Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 460 online users.
» 0 Member(s) | 458 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,799
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,497
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,793
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,340
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,757
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,851
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,736
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 39,473
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,122
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,352

 
  காரைநகர் கடற்பரப்பில் சண்டைப்பயிற்சியில்
Posted by: SANKILIYAN - 04-02-2006, 10:05 AM - Forum: தமிழீழம் - No Replies

யாழ். காரைநகர் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் கடந்த சில நாட்களாக சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சண்டைப்பயிற்சிகளால் காரைநகர் பகுதி வாழ் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. டோராப் படகு மற்றும் நீருந்து விசைப் படகுகளில் குழுக்கள் குழுக்களாக கடற்பரப்பில் நடமாடும் சிறிலங்கா கடற்படையினரே இவ்வாறான சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது காரைநகர் கடற்பரப்பில் பாரிய குண்டுச் சத்தங்களும், துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும், சரமாரியாகக் கேட்பதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Print this item

  ACT - AID & CARE FOR TAMILS
Posted by: ஈழமகன் - 04-02-2006, 09:40 AM - Forum: நிகழ்வுகள் - No Replies

<img src='http://img301.imageshack.us/img301/1277/act12gb.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img301.imageshack.us/img301/5677/act21es.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img97.imageshack.us/img97/9232/dsc000117sd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img158.imageshack.us/img158/2270/dsc000159er.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img97.imageshack.us/img97/4010/dsc000163si.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img389.imageshack.us/img389/371/dsc000182np.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img97.imageshack.us/img97/6757/dsc000218vl.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img97.imageshack.us/img97/6179/dsc000222rd.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img206.imageshack.us/img206/3105/dsc000232ul.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img97.imageshack.us/img97/3981/dsc000285uv.jpg' border='0' alt='user posted image'>

Print this item

  அறிமுகம்
Posted by: saathuryan - 04-02-2006, 06:29 AM - Forum: அறிமுகம் - Replies (14)

வணக்கம் !!!
அன்பு உறவுகளே

Print this item

  ஜெயதேவன்
Posted by: Anandasangaree - 04-01-2006, 11:19 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள் - Replies (5)

AN OPEN LETTER

Dear Mr Jayadevan

In TBC news which now you control, I heard you saying you are prepared to meet anyone in a forum to put your points across and answer questions as long as it is civilised.

He are the questions?

1. You have invested funds on two occasions in the production of “Thiruvasakam” with the music of Ilayarajah. The purpose was to by CD’s and sell them at a profit which will go to trhe charitable purposes.

On the first occasion you invested Ind. Rs 425,000 and on the second occasion Ind. Rs 35,000.

Please tell us whether this is monies collected from the Temple or your private funds. Assuming it is temple fund who made or authorised public funds to be invested in this way.

Now it is clear that none of the monies can be recovered. Who is answerable to these lost funds please?

Does the devotees aware of this transaction?

We understand a private firm is now selling these CDs. Do you have any connection with this organisation?

2. You call your organisation Democratic. There are three partners as follows:

A. Karuna Group.
B. Yourself
C. ENDLF.

Please tell us any one of you were ever selected as a leader in a Democratic way?

Did any one of you ever had any elections regarding this organisation.

When you are appointing your selves as leaders how can you criticize the LTTE. At least they are telling the truth and honest about it.

3. Would you please tell us whether or not any temple funds were used for any charitable purposes. If so who are the beneficiaries please? Would you tell us who got what amount.

4. Would you please confirm or deny you have one house in Colombo and
three houses in England fully paid?

5. The charity commission in it’s report says the temple funds were
donated to political parties. Would you please tell us to what parties the donations were made and how much was donated to each political party.

These are very simple straight forward questions. Lack of response will only indicate you have
something to hide.

Would you please e-mail your answers to us and broadcast the questions and answers on TBC. If
you did that we may begin to believe you.

Yours sincerely

Pandiyan
Chairman (self elected)
All World Tamil Congress

Print this item

  ஆளும் கட்சி அமோக வெற்றி ஐ.தே.க. பெரும் பின்னடைவு
Posted by: AJeevan - 04-01-2006, 09:02 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெற்றிருப்பதுடன், அதன் நேச அணியான ஜே.வி.பி. படுதோல்வியையும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி பெரும் பின்னடைவையும் சந்தித்துள்ளன.

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/01/fr-n.gif' border='0' alt='user posted image'>

வியாழக்கிழமை இடம் பெற்ற 266 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் இச் செய்தி எழுதுகையில் வெளியான 250 சபைகளுக்கான முடிவுகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 212 சபைகளின் நிர்வாகத்தை கைப்பற்றியிருந்தது.

இவற்றில் 8 மாநகர சபைகளும் 17 நகர சபைகளும் 187 பிரதேச சபைகளும் அடங்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி 3 மாநகர சபைகளையும் 13 நகர சபைகளையும் தன்வசமாக்கியுள்ளது. ஜே.வி.பி. திசமகராமை பிரதேச சபையில் மட்டுமே நிர்வாகத்தை பொறுப்பேற்றுள்ளது.

இதேவேளை வட, கிழக்கில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருமலை மாநகர சபையையும் திருமலை பட்டினமும் சூழலும், வெருகல், ஆலையடிவேம்பு, திருக்கோவில், காரைதீவு பிரதேச சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மலையகத்தில் வரலாற்றில் முதற்றடவையாக தலவாக்கலை - லிந்துல நகர சபையை ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி கைப்பற்றியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை பிரதேச சபை, கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை ஆகியவற்றில் ஐ.தே.க.வுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அச்சபைகளின் நிர்வாகத்தை பொறுப்பேற்றிருக்கிறது. மூதூர் பிரதேச சபைகளிலும் சுயேச்சையாக போட்டியிட்டு இக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.


உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கட்சி பெற்ற வெற்றி, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உத்வேகத்தை அளிக்குமென ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கடும் போக்காளருக்கு தாங்கள் ஆதரவில்லை" என்பதை இங்கே வாக்காளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என்று கொழும்பு பல்கலைக்கழக அரசியல் கற்கைகளுக்கான பீடத்தலைவர் கலாநிதி ஜயதேவ உயன்கொட தெரிவித்தார்.

2002 இல் இடம் பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.தே.க. அநேகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இம் முறை பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. ஆனால், இது ஆச்சரியமான விடயமல்ல என்றும் அரசாங்கத்திடமிருந்து அபிவிருத்திக்கான நிதியைப் பெறுவதை கருத்தில் கொண்டு ஆளும் கட்சிக்கு வாக்களிப்பது வழமையான விடயமெனவும் அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கடும் போகு சிங்களக் கட்சிகளான ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் (ஒரு சபையைக் கூட ஹெல உறுமய தன் வசமாக்கவில்லை) தோல்வி கண்டமையால், அரசாங்கம் புதிய உற்சாகத்துடன் சமாதான முயற்சியை முன்னெடுக்கும் வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் அரச அதிகளவு விட்டுக் கொடுப்புக்கு முன்வரும் முறையை தேர்ந்தெடுக்கக் கூடும் என்கிறார் கலாநிதி உயன்கொட. இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியைவிட அதிக பெரும்பான்மையான வாக்குகளை சுதந்திர முன்னணி பெற்றுக் கொண்டதால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையில் ஈடுபடக் கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாராளுமன்றத்தில் இறுதிப் பெரும்பான்மை பலத்தை கொண்டில்லாத நிலையில், ஜே.வி.பி., ஹெல உறுமயவின் ஆதரவில் தங்கியிருக்கும் ஆளும் கட்சி, தேர்தலை நடத்தி அதில் பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு இது உகந்த தருணம் என்று சிந்திக்கக் கூடுமெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

- தினக்குரல்

Print this item

  எனது புதிய அறிமுகம்
Posted by: kavithaa - 04-01-2006, 08:14 PM - Forum: அறிமுகம் - Replies (25)

எனது புதிய அறிமுகம்

நான் கவிதா
நோர்வேயில் இருக்கேன்

Print this item

  வார விடுமுறை
Posted by: SUNDHAL - 04-01-2006, 07:22 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (1)

வார விடுமுறை நாட்களை சிலர் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இந்த நாட்களில் கூட வேலை வேலை என்று மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

இப்படி விடுமுறை நாட்களில் குடும்பத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதல்ல.

குடும்ப நேரம்: எப்போதும் குடும்பத்தினருடன் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வாழ்க்கைத் துணைக்காகவும் குழந்தைகளுக்காகவும் வீட்டில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். சிரியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

வீட்டு அலங்காரம்: ஒரு வாரத்தில் நீங்கள் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்காது. குறிப்பாக அலமாரி செல்பில் வைத்த பேப்பர்கள், புத்தகங்கள், வார்ட்ரோப்பில் அடுக்கிய துணிகள், குழந்தைகளின் அறை பொம்மைகள், படுக்கையறை தலையணை, போர்வைகள் போன்றவை எப்படியும் இடம் மாறியிருக்கும். அல்லது ஒரு ஒழுங்கு முறையில் இருக்காது. இந்த வேலைகளுக்காக நான்கு மணி நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள்.

நண்பர்களுடன் சந்திப்பு: வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் சில நேரம் போரடிக்கும். அதனால் நண்பர்களின் குடும்பத்தினரோடு பொதுவாக எங்கா வது ஓரிடத்தில் சந்திக்கும் பழக்கத்தை ஏற்படுத் திக் கொள்ளுங்கள். அப்போது அவர்கள் வீட்டில் தயாரித்துக் கொண்டு வந்திருக்கும் உணவுகளையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டு பரிமாறுங்கள். அவர்களுடன் சேர்ந்து மனம் விட்டு பேசுங்கள்.

ஷாப்பிங்: சிலர் நினைத்தவுடன் ஷாப்பிங் கிளம்பி விடுவார்கள். இப்படி எந்தத் திட்டமும் இன்றி ஷாப்பிங் செல்லக் கூடாது. குடும்பத்தினருக்கு என்ன தேவை, உங்களுக்கு தேவையான பொருட் கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும், அவை தரமான கடைகளா? என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். கடைகள் அதிகம் உள்ள பகுதிக்குப் போனால் நான் கைந்து கடைகளாவது ஏறி இறங்கி உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.

பிக்னிக்: நகரின் அன்றாட பரபரப்பு, நெருக்கடியில் இருந்து வாரத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் ஒதுங்கியிருப்பது நல்ல விஷயம். இதற்காக பிக்னிக் செல்லலாம். அப்படிச் செல்லும்போது குடும்பத்தினர் அனைவரும் அதில் இருக்க வேண்டும். இன்று புறநகர் பகுதிகளில் பொழுது போக்கிற்கு உதவும் தீம் பார்க்குகள் ஏராளமான அளவில் இருக்கின்றன. அங்கு விளையாட்டுகள், சவாரிகளில் ஈடுபடலாம். இதனால் மன மகிழ்ச்சி ஏற்படுகிறது. குழந்தைகளும் ஆர்வமாக விளையாடுவார்கள்.

வெளிநாட்டு உணவுகள்: தினமும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிட்டு அலுத்துப் போனவர்கள் வார விடுமுறை நாட்களில் வித்தியாசமான வெளிமாநில மற்றும் அயல் நாட்டு உணவுகளை வீட்டில் தயாரித்துச் சாப்பிடலாம். புதுமையான உணவுகளை வீட்டிலேயே தயாரித்தால் அதை குழந்தைகள் மட்டுமின்றி அனைவருமே விரும்பிச் சாப் பிடுவார்கள். இந்த புதுமை உணவுத் தயாரிப்பில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஈடுபாட்டுடன் செய்தால் நல்லது.

சினிமா: வாரத்திற்கு ஒரு முறையாவது தியேட்டருக்குச் சென்று சினிமா பார்ப்பது நல்லது. குழந்தைகளுடன் செல்லும்போது அவர்களின் ரசனைக்கேற்ப படங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்படி ஒவ்வொரு வாரத்தையும் திட்டமிட்டு செலவிட்டால் உங்களுக்கு வேலை நாட்களில் ஏற்படும் பரபரப்பு வெகுவாகக் குறைந்து விடும்.
Thanks:thanthi.................
***

Print this item

  மணமக்கள் தேவை
Posted by: Naasamaruppan - 04-01-2006, 07:14 PM - Forum: நகைச்சுவை - Replies (13)

இது யாரையும் புண்படுத்துவதற்காக இங்கு இடவில்லை. . தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல தொரு வரன் அமைய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால் இங்கே கேட்கப்பட்ட விடயங்களை மனவேதனையுடன் நோக்குவதால் அப்படியே தருகின்றேன். மீண்டும் யாருடைய மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிக்கும் படி கேட்டுக்கொண்டு.....

மணமக்கள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த29 வயதுடைய, மலேசியாவில் Computer Scienceபடித்து தற்போது லண்ட னில் Student Visa வில் இருக்கும் மணமக னுக்கு லண்டன் P.R உடைய மணமகளும் பரதநாட்டியம், A.A.T Computer Diploma படித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் தொழில் புரியும் அழகிய மெல்லிய 5'4'' உயரமுள்ள 25 வயது மணமகளுக்கு லண்டன் P.R உடைய மணமகனும் தேவை. தொடர்பு : 0713055865 (48609)


மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972இல் பிறந்த, விசாக நட்சத்திர முதலாம் பாதம் துலா ராசி 7இல் செவ்வாயுள்ள குறைந்த கிரகபாவ முடைய அரிசி ஆலை உரிமையாளரான மண மகனிற்கு பொருத்தமான அழகிய மணமகள் தேவை. தொடர்பு: விள.இல.2838, மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (48537)


மணமகள் தேவை
யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: E&mail: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 0776176476



மணமகள் தேவை

யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம், சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: jaffna06@yahoo.com T.P.: 006591482491, 07761764


மணமகள் தேவை

கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1973, 5' 3'' உயரம், பூரட் டாதி Computer Cum ( Net Work Engineer)மணமகனுக்கு டாக்டர், எஞ்சினி யர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு : 021 222 2168, 077 6341541. (47988)



மணமகள் தேவை
யாழ். இந்து, 1977, திருவாதிரை நட்சத் திரம்,சிங்கப்பூரில் எஞ்சினியராகத் தொழில் புரியும் யாழ். வரவுள்ள மணமகனுக்குப் பொருத்தமான, பண்பான மணமகளைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். வெளிநாட்டு மணமகளும் விரும்பத்தக்கது. தொடர்பு: Email: jaffna06@yahoo.com T.P.: 0065 91482491, 0776176476 (48209)



மணமகள் தேவை
பிரித்தானியாவில் Studian visa வில் வசிக்கும் யாழ். இந்து கௌரவ குடும்பம், 1973, மூலம், தனுசு ராசி, 16லு கிரக பாவம், உயரம் 5'4'', Engnieer (civil) பொறி யியலாளராகப் பணிபுரியும் மணமகனுக்கு A/L இற்கு மேல் படித்த வெளிநாட்டில் குடி யுரிமை உடைய மணப்பெண் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau, No. 11, Jamuna Street, Nallur, Jaffna, Sri Lanka
T.P.: 0776528641 (48216)



மணமகன் தேவை
நோர்வே நாட்டில் குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், மூலம், தனுசு ராசி, 7இல் செவ்வாய், சூரியன், 47லி கிரக பாவம், 5'4'' உயரம், சிவப்பு நிறம், A/L படித்த, Bio Science Computer Engineer (net work)- Norway Ministry of Financeுஇல் பணிபுரியும் மணமகளுக்கும் பட்டதாரி, வெளிநாடு, உள்நாடு மணமகன் தேவை. தொடர்பு: Shivaalaya International marrage Bureau No.11, Jamuna Street, nallur - Jaffna, Sri Lanka. T.P.: 0776528641 (48188)



மணமகன் தேவை

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 36 வயதுடைய தாரம் இழந்த கத்தோலிக்க மணமகளிற்கு அவரது பெற்றோர்கள் தகுந்த மணமகனைத் தேடுகின்றார்கள். (குழந்தை இல்லை) தொடர்புகளுக்கு: T.P. 0779527517


மணமகள் தேவை

கனடா குடியுரிமையுடைய, யாழ்.இந்து கௌவர குடும்பம் 1973 இல் பிறந்த, 5'3'' உயரம், பூரட்டாதி Computer Cum (Net work Engineer) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் or விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 0776341541



மணமகள் தேவை
கனடா குடியுரிமையுடைய யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1973 இல்பிறந்த, 5' 3'' உயரம், பூரட்டாதி, இணிட்ணீதtஞுணூ இதட் (Computer Cum (Network Engineer)) மணமகனுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன் ணிணூ விஞ்ஞானப் பட்டதாரி பண்புள்ள அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 021 222 2168, 077 6341541. (47988)


மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, பரணி, உயரம் 5'9'' நியூசிலாந்தில் கொம்பியூட்டர் B.SC முடித்து, ஆஸ்திரேலியா செல்லும் மணமகனுக்கு அழகிய, படித்த, மெல்லிய, வெள்ளை நிறமுடைய மணமகள் தேவை. முழு விவரத்துடனும் தொடர்பு கொள்ளவும் (மணமகன் ஒரு வாரத்தில் யாழ்.வரவுள்ளார்) விளம்பர இல. 2824 மே/பா உதயன். (47740)



மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1974ஆம் ஆண்டு, விசாக நட்சத்திரம், 3ஆம் கால் 7இல் செவ்வாய் தோசமுடைய MBBS டாக்டராக தொழில் செய்யும் மணமகனிற்கு படித்த பண்புள்ள மணமகள் தேவை. குடும்ப விவரம் சாதகக் குறிப்புடன் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: விளம்பர இல. 2821, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47564)



மணமகள் தேவை

U.K யில் வசிக்கும் யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1978 சுவாதி, துலாம்ராசி, 4இல் செவ்வாய் சூரியனும் 5'6'' 17 கிரகபாவம், GCE A/L Business் மணமகனுக்கும் பிரான் ஸில் வசிக்கும் 1977, அத்தம், கன்னிராசி, 12இல் சூரியன் செவ்வாய் 22 கிரகபாவம், 5'7'' உயரம், A/L படித்த, கம்பனியில் பணி புரியும் மணமகனுக்கும் வெளிநாடுகளில் குடியுரிமையுடைய மணமகள்கள் தேவை. தொடர்பு: சிவாலயா, Nணி.11, யமுனாவீதி, நல்லூர். கூ.க. 0776528641. (47564)


மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், உயரம் 5'4'', சிவில் பொறியியலாளர், 1976ஆம் ஆண்டு பிறந்த, உத்தரம், கன்னி லக்கினம் செவ்வாய் தோஷமற்ற பாவம் 33, தீய பழக்கங்கள் எதுவுமற்ற மணமகனிற்கு படித்த, அழகுள்ள சிவந்த மணமகள் தேவை. ஜாதகம், படம் சுயவிவரத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பி வைக்கப்படும். தொடர்பு: விளம்பர இல.2816 மே/பா உதயன், யாழ்ப்பாணம்.



மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்ப 1972ஆம் ஆண்டு அனுஷம் பாவம் 19, A/L, NDBS படித்து சொந்தத்தில் வியாபாரம் செய்யும் மாதவருமானம் 40, 000/= இற்கு மேல் பெறும் சொத்துக்கள் நிறைந்த அழகான மணமகனிற்கு படித்த அழகான மணமகளைப் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர். தொடர்பிற்கு: விளம்பர இல. 2815, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (47203)



மணமகள் தேவை
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இந்து உயர்குல பெற்றோர் 32 வயது 5’7’’ உயரமுள்ள பிரிட்டிஸ் பிரஜா உரிமையுடைய தமது மகனுக்கு (விஞ்ஞான ஆராய்ச்சித்துறை Bsc Phd) பாரம்பரிய பண்பாடுகளைக் கடைப்பிடிக்கும், உத்தியோகம் பார்க்கும் (டாக்டர்,பல்வைத்தியர்,CIMA தேர்ச்சி பெற்ற)பெண்ணை மணமகளாக்கி கொள்ள விரும்புகின்றனர். தொடர்பு: suthan1980@hotmail.com், 00447931526465.


மணமகள் தேவை
கிரகபாவம், ஐம்பது, ஏழில் செவ்வாயுள்ள 1968 Bank AGM இற்கும் 1970 Doctor இற் கும் அழகான, விரிவுரையாளர், பொறியிய லாளர், Doctor தரத்து மணப்பெண்களும் 1966, செவ்வாயற்ற, கிரகபாவம் 40, சொந்தக்கடை உரிமையாளருக்கும் தொழில் உள்ள மணப்பெண்தேவை. தொடர்பு: 0776140273 அல்லது விளம்பர இல. 2814 மே/பா, உதயன், யாழ்ப்பாணம். (47161)



மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1972 ஆயிலியம் கடகராசி, 5'2'' உயரம், கிரகபா வம் 51 லு, M.B.B.S. டாக்டர் மணமகளுக்கு டாக்டர், எஞ்சினியர், எக்கவுண்டன், பட்ட தாரி மணமகன் தேவை. கிறிஸ்தவர்கள், வெளிநாட்டில் தகுதியானவர்கள், விவாகரத்து ஆனவர்கள் விரும்பத்தக்கது. சிவாலயா 11, யமுனா வீதி, நல்லூர், யாழ். தொ.பே. 0776528641, E.mali - SK.Shivagaran @ yahoo. com.


மணமகள் தேவை
இந்து கோகுலம், 33 வயது வயது, குற்ற மற்ற, உத்தராடம் 2ஆம் பாதமுடைய, கன டாவில் பணிபுரியும் இலங்கை M.Sc.. பொறியியலாளருக்கு 30 வயதிற்குட்பட்ட, நற்குணமுள்ள, நன்கு படித்த, அழகான மணமகளைப் பெற்றோர் தேடுகின்றனர். தொடர்பு: விளம்பர இல. 2807, மே/பா. உதயன், யாழ்ப்பாணம்.


மணமகன் தேவை
யாழ். இந்து கௌரவ குடும்பம், 1981, உத்தராடம், 4ஆம் பாதம், 29¼ பாவம், 5'2'' உயரம் உடைய A/L Science External Pharmacist, B.A. படித்துக்கொண்டிருக் கும் அழகிய, சிவந்த, நற்குணமுள்ள மண களுக்கு வெளிநாட்டில் PR உடைய, டாக் டர், எஞ்சினியர் அல்லது உயர் கல்வி படித்த மணமகன் தேவை. T.P.: 021 2263054, 0776610829, E-mail Ponalvaippillai @ yahoo.com.அமுதசுரபி, நெல்லியடி கிழக்கு, கரவெட்டி.



மணமக்கள் தேவை
ஆஸ்திரேலியாவில் பிரஜாவுரிமையுடைய 40 வயது எஞ்சினியருக்கு மணமகளும், 35 வயதுடைய M.B.A. . பட்டதாரியும் கெமிக்கல் எஞ்சினியருமான மணமகளுக்கு மணமகனும் தேவை. விவரங்களுடன் தனித் தனி சாதகக்குறிப்பு அனுப்பவும். தகுதியுடைய, பொருத்தமானவர்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: ஸ்ரீலஸ்ரீ சு.சிவஷண்முகானந்தக்குருக்கள், கொல்லங்கலட்டி. தெல்லிப்பழை. (46082)



மணமக்கள் தேவை
ஆஸ்திரேலியாவில் பிரஜாவுரிமையுடைய 40 வயது எஞ்சினியருக்கு மணமகளும், 35 வயதுடைய M.B.A. பட்டதாரியும் கெமிக்கல் எஞ்சினியருமான மணமகளுக்கு மணமகனும் தேவை. விவரங்களுடன் தனித் தனி சாதகக்குறிப்பு அனுப்பவும். தகுதியுடைய, பொருத்தமானவர்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: ஸ்ரீலஸ்ரீ சு.சிவஷண்முகானந்தக்குருக்கள், கொல்லங்கலட்டி. தெல்லிப்பழை.(46082)







மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த, 1974 இல் பிறந்த, யாழ்ப்பாணத்தில் அரச வேலை புரியும் 5'6'' உயரமான B.B.A பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. தொடர்பிற்கு: விளம்பர இல. 2792, மே/பா உதயன், யாழ்ப்பாணம். அல்லது 0777303813 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.(45986)



மணமக்கள் தேவை
ஆஸ்திரேலியாவில் பிரஜாவுரிமையுடைய 40 வயது எஞ்சினியருக்கு மணமகளும், 35 வயதுடைய M.B.A. பட்டதாரியும் கெமிக்கல் எஞ்சினியருமான மணமகளுக்கு மணமகனும் தேவை. விவரங்களுடன் தனித்தனி சாதகக்குறிப்பு அனுப்பவும். தகுதியுடைய பொருத்தமானவர்கள் மட்டும் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும். தொடர்பிற்கு: ஸ்ரீலஸ்ரீ சு.சிவஷண்முகாநந்தக் குருக்கள், கொல்லங்கலட்டி. தெல்லிப்பழை.



மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த, 1974 இல் பிறந்த, யாழ்ப்பாணத்தில் அரச வேலை புரியும் 5'6'' உயரமான B.B.A பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. தொடர்பிற்கு: விளம்பர இல. 2792, மே/பா உதயன், யாழ்ப்பாணம். அல்லது 0777303813 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.(45986)




மணமகள் தேவை

இந்து உயர்குடும்பத்தைச் சேர்ந்த, 1969 ஆம் ஆண்டு, பூரட்டாதி நட்சத்திரம், கிரக பாவம் குறைந்த U.K. இல் நிரந்தர வதியுரிமை கொண்ட மணமகனிற்கும்,1973ஆம் ஆண்டு அச்சுவினி 3ஆம் பாதம் கிரகபாவம் குறைந்த U.K.. மணமகனிற்கும் O/L, A/L படித்த சிவந்த அழகிய மெல்லிய பெண் தேவை. தொடர் பிற்கு: 0776248679. (46064)




திருமண மண்டபம்
சாவகச்சேரி அருள்மிகு துர்க்காதேவி தேவஸ்தானம் துர்க்கா திருமண மண்டபம்
சென்ற 18 ஆம் திகதி திறப்பு விழா நடைபெற்றது. இம் மண்டபத்தில் திருமணம் உட்பட சகல மங்களகரமான வைபவங்கள் நடத்தமுடியும். சுவையான சாப்பாடுகளும் ஒழுங்குசெய்து கொடுக்கப்படும். முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் மண்ட பத்தில் அமரலாம்.
தர்மகர்த்தா.
மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த, 1974 இல் பிறந்த, யாழ்ப்பாணத்தில் அரச வேலை புரியும் 5'6'' உயரமான B.B.A பட்டதாரி மணமகளுக்கு பொருத்தமான மணமகன் தேவை. தொடர்பிற்கு: விளம்பர இல. 2792, மே/பா உதயன், யாழ்ப்பாணம். அல்லது 0777303813 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.(45986)




மணமகள் தேவை

இந்து உயர்குடும்பத்தைச் சேர்ந்த, 1969 ஆம் ஆண்டு, பூரட்டாதி நட்சத்திரம், கிரக பாவம் குறைந்த U.K. இல் நிரந்தர வதியுரிமை கொண்ட மணமகனிற்கும்,1973ஆம் ஆண்டு அச்சுவினி 3ஆம் பாதம் கிரகபாவம் குறைந்த U.K.. மணமகனிற்கும் O/L, A/L படித்த சிவந்த அழகிய மெல்லிய பெண் தேவை. தொடர் பிற்கு: 0776248679. (46064)




மணமகன் தேவை
B.Sc.. டபிள்மற்ஸ் ஸ்ரற்ஸ் ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் 1971ஆம் ஆண்டு பிறந்த, 8 இல் செவ்வாய் உள்ள கணவனை இழந்த மணப்பெண்ணிற்கு மணமகன் தேவை. தொடர்பிற்கு விளம்பர இல. 2790, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (45959)


மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 30 அகவை உடைய இசை உபகரணங்களை உற்பத்தி செய்தலும், கணனிவேலை, திரை அச்சுக்கலை வேலைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றின் தொழில் அதிபரும் மென்மை யான குணபாவனை உடைய மணமகனுக்கு மணமகள் தேவை (இசை, கணனி, ஆங்கில ஆசிரியர்கள் விரும்பத்தக்கது) தொடர்பு: விளம்பர இல. 2785 மே/பா உதயன், E.mail Rajan 0770 @ yahoo.com. (45441)



மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம் லண்ட னில் சிவில் இஞ்சினியறிங் (மொறட்டுவ பல்கலைக்கழகம்) தொழில் புரியும் 1974, மிருகசீரிடம் முதலாம் பாதம் பிறந்த மண மகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்பு: விளம்பர இல. 2783, மே/பா உதயன்.


மணமகன் தேவை
1961ஆம் ஆண்டு பிறந்த, 7இல் செவ் வாய் உடைய பட்டதாரி ஆசிரியைக்கு சைவபோசன மணமகன் தேவை. தொடர்பு: விளம்பர இல.2780, மே/பா உதயன், யாழ்ப்பாணம்.




மணமகள்கள் தேவை
யாழ்.இந்து 68, 69, 73, 74, 77ஆம் ஆண்டு அரசாங்க உத்தியோகத்த மணமகன்களுக்கு மணமகள்கள் தேவை. தொடர்பு: க.சுந்தர், திருப்பதி வீதி, கனகசபை றோட், மானிப் பாய்.


மணமகன் தேவை
இந்து, கிறிஸ்தவ கௌரவ குடும்பம் பட்டதாரி, டாக்டர், எஞ்சினியர், எக்கவுண் டன், விரிவுரையாளர், ஆசிரியர், வீட்டுப் பணி மணமகள்களுக்கு வெளிநாடுகளில் குடியுரிமையுடைய உள்நாட்டில் அரச பணியிலுள்ள மணமகன்கள் தேவை. தொடர்பு:Mr.S.K. SHIVAGARAN, SHIVAALAYA INTERNATIONAL MARAAGA BUREAU, No. 11, JAMUNA STREET, NALLUR, JAFFNA, SRILANKA. T.P.: 0776528641


திருமண சேவை
டாக்டர்கள், பொறியியலாளர்கள், விஞ் ஞான பட்டதாரிகள் உட்பட உள்நாட்டு, வெளிநாட்டு மணமக்கள் பலரின் ஜாதகங் கள் எம்மிடம் உள்ளன. உங்கள் தெரிவுக்கு உடனே விரையுங்கள். தொடர்பு: த.சிவானந் தன், பிரபல சோதிடர், இல.5, வைமன் வீதி, நல்லூர் T.P: 021 222 8102. (45239)


மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1965 உத்தரம், கன்னிராசி, 23லு கிரகபாவம் , உயரம் 5'3'', B.Sc.(Hons) Mphil விரிவுரையாளரான மகளுக்கு பட்டதாரி, ஆசிரியர், அரசபணி,U.K.. குடியுரிமையுடைய தகுதியான மணமகன் தேவை. தொடர்பு: SHIVAALAYA International Marriage Bureau, No.11, Jamuna Street, Jaffna. Sri lanka T.P.: 0776528641 (45061)



மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்ப, 1982ஆம் ஆண்டு பிறந்த, உதயத்தில் செவ்வாயுடைய (36½) மணமகளிற்கு தகுந்த மணமகன் தேவை. தொடர்பு: விளம்பர இல. 2770, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (44377)


மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1969, புனர்பூசம், பாவம் 14½ புள்ளி, 5'10'' உயர முடைய பட்டம் பெற்று அரச உயரதிகாரி யாக கடமையாற்றும் மணமகனுக்கு அரச உத்தியோகம் பார்க்கும் பெண் கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்பு: விளம்பர இல.2761, மே/பா உதயன், யாழ்ப்பாணம்.

மணமகள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், உத்தரம் 4ஆம் பாதம், 1966இல் பிறந்த, லண்டன் PR உடைய மணமகனுக்கு லண்டன் வாழ் PR உடைய அல்லது PR இல்லாத மணமகள் தேவை. தொடர்பு: (U.K) T.P. No. 0044-01624615466

மணமகன்கள் தேவை
யாழ். இந்து கௌரவ குடும்பம், 1977, றோகினி, இடபராசி, 4இல் செவ்வாய், 43 கிரகபாவம், 5'2'' உயரம், M.B.B.S., 1978 அனுசம், விருச்சிக ராசி, 5'5' உயரம், கிரக பாவம் 51லீ, M.B.B.S. டாக்டர் மணமகள் களுக்கு U.K, USA, ஆஸ்திரேலியா குடி யுரிமையுடைய டாக்டர், என்சினியர் மண மகன்கள் தேவை. தொடர்பு:Shivaalaya, No.11, Jamunaa Street, Nallur, Jaffna, Sri Lanka. T.P.: 0776528641, Email: Shivagarn 12@yahoo.com.

மணமகன் தேவை
ஜேர்மனியில் குடியுரிமையுடைய யாழ். இந்து கௌரவ குடும்பம், 1985, உத்திரட் டாதி, மீன ராசி, 24கிரக பாவம், 5'4'' உய ரம், சிவந்த நிறமான, தாதியர் உத்தியோத்தர் பணியிலுள்ள மணப்பெண்ணுக்கு டாக்டர், எஞ்சினியர், பட்டாரி மணமகன் தேவை. தொடர்பு: திரு.கு.ஓ.சிவகரன், சிவாலயா சர்வதேச திருமண நிலையம், இல.11, யமுனா வீதி, நல்லூர் யாழ்ப்பாணம். கT.P 0776528641, Email: Shivagarn 12@yahoo.com.

திருமண சேவை
எம்மிடம் அனைவரின் உள்நாட்டு, வெளிநாட்டு அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இந்து, கிறிஸ்தவ மணமக்களின் ஜாதகங்களின் உள்ளன. தொடர்பு: கல்யாண வேலன் திருமண சேவை, இல:72, கச்சேரி, நல்லூர் வீதி, யாழ்ப்பாணம். (43620)

திருமண சேவை

இந்து கிறிஸ்தவ, உள்நாட்டு வெளிநாட்டு தகுதி தராதரத்திற்கு ஏற்ப மணமக்களின் விவ ரங்கள் பெற குடும்ப விவரம், ஜாதகக் குறிப்பு அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் தொடர்புகொள்ளவும். Shivaalaya Interna- tional Marrige Bureau No. 11, Jamuna Street, Nallur Jaffna Srilanka T.P. 0776528641 E.mail Shivagarn 12 @ yahoo.com. (43353)


மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1969, புனர்பூசம், பாவம் 14½ புள்ளி, 5'10'' உயர முடைய பட்டம் பெற்று அரச உயரதிகாரி யாக கடமையாற்றும் மணமகனுக்கு அரச உத்தியோகம் பார்க்கும் பெண் கொழும்பு வீட்டுடன் எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்பு: விளம்பர இல.2761, மே/பா உதயன், யாழ்ப்பாணம். (43525)

மணமகள் தேவை

யாழ். இந்து கனடா குடியுரிமையுள் A/L4இல் பிறந்த, அ/ஃ படித்த, செவ்வாய் 8 இல் உள்ள மணமகனுக்கு நல்ல நிறமும் மெல்லிய அழகிய தோற்றமும் A/L வரை படித்த மணமகள் தேவை. குடும்ப விவரத் துடனும் ஜாதகக் குறிப்புடனும் விண்ணப் பிக்கவும். பட்டதாரிகளும் விரும்பின் விண் ணப்பிக்கலாம். தொடர்பு: திருமதி ரவீந்திரன் சரஸ்வதிதேவி, பிருந்தாவனம் சுதுமலை வடக்கு, மானிப்பாய். (43203)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1979, சித்திரை துலாம் ராசி, 2 இல் செவ்வாய், கிரகபாவம் 10லீ, 6 ' B.A (Hons) பட்டதாரி மணமகனுக்கும் 1975 கார்த்திகை இடபராசி, 7இல் செவ்வாய், கிரக பாவம் 26, உயரம் 5'9''B.Com பட்டதாரி மணமகனுக்கும் லண்டன், சுவிஸ், கனடாவில் படித்த குடியுரி மையடைய மணமகள் தேவை. சிவாலயா கூ.க. 0776 528641.
(42682)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1979, சித்திரை துலாம் ராசி, 2 இல் செவ்வாய், கிரகபாவம் 10லீ, 6 ' B.A (Hons) பட்டதாரி மணமகனுக்கும் 1975 கார்த்திகை இடபராசி, 7இல் செவ்வாய், கிரக பாவம் 26, உயரம் 5'9''B.Com பட்டதாரி மணமகனுக்கும் லண்டன், சுவிஸ், கனடாவில் படித்த குடியுரி மையடைய மணமகள் தேவை. சிவாலயா கூ.க. 0776 528641.
(42682)

மணமகள் தேவை
லண்டனில் வாழும் 1969 அச்சுவினி மேடராசி, 7இல் செவ்வாய், கிரகபாவம் 53, உயரம் 5'10'', G.C.E. A/L, சிவில் எஞ்சினி யரிங் டிப்ளோமா படித்த, சுப்பர் மார்க்கட் டில் முகாமையாளர் மணமகனுக்கும், 1973 மிருகசீரிடம் மிதுனராசி, G.C.E. A/L, U.K. இல் சொந்தமாக வீடு, கடையுள்ள மணமகனுக் கும் U.K இல் குடியுரிமையுடைய மணமகள் தேவை. தொடர்பு: சிவாலயா கூ.க.: 077 6528641. (42685)

மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், கனேடியன் குடியுரிமையுடைய விவாகப் பதிவு மட்டும் செய்து விவாகரத்தான (திருமணம் ஆகாத வர்) 1973 விசாகம், துலாம் ராசி, கிரகபாவம் 26லி, உயரம் 5'7'' ICMA கணக்காளராகப் பணிபுரியும் மணமகளுக்கு பட்டதாரி மண மகன் தேவை. 1980 பூராடம் தனுசு ராசி 12 இல் செவ்வாய் கிரகபாவம் 24லீ வர்த்தக முகாமைத்துவம் பயிலும் UK இல் வசித்து வரும் மணமகளுக்கு PR உள்ள மணமகன் தேவை. தொடர்பு: சிவாலயா.
கூ.க.0776528641. (42683)

மணமகன் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், கனேடியன் குடியுரிமையுடைய, 1973 மிருகசீரிடம் மிதுன ராசி, 8இல் செவ்வாய், 23லி பாவம், எலக் ரிக்கல் எஞ்சினியரிங் துறையிலுள்ள மண மகளுக்கு எஞ்சினியர், எக்கவுண்டன், பட்ட தாரி மணமகன் தேவை. தொடர்பு:Mr. S. K. Shivagaran, Shivaalaya International Marriage Bureau No. 11, Jamuna Street, Nallur, Jaffna, Sri Lanka. Mobil No. 0776528641 . (42685)

மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்ப, அழகான 5'5'' உயரமுள்ள, 24 வயதடைந்த படித்த, பெண்ணிற்கு மணமகன் தேவை. உள்நாட்டி லும் சரி, வெளிநாட்டிலும் சரி பொருத்தமான வர் தேர்ந்தெடுக்கப்படுவர். சீதனம் பேசித் தீர் மானிக்கப்படும். மேலதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.T.P.: 0662256607, 0773222768. (42695)

மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1968, ரோகினி, இடபராசி, செவ்வாய் 11, பிரான்ஸில் வேலைபார்க்கும் மணமகனுக்கு பிரான்ஸ், ஜேர்மன், U.K., கனடாவில் வதிவிட பிரஜா உரிமையுடைய மணமகள் தேவை. தொடர்பு: 021222 6404. (45551)

மணமகன் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்பம், 1971, பூரா டம் முதலாம் கால், செவ்வாய் தோசமற்ற நிரந் தர ஆசிரியராகக் கடமைபுரியும் மணப்பெண் ணிற்கு சிறு உத்தியோகம், சுயதொழில் செய் யும் மணமகன் தேவை. இ.சகிதன், இராஜகிரி வீரபத்திரர் கோயிலடி, உடுப்பிட்டி. 077 3066677 Working days 9 a.m.-3.p.m. (42295)


மணமகள் தேவை

யாழ்.இந்து கௌரவ குடும்ப, இத்தாலி PR உடைய, 1972 ஆயிலியம் 4ஆம் பாதம், 17 1/4 கிரகபாவம் உடைய மணமகனுக்கு A/L படித்த அழகான மணமகள் தேவை. தொடர்பு: 0602213076 or 0776141723.or 0776180760 (42504)


திருமண சேவை

இந்து, கிறிஸ்தவ மணமக்களுக்கு சிவா லயாவின் தலைத் தீபாவளி வாழ்த்துக்கள். எங்களிடம் உள்நாட்டு, வெளிநாட்டு, பட்ட தாரி, டாக்டர், எஞ்சினியர், ஆசிரியர், வர்த் தகர், சுயதொழில் புரியும் மணமக்களின் ஜாதகங்கள் விவரம் பெற சகோதரன் S.K. சிவகரன் (அமைப்பாளர்), No:11, யமுனா வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், இலங்கை. T.Pி.: 0776 528641. (42274)


மணமகள் தேவை
இங்கிலாந்தில் நிரந்தர வதியுடமை யுள்ள, கணனி ஆலோசகராகத் தொழில்புரி யும், 28 வயதுடைய, திருவோண நட்சத்திர முடைய மணமகனுக்கு பல்வைத்தியர் அல் லது வைத்தியத் தொழில் புரியும் மணமகள் தேவை. தொடர்பு: ஓ.க.கு.நாதன் (இளைப்பா றிய அரச நில அளவையாளர்), இராச வீதி, தோப்பு, அச்சுவேலி.கூ.க.: 0779613050.
(41719)

மணமக்கள் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம், 34 வயது, இணிட்ணீதtஞுணூ ஆ.குஞி., ஆஸ்திரேலியா, செவ் வாயற்ற மணமகனுக்கு படித்த, அழகிய மண மகள் தேவை. மிக விரைவில் யாழ்.வரவுள் ளார். படத்துடன் விண்ணப்பிக்கவும். அச்சுவினி, 33லி கிரகபாவம் உள்ள மணமகளுக்கு வெளி நாட்டு மணமகன் தேவை. பொருத்தமற்றவை திருப்பி அனுப்பப்படும். தொடர்பு: விளம் பர இல.2719, மே/பா உதயன், யாழ்ப் பாணம்..

திருமண சேவை
எம்மிடம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இந்து, கிறிஸ்தவ மணமக்களின் ஜாதகங்கள் உள்ளன. தொடர்பு: கல்யாண வேலன் சர்வதேச திருமண சேவை, 72 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம். Velan 1@ walla.com

மணமகன் தேவை
யாழ்.இந்து கௌரவ குடும்பம் 1971, பூரா டம் முதலாம் கால், செவ்வாய் தோசமற்ற கிரக பாவம் 30லு உடைய நிரந்தர ஆசிரியையாக கடமைபுரியும் மணப் பெண்ணிற்கு சிறு உத்தி யோகம், சுயதொழில் செய்யும் மணமகன் தேவை. தொடர்பு: இ.சகிதன், ராஜகிரி, வீர பத்திர கோயில் மேற்கு, உடுப்பிட்டி. T.P.: 0773066677.

மணமக்கள்தேவை
யாழ். கௌரவ, கிறிஸ்தவ குடும்பத் தைச் சேர்ந்த, 36 வயது மணமகளுக்கும் 30 வயது, அரச உத்தியோக மணமகனுக்கும் RC or Non RC மணமக்கள் தேவை. வெளி நாட்டு மாற்றுச் சம்பந்தமும் விரும்பப்படும். தொடர்பு: விளம்பர இல. 2709, மே/பா உத யன், யாழ்ப்பாணம்.


நன்றி உதயன் http://www.uthayan.com/matrimony.html

Print this item

  Free e-books
Posted by: Naasamaruppan - 04-01-2006, 07:05 PM - Forum: தளமுகவரிகள் - No Replies

http://www.ebookshare.net/

சில புத்தகங்களள் இங்கு தரவிறக்கம் செய்யலாம்

Print this item

  நிஜப் போரை வலிந்திழுக்கும் நிழல் யுத்தம்
Posted by: Naasamaruppan - 04-01-2006, 06:37 PM - Forum: தமிழீழம் - No Replies

ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்த உடன்படிக்கையினை அமுலாக்கம் செய்வது தொடர்பாக விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் அமுல்படுத்தவில்லை.

கடந்த ஒரு மாதகாலமாக பேச்சுக்களின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாது இழுத்தடித்து வரும் அரசு அடுத்த சுற்றுப் பேச்சுக்களில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத ஒரு சூழலை உருவாக்குவதில் தற்போது அதிதீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

ஏனெனில் கடந்த பெப்ரவரி 22ம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுக்களின் போது விடுதலைப்புலிகளால் முன் வைக்கப்பட்ட பிரதான விடயம் ஒட்டுக் குழுக்களின் விவகாரம்.

போர் நிறுத்த உடன்படிக்கையின் 1.8 விதிக்கு அமைய வடக்குக் கிழக்கில் படையினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு அவர்கள் வடக்குக் கிழக்கிற்கு வெளியே அகற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர். இதில் குறிப்பாகக் கருணாகுழு, முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்குழு தொடர்பாகவும் சுட்டிக் காட்டியிருந்தனர்.

ஆனால் இதுவரை ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக படை ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கொலை, ஆட்கடத்தல், கப்பம் போன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. அவை மாத்திரமின்றி விடுதலைப்புலிகளை வலிந்து போருக்கு இழுக்கும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏனெனில் ஜெனீவாப் போச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்ளாத வகையில் வன்முறைகளை மேற்கொள்வதே சிங்களப்படைத் தரப்பினரது பிரதான நோக்கமாகும்.

இரண்டாம் சுற்று பேச்சுக்கள் ஜெனீவாவில் நடைபெறுமாகவிருந்தால் இணக்கப்பாடு காணப்பட்ட விடயங்கள் எதனையும் அமுல்படுத்தாதுள்ள சிங்கள அரசு இக்கட்டில் மாட்டநேரிடும். அதற்கு முன்னதாக விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை நடத்துவதன் மூலம் இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கலாம் என அரச தரப்பு கருதுகிறது.

அண்மையில் திருமலையில் இடம்பெற்ற சம்பவங்கள் இதன் வெளிப்பாடுதான். திருமலை மூதூர் கிழக்குக் கரையோரக் கிராமங்கள் மீது இரு நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். இச் சம்பவத்தில் பொதுமக்கள் காயப்பட்டு வீடுகள் சேதமடைந்த போதிலும் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. போர் நிறுத்தத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக விடுதலைப்புலிகள் பதில்த் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. தப்பித்தவறி விடுதலைப்புலிகள் படையினருக்கு எதிரான பதில் நடவடிக்கையிலீடுபட்டிருந்தால் இவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும். இதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை மார்ச் 23ம் திகதி இரவு திருமலை பூநகர் காவலரண் மீது சிறிலங்கா ஒட்டுக்குழுக்கள் மற்றும் படைப்புலனாய்வுப் பிரிவினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் தேசிய துணைப்படை வீரரான 2ம் லெப். குயிலன் வீரச்சாவடைந்தார். மற்றும் இரு போராளிகள் காயம் அடைந்துள்ளனர். தாக்குதலை நடத்தியோர் மகிந்தபுரம் படைமுகாம் பகுதியிலிருந்து வந்தே தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டு விடயத்தை விடுதலைப்புலிகள் சுட்டிக்காட்டிய போதும் ஒட்டுக்குழுக்கள் எவையும் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்கவில்லை என்று திரும்பத் திரும்ப சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்றது.

சிறிலங்கா படைத்தளபதியான சரத்பொன்சேகா எந்த ஒரு ஒட்டுக்குழுவும் படையினருடன் சேர்ந்தியங்கவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்களுக்கு பின்னரே மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழுவினரின் கெடுபிடிகள், வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. அது மாத்திரமன்றி மட்டக்களப்பு நகரில் படையினரின் பாதுகாப்பு வலயப் பிரதேசமான கோவிந்தன் வீதியில் கருணாகுழு முகாமுள்ளது. இது உண்மையில் சரத்பொன்சேகாவுக்குத் தெரியாத விடயமா?

அண்மை நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆட்கடத்தல், பொது மக்கள் கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. மட்டக்களப்பு நகரில் கருணாகுழு நடமாட்டங்கள் அதிகரித்து இருக்கின்றது. அண்மையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக செயற்பட்ட கறுவாக்கேணியைச் சேர்ந்த குலதுங்க ரெஜிக்காந் (26) என்ற இளைஞர் வெள்ளை வானில் சென்ற கருணா குழு உறுப்பினர்களால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் மனித மேம்பாட்டுக்கு எதிராக செயற்படும் ஒட்டுக்குழுக்களின் நிழல் யுத்தம் தீவிரமடைந்துள்ளது.

இச்சம்பவங்களின் உள் நோக்கம் விடுதலைப் புலிகளை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்குப் போகாமல் செய்வதற்கான சூழலை உருவாக்குவதுதான். ஒட்டுக்குழுக்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் உள்ளனர் என்பது குறித்து ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் ஆதாரபூர்வமாக அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். எங்கெங்கே முகாமுள்ளது. எந்தெந்த படைத்தளபதிகள் தொடர்பு வைத்திருக்கின்றனர் போன்ற பல்வேறு விடயங்களையும் அறிக்கையாக சமர்ப்பித்திருந்தனர்.

இதேவேளை போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினர் கூட துணை இராணுவக்குழுக்கள் படையினர் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இயங்குகின்றனர் என்பதை உறுதிப்படுத்துகின்றனர். ஆனால் படைத் தரப்பு இன்னும் இவ்விடயத்தை ஒத்துக் கொள்ளவில்லை. கருணா குழு உட்பட ஆயுதக் குழுக்கள் படைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்ட போதும், அரச தரப்பும், படையினரும் எந்தவொரு ஒட்டுக்குழுவுமில்லை எனத் திரும்பத் திரும்ப கூறுவது சிங்கள அரசின் கபடத்தனத்தை வெளிப்படையாகக் கோடு காட்டுகின்றன.

எவ்வாறுதான் சிங்கள தேசம் உண்மைகளை மூடி மறைத்தாலும், ஒட்டுக் குழுவினரை வைத்து சிறிலங்கா அரசு சமாதான சூழலை சீர்குலைத்து வருகின்றது என்ற உண்மையை சர்வதேச சமூகம் புரிந்து விட்டது. நிலமைகளை மிக அவதானமாக அவதானித்து வருகின்றனர். அண்மையில் கற்பிட்டிக் கடலில் இடம்பெற்ற சிறிலங்காப் படையினரின் டோராப் படகு விபத்தையடுத்து கண்காணிப்புக் குழு அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

அந்த அறிக்கையில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் குறித்து அரசு இனியும் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது என காட்டமான அறிக்கை ஒன்றை விட்டிருந்தது. அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் ஆயுதக்குழுவுள்ளனர் என்பதை கண்காணிப்புக் குழு மீளவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயத்தை சிறிலங்கா அரசு அவசர அவசரமாக மறுத்துரைத்துள்ளது. ஒரே பல்லவியை அதாவது எங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் இல்லை என திரும்பத் திரும்பக் கூறுவதால் அவர்கள்தான் பொய்யர்களாக வேண்டிய நிலைமை ஏற்படுமே தவிர சிறிலங்கா அரசின் கருத்தை எவரும் ஏற்கும் நிலையிலில்லை. இதேவேளை வடக்கில் நடைபெற்ற நிகழ்வை நோக்குவோம்.

தியாக தீபம் அன்னை பூபதியின் 18வது ஆண்டு நினைவை முன்னிட்டு யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நடைபெற்ற நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றுவதற்குப் படையினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருந்ததுடன் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அன்னை பூபதியின் திருவுருவப் படத்தையும் அடித்து நொறுக்கி துவசம் செய்திருந்தனர்.

இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால். மக்களையும் விடுதலைப் புலிகளையும், ஏதோ ஒரு வகையில் ஆத் திரத்தையூட்டி இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகளை செல்லவிடக் கூடாது என்பதற்கான நடவடிக்கைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் நோக்குமிடத்து இரண்டாம் சுற்று ஜெனீவாப் பேச்சுக்கு முன்னதாக ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட்டு இராணுவக் கெடுபிடிகள், ஆட்கடத்தல்கள் என்பன நிறுத்தப்பட்டு இயல்புச் சூழல் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால் நிலமை அவ்வாறு ஏற்படக்கூடிய சாத்தியமில்லை. போர் பதட்டமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் மட்டக்களப்பு அம்பறை மாவட்ட பொங்கி எழும் மக்கள் படை மீண்டும் தமது நடவடிக்கையை ஆரம்பிக்கப் போவதாக எச்சரித்திருக்கிறது.

ஏனெனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் அமுல்படுத்தாத சிறிலங்கா அரசு இராணுவ வன்முறைகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்ட சூழலில்தான் பொங்கி எழும் மக்கள் படை வடக்கிலும், கிழக்கிலும் படையினருக்கு எதிராகவும், ஒட்டுக்குழுக்களுக்கு எதிராகவும், தமது தாக்குதல் நடவ டிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், ஜெனீவாவில் இரு தரப்புப் பேச்சுக்கான உடன்பாடு ஏற்பட்ட பின்னர் பொங்கி எழும் மக்கள்படை இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் தமது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தனர்.

ஆனால், ஜெனீவாப் பேச்சுக்குப் பின்னர் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களையடுத்தே பொங்கி எழும் மக்கள் படை தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் எந்த நேரத்திலும் பொங்கி எழும் மக்கள் படை தமது நடவடிக்கையை ஆரம்பிக்கலாம். எனவே சிறிலங்கா அரசு நிழல் யுத்தமொன்றை தொடர்ந்து மேற்கொண்டு வருவதால் இவை நிஜப் போரை வலிந்திழுக்கும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

அஸ்வதன்
மட்டக்களப்பு ஈழநாதம்

Print this item