| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 485 online users. » 0 Member(s) | 481 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,074
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,082
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,905
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,298
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| குமுதம்.com |
|
Posted by: Nellaiyan - 04-05-2006, 09:09 PM - Forum: இணையம்
- No Replies
|
 |
வணக்கம் நண்பர்களே,
நலமாக இருக்கிறீர்களா!
குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதிய இலட்சக்கணக்கான கடிதங்களை இன்றும் மறக்கவில்லை. உங்களில் பலரை ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சந்தித்த போது எல்லாம் வெரித்தாஸ் நாட்களை எண்ணி, மனதில் அசைபோட்டு அளவளாவியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதன்முறையாக சாட்டிலைட் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. "ரபிபெர்னார்ட்" ஆக தொலைக்காட்சியில் நான் முகம்காட்டி பணியாற்றத் தொடங்கிய நேரத்தில், மிகவும் தொடக்க நிலையிலேயே என் மீது பரிவும், அன்பும் கொண்டவர்களாக தமிழக மக்கள் என்னை ஆதரித்தீர்கள். தொலைக்காட்சியில் என் முதல் நிகழ்ச்சியிலிருந்தே உங்களில் பலர் என் மீது மிகுந்த அன்பு கொண்டீர்கள்.
இப்பொழுது, தாயகத்திலிருந்து பல ஆயிரம் கல் தொலைவில் வாழும் உங்களையெல்லாம் குமுதம் இணையப்பக்கங்கள் வழியாக சந்திக்க வந்துள்ளேன்.
குமுதம் எப்பொழுதுமே தமிழர்களின் ரசனைக்கு ஏற்ற இதழாக இருந்து வந்திருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பின்ஸ் நாட்டில் குடியேறி வாழ்ந்த எங்கள் குடும்பத்தினர் "குமுதம் எப்போது வருமோ?" என்று அஞ்சல் பெட்டியை ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு காலம். இன்று "இணையம்" என்ற இணையற்ற தொழில் நுட்பம் வந்துவிட்டது. எப்போதும் குமுதம், எல்லோருக்கும், எங்கிருந்த போதும் குமுதம். இந்த குமுதம் இணைய இதழுக்கு நிர்வாக ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறேன்.
இறை அருளால், எண்ணற்றோரின் உழைப்பால் வளர்ந்து நிற்கும் குமுதம் இதழின் இணையப் பக்கங்கள் வழியாக இனி ஒவ்வொரு நாளும் உங்களை சந்திப்பேன்.
குமுதம் குழுமத்தின் இதழ்கள் அனைத்தையும் கொண்டதாக இதுநாள்வரை இருந்துவரும் குமுதம்.com இனி, மேலும் கூடுதலான பல அம்சங்களைக் கொண்டிருக்கும்.
உங்கள் கணிணி இனி ஒரு தமிழ் தொலைக்காட்சித் திரையாகவும் மாறிவிடும். ஆம், தொலைக்காட்சி நிகழ்ச்சிவடிவத்தில் குமுதம்.com பல நிகழ்ச்சிகளை வழங்கப்போகிறது.
1. செய்திகள் _ தமிழக மற்றும் இந்திய செய்திகளை, சூடான விமர்சனங்களோடு நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வழங்குவேன். உங்களுக்கு வசதிப்படும்போதெல்லாம், நினைக்கும் நேரமெல்லாம் தாயகச் செய்திகளை கேட்டு மகிழுங்கள்.
2. உலகத் தமிழர் உரையாடல் _ உலகெங்கும் வெற்றிக்கொடிகட்டி உலாவரும் சாதனைத் தமிழர்களை நான் சந்தித்து எடுக்கும் பேட்டிகள். இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள தமிழர் அல்லாத தலைவர்களின் பேட்டியும் உண்டு.
3. உங்கள் ஊர் செய்திகள் _ தமிழகத்தின் எந்த மாவட்டத்திலிருந்து நீங்கள் சென்றிருந்தாலும் உங்கள் மாவட்டம் பற்றிய அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களை வந்து சேரும்.
4. தமிழ் சினிமா _ தமிழ் திரை உலகம் நம்மை பரவசப்படுத்தும் மந்திர புரி. கவலைமறக்க, களிப்புற தமிழ் சினிமா என்றும் வற்றாத இன்பவெள்ளம். பல வடிவங்களில், பாடல்களாக, காட்சிகளாக, நடிகர், நடிகைகள், தொழில் நுட்பத்துறையினர் பேட்டிகளாக தமிழ் திரைஉலகம் உங்களை இணையத்தில் வரவேற்கும்.
5. ஜோதிடக்கணிப்புகள் _ வானசாஸ்த்திரம் என்பது நம் முன்னோரின் அறிவாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதனை எந்த அளவு அன்றாட வாழ்வில் பயன்படுத்திக் கொள்வது என்பதையும், நாம் வருமுன்காத்து செயல்பட நம் ஜாதகங்களை கணித்து தெரியவும் புகழ்பெற்ற ஜோதிட ஆசான் ஏ.எம்.ஆர். குமுதம்.comல் நமக்கு உதவுவார்.
இப்படி தொலைக்காட்சி வடிவில் நிகழ்ச்சிகளையும், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், குமுதம் சிநேகிதி, குமுதம் ஜோதிடம், குமுதம் பக்தி, குமுதம் தீராநதி ஆகிய இதழ்களையும் இனி நீங்கள் குமுதம்.com இணையப் பக்கங்களில் பெறலாம்.
காலமும், எல்லையும் இல்லா அண்டப் பெருவெளியில் மலரும் புதுமலராக குமுதம்.com புதிய பொருளடக்கத்துடன் உங்களை நாடி வருகிறது. வாஞ்சையுடன் வரவேற்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
மீண்டும் சந்திப்போம்,
நன்றி, வணக்கம்,
அன்பன்,
ரபி பெர்னார்ட்
குமுதம்.com
http://www.kumudam.com/Special/dotcom.php
|
|
|
| தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: |
|
Posted by: adsharan - 04-05-2006, 07:19 PM - Forum: தமிழீழம்
- Replies (64)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/20060405001_551.jpg' border='0' alt='user posted image'>
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம்
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்]
தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்:
<b>கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?</b>
பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவும் பொதுத் தேவைகளுக்காக காணிகளை ஒதுக்கீடு செய்வதையும் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்வோரின் காணிகளை அவரிடமும், அவரின் உதிர உறவினர்களிடம் கையளிப்பதற்காகவும் காணிகளின் விலை மதிப்பீடு பற்றியும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது தமிழீழத்தில் உள்ள நிர்வாக அமைப்பான தமிழீழ நிர்வாக சபையின் காணிப்பகுதியினரால் இந்த காணிகளை தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு சரியான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.
போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகளைப் பாதுகாத்து, அவர்கள் மீள இந்த மண்ணில் குடியேறுகின்ற போது அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
பெருமளவிலான அரச காணிகள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீளப்பெற்று தமிழீழத்தின் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவோம். இவற்றை காணிச்சட்டத்தினூடே செயற்படுத்துவோம்.
<b>கேள்வி: இந்த சட்டத்தை எந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ளீர்கள்?</b>
பதில்: தமிழீழ நிர்வாக சேவையின் செயலகங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் அவர்களுடைய நடுவப் பணியகத்தின் காணிப்பகுதிச் செயலகம் ஊடாக இந்தச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
<b>கேள்வி: காணியற்றோருக்கு காணி வழங்குதல் தொடர்பான விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: தற்போது தமிழீழப் பகுதிகளில் காணியற்றிருப்போருக்கு குடியிருப்பதற்கான காணியை வழங்குவதற்கான நடவடிக்கையும் அதே சமயம் அவர்கள் விவசாயம் செய்யக்கூடிய வலுவுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்குரிய மேலதிக காணிகளையும் அவர்கள் ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்புத்திட்டங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலோ அல்லது விவசாயம் செய்பவர்களாக இருந்தாலோ அவர்களுக்குத் தேவையான காணிகளையும் அந்த, அந்த அளவுகளில் பகிர்ந்தளிப்பதற்காக இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
<b>கேள்வி: தாயகத்தில் உள்ள புலம்பெயர் மக்களின் காணிகள் எந்த வகையில் கையாளப்படுகின்றன? </b>
பதில்: காணிச்சட்டம் இயல் - 08 இல் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் எண்ணம் உள்ளவர்களுக்கு அல்லது அவர்கள் தாங்கள் விரும்புகின்ற உதிர உறவிர்களிடம் காணிகளை கையளிப்பதற்காக இந்த இயல் ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.
அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.
ஆனால், அவர்கள் அதாவது சட்டமுறை உள்ள ஆவணங்களோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோர் தங்களுடைய காணிகளை நிர்வாக சேவையின் காணிப்பகுதிக்கு கையளிக்குமாறும் இந்த சட்டம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் எந்தக்காலப்பகுதியில் மீண்டும் தமிழீழத்திற்கு வருகின்றார்களோ அந்த காலப்பகுதியில் அவர்களுடைய காணி மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படும்.
<b>கேள்வி: அந்த காணிகள் கையகப்படுத்தல் தொடர்பான செயற்பாட்டிற்கான கால வரையறை ஏதாவது உண்டா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகள் பத்து வருடங்களுக்கு மேலாக பராமரிப்புக்களின்றி காணப்படுமானால் நாங்கள் இந்த விதிமுறைகளுக்கு அமைய அதனை கையகப்படுத்தி பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் தாயகத்தில் உள்ள தமது காணிகளை தமது உறவினர்களுக்கோ அல்லது தமது நண்பர்களுக்கோ வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உள்ளனனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் பிரிவு - 60 இல் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒருவர் தனது காணியை தான் சுயமாக விரும்பும் தனது உதிர உறவினருக்கு மட்டும் தன்னுடைய காணியை கையளிக்கலாம்.
காணியினுடைய ஆட்சியுரிமையை மட்டும் கையளிப்பதற்கு இந்த சட்டத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த நாட்டில் அவர் வாழ்கின்றாரோ அந்த நாட்டில் கடமை புரியும் சட்டவாளர் ஒருவர் ஊடாக வரையப்பட்ட தத்துவ ஆவணம் ஊடாக அதனை கையளிக்கலாம். அதே நேரம் அந்த ஆவணம் தமிழிலும் இணைக்கப்பட்டித்தல் வேண்டும்.
ஆனால் இந்த காணியை கையேற்பவர் தமிழீழத்தில் நிலையாக வாழ்பவராகவும் இருந்தால் வேண்டும். அத்தோடு இந்த சட்டத்தின் பிரிவு 64 இல் இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து இந்த காணிகளை கையேற்பவர் அது நெற்செய்கைக் காணி எனில், தன்னுடைய உடமையில் வைத்திருக்க வேண்டும். மாறாக அந்தக் காணியை அவர் பாட்டத்திற்கு (குத்தகை) அல்லது ஏனைய வேறு வழியில் வேறு ஒருவருக்கு கையளிப்பதோ இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அவர் கையேற்கின்ற காணி ஒரு மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குரிய காணியாகவோ அல்லது ஒரு குடியிருப்புக் காணியாகவோ அல்லது ஒரு வணிகத்துக்குரிய காணியாகவோ இருப்பின் அவரே யார் கையேற்கின்றாரோ அவரே அதனை நேரடியாக பயன்படுத்துதல் வேண்டும். மாறாக அவர் தன் விருப்பிற்கோ அல்லது வேறொருவரிடம் கையளிப்பது இந்த சட்டத்தின் படி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளனவா?</b>
பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
அவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகளை தமிழீழ நிர்வாக சேவையினர் அவை கட்டடத் தொகுதிகளை கொண்டிருந்தால் அவற்றை தமிழீழ நிதித்துறையின் வருவாய்ப்பகுதியினூடாகவும் அவை வேளான் சேவைக் காணிகளாக இருந்தால் அவைகள் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஊடாகவும் தென்னந் தோட்டக்காணிகளாக இருந்தால் பெருந்தோட்டப் பகுதியினரிடம் ஒப்படைத்து அவைகளை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருத்தல் வேண்டும்.
<b>கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?</b>
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.
<b>கேள்வி: காணி விற்பனை தொடர்பிலான விடயங்கள் ஏதாவது இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>
பதில்: இந்த சட்டத்தில் எங்களால் ஒரு காணி விலை மதிப்பீட்டுக் குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விலை மதிப்பீட்டுக்குழுவானது தமிழீழ நிர்வாக சேவையினரின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதாவது, அவர்கள் வருவாய்ப் பகுதி பிரதிநிதி ஒருவர், பிரதேச சபை ஆணையாளர் ஒருவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு பிரதிநிதி ஒருவர், தமிழீழ நிர்வாக சேவைப் பிரதிநிதி ஒருவரும் அதே சமயம் துறைசார் நிபுணர்கள் தொடர்பில் அதாவது மதிப்பீடு தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவரும் இதில் அங்கத்தவராக இருப்பார்.
இந்த சட்டத்தில் இயல் - 08 இல் அதாவது காணியின் விலைகளை வரையறை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் உள்ள காணி விற்பனை செய்யப்படுகின்ற போது காணியின் விலையினை தீர்மானிக்கின்ற குழுவாக இருக்கும்.
இந்த குழுவினர் சாதாரணமாக காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் காணிப்பகுதிச் செயலகத்திற்கு தங்களுடைய வேண்டுகையை அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறான வேண்டுகை ஒன்று சாதாரணமாக மாவட்ட நிர்வாக சேவையில் உள்ள காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
காணிப்பகுதிச் செயலகமானது அந்த வேண்டுகையை விலை மதிப்பீட்டுக் குழுவினரிடம் கையளித்து அந்த விலை மதிப்பீட்டுக்குழுவினர் நேரடியாக குறித்த காணிப் பகுதிக்குச் சென்று அந்த காணியினுடைய பெறுமதியை தீர்மானித்து அந்த வேண்டுகையாளருக்கு எழுத்து மூலமாக வழங்கப்படுதல் வேண்டும்.
இந்த சட்டத்தினுடைய பிரிவு 67 இல் காணி விற்பனை மேற்படி நடவடிக்கைகளை பின்பற்றாமல் யாராவது செய்திருப்பின் காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் இந்த சட்டத்தின் நடவடிக்கைகளை பின்பற்றாது இவ்வாறான காணி விற்பனையை செய்திருப்பின் அது சட்டப்படியாக விற்பனை செல்லுபடியற்றதொன்றாகும். இந்த விதியை பின்பற்றாமல் செய்யப்பட்ட அந்த விற்பனையின் போது காணிக்குழுவினரால் மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு மேலதிகமாக பெறுமதி போட்டு காணி விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த தொகை கையகப்படுத்தி அரசு உடமையாக்கப்படும்.
<b>கேள்வி: புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள காணிச்சட்டம் தொடர்பில் நீங்கள் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?</b>
பதில்: இன்று, தமிழீழப்பகுதியில் காணியற்றிருப்போருக்கு காணிகளை வழங்குவதற்கும் அவர்கள் வேளான் செய்யக்கூடிய வலுவுடையவர்களாக இருப்பின் அவர்களுக்கு வேளான் செய்யக்கூடிய காணிகளை அந்த அந்த அளவில் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் இன்று தமிழீழ அபிவிருத்தித்திட்டங்களுக்காக அதாவது காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் இன்று தமிழீழத்தில் உள்ள சகல பொதுக்காணிகளையும் நாங்கள் தமிழீழ அரசுக்கு சொந்தமாக்கி அதன்மூலம் தமிழீழத்தினுடைய புனர்நிர்மாண வேலைகளை செய்வதற்காகவும் தற்போது மீண்டும் எங்களுடைய தமிழீழப்பகுதிகளில் பெருமளவிலான குளங்கள், அறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் இருப்பதனால் அப்பகுதிகளிலிருந்து அதாவது, சாதாரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒருவர் ஒரு குளப்படுக்கையில் உச்சநீர் பிடிக்கும் வான்பாயும் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் தன்னுடைய குடியிருப்புக்களை அமைப்பதற்காகவும் அதே சமயம் ஆற்றொழுக்கின் மையப்பகுதியிலிருந்தும் எமது சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுகளுக்கு அமைய தமது குடியிருப்புக்களை அமைப்பதற்கும் கடல் வலயங்களிலிருந்து முந்நூறு மீற்றர் அதாவது உச்ச அலை வீச்சிலிருந்து நிலத்தை நோக்கி அமையும் பகுதியை நோக்கி அவர்களுடைய குடியிருப்பை அமைப்பதற்கும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம் எமது தெருக்களைப் பொறுத்த வரை "A" தர தெருக்கள் அதாவது தெருவின் இருமருங்கிலும் மையத்திலிருந்து 66 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் "B" தர தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 33 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பொதுவாக உள்ளுராட்சித் தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 15 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சிறிய ஒழுங்கைகள் 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் எங்களுடைய தமிழீழ அபிவிருத்தியை நாங்கள் மேற்கொள்கின்ற போது இன்று வெளிநாடுகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அதாவது வீதி அபிவிருத்தியை சரியாக செய்வதற்கு அவர்கள் தயாராகும் போது குடியிருப்புக்களை நகர்த்துவதற்கோ அல்லது அங்கிருந்து குடியிருப்புக்களை அகற்றி புதிய தெருக்களை அமைப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறான பிணக்குகளை நாங்கள் எதிர்நோக்காது இன்றே இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்ற போது எமது தேசத்தை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புகின்ற போது அதற்கான சரியான ஒழுங்மைப்பு முறையில் அதனுடைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். அத்தோடு தமிழீழ அரசுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள காணிகளை தனியாருக்கு அல்லது அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஏல முறையில் பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது தொடர்பாகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
இதன்மூலம் தமிழீழ அரச காணிகளை நாங்கள் தேவைகள் ஏற்படும் போது மீளக் கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு இலகுவான ஒரு முறையாகவும் இது காணப்படுகின்றது. இந்த சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தமிழீழத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஒழுகி தங்களுடைய காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால் அது தமிழீழ அரசு எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் காணி தொடர்பான பிணக்குகளையும் இலகுவான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார் சுடர்.
குறிப்பு: பாட்டம் = குத்தகை
http://www.eelampage.com/?cn=25289
|
|
|
| கலக்கும் கார்த்திக் |
|
Posted by: aathipan - 04-05-2006, 01:44 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
<img src='http://www.dinamalar.com/2006april05/photos/FPN06.jpg' border='0' alt='user posted image'>
கலக்கும் கார்த்திக்
சென்னை: ""மற்ற தலைவர்களை குறை சொல்லி வளர வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,'' என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கார்த்திக் நேற்று கட்சியின் மூன்றாவது வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். இப்பட்டியலில் மேலும் 19 தொகுதிகளுக்கு வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பைத் தொடர்ந்து கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:
பார்வர்டு பிளாக் கட்சியைப் பற்றியும் என்னைப் பற்றியும் சிலர் சில தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். "சீட்' கிடைக்காதவர்களுக்கு மன வருத்தம் இருக்கலாம். எல்லாருக்கும் "சீட்' கொடுக்க முடியாது. வேட்பாளர்களைத் தேர்வு செய்து தான் கொடுக்க முடியும். "சீட்' கிடைக்காதவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருவது வருத்தத்திற்குரிய விஷயம். பார்வர்டு பிளாக் கட்சி சுதந்திரத்திற்காக போராடிய இயக்கம். புரட்சிகரமான இயக்கம். மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம். இடையில் சிறிதுகாலம் இயங்காமல் இருந்தது.
இப்போது மக்களின் பேராதரவுடனும் இளைஞர்களின் எழுச்சியுடனும் மீண்டும் எழுந்துள்ளது. இந்த இயக்கத்திற்கு 90 சதவீத முக்குலத்தோரின் ஆதரவு உள்ளது. எல்லாத் துறையினரும் முன்னேற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். சமுதாய தலைவர்களாக இருப்பவர்கள் ஒரு சமுதாயத்திற்கும் இன்னொரு சமுதாயத்திற்கும் இடையே பிரச்னை ஏற்படாமல் சமரசம் ஏற்படுத்தி ஒற்றுமையை உருவாக்கித் தர வேண்டும். சுயநலத்திற்காக தங்கள் சமுதாயத்தை பயன்படுத்தக் கூடாது. எங்கள் தேர்தல் அறிக்கையில் அனைத்து தரப்பினரின் உரிமைக்கு குரல் கொடுப்போம்.
நான் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் நடிக்கப் போகிறேன் என்று சொல்வது முற்றிலும் தவறான செய்தி. இதை மக்கள் நம்ப மாட்டார்கள். நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இயக்கம் என்னை நம்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தலைவர், பொதுச் செயலர் என இரண்டு பொறுப்புகளும் என்னை நம்பி வழங்கப்பட்டுள்ளது. அந்த பொறுப்புகளுக்கு என் இறுதி மூச்சு இருக்கும் வரை தகுதி உடையவனாக இருப்பேன். கட்சிக்காக என் உயிரையும் கொடுப்பேன். எனது கடமையில் இருந்து துளியும் விலக மாட்டேன். எங்கள் இயக்கம் எல்லா தலைவர்களையும் மதிக்கும். எந்த தலைவரையும் மரியாதை குறைவாக விமர்சிக்க மாட்டோம். பார்வர்டு பிளாக் இழந்த பெருமைகளை மீண்டும் பெற வைப்பதே எனது நோக்கம்.
இவ்வாறு கார்த்திக் கூறினார்.
பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம்:
நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?
நான் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பார்வர்டு பிளாக் சார்பில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களும் கார்த்திக் தான் என்று நினைத்து மக்கள் ஓட்டுப் போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் போட்டியிட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால், நான் போட்டியிட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். மத்திய கமிட்டி எனக்கு இதுபற்றி ஒரு கடிதம் அனுப்புவதாக சொல்லியிருக்கிறது. அதை பார்த்த பிறகு முடிவெடுக்கப்படும்.
பிரசாரத்தை எப்போது ஆரம்பிப்பீர்கள்?
வரும் 7ம் தேதிக்கு பிறகு ஆரம்பிப்பேன். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்.
தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவீர்கள்?
விரைவில் வெளியிடுவோம். மக்களை பாதுகாக்கும் வகையிலும் ஒட்டு மொத்த தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக மன நிம்மதியுடன் வாழ்வதற்கும் கொள்கைகளை அறிவிப்போம்.
போயஸ் தோட்டத்தில் உங்களை அவமானப்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளதே?
பார்வர்டு பிளாக் கட்சியை அ.தி.மு.க., வுடன் கூட்டணி சேர்ப்பதற்கு சசிகலா கணவர் நடராஜன் மிகவும் பாடுபட்டார். அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. அரசியலில் எல்லா தலைவர்களையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் யாரையும் எதிர்க்க விரும்பவில்லை. எனக்கு நடந்தது என்னோடு போகட்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. குறை சொல்லி கட்சியை வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்கு என்ன செய்வோம் என்பதைப் பற்றி மட்டுமே சொல்வோம். பார்வர்டு பிளாக் கட்சியின் கொள்கைகளைச் சொல்வோம். மக்கள் நிச்சயம் எங்களை ஆதரிப்பார்கள்.
இவ்வாறு கார்த்திக் கூறினர்.
"இதெல்லாம் அரசியலில் சகஜம்': பார்வர்டு பிளாக்கில் இருந்து முருகன்ஜி என்பவர் விலகிச் சென்று விமர்சித்து வருவது குறித்து கார்த்திக் கிடம் கேட்டதற்கு, ""அவர் "சீட்' கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை. அவருக்கு எப்படி "சீட்' கொடுக்க முடியும்? கவுண்டமணி சொல்வதைப் போல் இதெல்லாம் அரசியலில் சகஜம். நாளைக்கு நாங்கள் வெற்றி பெற்றால் அவரே மீண்டும் எங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்,'' என்று நகைச்சுவையாகக் கூறினார்.
|
|
|
| இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு |
|
Posted by: narathar - 04-05-2006, 09:34 AM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு என்னும் அடிப்படை நிலை மாற்றம் எற்பட்டுள்ளதா?
கீழே உள்ள கட்டுரையில் குறிபிட்டுள்ளது போல் கைய்யறு நிலயால் உருவான கொள்கை மாற்றம் நிகழ்கிறதா?எமக்குச் சாதகமான நிலமை உருவாகிறதா?இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு அமயப் போகிறது? நாம் அதனை எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம்?
பாகிஸ்த்தானை ,அமெரிக்காவா சீனாவா வழி நடத்துகிறது?அல்லது பாகிஸ்த்தான் இந்த முரணை தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறதா?
அல்லது சிறி லங்கா அரசு இந்தியாவிற்கும், சீனா,பாகிஸ்த்தானுக்கும் இடயே ஆன முரணைப் பாவிக்க முற்படுகிறதா?
சிறிலங்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும்: மு.திருநாவுக்கரசு
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 06:50 ஈழம்] [ம.சேரமான்]
சீனா, பாகிஸ்தானுடனான சிறிலங்காவின் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும் என்று தமிழீழத்தின் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு விளக்கம் அளித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலில் மு.திருநாவுக்கரசு கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.04.06) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்:
தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினுடைய பாகிஸ்தானிய பயணத்தையொட்டி சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கைப் போக்கை நாம் சற்று ஆராய வேண்டியது அவசியமாகும்.
சிறிலங்கா இப்போது மிகவும் ஊசலாடுகின்ற ஒரு நிலையற்ற வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்கின்றது. ஆனால் புவிசார் அரசியல் அடிப்படையில் சிறிலங்காவுக்கு என்று தவிர்க்க முடியாத ஒரு வெளியுறவுக் கொள்கை நிர்ணயம் நிகழ முடியும். இந்த அடிப்படையில்தான் இப்போது இந்த விவகாரத்தை நாம் நோக்க வேண்டியிருக்கின்றது.
சிறிலங்கா அரச தலைவர் தான் பதவியேற்றதும் தனது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டார். அப்பொழுது அவர் இந்தியாவை தன்பக்கம் வளைத்தெடுக்கின்ற முயற்சியை பெரிதும் கைக்கொள்ள முற்பட்டார். ஆனாலும்கூட அவர் எதிர்பார்த்த அளவிற்கு அந்த முயற்சி அவருக்கு கைகூடத் தவறியது. இதன் பின்பு அவருக்கு இருக்கக்கூடிய வேறு தெரிவுகளின்பால் அவர் தன் நாட்டங்களை செலுத்தத் தொடங்கினார்.
இந்த வகையில் அவரது முதலாவது கொள்கை வகுப்பானது ஒரு தெளிவான, தீர்க்கதரிசனம் மிகுந்த பார்வையின் அடிப்படையில் நிகழத் தவறியது என்பதையே நாம் காண முடிகிறது. இப்போது அவருடைய இன்னொரு வாய்ப்பான ஒரு தெரிவுபற்றி அவர் சிந்திக்கின்றார் போல் தெரிகிறது.
அதாவது அவர் பாகிஸ்தானுக்கு சென்றதும் பாகிஸ்தானால் உலகப் பெருவல்லரசான அமெரிக்க அரச தலைவர் ஜோர்ஜ் புஸ்சுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை விடவும் ஒரு மிகவும் குட்டித்தீவான சிறிலங்கா அரச தலைவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு பெரிதாக இருப்பதை அரசியல் விமர்சகர்களும் இராஜதந்திரிகளும் இப்பொழுது சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கு இன்று ஒரு தெளிவான, திட்டவட்டமான பின்னணி இருக்கவே செய்கின்றது.
இப்படி சிறிலங்காவை பாகிஸ்தான் வளைக்க விரும்புவது இப் பிராந்தியத்தில் இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்க அது உதவுமே தவிர சிறிலங்கா அரசிற்கு அது பெருவெற்றியைக் கொடுக்கும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாம் இதில் ஒரு விடயத்தை அடிப்படையாக நோக்க வேண்டியிருக்கின்றது.
சிங்கள அரசானது இலங்கைக்குள் தமிழ் மக்களுடன் தன்னுடைய பிரச்சனையை தீர்க்கத் தயாரில்லை என்பதனைத்தான் அதனுடைய இன்றைய பாகிஸ்தானிய பயணத்தின் போதான நகர்வுகள் எமக்கு தெளிவாக காட்டுகின்றன.
முதலாவதாக பாகிஸ்தானிய அரசுடன் சிறிலங்கா அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோதாவில் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. அப்படியென்றால் நிச்சயமாக இலங்கை எல்லைக்குள் அல்லது இலங்கையின் எல்லைக்கு வெளியே இனப்பிரச்சனைக்கான தீர்வை சிறிலங்கா அரசு நாடுகின்றது என்பதனை அது தெளிவாகக் காட்டுகின்றது.
எனவே இலங்கைத்தீவிற்கு வெளியேதான் சிறிலங்கா அரசு தீர்வைத் தேடுகின்றது என்பதிலிருந்து அது இனப்பிரச்சனைக்கு உள்நாட்டில் அதாவது தமிழ் மக்களுடன் சேர்ந்து, தமிழ் மக்களுடன் பேசி அப்பிரச்சனையைத் தீர்க்கத் தயாரில்லை என்பதைக் காட்டுகின்றது.
தமிழ் மக்களின் தனிப்பெரும் சக்தியாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பிரச்சனையை தீர்ப்பதற்குப் பதிலாக அது உலக சக்திகளுடன் அது இணைந்து இப்பிரச்சனையை ஒடுக்க வேண்டும் என்பதிலேயே சிறிலங்கா அரசு அக்கறை செலுத்துகின்றது என்பது இப்போது தெளிவாக இருக்கிறது.
இவற்றை நாம் அரசியல் ரீதியாக கூர்ந்து அவதானிக்க வேண்டும்.
அதாவது அரசியல் ரீதியான தீர்விற்குப்பதிலாக இராணுவ ரீதியான கண்ணோட்டத்தில் தான் பாகிஸ்தானுடனான அதனுடைய உரையாடல்கள் அமைந்திருக்கின்றன. பயங்கரவாத எதிர்ப்பு என்கின்ற அதனுடைய கண்ணோட்டமானது இராணுவ ரீதியான உதவியைப் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதையே மையமாகக் கொண்டது.
இது விடயத்தில் ஒரு விடயத்தை நாம் தெளிவாக அடையாளம் காணவேண்டும்.
பாகிஸ்தானானது இலங்கை விவகாரத்தை மையமாகக்கொண்டு இந்தியாவுடன் மோதத் தயாரில்லை. இது ஒருபோதும் நிகழப் போவதில்லை. ஆனால் இதில் ஒரு வித்தியாசமான பிரச்சனை இருக்கின்றது.
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்குவதனையோ அல்லது நிபுணத்துவ உதவிகளை வழங்குவதனையோ இந்தியா பொறுத்துக் கொள்ளும். சிலவேளைகளில் ஆயுத உதவிகளைக்கூட இந்தியா விரும்பவும்கூடும். ஆனால் அதற்கு மேல் சிறிலங்கா அரசுக்கு ஆயுத உதவிகள் நீளுமாயின் இந்தியாவினால் அதனை சகிக்கவோ பொறுக்கவோ நிச்சயம் முடியாது. இது பாகிஸ்தானுக்கும் நிச்சயம் தெரியும்.
எனவே இந்த வட்டத்தில் நின்று பார்க்கும் போது பாகிஸ்தானுடனான உறவு ஒரு மட்டத்திற்கு உட்பட்டது என்பதை பாகிஸ்தான் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறது. 2,500 ஆண்டுகால அரசியல் இராஜதந்திர பாரம்பரியத்தைக் கொண்ட சிறிலங்கா அரசானது இதனை புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் இல்லை என்று நாம் கூறமுடியாது.
ஆனால் ராஜபக்சவிற்கு இருக்கக்கூடிய இன்றைய தெரிவுகளில் இதுதான் அவருக்கு கைக்கெட்டியதாகக் காணப்படுகின்றது. அப்படியெனில் ஒருவகையில் அது ஒரு கையறு நிலை என்றே நாம் கூறவேண்டும். ஏனெனில் இது ஒரு ஆபத்தான தெரிவு என்று தெரிந்தும் கூட அதனைத்தான் அவர் தெரிவு செய்ய வேண்டும் எனில் அது நிச்சயமாக ஒரு கையறு நிலைதான்.
இதில் உள்ள இரண்டாவது பரிமாணத்தைப்பார்ப்போம்.
பாகிஸ்தான் தனித்து இந்தியாவுடன் மோதுவதற்கு தயாராக இருக்க முடியாது. அப்படியெனில் இரண்டாவது தெரிவில் ஒரு விநோதமான பின்னணி இருக்க முடியும். எப்படியெனில் கொழும்பு, இஸ்லாமபாத், பீஜிங்க் என்கின்ற ஒரு அச்சின்கீழ் ஒரு நல்லுறவு உருவாகி இனப்பிரச்சனையை எதிர்கொள்வதற்கான ஒரு சிந்தனைப்போக்கு தோன்றுவதற்கு நிச்சயம் வாய்ப்பு இருக்கவே செய்கின்றது.
இதில் நாம் ஒரு பின்னணியை நோக்க வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் பாகிஸ்தானைப் பொறுத்த வரையில் ஐக்கிய தேசியக் கட்சியாயினும் சரி, சுதந்திரக் கட்சியாயினும் சரி, ஜே.வி.பி. ஆயினும் சரி எது பதவிக்கு வரினும் அதற்கு ஒரே மாதிரியாகவே அது அமையும்.
எனவே இலங்கை விவகாரத்தில் எந்த சிங்கள ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் பாகிஸ்தானின் தெரிவு ஒன்றுதான். அது அரசின் பக்கம் என்பதுதான். எனவே அது அரசாங்கத்தைப் பற்றி பொருட்படுத்த வேண்டியதில்லை. எந்த அரசாங்கங்கள் மாறினாலும் பாகிஸ்தான், சிங்கள அரசின் பக்கம் என்பதில் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கின்றது. ஆனால் சீனாவைப் பொறுத்த வரையில் இதில் வித்தியாசங்கள் உண்டு.
சீனாவின் முதலாவது தெரிவு ஜே.வி.பியினர்தான். அதாவது அவர்கள் சிறிலங்கா அரசிற்கு ஆதரவாளர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது ஆதரவாக இருந்தாலும் கூட அவர்களுடைய முதலாவது தெரிவு ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்காது.
சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருக்கும் போது அவர்கள் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளித்தாலும் அவர்களுடைய ஆதரவு இரண்டாவது தெரிவாகவே சுதந்திரக் கட்சிக்கு இருக்கும். சுதந்திரக் கட்சிக்கு அப்பால் ஜே.வி.பி. பதவியேற்பதனை அவர்கள் விரும்புவார்கள். எனவே அவர்களுடைய முதலாவது தெரிவு ஜே.வி.பி.யினர்தான். ஆனால் இங்கேதான் பிரச்சனை உள்ளது. அவர்கள் சிங்கள அரசிற்கு ஆதரவானவர்கள். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் இந்த மூன்று கட்சிகளில் மூன்றாவதான ஜே.வி.பிக்குத்தான் ஆதரவாளர்கள்.
ஆனால் ஜே.வி.பி. பதவிக்கு வரமுடியாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது அல்லது ஆட்சி அதிகாரத்தில் சவாலிட முடியாத அளவிற்கு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது என்கின்ற பின்னணியில் இப்போது பீஜிங்கிற்கு இருக்கக்கூடிய ஒரேயொரு தெரிவு மகிந்த ராஜபக்சதான். ஆகையால் மகிந்த ராஜபக்சவை நூறு வீதம் பலப்படுத்துவதைத் தவிர பீஜிங்கிற்கு மாற்றுத்தீர்வு எதுவுமே இல்லை.
எனவே இலங்கை விவகாரத்தில் பீஜிங்கும், இஸ்லாமபாத்தும் ராஜபக்சவிற்கு ஆதரிப்பதில் எவ்விதமான கிலேசமும் அற்ற ஒரேவிதமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு சூழல் காணப்படுகின்றது.
இது மிகவும் ஆபத்தான ஒன்று. ஒருவகையில் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமானது. எவ்வாறு எனில் ஜே.வி.பி.க்கு பீஜிங் ஆதரவளித்து விடுமோ அல்லது மகிந்த ராஜபக்சவை வெட்டி அது முன்னணிக்கு கொண்டுவந்து விடுமோ என்ற அச்சம் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கவே செய்தது. இப்போது மகிந்த ராஜபக்சவிடம் நிச்சயமாக இருக்க மாட்டாது.
ஆனபடியினால் இனி பீஜிங்கினுடைய ஆதரவு, இஸ்லாமபாத்தினுடைய ஆதரவு நிச்சயமாக கொழும்பில் இருக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு நூறு வீதமானதாகவே இருக்கும். அப்படியாயின் பீஜிங்க், இஸ்லாமபாத், கொழும்பு என்கின்ற ஒரு முக்கூட்டு அச்சு என்பது இப்போது நூறு வீதம் ஸ்தாபிதமடைந்து விட்டது.
இந்த நிலையில் இந்த முக்கூட்டு அச்சுக்கு எதிராக இந்தியாவின் அணுகுமுறை என்பது எதிர்வினையாக அமையப் போகின்றது. இதில் இந்தியாவும் தனக்கு என ஒரு அச்சை அமைக்கும். ஆனால் இதில் ஒரு விடயம் மிகவும் தெளிவானது. இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விருப்பம் இந்தியாவிற்கு எப்போதும் உண்டு. ஆனபடியினால் இலங்கை விவகாரத்தில் இந்தியாக கடந்தகாலம் முழுவதும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றி வந்திருக்கின்றது. அது எப்படியெனில் சிறிலங்கா அரசாங்கத்தை அணைத்து நடத்துவதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் எவர் பதவிக்கு வரினும் அதனை அணைத்து நடத்துவதன் மூலம் இலங்கைத் தீவை செல்வாக்கு மண்டலத்திற்குள் வைத்திருக்கவே இந்தியா விரும்பியது. இப்போதும் அதனையே விரும்புகின்றது.
ஆனால் இந்தியாவிற்கு எதிரான அணியோடு சிறிலங்காவின் அச்சு அமையுமேயானால் அந்த செல்வாக்கு மண்டல கொள்கையில் இந்தியா மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். ஒருவகையில் 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, இந்தியாவினுடைய வெளியுறவுக் கொள்கைக்கு முரணான ஒரு நிலையெடுத்த போதுதான் இந்தியா தனது புஜபல பராக்கிரமத்தை காட்டி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசிற்கு அச்சமூட்டி ஒரு ஒப்பந்தத்திற்கு பணியவைத்த போதிலும் இறுதியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினுடைய வழிக்கு இந்தியா துணைபோவதாகவே அது மாறிச் சென்றது.
எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இந்தியாவினுடைய கடந்தகால அணுகுமுறை என்பது எப்போதுமே இலங்கையை அணைத்துப் போவது என்கின்ற ஒரு கொள்கை கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் இப்போது மகிந்த ராஜபக்சவினுடைய கொள்கை, இலங்கையை அணைத்துச் செல்ல முடியுமா என்கின்ற கேள்வியை இந்திய கொள்கை வகுப்பாளர்களின் மனங்களில் ஏற்படுத்த வல்லதாய் மாறியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக இலங்கையின் கள அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் இந்த வாரத்திலிருந்து அடையாளம் காண வேண்டியிருக்கின்றது. எனவே இது இப்போது எமக்கு ஒரு புதிய தளமும் ஆகும். ஆனபடியினால் எமக்கு இப்போது சற்று வித்தியாசமான ஆனால் விறுவிறுப்பான அணுகுமுறைகள் மிகவும் அவசியப்படுகின்ற ஒரு காலகட்டத்திற்குள் நாம் நுழைந்துவிட்டோம் என்றே கூற வேண்டியிருக்கின்றது.
இறுதி அர்த்தத்தில் அரசியல் ஒரு பொதுப் போக்கின் முடிவுக்குத்தான் உட்படுமேயாயினும் அவ்வப்போது அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பான நுட்பம் சார் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது நாம் சிந்திக்க வேண்டியது அவ்வப்போதைய நுட்பம் சார் அரசியல் மாற்றங்களைப் பற்றியே தான். எனவே பொதுப்போக்கு தொடர்பான விடயம் எமக்கு பிரச்சனையானதாக இல்லை. அது எப்போதும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றது.
ஆனால் இந்த நுட்பம் சார்ந்த அரசியல் என்ன? இது எப்படி அமையப் போகின்றது என்பதே எம்முடைய அடுத்தகட்டப் பிரச்சனையாகும்.
மொத்தமாக பார்க்கின்ற போது இப்போது இருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலையில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இத்தகைய போக்கானது ஒரு விடயத்திற்கு சவால் விடுவதாக இருக்கின்றது.
இலங்கையினுடைய வெளியுறவுக் கொள்கை என்பது இலங்கையைப் பொறுத்த வரையில் அது இந்திய, அமெரிக்க கோட்டுக்கு வெளியே தாண்டமுடியாத ஒரு நிர்ப்பந்தத்தை கொண்டுள்ளதாகும். இன்னொரு வகையில் கூறுவதனால் இலங்கைக்கு சர்வதேசம் என்பது இந்தியாவும், அமெரிக்காவும் தான். ஆனால் இலங்கை இப்போது அதற்கு வெளியே ஒரு பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருக்கின்றது. இந்த பரீட்சார்த்தத்தினைத்தான் நாம் நுட்ப அரசியல் என்று கூறப் போகின்றோம்.
ஏனெனில் ஒரு பொதுப்போக்கான அரசியலிலிருந்து நகர்ந்து அது ஒரு புதிய மிகவும் நுட்பமான ஒரு இராஜதந்திர அரசியல் கோட்டிற்கு அது நகர்ந்து செல்கின்றது. இந்த நகர்வை இந்தியா எவ்வாறு கையாளப் போகின்றது? இதில் அமெரிக்காவின் பொறுப்பு எப்படி இருக்கப் போகின்றது? இதில் விடுதலைப் புலிகளின் நகர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன? இனி கொழும்புப் பத்திரிகைளும், கொழும்பு சார் அரசியல் நிபுணர்களும் எவ்வாறான தீர்மானங்களை கருத்துக்களை முன்வைக்கப் போகின்றார்கள் என்பதிலிருந்து இதனுடைய கட்டுமானத்தை நாம் நோக்கலாம்.
ஆனால் ஒருவிடயத்தை கொழும்பு சார்ந்து நாம் தெளிவாகக்கூற முடியும். கொழும்புசார் அரசியல் நிபுணர்களுடைய இராஜதந்திரியினுடைய கண்ணோட்டம் எப்போதும் இந்தியாவிற்கு எதிரானதாகவும், தமிழீழ மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. எனவே இயல்பாக அவர்கள் சீனா, பாகிஸ்தான் பக்கம் சார்ந்து சிந்திப்பது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு நிகழ்ந்து விடும்.
ஆனபடியினால் அவர்களுடைய நிபுணத்துவம் என்பது அறிவுசார்ந்ததாக இல்லாமல் உணர்ச்சி சார்ந்ததாக மாறுகின்ற ஒரு துர்ப்பாக்கியம் அவர்களுக்கு உண்டு. இந்த நிலையில் அவர்களுடைய உணர்ச்சி சார்ந்த தீர்மானங்களுக்கு வெளியே நாம் ஒரு அறிவுசார்ந்த களத்தில் நுழையக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த அறிவுசார்ந்த ஒரு நுணுக்கமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என்றார் அவர்.
http://www.eelampage.com/?cn=25284
|
|
|
| 2300ஆண்டுகள் பழமைவாய்ந்த தூயதமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு |
|
Posted by: அருவி - 04-05-2006, 06:56 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தமிழ் கல்வெட்டுக்கள் தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இவையே மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியியல் மற்றும் தொல்லியல்துறையினரால் கடந்த மாதம் தேனி மாவட்டத்தின் ஆண்டிப்பட்டி பகுதிக்கு அண்மையாகவுள்ள புலிமான்கோம்பை என்ற ஊரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராட்சியில் இக்கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழரின் பொற்காலம் என போற்றப்படும் சங்க காலத்திற்குரிய மூன்று கல்வெட்டுக்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கல்வெட்டுக்கள் ஒவ்வொன்றும் அண்ணளவாக மூன்று அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டவையாக உள்ளன.
இவை ஈமச்சின்னங்களில் நாட்டப்பட்ட நடுகற்களாக இருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட முதல் கல்வெட்டில் 'கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆ கோள்" என பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'கூடல் என்ற ஊரில் நடைபெற்ற ஆகோள் பிணக்கில் உயிர் நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவனுக்கு எடுத்த கல்" என பொருள் கொள்ளலாம்.
இரண்டாவது கல்வெட்டில் இரு வரிகள் எழுதப்பட்டுள்ளன. அனால் அக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து காணப்படுவதால் அதில் எழுதப்பட்டுள்ளவற்றில் சில சொற்களே காணப்படுகின்றன. முதல்வரியில் 'அன் ஊர் அதன்" என்றும் இரண்டாவது வரியில் 'ன் அன் கல்" என்றும் எழுதப்பட்டுள்ளது.
மூன்றாவது கல்வெட்டில் 'வேள் ஊர் பதவன் அவ்வன்" என பொறுக்கப்பட்டுள்ளது. 'வேற்று ஊரைச் சேர்ந்த அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட கல்" என இது பொருள்படுகிறது.
இக்கல்வெட்டுக்களில் காணப்படும் எழுத்துக்கள் முற்று முழுதாக தூய தமிழ் எழுத்துக்களாகும். இதில் எழுதப்பட்டுள்ள சொற்கள் சங்ககால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்பிராமி வரிவடிவ ஆய்வில் புலமை பெற்ற ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்த கல்வெட்டுக்களைப் பார்வையிட்டு, அவை பற்றி கருத்துத் தெரிவிக்கையில், தமிழகத்தில் கிடைத்த தமிழ்பிராமி கல்வெட்டுக்களில் பிராகிருத சொற்கள் கலந்து வரும். ஆனால் இக்கல்வெட்டுக் து}ய தமிழ்ச்சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பழமை வாய்ந்தவையாகும் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தஞ்சை பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று ஊடகர்களிடம் இது தொடர்பில் தெரிவித்ததாவது: இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை, கள ஆய்வு மூலமும், அகழாய்வு முலமும் வெளிக்கொணர்ந்து, சங்க கால வரலாற்றை அறிவியல் அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்திருப்பது, தமிழ்மொழிதான் மிகப்பழமையான மொழியென நிரூபிக்க ஆதாரமாக அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
இக்கல்வெட்டுக்கள் மீட்பின் மூலம் சங்க காலத்தமிழர்கள் பரவலாக எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
இக்கல்வெட்டுக்கள் மீட்கப்பட்ட புலிமான்கோம்பையும் அதைச்சூழ்ந்துள்ள பகுதிகளிலும் பெருமளவான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
| துயர் பகிர்வு |
|
Posted by: KULAKADDAN - 04-04-2006, 09:15 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (36)
|
 |
கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.
|
|
|
| கருப்புத்துண்டு கபாலி கவனத்திற்கு |
|
Posted by: Luckyluke - 04-04-2006, 10:57 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு அருகில் மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாட்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்று செயாவுடனான பழைய தொடர்பு பற்றி கருப்புத்துண்டு கபாலி சொன்னார். ( தினமணி 02-04௨006)
கருப்புத்துண்டு கபாலி, இம்மாம் பழைய ஞாபகம் உங்களுக்கு இருக்கே, சென்ற செயா ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை அடிச்ச சம்பவம் ஒன்னு கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?.
கபாலி நீங்க, அப்படியே செயா அடித்த கொள்ளையையும் அப்படியே மேடையில அப்பப்ப பேசுங்க. அப்படி பேசினா, நீங்க உண்மையையே பேசுவதாக மக்கள் நம்புவார்கள். உங்களுக்கு புனிதர் பட்டங்கள் கூட நாங்க தரோம்.
கருப்புத்துண்டு கபாலி அவர்களே உங்களுக்கே தெரியும். புனிதர் பட்டத்துக்கு நீங்க தகுதியில்லன்னு. கோடி கோடியாய் கொள்ளையடித்து தங்கமாய் அலைந்த செயாவிற்கு “தங்க தாரிகை“ பட்டம் கொடுத்தாங்க இல்லியா? அது போல உங்களுக்கு “புளுகுப்புனிதர்“ என்ற புதிய பட்டம் ஒன்னும் தரோம்.
கடந்த 20 நாட்களில் அவரை 3 முறைகள் சந்தித்துள்ளேன் நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை, அவர் படிப்பாளி, விவேகி, அதிபுத்திசாலி என்று வாங்கிய காசுக்கு குறைவில்லாமல் விசுவாசமாக சேவை ஆற்றுகிறீர் கபாலி.
இதோ சென்ற கூட்டணியில் இருந்தவர்கள் என்ன் சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.
மூப்பனார் காங்கிரசு, இரண்டு பொது உடைமைக்கட்சிகள், பா.ம.க கட்சிகளை தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிந்தார். காசு விட்டு எறிந்தால் அவர்கள் காலடியில் வீழ்பவர்கள் தான் அவர்கள் என்று செயாவிற்கு தெரியும்.
தூக்கி எறியப்பட்ட போது, அவர்கள் சொன்ன வார்த்தை "செயா மிகவும் மாறிவிட்டார்" என்பதுதான்.
கருப்புத்துண்டு கபாலி அவர்களே! செயா அவர்களிடம் நீங்கள் கண்ட கடல் அளவு மாற்றம் இப்போது உங்களை திகைப்படைய வைத்துள்ளது போல் மீண்டும் நீங்கள் திகைப்படையும் காலம் வெகு தொலைவில் இல்லை.
அப்படி இல்லையென்றாலும் செயா உங்கள் முகத்தில் குத்துவார் அப்போது நாங்கள் வேடிக்கைப் பார்ப்போம்.
ஒருவேளை வாங்கிய காசுக்கு நீங்கள் காலை நக்கிக் கொண்டிருந்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் திகைப்படைய வாய்ப்புண்டு, ஆனால் அவ்வாறு நடக்குமேயானால் கபாலி அவர்களே தயவு செய்து தமிழன், சுயமரியாதை, மானம், வெட்கம், என்று ஒருபோதும் பேசிவிடாதீர்கள்.
அப்படி நீங்கள் பேசினால் தமிழ் அகராதியில் அந்த வார்த்தைகளும் மானமிழந்து விடும். அப்படியும் பேசுவீர்களேயானால் சொரணையுள்ள தமிழர்களாகிய நாங்கள் அந்த வார்த்தைகளுக்கு அகராதியில் கீழ்க்கண்டவாறு பொருள் மாற்றுவதைத்தவிர வேறு எங்களுக்கு வ்ழியில்லை.
தமிழன் – வெக்கங்கெட்டவென்,
சுயமரியாதை - மானங்கெட்டத்தனம்,
வெட்கம் - சொரணையில்லமை,
மானம் - சூடு சொரணையில்லாம் துதி பாடல்,
மக்கள் நலம் - ஏமாற்று வேலை,
என்று மாற்றிவிடுவோம்.
சரி போகட்டும்.
கூட்டணியில் சேர்ந்த போது நீங்கள் என்ன சொன்னீர்கள், எங்கள் கட்சிக்கு எது நல்லதோ அதை நான் செய்தேன். நான் என்னைப்பற்றி கவலைப்பட வில்லை என்று தானே!.
கட்சிய வளர்க்க, உங்க தொண்டர்களுக்கு நல்லதுக்கு இந்த முடிவு எடுத்தீங்க இல்லியா? இப்ப மக்கள் நலம் மக்களுக்காகத்தான் கூட்டணி சேர்ந்தேன்னு இப்ப பேசுறீங்க.
கட்சி நலன் அப்படின்னா என்ன? உங்க தொண்டர்கள் காண்ட்ராக்ட் எடுக்கணும், சொத்து சேர்க்கணும், இவ்வளவு நாள் உழைத்த தொண்டர்களுக்கு கொள்ளை அடிக்க ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரனும் நல்ல முடிவு தான். நாலு கல்யாண மண்டபம், சொத்து சொகம் எல்லாம் உங்கள் தொண்டனுக் கும் கிடைக்க வேண்டாமா?.
செயலலிதாக்கிட்ட பயிற்சி எடுத்துக்குங்க. எப்படி கவர்னர வாங்கலாம், நீதிபதி வீட்டில எப்படி கரண்ட் கட்பண்றது. எல்லாமே அத்துபடியாகிவிடும்.
கருணாநிதிக் குடும்பத்துக்கு மட்டும் இத்தனை சொத்து இருக்கலாமா? அது தானே வைகோ உங்க கோபம்.
செயா சென்ற தேர்தலில் திருடத்தெரியாமல் திருடினார், மாட்டிக்கிட்டார். இந்த முறை பாருங்க யாருக்காவது தெரியுமா?
****
தமிழர் நலமே வாழ்வின் லட்சியம் அப்படி இப்படின்னு புளுகிறீங்களே கபாலி இது ஞாயாமா?
மக்கள் நலம் பற்றி கொஞ்சமாவது அக்கரை இருக்கிறதா உங்களுக்கு, இருந்தால் கொள்ளை ராணியிடம் கூட்டு சேர்வீர்களா?.
உங்க கூட்டணியில அதிகமா விமர்சிக்கப்படுவது நீங்களும் திருமாவும் தான், நீங்க தான் கொள்கை அப்படி இப்படின்னு பேசி மக்கள ஏமாத்துறீங்க, ஆனா உங்க புரட்சித்தலைவியோ உங்களுக்கு கொள்கையும் இல்ல ஒரு பொடலங்காயும் இல்ல எல்லாம் என் பொட்டிக்குள் அடக்கம்னு கொள்கைய பத்திமட்டும் பேசுவதேயில்லை.
உங்களைப்போன்றவர்கள் தான் “தாயே உன்னடி சரணம்“ என்று தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கிறாங்க. செயலலிதா புனிதமானவர், ஈழப்பிரச்சனையில் அக்கறையுடன் இருக்கிறார். அப்படி இப்படின்னு புளுகிறீங்க. சிங்களத்து சிறுக்கி சந்திரிகாவோடு கூட்டு சேர்ந்த போது நீங்க தானே கத்திக்கிட்டிருந்தீங்க.
கடைசியா உங்களுக்கு ஒரு ஐடியா தரேன் கேளுங்க.
பேசாம கட்சிய கலைச்சிட்டு "அம்மாவே சரணம் அப்படின்னு கால்ல விழுந்திடுங்க" ஒரு வேள உங்களுக்கு "சபாநாயகர் வேலக்கூட" கிடைக்கலாம். தேர்தல்ல நிக்க்கமலே சபாநாயகர் பதிவியா?
ஆச்சரியப்பாடாதீங்க வைகோ.
"பொட்டியிருக்கிற வரைக்கும் கடவுளே வந்தலும் காலடியிலே தான்."
(நன்றி : சிவச்சந்திரன், கனடா)
|
|
|
| சுண்டலின் ட்ரைட் சிக்கன் ரோஸ்ட் |
|
Posted by: தூயா - 04-04-2006, 09:42 AM - Forum: சமையல்
- Replies (6)
|
 |
<img src='http://img80.imageshack.us/img80/5065/chickenroast8bz.th.jpg' border='0' alt='user posted image'>
சுண்டலை நம்பி செய்தது.....யாருக்கு வேணும் என்று சொல்லுங்க...அனுப்பிவிடலாம்
|
|
|
|