Yarl Forum
தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=327)

Pages: 1 2


தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - மின்னல் - 04-07-2006

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் தலைவர் வ.விக்னேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்களின் எழுச்சிகள் பலவற்றிற்கு மூல கர்த்தாவாக திகழ்ந்த திரு விக்னேஸ்வரன் அவர்களின் இழப்பு தமிழ் மக்களிற்கு பேரிழப்பாகும்.

அன்னாருக்கு எனது கண்ணீர் வணக்கங்கள்


Re: தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - தூயவன் - 04-07-2006

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் திரு.வ. விக்னேஸ்வரன் அவர்கள் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பிரதான வீதியில் உள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகில் வைத்து சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
(மேலதிக விபரம் இணைப்பு)
வழமைபோல தனது அலுவலக கடமைக்கு சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்தவர்கள் இவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடுகளை நடத்தியுள்ளனர்.

தலையில் மூன்று துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் பணிபுரிந்த வங்கியான திருகோணமலை இலங்கை வங்கியின் நுழை வாயிலிலேயே இவர் உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்துள்ளது. அந்த வீதியில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீட்டர் தொலை சிறீலங்கா காவல்துறை வீதித்தடையுடனான சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இந்தச் சோதனைச் சாவடியிலிருந்து 50 மீட்டர்கள் தொலைவில் சிறீலங்கா கடற்படையின் சோதனைச் சாவடியும், அடுத்த 50 மீட்டர் து}ரத்தில் துறைமுக காவல்துறையினரின் சோதனைச் சாவடியும் உள்ளது. இம் மூன்று சோதனைச் சாவடிகள் ஊடகவும் கொலையாளிகள் இலகுவாகத் தப்பிச் சென்றதி லிருந்து இக்கொலையில் சிறீலங்கா படைகளின் முழுமையான ஒத்துழைப்புடன் புலனாய்வுப் பிரிவினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்படுகிறது.

51 அகவையுடைய திரு. விக்னேஸ்வரன் அவர்கள், யாழ். நயினாதீவை பிறப்பிடமாகக் கெண்டவர். கலைப்பட்டதாரியான இவர் திருமண பந்தத்தின் மூலம் திருமலையில் குடியேறினார். தற்போது அன்புவழி புரத்தில் வசித்து வந்த இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளிற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த விக்னேஸ்வரன் அவர்கள் திருமலை தமிழ் மக்களின் மத்தியில் தமிழ் தேசியத்திற்காக உழைத்து வந்தவர்.

கடந்த டிசப்பரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இடத்திற்கு திரு.விக்னேஸ்வரன் அவர்களே நியமிக்கப்பட இருந்த நிலையில், இன்று சிறீலங்கா புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

செய்திகள்: சங்கிதி


Re: தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் சுட்டுக்கொலை - தூயவன் - 04-07-2006

அன்னார் திருகோணமலையில் புத்தர் சிலை தொடர்பாகவும், தமிழ்மக்களுக்கு நடக்கும் அட்டூழியங்கள் தொடர்பாகவும் குரல் கொடுத்து வந்தவர். மீண்டும் ஒரு முறை சிங்கள தீவிரவாதம் தமிழ்மக்களின் குரல்வளையை நசுக்க முயற்சிக்கித்துள்ளது.

தேசப்பற்றாளர்கள் அவதானமாகத் திரியுங்கள். சிங்கள அரச பயங்கரம் குள்ளநரித்தனமானது.

அன்னார் விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்


- Aravinthan - 04-07-2006

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


திருமலை இலங்கை வங்கியின் பிரதான கிளைக்குள் அவர் நுழைந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

திருகோணமலை துறைமுக காவல்நிலையம் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு இடையில் உள்ள துறைமுக உள்வீதியில் இந்த வங்கி அமைந்துள்ளது. இது சிறிலங்கா இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.

இரண்டு இராணுவ சோதனைச் சாவடிகளுக்கு இடையிலும் திருமலை துறைமுகத்துக்கு எதிரே உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையிலும் இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்திற்கு தேசியப் பட்டியலுடாக விக்கினேஸ்வரனை நாடாளுமன்ற உறுப்பினராக இன்று அறிவிக்க இருந்த நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விக்கினேஸ்வரன் படுகொலையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்தில் திடீரெனத் திணிக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றக் கோரும் போராட்டங்களை கடந்த ஆண்டு விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை முனைப்புடன் முன்னெடுத்து நடத்தியது.

அனைத்து தமிழ்த் தேசிய எழுச்சி நிகழ்வுகளிலும் பங்கேற்று தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கான குரலை உரத்து முழக்கமிட்டவர் விக்கினேஸ்வரன்.

-புதினம்


விக்னேஸ்வரனுக்கு கண்ணீர் அஞ்சலி


- வர்ணன் - 04-07-2006

ம்ம்....... நடக்க போகுது என்று நினைத்தது
நடந்து விட்டுது- சிங்களவனுக்கு - மத்தியில நிண்டு கொண்டு - உரிமை குரல் எழுப்பினால் சாவுதான் பரிசு-
என்று ஆகி
குமார் பொன்னம்பலம் - சிவராம்- ஜோசப்- வரிசையில் - இப்போ விக்னேஸ்வரன் -


சில நிமிடம் முன்னாலதான் - ஒரு `'அறிவு ஜீவி ' கூட வாக்குவாத பட்டேன் இந்த களத்தில - எங்க இனம் அடிமை பட்டதில்ல என்று சொன்னார்-இது எப்பிடி ஆச்சு?

மக்களை நேசித்த - விக்னேஸ்வரன் ஐயாவுக்கு - கண்ணீர் அஞ்சலிகள்! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- அருவி - 04-07-2006

கண்ணீர் வணக்கங்கள் Cry Cry Cry Cry Cry


- தூயவன் - 04-07-2006

தமிழ்மக்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்துபவர்களை சிங்கள இனவாதமும், கைக்கூலிகளும் அழித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நிமலராஜன்
நடேசன்
தராக்கி
குமார் பொன்னம்பலம்
யோசப் பரராஜசிங்கம்
கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபர்
என்று ..........
இப்போது விக்னேஸ்வரன்.

ஒன்று தமிழ்மக்களின் குரலை அடக்குவது. இல்லை என்றால் மௌனிகளாக்குவது. இதை இரண்டுக்குமாக தமிழ்மக்கள் நிறைய விலையைக் கொடுத்து விட்டனர்


- கந்தப்பு - 04-07-2006

ஜோசப் பராராஜசிங்கத்தினக் கொலைசெய்த எட்டப்பர்களினாலும்,சிங்கள அரசினாலும் ஜோசப் பராராஜசிங்கத்தின் இடத்துக்கு இன்று நியமிக்கப்படவுள்ள விக்னேஸ்வரனை கொலை செய்துவிட்டார்கள். எட்டப்ப நாய்களே காசு வேணுமென்றால் பிச்சை எடுத்துப்பிழைக்கலாமே?. சகோதரனின் உயிரா உங்களுக்குத்தேவை?.

விக்னேஸ்வரனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.


- கந்தப்பு - 04-07-2006

[size=18]புலிகளை பேச்சு மேசையிலிருந்து விலகச் செய்யும் முயற்சியே விக்கினேஸ்வரன் படுகொலை: செ.கஜேந்திரன்

ஜெனீவா பேச்சுக்களிலிருந்து விடுதலைப் புலிகளை விலகச் செய்யும் முயற்சியாக திருமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்கினேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இப்படுகொலை தொடர்பாக அவர் கூறியதாவது:

திருகோணமலையில் தான் பணியாற்றும் மக்கள் வங்கிக்குள் நுழைந்த போது விக்கினேஸ்வரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக விக்கினேஸ்வரவன் தெரிவு செயய்ப்பட்டுள்ள நிலையில் இப்படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது.

திருமலையில் சிங்களப் பேரினவாதிகளின் இனவெறி ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் சிங்கள இனவெறிக் காடையர்களின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து துணிச்சலாகக் குரல் கொடுத்து வந்தவர்.

திருமலையில் நடைபெறுகிற நிலப்பறிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து துணிச்சலோடு குரல் கொடுத்து தமிழ்த் தேசியத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்தவர். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டமைப்பினர் திருமலையில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்தவர்.

இத்தகைய நபர் நாடாளுமன்றத்துக்குள் உள்நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் படுகொலை செய்துள்ளனர். இக்கொடூரக் கொலையை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசாங்கத்தின் திட்டமிட்ட இப்படுகொலை இது.

இக்கொலைகள் மூலம் எமது தமிழ்த் தேசிய எழுச்சியை, தமிழ்த் தேசியத்திற்கான குரலை நசுக்கி விட முடியும் என்று மகிந்த அரசு பகல் கனவு காண்கிறது. இதனது விளைவுகள் விபரீதமாக அமையும்.

இத்தகைய கொலைகள் மூலம் பேச்சுவார்த்தைகளிலிருந்து விடுதலைப் புலிகள் விலகிக் தாங்களாகவே கொள்ள வேண்டும்-பேச்சுவார்த்தையை புலிகள் முறித்துவிட வேண்டும் அதன் மூலம் புலிகளுக்கு ஒரு அபகீர்த்தியை சர்வதேச சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற கபட நோக்கத்துடன் இக்கொலை நடைபெற்றிருக்கிறது.

இக்கொலை வெறியர்களுக்கு தக்க பாடம் புகட்டுகிற சூழ்நிலை உருவாகும்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கள்ளத்தனமாக கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டத்தையும் விக்கினேஸ்வரன் படுகொலையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் கண்டனம் செய்துள்ளோம் என்றார் அவர்.
-புதினம்
http://www.eelampage.com/?cn=25324


- வன்னியன் - 04-07-2006

எனது கண்ணீர் அஞ்சலிகள் .அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

தேசத்துரோகிகள் கொல்லப்படும்போதுமட்டும் வார்த்தையாடும் ஒட்டுப்படைகள் நாட்டுப்பற்றாளர்கள் கொல்லப்படும்போது மெளனமாகிவிடுகின்றனர் :oops: :oops: :oops:


- கந்தப்பு - 04-07-2006

[size=18]Vigneswaran shot dead in Trincomalee
[TamilNet, April 07, 2006 04:08 GMT]
Mr.Vanniasingham Vigneswaran, President of the Trincomalee District Tamil Peoples' Forum (TDTPF) was shot dead Friday around 9.30 a.m. by an unidentified person when he was about to enter the main branch of the Bank of Ceylon (BoC) located along Inner Harbor Road between the office of the Senior Superintendent of Police and Trincomalee Harbor Police. The assasination the key Tamil activist has taken place when the Tamil National Alliance (TNA) was about to announce the appointment of Mr. Vigneswaran as the national list Parliamentarian, the position last held by Joseph Pararajasingham MP who was slain in Batticaloa on Christmas eve, TNA sources said.The site where the incident took place is High Security Zone, located between two Sri Lanka Army checkpoints, opposite to the Trincomalee Harbour near the SLN Command in Trincomalee.

The TDTPF under the leadership of Mr.Vigneswaran has been spearheading the campaign for the removal of the controversial Buddha statue, which was erected in a land close to the Trincomalee central bus stand last year.

In June 2005, two grenades were lobbed into Mr. Vigneswaran's residence by an unidentified attacker.


- ஜெயதேவன் - 04-07-2006

என்ன பொறுமை!!!!!!!!!!!!!!!!!!!!!

இப்படியே போனால் நாளை தமிழ் மக்கள் அனைவரும் ..... ஆனால் எமது பொறுமை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்!!!!


- கந்தப்பு - 04-07-2006

[size=18]சிறிலங்கா இராணுவத்தின் உதவியுடன்தான் விக்னேஸ்வரன் படுகொலை: விடுதலைப் புலிகள் கண்டனம்

சிறிலங்கா இராணுவத்தினரது உதவியுடன்தான் திருமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் இது தொடர்பாகக் கூறியதாவது:

திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் இன்று காலை 9 மணியளவில் அவர் பணியாற்றுகிற வங்கிக்குள்ளேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் மிகவும் அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறிலங்கா கடற்படைத் தளத்துக்கு அருகாமையில் இந்த வங்கி அமைந்துள்ளது. வங்கிக்குச் செல்வாதானாலும்கூட வங்கிக்கு முன்னர் 10 மீற்றர் தூரத்தில் இராணுவ காவலரண் உள்ளது. அதனூடேதான் வங்கிக்குள் செல்ல வேண்டும்.

வங்கிக்குள் நுழைந்தாலும் வங்கியின் பின்புறம் திருகோணமலையின் காவல்துறை அதிகாரியின் அலுவலகம் இருக்கிறது. அதற்கு அருகாமைப் பகுதியானது கடற்படையின் தளங்கள் அமைந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாகும்.

இருநபர்கள் வங்கிக்குள் நுழைந்து இப்படுகொலையைச் செய்திருப்பதாக தெரிகிறது. சிறிலங்கா இராணுவத்தினரது ஒழுங்கமைப்புக்கூடாகத்தான் இந்தப் படுகொலையை அவர்கள் செய்துள்ளனர். ஏனெனில் தாக்குதல் நடத்திவிட்டு எளிதில் திரும்பிச் செல்லக் கூடிய வாய்ப்புக்கள் அங்கு இல்லை.

தாக்குதல் நடத்தியவர்கள் பின்பக்கமாக தப்பியிருந்தால் காவல்துறை அதிகாரியின் அலுவலகத்திற்குள்ளேயோ அல்லது இரகசியப் பிரிவு காவல்துறையினர் அலுவலகத்திற்குள்ளேதான் சென்றிருக்க வேண்டும். முன்பகுதியிலேயே கொலை செய்தவர்கள் வெளியே வந்திருந்தால் முன்னரங்கக் காவலரணில் உள்ளவர்களால் கைது செய்யக் கூடிய வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆகையால்தான் இது இராணுவத்தினரது ஒழுங்குபடுத்தப்பட்ட படுகொலையாக நாங்கள் பார்க்கிறோம். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தவர் விக்னேஸ்வரன். பலமுறை அச்சுறுத்தல்களுக்குள்ளாகி இருந்தபோதும் தமிழ் மக்களின் உரிமைக் குரலை வெளிப்படுத்த தனது பணிகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்.

அவரது படுகொலைச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இப்படியான நடவடிக்கைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் சி.எழிலன்.
http://www.eelampage.com/?cn=25325


- கந்தப்பு - 04-07-2006

[size=18]விக்னேஸ்வரன் படுகொலைக்கு கண்டனம்- சிறிலங்கா நாடாளுமன்றத்தை முடக்கியது த.தே.கூ

திருகோணமலை தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் விக்னேஸ்வரன் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்று வெள்ளிக்கிழமை முடக்கினர்.


அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்காக இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. அப்போது விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்ற மையத்தில் ஒன்று திரண்ட கூட்டமைப்பினர், படுகொலையைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றப் பணிகள் முடங்கின.

இதையடுத்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை சபாநாயகர் லொக்கு பண்டார கூட்டியுள்ளார்.
http://www.eelampage.com/?cn=25326


- SANKILIYAN - 04-07-2006




- SANKILIYAN - 04-07-2006

எனது கண்ணீர் அஞ்சலிகள்
இருந்த ஒரு மனிதரையும் துரோகிகள் கொன்று விட்டர்களா?


- Puyal - 04-07-2006

தங்கள் பேனாவிற்கு முக்காடு போட்டுக் கொள்ள மறுத்ததால் சிங்களத்தினால் முட்காட்டிற்கு இரையானவர்களின் வரிசையில்
இன்று .................... விக்னேஸ்வரன்

எங்களை நேசித்த விக்னேஸ்வரன் ஐயாவிற்கு எங்கள் குடும்பம் சார்பான கண்ணீர் அஞ்சலிகள்.

இன்னும் பொறுத்திருக்கத் தான் வேண்டுமா?


- Naasamaruppan - 04-07-2006

[b]யுத்த ரீதியாக பலப்படுத்துங்கள்- அன்றாட வாழ்வுரிமையைப் பறித்து பலப்படுத்தாதீர்: இறுதி நேர்காணலில் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அரசானது தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் யுத்த ரீதியாக பலப்படுத்த வேண்டுமே தவிர தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையைப் பறிக்கிற செயற்பாட்டை மேற்கொள்ளவதன் மூலம் பலப்படுத்தக்கூடாது என்று தனது படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை தமிழ் மக்கள் பேரவைத் தலைவர் வ.விக்னேஸ்வரன் தனது இறுதி நேர்காணலில் கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலில் ஒலிபரப்பாகிய கருத்துப்பகிர்வு நிகழ்ச்சியில் நேற்று வியாழக்கிமை இரவு அவரது நேர்காணல் ஒலிபரப்பானது.

விக்னேஸ்வரனின் இறுதி நேர்காணலின் எழுத்து வடிவம்:

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினரது அத்துமீறல்கள் சம்பவங்கள் பற்றி கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்ய திருகோணமலை தமிழ் கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், திருகோணமலை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இன்று (நேற்று வியாழக்கிழமை) சந்திப்பை மேற்கொண்டோம்.

இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்ட அடிப்படையில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்படுவதானது எதிர்வரும் 19 ஆம் நாள் நடைபெற உள்ள சமாதானப் பேச்சுவார்த்தையை நிச்சமயமாக குழப்புகின்றன செயல் என்று சுட்டிக்காட்டினோம்.

கடற்படையினர் மேற்கொண்டு வரும் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களானது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் கண்காணிப்புக் குழுவினருக்குத் தமிழ் மக்கள் பேரவையினர் தெரிவித்தனர்.

தமிழ் மக்களினது குறிப்பாக தமிழ் மீனவர்களினது தொழில் செய்யும் உரிமையைத் திட்டமிட்ட வகையில் பறிப்பதனூடாக அவர்களது அன்றாடம் சீவிக்கும் உரிமையைப் பறிக்கின்ற காரணத்தால் ஒரு பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே கடற்படையினர் திட்டமிட்டுச் செய்கின்ற இந்த செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் இது தொடர்பில் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டோம்.

இது சம்பந்தமாக ஒவ்வொரு நாளும் அரசாங்கத்துக்கும் கண்காணிப்புக் குழுவின் கொழும்பு தலைமையகத்துக்கும் தெரிவித்து வருவதாக திருமலை கண்காணிப்புக் குழுத் தலைவர் எம்மிடம் கூறினார். இதற்கு முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 17 ஆம் நாளுக்கு முன்னராக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் படி கடல் வயலத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கி தமிழ் மீனவர்கள் கடலுக்குள் சென்று சுதந்திரமாக மீன்பிடிக்கும் ஏதுவான சூழ்நிலையை உருவாக்காவிட்டால் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த உத்தேசித்துள்ளோம். அப்போராட்டத்தின் மூலம் திருகோணமலையின் முழு இயல்பு வாழ்க்கையும் குழம்புவதாக இருந்தால் அதற்கான பொறுப்பை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதை கடற்படையினருக்குத் தெரியப்படுத்துமாறு தமிழ் மக்கள் பேரவையினரும் தமிழ் மீனவர்கள் அமைப்பினரும் கண்காணிப்புக் குழுவினரிடம் கூறினோம்.

கடந்த 2 நாட்களாக மூதூரில் தங்கியிருந்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்றுதான் (நேற்று வியாழக்கிழமை) திரும்பியிருந்தார்.

மூதூர் பிரதேசத்தில் கடற்படையினர் தொடர்ந்து நடத்துகிற தாக்குதல்களைத் தாங்கள் நேரடியாகக் கண்டதாகவும் அச்செயல்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கும் கொழும்பு தலைமையகத்துக்கும் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கூறினார்.

கடற்பிரதேசம் முழுமையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவும் தங்களது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தாங்கள் விரும்பிய வகையில் நடவடிக்கை மேற்கொள்வதை யுத்த நிறுத்த ஒப்பந்தம் தடை செய்யவில்லை என்று கடற்படையினர் கூறுவதாக கண்காணிப்புக் குழுவினர் எம்மிடம் தெரிவித்தனர்.

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் உள்ள நிலங்கள் மட்டுமின்றி கடற்பரப்பும் தமிழ் மக்களுக்குச் சொந்தமானதுதான். தமிழரது தாயகம் என்று சொல்லும்போது நிலத்தை மட்டுமல்ல நிலத்தைச் சுற்றிய கடற்பரப்பையும் குறிக்கிறது என்று கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு நான் மிகவும் தெளிவாகக் கூறினேன்.

அதற்கு பதிலளித்த கண்காணிப்புக் குழுத் தலைவர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கடலைப் பற்றி தெளிவான விளக்கம் இல்லாத காரணத்தால் இது தொடர்பில் எம்மால் வற்புறுத்த இயலவில்லை என்றார்.

வடக்கு - கிழக்கு இணைந்த தமிழரது தாயகம் என்கிற போது நிலம் மட்டுமல்ல கடலும் சேர்ந்தது என்பதை கடற்படைக்குச் சுட்டிக்காட்டுங்கள் என்று நாம் கண்காணிப்புக் குழுவினரிடம் தெரிவித்தோம்.

திருகோணமலையில் இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் எதிர்காலத்தில் சமாதானம் என்பது இல்லாது போகும்.

கடற்பிரதேசம் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் கடற்பிரதேசத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டால் ஏன் நிலப்பரப்பில் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்?

மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ கடற்படையினர் சாதாரணமாக கடமையில் ஈடுபடாதபோது திருகோணமலை நகரிலிருந்து புல்மோட்டை வரை சகல கடற்பிரதேசத்திலும் கடற்படையின் ஏன் கடமைக்காக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பக் கூறினோம்.

திருகோணமலையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் தாக்குதலை மேற்கொள்வதும் திருகோணமலையில் தமிழ் மக்களை அச்சுறுத்தி வைப்பதிலும் சிறிலங்கா கடற்படை முனைப்பு காட்டுகிறது.

கடந்த காலங்களில் எங்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு.

1983, 1985, 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களும், சொத்துக்களை எரித்தவர்களும், தமிழ் மக்களை உடல் மற்றும் உளரீதியாகவும் துன்புறுத்தியவர்களும் கடற்படையினரேதான்.

கடற்படையில் உள்ள சமாதானத்தை விரும்பாத தீய சக்திகள் வேண்டுமென்றே இந்தக் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனை நாங்கள் தொடர்ந்து மெளனமாக இருந்து கொண்டு அனுமதிக்க முடியாது. இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் விரைவில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்திருப்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

மேலும் கடலுக்குள் செல்லும் சிங்கள மீனவர்கள் எல்லை மீறுகின்ற போது அவர்களை ஒன்றும் செய்யாமல் திருப்பி அனுப்புவதும் தமிழ் மீனவர்களை குறிவைத்துத் தாக்கி கொலை அச்சுறுத்தல் விடுப்பதானது இன ரீதியான வன்முறைச் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

திருகோணமலை துறைமுகப் பகுதியில் சென்ற கிழமை சாலை மீன் என்ற மீன் பெருந்தொகையாக வந்தது. வாழ்வதற்கு அல்லற்படுகிற மக்கள்- அன்றாட சீவியத்துக்கு அல்லற்படுகிற மக்கள்- 10, 15 வயது சிறுவர்கள் அம்மீன்களை எடுக்கச் சென்ற போது கடற்படையினர் எதுவித காரணமுமின்றி அவர்களைத் தாக்கி உள்ளனர். ஒரு அப்பட்டமான கொடூரச் செயல் என்று குறிப்பிட்டு கடற்படையினர் தங்களது பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக கடல் வலயப் பாதுகாப்பு தடைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது.

சீனாவிடமிருந்தும் இஸ்ரேலிடம் இருந்தும் எல்லா நாடுகளிலிருந்தும் ஆயுதங்களையும் கப்பல்களையும் வாங்கிக் குவித்திருக்கும் அரசாங்கமானது தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமாயின் யுத்த ரீதியாக பலப்படுத்த வேண்டுமே தவிர தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையைப் பறிக்கிற கடல்வலயத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நியாயமாகாது என்பதைக் குறிப்பிட்டுள்ளோம்.

இது தொடர்பாக இரு நாட்களுக்குள் எமது சாதகமான பதிலைத் தராவிட்டால் ஏப்ரல் 17 ஆம் நாளுக்குப் பின்னர் தொடர் போராட்டத்தை நடத்த உத்தேசித்துள்ளோம் என்றும் கூறினோம்.

இதற்கிடையில் இன்றைய தினம் (நேற்று வியாழக்கிழமை) நிலாவெளி கடற்பிரதேசத்தில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு அதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக கண்காணிப்புக் குழுவினரிடம் நாம் கூறியது என்னவெனில், ஒரு பக்கம் சமாதானம் என்று கூறிக் கொண்டு சமாதானத்தை 100 வீதம் செயற்படுத்துவதாக ஜெனீவாவில் ஒப்புக்கொண்டு வந்துவிட்டு 10 வீதத்தைக் கூட அமல்படுத்தாமல் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை என்று விடுதலைப் புலிகளை அழைப்பது ஏமாற்றுச் செயல். இதை நாங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

எதிர்காலத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர வேண்டுமாயின் எஞ்சியுள்ள நாட்களுக்கு இடையிலாவது ஜெனீவாவில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றத் தவறுமாயின் பேச்சுவார்த்தை நீடிக்குமா என்பது ஐயத்துக்குரிய விடயம். அவ்வாறான நிலை ஏற்படுமெனில் அதற்கு குறிப்பாக சிறிலங்கா கடற்படையினரே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினோம் என்று அதில் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

http://www.eelampage.com/?cn=25332


- ஜெயதேவன் - 04-07-2006

[size=18]<b>தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவானவர்கள் "யுத்தநிறுத்தம்/பொறுமையின் பெயரில்" இக்காலங்களில் பலியாக வேண்டுமா??????????????????????????????</b>


- ஜெயதேவன் - 04-07-2006

[size=18][b]தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இலங்கை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மக்கள் இருக்கக் கூடாதா????? .... உயிருடன்!!!!

பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை ..... என்ற மாயையில் இருந்து விடுபட்டு, தமிழ்த்தேசிய காவலர்கள் நிச்சயம் பதிலளிக்க வேண்டும்!!!