Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 555 online users.
» 0 Member(s) | 553 Guest(s)
Applebot, Bing

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,075
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,083
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,907
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,298
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220

 
  2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!!
Posted by: sWEEtmICHe - 04-07-2006, 07:08 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (52)

<img src='http://www.sysindia.com/tamil/images/cal/2006/apr142006.jpg' border='0' alt='user posted image'>

[size=18][i]
வணக்கம்,
<b>2006ம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள!! </b>

கள உறுப்பினர்கள் அனைவருக்கும் ,
இந்த புதிய ஆண்டில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடந்தேறிட வாழ்த்துக்கள்!!

அன்புடன்
<b>சுவிற்மிச்சி</b>

Print this item

  டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!
Posted by: Vasan - 04-07-2006, 06:27 PM - Forum: தளமுகவரிகள் - No Replies

டென்மார்க் விவகாரங்களின் பின்னணி!

டென்மார்க்கில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணியகம் டென்மார்க் காவல்துறையினரால் சோதனை இடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தேசியத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. ஆழிப் பேரலைக்கு சேர்க்கப்பட்ட நிதியில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டே இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிமனையில் அவ்வாறு எவ்விதமான சோதனை நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் உண்மையில் என்னதான் நடந்தது?

டென்மார்க்கில் வாழுகின்ற குமாரதுரையை ரிபிசி வானொலியை கேட்பவர்கள் அறிந்திருப்பார்கள். இவருக்கு பல பிள்ளைகள் பிறந்து, அவர்கள் குமாரதுரையைப் போலவே இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வந்தாலும், இதில் மதி மற்றும் வதனன் எனப்படும் இரண்டு மகன்களுமே மிக அதிகமான துரோக வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களின் கைங்கர்யமே புனர்வாழ்வுக் கழகம் பற்றிய இந்தப் பொய்யான செய்தி.

டெனிஸ் மொழியில் வல்லமை உள்ளவர்களாகிய மதியும் வதனனும் டெனிஸ் மக்கள் மத்தியில் தமிழின விடுதலைக்கு எதிரான பரப்புரையை மிக வேகமாக செய்து வருகின்றார்கள். தங்களின் மொழி அறிவைக் கொண்டு பல டெனிஸ் ஊடகவியலாளர்களுடன் நெருங்கிய நட்பை பேணி வருகின்றார்கள். இதன் மூலம் டென்மார்க் ஊடகங்கள் சிலவற்றில் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செய்திகள் வருகின்ற மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதன் உச்சக் கட்டமாக "டிஆர்1" என்னும் டென்மார்க் தொலைக்காட்சி ஒன்றில் விடுதலைப் போராடத்திற்கு எதிரான நிகழ்ச்சிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்றது. அந்தத் தொலைக்காட்சியில் தோன்றிய மதியும் வதனனும் "டென்மார்க்கில் விடுதலைப்புலிகளுக்கு வேலை செய்பவர்களை தாங்கள் ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை" என்று சவால் விட்டார்கள். டென்மார்க்கில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வருகின்ற அனைத்துவிதமான செய்திகளுக்கும் மதியும் வதனனும் பின்னணியில் இருந்து ஆலோசனை வழங்கியபடி இருக்கின்றர்கள். இவர்களின் ஆலோசனையின் பேரில் டென்மார்க்கில் நடந்த சென்ற மாவீரர் தின நிகழ்வில் இந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் உள்நுளைந்து நிகழ்ச்சிகளை வீடியோ படம் பிடித்திருந்தார்கள். தற்பொழுது அந்த மாவீரர் தின நிகழ்வில் சிறுவர்கள் புலிகளின் சீருடையில் நடனமாடியதை தொலைக்காட்சியில் காண்பித்து தவறான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதே போன்று ஆழிப் பேரலை நிதியில் மோசடிகள் நடந்துள்ளதாக இந்த தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கு மதியும் வதனனும் வழங்கிய தவறான தகவலை அடுத்து, தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிமனைக்கு சென்ற "டிஆர்1" தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள், அங்கு பணியில் நின்றவர்களுடன் உரையாடி விட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பணிமனையையும் அங்கிருந்த தேசியத் தலைவரின் படத்தையும் தங்களின் ரகசிய வீடியோக் கமெராவில் பதிவு செய்திருக்கிறார்கள். தற்போதைய நிகழ்ச்சிகளில் அதைக் காட்டி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் செய்தியே விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான வானொலிகளிலும், இணையத்தளங்களிலும் திரிவு படுத்தப்பட்டு, புனர்வாழ்வுக் கழகப் பணிமனையில் டென்மார்க் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக வெளியாகி இருந்தது. இந்த தவறான செய்தியை முதலில் மதியும் வதனனும் பொறுப்பாகவுள்ள தமிழ் ஜனநாயக அமைப்பே பரப்பியது. இதையடுத்து இந்த அமைப்பின் மீது தற்பொழுது டென்மார்க் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக டென்மார்க் பத்திரிகைகளின் பிந்திய செய்தி தெரிவிக்கின்றது.

மதியும் வதனனும் குறித்த ஒரு செய்தி மிகவும் சுவாரஸ்யமானது. இவர்கள் கருணா குழுவிற்காக இணையத்தளங்களை உருவாக்கி நடத்தி வருகின்றார்கள். அது மட்டுமன்றி இவர்களில் ஒருவரே கருணா குழுவின் பேச்சாளராகிய சேரன் என்பவர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் நடத்துகின்ற கருணா சார்பு இணையத்தளங்களில் "கருணா குழுவின் பேச்சாளர் சேரன்" என பல முறை இடம்பெற்றுள்ளதை பலர் கவனித்திருப்பார்கள். அண்மையில் இணையத்தளம் ஒன்றை நடத்துகின்ற நண்பர் ஒருவர் கருணா குழுவினருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்தார். கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்கள் வெப்ஈழத்திலும் வேறு தளங்களிலும் வெளியிடப்பட்டிருந்ததும், அதன் முலம் அவர் கருணா குழுவினரின் தொலைபேசி இலக்கங்களை பெற்றிருந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது. முதலில் கருணா குழுவைச் சேர்ந்த சிலருடன் பேசிய பொழுது, அவர்கள் யாருக்கும் சேரனை தெரிந்திருக்கவில்லை. பின்பு கருணா குழுவின் ஊடகப் பொறுப்பாளர் என சொல்லிக்கொள்ளும் தூயவனின் தொலைபேசி இலக்கத்தை அந்த நண்பர் பெற்று தூயவனுடன் பேசிய பொழுது, சேரன் என்பவர் ஐரோப்பாவில் இருப்பதாகவும், அவரே எமது வெளிநாட்டுப் பேச்சாளர் எனவும் தூயவன் தெரிவித்தார். ஆனால் அவர் ரிபிசி ராம்ராஜ் அல்ல என்றும் மேலும் தூயவன் தெரிவித்தார். இந்த சேரன் யார் என்று மேலும் ஆராய்ந்த பொழுது, பல தடயங்கள் மதியையும் வதனனையுமே சந்தேகிக்க வைக்கின்றன.

இவ்வாறு மதியும் வதனனும் டென்மார்க்கில் ஒரு பக்கம் ஜனநாயகம் என்னும் பெயரில் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளுகின்ற அதே வேளை, இன்னொரு பக்கம் தமிழீழத்தின் பயங்கரவாதிகளான கருணா குழுவுக்காகவும் வேலை செய்து வருகின்றார்கள்.

இந்த விடயத்தை இங்கே எழுதுகின்ற பொழுது, நான் மீண்டும் மீண்டும் தலையில் அடித்து சொல்லுகின்ற ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி முடிக்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்கள் மத்தியில் செய்யப்படுகின்ற தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பரப்புரைகள் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதையே இவைகள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. "எழுக தமிழ்" பற்றிய கட்டுரையில் ஐரோப்பிய மக்கள் மத்தியில் எவ்வாறு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுதியிருந்தேன். ஆனால் உண்மையில் அந்த முறைகளை விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானவர்கள்தான் பின்பற்றி வருகின்றார்கள். அவ்வாறு பின்பற்றி வெற்றியும் கண்டு வருகின்றார்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் இளம் தலைமுறையிடம் சென்றடைவது மிகவும் ஆபத்தானது. ஐரோப்பிய மொழியையும், ஐரோப்பியர்களின் சிந்தனையும் அறிந்த அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கினால், எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்பதை டென்மார்க்கில் கண்கூடாக கண்டு வருகின்றோம். ரிபிசி வானொலியிலும் அண்மைக் காலமாக ஜேர்மனியில் இருந்து ஒரு 17 வயதுப் பையன் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளான். இது போன்ற விடயங்கள் எவ்விதத்திலும் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. இனியும் காலம் தாழ்த்தாது, எமது இளம் தலைமுறை தமது பணிகளை சரியான முறையில் செய்யத் தொடங்க வேண்டும்.
-வி.சபேசன் (07.04.06)
http://www.webeelam.com/TRODenmark.htm

Print this item

  யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம்.
Posted by: K.VETTICHELVAN - 04-07-2006, 04:33 PM - Forum: அறிமுகம் - Replies (38)

யாழ்கள உறவுகளுக்கு எனதுமுதல் வணக்கம். நான் உங்களுடன் இணைவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Print this item

  தாயகக் கொள்கையும் தமிழர்களும்
Posted by: Naasamaruppan - 04-07-2006, 12:49 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே இனக் குழுமம் கொண்ட மக்கள் நீண்ட நெடிய காலமாகத் தொடர்ந்து பாரம்பரியமாக வாழ்ந்து வரும் நிலம் அம்மக்களினத்தின் தாயகம் என்பது வரலாறு புகட்டும் அசைக்க முடியாத ஆணித்தரமான பாடமாகும். இது மிக மிக சாமானிய மக்களே புரிந்து, தெளிந்து கொண்ட உண்மை. இந்த உண்மையைக்கூட புரிந்து கொள்ளத் தடுமாறுபவர்களே நம் அரசியல்த் தலைமைகள் என்றால் அது வேறொன்றுமல்ல. சிங்களத் தலைமைகளின் அரசியல் அனுபவம் வரட்சியையும் - வங்குரோத்துத் தன்மையையுமே புடம் போட்டுக் காட்டுகின்றது.

LAND is not onily necessary for selp the expression and ethaic group. butir also necessary for the very survival of the ethiai cgroup.

‘ஒரு இனம் எதையும் இழக்கலாம். மீண்டும் வாழ்வு பெறலாம். ஆனால் ஒரு இனம் தன் தாயகத்தை இழந்தால் அந்த இனம் தலை தூக்க முடியாத ஒரு இனம் தன்னைத்தான் உணர்த்துவதற்கு மட்டுமல்ல, அந்த இனம் உயிரோடு ஒட்டிய வாழ்வு பெறுவதற்கும் தாய கம் மிக மிக முக்கியமானதாகும் என மேலைநாட்டறிஞனின் கூற்றின் ஆளத்தையும், நீளத்தையும் பார்ப்பதானால் ஒரு கால் தன் தாயகத்தை இழந்த யூத இனம், தன்னுள் எத்தனை வல்லமைகளை, அறிவை, ஆற்றலை, ஆளுமையை, நாகரிக செழுமையை உள்ளடக்கியிருந்தும் உலக நாடெல்லாம் அனாதையாக அகதிகளாக தஞ்சம் புகுந்த நாடெல்லாம் ஓட ஓட வெருட்டியதையும் கிட்லர் என்ற சர்வதிகாரி துரத்தி துரத்தி சுட்டழித்ததையும் இஸ்ரேல் என்ற நாட்டைப் பெற்று இன்று உலகை வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ள சிறப்பு தாயக மண்ணின் அவசியத்திற்கோர் எடுத்துக்காட்டு.

அமெரிக்காவின் ஆதிக்குடிகளும் பேரு, மெச்சிக்கோ நாகரிகத்தின் தந்தைகளான செவ்விந்தியர்கள். இன்று மயோலிஸ் மக்கள் என அழைக்கப்படும் அன்று ஈழத்தின் மாந்தையை ஆண்ட மயனின் வாரிசுகள். பிரித்தானிக்க கலைக்களஞ்சியத்தால் சிறந்த அறிவாளர்கள் வானசாஸ்த்திரிகள், கட்டிடக்கலை விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், மெஞ்ஞானிகள் கணித மேதைகள சிவசர்ப்ப வழிபாட்டுக்காறர்கள் என அவர்களை எதிர்த்து அழித்த ஸ்பானியர்களே வாய்விட்டுக் கூறும் செவ்விந்தியர்கள் தாயகத்தை இழந்ததால் உலக வரலாற்றில் ஓரங்களுக்குத் தள்ளப்பட்டு ஒதுக்கப்படுகின்றார்கள். இது வரலாறு தரும் பாடம். எனவே தாயகம் ஒரு தேசிய இனத்தின் உயிர் மூச்சாகும்.

நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம், இயக்கப் பின்னணி, மனிதனுடைய வாழ்வு அதை காலம் காட்டுகின்றது. வரலாற்றுக் கால வரை முறையும், நில இயல்பும் தேசிய இனத்திற்கு இரு கண்களுக்கு ஒப்பானவை என அறிஞர் ரிட்;சாட் ஹேக்கிலியூட் கூறுவதுவும், மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும், வளர்ச்சியும், வரட்சியும், தளர்ச்சியும், நகைப்பும், ஏக்கமும், ஒளியும், இருளும், நிலயியல் கூறுகளின் பின்னணியைப் பொறுத்து அமைகின்றன. எனவே மனித வரலாற்றின் இயக்கம் நில இயல் என (History is eyeogr aph in motin) என்ற நூல் அறிஞர் ஹெடர் (Hador) கூறியது. மனிதனின் வாழ்வின் வளர்ச்சிக்கு நிலம் தாயகம் எத்தனை ஊந்து சக்தி என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

குழந்தைக்குத் தாய் எப்படியோ அப்படிப்பட்டது மனிதனுக்குத் தாயகம். ஒரு தாயிடம் இருந்து குழந்தை தன் வளர்ச்சிக்கு வேண்டியதைப் பெறுவது போல தாயகம் மனித பரிணாம வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்தையும்- படைத்தளித்து வருகின்றது. இதை உணர்ந்த பட்டுக்கோட்டையார் ‘மனிதன் ஆரம்பமாவதுவும் பெண்ணுக் குள்ளே. அவன் ஆடி அடங்குவதுவும் மண்ணுக்குள்ளே" என்று பாடினார் எனவே மண்ணுக்கும், மனிதனுக்கும் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்குமுள்ள உறவு போன்றதாகும்.

ஒருகாலத்தில் சீனாவின் பெரிய அறிஞன் ஒருவன் உலகை சுற்றிப் பார்க்கத் தயாரானான். சீனாவின் சர்க்கரவர்த்தியை சந்தித்து விடைபெறச் சென்றான். அறிஞனை சந்தித்து விடயங்களைத் தெரிந்து கொண்ட சக்கரவர்த்தி அறிஞனின் உலக வலம் நலமே முடிய வாழ்த்தி அவருக்கு ஒரு முடிச்சை பரிசளித்து அனுப்பி வைத்தார். பரிசை பெற்றுக் கொண்ட அறிஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான். பல நாட்களின் பின் ஒரு நாள் அறிஞருக்குச் சக்கரவர்த்தி அளித்த பரிசு ஞாபகம் வந்தது. எனவே அதைத் தேடி எடுத்து பிரித்தார். அங்கே, பொன்னோ, பொருளோ, பணமோ இருக்கவில்லை. பயணிகளுக்குப் பரிசளிப்பது யோவற்றை? ஆனால் மன்னருக்கெல்லாம் மன்னனான சீனிச் சக்கரவர்த்தி அறிஞருக்கு அளித்த பரிசு அவையல்ல. அவற்றுக்கு மேலான கிருஷ்ன பரமாத்மா மகாவலி மன்னனிடம் கேட்ட மூன்றடி மண்ணல்ல. ஒரே ஒரு பிடி மண் ஏன்? எதற்கு?

பொதுவாக அறிஞர்கள் சென்ற இடமெல்லாம் கிடைக்கும் சிறப்பால் ‘யாதுமூரே யாவரும் கேளீர்’ என அமர்ந்து விடுவார்கள். அந்த நிலையையும் நினைப்பையும் மாற்றி தாயகத்தை நினைத்துத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே ஒரு பிடி மண்ணை பரிசாகக் கொடுத்து அனுப்பி வைத்தார் என்பதை புரிந்து கொண்ட அறிஞர் நாடு திரும்பினார். எனவே தாயகத்தின் அவசியம் தாயகத்தை நேசிப்பவர்களுக்கே புரியுமே ஒழிய அதை யாசித்தவர்களுக்;குத் தெரிய அவசியமில்லை.

இலங்கையின் மண்ணின் மைந்தர்கள் நாகர், இயக்கர்தான் என்பதை பௌத்த சிங்கள பாளி வரலாற்று நூல்களான மகாவம்சம், சூளவம்சம், தீபவம்சம் என்பன மறுப்பின்றி ஏற்றிருக்கின்றன. இவர்கள் அன்று திராவிடர்கள், சிவநெறினர், தமிழின் ஆரம்ப மொழியான எலுவைப் பேசியவர்கள் நாகர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டு அணுபவித்த வடபகுதியில் இன்றைய மொழி தமிழ். அது போல இயக்கர்கள் வாழ்ந்து வளர்ந்த, ஆண்டனுபவித்த தென்கிழக்கிலங்;கையின் இன்றைய மொழி தமிழ். எனவே எலு மொழியின் பரிணாம வளர்ச்சியின் தோற்றம் தமிழ் மொழி. ஆகவே நாகர் இயக்கர் தமிழர்கள். இவர்கள் வடக்கையும் தென்கிழக்கையும் பரம்பரைத் தாயகமாகக் கொண்டவர்கள்.

விஜயன் பௌத்த கதை கட்டுக்கதை என்று பௌத்த சிங்கள புத்திஜீவிகள் ஒட்டு மொத்தமாகக் கூறிவிட்டதால். இனி அதில் இரண்டாம் பேச்சு மூச்சிக்கு இடமில்லை. பௌத்தம் இலங்கையில் காலூன்றிய காலம் நாகம ன்னன் தேவநம்பிய தீசன் கி.மு 244-207 காலமாகும்.

தேவநம்பிய தீசனின் தாய்தந்தையர்கள், சிவநெறியுடையவர்கள், நாகபரம்பரை. எவ்வாறு கௌதம புத்தர் ஒரு சிவநெறியாளனாக இருந்து பௌத்த மதத்தை தோற்றுவித்தாரோ, அவ்வாறே தேவநம்;பிய தீசனும் சிவநெறியாளனாகப் பிறந்து வளர்ந்து அரசனானாதும் பௌத்தத்தை ஆதரித்தானே ஒழிய அவன் பௌத்த சிங்களவனல்ல. பௌத்த தமிழன் அவனுடைய ஆட்சிக்குட்பட்ட குடிகள் சிவநெறியை மூலமாகக் கொண்ட நாகர்கள். அவர்கள் பௌத்தத்தை தழுவினார்களே ஒழிய சிங்களவர்களல்ல. சிங்களம் என்ற வார்த்தை உலகில் எப்பாகத்திலும் அன்றில்லை. இல்லாத மொழி அடிப்படையில் ஒரு இனத்தை பின் எழுதிய வரலாற்றாசிரியர்கள் பௌத்தர்களை சிங்களவர் எனக் குறித்தது மிக மிகத் தவறாகும்.

பிழையான வரலாற்றுப் பதிவாகும். ‘தமிழர்களின் பழமையின் திறவுகோல் மண்ணில் மறைந்திருக்கும் அகழ்வாராய்ச்சிச் சின்னங்களை வெளிக் கொணர்வதிலே உண்டு "என 1919ம் ஆண்டு மாசி மாதம் 20ம் நாள் வெளிவந்த டெயிலி நீயுஸ் பத்திரிகைக் கட்டுரையில் சேர் போல் பீரிஸ் எழுதியுள்ளார். இவர் எழுதுவதற்கு முன் 1917ம் ஆண்டு கதிரோடையில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை மையமாக வைத்தே இக்கட்டுரையை எழுதினார். எனவே ஈழத்தின் ஆதிவாசிகள் தமிழர்கள். ஆகவே ஈழம் சிங்களவரிலும் பார்க்க தமிழரின் தாயகம் என்பதை சிங்களத் தலைமைகள் வெறுக்கவும், மறுக்கவும், மறைக்கவும் முடியாது.

தேவநம்பிய தீசன் கி.மு244-207 காலத்தில் நாகரும் இயக்கருமே வாழ்ந்தார்கள். சிங்களம் என்ற வார்த்தை உலகில் திருவிலுமில்லை, கருவிலுமில்லை. தேவநம்பியதீசனின் பிரஜைகள் நாகர்கள். அவர்கள் சிங்களவரல்ல. சிங்கள மொழியே 10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார்.

6ம் நூற்றாண்டில் சிங்களம் என்ற சொல்லில்லை. இதை மகாவம்சம் கூறவில்லை. 17ம் நூற்றாண்டில் கண்டியில் சிறை இருந்த றொபட் நொக்ஸ் எழுதிய (A Histor ical relation of the islandof ceylon) என்ற நூல் குறிப்பில் தான் தப்பியோடி வந்த போது அனுராதபுரத்தில் இருந்தவர்களால் சிங்களத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் தான் ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவியோடு பேச வேண்டி இருந்தது என்றும் அவர்கள் தமிழே பேசினார்கள் எனவும் குறித்துள்ளார்.

இலங்கையை ஆண்ட மன்னர்கள் தமிழ் மொழியையே ஆட்சி மொழியாகவும், அன்னிய தொடர்பு மொழியாகவும் வைத்திருந்தார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளுண்டு. எனவே சிங்களம், சிங்கள இனம் என்பவை காலத்தால் பிந்திய அடையாளங்களாகும். இக்காலத்திற்க்கு முந்தியவர்கள் பௌத்த தமிழர்களே ஒழிய பௌத்த சிங்களவர்களல்லர். இன்றைய ஜனாதிபதி பிறந்து வளர்ந்து வாழும் தங்கால தங்காலை என்ற தமிழ் பெயரின் திரிவாகும். ஏன் 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னனாக கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனுக்கும், பிரான்சு மன்னன் 16ம் லூகிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தமிழ் மொழியிலே எழுதப்பட்டுள்ளது. இதை பாண்டிச்சேரி நூதனசாலையில் இன்றும் பார்க்கலாம். 1815ம் ஆண்டு கண்டி பிரதானிகளுக்கும் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்குமிடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தில் கண்டி சி;ங்களப் பிரதிநிதிகளே தமிழில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

தென்னிந்திய அரசுகளில் திராவிடர்கள் திராவிடர் செல்வாக்கு மிகுந்திருந்த காலம் முதல் இலங்கையின் வரலாற்றில் திராவிடர் செல்வாக்கு இருந்திருக்கிறது. இன்றுள்ள சிங்கள இனத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த இனத்தவர்களுள் திராவிடரும் அடங்குவர். அவர்கள் இத்தீவுக்கு எப்போ வந்தார்கள் என்பது தெளிவாகவில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பழைய காலம் தொட்டே இவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு Sri Lanka the holocakst and after என்ற நூலில் அதன் ஆசிரியர் எல்.பியதாச குறித்துள்ளார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் தமிழர்கள் மிக செல்வாக்குப் பெற்று வாழ்ந்தார்கள் என அறிஞர் கிளாரன்ஸ் மலோனி சுட்டிக் காட்டுகிறார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டு முதல் வடக்கில் தமிழர் ஆட்சி நிலை பெற்றிருந்தது. சிவனின் மகன் முருகனின் ஆட்சி கதிர்காம த்தில் இடம்பெற்றது. வடக்கு, தெற்கு, மேற்குவரைத் தமிழர் ஆண்டார்கள் என ரோம இராச்சியத்திற்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட வாணிபம் என்ற நூலில் 123ம் பக்கத்தில் அறிஞர் வார்மிண்டன் குறித்துள்ளார்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இலங்கையில் தமிழர் முக்கிய பங்கைப் பெற்றிருந்தனர் எனக் கலாநிதி எஸ்.ப ரணவிதான கூறியுள்ளார். அன்னியரான போர்த்துக்கீசர்கள் 1581 ஆண்டு கோட்டை அரசைக் கைப்பற்றினார்கள். அதைத் தொடர்ந்து வடகிழக்கு ஆட்சியையும் தம் வசமாக்கினார்கள். இருந்தும் வன்னிப் பிரதேசம் தனியரசாகவும், கண்டி தனித் தமிழரசாகவும் இருந்தன. கி.பி 1560ல் யாழ்ப்பாண ஆட்சி போர்த்திக்கீசர் வசமானது. 1591ல் போர்த்திக்கீசர் யாழ்ப்பாணத்தில் தங்கள் பிரதிநிதியாக எதிர் மன்னசிங்கம் என்பவனை நியமித்தார்கள். அதன் பின் சங்கிலிகுமாரன் ஆட்சிக்கு வந்தான். இவன் சிலகாலம் அவர்களோடு ஒத்துழைத்தான். பின் அவர்களை எதிர்த்தான். இக்காலத்தில் வன்னியிலிருந்த கொட்டியாற்றுப் பற்று, பழுகாமம், பாணமை, யால, மண்முனை என்ற பகுதிகள் சுதந்திரமாக இயங்கின.

போர்த்துக்கீசர் காலத்தில் இலங்கையில் இருந்த தமிழரசு குறித்து டி.குரோசலஸ் என்பவர் வாந வநஅடிழசயட உழபெரநளவ ழக உநலடழn என்னும் நூலை எழுதினார். அதில் இந்த அமைதியான யாழ்ப்பாண பட்டினம் என்ற சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கியதல்ல, அதன் அண்மையிலுள்ள பகுதிகள் எல்லாம் அதனைச் சேர்த்தது. ஒரு உப்புநீர் நிலையால் பிரிக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியும் அதனோடு சேர்ந்தது. வலிகாமம், தென்மராட்சி பச்சிலைப்பள்ளி, வடமராட்சி என்ற பகுதிகளையும் உள்ளடக்கி வன்னி வரை பரந்து குறுக்காக, மன்னார். திருகோணமலை என்பவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு பெரிய நிலப்பரப்பாகும்.

போர்த்திக்கீசரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த டச்சிக்காரர்கள் இலங்கையின் வளங்களை கைப்பற்றுதலில் கவனமாக இருந்ததால் சுதேசிகளின் விருப்பங்களை அனுசரித்தே நடந்தார்கள். அவர்கள் சுதேசிகளின் தேசியத்தை மதித்து, தமிழரைத் தமிழ் மக்களின் மரபுக்கிணங்கவும் சிங்களவர்களை சிங்கள மரபுக்கிணங்கவும் ஆட்சி செய்தார்கள். டச்சுக்கார தேசாதிபதிகளான பின்வருவோர் கூறிய வரலாற்றுத் தரவுகளைப் பார்ப்போம்.

யாழ்ப்பாணத்தில் இருந்த டச்சுக் கொமாண்டரான பவிலோன் ஒருவர் அவர் 1665ல் எழுதிய குறிப்பில் 'வன்னி உட்பட கிழக்கில் திருகோணமலை முதல் மேற்கில் கற்பிட்டி வரையும், யாழ்பாணத்தை சுற்றியுள்ள தீவுகள் மன்னார்த் தீவு எல்லாவற்றையும் உள்ளடக்கிய அரசு யாழ்ப்பாண அரசு எனக் குறித்துள்ளார்.

வான்கோயன்ஸ்: (1675 இருந்த டச்சு தேசாதிபதி)

யாழ்பாணம் மட்டக்களப்பு, பகுதிகளில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ். கிழக்கில் மட்டக்களப்பு மேற்கில் கற்பிட்டி, நீர் கொழும்பு, வடக்கில் கொட்டியாரம் உட்பட யாழ்ப்பாணப் பட்டினம் முழுவதும் தமிழ்ப் பகுதியாகும் எனக் குறித்துள்ளார்.

வான் இம்ஹோவ்:

இவர் 1740ல் இலங்கையிலிருந்து டச்சுத் தோசாதிபதி. இவர் எழுதிய குறிப்பில் யாழ்ப்பாண பட்டினம் என்ற தமிழ் இராட்சியம் தனி அரசனின் கீழ் முதலிருந்தது. இந்த இராட்சியம் மற்றைய பகுதிகளை விட வேறுபட்ட அரசியல் சிவில் முறையில் நிருவாகிக்கப்பட்டது.

அந்தோனிமூயாட்:

இவர் 1766ல் யாழ்ப்பாணத்தில் டச்சுத் தேசாதிபதியாக இருந்தவர். இவர் னரவஉh ழக உநலடழn என்றும் எழுதிய புத்தகத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் எனப்படும் பிரதேசம் இலங்கைத் தீவின் மூன்றில் ஒரு பங்கு கொண்டது. அது கண்டி அரசிலிருந்து வேறுபட்டது மன்னார் முல்லைத்தீவு இதன் நீதி பரிபாலனத்துக்குள் அடங்கும.; டச்சுக்காரர்கள் கண்டியரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் பிரதேசம் உள்ளடக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குட்பட சிலாபம் ஆற்றுக்கும் குமுக்கன் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதி தமிழ்ப் பகுதியாகும்.

கிறிஸ்ரபர் சுவைட்சர் இவர் ஒரு டச்சு எழுத்தாளர் டச்சுக்காரர் ஆட்சியின் போது இலங்கை வந்த உல்லாசப் பயணி இவர் தன் குறிப்பில் இலங்கையைப் பற்றியும் இலங்கையின் மற்றுமோர் இனத்தவர்களான தமிழர்கள் வடக்கு கிழக்கு உட்பட அளிப்பு கற்பிட்டி, நீர் கொழும்பு, உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.

இலங்கையின் டச்சு ஆளுனராக இருந்த ரிக்கு லூப்பான் கோயன்ஸ் கி.பி1665ல் இருந்தவர் அவர் தன் மேலதிகாரிக்கு எழுதிய குறிப்பில் ‘மட்டக்களப்பில் வாழ்வோரின் மரவு, சமயம், மொழி, பழக்கவழக்கங்களால் மலைபார் தேசத்தைச் சேர்ந்தவர்களாகும். அதே போன்று யாழ்பாணப் பட்டினம், திருகோணமலை, மேற்கிலுள்ள கற்பிட்டி, கங்குன் கோறளை வடபகுதிவரை வாழ்பவர்கள் அத்தனை பேரும் தமிழர்கள். நீண்ட காலமாக இலங்கையை தமக்குள் பங்கிட்டு இரு பெரும் தேசிய இனங்கள் ஆண்டு வருகின்றார்கள். அவர்கள் தமிழரும், சிங்களவர்களுமாகும் சிங்களவர்கள் இலங்கையின் தெற்கு முதல் மேற்கேயுள்ள வளவை ஆறுவரை வாழ்கின்றார்கள் தமிழர் வடக்குக் கிழக்கு முதல் புத்தளம், சிலாபம் தொடக்கம் மன்னார் வரை கிழக்கில் குமுக்கன் ஆறுவ ரையும் வாழ்கின்றார்கள் எனக் குறித்துள்ளார்.

கி.பி1813ல் இலங்கையில் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த சேர் பிறவுன்டிக் என்பவர் பிரித்தானிய குடியேற்ற நாட்டு மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் "இலங்கையில் சிங்கள மொழி எவ்வளவு அவசியமோ அது போல தமிழ் மொழியும் அவசியமாகவுள்ளது. வடக்கு, கிழக்கு, புத்தளம், கற்பிட்டி, மன்னார் வரை வாழ்வோர் மொழி தமிழாகவே இருக்கின்றது. ஆகவே நான் சிங்களத்துடன் தமிழ் மொழிக்கும் சம உரிமை வழங்குகின்றேன் என எழுதியுள்ளார்.

கி.பி1770ல் இலங்கையில் பிரித்தானிய ஆளுனரான ரெலென் என்பவர் தானே எழுதிய குறிப்பில் இலங்கையின் பெரும் பகுதி தமிழர் வாழ்விடமாகவே தெரிகின்றது. வன்னிப் பகுதி வன்னியர்களால் ஆளப்படுகின்றது. இது தங்கள் நாடு என அவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் சிங்கள ஆட்சிக்கு உட்பட்டவர்களல்ல. இலங்கையின் கரையோரங்களில் வாழ்வோர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசுகிறார்கள்.

மிகவும் ஆரம்பகாலம் முதல் தமிழினத்துவ சிறப்புடைய மக்கள் இங்கே வாழ்ந்து வந்ததற்குக் கிராமிய கல்வெட்டுகள் சான்று பகிர்கின்றன. அதற்குச் சமமான உறவுகள் யாதெனில் ஆதி வரலாற்றுக் காலத்திலும், பௌதீகப் பண்பாட்டும், பௌதீக பண்பாடு அல்லாத பண்பாட்டுத் தோற்றப்பாடுகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் ஏற்பட்ட உறவுகளாகும் என பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க இலங்கை இன உருவாக்கலில் சிக்கலான பிரச்சினை என்ற தொடர் கட்டுரையில் கூறியுள்ளார்.

ஒரு இனம் பண்டு தொட்டு தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் பிரதேசம் அந்த இனத்தின் தாயகமாகும் அந்த இனத்திற்கும் அம்மக்களுக்குமுள்ள தாயக உறவை மறுக்கும் உரிமை, நிராகரிக்கும் பொறுப்பு யாருக்கும் கிடையாது. மகிந்த ராஜபக்ச அவர்கள் முழுக்க முழுக்க சிங்களவரின் அங்கீகாரம் பெற்ற ஜனாதிபதி. தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்றவர் அல்ல. அவர் எவ்வாறு தமிழ் மக்களின் நியாயமான தாயகத்தை மறுக்கவும் நிராகரிக்கவும் முடியும். தமிழ் மக்கள் தங்கள் இறமையை பிரித்தானியரிடம் இழந்தார்களே ஒழிய சிங்களவரிடம் இழக்கவில்லை. சிங்கவரால் 1972லும் 1978லும் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டங்கள் தமிழரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதல்ல. எனவே தமிழர் தாயகம் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழரின் பிறப்புரிமை. அதை நிராகரிக் கும் உரிமை வேறொறு இனத்தவர்களுக்குமில்லை.

பூ.ம.செல்வராசா
மட்டக்களப்ப ஈழநாதம்

Print this item

  பிள்ளைகளின் ஆளுமையும் பெற்றோர்களின் முழுமையும்
Posted by: Naasamaruppan - 04-07-2006, 12:45 PM - Forum: தமிழ் /தமிழர் - No Replies

"எந்தக் குழந்தையும் நல்லகுழந்தை தான் மண்ணிற் பிறக்கையிலே - அது நல்லது ஆவதும் தீயது ஆவதும் அன்னை வளர்ப்பினிலே - அது அன்னை வளர்ப்பினிலே..." என்கிறது திரையிசைப் பாடல். உண்மை தான். ஆனாலும் தாய் மட்டும் இதற்குப் பாத்திரவாளியல்ல. தந்தையும் தான். நிச்சயமாக குழந்தையிலே எந்தக் கள்ளம் கபடமும் கெட்ட நடத்தையும் பிறக்கும் போது இருப்பதில்லை. அதனால் தான் 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்று கூறப்படுகிறது.

குழந்தை பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துக்கு வரும் போது தான் ஒன்றில் நல்லதாகிறது, அன்றேல் கெட்டதாகிறது. மண்ணில் பிறக்கும் போது நல்லதாகப் பிறந்த குழந்தை நாளடைவிலே ஏன் தீயதாகிறது? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

நல்லதாகப் பிறந்த குழந்தையை நல்லதாகவே வளர்த்து வீட்டுக்கும், நாட்டுக்கும், ஏன் முழு உலகுக்கும் சிறந்த நற்பிரஜையாக உருவாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு முழுப் பொறுப்பாக பெற்றோர்களின் தலைகளில் தான் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆகவே தான் தாய் மாத்திரம் அன்றி அக்குழந்தையின் தந்தையும் அதனது ஆளுமை வளர்ச்சிகளிலே அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

கருவிலேயே குழந்தையின் கல்வி ஆரம்பிக்கப்படுகின்றது. அக்கல்வியை நற்கல்வியாகப் புகட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோர்களில்த் தான் தங்கி இருக்கிறது.

ஆக, கருவிலே இடம் பெறும் இக்கல்விக்குக் குருவாகத் தாயும், தந்தையும் தான் தலைமை வகிக்கின்றார்கள். இந்த இரு குருமாரின் வழி நடத்தல்களும் வழி தவறிப்போனால் "கருக்கல்வி" பாழாகி விடும். கருக்கல்வி பாழாகிப் போனால் பிள்ளையின் காலம் முழுதுமான வாழ்வும் பாழாகிப் போகும். இது அத்தலைமுறையையே தாக்கும்.

எனவே தான் ஒரு குழந்தை கருவாகும் போது தாயும் தந்தையும் குருவாக உருவாக வேண்டும். எத்தனை தாய் தந்தையர்கள் இப்படி உருவாகிறார்கள் என்பது தான் கேள்விக் குறியாக இருக்கிறது. அக்கேள்விக்குறி தான் பிரச்சினைக்கு உரியதாக இருக்கிறது.

கருவுற்ற நாளிலிருந்து கற்பவதியான தாய் மெல்லிய, துல்லிய - இனிமையான இன்னிசைப் பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும். கருத்தாளம் மிக்க சின்னச் சின்னப் பாடல்களைப் பாடி மகிழ வேண்டும். சிறந்த நல்ல குட்டிக் கதைகளை வாசிக்க வேண்டும். நல்ல நல்ல சிந்தனைகளை சீரிய நல்லெண்ணங்களை தம்மிடையே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதே போன்று அக்குழந்தையின் தந்தையானவர் காலை, மாலை முதலான இதமான வேளைகளில் மனைவி அருகாக நெருங்கி இருந்து இன்னிசைப் பாடல்களைப் பாட வேண்டும்.

நல்ல பல கதைகளை மனைவிக்குக் கூறுவதாகக் கூற வேண்டும். அறிவுச் சிந்தனைகளை நல்லெண்ணங்களை மனைவியோடு பரிமாற வேண்டும். இப்படி செயற்படும் போது கருவிலே இவை பதியும். இவை சிறந்த கல்வியாக பிள்ளைக்கு உருவாகும், உதவும்.

பிள்ளை கருவுற்று இருக்கும் போது பெற்றோர் மிகவும் நிதானமாகவும், புத்தி சாதூரியத்துடனும், சண்டை சச்சரவுகள் எதுவும் அற்ற வகையிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்பும், அகிம்சையும், ஐக்கியப்பாடும், நல்லெண்ணங்களும், நன்னடத்தைப் போக்குகளுமே குடும்பத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக குறிப்பிட்ட தாயும், தந்தையும் செயற்படுவார்களாக இருந்தால் இருவருமே சிறந்த குருமாராக விளங்குவார்கள். அதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தை அறிவொளி பெற்றுத் துலங்கும். சுருங்கச் சொல்லப் போனால் கருவறை காத்திரமான படிப்பறையாக இருந்து குழந்தையை வளர்த்தெடுக்கும்.

இவை அனைத்தும் குழந்தை கருவாக இருக்கும் போது பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய கடப்பாடுகளாகும். இதனுடன் நின்று விட்டால் போதுமா? நிட்சயமாக இல்லை.

குழந்தை பிறந்த பின்பு தான் பெற்றோர் கூடிய கட்டுப் பாட்டுக்கும், பொறுப்புக்கும் உள்ளாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். குழந்தை தவழும் வரை கருவில் இருக்கும் போது மேற்கொண்ட கற்பித்தல் நெறி முறைச் செயற்பாடுகளை இருவரும் மேற்கொள்ளலாம்.

பின்பு அது தத்தி தத்தி நடக்க முற்படும் போது, மழலை மொழி பேசத் தொடங்கும் போது இலகுவான மொழிப் பாவனைகளை பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டும். மழலையோடு மழலையாக மழலை மொழி பேச வேண்டும். ஆடிப்பாடி அக்குழந்தையை மகிழ்விக்க வேண்டும். பல் திறப்பட்ட நற் சிந்தனைகளை குழந்தையின் நெஞ்சிலே விதைக்க வேண்டும்.

குழந்தை படிப்படியாக பேசக் கற்றுக் கொள்ளும் போது பெற்றோரும், மற்றோரும் உற்றார் உறவினரும் குழந்தைக்கு முன்பாக வேண்டத் தகாத வார்த்தைகளையும், கெட்ட கதை பேச்சுக்களையும் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றையே பிள்ளை மனதிலே அழியாது பதித்துக் கொள்ளும். அது பின்பு 'தொட்டிற்பழக்கம் சுடுகாடு வரை' என்பது போல அப்பிள்ளையின் முழு வாழ்க்கையையும் பாதிக்கும்.

எனவே இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களையும், தான்தோன்றித் தனங்களையும் தவிர்த்து நல்ல கதை பேச்சுக்களையும், நன்னடத்தை நெறிமுறைகளையும் கடைப்படிக்க முடியும். இதன் மூலம் தான் அக்குழந்தை சிறந்த குழந்தையாக வளப்படவும், வளரவும், வாழவும் முடியும்.

மண் விளையாட்டிலே நாட்டம் கொள்ளும் பருவம் வந்ததும் அனேகமான பெற்றோர்கள் அப்பிள்ளையை திட்டித் தீர்ப்பதும், அடிப்பதுமாகத் தான் இருப்பார்கள். இது தவறாகும், தண்டனைக்குரிய குற்றமுமாகும்.

மண் விளையாட்டிலும் எவ்வளவோ கற்க வேண்டிய விடயங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றைப் பிள்ளை கற்றுக் கொள்ளும். இதனாலே தான் 'வளரும் பயிரை முளையிலே தெரியும்'. வாழும் பிள்ளையை மண் விளையாட்டிலே தெரியும்' என்பார்கள். ஏன் சும்மாவா? இல்லை.

பிள்ளை மணலாலே பாதை அமைக்கும். பாலம் உருவாக்கும். வீடு கட்டும், பூக்கள் அமைக்கும், இன்னும் ஏதோ ஏதோவெல்லாம் செய்யும். இவற்றிலெல்லாம் பிள்ளையின் புத்திக் கூர்மை தெரியும். கலைநயம் காட்சியளிக்கும். இலட்சியம் கூடத் தென்படும். ஆகவே மனமார பிள்ளைகளை விளையாட விடவேண்டும்.

அக்கம் பக்கம் பிள்ளை விளையாடச் செல்கிறது என்றால் அதற்கும் விட வேண்டும். அதன் மூலம் பிள்ளை பலவித புதுமுகங்களை, புதிய நண்பர்களைக் கண்டு கொள்ளும். சமூக மயப்படுவதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த இடத்திலே பெற்றோர் மிகவும் கண்ணும், கருத்துமாக இருக்கவும் வேண்டும். பிள்ளை விளையாடச் செல்கின்ற இடம் சூழல் பொருத்தமற்றதாயின் அங்கே செல்வதை புத்திசாலித்தனமாக தவிர்க்கச் செய்ய வேண்டும். நல்ல இடத்தில், நல்ல சூழலில் நல்ல பிள்ளைகளுடன் சேர்வதற்கே சந்தர்ப்பம் அதிகம் கொடுக்க வேண்டும்.

பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் பராயம் வந்ததும் பெற்றோர் தமது கவனத்தையும், கடப்பாட்டையும் மேலும் கூட்டிக் கொள்ள வேண்டும். பிள்ளை ஒழுங்காக பாடசாலை செல்கிறதா? படிக்கிறதா? எப்படிப்பட்ட நண்பர்களுடன் சேர்கிறது? என்பது போன்ற விடயங்களில் அவதானம் அதிகமாக இருந்து பிள்ளைகளை வழி நடத்துவது இன்றியமையாததாகும். "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அது தாண்டா வளர்ச்சி" என்பதற்கேற்ப பிள்ளையின் வளர்ச்சி இரண்டு விதமாகவும் இருக்க வேண்டும். ஆளோடு சேர்ந்து அறிவும் வளர வேண்டும். அறிவு வளரும் போதுதான் ஆளுமை வளரும். எனவே இந்த விடயத்திலும் பெற்றோர் முக்கிய கவனம் எடுக்க வேண்டும்.

பிள்ளையை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். ஒழுக்க நெறிமுறைகளை கடவுள் சிந்தனைகளை, அன்பை, பண்பை, மனித நேயத்தை, இரக்க சிந்தனைகளை கடைப்பிடிக்கப் பழக்க வேண்டும். நல்லவர்களாக, வல்லவர்களாக, வீட்டுக்கும், நாட்டுக்கும், வெளி உலகுக்கும் உகந்தவர்களாக நானிலத்திலே நற்பிரஜையாக தமது பிள்ளைகளை உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோருக்குமான உரிய கட்டுப்பாடுகளாகும்.

பிள்ளையின் அறிவும், ஆளுமைச் செயற்பாடுகளும் சிறப்புற அமைந்து செழுமையும், மகிமையும் பெறுவதற்குப் பெற்றோர்கள் முழுமை பெற்றவர்களாக, நாலும் அறிந்தவர்களாக, நற்பெற்றோராக இருக்க வேண்டும். பானையிலே முழுமையாக இருந்தால் தானே அகப்பையிலும் முழுமையாக வரும். ஆகவே முழுமை பெற்றவர்களாக பெற்றோர்கள் மாற வேண்டும். அந்த மாற்றமே ஆளுமை படைத்த அதிசிறந்த சந்ததியை உலகினுக்கு உருவாக்கிக் கொடுக்கும்.

கன்னிமுத்து வெல்லபதியான்
மட்டக்களப்பு ஈழநாதம்

Print this item

  பண்பாட்டின் வாழ்வியல்
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-07-2006, 09:36 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - No Replies

பண்பாட்டின் வாழ்வியல்

தொ.பரமசிவன்


நகர நாகரிகம், மேட்டிமையின் அடையாளம் என்பவற்றில் ஒன்றாக இன்று நாடு முழுவதும் கற்காரை (கான்கிரீட்) வீடுகள் உருவாகி வருகின்றன. ‘தனி வீடு’ என்னும் உணர்வு ஒரு வெறியாக மாறி எல்லோரையும் பிடித்து ஆட்டுகிறது. உலக வங்கியின் வழியாகப் பன்னாட்டு மூலதனம் ‘குறைந்த வட்டி’ என்னும் தூண்டிலைப் போட்டு ‘வீடு கட்டக் கடன்’ என்னும் பெயரில் ஏழை நாடுகளைச் சுரண்டி வருகிறது.

காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை, புல்வகைகள் வேய்ந்த கூரை வீடுகளில்தான் வாழ்ந்தனர். இவ்வீடுகளின் சுவர்கள் குடிசைகளாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும், சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. இந்தத் தொழில்நுட்பம் வெப்ப மண்டலப் பகுதியிலுள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த வீடுகளைப் பற்றி நாம் சொல்லக்கூடிய ஒரே குறைபாடு அவை கழிவறை வசதி இல்லாதவை என்பதுதான். ‘கழிவறை’ என்ற கோட்பாடும் இடவசதியும் வெப்ப மண்டலப் பகுதியான தமிழ்நாட்டில் அக்காலத்தில் இல்லை. (எனவே மலம் அள்ளும் சாதியாரும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை).

‘வீடு’ என்ற சொல் தொழிற்களத்தில் இருந்து ‘விடுபட்டு’ நிற்கும் இடத்தைத்தான் முதலில் குறித்தது. ‘விடுதி’ என்னும் சொல்லும் அந்தப் பொருளில் வந்ததுதான். பிற்காலத்தில் மேலோர் மரபு ‘வீடு’ என்பது மண் உலகத்திலிருந்து விடுபட்டுச் சேர்கிற ‘துறக்கத்தை’ (சொர்க்கத்தை) குறிக்க வந்ததாகும். சங்க இலக்கியத்தில் ‘வீடு’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘மனை’ என்ற சொல்லே காணப்படுகிறது. ஒரு மனிதன் உண்டு, உறங்கி, இனப்பெருக்கம் செய்யும் இந்த இடத்துக்குரியவள் ‘மனைவி’ எனப்பட்டாள்.

மலை, காடு, வயல், புல்தரை, மணல்வெளி என நிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தெய்வங்கள் உறைகின்றன. இவற்றை மனிதன் தொல்லை செய்யக்கூடாது. எனவே வீடு கட்டவிருக்கும் நிலத்தில் முளை அறைந்து, கயிறு கட்டி கயிற்றின் நிழல் வழியாகத் திசைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும். அந்தந்தத் திசையிலுள்ள தெய்வங்களைக் கண்டறிந்து அவற்றிற்கு வேண்டுவன செய்யவேண்டும். பின்னரே அந்த நிலத்தில் மனிதன் தனக்குரிய இருப்பாக வீடுகட்டத் தொடங்கவேண்டும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.

‘‘நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து’’ என்கிறது நெடுநல்வாடை. மனைத் தெய்வங்களையும் திசைத் தெய்வங்களையும் வேண்டி அமைதிப்படுத்தும் (சாந்தி செய்யும்) இந்தச் சடங்குக்கு ‘தச்சு செய்தல்’ என்பது இன்றைய பெயராகும்.

‘‘தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை துடைவை என்றிவையெல்லாம் வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்’’ என்பது பக்தி இயக்கம் கிளர்ந்த காலத்தில் (கி.பி.9 நூ) பெரியாழ்வார் பாசுரமாகும். பார்ப்பனர்களின் ‘சுகஜீவனம்’ என்பது அக்காலத்தில் எவ்வாறிருந்தது என்பதனை இப்பாசுரத்தால் உணர முடிகிறது. இதே காலத்தைச் சேர்ந்த இரண்டாம் நந்திவர்மனின் தண்டந்தோட்டம் செப்பேட்டால் மற்றுமொரு செய்தியினை அறிகிறோம். பார்ப்பனர் 308 பேருக்கு அரசன் ஒரே செப்பேட்டின் வழி ‘பிரமதேயம்’ வழங்குகிறான். இதன்படி அரசன் அளித்த உரிமைகளில் சில, ‘சுட்டிட்டிகையால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும் துரவு கிணறு இழிச்சப் பெறுவதாகவும்’ என்பவையாகும்.

அதாவது சுட்ட செங்கலால் வீடுகட்டிக் கொள்ளவும், வீட்டிற்கு மாடி எடுத்துக் கட்டவும், வீட்டுத் தோட்டத்தில் கிணறு வெட்டிக் கொள்ளவும் அக்காலத்தில் அரசர்களின் அனுமதி வேண்டும். அந்த அனுமதி பார்ப்பனர்களுக்கு மட்டுமே இயல்பாக வழங்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களின் தீட்டுக் கோட்பாட்டை அரண் செய்வதற்கும், பேணிக் கொள்வதற்கும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கிணறுகள் இருப்பதனை இப்பொழுதும் பார்ப்பனத் தெருக்களில் (அக்கிராமங்களில்) காண இயலும். இந்த உரிமையினை அரசர்கள் மற்றச் சாதியாருக்கு வழங்கவில்லை.

சாதிவாரியாக வீடுகட்டும் உரிமைகளை அரசர்களால் வகுக்கபபட்டிருந்ததை அறியப் பல சான்றுகள் கிடைக்கின்றன. பழனிக்கருகிலுள்ள கீரனூர்க் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டில் அப்பகுதியில் வாழ்ந்த இடையர்களுக்கு அரசன் சில உரிமைகளை வழங்கியதைக் குறிப்பிடுகிறது. அவ்வுரிமைகளில் ஒன்று, வீட்டிற்கு இருபுறமும் வாசல் வைத்துக் கட்டிக் கொள்ளலாம் என்பதாகும். அப்பகுதியில் அதுவரை அவர்களுக்கு அந்த உரிமை இல்லை.

காலனிய ஆட்சியின் தொடக்கம் வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகள் ஓலைக்கூரை அல்லது புற் கூரைகளாக இருந்ததென்பதனை முன்பே குறிப்பிட்டோம். இவ்வீடுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகள் இன்றளவும் குனிந்த வாசல் உடையனவாகவும், பின்புற வாசலும் சன்னலும் இல்லாதனவாகவும் இருப்பதனை நினைவில் கொள்ள வேண்டும். நிலைவாசல் (ஆள் நிமிர்ந்தபடி உள்ளே செல்லும் உயரத்தில் இருப்பது) சன்னல்கள், பின்புறவாசல், மாடி, இரட்டைக் கதவு வைத்தல், சுட்ட செங்கல்லால் சுவர் ஆகியவை தனித்தனி உரிமைகளாக சாதிவாரியாக அடுக்கப்பட்டிருந்ததே தமிழக வரலாற்றில் சாதியம் தொழிற்பட்ட முறைக்குக் கண்கண்ட சான்றாகும்.

சமூக, பொருளாதார ரீதியில் எளிய மக்கள் ‘குடியிருப்பு’ பற்றி விரிந்த சிந்தனைகள் இல்லாமல்தான் வாழ்ந்தனர். ‘எனக்கும் சொத்து இருக்கிறது’ என்ற உணர்வை வெளிப்படுத்த ‘எனக்கும் காணி நிலமும் கலப்பை சார்த்த இடமும் இருக்கிறது’ என்றனர். இந்தச் சொல்லடையிலிருந்து அவர்களுக்கு வீடு என்பதே தொழிற்கருவிகளைப் பாதுகாக்கும் இடமாகவே இருந்திருக்கிறது என்று தெரிகிறது. நிலமும் உழவுத் தொழிற் கருவிகளுமே வாழ்க்கை என்பதே அன்றைய நிகழ்வாகும்.

எனவே, தாழ்வாரம், நடுக்கூடம், சமையலறை, படுக்கையறை என்பதான நினைவுகளும் உணர்வுகளும் அவர்களிடத்தில் உருவாக வழியில்லை. அரசதிகாரமும், சாதிய மேலாண்மையும் அவ்வகையான நினைவுகள் அவர்களிடத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் குடியிருப்புக்களில் புதிதாகக்கட்டும் வீடுகளில்கூடப் பக்கச் சுவர்களில் பெரிய சன்னல்களை வைப்பதில்லை என்பதைக் கள ஆய்வில் காண முடிகிறது. காலங்காலமாக அவர்களின் சமூக உளவியல் சிதைக்கப்பட்டிருந்ததன் பின் தொடர்ச்சியாகவே இதனைக் கருத வேண்டும்.

நன்றி - உன்னதம் /மார்ச்-06

Print this item

  பிரபாகரன் தந்த சயனைட் குப்பி!
Posted by: pepsi - 04-07-2006, 08:07 AM - Forum: தமிழீழம் - Replies (13)

<b>ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி</b>
<img src='http://img152.imageshack.us/img152/8320/p168a7tj.jpg' border='0' alt='user posted image'>டி.அருள்செழியன்

''ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்... 'ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!' என்று. அதுதான் சத்தியம்!''

வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்!

சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் 'சிந்தனைச் சுரங்கம்'!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்...

<img src='http://img152.imageshack.us/img152/6913/p1672gm.jpg' border='0' alt='user posted image'>

எழுபத்தெட்டாம் வருடம்... லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு 'கெரில்ல' விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு!

இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்.

விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம்.

இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!'' என்கிறார் அழகான சிரிப்புடன்.

கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன

<img src='http://img152.imageshack.us/img152/4683/p1686ih.jpg' border='0' alt='user posted image'>
''முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?''

''புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!

அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).

அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.''



''இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?''

''தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.

தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.''

''தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?''

''இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.

ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.''

''ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?''

''இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.

நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.

குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, 'கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்' என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.

மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.

நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.

அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!''

<img src='http://img152.imageshack.us/img152/5884/p1702mh.jpg' border='0' alt='user posted image'>

\ (அடுத்த இதழிலும் ஆண்டன் தொடர்கிறார்)
படங்கள்: லண்டன் சாந்தன்
vikatan.com

Print this item

  விக்னேஸ்வரன் ஐயாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!
Posted by: வர்ணன் - 04-07-2006, 06:00 AM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் - Replies (22)

இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்!
கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

Print this item

  தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை
Posted by: மின்னல் - 04-07-2006, 05:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (23)

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் தலைவர் வ.விக்னேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் எழுச்சிகள் பலவற்றிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு விக்னேஸ்வரன் அவர்களின் இழப்பு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்.

அன்னாருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்

Print this item

  அது கெளரவம்
Posted by: வர்ணன் - 04-07-2006, 04:48 AM - Forum: கவிதை/பாடல் - Replies (15)

<b>

எண்பது தமிழனை கொன்றுவிட்டு
நான் அவனில்லை - என்றே
சிங்களன் கால் கழுவு!

குத்தரிசி சோறு வேணாம்
ஈர பலாக்கை போதுமென்றே
அலை- அலைந்து திரிந்து
அசிங்கமாய் திரி!

அப்பனையும் ஆத்தாளையும்
ஐந்து பத்திற்காய் கொல்லு!
கொன்றபின் பன்சலைக்கு சென்று
சிங்களனுடன் சேர்ந்து ப்ரீதும் ஓது!

புலியை அழித்தால் புது வாழ்வா உனக்கு?
புலி அழிந்து போகும் ஒரு நாள் வந்தால்
உன் குரல் வளையே சிங்களனுக்கு
அடுத்த இலக்கு - இதை
நம்பினால் நீ நம்பு!

தமிழீழ விடுதலை புலியை
அழிப்பதா அவன் குறி?
அட தடுமாற்றகாரா
தமிழன் தலை எடுப்பதுதாண்டா
அவன் வெறி!

மரத்தோடு மரமாய் ஒட்டி
தேவாங்கு போல தூங்கு!
செருப்புக்கு ஆசை படுறாய்
உன் கால் மெதுவாய் அறுந்துபோகுது!
கவனி- !

நாளை - நாயை கண்டால்
சிங்களன் கல்லெடுப்பானோ இல்லையோ
உன்னை கண்டால் ---
கொல்லாமல் - உறங்கவே மாட்டான்!

மகேசன் என்ற நீ - மகிந்த என்று
மாறினாலும் - தமிழன் தமிழன் தான்
அவனுக்கு- போடா - போ!

சிங்கத்தின் வால் அழைவது
ஒரு பிழைப்பா?
செண்பகத்தின் தலையாய் இரு
அது கெளரவம்!</b>

Print this item