| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 561 online users. » 0 Member(s) | 558 Guest(s) Applebot, Baidu, Bing
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,075
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,083
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,553
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,263
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,548
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,907
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,298
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,898
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது! |
|
Posted by: வினித் - 04-02-2006, 05:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[b]<span style='font-size:30pt;line-height:100%'>விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது: ஹக்ரூப் ஹொக்லெண்ட் </span>
[ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2006, 20:34 ஈழம்] [ம.சேரமான்]
[size=18]தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் ஒருவாரத்துக்கு முன்பாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார்.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கமானது அல்குவைடா போன்று பயங்கரவாத இயக்கம் அல்ல என்றும் அவர்கள் விடுதலைப் போராட்ட வீரர்கள் என்றும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார்.
இதற்குக் கடும் கோபத்துடன் பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, "இங்கே நீங்கள் வேலை செய்யத்தான் வந்துள்ளீர்கள். அதைச் சரியாக செய்யுங்கள். பாரபட்சமாக நடக்காதீர்கள்" என்று கூறியுள்ளார். மேலும் ஹக்ரூப் ஹொக்லெண்ட்டுக்குக்கும் புதிய கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்சனுக்கும் சில அறிவுரைகளையும் கோட்டபாய ராஜபக்ச அளித்துள்ளார்.
சிறிலங்காவின் கலாச்சாரத்தை வரலாற்றை முதலில் கற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
"சிங்களவர்களும் தமிழர்களும் பலதசாப்தகாலங்களாக ஐக்கியமாகவே வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் இப்போது வந்து அது நடக்காது என்கிறீர்கள். இப்படியான பேச்சுக்கள் விரும்பத்தக்கது அல்ல" என்றும் கோட்டபாய ராஜபக்ச கடிந்துள்ளார்.
மேலும் சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீதான அண்மைய தாக்குதல்களை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கண்டனம் செய்யவில்லை என்றும் கோட்டபாய ராஜபக்ச கூறியுள்ளார். அதற்குப் பதிலளித்த ஹக்ரூப் ஹொக்லெண்ட், எங்களிடம் ஆதாரம் ஏதுமில்லை என்றார். "எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஒருநபரை குற்றம்சாட்டம் சாட்ட முடியாது" என்றும் ஹக்ரூப் கூறியுள்ளார்.
இச்சந்திப்பின் போது விடுதலைப் புலி போராளிகளுக்கான இராணுவ உலங்குவானூர்தி உதவிகள் தொடர்பாகவும் ஹக்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கிலிருந்து வன்னிக்கு அவர்களது தலைமைப்பீடத்துடனான சந்திப்பிற்குச் செல்லுகிற போராளிகளுக்கான உலங்குவானூர்தி பயணத்தை இராணும் மறுக்கிறது என்றும் ஹக்ரூப் ஹொக்லெண்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கோட்டபாய ராஜபக்ச, கொழும்பில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்குக் கூட இராணுவ தளபதிகளுக்கு உலங்குவனூர்தி சேவை வழங்கப்படுவதில்லை என்றார். இதையடுத்து இச்சந்திப்பும் முடிவுக்கு வந்தது என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:
புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம் புதினம்
|
|
|
| இந்தியாவுக்கு எதிரான சீன - பாகிஸ்தான் கூட்டுச்சதியில் இணைந்த |
|
Posted by: Mathuran - 04-02-2006, 04:25 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
ஆசியாவின் பெரும் இரும்புத்திரை வல்லரசு நாடான சீனாவும் மிகவும் ஆபத்தான நண்பன் என்று அமெரிக்க உளவுத்துறையால் வர்ணிக்கப்படும் பாகிஸ்தானும் சிறிலங்காவை தமது கிடுக்கிப்பிடிக்குள் இறுக்கிக் கொண்டுள்ளன என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
தென் இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமிய தீவிர வாத நடவடிக்கைகளுக்கு கொழும் பிலுள்ள பாகிஸ்தான தூதரகம் காரணமா என்ற சந்தேகம் இந்திய புலனாய்வுத்துறை வட்டாரங்களிலும்-
கிழக்கிலங்கையில் ஜிகாத் குழுக்களின் நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன என்கிற குரல் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் நிலையில் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டிருக்கும் சிறிலங்கா தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் பயணம் உற்று நோக்கப்படுகிறது.
பாக்கிஸ்தான் அரசுத் தலைவர் பர்வேஸ் முசாரப்புடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - (படம்: ரொய்ட்டர்ஸ்)
பொருளாதார வரத்தக அபிவிருத்தி தொடர்பான உயர் மட்ட பேச்சுக்களில் கலந்து கொள்ள சென்றிருக்கும் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவில் எந்த சம்பந்தமுமில்லத சமூக நலன்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைக்கப்பட்டிருப்பது அரச தூதுக்குழுவின் பயணத்தின் நோக்கம் தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.
இந்த நிiயில் தான் சிறிலங்காவில் பாகிஸ்தான் உளவுத்துறையின் தலையீடுகள் அதிகரித் திருப்பது தொடர்பான பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
பாகிஸ்தான் தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை முடுக்கி விட்டிருப்பதை உறுதி ப்படுத்த இந்திய புலனாய்வுத்துறையும் மும்முரமாக முயன்று வருகின்றது.
தெற்காசியாவில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகளின் முன்னோடியும் சூத்திரதாரியுமாக கருதப்படும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தற்போது தெற்காசிய அரங்கிலும் உலக மட்டத்திலும் பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
பாகிஸ்தான் உளவுத்துறையின் மூத்த அதிகாரியும் ஜிகாத் அமைப்புகளுக்கு ஆட்திரட்டி வலுவுூட்டி நெறிப்படுத்தும் விற்பன்னரான கேணல் பஷீர் வலி மொகமது சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக நியமனம் பெற்ற போது இந்த விவகாரம் புதிய பரிமாணம் கொண்டது
யார் இந்த பஷீர் வலி மொகமது?
அதற்கு முன்னதாக பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் வலிமை என்ன?
1950களில் பிரித்தானிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கவ்தோமால் தொடக்கி வைத்த ஐஎஸ்ஐ இன்று உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது.
1960களில் பாகிஸ்தானின் நலன்களை கவனித்துக் கொள்ளும் பணியை மேற்கொண்டது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலனாய்வுத்தகவல்களை பெற்றுக்கொள்வது - முப்படை யினருக்கும் இடையே புலனாய்வுத்; தகவல்களை பரிமாறிக் கொள்வது - ஊடகங்களின் போக்கை அவதானித்துக் கொள்வது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டுவந்த ஐஎஸ்ஐ காலப்போக்கில் பாகிஸ்தானின் ஆட்சிக்குள் ஆட்சி நடத்தும் வலுவான கட்டமைப்பாக மாற்றம் கண்டது.
அதிபருக்கோ தலைமை அமைச்சருக்கோ அன்றி எந்தெவொரு தலைமைக்கோ படைத் தரப்புக்கோ பதில் கூறவேண்டிய அவசியமின்றி தன்னிச்சையாக செயற்பட்டுவரும் ஐஎஸ்ஐ கட்டுப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் கிடையாது என்பதே உண்மை.
இது ஐஎஸ்ஐ ஊழல் மோசடியிலும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட வழிவகுத்தது.
ஆப்கானிஸ்தானிலும் இந்தியாவிலும் தாக்குதல் நடவடிக்கைகளை தொடருவதற்கு இவ் வாறான சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பணமே பயன்படுத்தப்படுகிறது.
ஜிக்ஸ் (துஐஓ- துழiவெ ஐவெநடடபைநnஉந ஓ) என்றழைக்கப்படும் ஓ கூட்டு புலனாய்வுப் பணிமனையை தலைமைச் செயலகமாக கொண்டு இயங்கும் ஐஎஸ்ஐயின் பத்து பெரும் பிரிவுகளிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றுகிறார்கள்.
ஜிப் அல்லது (துஐடீ- துழiவெ ஐவெநடடபைநnஉந டீரசநயர) என்றழைக்கப்படும் பிரிவு ஐஎஸ்ஐயின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவாகும்.
மூன்று முக்கிய உபபிரிவுகளை கொண்டுள்ள இந்த பிரிவானது உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மேற்கொள்ள வேண்டிய அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிப்பதுடன் அதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்குதலில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவின் வடமுனையில் ஜம்மு கஷ்மீர்; பகுதியில் ஊடுருவல் நடத்தி ஆயுதங்கள் விநியோகித்து பரப்புரை மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஜின் எனப்படும் (துஐN - துழiவெ ஐவெநடடபைநnஉநஃழேசவா) பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர வெளிநாடுகளில் உளவு நடவடிக்கையில் ஈடுபடும் பிரிவு, தீவிரவாத நட வடிக்கைகளை மேற்கொள்ளும் ஜிகாத் உறுப்பினர்களுக்கு தகவல்கள் வழங்கி பாதுகாப்பதற்கு என்ற தொடர்பகப்பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளை ஐஎஸ்ஐ கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இரசாயன ஆயுதங்கள் சேகரிப்புக்கும் வெடிமருந்துகள் விநியோகத்திற்கும் தனித்தனி பிரிவுகளை ஐஎஸ்ஐ அமைத்திருக்கிறது.
சீனா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்; மற்றும் முன்னைய சோவியத் ஒன்றியத்தின் முஸ்லீம் நாடுகளில் தீவிரமாக செயற்பட்டுவரும் ஐஎஸ்ஐயின் பிரிவான துஊஐடீ (துழiவெ ஊழரவெநச ஐவெநடடபைநnஉந டீரசநயர) வின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிலங்கா வீழ்ந்து விட்டதா என்ற சந்தேகம் தற்போது அனைத்துலக பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.
பாக்கிஸ்தான் தலைமை அமைச்சர் சௌகட் அசீசுடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - படம்: ரொய்ட்டர்ஸ்
பாகிஸ்தானின் நகர்வுகளும் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணி வரும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ஏற்ற வகையில் சீனாவும் சிறிலங்கா விவகாரத்தில் எழும் சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.
மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரும் அவரது ஆலோசகருமான போதகாய ராஜபக்ஸ மேற் கொண்டிருந்த சீனப்பயணம் தொடர்பான செய்திகளை வெளியிட்ட ஆங்கில ஊடக மொன்றின் ஆசிரியர் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப் பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளுடன் நியாயமான பேச்சு நடத்தி நிரந்தர சமாதானத்தை நிலைநாட்டுவ தற்கு மறுத்துவரும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தீர்;வையே விரும்புகிறது என்ற உண் மையை நன்கு புரிந்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அதற்கு ஏற்றவகையில் நகர்வுகளை மேற்கொண்டு தனது இலக்கை நெருங்கி வருகிறது.
இந்தியாவின் வடமுனை பகுதியான சச்சரவு மிக்க ஜம்மு கஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு துணைபோவதுடன் அஸாம்,பிகார்;, ஜார்கந்த், நாகலாந்த் மற்றும் சண்டிகார் மாநிலங்களிலும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவித்துவரும் ஐஎஸ்ஐ அண்டை நாடுகளான பங்களாதேஷ் தலைநகரம் டாக்காவிலிருந்தும் நேபாளத் தலைநகரம் கட்மண்டுவிலிருந்தும் இந்திய அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்திவந்திருக்கிறது.
இருந்தபோதிலும் இந்தியாவின் தென்முனை நாடான சிறிலங்காவிலும் மையம் கொண்டு இந்தியாவில் தாக்குதலை நெறிப்படுத்துவதே ஐஎஸ்ஐயின் நீண்ட காலதிட்டமாக இருந்து வந்திருக்கிறது.
1991ல் யாழ் குடாநாட்டை விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றுதற்கு சிறிலங்கா படைத்தரப்புக்கு இறுதி நேர உதவிகளை வழங்கியதன் மூலம் நாட்டை தனது பொறிக்குள் சிக்க வைத்தது.
யாழ். குடாநாட்டை வெற்றி கொள்வதற்கு பாகிஸ்தானே காரணம் என்பதை நன்றியுடன் நினைவு கூர்ந்த முன்னாள் அரசுத்தலைவர் சந்திரிகா குமாரதுங்க இந்த உதவிக்கு எந்த கைமாறும் செய்யத்தயார் என்று வழங்கிய வாக்குறுதியை பாகிஸ்தான் கெட்டியாக பிடித்துக்கொண்டது.
சிறிலங்காவை பாகிஸ்தான் உளவுத்துறையின் பொறிவலையில் சிக்க வைப்பதில் பெரும் பங்காற்றி வருபவர் அந்த நாட்டுக்கான தூதவராக தற்போது கடமையாற்றி வரும் பஷீர் வலி மொகமது என்பவரே.
இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான லக்ஷர் ஈ தொய்பா அமைப்புடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணிவருவதுடன் ஏனைய ஜிகாத் அமைப்புகளை விரிவு படுத்துவது ஆட்திரட்டுவது நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கி நெறிப்படுத்துவதில் நிபுணத்துவமிக்க கேணல் பஷீர் வலி மொகமது 1990களில் கொழும்பு தூதரகத்தின் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த வேளையில் தமிழ்நாட்டில் ஜிகாத் அமைப்பை தோற்றுவிப்பதில் வெற்றிகண்டு அங்கு அல் உம்மா என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.
தனது முன்னைய பதவிக்காலத்தில் கிழக்கிலங்கையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுடன் அக்கறையான தொடர்பை ஏற்படுத்திய பஷீர் வலி மொகமத் வறுமையில் வாடிய முஸ்லீம் இளைஞர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இலங்கை முஸ்லீம்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி வந்த பஷீர்
தொடர்ந்து லண்டன் தூதரகத்தில் புலனாய்வு நடவடிக்;கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
லண்டனில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை திரட்டுவதில் ஈடுபட்டிருந்த பஷீர் லகஷர் ஈ தொய்பா உட்பட பல இஸ்லாமிய அமைப்புக்கள் பிரித்தானியாவினால் தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமாபாத்துக்கு திருப்பி அழைக்கப்பட்டார்.
பாகிஸ்தானின் ஜிகாத் அமைப்புகளான ரபிலிகி ஜமாத்(ரிஜே), ஹர்கத்-உல்-முஹைதீன்(எச்யுஎம்), ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி (எச்யுஜேஐ) மற்றும் ஜய்ஷ் இ மொகமத் (ஜெம) ஆகியவற்றை விரிபுபடுத்துவதில் ஈடுபட்டிருந்த பஷீர் வலி மொகமத் சிறிலங்காவில் போர்நிறுத்த ஒப்பந்;தம் கைச்சானதும் புதிய தூதுவராக மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பாக்கிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் ராவ் சிகன்டர் இக்பாலுடன் சிறீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச - படம்: ஏ.எஃப்.பி
சிறிலங்காத் தூதுவர் பதவியை பஷீர் வலி ஏற்றக் கொண்ட பின்னர் கிழக்கிலங்கையில் திரைமறைவு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாக இந்திய புலனாய்வுத்தறை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தென்னிந்தியாவின் தகவல் தொழில் நுட்ப நகரமான பெங்களுரில் கடந்த டிசம்பர் 28ல் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்த விசாரணைகள் பல புதிய தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான லக்ஷர் இ தொய்பா உறுப்பினர்களிடமிருந்து பெற்பட்ட தகவல்களின் பிரகாரம் மத்திய கிழக்கில் துபாய், ஓமான், கட்டார் போன்ற நாடுகளுக்கு தொழில் புரியச் செல்லும் தமிழக கேரள மற்றம் ஆந்திர மாநில இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் நடவடிக்கையில் ஐஎஸ்ஐ ஈடுபட்டிருப்பது அறியப்பட்டுள்ளது.
இலங்கையின் முஸ்லீம் சமூகத்தில் மத அமைப்புகளுக்கு ஊடாக ஊடுருவியிருக்கும் பஷீர் வலி முகமது கராச்சியிலுள்ள பைனேரி மதராஸி கல்விக்கூடத்தில் மதக்கல்வி பெறும் தோரணையில் பல நூற்றுகணக்கான கிழக்கிலங்கை இளைஞர்ளை அனுப்பி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தவிர கடவுச்சீட்டுகள் இல்லாத நிலையிலும் பல நூற்றுக்கணக்கான இஸ்லா மிய இளைஞர்கள் பாகிஸ்தானின் தேசிய விமான சேவையான பி ஐ ஏ விமானம் மூலம் கராச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக காஞ்சன் குப்தா என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.
தென் இந்தியாவில் உளவு நடவடிக்கைளின் போது பெறப்படும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கும் பரிமாற்ற தளமாக கட்டுநாயக்க விமானத்தளத்தை ஐஎஸ்ஐ பயன்படுத்துவதாகவும் இந்திய உளவுத்துறை சந்தேகம் கொண்டுள்ளது.
விடுதலைப்புலிகளுடன் போர்புரிய எத்தனிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தை வளைத்துப் போட்டிருக்கும் பாகிஸ்தான உளவுத்துறையின் ஆலோசனையின் பேரிலேயே முஸ்லீம்க ளுக்கென்று தனிப்படைப்பிரிவு ஆரம்பிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பது என்ற போர்வையில் ஜிகாத் அமைப்புகளுக்கு பகிரங்க பயிற்சி வழங்க ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது என்றும் புலனாய்வு அவதானிகள் வாதிடுகிறார்கள்.
அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இன்னமும் ஆப்கானிஸ்தானில் இயங்கிவரும் தலிபான் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவரும் ஐஎஸ்ஐயின் முன்னாள் இயக்குனர் லெப்.ஜெனரல் மொகமத் அகமத் மற்றும் லக்ஷர் இ தொய்பா அமைப்பு உட்பட அனைத்து பாகிஸ்தானிய ஜிகாத் அமைப்புக்களின் விரிவாக்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையவரும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவராக கடமையாற்றுபவருமான பஷீர்;;;;;;; வலி மொகமதுவின் நடவடிக்கைகள் சிறிலங்காவை ஆபத்தான பாதையில் இழுத்துச் செல்கின்றன.
உலக பயங்கரவாதத்தின் மாதிரிகள் என்று பொருள்படும் Pயவவநசளெ ழக புடழடியட வுநசசழசளைஅ என்கிற அமெரிக்க ராஜாங்க அமைச்சு குறிப்பு ஒன்று எவ்வாறு பாகிஸ்தான் உலக பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நெருங்கிய தொடர்புடைய நாடு என்று சுட்டிகாட்டுகின்றதோ அதே போன்று உலக பயங்கரவாதத்திற்கு துணைபோகும் நாடு என்று சிறிலங்காவும் அடையாளம் காணப்படப் போவது நிதர்சனமாகி வருகிறது.
<b>நன்றி: வீரகேசரி</b>
நன்றி: சங்கதி இணையம்
|
|
|
| Mr. Haukland's remarks LTTE are freedom fighters |
|
Posted by: narathar - 04-02-2006, 03:18 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (1)
|
 |
Haukland's parting salvo draws
Rajapaksa ire
Situation Report - by Iqbal Athas
The outgoing Head of Sri Lanka Monitoring Mission (SLMM), retired Norwegian Brigadier Hagrup Haukland, who leads the team of Nordic citizens tasked to monitor the Ceasefire Agreement between the Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had some parting words of wisdom to Sri Lankans.
Just a week ago, he told Defence Secretary Gothabaya Rajapaksa that the Sri Lanka Army cannot win the war with Tiger guerrillas. He opined that unlike Al Qaeda, the LTTE was not a terrorist organisation. They were freedom fighters, he declared.
Those words came from Mr. Haukland (he prefers not to use his military title) who has been associated with the SLMM since its inception in 2002. From that year until 2002 he was Chief of Staff. After a short break from October 2004 to October 2005, he rejoined the SLMM and became its head. This was after succeeding retired Norwegian Major General, the smooth talking Trond Furuhovde.
Even if his remarks do not constitute the official view of the Government of Norway, the peace facilitator that signed a Status of Mission Agreement with Sri Lanka for the establishment and management of the SLMM, the occasion was an official one. Mr Haukland had called on Defence Secretary Rajapaksa on Thursday March 23 afternoon to introduce his successor, retired Swedish Major General Ulf Henricsson. The retired Swedish Army officer became Head of SLMM from yesterday. This was the result of President Rajapaksa Government's request to Norway to only play the role of a peace facilitator and leave ceasefire monitoring activity to another party. Accordingly it was announced during talks on the ceasefire in Geneva in February that Sweden would head the SLMM.
Mr Haukland's controversial remarks drew an angry response from Defence Secretary Rajapaksa. "You have come here to do a job of work. If you want to do that efficiently, be impartial and don't take sides," he shouted back. Thereafter, he went on to give the outgoing and the new SLMM Head some advice. He said they should take time to learn about the culture and history of Sri Lanka. "The Sinhalese and Tamils have lived in unity for several decades. You come here now and say it won't work. Don't talk like that," exhorted Mr. Rajapaksa.
Angered by the remarks he went on to accuse the outgoing SLMM head of serving in jobs in Sri Lanka only to add such stints to their resume and not to achieve objectives. Mr Rajapaksa accused the SLMM of failing to condemn recent Tiger guerrilla attacks on the armed forces field and the police. The remarks drew a prompt reply from Mr. Haukland. He said the SLMM had no evidence. "You cannot attack a person if there is no evidence. I will deal with the person if I can catch them," he pointed out.
Not to be outdone, Mr. Rajapaksa said if the SLMM wanted to do a good job, the whole purpose is lost by the utterances of its head.
Mr. Haukland was also to raise issue over the Ministry of Defence turning down an LTTE request for a helicopter flight to ferry their military leaders from the east to the Wanni. This was for a meeting with their leadership. Defence Secretary Rajapaksa said the request was intended to place the Government in an embarrassing position. He said even armed forces area commanders serving either in the north or the east were not provided helicopter rides when they were invited for conferences in Colombo.
The meeting ended with the new Head of SLMM speaking barely a few words with Mr. Rajapaksa. This was after the two SLMM leaders said they were running late for their next appointment. Even though the matter ended there, within the dovecotes of power the remarks made by Mr. Haukland have raised eyebrows. The matter has also been brought to the attention of President Mahinda Rajapaksa.
With the CFA of February 22, 2002, both the Government of Sri Lanka and the Royal Norwegian Government concluded a Status of Mission Agreement (SOMA). The status, privileges and immunities of the SLMM and its members are defined and set out in this three-page agreement. The LTTE has in writing to the Norwegian Government committed its willingness to fully implement the SOMA.
Article 3 of SOMA accords all members of the SLMM the same immunities and privileges as are accorded to diplomatic agents under the Vienna Convention on Diplomatic Relations of April 18 1961. This includes immunity from "personal arrest or detention and from legal process in respect of all acts, including words spoken or written, performed by them in the course of duty."
However, Article 4 of the SOMA states: "Privileges and immunities are accorded to the SLMM and its members in the interests of efficient and independent fulfilment of the Mission's tasks and not for the personal benefit of the individuals concerned. Without prejudice to their privileges and immunities, the Mission and its members will take all appropriate steps to ensure respect for and compliance with the laws and regulations of Sri Lanka."
Surprisingly, if not shockingly, Mr. Haukland's remarks designating the LTTE as "freedom fighters" run counter to the official policy of the Donor Co-chairs who are supporting the peace process with offers of large scale foreign aid if the peace talks make progress. In the United States, the LTTE is listed as a "terrorist" organisation. In the United Kingdom they are banned and some of the front organisations have had their bank accounts frozen. It was only recently that the European Union imposed a travel ban on LTTE delegations visiting their respective member countries.
In the light of this, the question that begs answer is why a retired Norwegian Army official who had been associated with the SLMM since its inception has chosen to pass judgement on the Army's inability to win a war with Tiger guerrillas. Furthermore, for the Sri Lankan public, his assertion that the LTTE are "not terrorists" but "freedom fighters" also requires an explanation. These words were uttered when he was Head of the SLMM. Hence, did this constitute the official view of the SLMM where Mr. Haukland has been a senior official? Needless to say his controversial remarks do not help the Norwegian Government's credibility or impartiality vis-a-vis the Sri Lankan public.
This is at a time when the Government expects the SLMM to play a greater role in enforcing the Ceasefire Agreement. It is particularly in view of the military build-up by Tiger guerrillas in the north and the east and the outbreak of sporadic incidents. On Wednesday, guerrillas directed gunfire at the Navy's small detachment in Norway Island, off the Trincomalee harbour. They followed it up with mortar fire. The Eastern Naval Area Headquarters in Trincomalee directed an Inshore Patrol Craft (IPC) with an SLMM member on board to move into the area. By the time they reached the spot, the guerrillas had withdrawn.
President Rajapaksa has also been increasingly concerned about reports of LTTE attempts to smuggle in more military supplies. This was after the March 25 incident in the seas south of the Gulf of Mannar where a Navy officer and seven sailors were killed. Soon after the incident he cut short a tour of the south and returned to Colombo. Thereafter, the next day, he cancelled several engagements in the north central province and urged Prime Minister, Ratnasiri Wickremanayake to deputise for him.
http://www.tamillinks.net/archive/2006/new...ep_02042006.htm
|
|
|
| கடைசி கேமிரா |
|
Posted by: Vaanampaadi - 04-02-2006, 02:17 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
கோனிகாவின் கடைசி கேமிரா
மார்ச் மாதத்துடன் தனது மினோல்டா கேமரா உற்பத்தியை நிறுத்திக் கொள்ளப்போவதாக கோனிகா நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் மூன்றாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கோனிகா நிறுவனம், நுõறாண்டுகளாக உற்பத்தி செய்து வரும் கேமராவை இனி உற்பத்தி செய்யப் போவதில்லை என்று அறிவித்திருப்பது போட்டோ, கேமரா தொழில் நுட்ப வளர்ச்சியில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. தவிர, போட்டோகிராபி பிசினசில் இருந்தே மெல்ல மெல்ல விலகிக் கொள்ளப்போவதாகவும் கோனிகா அறிவித்துள்ளது. இனி அந்த நிறுவனம், ஜெராக்ஸ் மெஷின், கம்ப்யூட்டர் பிரிண்டர் மற்றும் மருத்துவக் கருவிகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டிஜிட்டல் கேமராவின் பிரமாண்டமான வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய துறையில் ஒன்று மரபு ரீதியிலான பிலிம் அடிப்படையிலான போட்டோ தொழில் ஆகும். பியூஜி நிறுவனம் போட்டோ பிலிம் உற்பத்தியில் உலகில் முதலாவது இடத்திலும், கோடாக் நிறுவனம் உலகில் இரண்டாவது இடத்திலும் உள்ளன. டிஜிட்டல் கேமரா விற்பனை 2004 2005ல் 67 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருக்கிறது. உலகம் முழுவதும் டிஜிட்டல் கேமராக்களின் விற்பனை 2009ல் 10 கோடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் உலகின் மொத்த டிஜிட்டல் கேமரா விற்பனையில் கேனன் நிறுவனம் 18 சதவிகித மார்க்கெட்டையும், சோனி நிறுவனம் 15 சதவிகிதம் அளவிற்கும், கோடாக் நிறுவனம் 12 சதவிகித அளவிற்கும் தன் வசம் வைத்திருந்தன என்று ஐ.டி.சி., என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
|
|
|
| புலிகளும் பரீட்சித்துப் பார்த்தால் என்ன? |
|
Posted by: Puyal - 04-02-2006, 02:07 PM - Forum: தமிழீழம்
- Replies (20)
|
 |
தமிழீழ மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் சிங்களப்படை தங்கள் ஆயுதங்களை பரீட்சித்துப் பார்த்ததாகக் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்திருக்கின்றார். அதேபோல நாங்களும் எங்களது ஆயுதங்களை சேனநாயக்க சமுத்திரம் மீதோ அல்லது சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீதும் பரீட்சித்துப் பார்க்கலாமா?
|
|
|
| மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா? |
|
Posted by: Vaanampaadi - 04-02-2006, 01:50 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்கள் மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா?
<b>* டென்மார்க்கில் நிலவும் உணர்வுகள் குறித்த ஓர் நேரடி அலசல்</b>
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/d.gif' border='0' alt='user posted image'>
கேலிச் சித்திரம் வெளிவந்த பத்திரிகை பிரதி
கோபன்ஹேகனிலிருந்து ந.சிவேந்திரன்
டென்மார்க்கின் நாளிதழான `ஜூலண்ட் போஸ்ட்' வெளியிட்ட முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தன.
பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா? அப்படியானால், எதை எல்லையாகக் கொள்வது? மத அவதூறு என்பதற்கான வரையறைகள் என்ன? ஒரு மதத்தின் சுயகட்டுப்பாடுகளை அம்மதத்தை அவதூறு செய்யாதவிடத்தும் அம்மதம் சாராத ஏனைய மக்கள் கடைப் பிடிக்க வேண்டுமா? அது அவர்களை கட்டுப்படுத்துமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் இந்த கேலிச்சித்திர சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கேலிச்சித்திரங்கள் தொடர்பில் டென்மார்க் மக்கள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபட்ட கருத்துகளை உடையவர்களாக இருப்பதை டென்மார்க்கில் இருந்த காலப் பகுதியில் உணரக் கூடியதாக இருந்தது.
53 இலட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டதும் இலங்கையின் பரப்பளவின் முக்கால் பங்கைவிடவும் (43,000 சதுரகிலோமீற்றர்) சிறியதும் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலிலுள்ளதுமான டென்மார்க், சர்வதேச உறவுகளைப் பேணுவதற்கு தனது வருமானத்தில் கணிசமான ஒரு பகுதியை செலவிடுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் கேலிச்சித்திரங்கள் கிளப்பிய சர்ச்சை இஸ்லாமிய நாடுகளுடனான அதன் உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளமை டேனிஷ்காரர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை தெளிவாகத் தெரிந்தது. ஆயினும், மிகப்பெரும்பாலான டேனிஷ்காரர்கள் கார்ட்டூன்களை பத்திரிகை வெளியிட்டதை ஒரு குற்றமாகக் கருதவில்லை.
டென்மார்க்கின் அரசியல் கட்சிகள் கூட, இது தொடர்பில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் பத்திரிகைச்சுதந்திரத்தின் படியும் அந்நாட்டு சட்டதிட்டங்களின்படியும் அப்பத்திரிகை முகமது நபி குறித்து கேலிச்சித்திரங்கள் வெளியிட்டதில் தவறில்லை என்று கருதுகின்றன.
டென்மார்க்கில் பேச்சுச் சுதந்திரம் புனிதமானதாகும். எங்களின் கருத்துப்படி ஜூலண்ட் போஸ்ட் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது சட்ட பூர்வமானதாகும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் ஆலோசகர் பிராங் கோஸ்கோம், ஆயினும் பேச்சுச் சுதந்திரம் பொறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
டென்மார்க்கில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும் நிலைப் பாட்டைக் கொண்ட தேசியவாதக் கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி கேலிச்சித்திரங்களை தீவிரமாக ஆதரிக்கின்றது.
"சவுதி அரேபியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ என்ன செய்ய வேண்டும் என்று நாம் கூறுவது கிடையாது. அங்கு சென்றால் நாம் அந்நாட்டு சட்டதிட்டங்களை ஏற்றே செல்ல முடியும். அவ்வாறே எங்கள் நாட்டில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஏனையவர்கள் கூறமுடியாது. எமது நாட்டில் பேச்சுச்சுதந்திரம் மிக அடிப்படையான விடயமாகும். அதனை இஸ்லாமிய அடிப்படைவாதம் அச்சுறுத்துவதற்கு இடமளிக்க முடியாது" என்றார் டேனிஷ் மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் சோரன் சொண் டகார்.
முகமது நபியை வரையக் கூடாது என்ற விதிமுறை முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும். அது ஏனையவர்களை கட்டுப்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கேலிச்சித்திரங்கள் அவமரியாதை செய்பவை என்றும் மத அவதூறானவை என்றும் அதன் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால், அதற்கு எவ்வாறு பதிலளித்திருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குள் வேறுபாடு காணப்படுகின்றது.
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/den.gif' border='0' alt='user posted image'>
டென்மார்க் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் ஆலோசகர் பிராங்கோஸ்கோம்
கேலிச்சித்திரங்களையும் அவற்றுடன் இணைந்து வேறுபடங்களையும் மத்திய கிழக்கிற்கு எடுத்துச் சென்று பிரச்சினையை பெரிது படுதியதாக குற்றம் சாட்டப்படும் இஸ்லாமியமத குருக்களுள் ஒருவரும், டேனிஷ்காரர்களால் பரவலாக "இரட்டை நாக்கு" உடையவர் என்று விமர்சிக்கப்படுபவருமான அபுலபான்,
கருத்துச் சுதந்திரம் உள்ளதென்பதற்காக மதங்களை அவதூறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்களை மதிக்கும் அடிப்படை நாகரிகத்தை ஜூலண்ட் போஸ்ட் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியதுடன் அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையீனமாக நடந்து கொண்டதாக சாடுகின்றார்.
கேலிச்சித்திரங்களை விமர்சிக்கும் சோமாலிய சமூக அமைப்பொன்றின் தலைவரான அப்டிசம் மே-ஏ. டவ்வயே, அப்பிரச்சனை உள்நாட்டிலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றார்.
கேலிச்சித்திரங்கள் முஸ்லிம்களின் மனதை புண்படுத்துபவை. அவ்வாறு வெளியிட்டமை தவறானது, அவற்றை உள்நாட்டிலேயே தீர்த்திருக்க முடியும். முஸ்லிம் மதகுருக்கள் அவற்றை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றது பிழையானதாகும் என்றார் அப்டிசம்மே. அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் பிரச்சனையை அதிகரித்து விட்டார்கள். அவர்களின் செயல் முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மதமாகவும் உலகத்திற்கு காட்ட முனைபவர்களுக்கே சாதகமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/denma.gif' border='0' alt='user posted image'>
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு அபுலபான்
அரசியல் மட்டங்களை தவிர பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.
பேச்சுச்சுதந்திரம் முக்கியமான விடயம். ஆனால், அது பொறுப்புணர்வை கொண்டிருக்கவேண்டும். ஜூலண்ட் போஸ்ட் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்கிறார் ஊடகவியல் ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனமான டானிக்கொம்மின் பணிப்பாளர்களில் ஒருவரான பியர் ஒஸ்டெலண்ட்.
இக்கருத்தையே பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தவரும் அதே நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளருமான நீனா வேன்பேர்க்கும் தெரிவிக்கின்றார்.
"ஊடக சுதந்திரம் என்பது பொறுப்புணர்வையும் கொண்டதாகும்" என்றார் நீனா. கேலிச்சித்திரங்களை வெளியிட்டமை மட்டரகமான ரசனையை காட்டுவதாக குடியேற்றவாசிகளுக்கு டேனிஷ் மொழி கற்பிக்கும் 62 வயதான டேனிஷ் பெண்மணி ஒருவர் கூறினார். அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/denmark-.gif' border='0' alt='user posted image'>
டேனிஷ் மக்கள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சோரன் சொண்டகார்
"இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிப்பது சற்று சிரமமான விடயமாகும். கேலிச்சித்திரங்கள் வெளியிட்டமை மட்டரகமான ரசனை (Bad taste) யாகும். அவர்கள் இவ்வாறு செய்திருக்கக் கூடாது. மறுபுறமாக, ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட நாடு டென்மார்க் ஆகும். அதற்கு பேச்சுச் சுதந்திரமே அடிப்படையானதாகும். எங்கள் நாட்டு சட்டங்களின்படி அரசாங்கத்தால் ஊடகங்களை எதுவும் செய்ய முடியாது" என்றார் அந்த ஆசிரியை.
இது குறித்து முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
"அந்த நாடுகளில் மக்களின் விருப்பத்திற்கு மாறான சர்வாதிகார ஆட்சிகள் நடைபெறுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபத்தினை இவ்வாறு வேறு பிரச்சினைகளினூடாக மக்கள் வெளிப்படுத்துகின்றார்கள்" என்றார்.
கேலிச்சித்திரங்கள் குறித்து சாதாரண முஸ்லிம் வெறுப்படைந்திருந்தாலும் இப்பிரச்சினையை பெரிதாக்குவதை விரும்பவில்லை. துருக்கி, ஈராக், பலஸ்தீனம், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் டென்மார்க்கில் வசித்து வருகின்றனர்.
கேலிச்சித்திரங்கள் தவறானவை. ஆனால், அவற்றை வைத்து பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு செல்வது இங்குள்ள எம்மைப் போன்ற சிறுபான்மை சமூகத்திற்கு உகந்ததல்ல. செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வேகமாக வளர்ந்து வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள் அதை அதிகரித்துவிடும் என்று அச்சமாக உள்ளது என்றார் கோபன் ஹேக்கினில் பல்பொருள் அங்காடியொன் றை வைத்திருக்கும் ஈராக்கியரான அப்துல் சதாத் (48).
கேலிச்சித்திரங்கள் மோசமான ஒரு விடயமாகும். பேச்சுச்சுதந்திரம் ஏனைய மதங்களை அவமரியாதை செய்வதை உள்ளடக்கவில்லை என்கிறார் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது உயர்தர மாணவனான செம் வார்தார்.
பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் டேனிஷ் மாணவரான மோசஸ் சற்று மாறு பட்ட கருத்தைத் தெரிவித்தார்.
"பூமியைச் சூரியன் சுற்றி வரவில்லை சூரியனை பூமி சுற்றி வருகின்றதென்றும் பூமி தட்டை வடிவமானதல்ல பூமி உருண்டையானதென்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து தெரிவித்தபொழுது கிறிஸ்தவ திருச்சபை அவர்களை துன்புறுத்தியது. சிலர் கொல்லப்பட்டனர். ஆயினும், அன்று பரவலாக சரியென்று நம்பப்பட்ட இவ்வாறான மத கருத்துகளுக்கு எதிராக துணிந்து விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தபடியால்தான் மனித குலம் இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. அன்று அக் கருத்துகள் மதத்திற்கு அவதூறானவை எனக் கருதி தெரிவிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் நாம் இந்த முன்னேற்றத்தை கண்டிருக்கமாட்டோம். எனவே, மதங்களை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் குறிப்பாக' ஊடகங்களுக்கு முக்கியமானதாகும் என்றார் அவர்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 20 வயதான தமிழ் மாணவி ஆரபி,
"பத்திரிகைச் சுதந்திரம் முக்கியமானது. ஆயினும், பிரச்சினைகளை தீர்ப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதற்கு அந்தச் சுதந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. சர்ச்சையென்றால் உலக சமூகத்திற்கு ஏதாவது நன்மை விளையுமாயின், அதனை சரியென்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் அவ்வாறான நன்மை எதுவும் விளைவாகவில்லை முரண்பாடுகளும் பகைமையுணர்வுமே அதிகரித்துள்ளன. ஆயினும். இந்த சம்பவத்திற்கு முஸ்லிம் நாடுகளில் வன்முறையான பிரதிபலிப்பு காட்டப்பட்டது மிகவும் தவறான விடயமாகும்" என்றார்.
எது எவ்வாறு இருப்பினும் இந்தச் சர்ச்சை ஊடகத்துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது.
[b]கேலிச் சித்திர சர்ச்சை வளர்ந்து வந்த கதை
* 30 செப்டெம்பர் 2005 :- முகமது நபி குறித்த 12 கேலிச் சித்திரங்களை ஜூலண்ட் போஸ்ட் வெளியிடுகின்றது.
* 9 ஒக்டோபர் 2005:- டென்மார்க்கின் இஸ்லாமிய நம்பிக்கை சமூகம் என்கின்ற அமைப்பின் பேச்சாளர் ஜூலண்ட் போஸ்ட் மன்னிப்புக்கோர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
* 14 ஒக்டோபர் 2005:- கோபன் ஹேகனில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.
* 19 ஒக்டோபர் 2005 :- பதினொரு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் கேலிச் சித்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டென்மார்க் பிரதமர் அன்டோர்ஸ் -ஃபோக் ராஸ்முஸ்ஸனைச் சந்திக்க விரும்புகின்றனர். "எங்களது ஜனநாயகம் செயற்படுவது இவ்வாறல்ல" என்று கூறி ராஸ்முஸ்ஸன் அவர்களை சந்திக்க மறுக்கின்றார்.
* நவம்பர் - டிசம்பர் 2005:- டென்மார்க் முஸ்லிம் மதகுருக்கள் குழுவொன்று மத்திய கிழக்கிற்கு சென்று அங்குள்ள மதத் தலைவர்களை சந்திக்கின்றது. அவர்கள் ஜூலண்ட் போஸ்ட் வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களுடன் வேறு சில படங்களையும் இணைத்து அங்கு வெளிப்படுத்துகின்றனர்.சர்ச்சை அதிகரித்து வந்த பொழுதில் இவ்வாண்டு 50 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் கேலிச் சித்திரங்கள் அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ மீள் பிரசுரம் செய்தன.
சர்ச்சை வலுவடைந்த பொழுது மன்னிப்புக் கோருமாறு டென்மார்க் பிரதமர் கேட்கப்பட்டார். இந்த வேண்டுகோளை நிராகரித்த ராஸ்முஸ்ஸன் டென்மார்க் நாளிதழ் ஒன்றிற்காக அரசாங்கம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார்.
இதன் விளைவாக லிபியாவும் சவுதி அரேபியாவும் டென்மார்க்கிலுள்ள தமது தூதுவர்களை திருப்பி அழைத்துக் கொண்டன. டேனிஷ் பொருட்களை பகிஷ்கரிக்கும் செயற்பாடு பல முஸ்லிம் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. சிரியாவிலும் லெபனானிலும் டென்மார்க் தூதரகங்கள் தாக்கப்பட்டன.
பிரச்சினையைத் தணிக்கும் பொருட்டு ராஸ்முஸ்ஸன் அல் அராபியா தொலைக்காட்சியில் தோன்றி கேலிச் சித்திரங்களால் ஏற்பட்ட தாக்கத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.
டேனிஷ் சட்டங்களின் படி ஊடகங்கள் குறித்து தனக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்று விளக்கமளித்த அவர், பல தடவைகள் தான் பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவாளித்துள்ளதாகவும், ஆனால் கேலிச்சித்திரங்களின் தகவலை தான் ஏற்றுக் கொள்ள வில்லை என்று குறிப்பிட்டார்.
சர்ச்சை தற்பொழுது தீவிரம் குறைவடைந்துள்ள போதிலும் ஊடகத்துறையின் செயற்பாடு குறித்த ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளதுடன் இது டென்மார்க் சமூகங்களிடையே உள்ள பிளவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.
[b]ஜுலண்ட் போஸ்டின் வாதங்கள்...
முகமது நபி குறித்த 12 கேலிச் சித்திரங்களை பிரசுரித்த டேனிஷ் மொழி நாளிதழான "ஜூலண்ட் போஸ்ட்" இன்று உலக பிரசித்தி பெற்ற ஊடகங்களில் ஒன்றாகி விட்டது. "காலைச் செயதித்தாள் ஜூலண்ட் போஸ்ட்" என்று பொருள்படும்.`Morgenavisen Jyllands Posten" என்ற இந்த டேனிஷ் நாளிதழ் டென்மார்க்கில் அதிகம் விற்பனையாகும் (150,000 பிரதிகள்) பத்திரிகையாகும்.
கேலிச் சித்திரங்களை பிரசுரித்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை கிளப்பிய ஜூலண்ட் போஸ்ட் சர்ச்சை வலுவடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்தது.ஆனால் கேலிச் சித்திரங்களை வெளியிடுவதற்கான தனது உரிமையை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. டென்மார்க் பத்திரிகைகள் எதைப் பிரசுரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் உத்தரவிட முடியாது என்று அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.
முகமது நபி குறித்த சிறுவர் புத்தகமொன்றை எழுதிய டென்மார்க் எழுத்தாளர் காரே புளுட்சென் அதற்கு சித்திரங்கள் வரைவதற்கு ஓவியரைத் தேடுவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்தே இவ்வாறான கேலிச் சித்திரங்களை வெளியிடும் எண்ணம் ஏற்பட்டதாக ஜூலண்ட் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.
முகமது நபியின் உருவத்தை வரைவதை தடுக்கும் இஸ்லாமிய கோட்பாடு முஸ்லிம்களை மட்டும் கட்டுப்படுத்துமே தவிர ஏனையவர்களை கட்டுப்படுத்தாது என்ற நிலையை தாம் எடுத்ததாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
"இஸ்லாம் தொடர்பில் எப்படி சுய தணிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை துல்லியமாக கண்டறியவே கேலிச் சித்திரங்களை வரைந்து தருமாறு தாம் கேலிச் சித்திரம் வரைபவர்களை கேட்டுக் கொண்டதாக பத்திரிகை கூறுகின்றது.
கிறிஸ்தவம், பௌத்தம், இந்து மற்றும் ஏனைய மதங்களை அணுகுவது போன்றே இஸ்லாத்தையும் நாங்கள் அணுகியுள்ளோம். இதன் மூலம் முஸ்லிம்களை நாங்கள் எமது சமூகத்தின் ஓரங்கமாக இணைக்க முயற்சிக்கின்றோம். அவர்களை அந்நியர்களாக கருதவில்லை. கேலிச் சித்திரங்கள் அவர்களை எமது சமூகத்தினுள் உள்வாங்குவதற்கானவை என்று கேலிச் சித்திரங்களை வெளியிடுவதற்கு அனுமதியளித்த ஜூலண்ட் போஸ்ட்டின் கலாசார ஆசிரியர் பிலெமிஸ் ரோஸ் தமது இணையப் பதிப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
|
|
|
| அன்பழகனுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா கருணாநிதி????? |
|
Posted by: Nellaiyan - 04-02-2006, 01:05 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (78)
|
 |
நெல்லை கண்ணன்... முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர். இலக்கியமாகட்டும் அரசியலாகட்டும் குடும்ப உறவுகளாகட்டும் மேடையிலேறிப் பேச ஆரம்பித்தால் குற்றால அருவியென ஜிலுஜிலு தமிழ் துள்ளி விழும். நடு நடுவே நகைச்சுவைப் பட்டாசுகள்... காங்கிரஸ்காரரான இவர் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அதன்பிறகு, தி.மு.க. கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. மேடைகளில் ஏறி பிரசாரம் செய்யப் போகிறார். இது பலரையும் இவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இவரைச் சந்தித்தபோது, பீரங்கியாய் வெடித்தார்.
"அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்குத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்கிற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அதனால்தான், அவர் தமிழ்நாடு குறித்து எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தி.மு.க தலைவர் கருணாநிதியிடம் ஆலோசனை கேட்கிறார்.
மத்திய அமைச்சராக இருக்கின்ற தமிழகத்தைச் சேர்ந்த ஈ.வி.கே எஸ். இளங்கோவன், ஜி.கே.வாசன், மணி சங்கர் ஐயர் _ இவர்களுக்கெல்லாம் இது குறித்து கொஞ்சம்கூட மானமோ, வெட்கமோ, சூடு சொரணையோ இல்லை. இவர்களுக்கு மந்திரி பதவி மட்டும் இருந்தால் போதும்.
நண்பர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தந்தை பெரியாரின் பேரன் என்று சொல்லுவார். ஆனால், இவர் பெரியாரின் நேரடி பேரன் இல்லை. பெரியாரின் தம்பி பேரன்தான் இவர். இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான உடன் தமிழ்நாடு முழுவதும் அவரோடு நான்தான் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது சோனியாகாந்தியை கோவைக்கு அழைத்து வந்தோம். கூட்டத்திற்கான அத்தனை செலவையும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு ஏற்றுக் கொண்டார். இளங்கோவனின் செலவுக்கும் அவரே பணம் தந்தார்.
அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாளே, தமிழ்நாடு முழுக்க பயணம் செய்த நான், ஒரு சாலை விபத்தில் உயிருக்குப் போராடிய நிலையில் சேலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இளங்கோவன் என்னை வந்து பார்க்கவில்லை. ஆனால், பெரியவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லை என்பதால் அவரைப் போய் பார்த்தார்.
பெரியவர் கருணாநிதியின் தயவு அவருக்குத் தேவையாக இருந்தது. காங்கிரஸில் நாடாளுமன்ற சீட் வாங்குவதற்கும், மத்திய அமைச்சராவதற்கும் அவர் கருணாநிதியை பயன்படுத்திக் கொண்டார். மத்திய அமைச்சரானவுடன், கருணாநிதியை எதிர்க்கிற வீரனாகத் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைமை கூப்பிட்டுச் சொன்னவுடன் நேராக கோபாலபுரம் சென்று மன்னிப்பு கேட்டு பல்டியடித்து மத்திய மந்திரி பதவியை காப்பாற்றிக் கொண்டார்.
பெரியார் எதைச் சொன்னாலும் கடைசி வரை அதில் உறுதியாக இருப்பார். ஆனால், தினம் ஒரு கருத்து முடிவெடுக்கும் இவர் எப்படி பெரியாரின் பேரனாக இருக்க முடியும்?
ஜி.கே. வாசன் பெரிய வீட்டுப் பிள்ளை. எந்த உழைப்பும் இல்லாமல் மூப்பனாரின் மகன் என்பதனாலேயே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகி, மாநிலங்களவை உறுப்பினராகி, இன்றைக்கு மத்திய அமைச்சராகியிருக்கிறார்.
என்னைப் போல் அனுபவம் கொண்டவர்களும் கட்சியில், மூத்த சேவை செய்தவர்களும், அவரிடம் போய் கை கட்டி நிற்க வேண்டும் என்ற பண்ணையார் மனோபாவம் இன்னும் இவரிடம் இருக்கிறது.
இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்குப் பணமே வாங்காமல் விண்ணப்பம் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த விண்ணப்பங்கள் எதுவுமே டெல்லியில் செல்லாது என்பது அவர்களுக்குத் தெரியும். தலைவர்களுக்கும், அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் உள்ளேயே அந்த இடங்கள் பங்கிடப்பட்டு விடும். இலவச விண்ணப்பம் கொடுத்த ஏழை தொண்டர்கள் அத்தனை பேரும் வழக்கம் போல் ஏமாளிகளாகி தெருவில் திரிவார்கள்.
காங்கிரஸ் வேட்பாளராக ஒரே தகுதி இந்தக் கட்சி மாறி தலைவர்களின் எடுபிடியாக இருக்கவேண்டும். அல்லது கோடீஸ்வரர்களின் மகனாக இருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் டெல்லித் தலைவர்களைக் குளிப்பாட்டுகிற வித்தை தெரிந்திருக்க வேண்டும்.
சோனியாகாந்தி பிரதம மந்திரி பதவியைத் தியாகம் செய்தார் என்று சொல்லுகின்ற இவர்கள் குறைந்த பட்சம் தி.மு.க. போட்டு இருக்கிற பிச்சையான 48 தொகுதிகளிலும் புதிய தொண்டர்களை நிறுத்துவார்களா? கருணாநிதியைவிட மூத்த திராவிட இயக்கத் தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடைசி காலத்தில் ஒருமுறை முதலமைச்சராகட்டும் என்று, கருணாநிதி முதல்வர் பதவியை விட்டுத் தருவாரா? சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலேயே இன்னும் பத்து வருடம் பயிற்சி வேண்டும் என்கிறார்கள். ஆனால், கருணாநிதியின் பேரன் தயாநிதியும், ராமதாஸின் மகன் அன்பு மணியும், மூப்பனாரின் மகன் வாசனும் எடுத்தவுடனேயே நேரடியாக மத்திய அமைச்சராகி விட்டார்களே...
கருணாநிதி முரசொலியில் எழுதுகிறார். மலை உச்சியில் ஏறவேண்டுமென்றால் முயன்று, முயன்று, ஏற வேண்டுமாம். அது தொண்டர்களுக்குதான். தயாநிதி ஹெலிகாப்டரில் இமயமலையில் இறங்கிவிட்டார்.
கோபால்சாமி பெற்ற தாயின் சொல்லை தட்டிவிட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டுகிறார். தாய் என்று பேசுகிற பெரியவர் கருணாநிதியின் கட்சிக்காரர்கள், அன்னை இந்திரா காந்தியை என்னவெல்லாம் பேசியிருக்கிறார்கள் என்று நினைக்கிறபோது என் நெஞ்சம் பதறுகிறது. விதவைக்கு மறு வாழ்வுத் திட்டம் கொண்டு வந்திருக்கிறார் கலைஞர். இந்திராகாந்தி விண்ணப்பித்தால் உதவுகிறோம் என்று பேசியவர்கள்தானே இந்த தி.மு.க.காரர்கள்.
1967_68_ல் நான் சாமான்யன் என்று சொன்ன கருணாநிதி, இன்று சொல்லவில்லையே... ஏன்? ஆசியாவில் 5வது பணக்கார குடும்பம் அவர் குடும்பம். இன்று 18 தொலைக்காட்சிகளின் வருட வருமானம் பல கோடி. எல்லா தொழிலிலும் தங்கள் குடும்பமே வர வேண்டும் என்று கருணாநிதியும் அவருடைய பேரன்களும் நினைக்கிறார்கள். தமிழின் பேராலும், தமிழ் இனத்தின் பேராலும், தமிழ்நாட்டின் நெடுங்காலமாக நடந்து வருகிற ஒரே குடும்பத்தின் கொள்ளையை நல்ல தமிழனாக, தமிழறிஞனாக, நான் எதிர்க்க வேண்டும் என்று முழுமையாக முடிவு எடுத்திருப்பதால் கருணாநிதியை களத்தில் சந்திப்பேன்." தனது தி.மு.க. கூட்டணி எதிர்ப்புப் பிரசாரத்தின் முன்னோட்டம் போல பேசி முடித்தார் நெல்லை கண்ணன்.
_ திருவேங்கிமலை சரவணன்
படம்: ஆர். சண்முகம்
http://www.kumudam.com/kumudam/mainpage.php
|
|
|
| "உடல் தோற்றத்தை வைத்தே, நோயின் அறிகுறிகள்" |
|
Posted by: Nellaiyan - 04-02-2006, 01:01 PM - Forum: மருத்துவம்
- Replies (2)
|
 |
கண்கள்
என்ன அறிகுறி? :
கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
என்ன அறிகுறி? :
கண் இமைகளில் வலி
என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
என்ன அறிகுறி? :
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்
என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
என்ன அறிகுறி? :
கண்கள் உலர்ந்து போவது.
என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
சருமம்
என்ன அறிகுறி? :
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்
என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
என்ன அறிகுறி? :
முகம் வீக்கமாக இருப்பது
என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி Êஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
என்ன அறிகுறி? :
தோல் இளம் மஞ்சளாக மாறுவது
என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம்
என்ன அறிகுறி? :
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்
என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
என்ன அறிகுறி? :
பாதம் மட்டும் மரத்துப் போதல்
என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
என்ன அறிகுறி? :
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்
என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
கைகள்
என்ன அறிகுறி? :
சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
என்ன அறிகுறி? :
வெளுத்த நகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
என்ன அறிகுறி? :
விரல் முட்டிகளில் வலி
என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
என்ன அறிகுறி? :
நகங்களில் குழி விழுதல்
என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்
என்ன அறிகுறி? :
ஈறுகளில் இரத்தம் வடிதல்.
என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
என்ன அறிகுறி? :
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: 'மல்டி_விட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
என்ன அறிகுறி? :
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.
பா. இந்திரா பிரியதர்ஷிணி
http://www.kumudam.com/sinegithi/mainpage.php
|
|
|
| ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில் |
|
Posted by: Vaanampaadi - 04-02-2006, 12:55 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்.
பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது.
ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண்களில் பாதிப்பேற்பட்ட நிலையில் வையித்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
குறிப்பிட்ட மாணவியின் குடும்பம் கஸ்டமான நிலமையில் உள்ள குடும்பம் என்பதும் இத் துடன் குறிப்பிட்ட மாணவியின் இருண்டு கண்களும் வீக்கம் அடைந்து பார்க்க முடியாத நிலமையில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வையித்திய சாலை வட்டாரங்கள் குறிப்பிட்ட மாணவியின் கண்கள் பாதிப்படைந்துள்ளனவா அல்லது நிரந்தரமாக பாதிப்படைந்துள்ளனவா என்பதனை இன்னும் தெளிவாக குறிப்பிடவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்மாவட்டத்தில் பல சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் இடம் பெறுகின்ற போதிலும் சிறுவர் அமைப்புக்கள் என்று கூறிக் கொள்கின்ற பல அரச உத்தியோகத்தர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அமைப்புக்கள இருக்கின்ற போதிலும் இவைகள் எல்லாம் பெயரவிளவில் தமது சொந்த நன்மையை மையப்படுத்தி செயல்படுகின்றனவே தவிர உண்மையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லையென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் குறிப்பாக பல விடயங்கள் வெளியில் வரவிடாமலே மறைத்து வருகின்றமை சம்பந்தமாக கூறுகின்ற கருத்து பாதிக்கப்படவரின் எதிர்காலம் எனக்கூறி பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்படவராகவே இருக்க காரணமாக இருந்தவரை பாதுகாப்பதற்காகவே இத்தகைய போலி காரணங்களை கூறிவருகின்றார்கள் எனவும் பாதிக்கப்பட்ட பலர் கூறியுள்ளமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
|
|
|
| வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதி |
|
Posted by: kavithaa - 04-02-2006, 11:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை
* `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!'
* தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது'
வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்....
ஆர்.பி
" வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...."
இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். தமிழகத்தில் வெளியான பல தரமான, புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி, தனக்கெனத் தனியான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு புகழ்தேடிக் கொடுத்த `முள்ளும் மலரும்' மற்றும் ` உதிரிப்பூக்கள்' என்பன இவரது திறமைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள். ரஜினிகாந்தை உருவாக்கியவர் கே.பாலச்சந்தர் என்று சொன்னார், ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்குக் காரண மாகவிருந்தவர்களில் மகேந்திரன் முக்கியமானவர் எனக்குறிப்பிடலாம்.
இவ்வளவு பிரபலமான ஒரு இயக்குநர் இதுவரையில் திரைக்கு வராத தமிழீழ திரைப்படம் பற்றி இவ்வாறு கூறியிருப்பதற்கு காரணம் தான் என்ன?
நிச்சயமாக காரணம் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் வன்னி சென்ற மகேந்திரன், இங்கு விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவினரால் தயாரிக்கப்படும் குறும்படங்கள் மற்றும் வீடியோ கமராக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படங்களைப் பார்வையிட்டதுடன், நிதர்சனம் குறும்படப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சில மாதகாலப் விசேட பயிற்சி வகுப்புகளையும் நடத்திய பின்னர் திரும்பியிருக்கின்றார். இதற்கும் மேலாக கிளிநொச்சிலுள்ள ஆதவன் திரைப்படக் கல்லூரிக்காக `நடிப்பு என்பது.. என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளார். நடிப்புத்துறைக்கு வருவோருக்கான சிறந்ததொரு கைநூலாக இதுவே உள்ளது.
இந்த நூலை எழுதியமைக்கான காரணத்தை மகேந்திரன் பின்வருமாறு விளக்குகின்றார்.
" ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிர் முகத்தோடு, வேறு வேறு விசித்திரமான கதாபாத்திரங்களாக உலவிவரும் மண்ணைச் சார்ந்தவர்களுக்கு நடிப்புப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் ஓர் முகம், எல்லோரும் ஓர் குணம் என்றிருப்பவர்களுக்குத் திரையில் பொய் முகம் காட்டி நடிக்க முடியுமா?
இப்படித்தான் தமிழீழம் வருமுன் எல்லோரும் நினைப்பார்கள். நானும் அப்படியே. இங்கே வந்த பிறகு இங்குள்ள கலைஞர்கள் யாவரும் நுண் கலைகள் அனைத்திலும் வல்லவர்களாகத் நிகழ்ந்திடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையறிந்து வியப்படைந்தேன்.
எதனையும் முழு ஈடுபாட்டுடன், ஒழுக்கத்துடன் கற்றுக் கொள்ளும் வேகமும் விவேகமும் இங்குள்ள கலைஞர்களிடம் பொதிந்துள்ளது. ` நல்ல கலைஞர்கள் பெரும்பாலும் குடத்திலிட்ட விளக்காய் இருப்பார்கள். நாம் அந்த விளக்கை எடுத்து வெளியில் வைத்தால் போதும். அது தானாகச் சுடர்விட்டு எரியும்' இவ்வாறு பெருமைக்குரிய எம்.ஜி.ஆர். கூறுவார். இங்கே அப்படிப்பட்ட விளக்குகளை வெளியிலெடுத்து வைத்து, அவற்றை பிரகாசமாய் எரியவரும் உன்னதமான கலைப்பணி முழுவீச்சில் நடைபெறுகின்றது. இது தான் உயர்வான தொலைநோக்குப் பார்வை. இங்கு என்னைச் சுற்றியுள்ளவர்களின் உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டபோது, அவர்களுக்காக எழுத ஆசைப்பட்டேன்."
இவ்வாறு தான் ` நடிப்பு என்பது...' என்ற நூலை எழுதியமைக்கான காரணத்தை விளக்கும் மகேந்திரன், மற்றொரு முக்கிய விடயத்தையும் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"... பொய்யாக வாழத் தெரியாத மக்கள். பொய் முகத்தோடு நடந்து கொள்ளத் தெரியாத மக்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத மக்கள், திரைபடங்களில் பொய் முகத்தைக்காட்டி நடிப்பது எங்கணம் சாத்தியமாகும்?
இந்த என்னுடைய தொடக்க நிலைச் சந்தேகம் பின்னர் கலைந்து போய்விட்டது. அவர்களால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்."
இவ்வாறு குறிப்பிடும் அவர் அதன் காரணமாகவே `.. வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கைதட்டுபவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன்" என்ற எதிர்பார்ப்பை நம்பிக்கையை வெளியிடுகின்றார்!
அது சரி, அப்படிச் சொல்லக் கூடியளவுக்கு திரைப்படத்துறையில் இவர்கள் எதனைத்தான் சாதித்துள்ளார்கள்?
விடுதலைப் புலிகள் அமைப்பின் ` நிதர்சனம்' மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் கடந்த வாரத்தில் பார்த்தோம், ஒன்று, அவர்களது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி. அது தொடர்பான விபரங்களைக் கடந்தவாரத்தில் பார்த்தேம். இரண்டாவது, நிதர்சனத்தின் கீழ் வருகின்ற திரைப்படப் பிரிவு. இந்தப் பிரிவினர் ` சினிமா' என்ற ஊடகம் மக்கள் மத்தியில் கருத்துகளைச் கொண்டு செல்வதில் பெறக் கூடிய முக்கியத்துவத்தைச் சரியான முறையில் இனங்கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. மூன்றாவது - விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்களை வெளியிடும் தர்மேந்திரா கலையகம். பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டுக்கள் இந்தப் பிரிவினராலேயே வெளியிடப்படுகின்றன. இந்த மூன்றும் தான் நிதர்சனத்தின் பிரதான பணியாக இருக்கின்றது எனக் கூறுகின்றார் அதன் பொறுப்பாளர் சேரலாதன்.
நிதர்சனம் இவ்வருடம் 20 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முழு அளவிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியிலும் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளனர். நிதர்சனத்தின் திரைப்படத்துறை குறும்படங்களிலிருந்தே வளர்ச்சியடைத் தொடங்கியது.
` நிதர்சனம்' பிரிவினரால் இதுவரைகாலமும் சுமார் 65 க்கு மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. "அதிலும் குறிப்பாக தமிழக இயக்குநர் மகேந்திரன் வந்து இங்கு பயிற்சி வகுப்புக்கள் பயிற்சிப்பட்டறைகளை நடத்திய பின்னர் குறும்படத்துறையின் வளர்ச்சி என்பது பிரமாதமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கின்றது" என நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன் கடந்த வாரம் எம்மிடம் கூறினார்.
"அதேபோல தொழில்நுட்ப ரீதியிலும், பிரதிகளைத் தயாரிப்பதிலும் மட்டுமன்றி குறும்படத்துறையில் பல்வேறு விடயங்களும் பல முன்னேற்றங்களை மகேந்திரனுடைய வருகைக்குப் பின்னர் தான் காணக்கூடியதாகவிருந்தது" எனவும் கூறும் சேரலாதன், குறும்பட உருவாக்கத்தில் மாமனிதர் ஞானரதனுடைய பங்களிப்பையும் முக்கியமாககக் குறிப்பிடத் தவறிவில்லை. " தமிழீழ குறும்படத்துறையை நோக்கும் போது அதற்குரிய தோற்றுவாயாக இருக்கக் கூடியவர் மாமனிதர் ஞானரதன் தான் என நிச்சயமாகச் சொல்லலாம்" எனக் குறிப்பிடுகின்றார் சேரலாதன் . " அவருடைய வழிகாட்டலின் பயனாகவும், இப்போது இயக்குநர் மகேந்திரனுடைய பயிற்சித்திட்டங்களினுடாகவும் உலகத்தரம் வாய்ந்த குறும்படங்களின் வரிசைக்கு எங்களுடைய குறுப்படங்கள் உயர்ந்துள்ளன" என்கின்றார் சேரலாதன்.
2006 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிக்கு நிதர்சனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்ற தகவலையும் அறிந்துகொள்ள முடிந்தது. சுவிட்சர்லாந்து, லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள குறும்பட விழாக்களுக்கே இவை அனுப்பப்பட்டுள்ளன. நிதர்சனம் பிரிவினரால் தயாரிக்கப்படும் குறும்படங்கள் பெரும்பாலும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்துக்கு உட்பட்ட வையாகவே உள்ளன.
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் வாராந்தம் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும் அதேவேளையில், நிதர்சனம் தயாரித்த குறும்படங்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்புள்ளதைக் காணமுடியும்.
குறும்படங்கள் என்பதற்கப்பால், முழு அளவிலான வீடியோ படங்கள் சிலவும் வன்னி மண்ணில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை வீடியோ கமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களாகவே உள்ளன. " தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கலையூடகப் பலம் பெறவைப்பதிலும் தமிழீழ மக்களின் வாழ்வைப் பேசுவதிலும், தமிழில் நல்ல சினிமாவை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழீழத்தின் சினிமா முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" எனக் கூறும் ஆதவன் திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த சி. சேரன் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் கவனத்துக்குரியவை.
"... தரமான சினிமாவை உருவாக்க வேண்டுமென்ற கனவும் ஆர்வமும் முயற்சிகளும் இருக்கின்றனவே தவிர, அதற்கான போதிய வசதிகள் இல்லை. சினிமா துறையில் அறிவும், அனுபவமும் தேர்ச்சியும் எங்களுக்கில்லை. ஆனால், தமிழீழத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்த சினிமா முயற்சிகள் நிதானமான வளர்ச்சியை நோக்கியதாக இருக்கின்றது. இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. முழு நீளத் திரைப்படங்களாகவும் குறும்படங்களாகவும் நிறையப் படங்கள் கடந்த பதினைந்தாண்டுகளில் உருவாகியுள்ளன. பலர் இத்துறையில் ஆர்வத்தோடும் முழுமையாகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். தொடர்ந்த இடைவிடாத யுத்தச் சூழலில்தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது என்பதைக் கவனிக்கவேண்டும். இதற்கெல்லாம் காரணம் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுடைய இத்துறை மீதான அக்கறையே...."
இவ்வாறு குறிப்பிடும் சேரன், " தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும் , எமது விடுதலைப் போராட்டத்தையும் பேசவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள கரிசனை மிகப்பெரியதும் அத்துடன் தமிழீழத்தின் சினிமாவை உலகத் தரத்துக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கும் எமது திரைப்படத் துறையின் வளர்ச்சிக்குக் காரணமாகியது" எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வகையில் திரைப்படத்துறை வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தை 20 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிதிர்சனம் இப்போது தாண்டப்போகின்றது, அவர்களால் சுமார் ஐந்து கோடி ரூபா செலவிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முழு அளவிலான திரைப்படம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயம். இதுவரையில் வீடியோ கமராக்களைப் பயன்படுத்தியே குறும்படங்களையும், முழு நீளத் திரைப்படங்களையும் தயாரித்த நிதர்சனம் பிரிவினர் இப்போது திரைப்படத்துக்கான அதி நவீன கமராவைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கின்றார்கள்! இதற்காக இவர்கள் பயன்படுத்தும் கமரா அதி நவீனமானதாகும், தெற்காசியாவிலேயே இவ்வாறான இரண்டு கமராக்கள் மட்டுமேயுள்ளன.
முழுக்கமுழுக்க வன்னியிலேயே தயாரிக்கப்படும் இப்படத்தின் தொடக்கவிழாவில் தமிழகத்தின், புகழ்பெற்ற தமிழ்த் தேசியத்தில் பற்றுக்கொண்ட இயக்குநர் ஒருவர் கலந்து கொண்டார். மற்றொரு இளம் இயக்குநர்தான் இதனை இயக்குகின்றார். கதாநாயகன், கதாநாயகியாக நடிப்பவர்களும் தமிழகத்திலிருந்து தான் வந்துள்ளார்கள்.
அவர்கள் யார் ? அங்கு தயாராகும் திரைப்படத்தின் கதை என்ன என்ற விபரங்களுடன் அடுத்த ஞாயிறு.......
|
|
|
|