமல், எப்போதும் மைதானத்துப் பக்கமாகவே மாணவர்களை அலையவிட்டிருக்கிறார்.

சோனியா அகர்வாலை கூப்பிடப் போகிறபோது அவருக்கு நிச்சயதார்த்தம்! அங்கே போடுகிற முடிச்சை வைத்து, கிளைமாக்ஸில் கொஞ்சம் பரபரப்பு பண்ணி இருக்க முடியும். ஆனால், போட்ட முடிச்சை சுவாரஸ்யப்படுத்தாமலே படத்தை முடித்திருக்கிறார்கள்.

கல்லூரிக் களத்துக்குள் மறுபடி நடமாட ஆரம்பித்தும், ஆர்யாவின் நினைவுகள் உசுப்பப்பட்டு படிப்படியாக உற்சாகம் திரும்புவதுதானே அழகு? கடைசி வரை அரை மயக்கப் பார்வையோடே நோயாளி போலத் திரிகிறார் மனிதர்.

காட்சிக்குக் காட்சி ஜிலீரெனப் பாய்கிற மதியின் கேமராவுக்கு ஸ்பெஷல் பூங்கொத்து. இசை & யுவன்ஷங்கராமே..!

'தேங்க்ஸ்' என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஜில்லென்று சில காட்சிகள்! அதை வைத்தே சுபம் போடுகிற இடத்தில் நிற்கிறார் டைரக்டர்!



-விகடன் விமர்சனக் குழு
Reply
#2
வாவ் மீண்டும் ஒரு கதை..நமது கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்த Cry
அட அட...ஆர்யா நல்லா இருக்காரே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவருக்கு அழகான கண்..இல்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#3
இந்தப்படத்தில் சோனியா வாயால் சத்தம் போட்டு கூப்பிடாமல் உதட்டசைவால் மட்டும் ஆர்யாவை கூப்பிடுவா அப்போ அவன் உடனேயே திரும்பி பார்ப்பான். அதுதான் காதலாம்.
அப்புறம் சோனியா கரண்ட் ஷோக் அடித்து விழுந்துடுவா அப்போ எங்கேயோ இருந்த ஆர்யா ஓடி வந்து காப்பாற்றுவார், இதுதான் காதலாம்

அப்புறம் காதல் என்பது கடவுள் போலடா என்ற பாடல் சூப்பர் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#4
ப்ரியசகி Wrote:அட அட...ஆர்யா நல்லா இருக்காரே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவருக்கு அழகான கண்..இல்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

விஜய் அல்லது ஆர்யா யாருக்கு அழகான கண் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
Mathan Wrote:
ப்ரியசகி Wrote:அட அட...ஆர்யா நல்லா இருக்காரே... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அவருக்கு அழகான கண்..இல்லையா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

விஜய் அல்லது ஆர்யா யாருக்கு அழகான கண் <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

என்ன இது...என்னை டெஸ்ட் பண்றீங்களா? :roll:
<b>விஜய்க்கு</b> அழகான கண் தான்..ஆர்யாவுக்கும் தான்..புதிதாய் வந்தவர்களில் ஆர்யாவுக்குத்தான் அழகான கண்..எனக்குப்பிடித்திருந்தது. இது உங்களில் யாரூக்கும் தோணி இருக்கா என்று கேட்டேன்...தப்பாப்போச்சு.. :?

இனி கேட்டீங்கள் என்றால்..வேறு யாரையும் சொல்லி விடுவேன்..அப்புறம் குழம்பிடுவீங்கள்..அவ்ளோதான் :wink:
..
....
..!
Reply
#6
ம்ம் கொஞ்சம் வித்தியாசமான படம். நல்ல படம்
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)