![]() |
|
இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா? (/showthread.php?tid=399) |
இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா? - I.V.Sasi - 03-31-2006 அலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களும் தமிழ் கூட்டமைப்பு வசம் - கரைதீவிலும் அமோக வெற்றி - பாண்டியன் - Friday, 31 March 2006 15:16 நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் அனைத்து ஆசனங்களையும் பெற்றுபெரு வெற்றி பெற்றுள்ளதுடன் கா ரைதீவுதீவு பிரதேச சபையின் ஐந்து ஆசனங்களில் நான்கை தனது வசமாக்கியுள்ளது. குறிப்பிட்ட இந்த இரு சபைகளிலும் போட்டியிட்ட ஈபிடிபி ஒட்டுப்படையினர் மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர். அலையடிவேம்பு பிரதேசசபை முடிவுகள் வருமாறு: <img src='http://img380.imageshack.us/img380/2920/edit2006033119rk.png' border='0' alt='user posted image'> நன்றி: சங்கதி - I.V.Sasi - 03-31-2006 திருமலை நகரசபை தேர்தல் - தமிழ் கூட்டமைப்பு அமோக வெற்றி - பாண்டியன் - Friday, 31 March 2006 14:48 திருகோணமலை நகரசபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி யீட்டியுள்ளது. இந்த சபைக்கான 12 ஆசனங்களில் 10 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், இரு ஆசனங்களை சுயேட்சைக்குழுவும் பெற்றுள்ளன. இதில் போட்டியிட்ட ஒட்டுக்கும்பலான ஈபிடிபி 259 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. திருமலை நகரசபையின் விபரமான முடிவுகள் வருமாறு: <img src='http://img96.imageshack.us/img96/1407/edit2006033124ow.png' border='0' alt='user posted image'> நன்றி: சங்கதி - I.V.Sasi - 03-31-2006 [b]பிரதேச வாதத்திற்கும், துரோகிகளிற்கும் தென்தமிழீழத்தில் - பத்மநாதன் - எல்லாளன் - Friday, 31 March 2006 14:18 கொலை அச்சுறுத்தல், அரச, ஒட்டுப்படைகளின் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கரையோரப் பிரதேசத்தில் உள்ள காரைதீவு, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அகிய மூன்று தமிழர் பிரதேசங்களுக்கான உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழரசுக்கட்சி போட்டியிட்டு பெரு வெற்றி வாகை சூடியுள்ளது. இது தமிழர்களுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியே ஆகும். இதற்கு தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எமது தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கினைப் பிரிப்பதற்கு பிரதேச வாதங்களை முன்வைத்து, எமது தாயகப் போராட்டத்தினை பலவீனப்படுத்த கடந்த 58 வருடங்களாக திட்டமிட்ட முறையில் தமிழின அழிப்பில் ஈடுபடும் சிங்கள தேசத்திற்கும், அரசியல் நாற்காலிக்களுக்காக தாவி அலைபவர்களுக்கும், சலுகைகளுக்காக தமது இனத்திற்கே துரோகம் இளைத்து வருபவர்களுக்கும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக வழங்கிய சாட்டை அடி இதுவாகும். எனவே எமது தன்னாட்சி உரிமை, தாயகம், தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் மூலம் நாம் தோற்றம் பெற்றுள்ளோம். எனவே எங்கள் இனத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிவரும் எமது தமிழ்த் தேசியப்படையான தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு என்றும் நாம் உறுதுணையாகவே நிற்கின்றோம். மக்களே விடுதலைப்புலிகள், விடுதலைப்புலிகளே மக்கள் என்பதை தென் தமிழீழ மக்கள் இந்த தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளனர். எனவும் தெரிவித்துள்ளார். நன்றி: சங்கதி செய்தி - மின்னல் - 03-31-2006 ஏய் இந்த அடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ஒரு முக்கியமான விசயம், திருமலை நகரசபையில் கரைதீவு பிரதேச சபையில் அனைத்து ஆசனங்களையும் தமிழ் கூட்டமைப்பு கைப்பற்றாததற்குக் காரணம், அங்கு முஸ்லீம் சிங்கள மக்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருப்பதே. தமிழ் மக்களின் வாக்குகளில் 97 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தமிழ் கூட்டமைப்பிற்கே சென்றுள்ளன. ஏய் இந்த அடி போமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? - SUNDHAL - 03-31-2006 பனைமரத்தில வவ்வாளா? எங்களுக்கே சவ்வாலா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - eelapirean - 03-31-2006 ஆகா சசி நல்ல ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறீர்கள்.இந்த அடி போதாது.இன்னும் கொஞ்சம் வேண்டும்.ஏனெனில் ஒரு வீதமான வாக்கை என்றாலும் எதிர் காலத்தில் எடுக்கக் கூடாது. - putthan - 04-01-2006 மீண்டும் ஒரு முறை தென் தமிழீழ மக்கள் பிரதேசவாதத்திற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். - கந்தப்பு - 04-03-2006 1 வீதமான எட்டப்பர்கள் கிழக்கில் இருக்கிறார்கள். அவைக்கு விரைவில் சங்குதான். |