| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 402 online users. » 0 Member(s) | 399 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,072
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,081
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,552
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,262
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,547
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,902
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,296
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,896
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,951
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! |
|
Posted by: Vasan - 04-08-2006, 11:04 AM - Forum: புலம்
- No Replies
|
 |
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!
டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது?
டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் கைங்கர்யமே புனர்வாழ்வுக் கழகம் பற்றிய இந்தப் பொய்யான செய்தி.
டெனிஸ் மொழியில் வல்லமை உள்ளவர்களாகிய மதியும் வதனனும் டெனிஸ் மக்கள் மத்தியில் தமிழின விடுதலைக்கு எதிரான பரப்புரையை மிக வேகமாக செய்து வருகின்றார்கள். தங்களின் மொழி அறிவைக் கொண்டு பல டெனிஸ் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பை பேணி வருகின்றார்கள். இதன் மூலம் டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றில் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்திகள் வருகின்ற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக "டிஆர்1" என்னும் டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் போராடத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அந்தத் தொலைக்காட்சியில் தோன்றிய மதியும் வதனனும் "டென்மார்க்கில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்பவர்களை தாங்கள் ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை" என்று சவால் விட்டார்கள். டென்மார்க்கில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வருகின்ற அனைத்துவிதமான செய்திகளுக்கும் மதியும் வதனனும் பின்னணியில் இருந்து ஆலோசனை வழங்கியபடி இருக்கின்றர்கள். இவர்களின் ஆலோசனையின் பேரில் டென்மார்க்கில் நடந்த சென்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் உள்நுளைந்து நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்திருந்தார்கள். தற்பொழுது அந்த மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்கள் புலிகளின் சீருடையில் நடனமாடியதை தொலைக்காட்சியில் காண்பித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதே போன்று ஆழிப் பேரலை நிதியில் மோசடிகள் நடந்துள்ளதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு மதியும் வதனனும் வழங்கிய தவறான தகவலை அடுத்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்கு சென்ற "டிஆர்1" தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், அங்கு பணியில் நின்றவர்களுடன் உரையாடி விட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பணிமனையையும் அங்கிருந்த தேசியத் தலைவரின் படத்தையும் தங்களின் ரகசிய வீடியோக் கமெராவில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போதைய நிகழ்ச்சிகளில் அதைக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் திரிவு படுத்தப்பட்டு, புனர்வாழ்வுக் கழகப் பணிமனையில் டென்மார்க் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக வெளியாகி இருந்தது. இந்த தவறான செய்தியை முதலில் மதியும் வதனனும் பொறுப்பாகவுள்ள தமிழ் ஜனநாயக அமைப்பே பரப்பியது. இதையடுத்து இந்த அமைப்பின் மீது தற்பொழுது டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக டென்மார்க் பத்திரிகைகளின் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது.
மதியும் வதனனும் குறித்த ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் கருணா குழுவிற்காக இணையத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி இவர்களில் ஒருவரே கருணா குழுவின் பேச்சாளராகிய சேரன் என்பவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் நடத்துகின்ற கருணா சார்பு இணையத்தளங்களில் "கருணா குழுவின் பேச்சாளர் சேரன்" என பல முறை இடம்பெற்றுள்ளதை பலர் கவனித்திருப்பார்கள். அண்மையில் இணையத்தளம் ஒன்றை நடத்துகின்ற நண்பர் ஒருவர் கருணா குழுவினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்தார். கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்கள் வெப்ஈழத்திலும் வேறு தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்ததும், அதன் முலம் அவர் கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றிருந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. முதலில் கருணா குழுவைச் சேர்ந்த சிலருடன் பேசிய பொழுது, அவர்கள் யாருக்கும் சேரனை தெரிந்திருக்கவில்லை. பின்பு கருணா குழுவின் ஊடகப் பொறுப்பாளர் என சொல்லிக்கொள்ளும் தூயவனின் தொலைபேசி இலக்கத்தை அந்த நண்பர் பெற்று தூயவனுடன் பேசிய பொழுது, சேரன் என்பவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அவரே எமது வெளிநாட்டுப் பேச்சாளர் எனவும் தூயவன் தெரிவித்தார். ஆனால் அவர் ரிபிசி ராம்ராஜ் அல்ல என்றும் மேலும் தூயவன் தெரிவித்தார். இந்த சேரன் யார் என்று மேலும் ஆராய்ந்த பொழுது, பல தடயங்கள் மதியையும் வதனனையுமே சந்தேகிக்க வைக்கின்றன.
இவ்வாறு மதியும் வதனனும் டென்மார்க்கில் ஒரு பக்கம் ஜனநாயகம் என்னும் பெயரில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளை, இன்னொரு பக்கம் தமிழீழத்தின் பயங்கரவாதிகளான கருணா குழுவுக்காகவும் வேலை செய்து வருகின்றார்கள்.
இந்த விடயத்தை இங்கே எழுதுகின்ற பொழுது, நான் மீண்டும் மீண்டும் தலையில் அடித்து சொல்லுகின்ற ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி முடிக்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்கள் மத்தியில் செய்யப்படுகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரைகள் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதையே இவைகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. "எழுக தமிழ்" பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய மக்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையில் அந்த முறைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள்தான் பின்பற்றி வருகின்றார்கள். அவ்வாறு பின்பற்றி வெற்றியும் கண்டு வருகின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இளம் தலைமுறையிடம் சென்றடைவது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய மொழியையும், ஐரோப்பியர்களின் சிந்தனையும் அறிந்த அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை டென்மார்க்கில் கண்கூடாக கண்டு வருகின்றோம். ரிபிசி வானொலியிலும் அண்மைக் காலமாக ஜேர்மனியில் இருந்து ஒரு 17 வயதுப் பையன் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளான். இது போன்ற விடயங்கள் எவ்விதத்திலும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இனியும் காலம் தாழ்த்தாது, எமது இளம் தலைமுறை தமது பணிகளை சரியான முறையில் செய்யத் தொடங்க வேண்டும்.
-வி.சபேசன் (07.04.06)
http://www.webeelam.com/TRODenmark.htm
|
|
|
| வாழைச்சேனை சிவன்தீவு மக்கள் மீது கருணாகுழு, படையினர் கெடுபிட |
|
Posted by: SANKILIYAN - 04-08-2006, 01:56 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சிவன்தீவில் இன்று அதிகாலை படையினர் மற்றும் கருணா குழுவினரும் இணைந்து சுற்றி வளைத்து பொது மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.00 மணியளவில் கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான குழுவினர் நாசிவன் தீவு கிராமத்திற்குள் புகுந்து பொது மக்களை மிரட்டி கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.
கிராமத்தைச் சுற்றி படையினர் பாதுகாப்பாக நின்றுள்ளனர். அத்துடன் வாழைச்சேனை, பேத்தாளை - கல்குடா வீதியிலும், அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் அந்நபரை மிரட்டியதுடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அந்நபரிடம் தொடர்பு வைக்கக் கூடாது, தொடர்பு வைத்தால் உங்கள் தலையை வெட்டி வேலிக் கட்டையில் தொங்க விடப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அவ்விடம் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சுற்றி வளைப்பு, கெடுபிடி பகல் வரை நடைபெற்றதாகவும் பொதுமக்கள் கெடுபிடிகளைக் கூற அஞ்சுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
|
|
|
| கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம் |
|
Posted by: SANKILIYAN - 04-08-2006, 01:52 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம்
இன்று, 07 ஏப்பிரல் 2006, தமிழ்த் தேசியப் பற்றாளரும் மனித உரிமை ஆர்வலருமான திரு.வி.விக்கினேஸ்வரன் திருகோணமலையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதை, மிகுந்த அதிர்ச்சியுடனும் கவலையுடனும் உங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். வன்முறையைச்சாராத சனநாயக வழிமுறையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க் முன்னின்று உழைத்த இந்த மனிதாபிமானப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளமையானது தமிழர் தேசத்தையே துக்கத்துக்குள்ளாக்கியுள்ளது. திருமலை துறைமுக பொலிஸ் நிலையத்திற்கும் சிரேஸ்ட்ட பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்திற்குமிடையில் உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையினுள் திரு விக்கினேஸ்வரன் நுழையும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுபவர்கள் யாரோ அவர்கள் சூழ்ந்திருக்கும் ஓரிடத்தில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையினால், அவர்களது உடந்தையில்லாமல் இதனை எவருமே மேற்கொண்டிருக்கமுடியாது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இலங்கை இராணுவத்தினது புலனாய்வு அமைப்பு மற்றும் அதனுடன் இணைந்தியங்கும் துணை இராணுவக் குழுவுமே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதை எமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்தும் கொலைசெய்யப்பட்டுவரும் நிலையில் இலங்கை அரசாங்கமும் அதன் சட்டத்தை நிலைநாட்டும் நிருவாக அமைப்புக்களும் பாராமுகத்துடன் செயற்பட்டுவருகின்றன. தற்போது நிலவுகின்ற கள நிலமைகளின் அடிப்படையில் வைத்து நோக்குமிடத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்றுவது எனவும் ஜெனிவாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாட்டை இல்லாதுசெய்வது எனவும் உறுதியளித்த இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதிகள் அனைத்தும் அர்த்தமில்லாது போயுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த விதிகளை விசுவாசத்துடன் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு அரசு மறைமுகமாக தனது இராணுவப்புலனாய்வு அமைப்பையும் அதனுடனிணைந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் அனுதாபிகளையும் கொலைசெய்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள், சர்வதேச சமூகத்தினால், அவர்களது முழு ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாதான முயற்சிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இது எதிர்கால முயற்சிகளையும் சீர்குலைத்துவிடும்.
நன்றி
ஈழநாதம் மட்டு
|
|
|
| விலகி விலகிப் போனாலும்...... |
|
Posted by: sWEEtmICHe - 04-07-2006, 07:23 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/normal_Alagai07.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:30pt;line-height:100%'>விலகி விலகிப் போனாலும்......</span>
[size=15]அழகாய் இருக்கிறாய் ... பயமாய் இருக்கிறது!!
<img src='http://framedbutterflyart.com/bluebutterfly.gif' border='0' alt='user posted image'>
காதல் இது தானா?
விலகி விலகிப் போனாலும்......
மனசுக்கு பிடிததால்
சந்தோசம் என்கிற தீபம் திறந்து
விழிகள் இருண்டும் வியக்கிறது...
ஆனால்.... இன்னும் ஒரு பயம்..
ஒரு வார்த்தை போதுமே
சொல்லிவிட்டு தொடர்ந்து.........,
கடந்துப் போனது ....தடம்!!
மனதுக்குள் மறைந்திருக்கிறதோ என் காதல்?
[b]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b>
|
|
|
| ..........'கலையாத கனவுகள்' |
|
Posted by: sWEEtmICHe - 04-07-2006, 07:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (4)
|
 |
<img src='http://www.sulekha.com/moviepics/medium/pattiyal_m.jpg' border='0' alt='user posted image'>
<b> <span style='font-size:30pt;line-height:100%'>.......'கலையாத கனவுகள்' </span>
[size=15]கண்ணீரில் பிறந்தேனோ?
மின்னல் போல் உதித்தாய்
பின்......
திரைகள் போட்டு சூரியனை மறைத்தாய்
காலம் கடந்தும் .........
--மீண்டும்
மேகம் வடிவாய்
பூத்தாய்.......
உன்னை வாசலில் வந்து பார்த்தேன்.......
ஆனால்
மூச்சு காத்து தான் ....... அடித்தது
ஏன்
பனி வீசி பாளத்தை உடைத்து
தேடும் விழியே வைத்து விட்டு சென்றாய்.......?
[size=13][b]விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL) </b>
|
|
|
|