| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 431 online users. » 0 Member(s) | 427 Guest(s) Applebot, Baidu, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,117
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,091
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,557
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,264
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,549
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,908
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,336
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,924
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,952
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| சிங்களத்தலைவர்கள் எப்போது வெட்கப்படுவார்கள் |
|
Posted by: Naasamaruppan - 04-01-2006, 06:31 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
திரு. சொல்ஹெய்ம் வந்தும் கிழக்கில் தடுத்து நிறுத்தமுடியாமல் போன அரை மென்தீவிர யுத்தம் வடக்கில் வவுனியாவிற்கும் பரவத்தொடங்கிவிட்டது. துணைப் படைகளுக்கு எதிரான பரவலான ஒரு சர்வதேச அபிப்பிராயம் நிலவும்போதும் துணைப்படைகளின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. ஆயின் நிலை மைகள் இணைத்தலைமை நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? இந்நிலையில் அடுத்தசுற்று ஜெனீவாச் சந்திப்பு சாத்தியமா?
சாத்தியம் என்றே தோன்றுகின்றது. ஒரு மென்தீவிர யுத்தத்துடன் சேர்ந்துவாழும் ஒரு யுத்தநிறுத்தம் சாத்தியம் என்றால் ஒரு மென்தீவிர யுத்தத்தையும் பேச்சுவார்த்தை களையும் சமாந்தரமாக எடுத்துச் செல்வதும் சாத்தியமே.அப்படியொரு அபத்தமான வளர்ச்சியை நோக்கியே நாடு போய்க் கொண்டிருக்கிறது.
இதற்கான அதிகபட்ச பொறுப்பை மேற்கு நாடுகளே ஏற்றுக்கொள்ளவேண்டி யிருக்கும். மேற்குநாடுகளின் பிடியில் உள்ள வழுவழுத்த தன்மை காரணமாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக நழுவி நழுவிச் செல்லக்கூடியதாய் இருக்கிறது. இணைத் தலைமை நாடுகளின் நிகழ்ச்சி நிரலில்; உள்ள இறுதித் தீர்வு அல்லது இடைக் காலத் தீர்வு எனப்படுவது தனது ஒற்றையாட்சிக்கு உட்பட்ட தீர்வைவிட பெரி யது என்பது மகிந்தவுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறது. ஆனால் இன்னொரு புறம் மேற்கு நாடுகளின் அணுகு முறையில் உள்ள இரட்டைத்தன்மைக் குள் அவரும் அவரையொத்த எல்லா சிங்களத்தலைவர்களும் சுழிக்கவும் உச்சவும் முடிகிறது.
இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை இணைத்தலைமை நாடுகளிடம் தொடக்கத்திலிருந்தே ஒருவித இரட்டை அணுகுமுறைதான் காணப்பட்டு வருகிறது. இணைத்தலைமை நாடுகளில் முதன்மையானதும் உலகப்பெரு வல்லரசு மாகிய அமெரிக்காவில் எல்.ரி.ரி.ஈ தடை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமெரிக்கா எல்.ரி.ரி.ஈயைப் பொறுத்தவரை ஒரு கண்டிப்பான நெகிழ்ச்சியற்ற மூத்த அண்ணனைப் போன்ற தோரணையுடனான ஒரு அணுகுமுறையைப் பேணி வருகிறது. ஆனால் அதேசமயம் இணைத்தலைமை நாடுகளில் காணப்படும் ஏனைய நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இது விசயத்தில் கண்டிப்புக் குறைந்த ஒரு சின்ன அண்ணனைப்போல நடந்துகொள்கிறது.
அமெரிக்காவும் சரி இணைத்தலைமை நாடுகளும் சரி யுத்தநிறுத்த மீறல்களைக் கண்டிக்கும்போதெல்லாம் நன்கு தெரிந் தெடுத்த வார்த்தைகளையே பிரயோகித்து வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்த அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் இது தெரியவரும். புலிகளைக் கண்டிக்கும்போது மிகவும் கூரான, காட்டமான வார்த்தைகளைப் பாவிக்கும் அமெரிக்கா அரசாங்கத்தைக் கண்டிக்கும்போது ஒப்பீட்டளவில் மென்மை யான, பூடகமான வார்த்தைகளையே பயன்படுத்தி வருகிறது.
ஒரு மரபு ரீதியான அரசாங்கத்தை அணுகு வதற்கும் ஒரு விடுதலை இயக்கத்தை அணுகுவதற்கும் இடையில் அவர்கள் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பேணவே முயல் கிறார்கள். இந்த வித்தியாசம் எப்பொழுதும் சிங்களக் கடும்போக்காளர்களை உற்சாகப் படுத்துவதாக இருந்து வந்துள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ உத்தியோகபூர்வமாக பயணம் செய்வதற்கு அங்கு வரவேற்பில்லை என் றொரு நிலை சிங்களக் கடும்போக்காளர் களை அதிகம் ஊக்குவிப்பதாகக் காணப்படுகின்றது. ஜெனீவாச் சந்திப் புக்கு முன் இலங் கைக்கான அமெ ரிக்கத் தூதுவரும் அமெரிக்க இணை இராஜாங்க செயலர் நிக்கலஸ் பேண்ஸ{ம் கொடுத்த ஊக்கமாத்திரைகளின் வீரியம் இன்னமும் தீராதிருக்கிறது.
நிக்கலஸ் பேண்ஸ் கொழும்பில் வைத்துக் கருத்துத்தெரிவித்தபோது எல்.ரி.ரி.ஈ யும், அல்ஹைதாவும் ஒன்றல்ல என்ற தொனிப்பட பூடகமாகச் சொல்லியிருந்தார். ஆனால் எல்.ரி.ரி.ஈ யைக் கண்டிக்கும்போது கூரான நேரடியான வார்த்தைகளைப் பாவித் திருந்தார். அந்த கூரான வார்த்தைகள் தந்த பரவசத்தில் இன்னமும் மிதந்து கொண்டிருக்கும் மகிந்தவின் அரசாங்கமும் கொழும்பில் உள்ள ஊடகக்காரர்களும் நிக் கலஸ் பேண்ஸ் எல்.ரி.ரி.ஈ யும் அல்ஹைதா வும் ஒன்றல்ல என்று சொன்னதன் மூலம் எதை உணர்த்த முற்பட்டாரோ அதை அதற் குரிய முக்கியத்துவத்துடன் புரிந்துகொள்ள வேயில்லை.
ஜெனீவாவில் நிகழ்ந்த முதல் சந்திப்பின் போது இணைத்தலைமை நாடுகளின் நிலைப்பாடு அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தாகவே காணப்பட்டது. ஆனாலும் அரசாங் கம் அதற்குப் பின்பு சுதாகரித்துக்கொண்டு விட்டது போலவே தோன்றுகிறது. துணைப் படைகளின் நடவடிக்கைகள் தொடர்வது என்பது அப்படித்தான் சிந்திக்க வைக்கிறது.
துணைப்படைகள் விவகாரம் ஒரு சர்வ தேச அபிப்பிராயமாக உருவாகிய பின்ன ரும் கூட துணைப்படைச் செயற்பாடுகள் வவுனியா வரைக்கும் வந்துவிட்டிருப்பது என்பது மகிந்தவின் மீது தமது செல்வாக் கைப்பிரயோகிப்பதில் இணைத்தலைமை நாடுகள் போதியளவு வெற்றியைப் பெறத் தவறிவிட்டதையே காட்டுகிறது. இதற்குக் காரணம் இணைத்தலைமை நாடுகளின் மேற்படி இரட்டை அணுகுமுறையே.
இந்த இரட்டை அணுகுமுறையை தனக்கு வசதியாக வடிவமைத்துக்கொண்ட தாலேயே மேற்கின் செல்லப்பிள்ளையான திரு.ரணில் விக்கிரமசிங்க சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னல் ஒன்றைப்பற்றி கதைத்துவந்தார்.
இந்த இரட்டை அணுகுமுறை காரண மாகப்பெற்ற துணிச்சலால்தான் திருமதி சந்திரிகா ரணிலை சமாதானத்தின் பேரால் பலியிட முடிந்தது. அதாவது இரட்டை அணுகுமுறையின் படி எல்.ரி.ரி.ஈ யின் மீது பிரயோகிக்கப்படக்கூடிய அழுத்தங்களை விடவும் அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப் படக்கூடிய அழுத்தங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. எனவே ரணிலைக் கவிழ்த்தாலும் இணைத்தலைமை நாடுகள் தன்மீது ஒரு கட்டத்துக்கும்மேல் அழுத்தங் களை பிரயோகிக்கமுடியாது என்ற துணிச்சல் சந்திரிகாவிடம் இருந்தது.
அதே துணிச்சல் இப்பொழுது மகிந்த விடமும் காணப்படுகிறது. அமெரிக்கா எல்.ரி. ரி.ஈ யை ஒரு துடக்காகத்தான் பார்க்கிறது என்ற வெளித்தோற்றம் உண்டாகும் விதத்தி லேயே அமெரிக்காவின் வெளிப்படையான உத்தியோகபூர்வ வார்த்தையாடல் கள் காணப் படுகின்றன. இந்தத் தோற்றப்பாட்டை தனக்கு ஆகக் கூடிய பட்சம் அனுகூலமானதாக ஆக்கிக் கொள்ள மகிந்த முயல்கிறார் என்ப தால்தான் இணைத்தலைமை நாடுகளின் அபிப்பிராயங்களையும் பொருட்படுத்தாது தனது அரசியல் இராணுவ வியூகத்துள் துணைப்படைகளை பங்காளிகளாக வைத் திருக்கிறார்.
பிலிப்பைன்ஸ் சமாதான முயற்சிகளிலும் இதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காணலாம். அங்கே தெற்குப் பிலிப்பைன்ஸில் தனி நாடு கோரிப் போராடும் எம்.ஐ.எல்.எவ் இயக்கத்துக்கும் அல்ஹைதாவுக்கும் அல்ஹைதா வின் துணை அமைப்புக்களான அபுசாயவ், ஜெம்மா இஸ்லாமியா போன்றவற்றுக்குமிடை யில் ரகசியத் தொடர்புகள் உண்டு என்ற ஒரு பரவலான சந்தேகம் நிலவுகிறது. இதைச் சாட்டாக வைத்து அமெரிக்காவின் உலகளாவிய இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான யுத்த வியூகத்துள் எம்.ஐ.எல்.எவ்.யும் சிக்க வைக்க முயல்வதன் மூலம் சமாதான களத் தில் அதன் பேரம்பேசும் சக்தியைக் குறைத்து விடலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நம்புகிறது. இதில் அவர்கள் குறிப்பிடத்தக் களவு வெற்றியைப் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது.
மகிந்தவும் எல்.ரி.ரி.ஈ யின் விசயத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை அதாவது இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையை தனது பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்குப் பாவிக்க முயல்கிறார்.
அரசாங்கமும்-எல்.ரி.ரி.ஈயும் சம அந்தஸ்துடைய இரண்டு தரப்புக்கள் அல்ல என்று மகிந்தவும் அவருடைய கூட்டாளிகளும் தயான் ஜெயதிலக போன்ற விமர்சகர்களும் பெரும்பாலான சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களும் நம்புகின்றன.
இந்த நம்பிக்கைதான் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஒரு நட்சத்திர அந்தஸ் துடைய கதாநாயக நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறது.ஒரு இராணுவத் தளபதிக்கு இருக்கவேண்டிய வாயடக்கத்தை அவர் அண்மைக்காலங்களில் காட்டத் தவறியதற் குரிய காரணமும் இதுவே.
எனவே நிலைமை கையை மீறிப்போவ தற்குரிய ஒருபக்க வளர்ச்சிக்குத் தேவை யான ஊக்கவிசைகளை இணைத்தலைமை நாடுகளின் இரட்டை அணுகுமுறையே வழங்கிவருகிறது.
இலங்கைத்தீவில் மட்டுமல்ல பலஸ்தீனத்திலும் அமெரிக்கா இத்தகையதொரு இரட்டை அணுகுமுறையைத்தான் பேணிவரு கிறது.அங்கே நடப்பது ஒரு அருவருப்பான இரட்டை அணுகுமுறை. உலகத்தின் மனச் சாட்சியைக் கூசச்செய்யும் விதத்தில் அங்கே அமெரிக்கா தனது செல்லப்பிள்ளையான இஸ்ரேலை எல்லா விதங்களிலும் பாது காத்து வருகிறது. அங்கு சமாதானம் இழு வுண்டு செல்லக்காரணமே அமெரிக்காவின் இரட்டை அணுகுமுறைதான்.
ஆனால் சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சமாதான களங்களில் அமெரிக்கா அங்குள்ள அரசுகளின் மீது அல்லது பலம்வாய்ந்த தரப்பின் மீது அதிகரித்த அழுத்தங்களைப் பிர யோகித்திருக்கிறது. இஸ்ரேலைப் பாதுகாக்கும் அதேயளவுக்கு அவர்கள் மகிந்தவைப் பாதுகாக்கவில்லைத்தான். ஆனால் சமாதானத்துக்கான அவர்களுடைய இரட்டை அணுகு முறையே இலங்கைத்தீவில் சமாதானம் இழு வுண்டு செல்லப் பிரதான காரணம் என்பதை அவர்கள் உணர இது ஒரு நல்ல தருணம்.
ஒரு சர்வதேச அபிப்பிராயத்தை மதியாது மகிந்த துணைப்படைகளை தனது வியூகத் துள் ஒரு பங்காளிகளாக்கத் தேவையான துணிச்சலை இந்த இரட்டை அணுகுமுறையே வழங்கியிருக்கிறது. மட்டுமல்ல, மகிந்தவைப் போன்ற அவருக்கு முன்பிருந்த மற்றும் இனி வரப்போகின்ற எல்லாச் சிங்களத்தலைவர் களும் தமது இனக்குரோத அரசியலைக் குறித்து இந்த நூற்றாண்டிலும் வெட்கப்படத் தேவையில்லாத ஒரு சர்வதேசச் சூழலை யும் அது தொடர்ந்தும் பேணிவருகிறது.
முன்னைய நூற்றாண்டுகளில் அடிமை வியாபாரம் ஒரு வழமையாக இருந்தது. ஆனால் பிந்திய நூற்றாண்டுகளில் அதற்காக மனிதகுலம் வெட்கப்பட்டது.
தென்னாபிரிக்காவில் நிலவிய இன ஒதுக்கல் அரசியலின் கீழ் மண்டேலா கால்நூற்றாண்டுகாலம் சிறையிலிருந்தார். ஆனால் இன்று இன ஒதுக்கல் எனப்படுவது ஒரு வெட்கப்படும் விவகாரமாகிவிட்டது.
கம்பூச்சியாவில் போல்பொட் தனது சொந்த மக்களில் சுமார் பத்து இலட்சம் பேரை வேட்டையாடி கம்பூச்சியாவின் வயல் வெளிகளை மண்டையோடுகளால் நிறைத் தார்.இன்று அந்த மண்டையோடுகளைப் பார்த்து மனிதகுலம் கூசிநிற்கிறது.
அண்மையில் சிறையில் இறந்துபோன மிலோசவிச் அதிகாரத்தில் இருந்த காலங் களில் அகன்ற சேபியாவை உருவாக்குவதற் காக ஆயிரக்காணக்கான பொஸ்னியர்களை யும் ஏனைய இனத்தவர்களையும் கொன்று குவித்தார். ஆயிரக்கணக்கில் முஸ்லிம் பெண் களைச் சிதைத்து வலுக்கட்டாயமாக சேர்பியக் குழந்தைகளைப் பெறுவித்தார். ஆனால் வரலாறு இப்பொழுது அவரை ஒரு இறைச் சிக்கடைக்காரனாகத் தீர்ப்பளித்துவிட்டது.
இதுபோலவே இலங்கைத்தீவிலும் சிங்களத் தலைவர்கள் தமது இனச்சாய்வு மற்றும் இனக்குரோத அரசியலுக்காக எப் பொழுது வெட்கப்படப்போகிறார்கள்? அல் லது அவர்கள் வெட்கப்படவேண்டிய ஒரு சர்வதேசச் சூழலை இணைத்தலைமை நாடு கள் எப்பொழுது ஏற்படுத்தும்?
நிலாந்தன்
ஈழநாதம்
|
|
|
| நம்மீது நம்பிக்கை வைக்கலாமே! |
|
Posted by: Naasamaruppan - 04-01-2006, 06:28 PM - Forum: தமிழ் /தமிழர்
- No Replies
|
 |
மக்கள் பலவகையான நம்பிக்கையுடன் தான் வாழ்கிறார்கள். நம்பிக்கைகளில் மிக உயர்ந்தது தன்னம்பிக்கைதான்.
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே. மனிதனோட பலம் எதில நம்பிக்கையிலே. இன்றைக்கிருப்போர் நாளை இருக்கமாட்டார் இதுதான் உலகம்.
'நெருநல் உளனொருவன் இன் றில்லை என்னும் பெருமை படைத் திவ்வுலகு'
என்பது குறள். இப்படியெல் லாம் முதுமொழிகள் இருந்தாலும் நீண்ட நாட்கள் வாழுவோம். நீண்ட நாட்கள் வாழவேண்டுமென்ற நம் பிக்கை ஒவ்வொருவர் மனதிலும் உண்டு. அறுவடை செய்வேன். அந்த வருமானத்தில் வீடுகட்டி ஆடை அணிமணி புனைந்து வாழு வேன், என்ற நம்பிக்கை இருப்ப தால்தான் விதையை நிலத்தில் விதைக்கிறோம். பிற்காலத்தில் அறி வாளியாக வரவேண்டும் என்பதற் காகத்தான் இன்று கல்வி கற்கிறோம்.
ஆக நம்பிக்கை என்பது தன்மீது கொண்ட நம்பிக்கையாக இருப்பதே மேற்கூறிய வகைகள.; எது எப்படிப் போனாலும் 'சுடலை ஞானம்' இல்லாதவர்கள் வராத வர்கள் எவரும் இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றும் மக்களிடையே விரவி நிற்பது பெரும் மூடநம் பிக்கை. செய்வினை, சூனியம், மருந்தீடு, பிரிவினை, வசியம், முகமாத்து என்று பல பெயர்களில் இந்த விடயங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாமியார்களும் அதிகம். படித்த நாகரிகமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கூட இம்மாதிரி நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு சாமியார் களையும், மந்திரவாதிகளையும் வளர்க்கும் மந்திர வியாதி பிடித்தலைகின்றனர்.
ஆயிரம் கோவூர்கள் பிறந்தாலும் திருத்தமுடியாத அளவுக்கு கெட்டுப்போயிருக்கிறது சமுதாயம்.
மனநோயுற்ற ஒரு பெண்ணை அதற்கான சிகிச்சைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பதே தெரியாமல் பூசாரிகளிடம் கொண்டலைந்து பணமும் செலவு செய்து இரண்டிலும் முடியாமல் போகவே கையைப்பிசைந்து கொண்டிருந்தார்கள். அதற்குள் அந்தப் பெண்ணை உறவினர்கள் தம்முடன் பங்குபோட்டு அழைத்துச் செல்ல அவள் தற்கொலை செய்து கொண்டாள். மனப்பிறழ்வு வைத் திய பரிசோதனைக்குத் தப்பி விட்டது. ஆனால் இவர்களுடைய வளர்ச்சியைப் பொறுக்காமல் யாரோ செய்வினை செய்து போட் டார்கள் அதாலதான் அவள் செத்தது என்று சட்டத்துக்கே பிடிபடாத கொலை என்றவகையில் கதை முடிந்தது.
சாதாரணமாக வரும் காய்ச்சல், தலை யிடி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கே மந்திரத்தில் மருந்து செய்து தீர்க்கவல்ல மந்திரவாதிகள் உண்டு. நோய் தீர்ந்த பிறகும் மூன்று மாதம் பூசை செய்யவேண்டும். விளக் குப்போடவேண்டும். கிரக சாந்தி செய்யவேண்டும் என்று தொடர்ந்து வசூ லிக்கும் பூசாரிகளுக்குச்; சொந்தமாகக் கோயில்களும் உண்டு.
இவர்களையெல்லாம் மிஞ்சக்கூடியதாக கன்னிப்பெண்களை வாட்டும் பசலை நோயைப் புதுவிதமுனிதாக்கிவிட்டதாகக் கூறி அவர்களை தங்கி நின்று சிகிச்சைபெறவேண்டு மென்று ஒரு மந்திரவாதி கூறப் பெற்றோராகிய மூடர் அவ்வாறே பெண் ணைத் தங்கி வைத்தியம் செய்ய அனுப்பினார் களாம். வைத்தியரோ ஒரு மர்மப்புகையைப் போட்டுப் பெண்ணை மயக்கி அப்பெண்ணை பாலியல் உறவுக்குப் பயன்படுத்தியுள்ளார். இது நடந்தது வவுனி யாவின் தொலைவுக் கிராமம் ஒன்றில்.
அநேகமான பூசாரிகள் மந்திரவாதிகள் காவற்றுறை யினரோ சட்டமோ தேடாத தொலைவுகளில்தான் இருக்கின்ற னர். நடுக்காட்டின் மத்தியில் போக்குவரத்து வசதிகளற்ற குக்கிராமங்கள் அதிகம் உண்டு. அங்கெல்லாம் பூசாரிகள் உண்டு. கொம்பறுத்த குளம், மூன்று முறிப்பு, மா உருவி, பாலைப் பாணி, பறங்கியாறு, சோலை அரசன்குளம் எனக் கூறிக் கொண்டே போகலாம். இவற்றை இன்னமும் ஒரு சட்ட நடவடிக் கைக்கு உட்படுத்த முடியவில்லை. இந்த தான்தோன்றி வைத்தியர்க ளெல்லாம் மதச்சாயம் பூசிக்கொண்டுள்ளனர். ஆக மக்கள் ஒரு விழிப்புணர்வுள்ளவர்களாக மாறும் வரை இவர்களும் இருப்பார்கள்.
கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிணக்குகளைப் புரிந் துணர்வுடன் பேசித் தீர்க்கவேண் டும். ஆனால் விபூதிபோட்டுத் தீர்ப்பது தெரியுமா? நடக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் பிரச்சினை வழக்கும் போட்டா யிற்று. அதற்குள் கணவன் "ஆரெட்டயோ" மந்திரிச்சுத் திரு நூறு போட்டிட்டார். (எங்க?) என்னையறியாம எனக்கு என்ன நடந்ததெண்டே தெரியேல்ல... இப்ப சுகமில்லாம இருக்கிறன.; (கெட்டிக்காரக்கணவன்) இனி உறவாப்போகச் சொல்லி சொல்லு கினம். எப்பிடியுங்கோ? என்று மூக்கைச் சிந்தும் பெண்.
என்ர அவருக்கு என்னில பாசங்குறைஞ்சுபோச்சு. அவர் வேற ஒரு பொம்பிளையிட்டப்போறார். அவர் நல்லவர்தான். அவற்ற சாரத்தை எடுத்துத்தான் செய்வினை செய்தவளாம். என்னைக் கண்ணில கட்டேலாதமாதிரி செய்திருக்காம். நான் பிள்ளய வச்சுக்கொண்டு கண்ணீரோட திரியிறன் என்று ஒரு பெண்.
"இருந்தாப்போல நெஞ்சுக்க படப்படப்படண்டு அடிக்குது. தலைக்கு மேல ஏதோ றீங் றீங் றீங்கெண்டு பறக்கிறமாதிரி- வேர்க் குது. ஒண்டுமா விளங்கேல்ல"பரியாரியட்டதான் காட்ட வேணும். நூல் முடிஞ்சா சரியாப் போகும். இதெல்லாம் பாமரப் பெண்களின் பரிதாப உளறல்.
ஆனால் படித்த நாகரிக மானவர்களும் இதேயளவில் கூழைக்கும்பிடு போட்டு நிற்பது தான் ஆச்சரியம்.
இதுபற்றி மாந்திரீக வேலை செய்யும் ஒருவரிடம், "எந்தளவுக்கு உங்கட வைத்தியம் சாத்தியப்படுது?" என்று கேட்டதற்கு அவர் "மந்திரமும் குருவும் மருந் தும் திருவருளும் உண்டென்ப வருக்கு உண்டு. இல்லை என்ப வர்க்கு இல்லை" என்றார்.
"நாங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. மனதை ஒருநிலைப்படுத்தி அவர்களது நோய் தீரவேண்டுமெனப் பிரார்த்தனை செய்கிறோம் அவ்வளவு தான்" இது குஞ்சுக்குளம் சோதிடரும் பரியாரியும், இவர் ஒரு பழைய அரச ஊழியரும் கூட.
வவுனியாவில் ஆசிரியத் தொழில் செய்பவர்கள் கூடவே, கலியாணத்தரகர்களாகவும் உள்ளனர். இதேநிலை யாழ்ப்பாணத்தி லும் உண்டு. கலியாணத் தரகர் களுக்குக் கூடவே சாதகம் பார்க்கவும் கணிக்கவும் தெரிந்திருப்பது ஒரு மேலதிகத் தகைமை. இதில் வேடிக்கை என்னவென்றால் சாத கங்களில் நல்ல ஜாதகம் தோச முள்ள ஜாதகம் என்று இரண்டு வகையாம்- இதில் எந்த வகை ஜாதகத்தையும் பொருத்திவிடும், மாற்றிவிடும் திறமை இவர் களுடையது.
எம்மத்தியில் புழக்கத்தில் உள்ள இம்மாதிரி மூடநம்பிக்கை களை வைத்துக்கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும். பேய், பில்லி, சூனியம் என்பவை சீனா, பர்மா, இந்தியா, பாகிஸ்தான், எகிப்து என இருந்தது போய் அமெரிக்காவரை வந்துவிட்டது என்கிறார்கள். வந்துவிட்டதற்குக் காரணமே மனிதன் தன்னம்பிக்கை இழந்தது மட்டும்தானா? காலத் துக்குக்காலம் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் செயற்கையாக வரும் ஆக்கிரமிப்புப் போர் அனர்த் தங்கள் என்பனவெல்லாம் மனி தனை உலுக்கிவிட்டது. இவற்றை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இல்லாததாக எண்ணி சோர்ந்து போவதே காரணம்.
இயற்கையை வென்று விட்ட மனித சாதனைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் நிகண்டு நூல் குறிப்பிட்ட விடயம் இது. "மனிதர் கள் இரும்புக்குதிரைகளில் ஏறிப் பறப்பார்கள், வானத்தில் பறக்கவும் நீருள் வாழவும் அவர்களால் முடியும். தீபங்கள் கீழ்நோக்கி எரியும்" அக்காலத்தில் இதெல்லாம் நகைப் புக்கிடமான ஒன்றுதான். புராணங்களில் நாம் கண்ட மாயக்கண்ணாடி இன்று வீட்டுக்கு வீடு வு.ஏயாக வந்துள்ளது. இன்று வகைவகையான உந்துருளிகளில் பறக்கும் மனிதர்கள், விமானம். நீர் மூழ்கி, மின்சார விளக்குகள் என இவை சாத்தியப்பட்டிருக்கும்போது இவற்றில் மந்திரமாயங்கள் எதுவும் இருக்கிறதா? நம்பிக்கைகள் என்பன செயல்களின் அடிப்படையில் பெறப்படவேண்டியது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்.
மூடநம்பிக்கைகளையும் தெய்வ நம்பிக்கையையும் போட்டுக்கலந்து குழப்பமடையாமல் நாம் நம்மீது நம்பிக்கை, விழிப்புணர்வு கொண்ட வர்களால் சமுதாயம் திருத்தப்பட வேண்டும். மக்கள் சுய நம்பிக்கையை விருத்திபெற முனைய வேண்டும். நோய்க்கு மருந்துதான் நிவாரணி.
மந்திரமல்ல... புரிந்து கொள்வோம்.
மாயா
ஈழநாதம்
|
|
|
| ஆனையிறவு பிடித்தது வெறும் கதையல்ல |
|
Posted by: Naasamaruppan - 04-01-2006, 06:13 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
பல சண்டைகளில் வெற்றி கொண்ட பெருமிதம் ஒரு புறமிருக்க, அதேகளங்களில் போராளிகளின் இழப்புக்கள் நெஞ்சை வருட, அவர்களின் பல்லாயிரக் கணக்கான கனவுகளில் ஒன்றானதும் அனைத்துப் போராளிகளினதும் முதன்மைக் கனவான "ஆனையிறவை எதிரியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற" எண்ணத்துடன் ஒவ்வொரு போராளியும், தன் ஈழவிடுதலைக் கருவுக்கு உயிரிட்டு சண்டைக்கு தயாராகினர்.
நீண்டகால தங்களது கனவு மெய்ப்படப்போவதும், வெற்றி எமக்கே என்ற அசையாத நம்பிக்கையுடனும் போராளிகள் சண்டைக்குத் தயாராகி விட்டனர்.
இதுவரை தாங்கள் செய்த சமர்களிலேயே மிகப்பெரிய சண்டைக்கு தயாராகிவிட்ட உணர்ச்சிப் பெருக்கால், ஆண்,பெண் போராளிகள் அனைவரும் சிரிப்பொலியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த தவறவில்லை. அந்த நேரத்தில் கிடைத்த உணவுகளை தங்களிடையே பகிர்ந்து கொண்டும், கிடைத்த பானங்களை ஒருவர் மாறி ஒருவராகக் குடித்துக்கொண்டும், அந்நேரத்தில் மட்டும் ஓடியாடி ஒருவர் மாறி ஒருவராக அடித்துப் பிடித்து விளையாடவும் செய்தனர்.
பகிடிக் கதைகளை ஒருவர் மாறி ஒருவராகப் பேசுவதும் , ஒருவரை ஒருவர் குறைகூறி எல்லோரும் சிரிப்பதுமாக அந்த நிமிடங்கள் இருந்தாலும் தங்களின் எண்ணங்கள் யாவற்றையும் எதிர்கொள்ளப் போகும் ஆனையிறவு தாக்குதல் பற்றியே நேர்நோக்கி இருந்தனர்.
சண்டைக்கு தயாரான மகிழ்வான சில நிமிடங்கள் கவலை தரும் நிமிடங்களாக மாறத் தொடங்கியது. முறையாக படைய செயற் பாடுகளுக்கு அமைவாக பிரித்து செயல்வடிவம் கொடுக்க இருந்த அணிகள் சண்டைக்கு தயாராகினர்.
தலைவரின் பெரியதொரு எண்ணக்கருவிற்கு உயிர் கொடுக்க களம் விரையவென காத்திருந்த அணிகளுக்கான ஒன்றுகூடல் எளிமையும் அமுக்கமும் நிறைந்த ஓர் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.விடுதலைப்புலிகளின் படை வலுக்கொண்ட அனைத்து அணிகளும் ஒன்றுகூட்டப்படுகின்றன.
25.03.2000அதிகாலை 06.05 மணி படைய நியதிகளுடன் அணிவகுத்திருந்த அணிகளுக்கு முன்பாக உறுதி உரையை போராளி ஒருவன் சொல்ல அனைவரும் மிக உறுதியுடனும், தெளிவுடனும் கூறி முடிக்க "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்றே முழங்கினர்.
குடாரப்பு தரையிறக்கம் ஊடாக ஆனையிறவுத் தளத்தை வெற்றி கொள்ளும் நடவடிக்கைக்கு தலைமையேற்கப்போகும் அனைத்து கட்டளைத் தளபதிகளும் நடக்கவிருக்கும் சண்டை சம்பந்தமான அனைத்து திட்டங்கள், நகர்வுகள், நகர்வுப் பாதைகள் அனைத்தையும் அதில் ஏற்படும் மாற்றங்கள், மாற்றங்களைச் செய்யவேண்டிய உடனடி நடவடிக்கைகள் என்பனவற்றை தெளிவு படுத்துகின்றனர். சிறப்பாக இதுவரை நடந்த தாக்குதல்களிலேயே இல்லாத அளவு நேர முகாமைத்துவத்தை யும் கடைப்பிடிக்க பணிப்புகள் வழங்கப்பட்டன.
பாடல், ஆடல்கள் சில நிமிடங்கள் தொடர அணிகள் நகரத் தொடங்கின. போராளிகளின் கைகள் ஒருவர் மாறி ஒருவருக்காய் கையசைத்து விடை பெற்றன. கையசைத்து கையசைத்து சென்றவர்கள் தங்களது பிரிவை உணர்ந்தவர்களாய் ஓடோடி வந்து கட்டியணைத்து "போயிட்டுவாறன்"
" கவனமாச் சண்டை பிடிக்கோணும் என்ன! என்று சொல்லிவிட்டு ஓடிச்சென்று தங்களின் அணிகளில் சேர்ந்து கொண்டனர்.
மீண்டும் திரும்பிப் பார்த்து விடைபெறுதல். மீண்டும் கையசைவுகள் என எல்லாமே தொடர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்பு தரையிறக்கத்திற்கு முதன்மையாக தரையிறங்கும் 70 பேர் கொண்ட சிறப்பானதும், கடுமையானதுமான அணி அன்று மாலையே கடற்கரையை அடைந்தது.
தமிழீழத்தின் வரலாற்றில் முதல் தடவையாக சிறப்பாக, மிகக் கடினத்திற்குள், "கடற்புலிகள்" தரையிறக்கம் செய்யத் தயாராகிவிட்டனர். கடற்கரையிலும் கையசைத்து விடைபெறல் தொடர தமிழீழக்கடலில் தமிழர் படை ஆனையிறவு கொடிய அரக்கனை வெற்றிகொள்ள பயணித்து விட்டது.
கடினமே உருவான கடற்புலிகளின் செயல் மேலும் பலமடங்கு கடினமான போதும் இறுதிவரை உறுதி தளராது பலமுறை படகுகளோடு போராடி குடாரப்பு கரையை நெருங்கினர். "கடலிலே காவியம் படைப்போம்" என்ற கடற்புலிகளின் வீரமுழக்கம் பொய்த்துவிடாமல் கரையில் இறங்கிவிட அணிகள் ஒன்றுமாறி ஒன்று நகரத்தொடங்கின.
இடறு முரடான பாதை ஒருபுறம், படையப் பொருட்களின் பாரம் ஒருபுறம், இதைவிட நீரேரியின் நீர், சகதி, அடிக்கடி காலை சிக்க வைக்கும் நீர்த்தாவரங்கள் ஒருபுறம் குறிக்கப்பட்ட நேரம் ஒருபுறமெனப் புலிகள் அணி இன்னோரன்ன கடின உபாதைக்குள் சிக்குண்டு, சிறுகடல் கடந்து முன்னேறத் தொடங்கியது.
எஞ்சியிருக்கும் பாதையும் தென்னங்காணிகளில் உழுபொறிகொண்டு உழுது கிளறிவிடப்பட்ட மண் என்பதனால் பல தடவைகள் அவர்களின் பாதங்கள் கரையில் சறுக்கியும், இடறியும் விழுந்தனர்! எழும்பினர்! மீண்டும், மீண்டும் விழுந்தெழும்பி உன்னத பயணம் தொடர்ந்தபோதே நெடுநாளைய தமிழரின் கனவை நனவாக்கவெனத், தங்களின் உயிர்விலையால் ஆனையிறவு கொடிய அரக்கனை அழித்து வெற்றிகொள்ளும் நெடிய பாதையை திறந்துவைத்து சரித்திரம் படைத்தனர்.
கரும்புலிகளின் உன்னத தியாகத்தின் வடிவில் அமைந்த வீரத்துடன் புலிகள் அணி, இத்தாவிலில் நிலை கொண்டது.
2000ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 26ஆம் நாள் அதிகாலை 01.15மணிக்கு குடாரப்பு ஊடாக இத்தாவில் சென்ற சிறப்பு அணி தனது நிலையை உறுதிப்படுத்தி நிலை கொண்டு அரண் அமைத்தது.
70பேர் கொண்ட சிறப்பு அணி முன்சென்று அரணமைத்து, எறிகணைகள் ஆதரவுச் சூட்டெடுத்து, எதிரி முன்னேற விடாமல் தடுக்க எல்லாத் தயார்ப்படுத்தலையும் செய்து முடிக்க, இத்தாவிலில் எதிரிக்கும், புலிகளுக்கும் சிறிதளவு யுத்தம் வெடித்த போதே பொழுதும் விடிந்தது. அதே கணம் திட்டமிட்டபடி எல்லா அணிகளும் இத்தாவில் பகுதியை வந்தடையத் தொடங்கின.
26ஆம் நாள் பொழுது விடிந்தது. வேட்டுச்சத்தங்களுடனும், எறிகணை வெடிப்பினூடேயுமாகும். அன்று தொடர்ந்தது வெறும் சண்டையல்ல, சரித்திரம் கூறும் நிகழ்வு. சிங்கள ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக எழுந்த மானப்போர் என்பதனால் நீயா நானா என்று வீறிட்டெழுந்தார்கள் விடுதலைப் புலிகள். போகேக்க கடலால போய் வரேக்க கண்டிவீதி தரையால வரவேண்டும் என்ற தலைவரின் வீரமந்திரம் தாங்கிய உயிர்களாய் ஒவ்வொரு போராளியும் போரிடத் தொடங்கினர்.
தரையால போகின்ற பாக்கியம் சிலருக்கே கிடைத்தாலும் தங்கள் இன்னுயிர்த் தோழர்கள் தலைவரின் சொல் ஏற்று ஆனையிறவு அரக்கனைக் கொன்றொழித்து வெற்றியுடன் செல்வதைக் கண்டு இத்தாவிலில் வீரகாவியமான மாவீரர்கள் நிச்சயம் மகிழ்ந்திருப்பர்.
இத்தாவிலில் 26ஆம் திகதி அதிகாலை 2.15இற்கு கேட்ட முதலாவது வேட்டோசையுடன் பல்லாயிரக் கணக்கான நவீனபடைய சாதனங்களைக்கொண்ட சிங்கள அரக்கர்களுக்கும், உயரிய மனோதிடத்தை நவீன படைய சாதனமாகக் கொண்ட விடுதலைப்புலிகளுக்கும் சண்டை தொடங்கியது. புலிகள் விட்டுக்கொடுக்காமல் பல்லாயிரம் படைகளையும், அவனது நவீன படைய உத்திகளையும் எதிர்த்து பல இன்னல்களுடன் துணிவுடன் போரிட்டனர்.
ஒரு நாள் இரண்டு நாளென தொடர்ந்த சண்டை 34 நாட்களை அடைந்தது. பசி,தாகம், களைப்பு, நித்திரையின்மை, தொடர் வேலைகள், ஓய்வே இல்லை என்ற நிலையிலும் தளராது ஈடுபட்டு இறுதி நாள்வரை உறுதியுடன் போராடி சிங்கள அரசபடைகளுடனான படைய சமநிலையை நிரூபித்து பல வருடமாக எதிரியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டிருந்த ஆனையிறவை கைப்பற்றினர் என்பது வெறும் கதையல்ல. வரலாற்று செயலுருவில் நிரூபித்துக்காட்டிய தமிழரின் வீரம் மட்டுமல்ல. சமகால வரலாற்றில் நிரூபித்து தமிழீழ விடுதலைப் புலிகளினதும், தமிழீழத்தினதும் புதிய விடுதலைப்புலியுணர்வுடன் கூடிய வீரமாகும்.
க.மிரேசு
ஈழநாதம்
|
|
|
| சஞ்சலம் வந்தால் வரட்டும் |
|
Posted by: Magaathma - 04-01-2006, 03:56 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (1)
|
 |
சஞ்சலம் வந்தால் வரட்டும்
சஞ்சலம் வராமல் இவ்வுலகில் வாழவும் முடியுமோ? இவ்வுலகிற் பிறப்பதையே பிணியாகச் சொல்லப்பட்டிருக்கிற பொழுது சஞ்சலத்தைப்பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சஞ்சலம் வந்துகொண்டேயிருக்கும். ஆனால், அதனால் பாதிக்கப்பாடாமலிருக்கவும் வழி காட்டப்பட்டிருக்கின்றது. சற்குருவின் கடாட்சத்தாலும் மெய்யறிவைப் பெறுவதாலும் அவ்வழி எதுவெனவறிந்து, அதைக் கடைப்பிடித்தொழுகுவோமாகில், சஞ்சலம் நம்மை அலைக்கவும் முடியாது. அசைக்கவும் முடியாது.
இவ்வுலகதிலோ யாவும் அநித்தியம். இத்தேகம் அநித்தியம். பஞ்சபூதங்கள் அநித்தியம். ஐம்பொறி; ஐம்புலன்கள் அநித்தியம். பெண்டிர்பிள்ளை அநித்தியம். பொருள்பண்டம் அநித்தியம்; சீர்சிறப்பு அநித்தியம். பேர் புகழ் அநித்தியம். அதிகாரமும் செல்வாக்கும் அநித்தியம். எல்லாம் அநித்தியம். ஆகையால், இவைகளில் மயங்கிப் பற்று வைப்பது சஞ்சலத்துக்கிடமாகும். இவை நாமல்ல. இவை நமக்கந்நியமானவை. கருமம் புரிவதற்கு இவைகள் உபயோகப்படுவன. அவைகளை அந்த உபயோகத்துக்குதவக்கூடிய நிலையில் வைத்துப் பேணவேண்டியது முறை. ஆனால் அவை நமக் கென்றும் வேண்டியவையுமல்ல. நம்மைவிட்டுப் பிரியாது என்றும் இருப்பவையுமல்ல. ஆகையால், மனத்தை விடயங்களில் அதிகஞ் செல்லவிடுவதால் சஞ்சலத்தை வரவழைப்பதல்லாமல் வேறொரு பிரயோசனமும் பெறமுடியாது.
யாக்கையே நிலையற்றபொழுது யாக்கை சம்பந்தமாக அநுபவிக்கும் சுகங்கள் நிலைத்தாலென்ன, நிலையா விட்டாற்றானென்ன? ஈற்றில் எல்ல்லாம் அநித்தியமாகவே முடிகின்றது. ஆகையால் அநித்திய வஸ்துக்களில் பற்று வைப்பதில் ஒரு சுகமுமில்லை. கடைசியில் எல்லாம் சஞ்சலத்தையே வருவிக்கின்றன. ஒன்றும் பூரணவின்பத்தைக் கொடுப்பதாயில்லை. அவற்றின் சுகம் சிற்றின்பமாகவே முடிகின்றது. சிற்றின்பம் நிலையாத இன்பம். அதன் விளைவு துன்பம். அது நம்மைப் பந்தப்படுத்தும் இன்பம். உலக வாழ்வின் சஞ்சலங்களையெல்லம் கண்ட விவேகி அச் சஞ்சலங்களுக்குக் காரணமாயிருப்பனவற்றை ஒரு பொழுதும் நாடமாட்டான்.
நித்தியா நித்திய விவேகம் ஒன்றுமே மனிதனைச் சஞ்சலத்திலிருந்து மீட்கக்கூடும். நித்தியானந்த நித்திய வஸ்துவாகிய இறை எம்முடன் என்றும் உள்ளது. அது நம்மை விட்டு ஒரு காலத்திலும் பிரியாதது. அதை உணர்வதே வீடு. அதைப் புசிப்பதே பேரின்பம். அதில் சொக்குவதே இறவா இன்பம். அது குணங்குறியற்றது. அது ஒரு மாதிரியிலுமில்லை. அது ஆச்சிரமங்களில் தங்கியிருக்கவில்லை. சாதி, சமயம், தொழில் முதலிவைகளாலுண்டாகும் பேதங்களில் அது தங்கியிருக்கவில்லை. எல்லோருக்குஞ் சமபாகமாயுள்ளது. எவரொருவருக்குஞ் சொந்தமானதன்று. எல்லாவற்றையும் மறந்து அதன் நினைவு ஒன்றேயிருந்தால் போதும். ஒரு துகாமும், ஒரு சஞ்சலமும் நம்மைப் பாதிக்கமுடியாது.
கடவுள் ஒருவரே நித்திய வஸ்து. நாம் வேறு, கடவுள் வேறு எனுமெண்ணம் நமக்கொரு காலத்திலும் இருக்கப்படாது. நம்முடையதென்று ஒன்றையும் வைத்திருக்கப்படாது. நமது உடல், பொருள், ஆவி மூன்றையும் அவரிடத்தே ஒப்படைத்துப் போடவேண்டும். நான் என்ற நினைவேயிருக்கப்பாடாது. எல்லாம் அவருடையதாய் விட்டு விட வேண்டியது. தனம், தானியம், பூமி முதலிய சகல சம்பத்தும் அவரால் நமக்களிக்கப்பட்டன. எல்லாம் அவருடையது. நமக்கென்று எதுவிருக்கின்றது? நம்முடன் கூட வந்ததெது? நம்முடன் கூடப்போவதெது? ஒன்றுமேயில்லை. எல்லாம் வந்தவாறு ஏதோ மாயமாய்ப் போய் விடும். ஆகையால் நிலையற்ற பொருட்களில் மனத்தைச் செல்லவிடுவது சஞ்சலத்துக்கிடமாகும். அவற்றில் பற்று வைப்பது தவறு. ஏதுமொரு காலத்தில் அவைகள் நம்மை விட்டுப்பிரியவேண்டி வரும். அப்பொழுது சஞ்சலத்துக்கிடமாகும். பரம் ஒன்றே எக்காலத்தும் நம்மைவிட்டுப் பிரியாமலிருக்கின்றது. அது நித்தியமான பொருள். பண்டும், இன்றும், என்றும் அது நம் உயிருக்குயிராய் நம்மறிவினுக்கறிவாய், நம்மை விட்டுப் பிரியாதிருக்கின்றது. வாழ்விலும் தாழ்விலும் இன்பிலும், துன்பிலும், இறப்பிலும், பிறப்பிலும் நம்முடன் எக்காலத்துங் கூடவேயிருக்கின்றது. நமக்கு என்றும் வழிகாட்டுவதும் அதுவே. அதன் சந்நிதானத்தை விட்டு ஒரு காலமும் விலகமுடியாது. அஃது அப்படியேயுள்ள காரியம். எப்பவோ முடிந்த காரியம்.
எல்லாம் சிவன் செயல். உலகமெல்லாம் இறைவன் சந்நிதானம் - இறைவனுடைய சந்நிதானத்தில் ஒரு பிழையுமுண்டாகாது. எங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட வேண்டியதில்லை. எதைக் கடவுள் நமக்குக் கொடுக்கிறாரோ அதை நாம் சந்தோஷமாக ஏற்க வேண்டியது. கடவுளுடைய ஆசீர்வாதம் நமக்கெப்பொழுதும் உண்டு. அதைப்பற்றி நமக்குச் சற்றேனும் ஐயமிருக்கப்படாது. சில காரியங்கள் நமக்கு விளங்காமலிருக்கலாம். அதையிட்டு நாமேன் கவலைப்படவேண்டும்? எல்லாம் கடவுளுடைய சித்தத்தின்ப்டி நடந்துகொண்டு போகின்றன. நாமுன்றுமறியோம். எல்லாம் அவர் அறிவார். எமது கடன் பணி செய்து கிடப்பதே. இறைவன் சந்நிதானத்தில்நாம் என்றுமிருப்பதால் நமக்கொரு குறையுமில்லை. நமது செயல் ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல் எனும் உணர்ச்சி நாளாந்தம் வளர்ந்துகொண்டு போக 'ஒரு பொல்லாப்பும் இல்லை' எனும் மகா வாக்கியத்தின் உண்மையை நாம் உணரக்கூடியதாய் வரும். திடபக்தி வேண்டும். கடவுளிலே பூரண விசுவாசமிருக்க வேண்டும். அதவிடச் சிறந்த கவசம் வேறொன்றுமில்லை. என்ன வந்தாலும் அசையாமலிருக்கப் பழகவேண்டு.
"சஞ்சலம் வந்தாலும் வரட்டும் - வேல் வேல்
சற்றும் அலையாமல் சாந்தத்தில் கட்டு - ஒரு பொல்லாப்புமில்லை"
(இக்கட்டுரை சிவயோக சுவாமிகளின் ஆணைக்கு அமைய 'சிவதொண்டன்' இதழில் வெளிவந்தது)
|
|
|
| நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம். |
|
Posted by: putthan - 04-01-2006, 03:18 PM - Forum: நிகழ்வுகள்
- Replies (54)
|
 |
நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியெற்றத்துடன் நாளை(2/4/2006) ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடை பெற்று 10/4/2006 தேர் திருவிழாவும்,11/4/2006 தீர்த்த திருவிழாவும் நடை பெறும்.
சுண்டல்.கந்தப்பு,தூயா,அரவிந்தன் அன்னதானத்தில் களந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டு கொள்ளபடுகிறிர்கள்.
மு.கு:சைவ நாயன்மார்களையும் பா சீடர்களையும் கண்டால் ஒதுங்கி இடம் விடவும்.
|
|
|
| ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகண |
|
Posted by: விது - 04-01-2006, 01:42 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (1)
|
 |
ரேடார் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாத ஈரானின் அதிநவீன ஏவுகணை: அமெரிக்கா நடுக்கம்
ஒரே நேரத்தில் பல இடங்களை குறி வைத்து தாக்கும் நவீன ஏவுகணையை செலுத்தி ஈரான் சோதனை நடத்தி இருக்கிறது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தவும் அதன் மீது பொருளாதார தடை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஈரான் அதிநவீன அணு ஆயுத ஏவு கணையை செலுத்தி சோதனை நடத்தி இருக்கிறது. பாஜர்-3 என்ற இந்த ஏவுகணை ஒரே நேரத்தில் பல இலக்குகளை குறி வைத்து தாக்கும் ஆற்றல் உள்ளது.
ரேடார் கருவிகளாலும் இதை கண்டுபிடிக்க முடியாது. 2000 கிலோ மீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை கடந்து சென்று எதிரிகள் இலக்கை தகர்க்கும் ஆற்றல் உள்ளது.
இந்த ஏவுகணைகளை செலுத்தி மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களையும் இஸ்ரேல் முகாம்களையும் தகர்க்க முடியும்.
இது அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பாரசிக வளைகுடாஇ அரபிக்கடல் பகுதியில் ஈரான் ராணுவ பயிற்சியின் போது இந்த ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது.
http://www.newstamilnet.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| வணக்கம் யாழ்கள உறுப்பினர்களே |
|
Posted by: vaikoo - 04-01-2006, 01:32 PM - Forum: அறிமுகம்
- Replies (20)
|
 |
வணக்கம் யாழ்கள உறுப்பினர்களே.உங்கள் பொன்னான வாக்குகளை நம்பி களத்தில் குதித்துள்ளேன்.என்னையும் உங்களோடு ஒருவனாக இணைப்பீர்கள் என நினைகிறேன்.இங்கே எனக்கு எவ்வளவு ஆசனம் ஓதுக்குவீர்கள்?????
அம்மா துணை நிற்பா
|
|
|
| சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை |
|
Posted by: வினித் - 04-01-2006, 11:20 AM - Forum: நகைச்சுவை
- Replies (3)
|
 |
[b]சற்று முன் மொனராகலையில் வைத்து துரோகி கருணா சுட்டுக் கொலை
அனுப்பியவர்: தமிழவன்
Saturday, 01 April 2006
சற்று முன்னர் மொனராகளையில் வைத்து துரோகி கருணாவும் அவரசு இரு உதவியாளர்களும் " பொங்கி எழும் மக்கள் படை"எனும் படைப்பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டானர். இது பற்றி தெரிய வருவதாவது.
கருணாவும் அவரது உதவியாளர்களும் வழமையாக இராணுவ பாதுகாப்புடனே வெளியில் செல்வதாகவும் ஆனால் இன்று அவசர சந்திப்பின் நிமிர்தம் ஜே.வி.பி.யினரின் அழைப்பின் பெயரில் அவர்களின் முக்கிய தலைவர்களை சந்திக்க வந்த கருணா "பொங்கி எழும் மக்கள் படை" என்ற தமிழீழ ஆதரவுக்குழுவால் சுடப்பட்டுள்ளார். அதில் படுகாயமடைந்த கருனா சிறிது நேரத்தில் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணமடைந்தார். அவருடன் கூட வந்த அவரது இரு உதவியாளர்களும் அதே இடத்தில் மரணமடைந்தனர். தலையிலும் மார்பிலும் பதின்நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. வெள்ளை நிற வானகத்தில் வந்தவர்களே இத்தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்த விசாரனைகள் நடைபெறுவதாகவும் விரைவில் குற்றாவாளிகள் கண்டு பிடிக்கப்படுவார்கள் என்று காவல் துறை மா அதிபர் தெரிவித்தார். இவ் எதிர்பாராத இத்தாக்குதலால் இலங்கை அரசாங்கமும் அதன் அருவருடிகளும் அழ்ந்த கவலையில் இருப்பதாக அறியமுடிகின்றது. ஒட்டுப்படைகளை வைத்துக் கொண்டு புலிகளை யுத்தத்துக்கு இழுக்க அரசு போட்ட திட்டங்கள் கருணாவின் சாவினால் தவிடு பொடியாகியுள்ளது. இதே பொங்கி எழும் மக்கள் படையால் சுட்டு கொல்லப்பட்ட செய்தி கேட்ட மக்கள் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் திளைத்திருக்கின்றனர். அதே நேரம் ஏனைய ஒட்டுக்குழுக்கள் இப்போது தமது நிலைகளில் இருந்து பின்வாங்க கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மைச் செய்திகள்
|
|
|
| சிட்னி சைவ நாயனார் மீது பா சுவாமியின் சீடர்கள் சீற்றம் |
|
Posted by: putthan - 04-01-2006, 06:25 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள்.
இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூதி போன்றவற்றை எடுத்து வித்தை காட்டுவதை பற்றியும்.வாயால் லிங்கம் எடுப்பது சைவத்தை(சிவனை) முதன் முதல் கடவுளாக கொள்பவர்களுக்கு இது இழுக்கு என்றும் அவ் ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு அவர் இவர்களையும் கும்பிட்டுகொண்டு கோயிலுக்கும் வருகிறார்கள் இது இரு தோணியிற் கால் வைத்ததிற்கு சமன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதை பார்த்த பா சுவாமியின் சீடர்கள் சீற்றமடைந்து பதில் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்கள்.அவ் கடிதத்தில் இவ் ஆக்கத்தை எழுதியவர் ஒரு சைவ தீவிரவாதியென்றும்,சுவாமிகளின் சீடர்களை புண்படுத்தியது மட்டுமல்லாது தங்கள் மதத்தையும் புண்படுத்தி விட்டார் எனவும்,இவருக்கு ஆன்மீகம் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவ் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
(போகிற போக்கில் சிட்னி சைவநாயனாரை கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்,சுண்ணாம்பு அறையில் பூட்டுதல்,கழுகில் ஏற்றல் போன்றவற்றை செய்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
ஆனால் நம்ம நாட்டு சட்டம் இதற்கு இடம் கொடுக்காது.
இந்த சைவ நாயனார்களும்,பா சுவாமியின் சீடர்களும் ஒன்று சேர்ந்து தான்
1.சுனாமியின் போழுது கோயிலுக்குல் பணம் சேர்க்க வேண்டாம் என தடுத்தவர்கள்.
2.மாவீரர்களுக்கு அர்ச்சணை செய்ய தடை விதித்தவர்கள்.
3.வயது போனவர்கள்(கோயிலுக்கு போகமுடியாத வயோதிபர்கள்) நேரடியாக வானோலியில் ஒளிபரப்பாகும் கோயில் பூசையை கேட்டு மகிழ்ந்தவர்களை கேட்கமுடியாத வண்ணம் நேரடி ஒளிபரப்புக்கு தடை விதித்தவர்கள்.
இவர்கள் தான் unity பஜன்,அன்பேசிவம்,என்று கதைக்கும் குருமார்கள்.
|
|
|
|