| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 612 online users. » 0 Member(s) | 608 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,074
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,082
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,906
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,298
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| வாள மீன் |
|
Posted by: Luckyluke - 04-04-2006, 06:56 AM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
நண்பர்களே !
வேறு ஒரு களம் ஒன்றில் தமிழகத்தின் இப்போதைய சூப்பர் ஹிட் சாங் பற்றி விவாதம் நடந்து வருகிறது... நாமும் அதைப் பற்றி விவாதிக்கலாமே?
நண்பர் ஒருவர் எழுதியது :
Dear Friends,
Please update your latest and favourite hit songs here....
if possible its link to hear or download..
It will be helpful to NRIs to know what is the latest hit song now...
Anybody want to hear 'Ghana' Song?? Ghana type songs were very famous before 5 years No.... why those songs lost importance now?? I think its maker Deva lost the market
Latest Ghana type song ...is here http://www.raaga.com/getclip.asp?id=999999029342
Vazha Meenu
Singer(s): Ghana Ulaganathan
Music: Sundar C. Babu
Album: Chithiram Pesudhadi
அதற்கு நான் எழுதிய பதில் :
'கானா' என்றால் இந்தியில் பாடல் என்று பொருள்....
சென்னையில் சேட்டுகளின் ஆதிக்கம் நிறைந்தப் பகுதிகளில் வசிக்கும் சில குடிசைத் தமிழர்கள் தாங்களே இட்டு கட்டி பாட்டு பாடி சேடுகளிடம் பணம் வாங்குவது வழக்கம்... சேடுகள் இவர்களிடம் பழைய அமிதாப் பாடல் மெட்டில் 'கானா' விரும்பி கேட்பார்களாம்....
ஆட்டோ ஓட்டும் என் உறவினர் ஒருவர் சிறந்த கானா கலைஞர்.... அவர் சொன்ன விஷயம் இது....
கானா பாடுபவர்கள் பாடலை அவர்களே இயற்றி பெரும் வெற்றி பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடுவார்கள்.... குறிப்பாக சாவு வீடுகளில் இவர்கள் கச்சேரி தண்ணி சகிதம் நடக்கும்.... செம ஜமாவாக இருக்கும்.... எனக்கு இதுபோன்ற குடிசைவாழ் நண்பர்கள் அதிகம் என்பதால் பல கானா கச்சேரிகளை கண்டு களித்திருக்கிறேன்....
புளியந்தோப்பு பழனி, எழும்பூர் அந்தோணி, ஆயிரம் விளக்கு பன்னீர் செல்வம், சிந்தை புண்ணியர், வியாசர்பாடி உலகநாதன், வியாசர்பாடி ஸ்டாலின் போன்றோர் இதில் ஸ்டார்கள்....
பொதுவாக கானா கச்சேரிகளில் ஈழத்தமிழர் அவலத்தை வெகுவாக சித்தரித்து கண்டிப்பாக ஒரு பாட்டு இடம்பெறும்....
டெயில் பீஸ் : வாலமீன் பாட்டு மூலம் பிரபலமான உலகநாதன் இந்தப் பாடலை மட்டும் கல்யாண கச்சேரிகளில் பாட இப்போது ரூ. 5,000 வாங்குகிறார்......
|
|
|
| கனடாவில் தமிழ் இளைஞர் கொலை |
|
Posted by: தாரணி - 04-03-2006, 06:55 PM - Forum: புலம்
- No Replies
|
 |
<b>கனடாவில் தமிழ் இளைஞர் கொலை</b>
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
|
|
|
| அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை |
|
Posted by: SUNDHAL - 04-03-2006, 05:00 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (6)
|
 |
அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெண்மணி இட்லிகடை நடத்தி வந்தாள். அவரின் கணவர் முழு நேர குடிகாரன். அந்த பெண்மணிதான் குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளுக்கு பதினைந்து வயதில் ஒரு பெண் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வேறு தாயாக இருந்தால் அதிகாலையில் எழுப்பி படிக்க சொல்வாள். அந்த பெண்மணியோ, மகளை ஐந்து மணிக்கு எழுப்பி வடைக்கு பருப்பும், மசாலாவும் உரலில் ஆட்ட வைத்து விடுவார். அது முடிந்ததும் கடலை சட்டினி அரைக்க வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும் இப்படி ஒன்பது மணி வரை வேலை வாங்கி விட்டு அதன் பிறகுதான் விடுவாள். அந்த மாணவி அதன் பிறகு குளித்து ரெடியாகி பள்ளிக்கூடத்திற்கு ஓடுவாள்.
பத்தாம் வகுப்பு என்பதால் பள்ளிக்கூடத்தில் மிகவும் கண்டிப்புடன் பாடம் நடத்துவார்கள். வீட்டு பாடம், மாதிரி பரீட்சை வைப்பார்கள். வீட்டில் நிறைய வேலை என்பதால் அந்த மாணவியால் படிக்க முடியவில்லை.
ஆசிரியர்கள் ஒரு சிலர் அடித்து தண்டித்தார்கள். மற்ற மாணவிகள் முன்பு அவமானம் ஏற்பட்டது. அடியும் அவமானமும் தாங்க முடியாமல் தவித்தாள். வீட்டில் வேலை செய்ய மறுத்தால் அம்மாவிடம் அடி விழும். இந்த சூழ்நிலையில் அப்பெண் பள்ளிக்கூடம் போகிற மாதிரி புறப்பட்டு பள்ளிக்கூடம் போகாமல், எங்கேயாவது ஒளிந்திருந்து விட்டு மாலையானதும் வீடு திரும்பினாள்.
மாந்தோப்பு, ரெயில் ரோடு இப்படி எந்தெந்த இடத்திலேயÚÖ ஒளிய ஆரம்பித்தாள். அப்படி ஒளிந்திருக்கும் போது கவனித்த சில ஆண்கள், மிரட்டி அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி கொண்டார்கள். அதற்காக ஸ்வீட், பழங்கள் இப்படி வாங்கிக் கொடுத்து விடுவார்கள். பள்ளியில் அடி வாங்குவதைக் காட்டிலும் இது பரவாயில்லை என்று நினைத்தாளோ என்னவோ, அது தொடர்ந்து இருக்கிறது.
இப்படியே மாதங்கள் பல நகர்ந்த பிறகு அந்த மாணவியின் வயிறு பெரியதாக தெரிய ஆரம்பித்தது. வயிற்றில் கட்டி இருக்கும் என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்து போன பின்பு தான் தெரிந்தது வயிற்றில் வளர்வது குழந்தை என்று. அதற்கும் அந்த மாணவியை அம்மா அடித்தாள். கஷ்டப்பட்டு போன அந்த மாணவியின் வாழ்க்கை, தற்கொலையில் முடிந்து விட்டது.
- நா.பத்மாவதி,
|
|
|
| ஜனநாயகக் கோமாளிகள் |
|
Posted by: ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-03-2006, 11:57 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
ஜனநாயகக் கோமாளிகள்
கோவி. லெனின்
சிங்கங்களுக்கு
எலிப்பொந்தில் கிடைக்கிறது
எல்லாவிதமான வசதிகளும்.
புலிகளுக்குப் பசி என்றால்
புல்லுக்கட்டு வேண்டாம்
புண்ணாக்கே போதும்
தேர்தல் நேரமெனில்
எதனையும் எதனுடனும்
கூட்டிக் கொள்ளலாம்.
கழிக்க வேண்டியவை
மானமும் வெட்கமும்.
கொள்கைகள்...
கூவி விற்பதற்கே!
தகையும் விலையென்றால்
தன்னையே விற்கவும்
தயார் எங்கள் தலைவர்கள்.
கூட்டணி மேடைகளில்
கூடியும் கலைந்தும்
கூத்தடிக்கிறார்கள்
ஜனநாயகக் கோமாளிகள்.
எல்லாவற்றுக்கும்
எம்மக்கள்
கைதட்டிச் சிரிப்பார்கள்
எனக் கணக்கிட்டுச்
சிரிப்பாய் சிரிக்கிறார்கள்
வாய்ச் சொல் வீரர்கள்
குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளியாகியுள்ளது. அருகிலுள்ள படத்துடன் இதனை ஒப்பிட்டு குழம்ப வேண்டாம். இது தனிப்பாடல் தி(ர)ட்டு!
¿ýÈ¢ - ¾¡¸õ -03/06
|
|
|
| ரெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுகின்றார் ஜெயசூரியா |
|
Posted by: அருவி - 04-03-2006, 10:11 AM - Forum: விளையாட்டு
- Replies (17)
|
 |
<img src='http://www.rediff.com/wc2003/2003/jan/24jaya.jpg' border='0' alt='user posted image'>
<b>இலங்கை அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் ஆன சனத் ஜெயசூரியா ரெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். ஆயினும் தொடர்ந்து ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கலந்துகொள்வார் என்று தெரியவந்துள்ளது. </b>
<img src='http://www.cricket-online.com/images/players/JAYASURIYA_SANATH_TEST_WALK.jpeg' border='0' alt='user posted image'>
2007 இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் கிரிக்கட்டில் இருந்து முற்றுமுழுதாக ஓய்வுபெறப்போவதாகவும் சனத் தெரிவித்துதுள்ளார்.
ஜெயசூரியா ராய்ட்டர் நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில், " ரெஸ்ட் போட்டிகளில் விளையாடாது ஒதுங்கியிருப்பது உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடக் கூடியவாறு உடல் நலத்தைப் பேண உதவும்" என்றார். அவர் மேலும் கூறுகையில் "நிச்சயமாக நான் அச்சுற்றுப் போட்டியின் பின் கிரிக்கடிலிருந்து விலகுவேன். நாங்கள் உலகக்கிண்ணச் சுற்றுப்போட்டியை வெல்லக்கூடிய சாத்தியம் உள்ளதெனக் கருதுகிறேன்; அதற்கு நாங்கள் கடுமையாக உழைப்பதுடன் கிரிக்கட்டின் மூன்று தளங்களிலும் சிறப்பாக விளையாடவேண்டும்" என்றும் கூறினார்.
<img src='http://img80.imageshack.us/img80/5826/sanath2wp.jpg' border='0' alt='user posted image'>
இறுதி ரெஸ்ட் போட்டியின் ஆரம்பநாளில் கேக் வெட்டும் போது
தகவல் தந்துதவிய சுண்டலிற்கு நன்றிகள்
மேலதிகவிபரம்
|
|
|
|