| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 531 online users. » 0 Member(s) | 528 Guest(s) Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,120
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,098
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,558
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,550
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,954
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,338
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,989
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,954
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,221
|
|
|
| சீதனம் |
|
Posted by: வர்ணன் - 04-01-2006, 01:01 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
<b>
என் முகம் தீய்ந்து போனாலும்
மோசமில்லை - மோட்சமே
உழைக்காமல் வரும் ஊதியமே
சொர்க்கம் என்று ஆனாயேடா
மொக்கா மொக்கா!
என்ன சொல்ல ...........
எரியும் சிதையினிடையே
கைவிட்டு ..தகனம் கொள்
பிணத்திடையிருந்து
தங்கம் உருவ
நினைக்குது மானிடம்!
காலை எழுந்தவுடன்
தேநீர் வேண்டும்
கை கால் அமுக்கவும்..
அவளே வேண்டும்..
அடடா அடடா
கை கால் அலம்பியதும்
துடைக்க துண்டும் தந்து
நீ கலையாத அழகு கொள்ள
சுருங்கா ஆடையும் தந்து...
நீ கல்யாணம் கொள்கையில்
காலில் விழவும் செய்து...
யோசி ... யோசி
மலரை கசக்கி எறிய
மடி நிறைய ..
பொருள் கேட்குது..மானிடம்!!
அடுப்படியில் ஒருத்தியை
குந்த வைக்க...
முற்பணமாய்- ஐம்பது
இலட்சம் கேட்பது
போக்கிரித்தனம்!
கேட்டால்..
என் குடும்பமதை காக்க
இவ்ளோ செலவாச்சு என்கிறான்
அதுதான் - மறு
அறவீடு என்கிறான்...
அப்போது ஆணாய் இருந்தவன்
இப்போ எங்கே போனான்?
கல்யாண மேடையில்
காகம் போட்ட எச்சமென்றானாய் -நீ!!</b>
|
|
|
| சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியில் |
|
Posted by: yarlmohan - 03-31-2006, 10:00 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
<b>சிறிலங்காவில் இராணுவப் புரட்சி: ஜே.வி.பி. ஆட்சியைக் கைப்பற்றியது! தலைவர்கள் சிறையிலடைப்பு!! </b>
அரச தலைவர் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபக்சஇ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார். அவரது கதி என்ன என்று தெரியவில்லை.
ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கஇ சுற்றுலாத் துறை அமைச்சுப் பொறுப்பு வகித்த அனுரா பண்டாரநாயக்கஇ சுகாதாரத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக சில செய்திகளும் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் மற்றொரு தரப்புத் தகவலும் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் முக்கிய ஊடகங்களான டெய்லி மிர்ரர் மற்றும் கொழும்புத் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் பலரும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அடைக்கலமாகி உள்ளனர்.
மலையகத்தில் புதிய ஆயுதக் குழு ஒன்று உருவாகி இருப்பதாகவும் இராணுவத்தினருக்கும் அந்த ஆயுதக் குழுவினருக்கும் இடையே பல மோதல்கள் நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலையடுத்து விடுதலைப் புலிகளின் தங்களது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளனர்.
யாழ். குடா நாட்டில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினர் பலர் தென்னிலங்கைப் பகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் எஞ்சியுள்ளோர் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே பல இடங்களில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்திலும் இராணுவத்தினர் மீது எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடைபெறக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
|
|
|
| மறந்து விட்டாயா.........? |
|
Posted by: jcdinesh - 03-31-2006, 08:45 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
<b>மறந்து விட்டாயா.........?</b>
கண்களால் கைது செய்து
காதல் விதை விதைத்தவளே...
ஏழேழு ஜென்மமும்
உன்னோடுதான் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னோடு உறவாடியவளே....
காலம் மாறினாலும் - என்றும்
மாறாதது நம் - காதல்
என்றாயே......!
மொத்தத்தில் நீ இன்றி
நான் இல்லை என்றாயே
இது அத்தனையும்
பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும்
ஏன் என்னை மறந்து
பிரிந்து சென்றாய் - இதுதான்
உன் முதல் ஜென்ம
பந்தமா.........!
முகவரி தெரியாத காதலனாய்
உன் முகம் காணாத
ஏக்கத்தில் - ஊன் இன்றி
உறக்கம் இன்றி - உயிரற்ற
நிலையில் உருகிப் போய்
கிடக்கின்றேன்......!
கடைசியாக என்றாவது -என்
மரணச் செய்தியை கேட்டால்
ஒரு துளி கண்ணீராவது
விடு - அதுவே
நம் காதலுக்கு - இறுதி
அஞ்சலியாக இருக்கட்டும்...............!
<img src='http://img87.imageshack.us/img87/5535/imissu3yw.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| இலங்கையில் மட்டும பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் |
|
Posted by: I.V.Sasi - 03-31-2006, 01:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (12)
|
 |
இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப்
[வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்]
<img src='http://img513.imageshack.us/img513/531/musharraf200603319du.jpg' border='0' alt='user posted image'>
இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:
இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம்.
சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மகிந்த ராஜபக்ச.
இரு நாடுகளிடையேயான பொருண்மிய மற்றும் இதர ஒத்துழைப்பினூடாக அரசியல் உறவு மேலும் வலுப்படும். பயங்கரவாதத்துக்கான நிதி சேகரிப்பு சர்வதேச அளவில் தடுக்கப்பட்டு பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்ய வேண்டும்.
சிறிலங்கா இராணுவத்தில் என்னோடு பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர். அவர்களை பல்வேறு நிலைகளில் நான் பார்த்துள்ளேன். அவர்கள் மீது எனக்கு உயரிய மதிப்பு உண்டு. சிறிலங்கா இராணுவம் ஒழுக்கமான கட்டமைப்பு கொண்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டிய கடமை இராணுவத்துக்கு உண்டு என்றார் முசாரப்.
நன்றி:புதினம்
|
|
|
| நாங்கள் இருக்கிறோம் திருப்பி அடிப்போம் சொன்னார்: எழிலன் |
|
Posted by: I.V.Sasi - 03-31-2006, 12:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் எழிலன் எச்சரிக்கை.
<img src='http://img506.imageshack.us/img506/1395/elilanslmmmeet30030616hy.jpg' border='0' alt='user posted image'>
யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் திருகோணமலை மாவட்ட தலைவர் உவே ஜோன் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்தச்சந்திப்பு தொடர்பாக நேற்று காலை ஸ்ரீ லங்கா கடற்படையினரின் கரையோரம், மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி திருமலை கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரியப்படுத்தியதுடன் முறைப்பாட்டினையும் செய்துள்ளார். இதன்போது ஸ்ரீ லங்கா கடற்படையினரும் தங்கள் மீது கடற்புலிகள் வலிந்து தாக்கியதாக முறையிட்டுள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்தனர்.
<img src='http://img90.imageshack.us/img90/4898/elilanslmmmeet30030627au.jpg' border='0' alt='user posted image'>
இதற்கு பதிலளித்த திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்கள், இன்று காலை 10 மணியளவில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வேட்டுக்களை தீர்த்தவண்ணம் வந்த கடற்படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை எமது பிரதேசங்கள் நோக்கியும் நடத்தினர் இதனால் இவர்களால் ஏவப்பட்ட மோட்டார் குண்டு ஒன்றும் அரசியல்துறை அலவலகத்தில் விழுந்துள்ளது. இவ்வாறு தாக்குதல்களை நடத்தியவண்ணம் கடற்படையினர் எமது பிரதேசத்திற்கு அண்மையாக வந்தபோதே எமது போராளிகள் பதில் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
<img src='http://img506.imageshack.us/img506/3153/elilanslmmmeet30030636qw.jpg' border='0' alt='user posted image'>
இனிவரும் காலங்களில் எமது மக்கள் மீதோ, அல்லது எமது போராளிகள் மேலோ இனிவரும் காலங்களில் வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் நாம் இனியும் கைகட்டி பார்த்திருக்கமுடியாது. எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் உடனுக்குடன் பதில் தாக்குதல்களை எமது போராளிகள் நடத்துவர் எனவும் தெரிவித்துள்ளார்.
திருமலை கண்காணிப்புக்குழுத்தலைவர் சம்பூரில் எழிலனுடன் ஸ்ரீ லங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்திய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.
நன்றி:பதிவு
|
|
|
|