![]() |
|
ஜனநாயகக் கோமாளிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ஜனநாயகக் கோமாளிகள் (/showthread.php?tid=348) |
ஜனநாயகக் கோமாளிகள் - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 04-03-2006 ஜனநாயகக் கோமாளிகள் கோவி. லெனின் சிங்கங்களுக்கு எலிப்பொந்தில் கிடைக்கிறது எல்லாவிதமான வசதிகளும். புலிகளுக்குப் பசி என்றால் புல்லுக்கட்டு வேண்டாம் புண்ணாக்கே போதும் தேர்தல் நேரமெனில் எதனையும் எதனுடனும் கூட்டிக் கொள்ளலாம். கழிக்க வேண்டியவை மானமும் வெட்கமும். கொள்கைகள்... கூவி விற்பதற்கே! தகையும் விலையென்றால் தன்னையே விற்கவும் தயார் எங்கள் தலைவர்கள். கூட்டணி மேடைகளில் கூடியும் கலைந்தும் கூத்தடிக்கிறார்கள் ஜனநாயகக் கோமாளிகள். எல்லாவற்றுக்கும் எம்மக்கள் கைதட்டிச் சிரிப்பார்கள் எனக் கணக்கிட்டுச் சிரிப்பாய் சிரிக்கிறார்கள் வாய்ச் சொல் வீரர்கள் குறிப்பு: யதார்த்தமாக இந்தப் பக்கத்தில் கவிதை வெளியாகியுள்ளது. அருகிலுள்ள படத்துடன் இதனை ஒப்பிட்டு குழம்ப வேண்டாம். இது தனிப்பாடல் தி(ர)ட்டு! ¿ýÈ¢ - ¾¡¸õ -03/06 |