Yarl Forum
கனடாவில் தமிழ் இளைஞர் கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: கனடாவில் தமிழ் இளைஞர் கொலை (/showthread.php?tid=344)



கனடாவில் தமிழ் இளைஞர் கொலை - தாரணி - 04-03-2006

<b>கனடாவில் தமிழ் இளைஞர் கொலை</b>

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி பயன்படுத்தப்படவில்லையெனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.