Yarl Forum
சீதனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சீதனம் (/showthread.php?tid=390)



சீதனம் - வர்ணன் - 04-01-2006

<b>

என் முகம் தீய்ந்து போனாலும்
மோசமில்லை - மோட்சமே
உழைக்காமல் வரும் ஊதியமே
சொர்க்கம் என்று ஆனாயேடா
மொக்கா மொக்கா!

என்ன சொல்ல ...........
எரியும் சிதையினிடையே
கைவிட்டு ..தகனம் கொள்
பிணத்திடையிருந்து
தங்கம் உருவ
நினைக்குது மானிடம்!

காலை எழுந்தவுடன்
தேநீர் வேண்டும்
கை கால் அமுக்கவும்..
அவளே வேண்டும்..

அடடா அடடா

கை கால் அலம்பியதும்
துடைக்க துண்டும் தந்து
நீ கலையாத அழகு கொள்ள
சுருங்கா ஆடையும் தந்து...

நீ கல்யாணம் கொள்கையில்
காலில் விழவும் செய்து...

யோசி ... யோசி
மலரை கசக்கி எறிய
மடி நிறைய ..
பொருள் கேட்குது..மானிடம்!!

அடுப்படியில் ஒருத்தியை
குந்த வைக்க...
முற்பணமாய்- ஐம்பது
இலட்சம் கேட்பது
போக்கிரித்தனம்!

கேட்டால்..
என் குடும்பமதை காக்க
இவ்ளோ செலவாச்சு என்கிறான்
அதுதான் - மறு
அறவீடு என்கிறான்...

அப்போது ஆணாய் இருந்தவன்
இப்போ எங்கே போனான்?

கல்யாண மேடையில்
காகம் போட்ட எச்சமென்றானாய் -நீ!!</b>


- Sujeenthan - 04-01-2006

கவிதை நன்றாக இருக்கின்றது. கருத்து அதைவிட நன்றாக இருக்கின்றது. வாசித்து முடித்தவுடன் பலபேர் கன்னத்தைத் தடவவேண்டி இருக்கும்.


- tamilini - 04-01-2006

சீதனம்.. நல்ல கருப்பொருளுடன் கூடிய அழகான கவிதை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 04-03-2006

வர்ணன் மீண்டும் நிஐ கவிதை ஒன்றை தந்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
அண்மையில் நடந்த சம்பவம் ஒன்று. ஒரே வகுப்பில் ஒரே பாடம் படித்து பட்டம் பெற்று ஒரே துறையில் வேலை செய்யும் இருவர் மனதார காதலித்தும் பெற்றோர்களின் சீதன ஆசையால் அவர்கள் பிரியவேண்டிய நிலை எற்பட்டு இருக்கு. அவர்கள் கேட்ட சீதனம் 10 இலட்சம் காசும் வீடு கட்டி தரச் சொல்லி கேட்டார்கள். பாவம் அந்த ஏழை தாய். ஒன்றும் செய்யமுடியமால் மகளின் காதலுக்கு முழுக்கு போடச்சொல்லிட்டா.